Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல சிங்கள பாடகர் கருணா மானின் அலரல்!

Featured Replies

பிரபல சிங்கள நாடாளுமன்ற எம்பியுயின் பாடல் ஒன்றை பேஸ்புக்கில் கண்ணுற்றேன். அபாரமான அலரல்! சிங்களத்தில் காதலோ காதல்!!! ... அண்மையில் லண்டனிலிருந்து பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பாளராக பணிபுரியும் ஒருவர் அங்கு சென்று மானை சந்தித்துள்ளார். அப்போ மான் புசல் வெறியில் இருந்தாராம்!!!!!! .. அதைவிட மான், ஒரு சிங்கள மாட்டையும், அதன் கண்டையும் அவிட்டு வீட்டோடு கட்டியிருக்கிறாராம்!! யோசியுங்கள் ... சிங்கள பாசம் வராதோ???????????? :mellow:

27176109800605699437100.jpg

http://www.youtube.com/watch?v=pDuDyviprKo

Edited by Nellaiyan

நேற்றுத் தமிழில் காதலா இருந்தபோது அடித்த விசில்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இதில யாரும் கருணாவிற்கு கைதட்டினதாகவோ அல்லது அவரின் பேச்சு வல்லமைக்கு தட்டினதாகவோ தெரியல்ல. போராளிகளின் சாதனைகள் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பில் கருணா சொன்னவற்றிற்கே கை தட்டி இருக்கினம்.

கருணா என்ற தனிமனிதன் எப்படியும் போகலாம். அதற்காக போராளிகளின் சாதனைகள் தலைவரின் செயற்பாடுகளை மக்கள் வரவேற்கக் கூடாது என்பது சரியான பார்வையல்ல.

யார் சொல்லுறார் என்பதில் அல்ல கைதட்டல். அவர் யாரைப் பற்றி சொல்லுறார் என்பதில் தான் கைதட்டல்.

கருணா ராஜபக்சவை புகழ்ந்தால் சிங்களம் கைதட்டும். ஆனால் நிச்சயம் சிங்களவனும் கருணாவிற்காக கைதட்டமாட்டான்.

மறுக்கவில்லை

ஒரு தளபதியை மக்கள் தோழில் தூக்கி ஊர்வலம் போனார்கள் என்றால் அந்த தளபதியும் கருணாதான். ஜெயசிக்குறுய் முறியடிப்பின் பின் வன்னியில் இந்த சம்பவம் நடந்தது. இன்று சிங்களத் தொலைக்காட்சியில் சிங்களத்தில் பாட்டுப்பாடுகின்றார் கேணல் கருணா. இவற்றை எல்லாம் ஒரு தனிமனிதனின் துரோகம் என்று ஒரு சொல்லில் இலகுவாக சொல்லிவிட முடியாது. இரவே பகலுக்கு அர்த்தம் தருகின்றது. துன்பமே இன்பத்தை வரையறை செய்கின்றது. இவரை துரோகி என்பதால் நாம் தேசப்பற்றாளர்கள் ஆகிவிடுகின்றோமா? கருணா தன்னளவில் சுதந்திரமாக இருக்க முடியாது காரணம் அவர் சிங்களத்தின் அடிமை. சிங்களத்தில் பாடலாம் அல்லது சிங்களத்தின் பாரம்பரிய கண்டி நடனத்தை ஆடலாம் அவர் செயற்பாடுகள் மீது பரிதாபமே ஏற்படுகின்றது.

ஒரு இனக் குழுமத்தில் ஆழும் கட்சி எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகள் இருக்கின்றபோது ஆழும்கட்சியில் அதிருப்தி கொள்பவர் எதிர்க்கட்சியில் சேரமுடியும். எம்மைப் பொறுத்தவரை எமது போராட்ட நடைமுறைக்கான எதிர்க்கட்சி சிங்களமாகவே இருந்தது. புலிகளை தவிர்த்து தமிழர்நிலத்தில் வேறு எவ்வகையிலும் செயற்பட முடியாது என்ற நிலையில் பல்வேறு குழுக்கள் அரசுடன் இணைந்தது. அதைவிட வேறு தெரிவுகள் இருந்ததில்லை. அடிப்படையில் ஜனநாயக அடித்தளம் என்பதன் அவசியம் தோற்றபின்னரே உணரமுடிகின்றது. அதன் அவசியம் புரிந்துகொள்ள முடிகின்றது. 1994ல் தவறு ஒன்றை செய்த போராளி யாழில் இருந்து கிளாலி ஊடாக இயக்கத்தை விட்டு ஓடுகின்றார். வவுனியா இராணுவ எல்லைவரை போன அவரால் இராணுவத்திடம் போய்சேர முடியவில்லை. எல்லையோர வயல் காவல் கொட்டில் ஒன்றில் மூன்று நாட்கள் பட்டிணியுடன் கிடந்தார். நாலாவது நாள் தகவலறிந்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் இராணுவத்திடம் போயிருந்தால் துரோகி இல்லாதபோதும் துரோகத்துக்கு ஒப்பான ஒரு நிலைதான். வேறு தெரிவுகள் என்ன இருந்தது ஒன்றில் எதிரி அல்லது மரணம். இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையை தக்கவைக்கும் போராட்டம்.

போரில் இருந்து அன்னியப்பட்ட நாம் சிங்களத்தை தஞ்சமடையவில்லை. அந்தவகையில் நாம் துரோகியல்ல? ஏனெனில் புலம்பெயர்ந்துவிட்டோம். நாம் வாங்கிய இலங்கை உற்பத்திப்பொருட்களும் எமது இலங்கை பயணத்தால் அரசுக்கு வந்த வருமானமும் நாம் வாழும் நாட்டில் கட்டிய வரிப்பணமும் அந்த வரிப்பணம் இலங்கைக்கு கொடுக்கப்பட்டபோது அரசு போரை மேற்கொண்டதும் கணக்கில் இல்லை. ஏனெனில் நாம் தேசப்பற்றாளர்கள். அரசுக்கு மறைமுகமாகவும் புலிக்கு வெளிப்படையாகவும் பணத்தை கொடுத்தவர்கள். உலகநாடுகள் எமது உரிமைப்போரை மோசம் செய்துவிட்டதென்று விசனப்படுகின்றோம் ஆனால் இந்தச் சொற்றொடருக்குள் நாமும் அடங்குகின்றோம். கருணாவுக்கு முதல் துரோகப்பாதையில் பயணித்தவர்கள் நாம்.

