Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சமோசா-சுவையான திரையரங்கு இடைவேளை உணவு...

sangam-theatre-chennai.jpg

ஸ்டஃப்பிற்கு தேவையான பொருட்கள்(சமோசாவின் உள்ளிருக்கும் கறி)

1samusa.jpg

உருளைக்கிழங்கு - 4

பட்டாணி - 1/2 கப்

முந்திரி பருப்பு-25

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

வத்தல் தூள் - 1/4 தேக்கரண்டி

மாங்காய் பவுடர் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

நெய் - 3 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 4 கப் (பொரிக்க)

செய்முறை

மிக சிறியதாக நறுக்கிய கேரட் உருளைக்கிழங்கையும்,பட்டணியையும் சேர்க்கவும்.சிறிது நேரம் கிளரி

அதில் கரம் மசாலா,மிளகு,வத்தல் தூள்,மாங்கய் பவுடர்,சீரகத்தூள் சேர்த்து கலந்து விடவும்

அத்துடன் கொத்தமல்லி தழை போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும்

வெந்ததும் அதனை கரண்டியால் மசித்துக் கொள்ளவும்சிறிது நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து அதனையும் சேர்க்கவும் விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்

--------------------------------------------------------------------------------

சமோசா ஷீட்- தேவையான அளவு (மேலே ஆடை போல மூடுவது)

கிழே கூறிய பொருட்களை பூரிமாவு போல் பிசைந்து 30 நிமிடம் கழித்து பெரிய பூரி போல் தேய்த்து அதனை 9 cm அகலம் 25cm நீள்ம் போன்று கட் பன்னவும் நீளம் அதிகம் வேண்டும் என்றால் 2 சீட்டையும் ஒட்டிக் கொள்ள்லாம்

ஷீட்டிற்கு தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1 1/2 கப்

எண்ணெய் - 1/4 கப்

தண்ணீர் - 1/8 கப்

உப்பு - 1 தேக்கரண்டி

வத்தல் தூள் - 1/4 தேக்கரண்டி

சீட் ஒட்டுவதர்க்கு

மைதா, சிறிது தண்ணீர் சேர்க்கவும் பசைப்போல் கலக்கவும்

11samusa.jpg

சீட் நுணியில் ஸ்டஃப்பிங் வைத்து

12samusa.jpg

படத்தில் காட்டியப்படி முக்கோனமாக மடிக்கவும்

10samusa.jpg

படத்தில் உள்ளது போல் 2 ஆக மடிக்கவும்

13samusa.jpg

படத்தில் உள்ளது போல் 3 ஆக மடிக்கவும்

14samusa.jpg

ஷீட் நுணியில் மைதா தடவி ஒட்டவும்

15samusa.jpg

வானலியில் எண்ணெய் நன்கு சூடானதும்

ஒவ்வொண்றாக போட்டு பொரிக்கவும்

மறுபக்கம் திருப்பி போட்டு பொரிய விடவும்...

samosa.jpg

சுவையான வெஜ் சமோசா ரெடி ....

http://www.tamilkudumbam.com/-mainmenu-187/--mainmenu-214/--mainmenu-216/696.html?task=view

------------------------------------------------------------------------------------------------------------------------------

இது தமிழ்நாட்டு திரையரங்குகளில் யாராவது திரைபடம் பார்த்திருந்தால் இடைவெளையின் போது வெளியில் வந்தாலே போதும்... சமோசா வாசம் .... நீங்களும் முயற்சித்து பாருங்கள் ... ஈழத்து தியேட்டர்களில் படம் பார்க்கும் போது இடைவேளையின் போது என்ன கிடைக்கும்??? தோழர்கள் விளக்குக...

s_grands-31%5B1%5D.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி தேசி! சமோசா மடிக்கும் முறை விளக்கியதற்கு! :lol:

Posted

நன்றி புரட்சி.

தோழர் சென்னையில் இரவு வேளையில் வண்டிகளில் மிளகாய் பஜ்ஜியுடன் ஒரு வித கடலை கறி தருவார்கள். அதன் பெயர் என்ன? செய்முறை தெரியுமா?

... ஈழத்து தியேட்டர்களில் படம் பார்க்கும் போது இடைவேளையின் போது என்ன கிடைக்கும்??? தோழர்கள் விளக்குக...

பற்றீஸ் (சமோசா மாதிரி மரக்கறி / மாமிச ஸ்டஃப்பிங் வைத்து ஷீட்டால் சுத்தி பொரித்தெடுப்பது. கொழுக்கொட்டை வடிவிலிருக்கும்.

வறுத்த கடலை, வறுத்த வேர்கடலை, அவித்த சோளன் குலை.

மரவள்ளி கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பொரித்தெடுத்து அதன் மேல் கூனி தூள் (சிறிய இறால் கருவாடு, செத்தல் மிளகாய், பெருஞ்சீரகம், சின்னசீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து அரைத்த தூள்) எலுமிச்சை புளி விட்டுத் தருவார்கள். சுட சுட சாப்பிட சுவையாக இருக்கும்.

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
தேவையான பொருட்கள்:
 
மைதா மாவு - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
1468568240-9416.jpg
 
 
செய்முறை:
 
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
* வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மாசாலாவைத் தயார் செய்து வைத்து கொள்ளவும்.
 
* மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
 
* வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் மாவை கரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். அதனை தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும். அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மாசாலா சிறிது வைத்து ஓரங்களை மேலே குறிப்பிட்ட பேஸ்ட் தடவி ஒட்டி விடவும்.
 
* இதே போல் மீதமுள்ள மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும். ஒரு அடிகனமான காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.
 
* சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.

 

http://tamil.webdunia.com/article/indian-food-recipes/potato-samosa-116071500033_1.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Thanks
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.