Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

"கெஸின்' என்ற பெயருடைய விண்கலம் ஒன்று சனிக்கோளின் துணைக்கோளான "டைட்டன்' சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

கெஸினியில் விசேடமாக கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அது எடுத்து அனுப்பிய படங்களில் ஒன்றே இது. இருப்பினும் அந்தப் படத்தை வைத்து உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது என்ற கருத்தும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது. சனிக்கோளின் துணைக் கோளாகக் கருதப்படும் "டைட்டன்' தொடர்பான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற "கெஸினி' விண்கலமானது சனிகோளில் பனிப்பாறையொன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

"கெஸினி' விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வெண்ணிற வட்ட வடிவில் காணப்படுகின்ற பிரகாசமான புள்ளியைக் கொண்டே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த வட்டமானது 30 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்மலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் சனிக்கோளில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வுகளின் படி சனிக்கோளில் சமுத்திரம் காணப்படுவதாகக் கருதப்பட்டிருந்தது.எனினும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி சனிக்கோளில் அவ்வாறான சமுத்திரம் எதுவும் கிடையாது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு, "கெஸினி' விண்கலத்தில், பொருத்தப்பட்டிருக்கும் "விம்ஸ்' என்ற விசேட கமராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, சனியில் ஐஸ் மலைகள் காணப்பட்டாலும் அவை உருகி நீர் நிலைகளாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.

இருந்த போதிலும் இந்தக் கருத்துக்களுக்கெல்லாம் எதிர்வாதம் புரிகின்ற மற்றொரு தரப்பினரின் கருத்தின்படி, மேற்படி "விம்ஸ்' கமராவில் பதிவாகியுள்ள படங்கள் தெளிவாக இல்லாததால் தெளிவற்ற அந்தப் படங்களை வைத்து உறுதியான முடிவு எதற்கும் வர முடியாது எனவும் தெரிவிக்கின்றனர்.

http://www.sudaroli.com/05102301ari.htm

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply

தவறாக இணைத்து விட்டேன்

குருவி நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

மதுரன் தகவலுக்கு நன்றிகள்

  • 2 weeks later...

புளோட்டோவுக்கு செல்லும் விண்கலம்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் `நாசா' அடுத்த ஆண்டு

ஜனவரி மாதம் புளுட்டோ கிரகத்துக்கு `நிï ஹாரிசான்' என்ற விண்கலத்தை அனுப்புகிறது.

`அட்லஸ்-5' ராக்கெட்டில் வைத்துஅனுப்பப்படும் இந்த விண்கலத்துடன்

7 நிபுணர்களும் செல்கிறார்கள். அந்த விண்கலம் புளோரிடாவில் உள்ள தளத்தில் வைக்கப்பட்டு இருக்கும் காட்சி.

தகவல் http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

_41054432_itokawa_jaxa_203.jpg

ஆய்வுக்குள்ளான விண்கல் (Asteroid)

ஜப்பானிய விண்கலம் ஒன்று வெற்றிகரமாக விண்கல் ஒன்றை அடைந்து அங்கு ஆய்வுக்கு தேவையான மாதிரிகளைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..! குறிப்பிட்ட விண்கலம் பூமியில் இருந்து கிட்டத்தட்ட 290 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் வலம் வரும் குறிப்பிட்ட விண்கல்லில் இருந்தே ஆய்வுக்குரிய மாதிரிகளைப் பெற்றுள்ளது..! குறித்த விண்கலம் மாதிரிகளுடன் மீண்டும் 2007 இல் பூமிக்கு திரும்ப இருக்கிறது..! இந்த மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் சில ரகசியங்கள் அவிழ்க்கப்படலாம் என்று எதிர்வுகூறப்படுகிறது,,!

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4467676.stm

தகவலுக்கு நன்றி குருவிகள்

ஆரம்பத்தில் இந்த விண்கலம் தொடர்புகளை இழந்ததாகவும் ஜப்பானிய விண்வெளி முயற்சி தோல்வியுடன் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன தானே?

