Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டிஷ் அரசின் இராஜதந்திரமும் - பிரிட்டிஸ் தமிழர்களும்

Featured Replies

ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010

தமிழர்களின் இன்றைய நிலமைக்கு பிரித்தானிய அரசின் அன்றைய நடவடிக்கைகளே காரணம் என்றும் ஆகவே பிரித்தானிய அரசிற்கு இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பங்குகொள்ள தார்மீக ரீதியான பொறுப்பு உள்ளதென்றும் அதனை தட்டிகழிக்க முடியாதென்றும் பிரிட்டிஷ் தமிழர்கள் வாதிட்டனர். தமது கருத்துக்களை அரசியல் ரீதியாக உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தம் வாக்குகளால் பேரம்பேசி பிரித்தானிய பாராளுமன்றம் வரை கொண்டுவந்தனர்.

பிரித்தானிய அரசும் கூடவே அந்தந்த உள்ளூர் எம்.பிக்களும் தம் வாக்கு வங்கிக்காகவும் கூடவே ஒரு சிலர் உண்மையாக மனிதாபிமான அடிப்படையிலும் தமிழர் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தனர், குரல்கொடுத்தனர், நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதியுச்ச பங்களிப்பாக அதனை காட்டிக்கொண்டனர்.

ஆனால் பிரித்தானிய எம்.பிக்களின் அரசியலுக்கும் ஏன் பிரித்தனிய பாராளுமன்ற அரசியலுக்கும் அரச இயந்திரத்திற்கும் இடையே பல முரண்பாடுகள், நிர்வாக வேறுபாடுகள் இருந்துகொண்டே வருவது வழமையானதொன்று.

எடுத்துக்காட்டாக வெளிவிவகார அமைச்சு அல்லது உள் நாட்டு அமைச்சு அரசியல்வாதிகள் ஏதாவது அறிக்கைவிடுவதென்றால் கூட அவர்கள் தம் கருத்தை அதற்கான திணைக்களத்திடம் கொடுத்து சரிபார்த்தே விடுவார்கள். எங்காவது நிகழ்ச்சிகளில் பேசினால் கூட அந்த பேச்சினை மறுதலித்து அல்லது மீழ் கருத்துருவாக்கம் செய்து விடும் அதிகாரம் பிரித்தானிய அரச இயந்திரத்திடம் உள்ளது.

இப்படியான ஓர் அணுகுமுறைக்கு காரணம் பிரித்தானிய அரச இயந்திரம் தனது நீண்டகால அடிப்படையிலான திட்டத்துடன் இயங்கி கொண்டிருக்கும் , அரசியல் வாதிகளின் குறுங்கால அரசியலுக்கு சிலவேளைகளில் அது இடம் கொடாது. அப்படி ஏதும் குளறுபடி செய்தால் அரசியல் வாதிகளின் விளையாட்டுக்களை பத்திரிகைகளுக்கு லீக் செய்து போட்டுடைத்துவிடும் கைங்கரியமும் நடந்தேறும் இதுதான் கடந்த அரசாங்கத்தில் ( லேபர்) சில சம்பவங்கள் நடந்தததிற்கும் காரணம்.

டேவிட் மில்லிபாண்ட் தமிழர்களை திருப்திப்படுத்த ஓர் அறிக்கைவிடுவார் ஆனால் அதனை மழுங்கடித்து அவர் இப்பிடித்தான் சொன்னார், அப்படி கருத்துப்பட சொல்லவில்லை என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலையம் ஓர் விளக்கம் கொடுக்கும் .

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு முந்தைய அரசும் சரி இப்போதைய அரசும் சரி பிரித்தானியாவில் தமிழர்களை எப்படி திருப்திப்படுத்தலாம் அதே வேளை சிங்கள அரசுடன் எப்படி உறவுகளை வைத்து வியாபாரம் செய்யலாம் என நன்றாகவே திட்டம் தீட்டி செயற்பட்டுள்ளன. செயற்படுகின்றன.

