Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை

Featured Replies

ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை

இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வொன்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியுமென்று தம்முடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருடனான சந்திப்பை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அ.விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமத்திரன் ஆகியோர் புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் திருமதி நிருபமா ராவ் ஆகியோரோடு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்கள்.

இலங்கைத் தமிழ் பேசும் மக்களுடைய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நிலைத்து நிற்கக்கூடியதுமான தீர்வொன்றை அடைவதற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பைச் செய்யும் என்ற வாக்குறுதியை பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏனைய அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவிற்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினர் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காகவும் புனர்வாழ்விற்காகவும் 50 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுக்க முன்வந்தமைக்கு இந்திய அரசிற்கும் இந்திய மக்களிற்கும் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இப் பாரிய உதவியோடு வாழ்வாதாரத்திற்காகவும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி சம்பந்தமாக வடக்கிலே இந்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் வடக்கிலே வாழும் தமிழ் மக்களுடைய எதிர்கால நல்வாழ்விற்கு பேருதவியாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் மக்கள் இடப்பெயர்வுக்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியதன் அவசர, அவசியத் தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தலைவர்களுக்கு வலியுறுத்தியது.

அத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு திரும்பி தமது சகஜ வாழ்வை மீள ஏற்படுத்த வேண்டும்.

வடக்குகிழக்கில் ஏற்றுக் கொள்ள முடியாத குடிசன விகிதாசார மாற்றங்களைக் கொண்டு வரும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.

இனப்பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையோடும் சுயகௌரவத்தோடும் பாதுகாப்போடும் வாழ்வதற்கும் அவர்கள் தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அபிலாசைகளை கண்டடைவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவதற்கான தீர்மானத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்காக தனது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை

இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வொன்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியுமென்று தம்முடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருடனான சந்திப்பை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

TNA MP Appadorai Vinayagamoorthy told The Island this afternoon: "We are thoroughly satisfied with our visit to India, and with our talks with the leaders and officials here."

"The Indian government has assured us that it will work along with the TNA. Fourteen of the 18 MPs elected from the Northern and Eastern provinces belong to TNA. We are the true representatives of the Tamil people," he asserted.

The TNA MP said: "We depend hundred per cent on India for help to find a political solution acceptable to our people. We will be happy if President Mahinda Rajapaksa gives us what India thinks is reasonable."

Vinayagamoorthy said: "Prime Minister Dr Singh advised us to take along with us the Muslims, the upcountry Tamils and others and work unitedly with President Rajapaksa to evolve a solution to the Tamil problem. We told him we will try to do so."

One such source told The Island: "The Indians advised them to get real and drop the rhetoric and the mindset of the 1970s and 1980s. The Sri Lanka of today is very different from what it was three decades ago. Instead of fighting amongst themselves, the island’s Tamils should now unite and negotiate a pragmatic deal with President Rajapaksa. They should work with this President because he appears to be making a sincere effort to solve the ethnic problem for good."

Another source said the delegation conveyed to the Indians their three main concerns, namely:

1. The high-security zones in Jaffna should be cut considerably if they cannot be dismantled completely;

2. The rehabilitation and resettlement efforts should be speeded up so that the internally displaced Tamils can go back to their original homes and resume their normal lives; and

3. The extensive presence of the all-Sinhala army in the Jaffna peninsula should be reduced drastically if it cannot be removed completely.

The Tamil MPs’ Indian interlocutors and the Sri Lankan diplomats they interacted with have assured them that the Rajapaksa government is taking suitable steps to address these concerns.

--------------------------------------

இந்தியாவை நம்பி ஏமாந்தது போதும் எம்மை அழித்த இந்தியா தமிழரை நிம்மதியாக வாழ விடாது.

புலம் பெயர் தமிழரில் ஒருபகுதியினர் சீனாவுடன் ராஜதந்திரமான பேச்சுகளில் ஈடுபடவேண்டும். வடகிழக்கின் அபிவிருத்திக்கு சீனாவை நாடினால் இந்தியா எரிச்சலடைந்து உதவி செய்யுமா என்று பார்க்கலாம்?

Edited by Queen

வெறும் அறிக்கைகளை விட்டு பிழைப்பு நடத்தி தமிழன் அழிவுக்கு துணை போகும் கூட்டமைப்பு.

ஏதாவது எழுத்து மூலம் வழங்கப்பட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தரம் ஏமாத்தினாலும் தமிழனுக்கு உறைக்க மாட்டுது.தமிழா நீ ரொம்ப ரொம்ப நல்லவண்டா!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒருமுறை .....இருமுறை.... ஏமாறாலாம் தொடர்ந்தும்...???

தமிழருக்கான அரசியல் தீர்வு இந்தியாவின் சம்மதத்துடந்தான். அது எந்தவகையானது என்பது தெரியாத விடயம். ஏமாற்றங்களும் எதுவரை என்பதும் தெரியாதவிடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.