Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழியில் மீள்குடியேறச் சென்ற பூர்வீகதமிழ்க் குடும்பங்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்

Featured Replies

நாவற்குழியில் மீள்குடியேறச் சென்ற பூர்வீகதமிழ்க் குடும்பங்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்

11 November 10 06:28 am (BST)

சர்ச்சைக்குரிய நாவற்குழிப் பகுதியில் குடியேறச் சென்ற தமிழ்க் குடும்பங்கள் இன்று படையினர் காற்துறையினர் மற்றும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றவாசிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 1995 வரையான காலப்பகுதியில் இங்கு குடியிருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள் அருகிலிருந்த உறவினர்களின் வீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். குறித்த அரச காணி ஏற்கனவே அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் அவர்கள் ஏற்கனவே குடியமர முற்பட்ட போதும் அப்பகுதி கிராம அதிகாரி அதற்கான அனுமதியை மறுத்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்களக் குடியேற்றவாசிகள் குடியேற்றப்பட்டமை தொடர்பில் அச்சம் கொண்டிருந்த அவர்கள் தமது காணிகள் பறி போவதாக எண்ணி இன்று காலை அங்கு குடியேறுவதற்குத் தயாரான நிலையில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பொருட்கள் சகிதம் அங்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கு ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த காவற்துறையினர் அவர்களை விரட்டியடித்துள்ளனர்.

அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள படைமுகாமின் முன்னால் குவிந்து நின்றனர். படையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழங்கி உறுதிமொழிகளை அடுத்து அவர்கள் ஏற்கவே அடைக்கலம் புகுந்திருந்த உறவினர் வீடுகளுக்கு திரும்பியிருக்கின்றனர். இதனிடையே மேலும் பல குடும்பங்கள் இக்குடியேற்றத்திட்டத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் காணிகளை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை வழியான நீண்ட பிரதேசத்தில் 70 குடும்பங்கள் வரை அவசர அவசரமாக மீள்டியேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். நாவற்குழியிலுள்ள அப்பன்குடியிருப்பு பகுதியில் தமிழ்மக்கள் குடியிருந்ததாகவும் 1995 காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த இவர்களை அரச அதிகாரிகள் குடியேற விடாது தடுத்தததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

www.globaltamilnews.net

  • தொடங்கியவர்

இந்தப் பகுதியையும் சேர்ந்தவன் என்பதால் ஒரு விடயத்தை இங்கு எழுத மனம் சொல்லுது

சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பக்கம் இருக்கும் கோவில் ஒன்றின் திருவிழா காலத்தில் தலித் மக்களை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். அதுவும் கோவில் நிர்வாகத்துடன் சண்டை பிடித்தே தம் அன்னதானம் வழங்கும் உரிமையை கேட்டு பெற்று இருந்தனர். அதற்கு கொழுப்பெடுத்த சில "உயர்" குடியினர் அன்னதானம் வழங்கும் நிகழ்வுக்கு சென்று அடிதடியில ஈடுபட முயன்றனர். அத்துடன் இந்த உயர் குடியைச் சேர்ந்த எவரும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் சாபிடாமல் வந்து விட்டனர் (ஏனைய நாட்களில் அவர்களின் அன்னதானம் தான் நடக்கும், அதில் போய் ஒரு வெட்டு வெட்டுவினர்)

இன்று அவர்களின் முற்றத்தில் சிங்களவர் வந்து குடியேறுகின்றனர். இவர்களை என்ன சாதி என்று பார்க்க போகினமா? தம் இனத்தில் சாதி பார்த்து சாப்பாடு போடும் உரிமையினை கூட தராமல் விரட்ட முயன்ற என் சனம் இன்று இந்த சிங்களவரை என்ன செய்யப் போகினம் என்று பார்ப்பம்.

இவ்வளவு இழப்புக்கு பின்னரும் தன் இனத்தில் ஆயிரம் பேதங்களை வைத்திருந்து எதிலும் ஒற்றுமை இல்லாமல் இருக்கும் எமக்கு இறுதியில் கக்கூஸ் இருக்க பனம் கூடலும் கூட இல்லாம போகும் நிலை விரைவில் வரும்.

Edited by நிழலி
வாக்கிய பிழை திருத்தல்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் மிக உயர்சாதி..! அவன் கோயிலுக்குள்ள செருப்பாடையும் போகலாம்..! :huh: நம்மட "உயர்" சாதி ஹிஹி எண்டு இளிப்பினம்..! அவ்வளவுதான்..! :huh:

சிங்களவன் மிக உயர்சாதி..! அவன் கோயிலுக்குள்ள செருப்பாடையும் போகலாம்..! :huh: நம்மட "உயர்" சாதி ஹிஹி எண்டு இளிப்பினம்..! அவ்வளவுதான்..! :huh:

100 % சரி. பச்சை குத்தியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
:huh:

Edited by vasee

இன்று அவர்களின் முற்றத்தில் சிங்களவர் வந்து குடியேறுகின்றனர். இவர்களை என்ன சாதி என்று பார்க்க போகினமா? தம் இனத்தில் சாதி பார்த்து சாப்பாடு போடும் உரிமையினை கூட தராமல் விரட்ட முயன்ற என் சனம் இன்று இந்த சிங்களவரை என்ன செய்யப் போகினம் என்று பார்ப்பம்.