  • 3 weeks later...

சிறு கிரகத்தில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம்

vinkalam0sc.gif

விண்வெளியில் முக்கிய கோள்களுக்கு இடையே ஆயிரக் கணக்கான சிறு கோள்களும் சுற்றிக் கொண்டிருந்தன. `அஸ்டராயிட்ஸ்' எனப்படும் இந்த சிறு கோள்கள் விண் கற்கள் என்றும் அழைக் கப்ப டுகின்றன.

இந்த சிறு கோள்களில் `இதோகவா' என்று ஜப்பான் மொழியில் அழைக்கப்படும் சிறு கோள் பற்றி ஆய்வு நடத்தவும் மண் மாதிரிகளை எடுத்து வரவும் ஜப்பான் `ஹயாபூசா' என்ற வீண்கலத்தை கடந்த 2003-ம் ஆண்டு அனுப்பியது. விண்வெளிக்கு சென்ற அந்த விண்கலத்தில் திடீர் கோளாறும் ஏற்பட்டது. அந்த கோளாறு சரி செய்யப்பட்டது. பூமியில் இருந்து 29 கோடி கி.மி. தூரத்தில் உள்ள அந்த சிறு கோள் பரப்பில் `ஹயாபூசா' ராக்கெட் வெற்றி கரமாக இறங்கியது. அங்கிருந்து மண் மாதிரிகளையும் சேகரித்து கொண்டு 2007-ம் ஆண்டு இந்த விண்கலம் பூமியை அடையும்.

இந்த விண்கலம் 2003 அடி நீளம், 100 மீட்டர் அகலம் உள்ளது. பூமி ஒருவானது பற்றிய புதிய தகவல்களும் இந்த பயணம் மூலம் தெரிய வரும்.

http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டு போட்டவுடன் அழிந்தே போய்விட்டது என்று பலர் நினைத்த நாடு இப்போது ரோபோ தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, விணவெளியிலும் கால் வைத்திருப்பது எம் இனத்துக்கு சிறந்த எடுத்துக்கட்டு.

  • 1 month later...
  • தொடங்கியவர்

_41255894_planet_eso_b203.jpg

பூமியை ஒத்த கோள் கண்டுபிடிப்பு..!

பூமியைப் போல 5 மடங்கு திணிவைக் கொண்டதும் இயல்புகளில் கிட்டத்தட்ட பூமியை ஒத்தது என்று கருதத்தக்கதுமான சிறிய கோள் ஒன்றை 25,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் பால்வீதியில் சர்வதேச விண்ணியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனராம் என்று அறிவிக்கப்படுகிறது. OGLE-2005-BLG-390Lb எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனை ஒத்ததும் ஆனால் ஒப்பீட்டளவில் சிறியதும் குளிர்ச்சியானதுமான அதன் தாய் நட்சத்திரத்தை 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வலம் வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது பூமி உள்ளதை ஒத்த ஒரு உடுத்தொகுதியில் (galaxy) இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது பால்வீதி உடுத்தோகுதியில் galactic மையத்தை அண்மித்துக் காணப்படுகிறதாம்.

மேலதிக விபரங்களுக்கு - http://kuruvikal.blogspot.com/ நன்றி - பிபிசி.கொம்

தகவலுக்கு நன்றி குருவிகள்

தகவலுக்கு நன்றிகள் குருவிகள்.

  • 1 month later...

நன்றி தகவலுக்கு குருவி அண்ணா..

ஆனால் ஏன் இந்த புதிதாய் கண்டு பிடிப்பவைகளுக்கு பெரீய வாசிக்கவே கஷ்டமான பெயர்களை வைக்கிறார்கள்..இப்போ ரமா,ரசி,அனி,இல்லை சகி அப்பிடி ஏதும் வைக்க ஏலாதா? :roll: :P

  • 2 weeks later...

