Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

The power struggle of உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/

த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம். 40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம்.

இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்? த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌க்க‌வில்லை? எதை ந‌ம்புவ‌து? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாம‌ல் கிட‌ந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே த‌க்க‌ த‌ருண‌த்தை இழ‌ந்துவிட்டோம்.

<h3>ப‌த்ம‌நாத‌ன், த‌லைவ‌ரால் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ மே 2009 இற்கு ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே தெரிவிக்க‌ப்ப‌ட்டிருந்தார்</h3>

ப‌ல‌ருக்குத் தெரியுமோ தெரிய‌வில்லை, <a title="LTTE appoints Pathmanathan as head of international relations" href="http://tamilnet.com/art.html?catid=13&amp;artid=28224" target="_blank">த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் தான் திரு. ப‌த்ம‌நாத‌ன்</a> அவ‌ர்க‌ள். புலிக‌ளின் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ ச‌‌ன‌வ‌ரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்ட‌து. அவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌தை அர‌சிய‌ல் பொறுப்பாள‌ர் ப‌.ந‌டேச‌ன் அவ‌ர்க‌ளும் ஊர்சித‌ப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழீழ‌ப் ப‌டை மிக‌வும் குறுகிய‌ இட‌த்திற்குள் முற்றுகையிட‌ப்ப‌ட்ட‌தால், வெளிநாட்டுத் தொட‌ர்புக‌ளை இல‌குவாக‌/அடிக்க‌டி மேற்கொள்ள‌ க‌டின‌ம் என்ற‌ அடிப்ப‌டையிலேயே திரு. ப‌த்ம‌நாத‌ன் அவ‌ர்க‌ளை த‌லைவ‌ர் நிய‌மித்தார்.

சில‌ர் ஏற்க‌ன‌வே தேட‌ப்ப‌டுப‌வ‌ரான‌ ப‌த்ம‌நாத‌னை நிய‌மித்த‌து பிழை என்று சொல்கிறார்க‌ள். புலிக‌ள் இய‌க்க‌த்தின் பிர‌திநிதியாக‌, த‌லைவ‌ருட‌ன் தொட‌ர்பு வைத்துக்கொள்ள‌க்கூடிய‌ ஒரு ந‌ப‌ரைத் தான் நிய‌மிக்க‌லாமேயொழிய‌ அமெரிக்க‌விலோ (அ) பிரித்தானியாவிலோ ஒருவ‌ரை நிய‌மித்து, பின் அவ‌ர் த‌லைவ‌ருட‌னான‌ தொட‌ர்பை ஏற்ப‌டுத்தும்போது அவ‌ரை கைது செய்து (அ) ஒட்டுக்கேட்டால் அப்ப‌டி நிய‌மித்த‌த‌ன் ப‌ய‌னே அற்றுப்போய்விடும்.

நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து ப‌த்ம‌நாத‌ன் ப‌ல‌ ப‌த்திரிகை அறிக்கைக‌ளை விட்டிருந்தார். TamilNet இன் 2009 இற்கான‌ News ப‌குதியைப் பார்த்தால் தெரியும். சாதார‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் வாழும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ப‌த்ம‌நாத‌ன் ச‌ன‌வ‌ரி மாத‌மே த‌லைவ‌ரால் வெளிநாட்டுத் தொட‌ர்பாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார் என்ப‌து தெரியாம‌லிருக்க‌லாம். ஆனால் வெளிநாடுக‌ளில் இய‌ங்கும் "உல‌க‌த் த‌மிழ‌ர்" அமைப்புக‌ளுக்கு இது தெரிய‌வில்லை என்று சொன்னால் அது ப‌ச்ச‌ப் பொய்.

ஆனால், ப‌த்ம‌நாத‌னை வெளிநாட்டுத் தொட‌ர்பாள‌ராக‌ நிய‌மித்த‌து உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பிற்கு பெரும் பின்ன‌டைவாக‌ இருந்த‌து. தாங்க‌ளே "வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ரின்" பிர‌திநிதி என்று வெளிநாடுக‌ளில் மார்த‌ட்டிக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ளுக்கு, த‌ங்க‌ளைத் த‌விர்த்து வேறு ஒருவ‌ரை வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ த‌லைவ‌ர் நிய‌மித்த‌து பொறுக்க‌முடியாம‌ல் இருந்த‌து. இருந்தாலும், அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ஒன்றும் செய்ய‌முடியாம‌லும் இருந்த‌து.

இப்ப‌டியுமா என்று யோசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு சில‌ க‌ட‌ந்த‌ கால‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள். சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ர் த‌மிழீழ‌த்திலிருந்து க‌ன‌டா வ‌ந்திருந்தார். அவ‌ர் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் நிர்வாக‌த்தை/ நிதி க‌ண‌க்குக‌ளை அல‌சினார். இத‌னால் அவ‌ருக்கும், க‌ன‌டாவில் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌த்திற்கும் முறுக‌ல் நிலை ஏற்ப‌ட்ட‌து. இவ்வ‌ள‌வு நாளும் பாதுகாப்பாக‌ இருந்த‌ ந‌ப‌ர், RCMP இன‌ரால் பிடிக்க‌ப்ப‌ட்டு உட‌ன‌டியாக‌ நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்டார்.

ரொறொன்டோ மாந‌க‌ரை ப‌ல‌ பிரிவுக‌ளாக‌ பிரித்து உல‌க‌த் த‌மிழ‌ர் பொறுப்பாள‌ர்க‌ளுக்கு வ‌ள‌ங்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அதில் ஒரு மேற்கு ப‌குதி பொறுப்பாள‌ர் ப‌த‌வி ஏற்று தாய‌க‌ம் சென்று த‌லைவ‌ரை எல்லாம் ச‌ந்தித்து வ‌ந்த‌வ‌ர். அவ‌ர் பொறுப்புக்க‌ளை ஏற்று ந‌ட‌த்திவ‌ருகையில், சில‌ கால‌ங்க‌ளுக்குப் பின் டொறொன்டோ உல‌க‌த் த‌மிழ‌ர் த‌லைமைப்பீட‌த்துட‌ன் முறுக‌ல் ஏற்ப‌ட்ட‌து. அப்ப‌டி முர‌ண்பாடு ஏற்ப‌ட்டு மூன்றாம் நாள், RCMP இன‌ரால் விசாரிக்க‌ப்ப‌ட்டார்.