தமிழராய் பிறந்த எல்லோரும் தமிழர்களே அவர்கள் துரோகியாவதும் தேசப்பற்றாளராவதும் தமிழர்களாலே. கருணா துரோகி என்று கூற எனக்கு எந்த யோக்கியதையும் இல்லை ஆனால் கருணா ஒரு தமிழன் என்ற உண்மையை தாராளமாக சொல்லமுடியும் அவர் சிங்களப்பாடலை பாடியபோதும் சொல்லமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

name='sukan' date='18 September 2010 - 07:09 PM' timestamp='1284851352' post='610506']

ஒரு தளபதியை மக்கள் தோழில் தூக்கி ஊர்வலம் போனார்கள் என்றால் அந்த தளபதியும் கருணாதான். ஜெயசிக்குறுய் முறியடிப்பின் பின் வன்னியில் இந்த சம்பவம் நடந்தது. இன்று சிங்களத் தொலைக்காட்சியில் சிங்களத்தில் பாட்டுப்பாடுகின்றார் கேணல் கருணா. இவற்றை எல்லாம் ஒரு தனிமனிதனின் துரோகம் என்று ஒரு சொல்லில் இலகுவாக சொல்லிவிட முடியாது. இரவே பகலுக்கு அர்த்தம் தருகின்றது. துன்பமே இன்பத்தை வரையறை செய்கின்றது. இவரை துரோகி என்பதால் நாம் தேசப்பற்றாளர்கள் ஆகிவிடுகின்றோமா? கருணா தன்னளவில் சுதந்திரமாக இருக்க முடியாது காரணம் அவர் சிங்களத்தின் அடிமை. சிங்களத்தில் பாடலாம் அல்லது சிங்களத்தின் பாரம்பரிய கண்டி நடனத்தை ஆடலாம் அவர் செயற்பாடுகள் மீது பரிதாபமே ஏற்படுகின்றது.

எதிரியிடம் எமது இனத்தை காட்டிக்கொடுப்பவன் துரோகி தான்.எந்த இனத்தை காட்டிக்கொடுத்தாரோ அதே இனம் கருணாவை துரோகி என்பதில் என்ன பிழை.இவரது தரத்தில் தானே பானு, தீபன் போன்றோர் தமது இனத்துக்காக போராடி மடிந்தார்கள். அவர்களை மக்கள் விடுதலை வீரர்கள் என அதே மக்கள் தான் சொல்கிறார்கள். அதனை அம்மக்கள் சொல்வதற்கு தேசப்பற்றாளர்களாக கூட இருக்க தேவையில்லை சாமானிய மக்களாக இருந்தாலே போதுமானது. கருணா சிங்களத்தின் அடிமையாக வேண்டுமென தானாக தான் விரும்பி சேர்ந்தார். உண்மையில் அவருக்கு வி.புலிகளில் தொடர்ந்து இயங்க விருப்பம் இல்லையெனில் இயக்கத்தை விட்டு வெளியேறி வேற்று நாட்டுக்கு செல்லும் ஒரு தெரிவும் இருந்தது.ஆனால் துரோகி ஆகவேண்டும் என அடம்பிடித்து அப்பட்டத்தை தனது வாழ்நாள் பூராவும் காவித்திரிய வேண்டியது அவரது தெரிவு.

ஒரு இனக் குழுமத்தில் ஆழும் கட்சி எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகள் இருக்கின்றபோது ஆழும்கட்சியில் அதிருப்தி கொள்பவர் எதிர்க்கட்சியில் சேரமுடியும். எம்மைப் பொறுத்தவரை எமது போராட்ட நடைமுறைக்கான எதிர்க்கட்சி சிங்களமாகவே இருந்தது. புலிகளை தவிர்த்து தமிழர்நிலத்தில் வேறு எவ்வகையிலும் செயற்பட முடியாது என்ற நிலையில் பல்வேறு குழுக்கள் அரசுடன் இணைந்தது. அதைவிட வேறு தெரிவுகள் இருந்ததில்லை. அடிப்படையில் ஜனநாயக அடித்தளம் என்பதன் அவசியம் தோற்றபின்னரே உணரமுடிகின்றது. அதன் அவசியம் புரிந்துகொள்ள முடிகின்றது. 1994ல் தவறு ஒன்றை செய்த போராளி யாழில் இருந்து கிளாலி ஊடாக இயக்கத்தை விட்டு ஓடுகின்றார். வவுனியா இராணுவ எல்லைவரை போன அவரால் இராணுவத்திடம் போய்சேர முடியவில்லை. எல்லையோர வயல் காவல் கொட்டில் ஒன்றில் மூன்று நாட்கள் பட்டிணியுடன் கிடந்தார். நாலாவது நாள் தகவலறிந்து சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் இராணுவத்திடம் போயிருந்தால் துரோகி இல்லாதபோதும் துரோகத்துக்கு ஒப்பான ஒரு நிலைதான். வேறு தெரிவுகள் என்ன இருந்தது ஒன்றில் எதிரி அல்லது மரணம். இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையை தக்கவைக்கும் போராட்டம்.

