Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் உட்பட 200 பேருடன் கனடா நோக்கி கப்பலாம் - இலங்கை பத்திரிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 16, 2010 / பகுதி: செய்தி / கயல்வழி

புலிகள் உட்பட 200 பேருடன் கனடா நோக்கி கப்பலாம் - இலங்கை பத்திரிகை

விடுதலைப் புலிகள் உட்பட 200 இலங்கையருடன் தாய்லாந்துக் கப்பல் ஒன்று கனடா நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக இலங்கைப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாக கவனம் செலுத்தப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.

இவ்வாறு யாராவது தமது நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டால், கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக பன்னாட்டு சட்டத்திற்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கையர்கள் 76 பேருடன் கப்பல் ஒன்று கனடாவைச் சென்றடைந்திருந்தது.

இதில் விடுதலைப் புலிகளும் உள்ளடங்கி இருப்பதாக சிறீலங்கா அரசு பரப்புரை மேற்கொண்ட போதிலும்: நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்தத் தகவலை கனடிய அரசாங்கம் மறுத்திருந்தது.

pathivu

கப்பல் வருவது உண்மை.500 பேருக்கு ஆயத்தப் படுத்தி 200 பேர்தான் வருகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
76361317.jpg

கடவுளே எண்டு இழுபடம போய்ச்சேரோனும்...

  • கருத்துக்கள உறவுகள்

.

Jul 16, 2010 / பகுதி: செய்தி / கயல்வழி

புலிகள் உட்பட 200 பேருடன் கனடா நோக்கி கப்பலாம் - இலங்கை பத்திரிகை

--------

pathivu

0.jpg

தமிழ் பதிவுகளின், தரித்திரம் பிடிச்ச காகித கப்பல்களை இங்கு இணைக்க வேண்டுமா........? கறுப்பி.....?

.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வந்தவுடனேயே காட்டிக்குடுப்பதற்கும் புலத்தில் கருணாக்கள் இருக்கிறார்கள்....!!! நல்ல தமிழ்ச் சேவை, தொடர்ந்து செய்யுங்கள்.

கப்பல் வருவது உண்மை.500 பேருக்கு ஆயத்தப் படுத்தி 200 பேர்தான் வருகின்றார்கள்.

உங்களுக்கு சொல்லிப்போட்டு தான் கிளம்பினவையோ...??? இல்லை வாறைவையிலை உங்கட ஆக்களும் இருக்கினமோ....??

தமிழரெல்லாம் எங்கட ஆட்கள்தான்.சிலர் போல் பிரிவினையும் பாகுபாடும் எங்களுக்கு தெரியாது.

நாலு இடத்தில அடிபட வேண்டும் நாலு விசயம். தெரியவேண்டும் .குண்டு சட்டிக்குள் குதிரை ஓடிகொண்டு மற்றவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நினக்க கூடாது.

ஈழத்த்மிழனுக்கு நான் செய்த சேவை என்னை பொறுத்தவரை திருப்தியே.தமிழ் நாட்டு அகதிமுகாங்கள் உங்கள் எத்தனைபேருக்கு தெரியும். எத்தனை போராளிகளின் உயிர்களை கூட காப்பாற்றிவிட்டோம் என்று உடன் இருந்தவர்களை கேட்டால் தெரியும்.சும்மா இணயத்தில் வந்து உல்டா விடுபவர்களல்ல நாங்கள்.

Edited by arjun

நாங்கள்.

குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும்...... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jul 18, 2010 / பகுதி: செய்தி / ஈழவன்

232 தமிழர்களுடன் கனடாவை நோக்கிச் செல்லும் கப்பல்

இலங்கையிலிருந்து அகதிகளாகப் புறப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் தற்போது குவாட்டமாலா அருகில் சென்றுகொண்டிருப்பதாக ஏஷியன் ட்ரிபூன் தெரிவித்துள்ளது. 59 மீற்றர் நீளமான எம்.வி கடற்சூரியன் என்ற பெயருடைய இக்கப்பலே குவாட்டமாலா அருகில் சென்று கொண்டிருக்கிறது. இக்கப்பலில் 232 இலங்கை அகதிகளும், 12 இந்தியத் தமிழர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் ஆரம்பத்தில் தனது பயணத்தை அவுஸ்திரேலியா நோக்கி ஆரம்பித்திருந்த போதும், பின்னர் கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவை நோக்கிச் செல்வதாக கனடா அதிகாரிகள் விழிப்பூட்டப்பட்டுள்ளனர்.

மேலும், இக்கப்பலில் விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என இலங்கை அரசு கனேடியன் அரசுக்கு எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு 75 இலங்கை அகதிகளுடன் கனடாவைச் சென்றடைந்த கப்பலிலும் புலி உறுப்பினர்கள் இருப்பதாக இலங்கை கூறியதை அடுத்து அந்த 75 பேரும் கனடா சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை சிங்கள ஊடகங்கள் அவுஸ்ரேலியா, கனடா செல்லும் ஏதிலிகளை புலி உறுப்பினர்கள் என்று பொய்ப் பிரச்சரம் செய்து வருகின்றன. நாடு கடத்தப்பட்ட அப்பாவிகள் பலரின் நிலை சிறிலங்காவில் கேள்விக்குறியதாகவே இருந்து வருகின்றது.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.