ரொறொன்டோ ந‌க‌ரில் மாண‌வ‌ர்க‌ளால் ஆர்ப்பாட்ட‌ம் அமெரிக்க‌ தூத‌ர‌க‌த்திற்கு முன்னாள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கையில், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு த‌னியாக‌ Queens Park இல் ஆர்ப்பாட்ட‌த்தை ந‌ட‌த்தினார்க‌ள். போதாத‌த‌ற்கு ஒருவ‌ரை "சாகும்வ‌ரை உண்ணாவிர‌த‌ம்" என்று கொண்டுவ‌ந்து இருத்தினார்க‌ள். பிற‌கு பார்த்தால் அவ‌ர் இல‌ங்கை அர‌சாங்க‌த்தின் ப‌க்க‌ம் சார்ந்த‌வ‌ராம்.

த‌ங்க‌ளின் அதிகார‌த்தை எத‌ற்காக‌வும் விட்டுக்கொடுக்க‌த் த‌யாராக‌ இல்லை. த‌ங்க‌ளின் த‌லைமைப்பீட‌த்திற்கு குந்த‌க‌ம் விளைவிக்கும் ந‌ப‌ர்க‌ளைத் தாங்க‌ளே காட்டிக்கொடுக்கும் எழிய‌ க‌லாச்சார‌ம் நில‌வுகிற‌து.

<h3>உல‌க‌த் த‌மிழ் அமைப்பு த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையை மீறிய‌தா?</h3>

இந்த‌ நேர‌த்தில், ப‌த்ம‌நாத‌ன் வெளிநாடுக‌ளில் உள்ள‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக‌ளுட‌ன் ஒரு கூட்ட‌ம் வைத்தார். அதில், த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ செய்தியை உல‌க‌த் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு அறிவியுங்க‌ள் என்று சொன்னார். ஆனால், இந்த‌ உல‌க‌த் த‌மிழ் அமைப்பு அதை செய்ய‌ ம‌றுத்துவிட்ட‌து. அப்ப‌டிச் சொன்னால் ஒருவ‌ரும் அத‌ற்குப் பின் காசு த‌ர‌மாட்டார்க‌ள் என்ற‌ கார‌ண‌த்தை முன்வைத்த‌து.

இப்ப‌டி இவ‌ர்க‌ள் பொதும‌க்க‌ளுக்கு அறிவிக்க‌ ம‌றுத்த‌ க‌ட்டாய‌த்தாலேயே ப‌த்ம‌நாத‌ன் தானாக‌ அறித்தார். அவ‌ர் நேர‌டியாக‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ செய்தியை அறிவித்தார். இதைப் பொறுக்க‌ முடியாத‌ வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌ம், ப‌த்ம‌நாத‌னின் இருப்பிட‌த்தைக் காட்டிக்கொடுத்துவிட்ட‌து. அவ‌ர் வெளியில் வ‌ந்து ப‌ல‌ருட‌னும் தொட‌ர்பு கொள்ள‌வேண்டிய‌ நிலை, இந்த‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பினாலேயே ஏற்ப‌ட்ட‌து.

த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார். அவ‌ரின் இட‌த்தை இவ‌ர் பிடிக்க‌ தானே அறிக்கைக‌ளை விடுகிறார். இவ‌ர் த‌ம்ப‌ட்ட‌ம் அடிக்கிறார். இவ‌ர் துரோகி என்று ஒரு த‌ர‌ப்பு. த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்று அவ‌ர் எப்ப‌டி அறிவிக்க‌லாம்? த‌லைவ‌ர் சாக‌மாட்டார். இவ‌ர் சூழ்ச்சி செய்ய‌ப் பார்க்கிறார். அவ‌ரை யாராலும் கொல்ல‌ முடியாது என்று இன்னுமொரு த‌ர‌ப்பு. ச‌ரி இர‌ண்டு வித‌மாகவும்‌ நிலையை ஆராய்ந்து பார்ப்போம்.

<h3>த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்</h3>

உண்மையில் த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்றால், அதை உல‌க‌த் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு அறிவிக்க‌வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உண்ட‌ல்ல‌வா? த‌மிழீழ‌த்திற்காய் எவ்வ‌ள‌வோ செய்த‌ எம் தேசிய‌த் த‌லைவ‌ருக்கு ஒரு அஞ்ச‌லி கூட‌ வைக்காவிட்டால் நாமெல்லாம் இருந்து என்ன‌ ப‌ய‌ன்? ப‌ல‌ போராளிக‌ளுக்கு நினைவஞ்ச‌லி செய்கிறோம், தியாகிக‌ளுக்கு நினைவ‌ஞ்ச‌லி செய்கிறோம் ஆனால் எம் த‌லைவ‌ர் இத‌ற்குக் கூட‌ பாக்கிய‌ம‌ற்ற‌வ‌ராக‌ அல்ல‌வா போய்விட்டார்? அவ‌ர் த‌ன் வாழ்க்கையையே த‌மிழீழ‌த்திற்காய் தியாக‌ம் செய்து இறுதியில் ஒரு அஞ்ச‌லி கூட‌ கிடைக்காம‌ல் போய்விட்டார்.

