Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே போகிறது தமிழ் நாடு ??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போகிறது தமிழ் நாடு ??

1.jpg

வேற யாரும் பார்க்கும் முன் சீக்கரம் கலக்குங்க....

2.jpg

ம்.ம்.. சரியாதான் மிக்ஸ் பண்ணிருக்கீங்க....

3.jpg

அடிச்சுட்டு சீக்கரம் கொடுங்க....

4.jpg

நாங்களும் குடிப்போம்ல.....

கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரே குடிகார ஜோடி கலக்கிய போது எடுத்தப்படம்..!

நன்றி : தினகரன்

ஆஹா . ரொம்ப நாளா வசமா எதுவும் கிடைக்கலையேன்னு வெறும் வாயோட சும்மா கிடந்தேன் . இப்ப அவல் போல ஒரு விஷயத்தை கொடுத்து மாட்டிகிட்டீர் . இன்னும் கொஞ்ச நேரத்தில வசமான ஒரு பெரிய கட்டுரையோட வர்றேன் . அப்ப சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்த கதையா யோசிப்பீர் பாரும்

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்யப்பட்ட பானத்தைக் குடிப்பார்களாயின் அது தவறு. மற்றும்படி டாஸ்மாக் சரக்காக இருந்தால் ஏன் ஒளிந்து ஒளிந்து குடிக்க வேணும் எண்டுதான் விளங்கேல்ல..! :lol:

எல்லாத்திலயும் ஒரு ஒளிவு மறைவுத்தன்மை தமிழர்களின் சாபக்கேடு. மற்றவர்களுக்குத் தீங்கிழைக்காமல் தனக்கு விரும்பியதைச் செய்துகொள்வதற்குக் கூட தயக்கமா? :lol:

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படம் எதோ சாதாரண மக்களுடையது போலுள்ளது . மேலும் படத்தில் அவர்கள் ஒளிந்து கொண்டு குடிப்பதாக ஒன்றும் என் கண்களுக்கு தெரியவில்லை . இது போன்ற ஏழை மக்கள் அல்லது தமிழனை காட்டி கேலி செய்வதில் கட்டுரையாளருக்கு என்ன சந்தோசமோ ??? அவர்கள் நம் மக்கள் . தேவைபட்டால் பெரிய இடத்தில் நடக்கும் கூத்துகளை இப்படி படம் போட்டு காண்பிக்க சொல்லுங்கள் பார்ப்போம் .

ஏழை மக்களின் வாழ்வோடு ஒட்டியது மது பானம் . அது அந்த அந்த இடங்கள் நிலைக்கு ஏற்ப கிடைக்கும் பொருட்களுகேற்ப தயாரிக்க பட்டது. அங்கேயும் உள் நுழைந்த அரசியல் நாய்களும் / பணம் தின்னி பேய்களும் மதுவின் மகிமையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டனர்.

குடி பழக்கத்தினால் குடி அழியும் என்ற ஒரு கதை வேறு . இப்போதுள்ள வல்லரசுகள் அனைத்துமே குடிகாரர்களின் பூமியே.

முதல் வகைஇலுப்பை பூவினால் செய்யப்படும் மதுபானம். இலுப்பை பூவை ஊற வைத்து செய்யப்படும் இது பல உடல் உபாதைகளை தீர்க்க வல்லது . காசை காலி பண்ணாமல் போதை ஏற்றும் தன்மை கொண்டது . ( கோடை காலத்தில் குடித்தால் பின்னலிலிருந்து பிய்த்து கொண்டு வரும் என்பது வேறு சங்கதி )

Edited by tamil paithiyam

இரண்டாம் வகை

பழங்களை அழுக வைத்து ( அழுகிய பழங்களை போட்டு அல்ல ) அதிமதுர பட்டை அல்லது பட்டை ஊற வைத்த நீர் கலந்து தயாரிக்கபடுவது. இதில் வாழை பழங்கள் முன்னணி வகிக்கும் . இப்போது கூட நீங்கள் அதிமதுர பட்டையை அதிகம் சுவைத்தால் போதை வரும் . யாரும் அதிகம் சுவைக்க வேண்டாம் . ஏனெனில் உள்ளே உள்ள உறுப்புகளை அரிக்கும் அளவுக்கு பலம் கொண்டது இது. மேலும் வட இந்திய மசாலாக்களில் தவறாமல் கலக்க படுகிறது . இதனால் தான் வட இந்திய உணவு வகைகளை நாடி சென்று உண்ணும் கூட்டம் பெருகுகிறது