எடுத்துக்காட்டாக தொழில் கட்சி ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் பிரச்சினையில் தீவிரமாக தாம் நடந்துகொள்வதாக காட்டிக்கொண்டாலும் இலங்கைக்கு பிரித்தானியாவை சேர்ந்த 10 இற்கும் மேற்பட்ட கம்பனிகள் ஆயுதத்தை விற்பனை செய்துவந்துள்ளன. நவீன ஒட்டுக்கேட்கும் கருவிகள் மற்றும் பயிற்சிகளை வழங்கிவந்துள்ளன. ஊடகங்களை ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுமாறும் கூறிவந்துள்ளன.

இதே வேளை ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளுக்கு தடை கொண்டுவந்த வேளையிலும் ஆதரவு தெரிவித்தன. ஏன் விடுதலைப்புலிகளை தடை செய்ததும் இவர்கள் தான்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்த தாம்தான் காரணம் என பிரிட்டிஸ் தமிழர்களுக்கு பிரித்தானிய எம்.பி.க்கள் சொல்லிச்சொல்லியே வாக்குகளை கவர்ந்தார்கள். ஆனால் போர் முடிந்தபின்னர்தான் அதனை தற்காலிகமாக நிறுத்த முடிந்தது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகையினை கையாளவதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகம் என்று கூறினாலும் கூட ஏன் பிரித்தானிய அரசு இன்னமும் இலங்கை அரசுடன் வியாபாரம் செய்து கொண்டுதான் இருக்கின்றது.

வருடாந்தம் 1000 மில்லியன் டொலர் பெறுமதியான வியாபாரத்தை இலங்கை அரசுடன் செய்கின்றது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகை மூலம் பெறும் நன்மைகளிற்கு கிட்டதட்ட அண்மித்த சமமாக இலங்கை அரசு பெறுகின்றது.

300 இற்கு மேற்பட்ட பிரிட்டிஸ் கம்பனிகள் இலங்கை அரசுடன் இந்த வாணிபத்தினை செய்கின்றன.

கூடவே முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் இந்த நிறுவனங்கள் தமது முதலீடுகளை இரட்டிப்பாக்க கடந்த வருடம் இலங்கை அரசுடன் பேசி முடிவுக்கு வந்துள்ளன.

ஆகவே இலங்கை அரசாங்கம் எந்த வகையிலும் பிரிட்டிஸ் அரசின் பொருளாதார, அரசியல் அழுத்தத்திற்கு உள்ளாகவில்லை. ஆனால் பிரிட்டிஷ் தமிழர்களுக்கு பிரித்தானிய அரசு ஏதோ தமிழர்களுக்காக சற்று பாடுபட்டது போன்ற தோற்றப்பட்டினையும் உருவாக்கி வெற்றி கண்டுள்ளது.

இப்போ இறுதியாக பிரித்தானிய கம்பனி ஒன்று இலங்கை அரசாங்கத்தினை போர்குற்றசாட்டுக்களில் இருந்து விடுபட்டு, சர்வதேசத்தில் அவர்களுக்கு நற்பெயரை கொண்டுவருவதற்காக மில்லியன் கணக்கான தொகைகளுக்கு கால வரையறையற்ற ஒப்பந்தத்தினை செய்துள்ளது.

Bell Pottinger, Public Affairs and image building consulatancy என்ற கம்பனியே இந்த ஒப்பந்தத்தினை செய்துள்ளது. இதனை செய்து கொடுத்ததும் பிரித்தானியாவின் தற்போதைய அரசில் இருக்கும் ஓர் அமைச்சரே.

5th Floor, Holborn Gate, 26 Southampton Buildings, London WC2A 1QB இருக்கும் இந்த நிறுவனம் பிரித்தானியாவில் தமிழர்களின் நடவடிக்கைகளை முறியடித்து அரசியல்வாதிகளின் தமிழர்களுக்கு சாதகமான போக்கினை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் என கூறப்படுகின்றது.

