Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்தையாவும் முகம்மது அலியும்

Featured Replies

முத்தையாவும் முகம்மது அலியும்

25 July 10 01:52 am (BST)

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டு வீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முகமது அலி.

என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப் போகவேண்டும்” என தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ, போராளியோ அல்ல!! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் என்றழைக்கப்பட்ட முகமது அலி.

என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுது, பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும் என வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட, ராணுவ உயரதிகாரிகளால் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவருடைய பட்டங்கள் பறிக்கப்பட்டன. குத்துச்சண்டை உரிமம் ரத்து செய்யப்பட்டது. குத்து சண்டை சங்கங்கள் அவரை நீக்கின. உயிருக்குயிரான குத்துச்சண்டையில் ஈடுபடாதபடி ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டார்.

வியட்நாமில் மூக்குடைபட்டு அமெரிக்கா திரும்பிய பின், ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க உச்சநீதிமன்றம் முகமது அலியைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கிறது. அதன் பின்னர் ஒரு குத்துச்சண்டை சகாப்தம் உருவானதை உலகமே பார்த்தது. ஆதிக்க அரசாங்கங்களின் அடக்குமுறை செயற்பாடுகளை முதுகெலும்புடன் எதிர்க்காமல், தன்னைப்போன்ற மக்கள் எத்தனை நசுக்கப்பட்டாலும் விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு என வாய்மூடி மௌனியாக இருந்து ஒட்டுண்னி வாழ்க்கை வாழ்ந்திருந்தால் வெறும் விளையாட்டு

வீரனாக வேண்டுமானால் முகமது அலி வரலாற்றில் இடம்பெற்றிருப்பார்.

மனிதநேயமிக்க மனிதனாக அழியா புகழுடன் அல்ல.

சமகாலத்தில் முகமது அலியைப்போல தன் அரசாங்கத்தை எதிர்த்து குரல் எழுப்பிய விளையாட்டு வீர்ர்கள் யாராவது இருக்கின்றனரா எனப் பார்த்தால், ஜிம்பாப்வே முன்னாள் அணித்தலைவர் ஆண்டி பிளவரும் அதே அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலங்காவும் கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்களாக தென்படுகின்றனர்.

2003 பெப்ரவரி 10, உலகக்கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தனது முதற்போட்டியை நமீபியா அணிக்கு எதிரான ஆட்டம் ஆரம்பிக்க சிலநிமிடங்கள் இருக்கையில் பத்திரிக்கையாளர்கள், வர்ணனையாளர்கள் மத்தியில் பரபரப்பு., ஆண்டி பிளவரும் ஒலங்காவும் ஒரு அறிக்கையை வெளியிடுகின்றனர்.

"நாங்கள் தொழில்ரீதியான கிரிக்கெட் ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும், எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமை மீறல்களை, படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம், எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னி, இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பை, உலகக் கோப்பைப் போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம். இதன் மூலமாக நாட்டில் நடக்கும் மனித உரிமைகளை நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த செயல் எங்கள் நாட்டின் புனிதத்தையும் கண்ணியத்தையும் மீட்டுத்தரும் என நம்புகின்றோம்” என்ற உள்ளடக்கத்துடன் வெளியான அறிக்கை கிரிக்கெட் உலகை மட்டுமல்ல, அனைவரையும் ஒரு சேர திரும்பிப் பார்க்க வைத்தது. ஹென்றி ஒலங்கா ஜிம்பாப்வே அணிக்காக ஆடிய முதல் கருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையில் மனசாட்சியுடன் ஹென்றி ஒலங்காவும் இருந்தமை, இலங்கையின் சனத் ஜெயசூரியா தமிழினப் படுகொலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தால் எப்படி இருந்திருக்குமோ அவ்வகையிலானது. ஆண்டி பிளவர் ஓய்வு பெற அறிவுறுத்தப்பட்டார். ஹென்றி ஒலாங்காவுக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டது. மரண தண்டனைக்குரிய தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். நாட்டைவிட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் ஊடகத்துறையிலும் பணி புரிந்து வருகின்றார். ஆண்டி பிளவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருக்கின்றார். ஆண்டி பிளவரின் கிரிக்கெட் சாதனைகள் முறியடிக்கப்படலாம், ஹென்றி ஒலங்காவை விட தேர்ந்த பந்துவீச்சாளர் நூற்றுக்கணக்கில் வரலாம். முகமது அலியை விட பலசாலிகள் மைக்டைசன்களாகவும் ஹோலிபீல்டுகளாகவும் உலகை மிரட்டலாம். சகமனித உயிர்களுக்காக , உயிர்களின் உரிமைகளுக்காக போராட முடியாமால் போனாலும், குறைந்த பட்சம் எதிர்ப்பையாவது பதிவு செய்யும் ஆளுமைகள், அவர்களின் புள்ளிவிவரங்கள் முறியடிக்கப்பட்டு மறக்கப்பட்டு விட்டாலும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பார்கள்.