இது நாளடைவில் போதைக்காக ஜாதிக்காய் / கடுக்காய் மற்றும் சில நேரங்களில் வசம்பு வரை வந்து மூல பொருட்களையே விட்டு விட்டு இன்று பாட்டரி செல் மற்றும் நவச்சாரம் கலந்து பட்டை சாராயமாக உருமாறி பலரின் உயிரை கூட வாங்கியிருக்கிறது

மூன்றாவது வகை

பச்சை கஞ்சா செடிகளை ஊறவைத்து வயிற்று புன்களுக்காக சித்தர்களால் கொடுக்கப்பட்ட ஒரு மருந்து அதிகம் உட்கொண்டால் போதை வரும் என ஒரு சண்டாள சீடனின் கண்டு பிடிப்பால் பல உருவம் எடுத்து / பல இடங்கள் சென்று இன்று வட இந்திய ஹோலி பண்டிகையில் பாங் எனும் ஒரு போதை பொருளாக உருமாறி நிக்கிறது

Edited by tamil paithiyam

நான்காவது வகை

1.பழச்சாறு மதுபான வகைகள்

இதில் திராச்சை முதலிடம் வகிக்கிறது. மேலும் திராச்சை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்ததற்கான தடயங்கள் இருந்திருக்கின்றன. பலர் இதை வைத்து தான் சிவ பெருமானின் சோம பானம் தயாரிக்க பட்டது என வாதாடுகின்றனர் பெரும் பாலும் குடிமகன்கள். ஆனால் சிவன் ஏவிய ஆயுதமே சோம பானம் என்றும் பலர் கூறுகின்றனர். இது குறித்து எனக்கு சரியாக தெரியாததால் / எங்கே ஒரு சின்ன தப்பு செய்வான் . இவன் காலை வாரலாம் என என் நண்பர்கள் காத்து கொண்டு இருப்பதால் முன் ஜாக்கிரதையாக இந்த விஷயத்தை இதோடு விட்டு விட்டு அடுத்த கருத்துக்கு ஓடுகிறேன் ( GREAT ESCAPE )

2. Still under process. updated soon

நான்காவது வகை ( தொடர்கிறது )

பழச்சாறு மதுபான வகைகளில் குறிப்பிடும் படியாக நவீன முகம் கொண்டு சர்வதேசத்தோடு போராடிக்கொண்டு இந்திய மதுபான வரலாற்றில் இந்தியர் பேரை காப்பாற்றி கொண்டு இருப்பதில் முதலிடம் வகிப்பது முந்திரி சாராயம் ( CASHEW FENNY ) . இது கோவா முழுவதும் தங்கு தடையின்றி அங்கீகரிக்கப்பட்ட மது பானமாக / குறைந்த செலவில் ஏழைகள் களைப்பு தீர குடித்து விட்டு வீட்டிற்கும் சம்பாதித்த காசை கொண்டு போக வைத்து கொண்டு இருக்கிறது. மேலும் சில பானங்களும் தேங்காய் சாராயம் / மற்றும் சில

பானங்களும் இந்த வகையில் உண்டு

ஐந்தாவது வகை

பிற மது பான வகைகள்

( வெளி நாட்டு வெள்ளைக்கார கொள்ளை கூட்டங்களால் அறிமுகப்படுத்தபட்ட/ இன்று அரசியல் வாதிகளின் வங்கி இருப்பை நிரப்பும் வகைகள் )

அந்த கூலி தொழிலாளர்கள் சம்பாதிப்பதை பாதிக்கும் மேல் கொள்ளையடித்து விடுவதால் வீட்டில் பெரும்பாலும் அரை வயிறு கால் வயிறு தான். பணம் மிச்சம் அல்லது சேமிப்பிற்கு இந்த பானங்கள் ஏழை மக்களிடம் பணத்தை விட்டு வைக்காததால் அந்த மக்கள் படிப்பு / ஆரோக்கியம் போன்றவற்றில் முன்னேறுவதை திட்டம் போட்டு இருநூறு வருடங்களாக காலி செய்யும் மது பானம் இது.