அதை விட‌, த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ உண்மையை அறிவித்திருந்தால், உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் பொங்கி எழுந்திருப்பார்க‌ள். போராட்ட‌ங்க‌ள் தீப்பிள‌ம்பாய் வெடித்திருக்கும். த‌மிழ‌க‌த்தில் எம் ச‌கோத‌ர‌ர்க‌ள் அட‌ங்கிப் போன‌த‌ற்கு இந்த‌க் குழ‌ப்ப‌மும் ஒரு கார‌ண‌ம். வைகோ சொல்கிறார் ப‌த்ம‌நாத‌ன் துரோகி என்று. நெடுமாற‌ன் சொல்கிறார், த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை, ச‌த்திய‌மாக‌ உயிரோடு தான் இருக்கிறார் என்று. வைகோ சொல்கிறார் நான் தொலைபேசியில் க‌தைத்தேன் என்று. என‌க்கு <a title="Delhi won't listen to TN jokers: Gen Fonseka" href="http://expressbuzz.com/world/delhi-wont-listen-to-tn-jokers-gen-fonseka/24948.html" target="_blank">ச‌ர‌த் பொன்சேகா த‌மிழ்நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ள் "கோமாளிக‌ள்" என்று சொன்ன‌து</a> தான் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. வெளிநாட்டு உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள் த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்று உத்தியோக‌பூர்வ‌மாக‌ அறிவிக்க‌வில்லை. ப‌த்ம‌நாத‌ன் த‌னியொருவ‌ர் தான் அப்ப‌டி சொல்கிறார். ஆக‌வே த‌லைவ‌ர் உண்மையில் இற‌க்க‌வில்லை என்றும் யோசித்தார்க‌ள். இப்ப‌டிப்ப‌ட்ட‌ கூற்றுக்க‌ளால் தான் த‌மிழ்நாடு குழ‌ம்பிப் போய்விட்ட‌து. த‌மிழ்நாடு, ம‌ட்டும‌ல்ல‌ உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் வெறும் புஸ்வான‌மாய்ப் போய்விட்டோம். இற‌ந்த‌தாக‌ எல்லோரும் அறிவித்திருந்தால் உல‌கில் ப‌ல‌ பாக‌ங்க‌ளில் வ‌ற்புறுத்தி/போர‌ட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்தி யாவ‌து ஏதாவ‌து ந‌ட‌ந்திருக்க‌லாம். இப்ப‌டி ஏதாவ‌து போராட்ட‌ம் வெடித்தாவ‌து ஒரு பாதையில் முன்ன‌க‌ர்ந்திருப்போம். நாம் அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை இப்போது இழ‌ந்துவிட்டோம். இனிமேல் என்னால் த‌லைவ‌ரை எண்ணி அழ‌க்கூட‌ முடியாது. த‌லைவ‌ர் உண்மையில் இற‌ந்திருந்தால், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு எவ்வ‌ள‌வு சுய‌ந‌ல‌மிக்க‌து என்று எண்ணிக் க‌வ‌லைப்ப‌டுவார்.

<h3>த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை</h3>

த‌லைவ‌ர் இற‌க்க‌வில்லை என்றால், ப‌த்ம‌நாத‌ன் அறிவித்த‌து த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையைத் தானே? த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்துகொண்டு தான் இற‌ந்த‌தாக‌ அறிவி, அப்போது தான் வெளிநாட்டு அர‌சாங்க‌ங்க‌ள் புலிக‌ள் ஒழிந்துவிட்டார்க‌ள், இனிமேலாவ‌து இல‌ங்கை அர‌சை நிறுத்தி த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏதாவ‌து உரிமை கொடுக்க‌ட்டும் என்று யோசித்துச் சொல்லியிருப்பார். இதில் வேடிக்கை என்ன‌வென்றால், சில‌ர் த‌லைவ‌ர் சொன்னால் தான் ந‌ம்புவோம் என்று சொல்கிறார்க‌ள். இது எவ்வ‌ள‌வு முட்டாள்த‌ன‌மாக‌ இருக்கிற‌து என்று நான் விள‌க்க‌வேண்டிய‌தில்லை.

த‌லைவ‌ர் இட்ட‌ க‌ட்ட‌ளையை ப‌த்ம‌நாத‌ன் செய‌ற்ப‌டுத்த‌, உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள், ம‌றுத்துவிட்ட‌ன‌. த‌ங்க‌ளின் அதிகார‌த்தை இழ‌க்கிறோம் என்ற‌ ப‌ய‌த்தில் த‌லைவ‌ரின் க‌ட்ட‌ளையையே மீறிவிட்டார்க‌ள். போதாத‌த‌ற்கு ப‌த்ம‌நாத‌னைக் காட்டிக்கொடுத்து தேச‌த் துரோக‌த்தையும் செய்துவிட்டார்க‌ள். த‌லைவ‌ர் உயிருட‌ன் இப்போது இருக்கிறார் என்றால், தான் போட்ட‌ திட்ட‌த்தை உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு நொறுக்கிவிட்ட‌து என்ற‌ வேத‌னையில் இருப்பார்.

<h3>ச‌ன‌நாய‌க‌ வாக்கெடுப்பு</h3>

இப்போது நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்துட‌னும் ஒரு முறுக‌ல் நிலையிலேயே உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக்க‌ள் இருக்கின்ற‌து‌. அதிகார‌ம் முளுவ‌தும் உருத்திர‌குமார் ம‌ற்றும் சில‌ர் [வெள்ளைக்கார‌ர்க‌ள் உட்ப‌ட‌] கைக‌ளில் தான் இருக்கிற‌து என்ற‌ ஆத‌ங்க‌த்தில் இருக்கிறார்க‌ள். த‌ங்க‌ள‌து பிர‌திநிதிக‌ளை அதிக‌ப்பெரும்பான்மையாக‌ நுளைக்க‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தில், க‌ட‌ந்த‌ நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சின் ச‌ன‌நாய‌க‌த் தேர்த‌லில் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பைத் த‌விர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு வாக்குப் போடாதீர்க‌ள் என்று வாக்குச் சாவ‌டி வாச‌லில் வைத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்க‌ள். இது ஒரு மிக‌வும் அநாக‌ரீக‌மான‌ செய‌ல். இவ‌ருக்கு வாக்க‌ளியுங்க‌ள் என்று சொல்ல‌லாம். ஆனால், இவ‌ருக்கு வாக்க‌ளியாதீர்க‌ள் என்று வாக்க‌ளிக்க‌ வ‌ரும் ஒவ்வொருவ‌ருக்கும் சொல்வ‌து அவ‌ர்க‌ள‌து ஈன‌ப்புத்தியையே காட்டுகிற‌து. அத‌னாலேயோ என்ன‌மோ, க‌ன‌டா உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு தாங்க‌ளும் ஒரு வாக்கெடுப்பு ந‌ட‌த்தி க‌ன‌டாவிற்குள் ம‌ட்டும் ஒரு த‌னி "ச‌ன‌நாய‌க‌" அமைப்பை உருவாக்கும் முய‌ற்சியில் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் வாக்கெடுப்பு சில‌ தின‌ங்க‌ளில் ந‌டைபெற‌ப்போகிற‌து.

