Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா

Featured Replies

அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்:

  • அமெரிக்கா,
  • சீனா,
  • ஜப்பான்.

பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்? அதன்மூலம் பயன் பெறமுடியும்?

அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

சீனா, இந்தியா

சீனா, இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளாது. அதன் அரசியல் கொள்கையில் இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கு வழி ஏற்படாதவண்ணம் திபெத், அருணாசலப் பிரதேசம், அக்சாய் சின், பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் பற்றிய சீனாவின் கருத்து போன்ற பல விஷயங்கள் உள்ளன. மேலும், சீனா, இந்தியாவை தன்னுடைய போட்டியாளராகவே பார்க்கும். கம்யூனிச அல்லது ஒற்றை ஆட்சி சீனா, ஜனநாயக இந்தியாவைத் தன் நெருக்கமான அரசியல் உறவாகப் பார்க்க எந்த வாய்ப்பும் இல்லை.

அமெரிக்கா - இந்தியா

அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவுகொள்ள வாய்ப்புகள் உள்ளன; ஆனால் இது நடக்காது என்று தோன்றுகிறது.

அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா சீனாவை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திப்பதிலேயே காலத்தைச் செலுத்தும்.

ஆஃப்கனிஸ்தானில் கழுத்துவரை சிக்கியுள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தேவை. அதனாலேயே அடுத்த பத்தாண்டுகளுக்காவது இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு ஏற்படாமல் எக்கச்சக்கமான சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்படும். இரு நாடுகளுக்கும் கலாசாரரீதியில் உறவுகள் குறைவு. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் வசித்தாலும்கூட, வரும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படப்போகும் காரணத்தால் ஏழை அமெரிக்கர்கள் இனவெறியுடன் நடந்துகொள்ளக் காரணங்கள் நிறைய உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் வளமான இந்தியர்கள் இந்த ஏழைகளின் இன்வெறிக்கு ஆளாக நேரிடும் அபாயங்களும் உள்ளன. இந்திய அரசு அமெரிக்க உறவை விரும்பினாலும், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிஸ்டுகள், சுதேச இந்துத்துவர்கள், பொதுவான அறிவுஜீவிகள் என அனைவருமே அமெரிக்காவை வெறுப்பவர்கள்! அமெரிக்காவுடனான எந்தவித நல்லுறவுக்கும் பொதுமக்களிடம் ஆதரவு ஏற்படாவண்ணம் இவர்கள் நடந்துகொள்வார்கள்.

ஜப்பான் - இந்தியா

ஆனால், இந்தவிதமான பிரச்னைகள் ஏதும் ஜப்பான் உறவில் இல்லை. ஜப்பான் 1950-கள், 1960-களில் அணுகுண்டுத் தாக்குதல், இரண்டாம் உலகப்போர் தோல்வி ஆகியவற்றிலிருந்து மீண்டு, 1970-களிலும் 1980-களிலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது.

எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், பிரிசிஷன் மெஷினிங் போன்ற பலதுறைகளில் உலகின் முதலாவது நாடாகத் திகழ்ந்தது.

விளைவாக ஏற்பட்ட வர்த்தக மேன் சமநிலை ( trade surplus) அதன் விளைவாக கையில் எக்கச்சக்கமான பணம். இதன் காரணமாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் கடந்த இருபது ஆண்டுகளில் ஜப்பானின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கியுள்ளது. பண வீக்கத்துக்கு எதிரான டிப்லேச்சன் (deflation) ஒரு பெரிய பிரச்னை. வீடு - நில - கட்டிட சந்தை (real estate) முதல் பங்குச்சந்தை வரை கடுமையான வீழ்ச்சி. வயதானோர் எண்ணிக்கை கடுமையாக அதிகமாதல். இதனால் ஏற்படப்போகும் ஓய்வூதிய பிரச்னைகள். வருங்கால ஜப்பானியத் தலைமுறை நம்பிக்கை இழத்தல்.

இவற்றுடன், ஜப்பானின் ஜனநாயகத்தில் பொதிந்துள்ள அரசியல் குழப்பம் காரணம். ஜப்பானின் இன்றைய பிரதமர் யார் என்று கேட்டால் பொதுவாகவே நீங்கள் தடுமாறுவீர்கள். அடுத்த மூன்று மாதத்தில் அவரே பிரதமராக இருப்பாரா என்பதும் தெரியாது.

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான சச்சரவுகள் எழப்போகின்றன. இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு. ஜப்பான் சீனாவைக் அடிமையாக்கி சீன மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளது. நடந்தது 20-ம் நூற்றாண்டில். இதனைச் சீனர்கள் மறக்கப்போவதில்லை. ஜப்பான் தன் மூலப் பொருள்களுக்கு சீனாவையோ ஆஸ்திரேலியாவையோதான் பெருமளவு நம்பியிருக்கவேண்டும். சீனா இப்போதே தன் கச்சாப்பொருள் ஏற்றுமதியைக் குறைக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டது. மறுபக்கம் ஆஸ்திரேலியா விரைவாக சீனாவின் சுரங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.