இன்னும் இருக்கு கொஞ்சம் பொறுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படம் எதோ சாதாரண மக்களுடையது போலுள்ளது . மேலும் படத்தில் அவர்கள் ஒளிந்து கொண்டு குடிப்பதாக ஒன்றும் என் கண்களுக்கு தெரியவில்லை . இது போன்ற ஏழை மக்கள் அல்லது தமிழனை காட்டி கேலி செய்வதில் கட்டுரையாளருக்கு என்ன சந்தோசமோ ???

அந்த புகைபடச்செய்தியிலே போடப்பட்டுள்ளது .. பழைய பேருந்து நிலையம் எதிரே என்று.. பொது இடத்தில் செய்யலாமா?

Kilpauk_Medical_College.JPG

1_59.jpg

KilakaraiJummaMasjid.jpg

இந்த இடமெல்லாம் தெரியுமா தோழரே....போய் வந்துள்ளீர்களா?

00020063.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

என்ன பெரிதாய் படம் காண்பிக்கிறீர் . உம்மைபோன்றோர் மற்றும் என்னைபோன்றோர் எழுதி எழுதி யாழ் கள உறுப்பினர்கள் பாதி பேர் அங்கே போக வேண்டிய நிலை வந்தாலும் வரும் . எதுக்கும் தொடர்பு எண் மற்றும் முகவரியையும் சேர்த்து அனுப்பவும் . இன்னும் ஒன்றையும் விட்டு விட்டீர்.

நான் அங்கிருந்து வருகிறேன் என நினைத்து விட்டீரோ ??? பலரை அங்கு அனுப்புவது மட்டும் நமது வேலை

ஆறாவது வகை மது பானங்கள்

விவசாய சார்பு மது வகைகள்.

இதில் முதலிடம் வகிப்பது கள். நம்ம செம்மொழி மாநாட்டில் யாரோ கொடுக்க போவதாக கூறினார்களே . அதேதான் . மேலும் இவ்வகை மதுபானங்கள் மிதமான போதையோடு குளிர்ச்சியை உடலுக்கு தருபவை . இந்த பானங்கள் அனைத்துமே காலை வேளையில் ஆரம்ப சுவை தேன் இனிப்பு சுவையாகவும் பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பானமாகவும்( பதநீர் ) அதே பானம் வெயில் ஏற ஏற புளிப்பு தன்மைக்கு மாறி மாலை வேளைகளில் ஆடவருக்கு களைப்பு நீக்கவும் பயன் பட்டது . மதியம் இவ்வகை பானங்களை பருகிவிட்டு வெயிலில் அலைந்தாலும் போதையோ அல்லது மயக்கமோ ஏற்படலாம் . மேலும் நீர் பற்றாக்குறை உடலில் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

மேலும் இந்த கள் வகையில் மூன்றே முதலிடம் வகிக்கிறது.

தென்னங் கள்

பனங் கள்

ஈச்சங் கள்

தென்னை , பனை கள் தமிழகத்தில் பரவலாக இருந்திருக்கிறது. ஆனாலும் மத்திய இந்தியாவில் மற்றும் கர்நாடக மராட்டிய பகுதிகளிலும் ஈச்சங் கள் அதிகமாக காணப்படுகிறது.பொதுவாகவே எடுக்கும் இடத்தில் தினசரி பழகும் முகங்களுக்கே அதிகம் விற்க படுவதால் நம்பக தன்மை / மற்றும் புதிய தரமான தகுதி இவ்வகை மது பானத்திற்கு அதிகம்.

இதையும் பணம் சம்பாதிக்கும் வழியாக பாவித்து அரசுகள் ஏலம் விட அதிக பணம் கட்டி எடுக்கும் பிறர் குடி கெடுக்கும் கயவர்கள் இப்போது ஒரு ரசாயன பவுடர் ஐ கண்டு பிடித்து கள்ளிலேயோ அல்லது வெறும் நீரில் சாக்கரீனோடு கலந்து கள் என்ற பெயரில் விற்று லாபம் பார்க்கின்றனர்.

