Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த செய்த போர்க்குற்றம் என்ன பிரிட்டனிடம் இலங்கை தூதரகம் விளக்கம் கேட்பு

Featured Replies

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 9, 2010

தமக்கெதிரான போர்குற்றச் சாட்டுக்கள் எவை என்பதை தெளிவு படுத்துமாறு இலங்கை பிரிட்டனைக் கேட்டுள்ளது.இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் இதுதொடர்பான கோரிக்கையை பிரிட்டன் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இலங்கை அரசு எந்தவகை யான போர்க் குற்றங்களை இழைத்தது, அதில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எவ்வகையான தவறு செய்துள்ளார் என்ற விடயங்களைத் தெளிவுபடுத்துமாறு பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் திகால ஜெயசிங்க கேட்டுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் வைத்துக் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பிரிட்டனுக்கான பயணத்தை அவர் ஒத்தி வைத்தார்.என செய்திகள் வெளியான பின்னர் இலங்கைத் தூதரகத்தின் கோரிக்கை பிரிட்டன் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Eelanatham.Net

"தமக்கெதிரான போர்குற்றச் சாட்டுக்கள் எவை என்பதை தெளிவு படுத்துமாறு இலங்கை பிரிட்டனைக் கேட்டுள்ளது."

சிறையிலுள்ள பொன்சேகாவை வெளியில் விட்டால் அவர் தெளிவாக சொல்லுவார்.

தொடர்புபட்ட செய்தி

லண்டன் செல்வதற்கு அஞ்சுகிறாரா ஜனாதிபதி?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77389

Edited by akootha

... புலத்தில் செய்யக்கூடிய முக்கிய பணி, எமக்கெதிராக 60வருடங்களுக்கு மேல் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதே!! ... இதனை சரிவர செய்ய வேண்டும்!!! ... இணைந்து செய்ய வேண்டும்!!!! ... பல அமைப்புகள் மேற்குலகில் எம்மத்தியில் இன்று மனித உரிமைகள் தொடர்பாக இருக்கின்றன ... ஆனால் அவர்களிடையே தொடர்பாடல்கள் அற்றதாகவே உள்ளனவாம்!! ...

60 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இனவழிப்புகளில் ஈடுபட்ட எவனையாவது சர்வதேச நீதிமன்றம் முன் எம்மால் ஏற்ற முடிந்ததா????? ... வேதனை!!!!!!

Edited by Nellaiyan

"60 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இனவழிப்புகளில் ஈடுபட்ட எவனையாவது சர்வதேச நீதிமன்றம் முன் எம்மால் ஏற்ற முடிந்ததா????? ... வேதனை!!!!!!"

1. 2009/5 வரைக்கும் இந்த தேவை முக்கிய இடம் பெறவில்லை

2.இதற்கு சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் பின்னால் ஆதரவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.

3. தனி மனிதராக ( இராஜதந்திர உரிமைகள் இல்லாத இடத்தில்) வரும்பொழுது தான் இவை சாத்தியமாகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"3. தனி மனிதராக ( இராஜதந்திர உரிமைகள் இல்லாத இடத்தில்) வரும்பொழுது தான் இவை சாத்தியமாகும் "

அப்படியானால், சந்திரிகாவுக்கு எதிராக இன்னும் வழக்கு தொடுக்கவில்லையே? ஏன் ?

"அப்படியானால், சந்திரிகாவுக்கு எதிராக இன்னும் வழக்கு தொடுக்கவில்லையே? ஏன் ?"

இவர் மீதும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. நாம் முயற்சிக்கவில்லை என்பதே உண்மை.

http://www.state-terrorism.com/cbk_war-crimes.htm

http://www.tamilcanadian.com/article/3167

http://69.94.47.118/page.php?cat=212&id=3562

உடனடித்தேவை இந்த மகிந்தாரம் கம்பெனியை நிறுத்துவது, அதன் மூலம் ஈழ மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க முயலுவது போல தெரிகின்றது.

இன்று உலகம் முழுக்க யூதரை அழித்த நாசி படையை சேர்ந்தவரை அவர்கள் விடுவதில்லை. எவர் எத்தனை வயது என்றாலும், என்ன பெயரில் வாழ்ந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் அவரை சட்டத்துக்கு முன்னால் கொண்டுவருகிறார்கள்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

JH1021_01_46799_435.jpg

ராஜபக்சே வினை பயமுறுத்துவதை போல ஈழ் தோழர்கள் IPKF வின்ட கோரமுகத்தினை யும் காட்ட தகுந்த ஆதாராங்களோடு முயல வேண்டும்... கிந்திய ஆதிக்க போக்கினை மட்டுமடுத்தலாம் என்பதைவிட தலையிட கொள்கையில் வைத்திருக்கலாம் :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நண்பர்களே,

இந்த மேற்குலகின் மனிதாபிமானம் இருக்கிறதே, அது மிகவும் விசித்திரமானது. தமக்குத்தேவையென்றால் ஒரு சிறு காயம் பட்டாலும் உடனேயே "போர்க்குற்றம், இனவழிப்பு" என்று ஆர்ப்பரிப்பார்கள். ஆனால் தமக்கு ஏதும் நண்மை பயக்கப்போவதில்லை என்றால் ஆயிரக்கணக்கில் மக்கள் அழிக்கப்பட்டாலும் கண்களை இறுக மூடிக்கொண்டிருப்பர்.