டிஸ்கவரி விண்வெளி ஓடத்திலிருந்து 16 ரப்பர்நுரைத் துண்டுகள் விழுந்தன

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்துச் சிதறிய கொலம்பியா விண்வெளி ஓடத்திலிருந்து நுரை ரப்பர்கள் (ஃபோம்) பிதுங்கி வெளியேறியதைப் போலவே இந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்திலும் நிகழ்ந்திருக்கிறது.

நாசா தனது வலைதளத்தில் இத் தகவலை இப்போது விவரமாகத் தெரிவித்திருக்கிறது.

அதிலிருந்து 16 நுரை ரப்பர் துகள்கள் வெளிப்பட்டுள்ளன. இது விண்வெளி ஓடத்தை வடிவமைத்த பொறியாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொலம்பியாவுக்கு நேரிட்ட கதி பிற விண்வெளி ஓடங்களுக்கு நேரிடக்கூடாது என்ற எண்ணத்துடன் மற்ற விண்வெளி ஓடங்களில் இக்குறையை நீக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது. அப்படியிருந்தும் இத்தனைத் துண்டுகள் வெளிப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவின் உயர் விண்வெளி ஆய்வு அமைப்பான "நாசா கவலை கொண்டிருக்கிறது.

கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டியைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த நுரை ரப்பர்கள் வெளியேறியதால் அது சுடேறி வெடித்தது; உயிரைக்குடிக்கும் விஷ வாயுக்கள் வெளியேறி விண்கலத்தில் புகுந்தன. இதனால் கொலம்பியா வெடித்துச் சிதறியது. அதில் இருந்த 7 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

ஆனால் டிஸ்கவரி விண்வெளி ஓடத்தை விண்ணில் சோதித்த விண்வெளி வீரர்கள் அது நல்ல நிலையிலேயே இருப்பதாகப் பின்னர் தெரிவித்தனர். அதில் இருந்தவர்கள் பத்திரமாக பூமிக்கும் திரும்பிவிட்டனர்.

வரும் மே மாதம் மீண்டும் ஒரு விண்வெளி ஓடத்தை விண்ணில் அனுப்ப நாசா தயாராகி வருகிறது.

இந்த நுரை ரப்பர் விவகாரம்தான் அதற்கு இப்போது பூதாகாரமாகத் தெரிகிறது.

dinamani.com

  • 5 months later...
  • தொடங்கியவர்

_39396462_sm_flight_esa_203.jpg

சிமாட் 1 செயற்கைக் கலம்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ESA) சந்திரனுக்கு அனுப்பி வைத்திருந்த SMART 1 செயற்கைக் கலம் சந்திரனின் மேற்பரப்பில் மோதவிடப்பட்டு..சந்திரனின் தரைத்தோற்ற கட்டமைப்புப் பற்றிய ஆய்வுக்குரிய தகவல்கள் பெறப்பட்டு வருவதாக எசா அறியத்தருகிறது.

_42043656_flash_cfht_203.jpg

சந்திரனில் சிமாட் 1 மோதும் போது கவாயில் உள்ள ஐஆர் கதிர்வீச்சுக்களைப் பதிவு செய்யும் தொலைநோக்கியூடு பதியப்பட்ட குறித்த மோதலின் பின் தோன்றிய ஒளிவெள்ளத்தைப் படத்தில் காணலாம்.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5309656.stm

  • தொடங்கியவர்

_42068742_liftofflarge_b203_ap.jpg

அமெரிக்க விண்னோடம் அட்லான்ரிஸ் புளோரிடாவில் உள்ள கெனடி ஏவு தளத்தில் இருந்து ஆறு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கிப் பயணித்துள்ளது.

ரஷ்சிய விண்கலம் ஒன்றும் வரும் 18 வாக்கில் சர்வதேச விண்ணியல் நிலையம் நோக்கிப் பயணிக்க உள்ள நிலையில் சில தடவைகள் பிற்போடப்பட்ட அட்லான்ரிஸ் பயணம் இன்று நிகழ்த்தப்பட்டது. இந்த விண்ணோடம் விரைவில் பணியில் இருந்து ஓய்வுபெற இருக்கிறது.

