Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவென்று யாருமில்லாதவன் கழுத்துக்குக் கீழ் உணர்வுகள் அற்ற நிலையில் உதவிக்கும் ஆளின்றித் துடிக்கிறான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
audio.gifஉறவு என்று சொல்லிக் கொள்ளவோ உறவினர் என்றோ இவனுக்கு யாருமேயில்லை. கழுத்துக்குக் கீழ் உணர்வற்று உயிரோடு வாழும் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தானெனத் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு முன்னாள் போராளி இவன். வீட்டின் ஒற்றைப்பிள்ளை அம்மாவினதும் அப்பாவினதும் கனவுகளின் இராசகுமாரன் அவர்களது நம்பிக்கையின் அவர்களது வாழ்வின் விடிவெள்ளியென எத்தனையோ அவர்களது ஆசையின் குழந்தையானவன். இன்று தான் இருக்கும் இடத்தை தனது நிலமையை அவர்களுக்கே சொல்லாமல் வைத்திருக்கிறான். வயதான அம்மாவும் அப்பாவும் இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை இந்த நிலையில் பார்த்து அவர்கள் துயரமுறுவதையோ கண்ணீர் விடுவதையோ விரும்பாத இவன் தனக்குள் தினமும் அழுவதை யாருக்கும் வெளிப்படுத்தாது தனக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான். தனது ஒவ்வொரு தேவைகளுக்கும் யாராவது ஒருவர் வந்து நிறைவேற்றினால்தான் எல்லாம் என்ற நிலமையில் இருக்கின்ற எதுவுமே இயலாத தன்னை அழித்துக்கொள்ளவே இயலாத பாவமாகத் தானிருப்பதைச் சொல்லித் துயருறும் இவனோடு பேசுகின்ற ஒவ்வொரு வினாடிகளும் உயிர் வலிக்கிறது. இவன் செய்தது ஒன்றுதான். தனது வாழ்வை எங்களுக்காகத் தரத்துணிந்ததுதான். நாங்கள் கனவுகாண எங்கள் கனவுகளின் வடிவமாகித் தங்களை அழித்துக் கொண்ட இவர்கள் இன்று சாவுகூடத் தங்களை ஏற்காதுள்ளதாகத் துயருறுகிறார்கள். காலம் இவர்களை வஞ்சித்துத் தன் காலடியில் இம் மனங்களை வைத்து மகிழ்கிறது. ஒரு தேசத்தின் விடுதலையை நேசித்தவர்களை இன்று நாங்கள் சாகடித்துக் கொண்டிருக்கின்றோம். உதவுகிறோம் என்று இவர்களின் படங்களை விபரங்களைச் சேர்த்தவர்கள் யாவரும் கைவிட்ட நிலமையில் உதவிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் இழந்து உயிரை மட்டும் வைத்திருக்கும் இளையோர்கள் இவர்கள். இவர்கள் இப்படியாகிப்போக இவர்கள் இப்படித் துயரங்களோடு சாக விரக்தியோடு வாழக் காரணமாகிப்போன எம்மீது கோபம் மட்டுமே வருகிறது. இவர்களுக்கான குறைந்தபட்சம் இவர்கள் வாழும் நாட்கள் வரையிலுமாவது ஏதாவது ஒரு நேரக்கஞ்சியாயினும் கொடுக்க ஒரு வழியைச் செய்ய வேண்டிய மாபெரும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்குமே உள்ளது. மாற்றங்களை விரும்பும் ஒவ்வொருவரும் இவர்களோடு பேசுங்கள். அதன் பின்னால் முடிவெடுங்கள் இப்போதைய தேவையென்ன என்பதை. எங்கள் கனவுகளின் விலாசங்களாகவும் எங்கள் மகிழ்ச்சிகளின் வெற்றியாளர்களாகவும் வாழ்ந்த மனிதக் கடவுளர்கள் இவர்கள். இவர்கள் வாழும் வரையான உதவிகளை நேசக்கரம் ஊடாக வேண்டுகிறோம். மீளவும் மீளவும் உங்களிடமே கையேந்துகிறோம். இதோ பேசக்கூட விரும்பாத கழுத்துக்குக் கீழ் இயக்கம் இல்லாது போன இந்த இளைஞனின் குரலிலிருந்து…..