ராகவனில் இருந்து ரகீம் வரை இயக்கத்தை விட்டு வெளியேறி பல போராளிகள் வெளிநாடுகளுக்கு செல்லவில்லையோ? ஏன் வடக்கு கிழக்கில் கூட இயக்கத்தை விட்டு விலகி வாழ்ந்துள்ளார்கள். மேற்படி நபர் ஒன்றும் செய்யாமல் இயக்கதை விட்டு செல்ல முற்பட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது நம்பும் படியாக இல்லை.இயக்கத்ஹ்டில் குறிப்பிட்ட காலம் சேவை செய்த பின் பல போராளிகள் இயக்கத்தை விட்டு செல்லும் தெரிவு பலகாலமாக இருந்தது. பலர் மேற்கு நாடுகளில் வாழ்வது இதற்கு சிறந்த உதாரணம்.

போரில் இருந்து அன்னியப்பட்ட நாம் சிங்களத்தை தஞ்சமடையவில்லை. அந்தவகையில் நாம் துரோகியல்ல? ஏனெனில் புலம்பெயர்ந்துவிட்டோம். நாம் வாங்கிய இலங்கை உற்பத்திப்பொருட்களும் எமது இலங்கை பயணத்தால் அரசுக்கு வந்த வருமானமும் நாம் வாழும் நாட்டில் கட்டிய வரிப்பணமும் அந்த வரிப்பணம் இலங்கைக்கு கொடுக்கப்பட்டபோது அரசு போரை மேற்கொண்டதும் கணக்கில் இல்லை. ஏனெனில் நாம் தேசப்பற்றாளர்கள். அரசுக்கு மறைமுகமாகவும் புலிக்கு வெளிப்படையாகவும் பணத்தை கொடுத்தவர்கள். உலகநாடுகள் எமது உரிமைப்போரை மோசம் செய்துவிட்டதென்று விசனப்படுகின்றோம் ஆனால் இந்தச் சொற்றொடருக்குள் நாமும் அடங்குகின்றோம். கருணாவுக்கு முதல் துரோகப்பாதையில் பயணித்தவர்கள் நாம்.

தமிழராய் பிறந்த எல்லோரும் தமிழர்களே அவர்கள் துரோகியாவதும் தேசப்பற்றாளராவதும் தமிழர்களாலே. கருணா துரோகி என்று கூற எனக்கு எந்த யோக்கியதையும் இல்லை ஆனால் கருணா ஒரு தமிழன் என்ற உண்மையை தாராளமாக சொல்லமுடியும் அவர் சிங்களப்பாடலை பாடியபோதும் சொல்லமுடியும்.

அண்மையில் கட்சி தாவிய பியதாசவும் தானும் தமிழர் என்று தான் சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது சார்பாக சுகனுக்கு ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் துரோகி பட்டம் குடுக்கவும் நூறு தரம் யோசிச்சு அனலைஸ் பண்ணி அடி பிடி பட்டுக் குடுக்கிற அளவுக்கு தமிழர்கள் "ரெம்ப" நல்லவங்களாகி விட்டாங்கள். கருணா துரோகி எண்டாலே அதுக்கு எதிர்ப்பும் அதுக்குப் பச்சை குத்த ஆட்களும் அதிசயக்கத் தக்க முன்னேற்றம் தான் போங்கோ! இன்னொரு இடத்தில கு.சா சொன்னது தான் எவ்வளவு பொருத்தம்!: "வில்லனெல்லாம் ஹீரோ ஆகிற கலிகாலமடி தங்கச்சி இது!" கு.சா வுக்கு நூறு பச்சைகள்!

நூறுதரமல்ல ஆயிரம் தரம் யோசிச்சு அனலைஸ் பண்ணவேண்டித்தான் இருக்கின்றது. யாரையும் துரோகி என்று சொல்லும் யோக்கியதை எனக்கில்லை என்பதைக் கூறியுள்ளேன் ஆனால் எல்லோரும் தமிழர்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொரு சம்பவத்தை கருத்தை கொள்கையை முயற்சியை உணர்வை முன்நிறுத்தி அடுத்தவனை துரோகி என்று சொல்லமுடியும். அதற்குரிய அடிப்படை பரந்து விரிந்து கிடக்கின்றது. அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. என்னை நீங்கள் துரோகி எனவும் உங்களை நான் துரோகி எனவும் சொல்லமுடியும். எமது காலம் முடிந்தபின்னர் அடுத்த அடுத்த அலைமுறைகளும் இதை தொடரமுடியும். முடிவே இருக்காது. ஆனால் தமிழினம் வேளைக்கு முடிந்துபோகும். என்னைப்பொறுத்தவரை யாரொருவனையும் துரோகி என்று சொல்வதைக் கடந்து வேற்றுமை வெறுப்புக்கான அடிப்படை என்ன அதை எப்படி தீர்ப்பது என்றே யோசிக்க முற்படுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் அண்ணா!

இயாலமையையும்

ஒரு இனத்தை காட்டிகொடுத்து வாழ்வை தேடுவதையும்

எப்படி ஒரு தராசில் போட்டு நிறுவ உங்களால் முடிகிறது? அதில் ஒரு சமாந்தரம் எப்படி தோற்றுவிக்க படுகின்றது என்ற எந்த ஒரு விளக்கமும் உங்கள் கருத்தில் மட்டுமல்ல மெய்லும் இல்லை என்ற உண்மை உங்களுக்கு நான் சொல்லி தெரியகூடிய ஒன்றில்லை.

தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை காத்திருந்தது....... தண்டனைகளில் இருந்தும் தவறுகளினுடாக தப்ப முயற்சித்தவர்களுக்கே சிங்களம் தங்குமிடமானது. என்ற முழு பூசனிக்காயை புலம்பெயர் தமிழர்களும் துரோகிகளே என்ற பதத்தினுடாக புதைக்க துணிந்தீர்கள்?????