"என்னை ஊக்குவிக்க உற்சாகப்படுத்த வந்திருக்கும் ஜனாதிபதி ராஜபக்சவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்ற முத்தையா முரளீதரன் சமீபத்தில் 800 விக்கெட்டுகளை தனது வீச்சில் எடுத்திருக்கிறார் என்பது இந்தத் தருணத்தில் நினைவுகூறத்தக்கது.

இந்த சாதனை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சாதனையை பாராட்டும் அதே தருணத்தில் முரளீதரனை கண்டனமும் செய்யத் தோன்றுகிறது. தமிழின உரிமைக்காக அவரை களப்போராட்டம் செய்ய அழைக்கப்போவதில்லை, குறைந்த பட்சம் தமிழினப் படுகொலைகளுக்குக் காரணமான நவீன ஹிட்லரைப் புகழாமலாவது இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

நன்றி : தமிழோவியம்

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=27665&cat=1

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நடந்து முடிந்த இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தின் இறுதி நாளுக்கு முன்பதாக பி.பி.சி முரளியைப் பேட்டி கண்டது. அதில், சிறுபான்மைத் தமிழராகிய நீங்கள் தற்போக்டிய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது, அதற்கு, "தற்போது போர் முடிந்து விட்டது, எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள், நான் தொடர்ந்து கிரிக்கெட்டில் சேவையாற்றுவேன், வடக்குக் கிழக்கில் சேவை செய்ய விருப்பம்" என்று தெரிவித்தார்.

எந்தவிடத்திலும் நடந்த அக்கிரமங்கள் தொடர்பாக வாய் திறக்கவில்லை.

இவரது தந்தையாரின் பிஸ்கெட் கம்பெனி 83 இல் காடையர்களால் எரிக்கப்பட்டதாகவும் பின்னர் வட்டிக்குப் பணம் வாங்கி அது மீண்டும் கட்டப்பட்டதாகவும் கூடச் சொன்னார்கள்.

இவர் ஒரு சிங்களத் தமிழர், சிங்கள துடுப்பாட்ட அணியில் இடம்பெறவேண்டும் என்பதற்காகவே சிங்கள பூணூல் பூண்டவர்.

இவர் ஒருபோதுமே எமக்காகக் குரல் கொடுக்கப்போவதில்லை. நாம் இவரைத் தமிழராகப் பார்ப்பதே தவறு.

போட்டி முடிந்தவுடன் காப்டன் உற்பட அனைத்துச் சிங்கள வீரர்களுமே இவரைத் தூக்கித் தோளில் சுமந்து கொண்டு சென்றனர்.19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்குச் சுதந்திரம் கோரி இங்கிலாந்து சென்று வழக்காடி வென்று வந்த ஒரு தமிழ் சட்டத்தரணியின் கதைதான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. அவரையும் கூட இப்படித்தான் தோளில் சுமந்து வந்தார்களாம் சிங்களவர்கள். அந்த சட்டத்தரணி தோளில் ஏறிக் கண்ட சுகத்தின் பலனை இன்று மொத்தத் தமிழினமும் அனுபவிக்கிறது. இவர் என்ன செய்கிறார் என்பதை இருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டும் அரசியலும் வேறு வேறென்று சொல்லும் தமிழர்களே!அர்சுனா ரணதுங்காவும் ஜெயசூரியாவும் அப்படிச் சொல்லவில்லையே!800 விக்கட்டுக்களை எடுத்து உலகசாதனை படைத்த முரளிக்கு அணித்தலைவர் பதவி குடுக்கக் கூட மனமில்லாத சிங்கள அரசுக்காக அவர் விளையாடியது பரவாயில்லை.ஆனால் தமிழின அழிப்பை எதிர்த்து எந்த இடத்திலும் தனது கருத்தைப் பதிவு செய்யாதவரை அவரை ஒரு தமிழன் என்று எப்படி அழைப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையாளரின் கருத்துக்களுடன் முற்றுமுழுதாக நான் உடன்படுகின்றேன். சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரை அதற்கு அரசியலும் விளையாட்டும் வெவ்வேற்றல்ல என்பதை பலமுறை வெளிப்படுத்தி நின்றிருக்கின்றது.