நீங்கள் பாவம் மினக்கட்டு பேட்டி கண்டு ஒலிப்பதிவை எல்லாம் இணைக்கிறீங்கள். இதை எத்தனைபேர் ஆர்வத்தோட அக்கறையோட கேட்பீனம் என்று நினைக்கிறீங்கள் சாந்தி அக்கா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பாவம் மினக்கட்டு பேட்டி கண்டு ஒலிப்பதிவை எல்லாம் இணைக்கிறீங்கள். இதை எத்தனைபேர் ஆர்வத்தோட அக்கறையோட கேட்பீனம் என்று நினைக்கிறீங்கள் சாந்தி அக்கா?

விடாமுயற்சி பயன் தருமென்ற நம்பிக்கையில் இத்தகையோரின் குரல்களை அவர்களது துயர்களை எடுத்து வருகிறேன். ஈரமுள்ளோர் கட்டாயமாக இவர்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. பெரும்பாலானோருக்கு உதவிகள் இங்கு இணைத்த குரல்களைக் கேட்டு உதவியிருக்கிறார்கள்.

இந்தக்குரலுக்குரியவனுக்கு இன்னும் எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை. நிச்சயம் இவனுக்காகவும் யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது கரும்பு.

என்னாலான சிறு தொகை அனுப்பலாம் என உள்ளேன்

தனிமடலில் சில விபரங்கள் கோரியுள்ளேன் விபரம் அனுப்பவும் நன்றி சாந்தி

நீங்கள் பாவம் மினக்கட்டு பேட்டி கண்டு ஒலிப்பதிவை எல்லாம் இணைக்கிறீங்கள். இதை எத்தனைபேர் ஆர்வத்தோட அக்கறையோட கேட்பீனம் என்று நினைக்கிறீங்கள் சாந்தி அக்கா?

தயவு செய்து முயற்சி செய்பவர்களை இடையூசெய்யாதீர்கள்

தயவு செய்து முயற்சி செய்பவர்களை இடையூசெய்யாதீர்கள்

இடையூறு செய்வதா..? :D ஓர் முன்னாள் அங்கவீனப்பட்ட போராளி... இங்குள்ள பலரின் பாசையின் அடிப்படையில் பார்த்தால் இவர் ஓர் வரலாறு... இதற்கு ஓர் கருத்துதானும் எழுத பலருக்கு இஸ்டமில்லை. கடைசி ஓர் ஆறுதல் வார்த்தைதானும்... :) நான் குத்திக்காட்டவில்லை... ஆனால்.. படத்தை இணைத்து வீரவணக்கம் என்று போட்டிருந்தால்.. வரிசையாக வந்து வீரவணக்கம் கூறிவிட்டு சென்று இருப்பார்கள். நான் எல்லோரையும் கூறவில்லை. பொதுவாக கூறுகின்றேன். சிங்களவன் யாழ்ப்பாணத்திற்கு பன்பல் அடிக்க வருகின்றான் என்று செய்திபோட்டு இருந்தால் கோவணம் கழன்றுவிழும்வரை புடுங்கி எடுத்து இருப்பார்கள். :)

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி

எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா?என் மன நிலை அதுதான் அதேபால் எல்லோரும் இருந்திருக்கலாம் அல்லவா?

நீங்கள் ஒரு ஆறுதல் வார்த்தை எழுதவில்லை கவனித்தீர்களா?

நான் இச்செய்தியை வாசித்துவிட்டு கருத்து எழுதவில்லை செயல்பாட்டில் இறங்கினேன்(விபரம் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்)

சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது

எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

..யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா?

...சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது...

WELL SAID

  • கருத்துக்கள உறவுகள்

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி

எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா? என் மன நிலை அதுதான் அதேபால் எல்லோரும் இருந்திருக்கலாம் அல்லவா?

நீங்கள் ஒரு ஆறுதல் வார்த்தை எழுதவில்லை கவனித்தீர்களா?

நான் இச்செய்தியை வாசித்துவிட்டு கருத்து எழுதவில்லை செயல்பாட்டில் இறங்கினேன்(விபரம் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்)

சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது

எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

ஆமென்

அதேநேரம் சிலருக்கு குறைமட்டமே சொல்லத்தெரியும்

செய்கை என்பது சிறிதளவும் இல்லை

செய்பவனையும் தொடர்ந்து சுமையை அழுத்தி அழித்து பின்னர்அவனை முட்டாளாக்கி தான் புத்திசாலி என்றபடியால் தப்பினேன் என்று கிண்டலடிக்கும்நோக்கமே தவிர....