ஏழாவது வகை

உணவு மற்றும் சமையல் சார்பு மது வகைகள்.

இரவு எஞ்சி இருக்கும் உணவு வகைகளில் நீர் ஊற்றி நீராகாரம் ( நீர் ஆகாரம்) என்ற பெயரில் மறு நாள் காலை குடிக்கும் பழக்கம் நம் இன மக்களுக்கு பல காலமாக உண்டு . இரவு ஊற்றப்பட்ட நீரானது அரிசியில் உள்ள போதை தன்மையை கொஞ்சம் அதிகமாக்கி ( ஈஸ்ட் போல வைத்துகொள்ளலாம் ) பருகுவதற்கு மிகச்சிறந்த பானமாக நம் முன்னோர்களால் கருதப்பட்ட இந்த பானமும் இரண்டு மூன்று நாள் வைத்திருந்தால் போதை ஊட்ட கூடியதே. இதே தன்மை கம்பு , கேழ்வரகு தானியங்களுக்கும் உண்டு . இவ்விரண்டையும் கூழ் , அல்லது களியாக கிண்டி அதில் நீர் அல்லது மோர் ஊற்றி பருகுவதும் உண்டு. இதே வழிமுறையை பின்பற்றி சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் பூமியில் பதித்து வைத்து சுண்ட காஞ்சி என்ற பெயரில் பருகுகின்றனர். இந்த சுண்ட காஞ்சி சோழர் களத்தில் இருந்து உள்ளது என சிலரும் இல்லவே இல்லை இது தனுஷ்கோடி மற்றும் ராமநாத புர மீனவர்களின் கண்டுபிடிப்பு என காப்புரிமை வாதாட்டங்களும் உண்டு.

எட்டாவது வகை

கழிசடை மது வகைகள் ( பிறர் சொல்லி கேட்டது , உண்மைத்தன்மை பரிசோதனைக்கு உட்பட்டது )

வைக்கோல் புல்லை ஊறவைத்து வரும் சாறிலும், கரும்பு எடுத்தது போக மீதமுள்ள சக்கையை ஊற வைத்து வரும் சாறிலும் ரசாயனம் கலந்து விற்கப்படும் மதுவகைகள். பெரும்பாலும் இது போன்ற மது வகைகளையே நம்மில் பலர் இங்கிலீஷ் சரக்கு உடம்புக்கு நல்லது என ஊற்றிக்கொண்டு பீலா விடுவது வழக்கம். மிக உயர் ரக மது வகைகளில் உன்னிப்பாக மோந்து பார்த்தால் வைக்கோல் புல் அல்லது கரும்பு சக்கை வாசம் வரும் என்கின்றனர் எமது சுதேசி குடிமக்கள் ஆராய்ச்சி கழகம்.

மூலம் தெரியாத மூத்திரம் போன்ற மது வகைகளை நமக்கு காஸ்ட்லியாக ஆங்கிலேயன் அறிமுக படுத்தி மதுக்கு அடிமை படுத்தி பின்னர் நமக்கு வாய்த்த அரசுகள் பெரும் தொழில் முதலைகள் துணை கொண்டு எம்மக்களை / எம்மக்களின் உயர் குணம் மிக்க மது வகைகளை அழித்து கொண்டும் அதன் மீது புழுதி வாரி தூற்றி எம் பாரம்பர்யமிக்க மது வகைகள் ஒழிக்க நினைக்கின்றனர் . நமது முன்னோர்களின் மது வகைகள் ( நான் மேலே குறிப்பிட்ட எழு வகைகள் ) மூலமே யாவரும் பருகி குடும்ப மற்றும் உடல் நலம் பேணுதலே ஆகும் . அதில் அதிக லாப நோக்கு எப்போதுமே இருந்தது கிடையாது . அவ்வப்போது மாமுல் மட்டும் கொடுக்க வேண்டி வரும் . அந்த போலீஸ் கூட நம்மினம் என்பதால் நம் காசு நம் இனத்திலேயே இருந்து விடும் . அது ஏழைகளின் பணத்தை எப்போதும் சுரண்டியதில்லை.