முரளிதரனின் கிரிக்கட் வாழ்க்கை அன்றைய (1992) இலங்கை அணியின் தெரிவாளராக இருந்த மொரட்டுவைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூபா 25 இலட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதில் இருந்து தொடங்குகின்றது என ஒர் ஆங்கில பத்திரிகையில் வாசித்த நினைவு வருகின்றது. இதனை நான் இங்கு குறிப்பிடுவது முரளிதரனின் திறமையை எடைபோடுவதற்காக அன்று, மாறாக சிங்கள அணியில் அவருக்கான இடம் திறமையின் அடிப்படையில் தரப்படவில்லை என்பதை வலியுறுத்தவே குறிப்பிட்டேன். அதன் பின்னர் அர்சுன ரணதுங்கவின் ஆதரவு அவருக்கு பெரும் அளவில் இருந்த போதிலும், அசங்க குருசிங்க போன்ற சிங்கள இனவாதிகளின் அதிருப்தி அவர்மேல் எப்போது இருந்தது. இவற்றை எல்லாம் மீறி சிங்கள தேசம் முரளியை தனது அணியில் வைத்திருந்தது என்றால் அது தனி ஒருவராக ஆட்டத்தின் போக்குகளை மாற்றக் கூடிய வல்லமையுள்ளவராக முரளிதரன் இருந்தார் என்பதற்காகவே.முரளிதரனின் பந்துவீச்சுப் பாணியில் சர்ச்சைகள் இருந்தபோதும் சிங்கள தேசம் அவருக்காக நின்றது, காரணம் தனது தேசியம் உலக அளவில் பேசப்படுவதற்கு கிரிக்கட் மூலம் வெற்றிகனிகள் தேவை, அந்த வெற்றிக்கனிகளைப் பறித்துத் தரும் சுழல் மந்திரம் முரளிதரனிடம் இருந்ததே ஆகும்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது முரளிதரனின் இளைய சகோதரன் முத்தையா சசிதரன் இவ்வாறு சொல்லுகின்றார்

“Obviously we are happy, in fact, overjoyed. This is a great victory for the country and the entire nation is celebrating. This triumph will bring economic growth for us, spur investment and prove a catalyst for development,” Sasidaran added, saying, “The future is bright for Sri Lanka.”
இணைப்பு: We’re overjoyed says Murali’s brother

இங்கு சசிதரனின் கூற்று முரளி குடும்பத்தின் கூற்றாக, முரளியின் கூற்றாகவே பத்திரிகைகளில் வெளியானது. இதற்கு எந்த ஒரு மறுப்பும் முரளியிடம் இருந்து வரவில்லை. மாறாக சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மகிந்த புகழ்பாடினார் முரளி. பெரிய கம்பனிகளையும், முதலீடுகளையும் தென்னிலங்கையில் வைத்து இருக்கின்ற முத்தையா குடும்பம் இனப்பற்று மொழிப்பற்று என்று உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்க முட்டாள்களா என்ன?