சுமையை பங்கிடும் எந்த கருணையுமில்லை

நான் கரும்புவை இங்கு குறிப்பிடவில்லை

... குரைக்கிற நாய்களில், பல கடிக்காது!!!!! .....

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி

எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா?என் மன நிலை அதுதான் அதேபால் எல்லோரும் இருந்திருக்கலாம் அல்லவா?

சாந்தி அக்கா இணைக்கின்ற இவ்வாறான பதிவுகளிற்கு சென்று பாருங்கள் நான் நேசக்கரத்தை ஊக்குவிக்கும் வகையில் பெரும்பாலும் ஓர் பதிவு இட்டு இருப்பேன். நேசக்கரத்திற்கு சுமார் ஆறு மாதங்களாக ஓர் சிறிய அன்பளிப்பை கொடுத்து எனது ஊக்கத்தையும், ஆதரவையும் கொடுத்து வருகின்றேன். இங்கு பிரச்சனை என்ன என்றால் காயங்களுக்கு மருந்து போடுவது பற்றி கருத்தாடல் செய்வதற்கு பலரினால் முடியவில்லை. இதை ஓர் உளவியல் பலவீனமாககூட கொள்ளலாம். ஏன் என்றால் நாம் இப்படிப்பட்டவர்களும் அல்லவா…

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை

நீங்கள் ஒரு ஆறுதல் வார்த்தை எழுதவில்லை கவனித்தீர்களா? நான் இச்செய்தியை வாசித்துவிட்டு கருத்து எழுதவில்லை செயல்பாட்டில் இறங்கினேன்(விபரம் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்) சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

சாந்தி அக்கா குறிப்பிட்ட உறவுபற்றி எழுதிய கவிதையில் ஓர் ஆறுதல் வார்த்தையை முன்பு இங்கு பதிந்தேன். நான் எழுதிய கருத்து சாந்திக்கு அக்காவிற்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று நிச்சயம் நான் நினைக்கவில்லை.

அவனுக்காக.... இது கவிதையில்லை....

... குரைக்கிற நாய்களில், பல கடிக்காது!!!!! .....

உங்களைப்பற்றி கூறியமைக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓர் முன்னாள் அங்கவீனப்பட்ட போராளி... இங்குள்ள பலரின் பாசையின் அடிப்படையில் பார்த்தால் இவர் ஓர் வரலாறு... :D

வரலாறுகளை வாயினால் மட்டுமே பாதுகாப்போம் கரும்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

யாருக்கும் கருத்து எழுத இஸ்ட்டம் இல்லையென்று சொல்லமுடியாது மேற்படி செய்தியின் சோகத்தினால் மனம் இறுகி

எதையும் எழுதமுடியாமல் போயிருக்கலாம் அல்லவா?என் மன நிலை அதுதான் அதேபால் எல்லோரும் இருந்திருக்கலாம் அல்லவா?

நீங்கள் ஒரு ஆறுதல் வார்த்தை எழுதவில்லை கவனித்தீர்களா?

நான் இச்செய்தியை வாசித்துவிட்டு கருத்து எழுதவில்லை செயல்பாட்டில் இறங்கினேன்(விபரம் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்)

சிலருடைய ஆர்வம் அக்கறை வெளியே தெரியாது

எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

மன்னிக்கவும் காரணிகன். கரும்பு நேசக்கரத்தோடு தனது ஆதரவுக்கரத்தை எப்போதுமே தந்து கொண்டேயிருக்கிறார். அவரது உதவியால் ஒரு பிள்ளை தனது உயர்கல்வியைக் கற்றுக்கொண்டிருக்கிறது. நான் போடுகின்ற இத்தகைய குரல்களுக்கு தனது ஆதரவினையும் ஊக்கத்தினையும் தரும் ஒரு மனிதாபிமானம் மிக்க உள்ளம். கதையைவிட தனது செயலால் தனது உதவிகளை இவ்வருடம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். தனது ஆதரவை என்றுமே எமக்குத் தந்து கொண்டிருக்கும் கரும்பு தனது மன ஆதங்கத்தையே அப்படி வெளிப்படுத்தினார். இந்த விடயங்களை கொண்டு வருவதற்காக நாம் செலவளிக்கும் நேரம் செலவு எல்லாவற்றையும் அறிந்தபடியால்தான் தனது வேதனையை அப்படி வெளிப்படுத்தியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீஙக்ள் எழுதிய வார்த்தை சாந்திக்கு மனச் சோர்வை ஏற்படுத்தலாம் அது இடையூறுதானே அதைத்தான் குறிப்பிட்டேன்