புலிகள் மட்டுமல்ல எல்லா விடுதலை அமைப்புகளும் சக போராளியின் மேல் வைக்கும் நம்பிக்கை ஊடகாவே பயணிக்க முடியும். போராளியாவது என்பது போனோம் வந்தோம் என்ற நிலையில் இருப்பதாகவே உங்களால் பார்க்படுகின்றது. ஆனால் ஒரு சிறு இரகசியம் வெளிசெல்வதால் பல போராளிகளின் நெடுங்கால உழைப்பும் ஏன் அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகின்றது. (அமைந்தது என்பதை நாம் இன்னொரு இடத்தில் தேட தேவையில்லை). விடுதலையை முழு மூச்சாக நேசிப்பவன் தனது உயிரிலும் மேலாக அதையே சுவாசிக்கிறான். அதற்கு அச்சுறுத்தல் வரும்போது அதை தடுக்க அவனுக்கு எட்ட கூடியவைகளை செய்ய வேண்டியது அவனுடைய கடமையாகிறது.

விடுதலையோடு விளையாட சென்றவர்கள் அதன் விளைவை தேடினார்கள் என்பதே உண்மை.

ஆனால் ஜனநாயக நோய் முற்றினால் பாம்பு கடித்தவன் உயிருக்கு துடிக்கயில் கடித்த பாம்புக்கு பல்வைத்தியம் பார்த்துதான் ஆகவேண்டும்.

";ஜனநாயகம்" இதற்குள் ஜனங்கள் ஒழிந்திருப்பதை கூட புறக்கணிக்கவே வேண்டும். கிட்டதட்ட தற்போதைய தமிழக அரசியல்போல. சிங்களவன் கடல்தொழிலாழர்களை சுட்டுதள்ளுகிறான். ஆனால் "ஜனநாயகம்" பாதித்துவிடும் என்பதற்காக அவனை கைநீட்டி காட்டவே கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நூறுதரமல்ல ஆயிரம் தரம் யோசிச்சு அனலைஸ் பண்ணவேண்டித்தான் இருக்கின்றது. யாரையும் துரோகி என்று சொல்லும் யோக்கியதை எனக்கில்லை என்பதைக் கூறியுள்ளேன் ஆனால் எல்லோரும் தமிழர்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொரு சம்பவத்தை கருத்தை கொள்கையை முயற்சியை உணர்வை முன்நிறுத்தி அடுத்தவனை துரோகி என்று சொல்லமுடியும். அதற்குரிய அடிப்படை பரந்து விரிந்து கிடக்கின்றது. அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. என்னை நீங்கள் துரோகி எனவும் உங்களை நான் துரோகி எனவும் சொல்லமுடியும். எமது காலம் முடிந்தபின்னர் அடுத்த அடுத்த அலைமுறைகளும் இதை தொடரமுடியும். முடிவே இருக்காது. ஆனால் தமிழினம் வேளைக்கு முடிந்துபோகும். என்னைப்பொறுத்தவரை யாரொருவனையும் துரோகி என்று சொல்வதைக் கடந்து வேற்றுமை வெறுப்புக்கான அடிப்படை என்ன அதை எப்படி தீர்ப்பது என்றே யோசிக்க முற்படுவேன்.

இந்திய பாலியல் வல்லுறவு படைகளுடன் கூடிநின்று தமிழ் பெண்களை கற்பழித்த தலைவா பத்பநாபா....

நீ ஈழத்தை மட்டும் நேசிக்கவில்லை அதில் வாழ்ந்த பெண்களை எந்தளவில் நேசித்தாய்....?

உன்னோடு கூடிவந்த தோழருக்கும் நேசிக்க கற்று கடுத்த கல்விமானே...

இந்திய படைகளுடன் கூடி பாடசாலை செல்லும் எமை மறித்து புலி தேடிய சிங்கமே...

பள்ளி மாணவிகளின் மார்புக்குள் குண்டு தேடிய குலமகனே பத்பநாமா....?

யாழ் அசோகா கொட்டலில் கோழிகறிசமைத்து தோழருடன் கூடி கும்மாளமிட...

அசோக கொட்டல் முன்பாகவே விபச்சார விடுதி நடத்திய வீரனே...

தமிழுக்கு நீயும் உன் தோழரும் செய்தவைகளை ஒரு எழுத்தில் என்னால் எழுத முடியாது

அனுபவித்த எம்மால் எழுதாமல் இருக்கவும் முடியாது.

ஈழவிடுதலைக்கு போராட இந்தியா சென்ற உன்னை புலிகள் அநியாயமாக கொன்றுவிட்டார்கள்.

Edited by Maruthankerny

கருணா அம்மான் ஒரு பயங்கர சுழியன்.....

நீங்கள் "பெட்டிக்கு வெளியே" இருந்து சிந்திக்கும் ஒருவர் என்பது தெரியும். அது நல்ல விஷயம். ஆனால் கருணா போன்ற ஒரு வெளிப்படையான ஒரு கேஸிலும் உங்கள் ஆழமான சுய விமர்சனமும் அளவுக்கதிகமான புலம் பெயர் தமிழருடனான ஒப்பீடும் தேவையா என்பதே எனது விசனம். தனது சொந்தத் தவறுகளுக்காக ஒரு போராட்டத்தையே காட்டிக் கொடுத்த கருணாவையும் வாய் ருசிக்கு ஒறேஞ் பார்லி வாங்கிக் குடிச்ச புலம் பெயர் தமிழனும் ஒன்று என்று நீங்கள் நினைப்பது கொஞ்சம் மிகையாகப் படவில்லையா? காரணம் கண்டு பிடித்தால் அது நடக்காமல் தடுப்பேன் என்கிறீர்கள், நல்ல விஷயம், கருணா போன்ற ஒரு பலவீனமான மனிதனை எப்படி துரோகத்தில் விழாமல் தடுத்திருக்க முடியும் என்று சொல்ல முடியுமா? பாலசிங்கத்தாருக்கு புகை பிடிக்க அனுமதி கொடுத்த மாதிரி கருணாவுக்கு பெண் விஷயங்களில் தளர்வு கொடுத்திருக்க வேணுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