உதாரணத்துக்கு சதாம் அமெரிக்காவின் கண்களில் எதிரியாகத் தெரியும்வரை அவன் குர்திஸ் மக்களுக்கஎதிராக இழைத்த அனைத்து அட்டூழியங்களையும் அமெரிக்கா பார்த்து ரசித்துக்கொண்டுதானிருந்தது.

அதேபோல ரெண்டாம் உலக யுத்தத்தில் நேச நாட்டுப்படைகள்ளல் பரந்தளவில் மேற்கொல்லப்பட்ட போர்க்குற்றங்கள் இதுவரை விசாரிக்கப்படவுமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. 1944 - 45 களில் நேச நாட்டுப்படைகளிடம் சரணடைந்த ஜேர்மன் நாட்டுப் படைவீரர்கள், மற்றும் அரச அதிகாரிகள் லட்சக்கணக்கான ஜேர்மணியர்கள் சரணடைந்த கணமே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். "கைதிகள் எவரையும் பிடிப்பதை நாம் விரும்பவில்லை, அது நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதால் எல்லாரையும் சுட்டுக்கொன்றோம்" என்று நேச நாட்டுப் படைகளை வழிநடத்திய ராணுவ அதிகாரிகள் நுரெம்பேக் போர்க்குற்ற நீதிமன்றில் சொல்லியிருந்தும் அவர்களுக்கெதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்னொரு உதாரணம், அண்மையில் ஒரு அவுஸ்த்திரேலிய மனிதவுரிமை அமைப்பு இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பங் பங் ஜுடியோனோவுக்கெதிராக போர்க்குற்ற வழக்கொண்ரை தாக்கல் செய்திருந்தது. அதாவது, இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட நியூகினி தீவுகளில் இரு உள்ளூர் வாசிகளை இந்தோனேசிய ராணுவம் பின்னால் விலங்கிட்டு கண்களைக் கட்டி காலால் உதைந்ததாம். இதை ஒரு ராணுவ வீரன் தனது கைய்யடக்கத் தொலைபேசியில் வீடியோப்படமெடுக்க, அந்த வீடியோவும் ஒருவாறு இந்த அவுஸ்த்திரேலிய மனிதவுரிமை அமைப்பை வந்து சேர்ந்தது. எனது ஆதங்கம் என்னவென்றால், ரென்டுபேர் காலால் உதைபட்டது போர்க்குற்றமென்றால், 2009 இல் ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் கொத்துகொத்தாக நச்சாயுதங்கள் வீசிக் கொல்லப்பட்டார்களே?? அது போர்க்குற்றம் இல்லையா?? அதுபற்றி ஏன் யாரும் வாய்திறக்கவில்லை?? அந்த நாட்டு கிரிக்கெட் அணியை வரவழைத்து விளையாடி மகிழ்கிறீர்களே?? அதெப்படி??

ஆக, உங்களுக்குத் தேவையென்றால் சிறு துரும்பும் பெரு விருட்சம், தேவையற்றதென்றால் பெருவிருட்சமும் வெறும் மயிர்? அப்படித்தானே??

இந்த ஐ. நா ஆகட்டும் அல்லது வேறெந்த மனிதவுரிமை அமைப்பாகட்டும், அவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லாமல் எப்போதாவது சுதந்திரமாக இயங்கி இருக்கின்றனவா?? ஆகவே இந்த அமைப்புகளின் நடவடிக்கையென்பது அமஎரிக்காவின் விருப்பு வெறுப்புகளில் தான் தங்கியிருக்கின்றது, அப்படித்தானே?? அப்படியானால் அமெரிக்கா எப்போது எமக்கு நடந்ததை அநியாயம் என்று ஏற்றுக்கொள்ளப்போகிறது ?

நடந்த அநியாயங்லள் அமெரிக்காவுக்குத் தெரியாதா என்ன?? எல்லாவற்ரையும் பார்த்துக்கொண்டுதானே இருந்தது ?? ஏதாவது செய்ததா?? இனியும் செய்யும் என்று எப்படி நம்புவது ?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு விக்கிலீக் தலையிடி இருக்கும் பொழுது தமிழர் பிரச்சனையில் தலையிஐமா என்பது கேள்விக்குறிததான்??????????????????????????????????????????

"3. தனி மனிதராக ( இராஜதந்திர உரிமைகள் இல்லாத இடத்தில்) வரும்பொழுது தான் இவை சாத்தியமாகும் "

இல்லை, சில வருடங்களுக்கு முன்னுக்கு பிரித்தானியாவிற்கு மருத்துவ தேவைகளுக்காக வந்த சிலியின் முன்னால் இராணுவ அதிபர் இங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார், பின் இவரை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கையை ஸ்பெயின் கைவிட்டதனாலேயே, தப்ப முடிந்தது ... மற்றும் அவரது வயது, ஆயன்டீனா யுத்தத்தில் பிரிடானுக்கு செய்த உதவிகளும் தப்ப இன்னொரு காரணங்களாக இருந்திருக்கலாம் ...

எம்மிடையே சரியான/ஒருங்கமைக்கப்பட்ட முயர்சிகளோ/அமைப்புகளோ இல்லாததே இப்படியான வழக்குகள் தாக்கல் செய்ய முடியாமைக்கு முக்கிய காரணம்!!! ... இதற்கு பல மில்லியன்கள் பணமும் தேவை ... அதுகும் முக்கிய பிரட்சனையே!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.