எனவே இது போன்ற விடயங்களுக்கு கருத்து எழுதும்பொழுது கவனித்து எழுதும்படி அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்

காரணிகன் ,

மே 2009 மக்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்ட நேரம் இந்தக் களத்தில் அவர்களுக்கான உதவிகளைக் கோரிய நேரம் எனக்கு இந்தக்களத்தில் உள்ள கருத்தாளர்கள் பலர் தந்த பட்டம் நிறைய.அப்போதெல்லாம் தனது ஆதரவைத் தந்த நபர் இந்தக் கரும்பு. பழைய கருத்துக்களை தூசுதட்டினால் நிச்சயம் வெறுப்புத்தான் வரும் அந்தளவுக்கு நேசக்கரம் பற்றி நேசக்கரத்தில் எனது செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் விசனங்களை பல முகங்களின் கோரங்களை என்னால் பார்க்க முடிந்தது.

திண்ணையில் அரட்டையில் கூட நேசக்கரம் பற்றியே அர்ச்சனைகள் நடந்தது. அதையும்விட தனிமடலில் வந்த தூசணம் தேவார திருவாசகங்கள் வரை நிறைய களத்திலுள்ள பல முகங்கள் தந்த தொல்லைகள் அதிகம். இன்று அவர்களெல்லாம் சத்தமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களையும் இன்று கைநீட்டி வரவேற்கிறேன். அந்த நேரத்துக்கு கோபங்களை விட்டு இன்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக எல்லோரும் கைதர வேண்டுமென்ற விருப்பம் ஆனால் வெற்றி அரிதாகத்தானிருக்கிறது.

ஆரம்பத்தில் நீங்கள் எழுதியிருப்பது போல மனச்சோர்வு ஏன் இந்தத் தேவையில்லாத வேலையென்றெல்லாம் நினைத்து இதை நிறுத்திவிடவும் யோசித்ததுண்டு. ஆனால் அப்போது செய்த சிறு உதவிகளால் பயன்பெற்றோர் தந்த ஆறுதல் இன்றுவரை நின்று பிடிக்க வைத்துள்ளது. கடைசிமூச்சு உள்ள மட்டும் அவலப்பட்ட அவர்களுக்காக இயன்றதை உங்கள் போன்ற உதவும் உள்ளங்களின் ஆதரவோடு கொண்டு செல்வேன். இனி சோர்வு இடையூறு வராதென நம்புகிறேன்.

உங்களை வெளிப்படுத்தாமல் நீங்கள் ஏற்கனவே செய்த உதவி காமினி மகாவித்தியாலயத்தின் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு உதவியது. தற்போது இந்த உறவுக்காக உங்கள் ஆதரவினை நீட்டியுள்ளீர்கள். உங்கள் ஆதரவுக்கு கோடி நன்றிகள் காரணிகன். உங்கள் போல கரும்பு விசுகு ஜீவா இசைக்கலைஞன் இளைஞன் கஜந்தி சுவி கந்தப்பு வலைஞன் சுஜி என இப்படிப் பல உறவுகளின் ஆதரவு மேலும் மேலும் அவர்களுக்கான ஆதரவுக்கரங்களாக நீண்டு கொண்டேயிருக்கிறது. நிச்சயம் இன்னும் பலர் இணைவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா இணைக்கின்ற இவ்வாறான பதிவுகளிற்கு சென்று பாருங்கள் நான் நேசக்கரத்தை ஊக்குவிக்கும் வகையில் பெரும்பாலும் ஓர் பதிவு இட்டு இருப்பேன். நேசக்கரத்திற்கு சுமார் ஆறு மாதங்களாக ஓர் சிறிய அன்பளிப்பை கொடுத்து எனது ஊக்கத்தையும், ஆதரவையும் கொடுத்து வருகின்றேன்.