நூறுதரமல்ல ஆயிரம் தரம் யோசிச்சு அனலைஸ் பண்ணவேண்டித்தான் இருக்கின்றது. யாரையும் துரோகி என்று சொல்லும் யோக்கியதை எனக்கில்லை என்பதைக் கூறியுள்ளேன் ஆனால் எல்லோரும் தமிழர்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொரு சம்பவத்தை கருத்தை கொள்கையை முயற்சியை உணர்வை முன்நிறுத்தி அடுத்தவனை துரோகி என்று சொல்லமுடியும். அதற்குரிய அடிப்படை பரந்து விரிந்து கிடக்கின்றது. அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. என்னை நீங்கள் துரோகி எனவும் உங்களை நான் துரோகி எனவும் சொல்லமுடியும். எமது காலம் முடிந்தபின்னர் அடுத்த அடுத்த அலைமுறைகளும் இதை தொடரமுடியும். முடிவே இருக்காது. ஆனால் தமிழினம் வேளைக்கு முடிந்துபோகும். என்னைப்பொறுத்தவரை யாரொருவனையும் துரோகி என்று சொல்வதைக் கடந்து வேற்றுமை வெறுப்புக்கான அடிப்படை என்ன அதை எப்படி தீர்ப்பது என்றே யோசிக்க முற்படுவேன்.

1988 - 1990 களில் வடகிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்களிற்கு காரணமான சுரேஸ் பிரேமசந்திரன் மண்டையன் குழு என்ற பெயரில் யாழ்குடாநாட்டில் பல்வேறு அடாவடி தனங்களில் ஈடுபட்டு வந்தவர்.தற்போதும் உயிருடன் வாழ்கிறார். அப்போது பத்மநாபவுடன் தான் இருந்து இவ்வளவையும் செய்தவர்.மில்லியன் தடவை சுரேஸ் பிறேமச்சந்திரனை கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நூறுதரமல்ல ஆயிரம் தரம் யோசிச்சு அனலைஸ் பண்ணவேண்டித்தான் இருக்கின்றது. யாரையும் துரோகி என்று சொல்லும் யோக்கியதை எனக்கில்லை என்பதைக் கூறியுள்ளேன் ஆனால் எல்லோரும் தமிழர்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொரு சம்பவத்தை கருத்தை கொள்கையை முயற்சியை உணர்வை முன்நிறுத்தி அடுத்தவனை துரோகி என்று சொல்லமுடியும். அதற்குரிய அடிப்படை பரந்து விரிந்து கிடக்கின்றது. அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. என்னை நீங்கள் துரோகி எனவும் உங்களை நான் துரோகி எனவும் சொல்லமுடியும். எமது காலம் முடிந்தபின்னர் அடுத்த அடுத்த அலைமுறைகளும் இதை தொடரமுடியும். முடிவே இருக்காது. ஆனால் தமிழினம் வேளைக்கு முடிந்துபோகும். என்னைப்பொறுத்தவரை யாரொருவனையும் துரோகி என்று சொல்வதைக் கடந்து வேற்றுமை வெறுப்புக்கான அடிப்படை என்ன அதை எப்படி தீர்ப்பது என்றே யோசிக்க முற்படுவேன்.

படுகொலைகளை புரிந்த இந்தியாவோடு கூடி பிழைக்கும் மார்கீச மாற்றுவழிகளை கண்டுபிடித்த பத்பநாபாவிற்கு மாலை போடும் எண்ணம் அடிமனதில் இருக்கும் போது............

சொந்த இனத்தை காட்டி கொடுத்து பிழைப்பு நடத்தும் கருணாவை துரோகி என்று எப்படி கூறமுடியும்??

நான் நினைக்கிறேன் இனி தமிழில் இருந்து துரோகி என்ற சொல்லையே நீக்கிவிடலாம். ஏனெனில் நாம் எல்லோரும் தமிழர்கள்.

படுகொலைகளை புரிந்த இந்தியாவோடு கூடி பிழைக்கும் மார்கீச மாற்றுவழிகளை கண்டுபிடித்த பத்பநாபாவிற்கு மாலை போடும் எண்ணம் அடிமனதில் இருக்கும் போது............

சொந்த இனத்தை காட்டி கொடுத்து பிழைப்பு நடத்தும் கருணாவை துரோகி என்று எப்படி கூறமுடியும்??

ஈழப்போராட்டம் இறுதியில் இந்தியாவின் கைளை ஏந்திநின்றது. நேசக்கரத்தை நீட்டி நின்றது. நட்பையும் ஆதரவையும் எதிர்பார்த்துநின்றது. ஆனால் கடசிவரை கிடைக்கவில்லை. மாலைபோடுவதில் எனக்கு அடிப்படையில் நம்பிக்கை இல்லை. ஆனால் விடுதலைக்கென்று புறப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் தலைவர்கள் அவர்களது மரணங்களை நினைத்துப்பார்ப்பதுண்டு. நான் எவரையும் வெறுக்கவில்லை. ஏனெனில் எல்லோரும் தமிழர்கள். ஒரு வயலில் களைகள் இருந்தால் அவற்றை புடுங்கி எறிந்துவிட்டு பயிர்களை பாதுகாக்கலாம். அதற்கு முதல் எது பயிர் எது களை என்ற தெளிவு அவசியம். இந்நிலையில் களைகளை புடுங்கி காலுக்கை போட்டு மணிக்கணக்காக மிதித்து துவைத்து உழக்கிக்கொண்டு இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கொள்கை கருத்து இருக்கின்றது. ஒரு மரணதண்டனை எத்தனை நபர்களை தண்டனை வழங்கியவர்களுக்கு எதிராக திருப்புகின்றது. அது உறவினர்கள் நண்பர்கள் ஊர் சுற்றம் மரணத்துக்குள்ளானவரின் கொள்கை கருத்து சார்ந்தவர்கள் என ஒரு மரணத்தின் பின்னால் நூற்றுக்கணக்கானவர்கள் தண்டனை வழங்கியவர்களை எதிர்க்கின்றார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் தண்டனை வழங்கியவர்கள் மீது நம்பிக்கை இழக்கின்றார்கள். எத்தனை ஆயிரம் மரணங்கள் ? ஒரு நடவடிக்கை உதராணமாக இஸ்லாமியர்கள் வெளியேற்றம். எத்தனை லட்சம் மக்களை இன விடுதலைப்போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்தியது? பிரதேசவாதமான உணர்வுகளை தோற்றுவிக்கின்றது. முரண்பாடுகளும் வேற்றுமைகளும் மலிந்த இனத்தை கையாளும் தகுதி அற்ற நிலைக்கு முன்னால் துரோகம் என்ற சொல் அர்த்தமிழந்து நிற்கின்றது.

