Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றம்.

Featured Replies

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகா இதுவரை காலமும் கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதியினால் 30 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் சிறைக் கூடத்தின் வசதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வியளித்த போது, தேசத் துரோகிகளை துக்கில் போட வேண்டுமென வலியுறுத்தியதாகவும், அதன் முதல் கட்டமாக இந்தக் கடூழிய சிறைத்தண்டனையை நோக்க வேண்டுமெனவும் இணையம் குறிப்பிட்டுள்ளது.

இராணுவ தளபாடக் கொள்வனவின் போது விலைக் மனுக் கோரல் நியதிகளுக்கு முரணான வகையில் ஹைகோர்ப் நிறுவனத்திடமிருந்து பற்றரிகள், வீ.எச்.எப். திசைக்கருவி, மின்பிறப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்தமைக்காக இரண்டாம் யுத்த நீதிமன்றம் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதித்துள்ளது.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்படும் என அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு ஆறு மாத காலத்திற்கு மேல் தண்டனை விதிக்கப்படும் நபரொருர் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, யுத்த நீதிமன்றின் சரத்துக்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.sankamam.com/beta/index.php/news/eelam-srilanka/829-2010-09-30-15-43-17.html

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா தமிழர்களுக்குச் செய்த முதலாவது நல்ல செயல். தமிழினப் படுகொலைகளை நடாத்தியவர்களில் ஒருவரான சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த சிறு தண்டனை இது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் முடிவு வரும் போது..... சரத் வெளிநாட்டில் நின்றிருந்தால்....

இந்த தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம். பல போர்க்குற்றங்களை வெளிக் கொண்டுவந்திருக்க கூடிய சாத்தியம் உண்டு.

சரத் தனது முன்னாள் நண்பர்களான மகிந்தவையும், கோத்தாவையும் தவறாக எடை போட்டதால்....

வெலிக்கடையில் களி தின்ன வேண்டி வந்திட்டுது. அதுகும் நன்மைக்கே....

பொன்சேகா 96 சதுர அடிக்குள் முடக்கம்

சிறைக்குள் உள்ளவை :

-- ஒரு தலையணை

-- ஒரு பாய் ( கிடந்த கட்டில் அகற்றப்பட்டுள்ளது)

-- ஒரு கதிரை

-- ஒரு மலசலகூடம்

கிடைக்காதவை:

- சாப்பிட ஒரு மேசை

- கதவு

- ...

http://www.thesundayleader.lk/2010/10/03/sarath-fonseka-confined-to-a-10-ft-x-10-ft-cell/

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அது வெளியில் வரும்

வினையறுக்க முயலும்

முயலும்போது தமிழன் அதைப்பயன்படுத்தணும்

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது சரத் பொன்சேகாவே எனவும் அது தொடர்பில் சாட்சியமளிக்கத் தான் தயார் எனவும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க போன்று நாட்டில் ஊடகவியலாளரான உப்பாலி தென்னகோனுக்கு இரும்பைக் கொண்டு தாக்குதல் நடத்தியதும் சரத் பொன்சேகா என தான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்வதாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வரும்போது இரகசியப் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு குறித்தக் கெலையை தானே செய்ததாகவும், எனவே அது தொடர்பில் விசாரணைகளை கைவிடுமாறும் சரத் பொன்சேகா கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=33947&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.