Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸில் தமிழீழ தபால் தலை (முத்திரை) வெளியீடு: நல்ல முன் உதாரண்ம்!

Featured Replies

stamps.jpg

சுவிஸ் ஈழத்தமிழர் அவையால், தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது!

இம் முத்திரையில் இலங்கை அரசே இன அழிப்பை நிறுத்து என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, தமிழீழ தேசியப் பூ, முகாமில் அடைபட்டுள்ள மக்கள், முள்ளிவாய்க்கால் பேரவலம், என பலதரப்பட்ட சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், பார்க்கும் அனைவருக்கும், மற்றும் வேற்றின மக்களுக்கும் இலங்கை நிலை நன்கு புரியும். சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்கள், இதில் முன்னோடிகளாக இருப்பது பெருமைக்குரிய விடயமாகும். குறிப்பாக இளையோர்களில் நிதிலா தெய்வேந்திரன் அவர்கள் இம் முத்திரைகளை வடிவமைத்து, சட்ட அங்கீகாரங்களையும் பெற்றுள்ளமை பாராட்டுதலுக்கு உரியது.

சுவிஸ் வாழ் தமிழ் மக்கள், இனி தாம் அனுப்பும் கடிதங்களுக்கு தமிழீழ முத்திரைகளை ஒட்டி அனுப்பவேண்டும். இருப்பினும் இலங்கைக்கு கடிதங்களை அனுப்பும்போது, இதனைத் தவிர்த்துக்கொள்வது, நல்லது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும், உள்ளூருக்கும் கடிதங்களை அனுப்பும்போது, தமிழீழ முத்திரைகளையே சுவிஸ் வாழ் தமிழர்கள் பயன்படுத்தவேண்டும்! சுவிஸ் ஈழத்தமமிழர் அவை மிகவும் திறமையாகவும், நேர்த்தியாகவும் பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றது

http://rste.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html

இந்த முயற்சி செயலில் வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள், பாராட்டுக்கள்!

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு இலகுவான முயற்சி இல்லை. இளையோர் மிகவும் நேரமெடுத்து திட்டமிட்டு செயலில் காட்டி இருக்கிறார்கள்.

இந்த முயற்சி, ஸ்ரீ லங்கா ஜெனோசைட் பற்றி உலகத்திற்கு தெரிவுக்கும் பணியில் ஒரு மெயில் கல். ஹி ஹி ஹி... மைல் கல்.

நமது உள்நாட்டு, தமிழ் நாட்டு, வெளி நாட்டு அரசியல்வாதிகள் பார்த்து படிக்க வேண்டிய விடயம்.

நல்ல வரவேற்கதக்க முயச்சி, இதற்காக பாடுபட்டு உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்.

Edited by r.raja

இது ஒரு இலகுவான முயற்சி இல்லை. இளையோர் மிகவும் நேரமெடுத்து திட்டமிட்டு செயலில் காட்டி இருக்கிறார்கள்.

இந்த முயற்சி, ஸ்ரீ லங்கா ஜெனோசைட் பற்றி உலகத்திற்கு தெரிவுக்கும் பணியில் ஒரு மெயில் கல். ஹி ஹி ஹி... மைல் கல்.

நமது உள்நாட்டு, தமிழ் நாட்டு, வெளி நாட்டு அரசியல்வாதிகள் பார்த்து படிக்க வேண்டிய விடயம்.

இதை சாதித்த சுவிஸ் இளையோர் பெருமைக்குரியவர்கள்.

எப்படி இவர்கள் இதை சாதித்தனர் என்பதை முடிந்தால் வேறு ஐரோப்பிய இளையோரிடம் தகவல்களை பரிமாறலாம். இதன் மூலம் மற்றைய நாடுகளிலும் இப்படியான விழிப்புணர்வுகள் தொடரப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முயற்சி, தமிழீழ அரசின் நாணய வடிவமைப்பை சென்றடையும் நாளாக விரைவில் அமையட்டும்.

இம்முயற்சி, தமிழீழ அரசின் நாணய வடிவமைப்பை சென்றடையும் நாளாக விரைவில் அமையட்டும்.

சுவிசில் முத்திரை வெளியிடுவது என்பது சின்னவிடயம். உதாரணமாக தபால் திணைக்களத்திற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை முத்திரை அடிக்கவேண்டும் என விண்ணப்பித்து அதற்குரிய பணம் முழுவதையும் செலுத்தினால் அவர்கள் அந்த முத்திரையை அடித்து கொடுப்பார்கள். இது ஒரு சாதனையல்ல. இது சுவிஷ் தபால் திணைக்களத்திற்கு இலாபம் தரும் திட்டம் என்பதால் நடைமுறையில் உள்ளது. ஆனால் இத்திட்டத்தை பலரும் அறியாமல் இருக்கிறார்கள். ஆனால் இந்த முத்திரைகளை தபால் அலுவலகங்களில் விற்கமாட்டார்கள். யார் கோரிக்கை விடுத்து பணத்தை செலுத்தினார்களோ அவர்கள்தான் விற்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.