உங்கள் மாதாந்த உதவியால் ஒரு உயர்தர மாணவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார். உங்கள் ஆதரவு நேசக்கரத்தின் வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கிறது கரும்பு. என்றென்றும் எங்களது நன்றிகள் உங்களுக்கு.

சாந்தி தனிமடலில் தங்களுக்கு அறிவித்த பிரச்சினை தற்பொழுதுதான் சரிசெய்யப்பட்டது

பணம் அனுப்பியுள்ளேன் கிடைத்ததும் தெரிவிக்கவும்

சாந்தி கரும்பை புண்படுத்த அதனை நான் எழுதவில்லை எனது வார்த்தை பிரயோகத்திலிருந்து

அதனை நீங்கள் புரிந்துகொள்ளலாம்

வேடிக்கை மட்டும் பார்ப்பவர்களக்கு அது உந்துதலாக அமைந்துவிடும்

எனவேதான் அதனை குறிப்பிட்டேன்

கரும்பு நேசக்கரத்திற்கு தொடர்ந்து உதவி செய்வதை நான் அறிவேன்

தகவல்களிற்கு நன்றி சாந்தி அக்கா. வசதிகிடைக்கும்போது தொடர்ந்து என்னால் முடிந்த ஆதரவை தருகின்றேன். காரணிகன் உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது, மிக்க நன்றி. நான் உங்களுக்கு அனுப்பிய பதில்மடல் போகவில்லை, திரும்பிவந்துவிட்டது. உங்கள் தபால்பெட்டி நிரம்பியுள்ளதோ தெரியாது. செக்பண்ணி பாருங்கள். அவலப்பட்டவர்கள் மீதான உங்கள் ஆதரவுக்கரத்திற்கும் மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி தனிமடலில் தங்களுக்கு அறிவித்த பிரச்சினை தற்பொழுதுதான் சரிசெய்யப்பட்டது

பணம் அனுப்பியுள்ளேன் கிடைத்ததும் தெரிவிக்கவும்

காரணிகன்,

நீங்கள் அனுப்பி வைத்த 75€ கிடைத்தது. மிகவும் நன்றி.

சாந்தி கரும்பை புண்படுத்த அதனை நான் எழுதவில்லை எனது வார்த்தை பிரயோகத்திலிருந்து

அதனை நீங்கள் புரிந்துகொள்ளலாம்

வேடிக்கை மட்டும் பார்ப்பவர்களக்கு அது உந்துதலாக அமைந்துவிடும்

எனவேதான் அதனை குறிப்பிட்டேன்

கரும்பு நேசக்கரத்திற்கு தொடர்ந்து உதவி செய்வதை நான் அறிவேன்

உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது காரணிகன்.

வேடிக்கையாளர்கள் எப்போதும் அப்படியே தானிருப்பார்கள். அவர்களை விடுவோம். நாங்கள் தொடர்ந்து எங்கள் ஆதரவுக்கரத்தினை அவலப்பட்டவர்களுக்கு நீட்டுவோம்.

சாந்தி,

உங்களுக்கு எனது சார்பாய் அனுப்பட்ட பணத்தை இவருக்கு அனுப்புங்கள்.

Edited by r.raja

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுக்கு உதவியோர் விபரம்

காரணிகன் - 75,00€

ராஜா - 100,00€

ஜீவா - 100,00€

மொத்தம் - 275,00€இத்திரியில் உதவி கோரிய உறவுக்காக இதுவரை கிடைத்துள்ளது. அடுத்த வாரம் இந்த உதவி இவரது மருத்துவப் பொருட்கள் மற்றும் இதர சில பொருட்களும் வாங்கிக் கொடுக்கப்படும். உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு உங்கள் பிரார்த்தனை வீண்போகவில்லை. இந்த உறவுக்கு வாழ்வு முழுவதும் அவன் வாழும்வரையும் மாதாந்தம் அவனது தேவைகளுக்காக 15ஆயிரம் ரூபா தருவதற்கு முன்வந்துள்ளார் றோஷன் என்ற அன்பு உள்ளம். அந்த அன்பு உள்ளத்தின் மின்னஞ்சலில் ஒரு பகுதியை கீழே இணைக்கிறேன்.