நான் உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பின் த‌லைமைப்பீட‌த்தில் தான் நிர்வாக‌க் குறைகேடுக‌ள் இருக்கிற‌து என்று சொல்கிறேனே த‌விர‌ ஒட்டுமொத்த‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பு போராளிக‌ளையும் அல்ல‌. அனேக‌மான‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மான‌ த‌மிழீழ‌க் க‌ன‌வோடு நாட்டுக்காக‌வும், த‌லைவ‌ருக்காக‌வும் உழைப்ப‌வ‌ர்க‌ள். த‌லைமைப்பீட‌த்தின் குறைக‌ள் அனேக‌மான‌ உல‌க‌த் த‌மிழ் அமைப்பு போராளிக‌ளுக்குத் தெரியும். அவ‌ர்க‌ளும் அந்த‌ நிர்ப்ப‌ந்த‌த்தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள் தான். இருந்தாலும் நாட்டுக்காய், த‌லைவ‌ர் ஒருவ‌ருக்காய் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்ட‌வ‌ர்க‌ள். த‌ங்க‌ள் பொன்னான‌ நேர‌த்தையும், பாதுகாப்பையும் பொருட்ப‌டுத்தாத‌வ‌ர்க‌ள். ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் குறை கூறுவார்க‌ள், உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பில் இருந்தால் ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கும். நாங்க‌ள் கொடுக்கும் காசுக‌ள் எல்லாம் அவ‌ர்க‌ள் ச‌ம்ப‌ள‌ம் என்று எடுத்துக்கொள்கிறார்க‌ள் என்று. நான் கேட்கிறேன் எத்த‌னை பேர் வீடு வீடாக‌ச் சென்று பேப்ப‌ர் போட‌வோ, ம‌க்க‌ளின் சின‌ங்க‌ல்க‌ளுக்கும், பேச்சுக்க‌ளுக்கும் ம‌த்தியிலும் காசு சேர்க்கத்‌ த‌யாராக‌ உள்ளீர்க‌ள்? எத்த‌னை வீடுக‌ளில் முக‌த்தில் அடித்தாற்போல் பேசுவார்க‌ள். நாயைவிட‌க் கேவ‌லாம‌க‌க் கூட‌ துர‌த்துவார்க‌ள். இவ‌ற்றை எல்லாம் ச‌மாளித்துவிட‌லாம் கூட‌. ஆனால், நீங்க‌ள் புலிக‌ளுக்கு காசு சேர்க்கிறீர்க‌ள் என்று RCMP (அ) காவ‌ல்துறை கைதுசெய்யும் மிக‌ப் பெரிய‌ பாதுகாப்பு ஆப‌த்து இருக்கிற‌து. த‌ங்க‌ள் மனைவி, பிள்ளைக‌ளையும் தாண்டி இப்ப‌டி ஒரு ஆப‌த்தை ஏற்க‌ உங்க‌ளில் எத்த‌னை பேர் த‌யாராக‌ உள்ளீர்க‌ள்? சும்மா ச‌ம்ப‌ள‌ம் எடுக்கிறார்க‌ள் என்று குறை கூறுவ‌தைத் த‌விர‌ உங்க‌ளால் ஆக்க‌பூர்வ‌மாக‌ எதைச் செய்ய‌ இய‌லும்?

ப‌த்ம‌நாத‌ன் இல‌ங்கை அர‌சில் பிடிப‌ட்ட‌து உண்மையில் யாருக்கு இழ‌ப்பு? அவ‌ரின் அதிகார‌த்தை புலிக‌ள் அமைப்பிலிருந்து நீக்கிய‌து உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்பிற்கு ந‌ன்மையாக‌ இருக்க‌லாம். ஆனால், ப‌த்ம‌நாத‌னின் ப‌ல‌ வ‌ருட‌ உழைப்பு இப்போது போய்விட்ட‌து. அவ‌ர் பிடிப‌ட்ட‌தால், அவ‌ருட‌ன் தொட‌ர்பு வைத்திருக்கும் ப‌ல‌ புலி பெரும்புள்ளிக‌ள் எல்லாம் மாட்டுகிறார்க‌ள். இத‌னால் மொத்த‌ இழ‌ப்பு ந‌ம‌க்குத் தான். ந‌ம் த‌லைவ‌ருக்கும் தான்.

http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் அமைப்பு பற்றி நிறைய எழுதியிருக்கின்றீர்கள். அதன் தன்னிச்சையான சில விடயங்கள் எரிச்சலை ஊட்டினாலும் இதன் பின்னால் உள்ள தொடர்ச்சியான சூழ்ச்சி பற்றிச் சொல்ல வேண்டியுமுள்ளது. தொடர்ச்சியாக தமிழர் அமைப்புக்கள் மீது பழி போடும் படலம், அல்லது அதற்கு மேலே குற்றம் சாட்டப்படுதல் என்பது தொடர்ச்சியான தொடர்கதையாகவே தொடர்கின்றது. அது புலத்தில் உள்ள தமிழர் அமைப்புக்களைச் சிதைக்கின்ற தொடர்ச்சியான சிங்கள அரசின் வேலைத் திட்டமாகவும் கருத இடமுண்டு.

மே 19ம் திகதிக்குப் பின்னர், சிங்கள அரசு முக்கியமாக மக்களுக்கு அறிமுகமான போராளிகளை விமான நிலையத்திலும், மக்களின் நடமாட்டமான இடத்திலும் நிறுத்தி வைத்துஅவர்களைச் சிங்களக் காட்டிக் கொடுப்பாளர்களாக இனம் காட்டியது. ஆரம்ப காலத்தில் நானும் சிங்கள அரசுக்கு விலை போய் விட்டார்களே என்று வெறுப்பாகவே உணர்ந்தேன். ஆனால் அது தமிழ் மக்களுக்கும், புலிகளுக்கும் இடையிலான இடவெளி ஏற்படுத்துகின்ற செயற்திட்டமாகவே சிங்கள அரசு நடைமுறையில் செய்தது. அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அப்போராளிகளை காணக்கிடைக்கவில்ல. சிலவேளை கொல்லப்பட்டிருக்கலாம்

பிற்பாடு தொடர்ச்சியான ஒவ்வொரு சம்பவமும் ஏதோ ஒரு வகையில் புலம்பெயர் அமைப்புக்களைச் சிதைக்கின்ற வடிவமாகவே வந்தது. நாடு கடந்த அரசு மீது அவதூறு போடப்பட்டது. அதைத் தெரிந்தோ தெரியாமலோ, தமிழீழ ஆதரவாளர்களும் நம்பிச் சிங்கள அரசின் செயற்திட்டத்துக்கு அமைவாக ஒத்து ஊதினாதர்கள். பிற்பாடு பதிலுக்கு அவர்களும் திட்டித் தீர்த்தார்கள். எம் காலங்கள் அதிலேயே செலவளிந்து போனது. பிற்பாடு நெடியவன் என்ற ஒருவர் மீது... அவர் மீது முழுமையான புலிச்சாயம் பூசப்பட்டு, அதன் பின்னர் கேவலமாக எழுதப்பட்டது. அது ஒரு வகையில் புலிகள் மீதான அவதூற்றைப் பரப்ப Nவுண்டும் என்ற நோக்கத்திற்காகவே இருந்தது.