முரளியை ஒரு அன்டி பிளவராகவோ, ஒரு முகம்மது அலியாகவோ, ஒரு ஹென்றி ஒலங்காவாகவே நினைத்துப் பார்ப்பது எங்களின் முட்டாள்த்தனம். எமது இனம் முள்ளிவாய்க்காலில் கருவழிக்கப்பட்டபோது முரளி, சேன் வோர்ணின் சாதனையை முறியடித்து ஏற்கனவே உலக சாதனையை படைத்து இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சிங்கள அணியில் இருந்த ஒரே தமிழரான உலக சாதனைக்கு சொந்தக்காரரான முரளி, இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலைதான் என குரல் கொடுத்திருப்பாராயின், பன்னாட்டு சமூகத்துக்கு ஒரு செய்தியை உறுதியாகச் சொல்லியிருக்க முடியும். உலகத்தமிழர்கள் முரளியை தங்கள் உள்ளங்களில் சிங்காசனமிட்டு அமர்த்தியிருப்பார்கள்.

I'm Sri Lanka says Murali

கடந்தவருட மே மாதங்களில் லன்டனில் நடந்த சேடம் போராட்டங்களில்...

லன்டனில் இருக்கும் பெயர் சொல்லக்கூடிய அளவில் உள்ள..... தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய..

உலக புகழ் பெற்ற பாடகர் மீயா..... BBC1 / BBC NEWS/ BBC WORLD தொலைகாட்சி, முன்னனி செய்தி வாசிப்பாளர்கள் ஜோர்ஜ் அழகைய்யா / கிரிஷ்னன் குருமூர்த்தி..

பல இங்கிலாந்து தமில் அரசியல்வாதிகள்.... 'பைலா பாப்பா' போன்ற ஷொசலைட்டுக்கள்..

போன்றவர்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை..

எல்லோரும் போயி ஆகிற வேலய பாருங்கப்பா.... :lol:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

முரளியை ஒரு கிரிக்கெட் வீரனாக மட்டும் அடையாளம் காண்பதைத் தவிர.. அவரை தமிழ் உணர்வுள்ள கிரிக்கெட் வீரர் என்று இனங்காண்பது.. காட்டுவது மிக ஆபத்தானது.

இவரும் சங்கரியும் ஒன்று தான்..!

கடந்தவருட மே மாதங்களில் லன்டனில் நடந்த சேடம் போராட்டங்களில்...

லன்டனில் இருக்கும் பெயர் சொல்லக்கூடிய அளவில் உள்ள..... தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய.. உலக புகழ் பெற்ற பாடகர் மீயா..... BBC1 / BBC NEWS/ BBC WORLD தொலைகாட்சி, முன்னனி செய்தி வாசிப்பாளர்கள் ஜோர்ஜ் அழகைய்யா / கிரிஷ்னன் குருமூர்த்தி.. பல இங்கிலாந்து தமில் அரசியல்வாதிகள்.... 'பைலா பாப்பா' போன்ற ஷொசலைட்டுக்கள்.. போன்றவர்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை.. எல்லோரும் போயி ஆகிற வேலய பாருங்கப்பா.

எங்கள் செல்லப்பாப்பாவின் பெயரை இங்கு கொண்டுவந்து இடைச்சொருகல் செய்த பனங்காயின் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். பாப்பா அப்போது இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பார் அல்லது பேப்பர் கப்பல் செய்து தேம்ஸ் நதியில ஓடவிட்டு ஒத்திகை பார்த்திருப்பார். இதையெல்லாம் உங்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா? புறம்***ளே, யார் எங்கை என்ன செய்தார்கள் என்று ஆராய்ந்து அவர்கள் பட்டம் கொடுப்பதை தயவுசெய்து எங்கள் தேசிய ஊடகங்களின் கைகளில் மட்டும் விட்டுவிடுங்கள். வந்தான் பார் இந்த பந்து பொறுக்கி வலமாய் ஓங்கி வெழுக்கிறதுக்கு பதமாய். அவனை போட்டு தாக்காமல்...

சாதனைகள் பல படைத்த கிரிகெட் வீரர் முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்.

எங்கள் செல்லப்பாப்பா

மத்தவைய விட்டுட்டு அவவ மட்டும் தாக்கிரீங்க..

அவ, உங்கட பதினெட்டுபட்டி பஞ்சாயத்து தலவர் மயில்வகனத்தரின் சொல்லைகேட்டு அடக்கஒடுக்கமாய் இருக்கெல்ல எண்டு கோபம் போல..

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.