இந்தப் பயணத்தின் போது விண்வெளியில் அமெரிக்கா ரஷ்சியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு கட்டப்படும் சர்வதேச விண்ணிலையத்துக்குரிய பாகங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

பிபிசி.கொம்

  • தொடங்கியவர்

_42068742_liftofflarge_b203_ap.jpg

அமெரிக்க விண்ணோடம் அட்லான்ரிஸ் புளோரிடாவில் உள்ள கெனடி ஏவுதளத்தில் இருந்து ஆறு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நோக்கிப் பயணித்துள்ளது.

ரஷ்சிய விண்கலம் ஒன்றும் வரும் 18 வாக்கில் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கிப் பயணிக்க உள்ள நிலையில் சில தடவைகள் பிற்போடப்பட்ட அட்லான்ரிஸ் பயணம் இன்று நிகழ்த்தப்பட்டது. இந்த விண்ணோடம் விரைவில் பணியில் இருந்து ஓய்வுபெற இருக்கிறது.

இந்தப் பயணத்தின் போது விண்வெளியில் அமெரிக்கா ரஷ்சியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு கட்டப்படும் சர்வதேச விண்ணிலையத்துக்குரிய பாகங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

bbc.com

பொருமிய கோளின் புரியாத புதிர்கள்.

42088440planetcfa203lwl4.jpg

வானவியளாரர்களால் அண்மையில் ஆராய்வுக்கு உட்பட்ட புதிய கோளான HAT-P1௧ , கோள்களின் மூல விதிகள் பற்றிய புதிய வினாக்களைத் தொடுத்து உள்ளது.பூமியில் இருந்து 450 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ள லஸ்ட்ரா என்னும் நட்ச்சத்திரக் கூட்டத்திலே உள்ள ஓர் நட்சத்திரத்தைச் சுற்றி இக் கோள் வலம் வருகிறது.

இதன் ஆரை ஜுப்பிட்டர் கிரகத்தைவிட 1.38 விகிதம் பெரிதானதாக இருந்த போதும், அதன் திண்ம விகிதமானது ஜிப்பிட்டர் கிரகத்தை விட அரைவாசியானதாக கணிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படயில் கணிக்கையில் இதன் அடர்த்தியானாது கோள்களின் வழமையான அடர்த்தியை விட குறைவானதாக இருக்கிறது.இதனால் கிரகங்களின் திண்ம நிலைபற்றிக் கணிப்பிடும் கணிதச் சமன்பாடுகள் கேள்விக்கு உள்ளாகின்றன.இது கோள்களின் உருவாக்கம் சம்பந்தமான கோட்பாடுகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இது பற்றி , கார்வார்ட் சிமித்தோனியன் விண்ணியல் மையத்தைச் சேர்ந்த காஸ்ப்பர் பேக்கோஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'இந்தக் கோளானது நீரின் அடர்த்தியை விடக் கால் வாசியானதாக இருக்கிறது' என்கிறார்.

HAT-P1௧ ஆனது சூரிய மண்டலத்துக்கு வெளியாலே இது வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள இரு நூறு கோள்களில் ஒன்றாகும்.இதன் விட்டமே இது வரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலேயே பெரிதானதாக உள்ளது.

இதன் மர்மமான அடர்த்தியை விளக்கவென பல புதிய கோட்பாடுகள் முன் மொழியப் பட்டுள்ளன. ஆகிலும் அவை எவையுமே இந்த இயல்பைச் சரியாக விளக்குபனவாக இருக்கவில்லை.இது சம்பந்தாமான ஆராய்வுகள் தொடர்ந்தும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.இதுவரை மர்மமாக இருக்கும் இந்த விண்ணியல் வினோதங்களை அவிழ்க்க விஞ்ஞான ரீதியான ஆய்வுகளைத் தொடர்வதே புவியின் ,கோள்களின் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கேள்விகளுக்கு விடைகளைப் பகரும்.