மது வகைகள் வியாபார மாயம் ஆனதால் இப்போது சம்பாரிக்கும் பணத்தின் பாதியை அந்த மூலம் தெரியாத மூத்திரத்தில் அழித்து தன் குடும்பத்தை சரி வர கவனிக்க முடியாத நிலைக்கு ஆளாகிறான்.

இதே நம் மதுபான வகைகள் அப்படியில்லை. நூறு ரூபாய் கூலி பெரும் ஒரு தொழிலாளி ஒரு கிளாஸ் மூன்று ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை கிடைக்கும் . மூணு அல்லது நாலு கிளாஸ் அடித்தால் அதாவது இருபது ரூபாய்க்கு நல்ல உடல் நலத்தோடு கூடிய போதை கிடைக்கும் . மீதி உள்ள காசில் வீட்டிற்கு மனைவிக்கு பூவும் அல்வாவும் / குழந்தைகளுக்கு கடலை மிட்டாயும் கம்மர் கட்டும் / அம்மாவுக்கு வெற்றிலை சீவலும் / அப்பாவுக்கு சுருட்டோ அல்லது கணேஷ் பீடியோ வாங்கி கொண்டு போயி / முடிந்தால் சுண்டலோ அல்லது பாய் கடையில் புரோட்டாவோ குடும்பத்திற்கு வாங்கி கொடுத்து நல்லா சந்தோசமா இருப்பார்கள்.

நமது மதுபான முறைகள் சோதனைக்கு உட்படுத்த பட்டு சரியான ஊக்குவிப்பு / நிதி உதவி வழங்கப்பட்டு / விதி முறைகள் உருவாக்கப்பட்டு / ஒரு ஊரில் உள்ளூர் காரர்கள் எழு பேருக்கு மட்டும் ஒருவருக்கு ஒரு வகை மது பானம் கடை உரிமை கொடுத்து / அதுகூட ஒரு வருடம் கழித்து இன்னொரு எழு பேருக்கு நம் மது புகழ் பரவ விட்டால் நம் பணம் மனம் மானம் அனைத்தும் நம்மிடமே இருக்கும் . எதோ ஏழைகளும் சந்தோசமாக இருப்பார்கள் என்பது எமது தாழ்மையான கருத்து.

இப்படிக்கு

தன் மான தமிழன், குடி பழக்கி குடி காக்கும் புது முறை படைத்தவன்,

தமிழ் பைத்தியம்

ஒருங்கிணைப்பாளர் , தலைவர் , செயலாளர், பொருளாளர், கீழ்மட்ட தலைவர், மேல்மட்ட தலைவர், இடைமட்ட தலைவர், குறுக்கு மட்ட தலைவர், நெடுக்கு மட்ட தலைவர், தலைமை கலக பேச்சாளர், தலைமை கலக எழுத்தாளர்

மற்றும் நிறுவனர்

சுதேசி குடிமக்கள் ஆராய்ச்சி கழகம்

சுதேசி குடிமக்கள் முன்னேற்ற கழகம்

சுதேசி மதுபான ஆராய்ச்சி கழகம்

நன்கொடைகள் அளிப்போர் கவனத்திற்கு

நிதி மிகுந்தோர் பாட்டிலாகவும், நிதி குறைந்தோர் கிளாஸ் முறையிலோ அல்லது கீழ்க்கண்ட பொருட்களோ நன்கொடையாக கொடுக்கலாம்

உதவி செய்ய நினைப்போர் மாநாடு ஆரம்பம் ஆகும் முன்பே அனைவரின் முகவரியையும் எழுதி வாங்கி பின்னர் வீடு வரை ட்ராப் செய்யலாம்.

ஊறுகாய், நெத்திலி வறுவல், நண்டு வறுவல், சுட்ட கருவாடு, வாழைப்பழம், கடலை மிட்டாய், ஆட்டு ஈரல் வறுவல் இல்லையேல் குறைந்த பட்சம் ஆட்டு குடல் வறுவல், நத்தை மிளகு பிரட்டல், கொண்டாய் கடலை, பட்டாணி அவியல், வாளை மீன் குழம்பு, அயிர மீன் குழம்பு. மசால் வடை, பக்கோடா, மிக்சர், மிளகா பஜ்ஜி

ஆங்கில வகை மதுக்கள் மற்றும் வட இந்திய உணவு முறைகள் ( குறிப்பாக பிரியாணி , சமோசா) தடை செய்யப்பட்டுள்ளது.