அமெரிக்கா, ஜப்பானுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. அமெரிக்கா தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்வதிலேயே நேரத்தை செலவிடவேண்டும்.

இந்த நிலையில் ஜப்பான் இயல்பாகப் பார்க்கவேண்டிய நாடு இந்தியா. ஜப்பானிடம் இப்போதும் நிறையப் பணம் உள்ளது. அதனை மேலும் மேலும் அவர்கள் நாட்டிலேயே முதலீடு செய்வதில் பிரயோஜனம் இல்லை. அதை அவர்கள் இயல்பாக முதலீடு செய்யவேண்டியது இந்தியாவில்தான். அதையும் மிக அழகாக, தங்களுக்கும் இந்தியாவுக்கும் லாபம் வரும் வகையில் செய்யலாம்.

உதாரணமாக இந்தியாவில் படுவேக ரயில் போக்குவரத்து வலை ஒன்றை அமைக்கும் ஒப்பந்தத்தை ஜப்பான் செய்துகொள்ளலாம். அதற்கு சுமார் 200-300 பில்லியன் டாலர் செலவாகும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது ஒன்றும் கஷ்டமான தொகை அல்ல ஜப்பானுக்கு. அந்த முழுத்தொகையை ஜப்பான் இந்தியாவுக்குக் கடனாக வழங்கும். அந்த படுவேக ரயில் சேவையை அமைத்துத்தர இந்தியா முழுவதும் ஜப்பானிய கட்டுமான நிறுவனங்களை மட்டுமே நாடவேண்டும் என்று கடன் ஒப்பந்தத்தின் இரத்தாக ஆக்கலாம். இதனால் ஜப்பானிய நிறுவனங்களுக்கு வளமான பணம் வருமானமாகப் போய்ச் சேரும். இந்தியாவுக்கு அதி அற்புதமான அதிவேக ரயில் சேவை கிடைக்கும். ஜப்பானிய நிறுவனங்கள் அமைக்கப்போகின்றன என்பதால் தரத்துக்குப் பிரச்னை இருக்காது. அதனை நிர்மாணிப்பதில் இந்திய நிறுவனங்கள் சப்-காண்டிராக்டர்களாக இருப்பதால் இந்தியர்களுக்கு இந்தத் துறையில் நல்ல நிபுணத்துவம் கிடைக்கும். இதனால் கிடைக்கும் அதிக வருவாயைக் கொண்டே இந்திய அரசு கடனைக் கட்டிவிட முடியும். இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

இந்திய, ஜப்பானிய உறவுக்குள் பிரச்னை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஜனநாயகரீதியாக, மதரீதியாக, ஏன் மொழிரீதியாகக்கூட. இந்தியர்கள் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வது கஷ்டமான விஷயம் கிடையாது. (மேலும் பதிலாக நாம் அவர்களுக்கு ரஜினிகாந்த் படங்களையும் மீனாவின் கண்களையும் கொடுத்துவிடலாம்! இதுமட்டும் பகிடி :lol: !)

இப்போது மன்மோகன் சிங் ஜப்பான் பிரதமருடன் கைகுலுக்கிக்கொண்டிருக்கிறார். இங்கே இந்தியாவிலோ, நாம் அடுத்து ஒபாமா இரண்டு நாள்கள் இங்கு வருவதைப் பற்றி அதிசயித்துக்கொண்டிருக்கிறோம். ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உபயோகம் இல்லை. ஆனால் ஜப்பான் மனது வைத்தால், இந்தியா தன் தரப்பை அழகாக எடுத்துவைத்தால், இருவருக்குமே மிகப் பெரிய லாபம் காத்துள்ளது.

நன்கு வளர்ந்த இந்தியாவால், ஜப்பானுக்கு அரசியல்ரீதியிலும் லாபம் உண்டு. அப்போது சீனா வேறுவழியின்றி இந்தியாமீது அதிக கவனம் செலுத்தவேண்டிவரும். அதனால் ஜப்பான்மீது கொஞ்சம் கவனத்தை எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இருபது ,முப்பது ஆண்டுகளில் சிறிலங்கா, ஈழத்தமிழர்களின் நிலை என்ன?

30 வருடங்களின் பின்பு இந்தியா இந்தியாவாக இருக்குமா?அல்லது சோவியத் போல உடைந்து போகுமா? :lol:

அடுத்த இருபது ,முப்பது ஆண்டுகளில் சிறிலங்கா, ஈழத்தமிழர்களின் நிலை என்ன?

சிறிலன்காவில் ஈழத்தமிழர்களா ? யார் அவர்கள் ?எங்கு வாழ்ந்தார்கள்? என்ற நிலைதான்

  • தொடங்கியவர்

அடுத்த இருபது ,முப்பது ஆண்டுகளில் சிறிலங்கா, ஈழத்தமிழர்களின் நிலை என்ன?