இதன்படி கடந்த கோடைக்கால விடுமுறைக்கு அனைத்து பிரித்தானிய எம்பிக்களுக்கும் இலங்கைக்கு செல்வதற்கான இலவச பயண சீட்டு பொதிகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மனித உரிமை அமைப்புக்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டிவரும் என்பதனால் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இது இவ்வாறு இருக்க பிரித்தானிய பாதுகாப்பு துறை செயலர் லியாம் ஃபொக்ஸ் அவர்கள் வடக்கு கிழக்கை கட்டியெழுப்ப அவசுடன் சேர்ந்து ஓர் நிதியத்தை ஆரம்பிக்கபோவதாகவும் அதற்கு பிரித்தானிய தமிழர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்கு பிரித்தானிய தமிழர்கள் சில அடிப்படையான கேள்விகளை முன்வைத்ததுடன் முதலில் நீங்கள் வடக்கு கிழக்கு மக்களிற்கு இருக்கின்ற நிதிகளை பயன்படுத்தி வேலைத்திட்டங்களை செய்யுங்கள் பின்னர் நாம் உதவிசெய்வது பற்றி முடிவெடுப்போம் என கூறி இருந்தனர்.

அடுத்த முயற்சியாக பீரிஸ் இலண்டன் வருகின்றார். இலண்டனில் தமிழர்களின் எதிர்ப்பலைகளை குறைத்து அவர்களை உள்வாங்கி இலங்கைக்கு எப்படி உதவலாம் என திட்டம் போடுகின்றனர்.இதன் மூலம் தம்மீதான சர்வதேச அழுத்தங்களை புலம்பெயர் தமிழர்கள் மூலம் குறைக்கப்பார்க்கின்றது போலும்.

இவ்வாறு பிரிட்டிஸ் அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் செய்துவரும் செயல்களும் பிரிட்டிஷ் தமிழர்களை திருப்திப்படுத்திக்கொண்டு இலங்கைக்கு எப்படி உதவலாம் அல்லது பொருளாதார நலன்களை எப்படி பெறலாம் என்ற வகையிலேயே நடைபெறுகின்றது.

எனினும் மனித உரிமை அமைப்புக்கள், சில ஊடகங்கள், தமிழர்களின் போராட்டங்கள் ஆகியன பிரித்தானிய அரசின் இலங்கையுடனான உறவையும் தொடர்பினையும் பாதிக்கும் நிலமையும் உள்ளன ஆனால் பிரிட்டிஷ் அரசு இதனை இலாவகமாக கையாள்வார்கள் ஏனென்றால் இந்த விடயத்தில் அவர்கள் முடிசூடியவர்கள் .

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பு தலையில் முக்காடு அணிந்த ஒரு இஸ்லாமிய பெண் குறித்த அனுபவம் நினைவில் வருகின்றது. அவர் ஈராக் அல்லது ஆப்கானிஸ்த்தானில் இருந்து வந்த அகதி மாணவியாக இருந்தார். வெள்ளை இனத்தவர்கள் பெரும்பாலனவர்களுக்கு முக்காடு அணிந்தவர்கள் குறித்து தனிப்பட்ட ஒரு விசனப்பார்வையும் அணுகுமுறையும் இருக்கின்றது. இவ்வாறான அடிப்படையில் விசமத்தனமாக அவரிடம் இந்த நாட்டுக்கு வருவதற்கு ஏன் விரும்பினீர்கள் என்று வெளிப்படையாகவும் ஏன் வந்தாய் என்ற அர்த்தம் படவும் கேட்டபோது அவர் உங்களால்தான் நான் இங்கு வந்தேன். இது உங்களது விருப்பம் தவிர என்னுடையது அல்ல. நீங்கள் அங்கு வந்தீர்கள் நாங்கள் இங்குவரவேண்டியிருந்தது. தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவர் மிகக் கோபத்துடன் அளித்த விளக்கம் சக மாணவர்களை வாயடைத்து சிந்திக்க வைத்தது. இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் அனுபவங்களாக இருக்கின்றது. தங்களது புலப்பெயர்வு குறித்த நியாயங்கள் பேசக் கூடியவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