நீங்கள் "பெட்டிக்கு வெளியே" இருந்து சிந்திக்கும் ஒருவர் என்பது தெரியும். அது நல்ல விஷயம். ஆனால் கருணா போன்ற ஒரு வெளிப்படையான ஒரு கேஸிலும் உங்கள் ஆழமான சுய விமர்சனமும் அளவுக்கதிகமான புலம் பெயர் தமிழருடனான ஒப்பீடும் தேவையா என்பதே எனது விசனம். தனது சொந்தத் தவறுகளுக்காக ஒரு போராட்டத்தையே காட்டிக் கொடுத்த கருணாவையும் வாய் ருசிக்கு ஒறேஞ் பார்லி வாங்கிக் குடிச்ச புலம் பெயர் தமிழனும் ஒன்று என்று நீங்கள் நினைப்பது கொஞ்சம் மிகையாகப் படவில்லையா?

புலப்பெயர் தமிழனின் ஒறேஞ் பார்லி குடிச்ச நடவடிக்கை ஒரு புறம். 40 லட்சம் தமிழரில் 15 லட்சம் புலம்பெயர்ந்தபோது தாயகத்தில் பெரும் வெற்றிடம் தோன்றுகின்றதே! மக்களற்ற நிலமாகின்றதே ! 15 லட்சம் புலம்பெயர் தமிழன் பொருளாதாரத்தில் உயர்வையும் கல்வியில் உயர்வையும் பாதுகாபான வாழ்வையும் தாயக மக்களுக்கு எடுத்துரைத்து எப்படியாவது புலப்பெயர்வெ தனிநாடு காண்பதை விட முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கினானே ! இந்த எண்ணம் எத்தனை லட்சம் பெயரை தென்னிலங்கை நோக்கி நகரவைத்தது ? எத்தனை லட்சம் பெயரை போராட்டத்தில் இணைவதில் இருந்து தடுத்தது? சிங்களத்தின் நெருக்கடியும் இன்றி போராடும் கஸ்டமும் இன்றி பிரகாசமானதொரு பாதை இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியது புலப்பெயர்வு. துரோகத்துக்கெல்லாம் அப்பனான துரோகம் இதுதான். தேசியப்பற்றையும் மண்மீதான பற்றையும் அடிப்படையில் தகர்த்தெறிந்த நடவடிக்கைக்கு மறு பெயர் புலம்பெயர்வு.

காரணம் கண்டு பிடித்தால் அது நடக்காமல் தடுப்பேன் என்கிறீர்கள், நல்ல விஷயம், கருணா போன்ற ஒரு பலவீனமான மனிதனை எப்படி துரோகத்தில் விழாமல் தடுத்திருக்க முடியும் என்று சொல்ல முடியுமா? பாலசிங்கத்தாருக்கு புகை பிடிக்க அனுமதி கொடுத்த மாதிரி கருணாவுக்கு பெண் விஷயங்களில் தளர்வு கொடுத்திருக்க வேணுமோ?

பெண்பலவீனம் என்ற சிறு பிரச்சனைக்குள் நடந்த சம்பவம் அல்ல இது. சரி உங்கள் வழிக்கே வந்து கேட்கின்றேன் பெண் விடயங்களில் இறுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து இறுதியில் நிலைநாட்டியது என்னத்தை? இந்த வகை இறுக்கத்தை கடைப்பிடித்தவர்களால் அல்லது ஏற்றுக்கொண்டவர்களால் 1000 பெண்கள் சிங்களப் படைகளால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும்போது எமது கட்டுப்பாடுகள் எந்தவகையில் அதை தடுக்கின்றது? ஒரு பலவீனமான மனிதனின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த இனத்துக்கான விடுதலைப்போராட்டம் அழிவதற்கு காரணமாகின்றது என்றால் இங்கே பலவீனம் என்பது கட்டுப்பாடா அல்லது கட்டுப்பாட்டை மீறிய மனிதனா? கட்டுப்பாடு பலவீனமாக இருப்பதால் தானே அதை எதிரி தனது பலமாகப்பயன்படுத்தினான்.

1988 - 1990 களில் வடகிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்களிற்கு காரணமான சுரேஸ் பிரேமசந்திரன் மண்டையன் குழு என்ற பெயரில் யாழ்குடாநாட்டில் பல்வேறு அடாவடி தனங்களில் ஈடுபட்டு வந்தவர்.தற்போதும் உயிருடன் வாழ்கிறார். அப்போது பத்மநாபவுடன் தான் இருந்து இவ்வளவையும் செய்தவர்.மில்லியன் தடவை சுரேஸ் பிறேமச்சந்திரனை கேட்கலாம்

இந்திய பாலியல் வல்லுறவு படைகளுடன் கூடிநின்று தமிழ் பெண்களை கற்பழித்த தலைவா பத்பநாபா....

நீ ஈழத்தை மட்டும் நேசிக்கவில்லை அதில் வாழ்ந்த பெண்களை எந்தளவில் நேசித்தாய்....?

உன்னோடு கூடிவந்த தோழருக்கும் நேசிக்க கற்று கடுத்த கல்விமானே...

இந்திய படைகளுடன் கூடி பாடசாலை செல்லும் எமை மறித்து புலி தேடிய சிங்கமே...