Edited by tamil paithiyam

இப்படிக்கு

தன் மான தமிழன், குடி பழக்கி குடி காக்கும் புது முறை படைத்தவன்,

தமிழ் பைத்தியம்

ஒருங்கிணைப்பாளர் , தலைவர் , மற்றும் நிறுவனர்

சுதேசி குடிமக்கள் ஆராய்ச்சி கழகம்

சுதேசி குடிமக்கள் முன்னேற்ற கழகம்

சுதேசி மதுபான ஆராய்ச்சி கழகம்

அண்ணா ஒரு சந்தேகம், நீங்கள் சுதேசி என்று இதில் எதை குறிப்பிட்டுள்ளீர்கள்?

http://kanimozhi.org.in/kanimozhi/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95

குடிமக்களும் குடித்த பின் அவர்களின் நிலையும் ஆராய்ச்சியில் உள்ளது. விரைவில் வெளிவரும்.

கள் குடித்து வாழ்வோரே வாழ்வார் அயலவர்

சரக்கடிப்போர் சீக்கிரமே போவர்

ரம் இனிது வைன் இனிது என்பர் மாந்தர்தம்

நாட்டு மதுவகைகள் அறியாதோர்

குடிக்க குமட்டு மட்டும் குடித்தபின்

கோழி குழம்பு அதற்கு தக

  • கருத்துக்கள உறவுகள்

------

குடிக்க குமட்டு மட்டும் குடித்தபின்

கோழி குழம்பு அதற்கு தக

பைத்தியம் அண்ணே.......

சரக்கடிச்ச பின் ஊறுகாய் சாப்பிட்டால், உடம்புக்கு நல்லதா?

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியம் அண்ணே.......

சரக்கடிச்ச பின் ஊறுகாய் சாப்பிட்டால், உடம்புக்கு நல்லதா?

^_^:lol:

பைத்தியம் அண்ணே.......

சரக்கடிச்ச பின் ஊறுகாய் சாப்பிட்டால், உடம்புக்கு நல்லதா?

பண்டைய நமது பானங்கள் அனைத்துமே புளிப்பு மற்றும் எரிப்பை ( காரம் என்று கூட சொல்லலாம் ) ஆதாரமாக கொண்டு தயார் செய்ய பட்டவை. மேலும் நமது மருத்துவ முறைகளிலும் ரண சிகிச்சை முறை காணப்படுகிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல.

அதனால் புளிப்பான மது பானங்கள் மருந்தாக கொடுக்கும் போது வயிற்றில் உள்ள நாள்பட்ட வெளியே வராத கழிவுகளோடு ( அதுவும் புளிப்பு தன்மை கொண்டதே) சேர்ந்து கலக்கி வயிறை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. குறிப்பாக கள் மற்றும் அவை சார்ந்த பானங்கள்.

அதேபோல நாட்பட்ட வயிற்று வலி மற்றும் வயிற்று பூச்சி, நெஞ்சு சளி தொல்லைக்கு நிவாரணமாக அரிப்பு அடிப்படை ( பட்டை சாராய வகைகள் ) கொடுக்கும் போது வயற்றில் உள்ள புண்களை, நெஞ்சு சளியை அரித்து ( கழுவி) புழுக்களை கொல்லும். அதன் பின்னர் அதற்கேற்ற மருந்து உட்கொள்ள வேண்டும் . குறிப்பாக மிளகு ரசம், வல்லாரை துவையல், கொத்துமல்லி சட்னி மேலும் பல உணவு வகைகள்.

ஆனால் இவையனைத்துமே இவையென்று இல்லை . எந்த மதுவும் அளவாக உட்கொள்ள வேண்டியது நமது சுய பொறுப்பாகும் . அதை மீறும் போது வேறு பல பிரச்னைகளை நம் உடல் எதிர்கொள்ள நேரிடும். அந்த அளவு அதிகமானால் வரும் உபாதைகளை குறைக்கவே சைடு டிஷ் எனப்படும் வகைகள்.