எமது ஒவ்வொரு உயர்ப்பறிப்பிலும் அவலத்திலும் அழிவிலும் புலப்பெயர்விலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பங்கிருக்கின்றது என்பதை எம்மால் தயிரியமாக சுட்டிக்காட்ட முடிவதில்லை. நடந்த போரிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கும் நாம் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளின் பங்களிப்பும் ஆயுத பண உதவியும் குறித்து எம்மால் சுட்டிக்காட்ட முடிவதில்லை. எமது புலப்பெயர்விற்கான எமது விருப்பமும் அடிமை உணர்வும் உண்மைகளை மறைக்கும் தன்மையை கொடுத்துள்ளது. புலப்பெயர்வுக்கு காரணங்கள் இருந்தபோதும் அது குறித்த நியாயங்களை பேச எமது அடிமைப்புத்தி இடமளிப்பதில்லை. புலப்பெயர்வுக்கும் அகதி அந்தஸ்த்துக்கும் நாம் இதுவரை கூறிக்கொண்டிருக்கும் காரணங்கள் சிங்கள அரசும் புலிகளும் என்பதே. உண்மையில் இவற்றைக் கடந்து நாம் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளே மூல காரணமாக இருக்கின்றது. இவற்றைப் பற்றியே நாம் அதிகம் பேசவேண்டும்.

அண்மையில் கப்பல் அகதிகள் குறித்து எத்தனை விசனங்கள் பேசப்படுகின்றது. இதற்குப் பதில் அளிப்பதில் நாம் தோற்'றுப்போவதற்கு காரணம் எமது அடிமைப்புத்தி. இந்தப்போரில் உங்களின் பங்கும் இருக்கின்றது. எமது அகதி வருகைக்கு உங்களது தலையீடும் பண உதவியும் காரணமாகின்றது. இவற்றை எம்மால் சொல்ல முடிவதில்லை. புலப்பெயர்வுக்கான அடிப்படைக் காரணங்களையும் எமது அழிவுகளில் இந் நாடுகளின் பங்களிப்புகள் குறித்தும் பேசுவதும் அவற்றை வெளிப்படுத்தும் வழிமுறைகளை உருவாக்குவதும் மிக அவசியம்.

  • 2 weeks later...

அண்மையில் பிரித்தானிய வந்த பீரிஸ் அவர்கள் பல செய்திகளோடு வந்தார்.

1. புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்குவது

2. புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி என்ற பெயரில் பணம் கேட்பது

3. பிரித்தானியா அரசிடம் மீள் குடியேற்றம் வீதம் முடிந்துவிட்டது என சொல்லி தந்த பணத்துக்கு கணக்கு காட்டுவது

4. தமது நாட்டுக்கு எதிரான அபகீர்த்திகளை முறியடிப்பது.

மேலும் மகிந்தருக்கு மார்கழி மாதம் பெருமைவாய்ந்த "ஒக்ஸ்போட் யூனியலில்" பேச சந்தர்ப்பம் எடுப்பது. இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக

கொழும்பு வார இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. பேசினால் அங்கு தான் மகிந்தர் பேசுவார் என அரசு சொல்லுகின்றது.

External Affairs Ministry officials say, Peiris' efforts to secure a meeting for President Rajapaksa with Premier Cameron did not materialise. This has been one of the main reasons for the British visit by Peiris. President Rajapaksa is to travel to Britain in December to address the Oxford Union. High Commissioner in London Nihal Jayasinghe insisted yesterday that the President will be addressing the prestigious Oxford (Debating) Union and not any of the lesser associations at Oxford University that have booked the union hall.