ஈழத்தமிழர்களின் நிலை இந்தியாவின் நிலையில் மிகவும் தங்கியுள்ளது. அதனால் அதன் பொருளாதார, பூகோள மற்றும் அரசியல் நிலைகளில் நாம் தொடர்ந்து அவதானிப்பது முக்கியமாகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கட்டுரையில் பல முக்கியமான கருத்துகள் சொல்லபட்டுள்ளது. இந்தியாவின் மரமண்டைக்கு ஏறாது. இந்தியா தமது நாட்டு ஒருமைகாக ஈழத்தமிழரை அழித்தொழிக்கவும் தயங்க மாட்டாது.அதனால் தான் இன்றும் ஸ்ரீ லங்காவிடம் நன்றியுள்ள நாய் மாதிரி வாலாட்டி கொண்டு இருக்கிறது.

இந்தியா தனக்கு வந்துள்ள ஆபத்தை இன்னும் உணராமல் சிங்களவனை அரவனைபதிலேயே காலம் கடத்துகிறது.

சொந்தப் பணத்தில் கிடு கிடு என்று சீனா வளர்கின்றது. ஜப்பானிடம் கடன் வேண்டிப் பிழைத்துக்கொள்ளலாம் என்று இந்தியா நினைக்கின்றது.

நொந்து போய் காசு அச்சடிப்பதில் இறங்கவுள்ள அமெரிக்காவால் இனிப் பிரியோசனமில்லை என்று சிங்கு திருவோட்டை எடுத்துக்கொண்டு ஜப்பானுக்கு ஒடியிருக்கிறார். ( சீன அச்சுறுத்தலை சாட்டி அமெரிக்காவிடம் ஏதாவது வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மனப்பால் குடித்தார்கள். அதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.)

சீனாவை அமெரிக்கா என்றாவது ஒரு நாள் அழுத்திவிடும், நாம் அமுக்கமாக இருந்து தப்பிக்கப் பார்ப்போம் என்பது பல இந்தியர்களின் கனவு. கட்டுரையிலும் இது தெரிகிறது :lol: .

இது கனவாகவே முடியும். ஒரு கட்டத்தில் அமெரிக்கா, இது உங்கள் பிரச்சனை என்று சினாவைச் சுற்றியுள்ள நாடுகளிடம் விட்டுவிட்டு (சீன அச்சுறுத்தலை) தான் நைஸாக ஒதுங்கி விடும். (ஈராக்கில் நடக்க இருப்பதைப் போல)

இன்று உள்ள உலக பொருளாதாரப் பிரச்சனையிலும் எதற்கு சீனா, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையை உயிர்ப்பாக வைத்திருக்கின்றது ? ( இந்தியா இதை எவ்வளவோ அடக்கி வாசிக்க முயன்றபோதும் ) :lol:

http://netindian.in/news/2010/10/25/0008440/pm-calls-greater-japanese-investment-indian-industry-infrastructure

http://www.theaustralian.com.au/business/markets/japanese-investment-in-australia-slips-under-the-radar/story-e6frg926-1225851112314

நல்ல கருத்துக்கள்.

எது எப்படியானாலும் வரும் பொருளாதார வளர்ச்சியில்தான் உலக அரசியலும் நிர்ணயிக்கப்படுகின்றது. சீனாவும் ( அதனுடன் பாகிஸ்தான்... ) இந்தியாவும் எதிரிகளாகவே இருக்கபோகின்ரர்கள். சீனா இந்தியாவை விட வேகமாக வளர்ந்தாலும் உள்நாட்டு நுகர்வோர் சக்தி இந்தியாவில் கூடுதலாய் உள்ளது. ஆனால் சனநாயகம் சரியாக செயல்பட தவறும் சந்தர்ப்பத்தில் அது அரசியல் நெருக்கடிகளை கொடுக்கும். அதுவே இந்திய ஒற்றுமையை இல்லாமல் செய்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய தேவை சிறீலங்காவின் அதிபராக மகிந்தவும் அதன் மிக மிக நட்புநாடாக சீனாவும் தொடர்வதே வரவேற்கக்கூடியது. என்ன பிரச்சனையெண்டால் நந்திக்கடலில் சீனாக்காரன் தனது நாட்டுமக்களுக்காக வளர்கப்போகும் மீனை தமிழர்கள் தின்னப்பழகவேண்டும். அதுசரி எலகின் எங்காவது மூலையில் கவனிக்காமற் கிடக்கும் நிலப்பரப்பை சல்லிசு விலைக்கு வாங்கி நாங்கள் எமக்கான தெசத்தைக் கட்டியமைக்கலாமா? இப்படியொரு யோசனை தற்போதைய இஸ்ரேலிய தேசம் தனது இலக்கை அடையமுன்னர், ஆபிரிக்க நாடொன்றின் ஒரு பகுதியில் அவர்களைக் குடியமர்த்தி அவர்களுக்கான இறைமையை அங்கீகரிக்கலாமெனும் யோசனை முன்வைக்கப்பட்டது.

சபேசனும் இதே கருத்தை வேறு ஒரு தலைப்பில் முன்பு எழுதியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.