அன்பின் சாந்தி

இந்த உறவை நான் எனது தம்பியாக ஏற்றுக்கொள்கிறேன். என் தம்பியை பராமரிக்க மாதமொன்றுக்கு தேவையான 15,000/- ரூபாவை ஒவ்வொருமாதமும் அனுப்புவேன்.

எனக்கு நீங்கள் ஒரு உத்தரவாதம் தரவேண்டும். இனி இவனைப்பராமரிப்பவர்கள் இவனோடு மிகுந்த அன்பாகவும் பாசமாகவும் சகிப்புணர்வோடும் பராமரிக்க வேண்டும்.

நீங்களும் அவனோடு அடிக்கடி தொடர்பில் இருந்து அவனுக்கு வாழவேண்டுமென்ற ஆசையை ஊட்டவேண்டும். இவனைப்பற்றி அடிக்கடி எனக்கு தெரியப்படுத்துங்கள்.

நான் பணம் தருவதால் இதைச் சொல்லவில்லை. இனிவரும் நாளில் அவன் மன ஆறுதலோடும், மகிழ்சியுடனும் இருக்கவேண்டும் என்ற துடிப்புடன் தான் கூறுகின்றேன்.

அவனிடம் கூறுங்கள் அவன் ஒற்றைக்கு இல்லையென்று. அவனுக்கு அக்கா(நீங்கள்), அண்ணா, இன்னும் அவனை அன்போடு பராமரிக்க ஏற்றுக்கொண்ட உறவுகள் என அவனைச் சுற்றி பல பேர் உண்டு என்று.

வாழ்க வளமுடன்

றோசன்

கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஒருவனை வாழ வைக்க கடவுள் போலொரு உறவு வந்திருக்கிறார். சகோதரர் றோசன் அவர்களை வணங்குகிறேன். இப்படியொரு உதவி கிடைக்குமா என்பதில் நம்பிக்கையற்றுப் போனபோது கடவுளாக வந்து இவ்வுதவியை வழங்க முன்வந்த சகோதரர் றோசன் அவர்கள் போல ஒவ்வொருவரும் முன்வந்தால் இன்னும் ஆயிரம் பேரை நிம்மதியாக வாழ வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தினூடாக ஈழத்து எம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிய காரணிகன், ஜீவா, ராஜா அண்ணா அனைவருக்கும் எனது நன்றிகள்.

என்னால் முடியவில்லை எனும் போது வேறு கருத்துக்களை எழுத முடியவில்லை.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு உங்கள் பிரார்த்தனை வீண்போகவில்லை. இந்த உறவுக்கு வாழ்வு முழுவதும் அவன் வாழும்வரையும் மாதாந்தம் அவனது தேவைகளுக்காக 15ஆயிரம் ரூபா தருவதற்கு முன்வந்துள்ளார் றோஷன் என்ற அன்பு உள்ளம். அந்த அன்பு உள்ளத்தின் மின்னஞ்சலில் ஒரு பகுதியை கீழே இணைக்கிறேன்.

கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஒருவனை வாழ வைக்க கடவுள் போலொரு உறவு வந்திருக்கிறார். சகோதரர் றோசன் அவர்களை வணங்குகிறேன். இப்படியொரு உதவி கிடைக்குமா என்பதில் நம்பிக்கையற்றுப் போனபோது கடவுளாக வந்து இவ்வுதவியை வழங்க முன்வந்த சகோதரர் றோசன் அவர்கள் போல ஒவ்வொருவரும் முன்வந்தால் இன்னும் ஆயிரம் பேரை நிம்மதியாக வாழ வைக்கலாம்.

தமிழினம் இதிலிருந்தும் மீளும்

நம்பிக்கை தருகிறார்கள் எம் இளையோர்

நன்றி ஐயா

  • 2 weeks later...

ஆயிரம் பேர் இல்லை சாந்தி அக்கா, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்கும் கைகொடுத்து அவர்கள் வாழ வழி செய்வோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேர் இல்லை சாந்தி அக்கா, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்கும் கைகொடுத்து அவர்கள் வாழ வழி செய்வோம்.

ஏராளனுக்கு ஒரு பச்சை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.