இந்தக் கட்டுரையிலும் அதே பாணி தான். கேபியைக் காட்டிக் கொடுத்தது. நோர்வே, மற்றும் ஐரோப்பா வாழ் நெடியவன் குழுவினர் என்று நெடியவனைத் தூற்றும்போது, எழுதப்பட்டது. அப்போது அவர்களின் செயற்திட்டத்தில்திட்டுவதற்காக உலகத்தமிழர் படவில்லை. ஆனால் இப்போது உலகத்தமிழர் மீது அவர்களின் பார்வை திரும்பும்போது கேபியைக் காட்டிக் கொடுத்தது உலகத்தமிழர் என்று எழுதப்படுகின்றது. நெடியவன் தேவைப்படவில்லை.

இந்தத் தொடர்ச்சியா செயற்திட்டங்கள் ஒருவகையில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை மலினப்படுத்தும் செயற்திட்டங்களே.. அதற்காக உலகத்தமிழர் ஒன்றும் 100 வீதம் நியாயமாகச் செயற்படுவதாகச் சொல்லவரவில்லை. அவர்கள் எடுக்கின்ற சில அதிகாரத் தோரணையான செயற்திட்டங்கள், புரிந்துணர்வின்மை, தமிழீழம் என்ற இலக்குக்காகத் தான் நாம் அனைவரும் கஸ்டப்படுகின்றோம் என்ற சிநந்தனையின்டை என்று நிறைய விடயங்கள் உள. அவை எம்மைப் பலவீனப்படுத்துவதோடு சிங்கள அரசின் செயற்திட்டத்துக்கு இலகுவாக்கி விடலாம் என்பதையும் நினைவில் கொள்வது நன்று.

உண்மையில் புலிகள் மீது அன்பினைக் காட்டுவதாகவும், தலைவர் மீது பற்றாக இருப்பதாகவும் வருகின்ற கட்டுரைகளை ஒன்றுக்கு 1000 தரம் படித்து ஆராய்வதும், சந்தேகத்தோடும் பார்ப்பதுமே நன்று என நினைக்கின்றேன். அதை விட மற்றவர்களைக் குறை கூறி வருகின்ற கட்டுரைகளைத் தவிர்ப்பது நன்றே..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ நேர‌த்தில், ப‌த்ம‌நாத‌ன் வெளிநாடுக‌ளில் உள்ள‌ உல‌க‌த் த‌மிழ‌ர் அமைப்புக‌ளுட‌ன் ஒரு கூட்ட‌ம் வைத்தார். அதில், த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார் என்ற‌ செய்தியை உல‌க‌த் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு அறிவியுங்க‌ள் என்று சொன்னார். ஆனால், இந்த‌ உல‌க‌த் த‌மிழ் அமைப்பு அதை செய்ய‌ ம‌றுத்துவிட்ட‌து. அப்ப‌டிச் சொன்னால் ஒருவ‌ரும் அத‌ற்குப் பின் காசு த‌ர‌மாட்டார்க‌ள் என்ற‌ கார‌ண‌த்தை முன்வைத்த‌து.

உலக தமிழர் தான் முதன் முதலில் தலைவர் இறந்ததாக சொன்னார்கள். அதற்கு மக்களிடம் தொலைபேசியில் நன்றாக வாங்கி கட்டியும் கொண்டார்கள்.

இதில் உண்மைகள் தாரளமாக உண்டு.ஆனால் இன்று வெளியிட்ட நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது? காரணம் இன்று டொரன்டோவில் நடக்கவிருந்த கவனயீர்பு கேள்விகுறியுடன் நிற்கிறது/இதேபோல வாஸிங்டனில் நடக்க விருக்கும் கவனயீர்புகூட?

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் பல விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளீர்கள் அதாவது பலரின் சிந்தனையை தூண்டியுள்ளீர்கள்,

பாராட்டுக்களும் நன்றியும், ஒரு பச்சை குத்தியுள்ளேன்

Edited by வல்வை லிங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக தமிழர் தான் முதன் முதலில் தலைவர் இறந்ததாக சொன்னார்கள். அதற்கு மக்களிடம் தொலைபேசியில் நன்றாக வாங்கி கட்டியும் கொண்டார்கள்.

உலகத் தமிழர் அமைப்பு என்றுமே உத்தியோகபூர்வமாக தலைவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கவில்லை. பத்திரிகையிலோ, ஆர்ப்பாட்ட/ ஊர்வல மேடைகளிலோ தெரிவிக்கவில்லை. உலகத் தமிழர் அமைப்பு உறுப்பினர்களுக்கு விடயம் முதலில் தெரியவந்து அவர்கள் அதை உறவினர்களுக்கு சொல்லப்போய், அதனால் சிலர் கொதித்தெழுந்து பேசினார்கள்.

என் ஆதங்கம், தலைவர் உண்மையில் இறந்திருந்தால், அதை உத்தியோகபூர்வமாக அறிவித்து அதனால் ஒரு புரட்சி [தமிழ் நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ] ஒரு பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிட்டோம். இந்த ஒரு வரலாற்று "opportunity" இனி வராது. உண்மையில் தலைவர் இறக்காமல், அவர் இப்படி ஒரு செய்தியை வெளியிடச்சொல்லி இதனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எண்ணியிருந்திருக்கலாம். அந்த திட்டம் இப்போது மண்கவ்விப்போய்விட்டது.

என் ஆதங்கம், தலைவர் உண்மையில் இறந்திருந்தால், அதை உத்தியோகபூர்வமாக அறிவித்து அதனால் ஒரு புரட்சி [தமிழ் நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ] ஒரு பெருந் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிட்டோம். இந்த ஒரு வரலாற்று "opportunity" இனி வராது. உண்மையில் தலைவர் இறக்காமல், அவர் இப்படி ஒரு செய்தியை வெளியிடச்சொல்லி இதனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எண்ணியிருந்திருக்கலாம். அந்த திட்டம் இப்போது மண்கவ்விப்போய்விட்டது.