பள்ளி மாணவிகளின் மார்புக்குள் குண்டு தேடிய குலமகனே பத்பநாமா....?

யாழ் அசோகா கொட்டலில் கோழிகறிசமைத்து தோழருடன் கூடி கும்மாளமிட...

அசோக கொட்டல் முன்பாகவே விபச்சார விடுதி நடத்திய வீரனே...

தமிழுக்கு நீயும் உன் தோழரும் செய்தவைகளை ஒரு எழுத்தில் என்னால் எழுத முடியாது

அனுபவித்த எம்மால் எழுதாமல் இருக்கவும் முடியாது.

ஈழவிடுதலைக்கு போராட இந்தியா சென்ற உன்னை புலிகள் அநியாயமாக கொன்றுவிட்டார்கள்.

கிழக்கில் கருணா குழு பிள்ளையான் குழு இனிய பாரதி இவ்வாறான ஒட்டுக்குழுக்கள் தொண்டுநிறுவனப் பெண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலைசெய்தது. பல பேரை போட்டுத்தள்ளியது. அடிப்படையில் ஆளையாள் போட்டுத்தள்ளுவதற்கும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்குமான வெறுப்பென்னும் தளம் எம்மினத்திடம் இருக்கின்றது. இவ்வாறான காரியங்களை செய்ய முன்னர் இவர்கள் தமிழர்கள் என்ற உணர்வு இருந்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி புலம்ப முடியும். அவரவர்களுக்கு அது அது நியாயம். இதனால் பொதுவானதொரு நியாயத்தை பேசும் தகுதியை இழந்துநிற்கின்றோம்.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

புலப்பெயர் தமிழனின் ஒறேஞ் பார்லி குடிச்ச நடவடிக்கை ஒரு புறம். 40 லட்சம் தமிழரில் 15 லட்சம் புலம்பெயர்ந்தபோது தாயகத்தில் பெரும் வெற்றிடம் தோன்றுகின்றதே! மக்களற்ற நிலமாகின்றதே ! 15 லட்சம் புலம்பெயர் தமிழன் பொருளாதாரத்தில் உயர்வையும் கல்வியில் உயர்வையும் பாதுகாபான வாழ்வையும் தாயக மக்களுக்கு எடுத்துரைத்து எப்படியாவது புலப்பெயர்வெ தனிநாடு காண்பதை விட முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கினானே ! இந்த எண்ணம் எத்தனை லட்சம் பெயரை தென்னிலங்கை நோக்கி நகரவைத்தது ? எத்தனை லட்சம் பெயரை போராட்டத்தில் இணைவதில் இருந்து தடுத்தது? சிங்களத்தின் நெருக்கடியும் இன்றி போராடும் கஸ்டமும் இன்றி பிரகாசமானதொரு பாதை இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியது புலப்பெயர்வு. துரோகத்துக்கெல்லாம் அப்பனான துரோகம் இதுதான். தேசியப்பற்றையும் மண்மீதான பற்றையும் அடிப்படையில் தகர்த்தெறிந்த நடவடிக்கைக்கு மறு பெயர் புலம்பெயர்வு.

பெண்பலவீனம் என்ற சிறு பிரச்சனைக்குள் நடந்த சம்பவம் அல்ல இது. சரி உங்கள் வழிக்கே வந்து கேட்கின்றேன் பெண் விடயங்களில் இறுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து இறுதியில் நிலைநாட்டியது என்னத்தை? இந்த வகை இறுக்கத்தை கடைப்பிடித்தவர்களால் அல்லது ஏற்றுக்கொண்டவர்களால் 1000 பெண்கள் சிங்களப் படைகளால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படும்போது எமது கட்டுப்பாடுகள் எந்தவகையில் அதை தடுக்கின்றது? ஒரு பலவீனமான மனிதனின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த இனத்துக்கான விடுதலைப்போராட்டம் அழிவதற்கு காரணமாகின்றது என்றால் இங்கே பலவீனம் என்பது கட்டுப்பாடா அல்லது கட்டுப்பாட்டை மீறிய மனிதனா? கட்டுப்பாடு பலவீனமாக இருப்பதால் தானே அதை எதிரி தனது பலமாகப்பயன்படுத்தினான்.

கிழக்கில் கருணா குழு பிள்ளையான் குழு இனிய பாரதி இவ்வாறான ஒட்டுக்குழுக்கள் தொண்டுநிறுவனப் பெண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலைசெய்தது. பல பேரை போட்டுத்தள்ளியது. அடிப்படையில் ஆளையாள் போட்டுத்தள்ளுவதற்கும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்குமான வெறுப்பென்னும் தளம் எம்மினத்திடம் இருக்கின்றது. இவ்வாறான காரியங்களை செய்ய முன்னர் இவர்கள் தமிழர்கள் என்ற உணர்வு இருந்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி புலம்ப முடியும். அவரவர்களுக்கு அது அது நியாயம். இதனால் பொதுவானதொரு நியாயத்தை பேசும் தகுதியை இழந்துநிற்கின்றோம்.

1. புலம் பெயர்வு: என்ன செய்திருக்கலாம் சுகன்? பலஸ்தீனர் மாதிரி, கொல்பவனைக் கொல்லு, நாங்கள் அசைய மாட்டோம் என்று எல்லாரும் சிறி லங்காவிலேயே இருந்திருக்கலாமா? ஈழம் கிடைத்திருக்குமா இப்போது? தமிழனுக்குத் தொழிலும் இல்லை கல்வியும் இல்லை வாழ பாதுகாப்பும் இல்லை, ஈழம் மட்டும் "அட இவங்கள் அடிக்க அடிக்க அடி வாங்கிக் கொண்டு சும்மா இருக்கானுகளே, இவங்கள் ரெம்ப நல்லவங்க போல இருக்கே!" என்று யாராவது வந்து வேண்டித் தந்திருப்பார்களா? பலஸ்தீனர்களுக்கு யார் என்ன செய்கிறார்கள் இப்போது? புலம் பெயர்ந்த யூதனும் எரித்திரியனும் கிழக்குத் திமோர் காரனும் வருஷக் கணக்கில் வெளிநாட்டில் காரியம் பார்த்தே தனி நாடு அமைத்தானே? பலஸ்தீன இளைஞன் இன்றைக்கு மேற் படிப்புக்குக் கூட வெளி நாடு வர முடியாமல் கல்லெறிந்து வாழும் போராட்டக் காரனாக அல்லவா இருக்கிறான்?