http://www.sundaytimes.lk/101031/Columns/political.html

சில வருடங்களுக்கு முன்பு தலையில் முக்காடு அணிந்த ஒரு இஸ்லாமிய பெண் குறித்த அனுபவம் நினைவில் வருகின்றது. அவர் ஈராக் அல்லது ஆப்கானிஸ்த்தானில் இருந்து வந்த அகதி மாணவியாக இருந்தார். வெள்ளை இனத்தவர்கள் பெரும்பாலனவர்களுக்கு முக்காடு அணிந்தவர்கள் குறித்து தனிப்பட்ட ஒரு விசனப்பார்வையும் அணுகுமுறையும் இருக்கின்றது. இவ்வாறான அடிப்படையில் விசமத்தனமாக அவரிடம் இந்த நாட்டுக்கு வருவதற்கு ஏன் விரும்பினீர்கள் என்று வெளிப்படையாகவும் ஏன் வந்தாய் என்ற அர்த்தம் படவும் கேட்டபோது அவர் உங்களால்தான் நான் இங்கு வந்தேன். இது உங்களது விருப்பம் தவிர என்னுடையது அல்ல. நீங்கள் அங்கு வந்தீர்கள் நாங்கள் இங்குவரவேண்டியிருந்தது. தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவர் மிகக் கோபத்துடன் அளித்த விளக்கம் சக மாணவர்களை வாயடைத்து சிந்திக்க வைத்தது. இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் அனுபவங்களாக இருக்கின்றது. தங்களது புலப்பெயர்வு குறித்த நியாயங்கள் பேசக் கூடியவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

எமது ஒவ்வொரு உயர்ப்பறிப்பிலும் அவலத்திலும் அழிவிலும் புலப்பெயர்விலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பங்கிருக்கின்றது என்பதை எம்மால் தயிரியமாக சுட்டிக்காட்ட முடிவதில்லை. நடந்த போரிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கும் நாம் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளின் பங்களிப்பும் ஆயுத பண உதவியும் குறித்து எம்மால் சுட்டிக்காட்ட முடிவதில்லை. எமது புலப்பெயர்விற்கான எமது விருப்பமும் அடிமை உணர்வும் உண்மைகளை மறைக்கும் தன்மையை கொடுத்துள்ளது. புலப்பெயர்வுக்கு காரணங்கள் இருந்தபோதும் அது குறித்த நியாயங்களை பேச எமது அடிமைப்புத்தி இடமளிப்பதில்லை. புலப்பெயர்வுக்கும் அகதி அந்தஸ்த்துக்கும் நாம் இதுவரை கூறிக்கொண்டிருக்கும் காரணங்கள் சிங்கள அரசும் புலிகளும் என்பதே. உண்மையில் இவற்றைக் கடந்து நாம் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளே மூல காரணமாக இருக்கின்றது. இவற்றைப் பற்றியே நாம் அதிகம் பேசவேண்டும்.

அண்மையில் கப்பல் அகதிகள் குறித்து எத்தனை விசனங்கள் பேசப்படுகின்றது. இதற்குப் பதில் அளிப்பதில் நாம் தோற்'றுப்போவதற்கு காரணம் எமது அடிமைப்புத்தி. இந்தப்போரில் உங்களின் பங்கும் இருக்கின்றது. எமது அகதி வருகைக்கு உங்களது தலையீடும் பண உதவியும் காரணமாகின்றது. இவற்றை எம்மால் சொல்ல முடிவதில்லை. புலப்பெயர்வுக்கான அடிப்படைக் காரணங்களையும் எமது அழிவுகளில் இந் நாடுகளின் பங்களிப்புகள் குறித்தும் பேசுவதும் அவற்றை வெளிப்படுத்தும் வழிமுறைகளை உருவாக்குவதும் மிக அவசியம்.

உண்மை. இதனைப்பற்றி எங்கள் படித்த சட்டத்தரணிகளும் வாயே திறப்பதில்லை. பயமாக இருக்கலாம்.

எனது அனுபவம்.

குடிவரவு திணைக்களம் என்னை விசாரிக்கும் பொழுது ஏன் கடவுச்சீட்டு இல்லாமல் இங்கு வந்தாய் என்று கேட்டார்கள்.

அதற்கு, உங்கள் முன்னோர்கள் எங்கள் நாட்டைக் கைப்பற்ற வரும்போது கடவுச்சீட்டு கொண்டுவரவில்லை அதே போல்தான் நானும் வந்தேன் என பதிலளித்தேன். அதன் பிரதிபலனோ என்னவோ 5 வருடங்கள் விசா இல்லாமல் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டி இருந்தது.

நல்ல பதில் தப்பிலி..! :D

ஆனால் உங்களை அஞ்சுவருசம் இழுத்தடிச்சுப் போட்டாங்கள்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.