இப்படி எல்லாம் ஏன் எழுதுகின்றீர்கள் என்று புரியவில்லை. தலைவர் இறந்ததை அறிவித்து அதனால் என்ன புரட்சி வந்திருக்கமுடியும் என்று சொல்கின்றீர்கள்? அதன் தலைவரின் இந்த உடலை விதம் விதமா காட்டினார்களே !! மக்கள் அழிக்கப்படுவதை அடித்தளமாகக் கொண்டுதான் இறுதிநேரத்தில் புலம்பெயர் தேசத்திலும் தமிழகத்திலும் கவனயீர்புகள் நடந்தது. புலிக்கொடி தூக்கிப்பிடித்தலோ அல்லது உரிமைகளை தா என்றோ கவனயீர்பு நடக்கவில்லை மாறாக படுகொலைகளை நிறுத்து என்றே நடந்தது. உரிமை குறித்த பேச்சோ அல்லது போராட்டம் புலிகள் குறித்தோ கவனயீர்ப்பில் தவிர்க்கப்பட்டது.மறைத்து வைத்து அங்காங்கே சிலர் புலிக்கொடியை தூக்கிப்பிடிக்க முற்பட்டார்கள். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் வன்னிமக்களின் உயிரில் தான் இறுதியில் போராட்டம் பணயம் வைக்கப்பட்டது தவிர வன்னிமக்களை காப்பதற்காக போராட்டம் இறுதியில் நடைபெறவில்லை. வன்னிமக்களின் படுகொலைகளை நிறுத்தும்போதே போராட்டமும் புலிகளும் தலமையும் காப்பாற்றப்படும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதைக் கடந்து எந்த எழுச்சியும் புரட்சியும் எங்கும் நடைபெறமுடியாது என்பதற்கமையவே படுகொலைகளை நிறுத்து என்று கவனயீர்ப்பு நடந்தது.

உயிரைக்கொடுத்து மக்களுக்காக மக்களின் சுதந்திரத்துக்காக நடைபெற்றபோராட்டம் இறுதியில் மக்களின் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றப்படவேண்டிய நிர்ப்பந்தத்துள் தள்ளப்பட்டபோதே உரிமை குறித்த புரட்சியும் எழுச்சியும் முற்றுப்பெற்றுவிட்டது. அதாவது புலிகள் போராட்டம் தலமை என்பது முடிவுக்கு வந்துவிட்டது. முள்ளிவாய்காலும் தலைவரின் இறப்பும் அதன் பின்னரான ஒரு சம்பவம். முப்பது வருட போராட்டம் முடிவுக்கு வந்தபோது நடக்காத எழுச்சி அதன்பின்னரான சம்பவத்தில் எழும் என்று எழுதுவதை எப்படி புரிந்துகொள்வதென்று புரியவில்லை.

உலகத்தமிழர் அமைப்போ அல்லது கனடிய தமிழ்க் காங்கிரசோ நாடுகாடந்த அரசு மற்றும் இன்ன பிற அமைப்புக்களை எமது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான சமூகக் கட்டமைப்பு எம்மிடம் இல்லை. அதற்கான அடித்தளம் எமது சமூகத்தில் இல்லை. நாலு பேரோ அல்லது நாப்பது பேரோ சேர்ந்து ஒரு அமைப்பை நிறுவி அதுவே ஏக தமிழ்மக்களையும் வழிநடத்துவதாக ஒரு மாயையில் இருக்கும் ஆனால உண்மை அப்படி இருக்காது. இருந்ததும் இல்லை. இருப்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை.

சிங்கள பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட KP யின் இருப்பிடங்களை யாரும் காட்டிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. கைது என்பது உலகை ஏமாற்றும் நாடகம்.

KP யை யாரும் தலைவராக அறிவிக்கவில்லை. அதற்கு எந்த பொறுப்பான ஆதாரங்களும் இல்லை.

உளறல்கள் முற்றுப்புள்ளிக்கு வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/

த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம். 40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம்.

இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்? த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌க்க‌வில்லை? எதை ந‌ம்புவ‌து? எது பொய்? என்று யோசித்து யோசித்தே எதையும் செய்யாம‌ல் கிட‌ந்துவிட்டோம். Shakespeare இன் Hamlet போல் யோசித்து யோசித்தே த‌க்க‌ த‌ருண‌த்தை இழ‌ந்துவிட்டோம்.

<h3>ப‌த்ம‌நாத‌ன், த‌லைவ‌ரால் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ மே 2009 இற்கு ப‌ல‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பே தெரிவிக்க‌ப்ப‌ட்டிருந்தார்</h3>

ப‌ல‌ருக்குத் தெரியுமோ தெரிய‌வில்லை, <a title="LTTE appoints Pathmanathan as head of international relations" href="http://tamilnet.com/art.html?catid=13&amp;artid=28224" target="_blank">[size="7"]த‌லைவ‌ரால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் தான் திரு. ப‌த்ம‌நாத‌ன்</a> அவ‌ர்க‌ள். புலிக‌ளின் வெளிநாட்டு தொட‌ர்பாள‌ராக‌ ச‌‌ன‌வ‌ரி 3, 2009 அன்றே செய்தி வெளியாகிவிட்ட‌து. அவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌தை அர‌சிய‌ல் பொறுப்பாள‌ர் ப‌.ந‌டேச‌ன் அவ‌ர்க‌ளும் ஊர்சித‌ப்ப‌டுத்தியிருந்தார். த‌மிழீழ‌ப் ப‌டை மிக‌வும் குறுகிய‌ இட‌த்திற்குள் முற்றுகையிட‌ப்ப‌ட்ட‌தால், வெளிநாட்டுத் தொட‌ர்புக‌ளை இல‌குவாக‌/அடிக்க‌டி மேற்கொள்ள‌ க‌டின‌ம் என்ற‌ அடிப்ப‌டையிலேயே திரு. ப‌த்ம‌நாத‌ன் அவ‌ர்க‌ளை த‌லைவ‌ர் நிய‌மித்தார்.