ஊறுகாய் உட்கொள்ள காரணம் புளிப்பும் காரமும் உப்பும் கலந்துள்ளதால் மதுவின் வீரியத்தை குறைக்க வல்லது . மேலும் அதிக உபாதைகளை தெரிந்து கொண்டு வாந்தியையும் வரவழைக்கும் தன்மை கொண்டது . வாந்தி எடுத்தபின் மது சார் உபாதைகள் தன்னாலே தணிந்து விடும் என்பது குடிமக்களின் அனுபவ ரீதியான உண்மை . அதனால் ஊறுகாய் பழங்காலம் தொட்டே பயன்படுத்த படுகிறது. இந்த ஊறுகாயில் உள்ள எலுமிச்சை, வெந்தயம், மிளகு, கடுகு போன்ற பொருட்களில் உள்ள மருத்துவ குணங்கள் உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை .

இதை தழுவியே பெரும்பாலான ஆங்கில மருந்துகளில் ஸ்பிரிட் மற்றும் அல்கஹோல் கலக்கபடுகிறது. மேலும் விஷ முறிவு பயன் இல்லாத போது உப்பு கலந்த நீர் வாய் வழியாக ஊட்ட படுகிறது.

மேலும் எனிமா கூட நம் சித்த மருத்துவத்தில் குறிப்பிட பட்டுள்ள கற்றாளை கொண்டு கழிவு நீக்கல் முறையே . எனினும் அது இந்த சமயத்தில் தேவையில்லாத செய்தியாதலால் தவிர்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊறுகாயில் சிற்றிக் அசிட் இருக்குது கவனம்....

நடுவர் அவர்களே...

மோர் குடித்தால், தெரியும் பீர் குடுத்தால் தெரியும்- தெரியாது

நீருடன் வொட்கா சேர்ந்துவிடின் :lol::D

Edited by குட்டி

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு இதுகூட நம் முன்னோர் வாக்கே. நான் ஊறுகாயை தொட்டுக்க சொன்னேனே தவிர உணவாக உண்ண சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு இதுகூட நம் முன்னோர் வாக்கே. நான் ஊறுகாயை தொட்டுக்க சொன்னேனே தவிர உணவாக உண்ண சொல்லவில்லை.

எங்கடை ஊறுகாயை உணவாக உட் கொண்டால்....

ஆசுப்பத்திரியில் படுத்திருக்க வேணும்.

நடுவர் அவர்களே...

மோர் குடித்தால், தெரியும் பீர் குடுத்தால் தெரியும்- தெரியாது

நீருடன் வொட்கா சேர்ந்துவிடின் :lol::D

கலந்து விடுவது என்றவுடன் எனக்கு நினைவிற்கு வரும் சில கலப்பட மது வகைகள். ( COCKTAIL DRINKS )

தூய கள் எடுத்துகொள்ளவும்.

கொஞ்சம் புதினா, கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாய். மூன்றையும் சேர்த்து அம்மியில் அரைத்து துவையலாக வைத்து கொண்டு க்ளாஸ் முழுதும் கள் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் அந்த மசாலா கலந்து குடித்து பாருங்கள். ஆஹா என்ன்ன சுவை . என்ன சுவை .....

மேலும் சுவை கூட்ட சிறிதளவு உப்பும் சேர்க்கலாம் . ( ஆனால் குடிக்கும் போது க்ளாசில் கலக்க வேண்டுமே தவிர மொத்த கேனில் கலக்க கூடாது )

Edited by tamil paithiyam

இன்னொரு கலவை மது முறை ( சொல்லி கேட்டது . அனுபவமோ / அல்லது பரிசொதித்ததோ இல்லை )

ஒரு தண்ணீர் பழம் வாங்கி ( தர்பூசணி / WATER MELON) அதில் ஒரு பக்கம் துளை இட்டு அலுங்காமல் விதை நீக்கி அதற்குள் பட்டை சாராயத்தை ஊற்றி குளிர் பதன பெட்டிக்குள் வைத்து நன்றாக குளிர்ந்து போனதும் எடுத்து வெட்டி சாப்பிடவும். பட்டை சாராயம் கிடைக்காத புலம்பெயர் பெரிசுகள் வோட்கா / வைட் ரம் / ஜின்னில் ஜமாய்க்கலாம்.

மதுவை குடிக்கத்தான் முடியும். திங்க முடியுமா ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.