நன்றி பிபிசி.கொம்

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5346998.stm

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாரதர்!

  • 4 months later...

உங்களின் தகவலுக்கு நன்றி

டிஸ்கவரி இந்த விண்கலம் மணித்தியாலத்தில் எத்தனை வேகத்தில் செல்லும்

27,360km/h

+பூமி 107870கீ.மீ.ம. இவ்வளவு வேகத்திலை சூரியனை சுற்றிக்கொண்டு இருக்கு

+பூமி தன்னைய்த்தானே சுற்ருவதுக்கு 1676 கீ.மீ.ம.

+பூமி ஒரு வருடத்தில் 944,941,200கீ.மீ தூரம் சுற்ரி வருகிறது

  • 2 months later...

சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புகிறது அமெரிக்கா

வரும் 2019ம் ஆண்டில் சந்திரனுக்கும் மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் க்ரபின் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்க விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுவதற்காக பட்ஜெட் ஒதுக்கி இருப்பதாகவும், கடந்த 1969ல் வெற்றிகரமாக சந்திரனுக்கு மனிதரை அனுப்பி 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அனுப்பப்பட உள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் விண்கலத் திட்டம் வரும் 2010ம் ஆண்டில் நிறைவடைய இருப்பது கவலையளிப்பதாக மைக்கேல் குறிப்பிட்டார்.

நாசாவைப் பொறுத்தவரை பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், அவற்றை முதலில் நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறிய அவர், 2010ம் ஆண்டுக்கும் மாற்று விண்கலத்தை உருவாக்க வேண்டியுள்ளது என்றார்.

விண்வெளி பயணம் உள்ளிட்ட ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு விண்கலம் அவசியமாகிறது என்றும் மைக்கேல் கூறினார்.

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகள் வெகு சீக்கிரமே சந்திரனுக்கான ஆளற்ற பயணங்களை மேற்குள்ள உள்ள நிலையில் அமெரிக்காவின் ஆளுள்ள பயணமும் திட்டமிடப்பட்டு வருகிறது..!

Unmanned

Japan - Selene - Launch: July - August 2007

China - Chang'e 1 - Launch: September 2007

India - Chandrayaan - Launch: February 2008

USA - Lunar Reconnaissance Orbiter - Launch: October 2008

Japan - Lunar-A - Launch: 2010 (cancelled, penetrators are going to be integrated in another moon mission)

India - Chandrayaan II: 2010 or 2011

Russia - Luna-Glob - Launch: 2012

Germany - LEO - Launch: 2012

Manned

USA - Project Constellation: Manned mission by 2020

China - Chang'e program: Manned mission by 2030

ESA - Aurora Programme: Manned mission before 2020

http://en.wikipedia.org/wiki/Future_lunar_missions

தகவல்களைப் பரிமாறிக் கொண்ட வெண்ணிலாவுக்கு நன்றிகள். செய்தியின் தலைப்பை சரி செய்துவிடுங்கள்.

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் பில்கேட்ஸ்

விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும்மிதக்கும் சர்வதேச ஆய்வுக் கூடத்துக்கு அவ்வப்போது ராக்கெட்டில் தளவாடங் களையும், நிபுணர்களையும் நாசா நிறுவனம் அனுப்பி வைக்கிறது. இந்த ராக்கெட்டுகளில் இதுவரை 5 சுற்றுலா பயணிகளும் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அமெரிக்க மைக்ரோ சாப்ட்ஸ் கம்ப்ïட்டர்அதிபரும் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரும் ஆன பில்கேட்ஸ் இப்போது விண் வெளிக்கு சுற்றுலா செல்ல திட்ட மிட்டு இருக்கிறார். இந்த தகவலை பில்கேட்சின் கூட்டாளி சார்லஸ்சிமோ னியா தெரிவித்துள்ளார்.

சிமோனியானி இப்போது ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வுக்கூடத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். பில்கேட்ஸ் விண்வெளிக்கு சுற்றுலா செல்வது எப்போது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.