http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/

இந்த இடத்தில் எனக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது, கேபிக்கு ஆதரவாக பேசுவோர் அடிக்கடி இதை கூறுகிறார்கள், கேபி உண்மையிலேயே தலைவரால் நியமிக்க பட்டாரா? அல்லது தலைவரது தகவல் வழிமறிக்கபட்டு கேபி தலைவராக உருவாக்க பட்டாரா?, அல்லது தலைவர் நியமிக்காமலேயே இந்திய உளவுபடை "றோ" கேபியை தலைவராக நியமித்தா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் எனக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது, கேபிக்கு ஆதரவாக பேசுவோர் அடிக்கடி இதை கூறுகிறார்கள், கேபி உண்மையிலேயே தலைவரால் நியமிக்க பட்டாரா? அல்லது தலைவரது தகவல் வழிமறிக்கபட்டு கேபி தலைவராக உருவாக்க பட்டாரா?, அல்லது தலைவர் நியமிக்காமலேயே இந்திய உளவுபடை "றோ" கேபியை தலைவராக நியமித்தா?

உண்மை தான். இது ஒரு வகை ஏமாற்று விளையாட்டு. ஒருவரை உருவகப்படுத்தி அவர் பின்னால் போக வைத்து விட்டு, அவரை தன்வசம் ஆக்குகின்ற நயவஞ்சகம். அதைத் தான் இந்திய அரசும் முன்பு செய்தது. தான் கால் பதிக்காமல் ஈழத்து அமைப்புக்களை வளைத்துப் போட்டு அதன் பின்னால் வருகின்றவர்களை தன் வசம் இழுக்கின்ற ஒரு வகை சதி. வரதாஜப்பெருமாள் அதன் ஒரு முக்கிய வடிவம்.

கேபியின் உருவகமும் அவ்வகை தான். எங்களோடு இருந்தவர்கள் ஒரு சிலரை ஆவது இடம் பெயர்க்க வைக்க அது சிங்கள அரசுக்கு ஒரு வகையில் உதவியிருக்கின்றது. கேபி இருந்த இடத்தில் ஒரு சிங்களவன் இருந்தபடி அறிக்கை விட்டிருந்தால் ஒருவரும் நாயே என்று பார்த்திருக்கமாட்டார்கள் என்பது நிதர்சனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான். இது ஒரு வகை ஏமாற்று விளையாட்டு. ஒருவரை உருவகப்படுத்தி அவர் பின்னால் போக வைத்து விட்டு, அவரை தன்வசம் ஆக்குகின்ற நயவஞ்சகம். அதைத் தான் இந்திய அரசும் முன்பு செய்தது. தான் கால் பதிக்காமல் ஈழத்து அமைப்புக்களை வளைத்துப் போட்டு அதன் பின்னால் வருகின்றவர்களை தன் வசம் இழுக்கின்ற ஒரு வகை சதி. வரதாஜப்பெருமாள் அதன் ஒரு முக்கிய வடிவம்.

கேபியின் உருவகமும் அவ்வகை தான். எங்களோடு இருந்தவர்கள் ஒரு சிலரை ஆவது இடம் பெயர்க்க வைக்க அது சிங்கள அரசுக்கு ஒரு வகையில் உதவியிருக்கின்றது. கேபி இருந்த இடத்தில் ஒரு சிங்களவன் இருந்தபடி அறிக்கை விட்டிருந்தால் ஒருவரும் நாயே என்று பார்த்திருக்கமாட்டார்கள் என்பது நிதர்சனம்.

அதாவது இவர்களது நோக்கம் எல்லாம் தலைவரது தொடர்பாடல் வெளிஉலகத்துடன் நிறுத்த படுவதற்கு முன்னரேயே, கேபி தலைவரால் நியமிக்க பட்டவர் என்பதை நிறுவதில் மும்முரமாக நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ள நம்மவர்கள் செய்கின்ற முக்கிய தவறு யாது எனில் கேபியை முன்னணியை வைத்துப் பேசுவதும், அவர் ஒரு சிங்கள அரச கைதி என்பதையோ, அவர்களின் செயற்திட்டத்தில் தான் இயங்க முடியும் என்பதையோ மறந்து விட்டு செயற்படுவது. சொல்லப் போனால் இந்த ஒரு வருடத்தில் எந்த வித மாற்றங்களையும் சிங்கள அரசு மீது அவரால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் புலத்தில் உள்ள எம் சில கட்டமைப்புக்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்த அவரால் முடிந்திருக்கின்றது. அவரின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் அமைப்போ அல்லது கனடிய தமிழ்க் காங்கிரசோ நாடுகாடந்த அரசு மற்றும் இன்ன பிற அமைப்புக்களை எமது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கான சமூகக் கட்டமைப்பு எம்மிடம் இல்லை. அதற்கான அடித்தளம் எமது சமூகத்தில் இல்லை. நாலு பேரோ அல்லது நாப்பது பேரோ சேர்ந்து ஒரு அமைப்பை நிறுவி அதுவே ஏக தமிழ்மக்களையும் வழிநடத்துவதாக ஒரு மாயையில் இருக்கும் ஆனால உண்மை அப்படி இருக்காது. இருந்ததும் இல்லை. இருப்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை.

சுகனின் கருத்துக்கள் சத்தியமானவை. எமது இருப்பின் அடித்தளமே ஆட்டம் கண்டதை மறைத்து செய்யப்படும் செயல்கள் எல்லாம் புஸ்வாணமாகத்தான் இருக்கும்.

இந்த இடத்தில் எனக்கு நீண்ட காலமாக ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது, கேபிக்கு ஆதரவாக பேசுவோர் அடிக்கடி இதை கூறுகிறார்கள், கேபி உண்மையிலேயே தலைவரால் நியமிக்க பட்டாரா? அல்லது தலைவரது தகவல் வழிமறிக்கபட்டு கேபி தலைவராக உருவாக்க பட்டாரா?, அல்லது தலைவர் நியமிக்காமலேயே இந்திய உளவுபடை "றோ" கேபியை தலைவராக நியமித்தா?

2009 ஜனவரியில் தலமையால் நியமிக்கப்பட்டவர் அதன்பின் பலமாதங்கள் செயற்பட்டவர். தமிழ்நெற்றும் புலிகளின் குரலும் இந்தியறோவினுடையதா? இல்லை தலமை தாம் கே பி யை நியமிக்கவில்லை என்று மறுப்பறிக்கையை ஜனவரிக்கும் மே முடிவுக்குமிடையில் விட்டதா? ஒருவேளை பிரபாகரன் றோவின் ஆளாய் இருப்பார் என்றும் இனி சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை

LTTE appoints Pathmanathan as head of international relations

[TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT]

The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday.

Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the various international actors by the LTTE's Department of International Relations.

Pathmanathan will be working abroad with required mandate from the LTTE leadership, according to the letter.

LTTE's Poltiical Head B. Nadesan, when contacted by TamilNet, confirmed that Mr. Pathmanathan has already begun corresponding with international actors.

http://www.tamilnet.com/art.html?artid=28224&catid=13

Pathmanathan calls for urgent international intervention

[TamilNet, Monday, 11 May 2009, 09:19 GMT]

Refuting the Sri Lankan propaganda that artillery and shelling against the Tamil civilians was carried out by the Tigers, Selvarasa Pathmanathan, the LTTE's head of international relations on Monday urged the governments of the world to prevail upon the Sri Lankan Government to prevent it from causing a collective tragedy.

"The recent developments in Vanni are very disturbing because they express so vividly a deliberate intention on the part of Sri Lanka and its partners in this war to subject an entire human community to life-endangering conditions of utmost cruelty," Mr. Pathmanathan said in a statement issued Monday.

Full text of the statement from Mr. Pathmanathan follows:

LTTE Denies SLA Allegations and Calls For Urgent Intervention to Prevent Further Massacres

11 May 2009

The artillery fire and fierce mortar shelling by the Sri Lankan Army on the nights of 9th and 10th of May 2009 were one of the bloodiest episodes of the war so far, killing more than 2,000 of innocent Tamils including children, women and the elderly. This is a deliberate massacre of Tamil civilians by the Sri Lankan armed forces.

LTTE categorically rejects any allegations by the Sri Lankan Government and its military that the artillery and shelling was carried out by us.

It is an indisputable fact that the LTTE has waged this three decade long struggle for the liberation of the Tamil people from all oppressions by the racist Singhalese regime. We will never ever turn on the very people for whose liberation we have laid close to 20,000 of our own fighters.

It is not an overstatement to associate the treatment of Tamils with the criminalized Nazi record of collective atrocity. The recent developments in Vanni are very disturbing because they express so vividly a deliberate intention on the part of Sri Lanka and its partners in this war to subject an entire human community to life-endangering conditions of utmost cruelty.

We are convinced that this pattern of conduct is a holocaust-in-the making and appeal to the governments of the world and to international public opinion to prevail upon the Sri Lankan Government so as to prevent these current genocidal tendencies from culminating in a collective tragedy.

The most brutal episode of this "collective tragedy" is what we have seen in the last two days.

We call upon the International Community and the UN Security Council “as a matter of urgency” to take all measures capable of genuinely preventing any further massacres of the innocent Tamil civilian population.

LTTE urges IC to act in the international way

[TamilNet, Sunday, 10 May 2009, 07:55 GMT]

"More than 2,000 innocent civilians have been killed in the last 24 hours. The wholesale bombardment by Sri Lankan planes and shelling on a densely populated, non combatant civilian safe zone is state terrorism and a war crime," said S. Pathmanathan, the LTTE head of international relations on Sunday. "The Tamil people are dismayed that the United Nations and the International Community have failed in their obligations to protect the endangered civilians. [...] We only ask for an impartial relief effort similar to those extended to other international conflict zones by the UN and the international community in the recent past," he further said.

Full text of the statement of Mr. Selvarasa Pathmanathan follows:

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29313

புலத்தில் உள்ள நம்மவர்கள் செய்கின்ற முக்கிய தவறு யாது எனில் கேபியை முன்னணியை வைத்துப் பேசுவதும், அவர் ஒரு சிங்கள அரச கைதி என்பதையோ, அவர்களின் செயற்திட்டத்தில் தான் இயங்க முடியும் என்பதையோ மறந்து விட்டு செயற்படுவது. சொல்லப் போனால் இந்த ஒரு வருடத்தில் எந்த வித மாற்றங்களையும் சிங்கள அரசு மீது அவரால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் புலத்தில் உள்ள எம் சில கட்டமைப்புக்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்த அவரால் முடிந்திருக்கின்றது. அவரின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

நடப்பது இது தான்.

புஸ்வாணக் கதையடிப்பவர்கள் புஸ்வாணமாகிவிடுவார்கள்.

அரசாங்கத்தின் பணத்திற்கு கூலிக்கு மாரடிப்பவர்கள் முடிந்து இப்ப புலிகளின் காசுக்கு (தமிழரின் பணம்) பலர் மாரடிக்க தொடங்கியிருங்கின்றார்கள்.

அவர்கள் எலும்புக்கு அலையும் நாய்கள்.இவர்களுக்கு அகராதியில் இனித்தான் பெயர் தேட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே பி ஐ, தலைவர் நியமித்தாரா இல்லையா என்ற வாதம் சந்தேகமற்றது. பதிலை சுகன் அவர்கள் எழுதியிருக்கிறார்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75470&view=findpost&p=610393

கே. பி இலங்கை அரசின் கைக்கூலியா இல்லையா என்பதை விட, கே.பி. என்ன நடந்தது என்று சொல்வது உண்மை என்றே நான் நினைக்கிறேன். தலைவருக்கு முன்பே கேபியைப் பற்றித் தெரிந்து இப்படி நடந்ததோ தெரியாது. ஆனால் கே.பி பொய் சொல்வதாக எனக்குப் படவில்லை.

நான் உண்மையில் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன். ஆனால், அப்படி அவர் உண்மையில் உயிருடன் இருந்து, தான் இறந்ததாக உலகத்திற்கு தெரிவிக்கிறார் என்றால், அதற்கு ஒரு பெரிய காரணம் இருந்திருக்கும். அந்த திட்டம் இப்போது விரைவாக நிறைவேறாமல் தடைப்பட்டுப்போனது என்பது தான் என் எண்ணம்.

உலகத் தமிழர் இயக்கத்தின் பதவி ஆசை பற்றி அல்ல எனது கட்டுரை. அதை எழுதுவதென்றால், இன்னும் பல நிகழ்வுகளை சேர்த்திருப்பேன். காட்டிக்கொடுப்பு மட்டுமன்றி, காட்டுத்தனமான சூறையாடல்களும் அவர்கள் பட்டியலில் சேரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.