2. தனிப்பட்ட ஒழுக்கப் பிறழ்வு எங்கே இருக்கிறோம் என்பதைப் பொறுத்து வேறுபட்ட விளைவுகளைக் கொண்டு வரும் ஒரு விஷயம். மேற்கு நாட்டின் தாராளமான சூழலிலும் அமெரிக்க ராணுவத்தில் பெண்கள் சேர இன்னும் தயக்கமிருக்கிறது. தன்னினச் சேர்க்கையாளர்கள் வெளிப்படையாகப் பணியாற்ற இன்னும் தடை இருக்கிறது. ஏனென்று நினைக்கிறீர்கள்? ஒரு ராணுவ அமைப்பில் பெண் விஷயம் செக்ஸ் விஷயம் வந்து விட்டால் விளைவு உங்கள் ஊரில் தெருக்களிடையே நடப்பது போல சாதாரணமாக முடியாது, பெரிய விளைவுகள் இருக்கும். கருணா செய்தது ஆமி செய்தது பிள்ளையான் செய்தது எல்லாம் புலிகள் கட்டுப்பாட்டின் விளைவுகள் அல்லது அவற்றைக் கட்டுப் படுத்த இயலாததால் புலிகள் தங்கள் இயக்கத்தை கட்டாக்காலிகளாக விட்டிருக்க வேண்டும் என்ற வாதம் வெறும் பிசத்தல், ஏதும் அர்த்தம் இருக்கிறதா இந்த வாதத்தில்? தமிழ்ப் பெண்களெல்லாம் "நாம் கற்பழிக்கப் படுவதற்குப் பயப்படவில்லை" என்று அறிக்கை விட்டால் சிங்களவனும் பிள்ளையான்களும் நிறுத்தி விடுவாங்கள் (நல்லவங்கள் அவ்வளவு!) என்கிற மாதிரி இருக்குது உங்கட கதை? ரூம் போட்டு யோசிப்பாங்கள் போல?

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் ஒரு அறிவியல் தளத்தை எட்டாத இனமாக தமிழ் இனம் இருந்துகொண்டு. தாமே அறிவாளிகள் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் மிதந்துகொண்டிருந்தார்கள். அறிவாக சிந்தித்து மிதிக்க தொடங்கிய போது தடுமாறி அங்கும் இங்கும் ஓடினார்கள் என்பதே உண்மை. அதன் விளைவை ஒருவரை நோக்கி கை நீட்டுகின்றீர்களோ என்ற தளத்தில்தான் உங்களது கருத்தை நான் முதலில் விளங்கினேன்.

உங்கள் களைகளை களைந்துவிட்டு பயிர்களை பண்படுத்துவது என்ற உதராணம் என்பதே எனது நிலைபாடும்........ ஆனால் கடைசி வரியில் கால்களுக்குள் மிதிப்பதில் இஸ்டமில்லை...... என்று நவநாகரீகமாக உங்களாலும் என்னாலும் விலகிவட முடியும்.

ஆனால் பாழடைந்த மண்ணை பண்படுத்தி பல தேசங்கள் கடந்து நீர் சுமந்து பயிர் செய்தவனுக்கே அறுகம்புல்லை எப்படி புடுங்க வேண்டும் அரலிசெடியை எப்படி களைய வேண்டும் என்பது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் கருணா குழு பிள்ளையான் குழு இனிய பாரதி இவ்வாறான ஒட்டுக்குழுக்கள் தொண்டுநிறுவனப் பெண்களை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலைசெய்தது. பல பேரை போட்டுத்தள்ளியது. அடிப்படையில் ஆளையாள் போட்டுத்தள்ளுவதற்கும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்குமான வெறுப்பென்னும் தளம் எம்மினத்திடம் இருக்கின்றது. இவ்வாறான காரியங்களை செய்ய முன்னர் இவர்கள் தமிழர்கள் என்ற உணர்வு இருந்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி புலம்ப முடியும். அவரவர்களுக்கு அது அது நியாயம். இதனால் பொதுவானதொரு நியாயத்தை பேசும் தகுதியை இழந்துநிற்கின்றோம்.

மேற்படி கூட்டம் புலிகள் இயக்கத்தில் இருந்த போது பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்தவில்லை. கட்டுப்பாட்டுக்கு உலக்கப்புகழ் பெற்ற வி.புலிகள் என்ன தண்டனை கொடுத்து இருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். போட்டு தள்ளப்பட்டவர்கள் செத்தோழர் பத்மநாபா/டக்கிளசின் கூட்டத்தில் இருந்த ராசிக் போன்றோரும் புளட்டின் கும்பலுமே. இயக்கத்தை விட்டு வெளியேறி காடைத்தனம் புரிந்தவர்களின் தவறுகளுக்கு ஓட்டுமொத்த விடுதலைப்புலிகளும் எவ்வாறு பழியை ஏற்பது?.

பத்மநாபா கூட்டம் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து கட்டாயமாக இராணுவ சேர்ப்பு ,பாலியல் வதை, களவு கொலை என்பவற்றை தமிழ் மக்கள் எப்போதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.இவர்கள் தமிழ் மக்களுக்கு எள்ளவும் ஏதும் செய்யவில்லை.சிவப்பு புத்தகங்களை கரைத்து குடித்தது தான் மிச்சம்.இதை தான் சொல்வார்கள் "படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்" என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.