இவ்வளவு இழப்புக்கு பின்னரும் தன் இனத்தில் ஆயிரம் பேதங்களை வைத்திருந்து எதிலும் ஒற்றுமை இல்லாமல் இருக்கும் எமக்கு இறுதியில் கக்கூஸ் இருக்க பனம் கூடலும் கூட இல்லாம போகும் நிலை விரைவில் வரும்.

ஐயர் மாரின் கோமணத்தை உருவ வேணும் பாப்பாத்திகளை வன்புணர்வுக்கு உட்ப்படுத்த வேணும் எண்டு துடிச்ச பகுத்தறிவு கண்மணிகள் என்ன இப்ப சொல்லுகினம்...??? புலிகள் இன வெறி கொண்டவை அவை அழிஞ்சு போனது பிழை இல்லை எண்டு தானே....???

அறிவாயுதம் கொண்ட ஐயரை அழிக்க அரிவாளும் , பாப்பாத்திக்கு பிள்ளையும் குடுக்க நிண்டவை எங்கட கண்மணிகள்.... ஆனால் ஆயுதம் கொண்டு எங்களை அடிக்க வந்தவனையும் , வதைச்சவனை அழிச்சவனையும் இனவெறியர்கள் எண்டுகினம்... இதுவும் பகுத்தறிவு தானே....??

இப்படி ஏறுக்கு மாறா நிக்கும் ஆக்களுக்க்கு உதவ சொந்த இனத்துக்கை இருந்தும் யாராவது வருவாங்களோ....???

Edited by தயா

நான் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்த எதிர்வினை இது....ஆனாலும் நியாம் மண்டிக் கிடக்குது ஒவ்வொரு கேள்வியிலும்,

அதே போல் நீங்கள் சொல்லும் ஐயர் (ஈழத்தில் வாழும் பெரும் அப்பாவி குடிகள் ) குடிக்கும், தமிழகத்தில் இருக்கும் பார்பனிய தமிழ் தேசிய விரோத; இன்றும் பிரபாகரனை பயங்கரவாதி ஆக்கி மகிந்தவை மீட்பராக்கும் பார்ப்பனியனும் ஒன்றல்ல தயா

வர்க்க போதங்கள், அதன் உருவாக்கம் எண்று வரும் போது பார்ப்பான் என்பது ஒரு குறியீடு.....! இதிலை பேதமே இல்லை.... இவர்களை அடிப்படையாக வைச்சு தான் பேதங்களும் வேதங்களும் வளர்க்கப்பட்டன... இதிலை எனக்கு மாற்று கருத்து கிடையாது...

விடுதலைப்புலிகள் காலத்தில் பிராமணர்கள் ஈழத்தில் அடக்க படவும் இல்லை ஒடுக்கப்படவும் இல்லை... செயலிளக்க செய்யப்பட்டனர்... பிராமணர்கள் எப்போதும் ஆட்ச்சியில் இருப்பவர்களை எதிர்ப்பது கிடையாது.... அவர்களுடன் ஒண்றிப்போய் வேலை செய்வார்கள்... இது பற்றி ஒரு கதை ஒண்று படிச்சன் கதை பகுதியில் இணைத்து விட்டு இணைப்பை தருகிறேன்...

கதைக்கான இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77528

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஓட ஓட விரட்டியடிப்பு: சிங்களர்கள் அதிரடி ஆக்கிரமிப்பு!

வெள்ளிக்கிழமை, நவம்பர் 12, 2010, 11:38[iST]

யாழ்ப்பாணம்: நாவட்குழி பகுதியில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த நூற்றுக்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தது சிங்கள ராணுவம். நேற்று காலை முதல் அந்த இடங்களில் சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.

இதனால் ஏராளமான தமிழர்கள் சொந்த வீடுகளை இழந்து சாலையோரங்களில் தவிப்பதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவட்குழி பகுதியில் 300 வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதியில் 1992-ம் ஆண்டு முதல் தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்போது இங்குள்ள தமிழ்க் குடும்பங்களை ராணுவம் நேற்று விரட்டியடித்தது. மேலும் இங்கு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்த வீடுகளையும் சிங்களர்களுக்கே கொடுத்தனர் ராணுவத்தினர்.

புதிய வீடுகளை இந்தப் பகுதியில் கட்டிக் கொள்ள சிங்களக் குடும்பங்களுக்கு கட்டுமானப் பொருள்களையும் இலவசமாக வழங்கியுள்ளது இலங்கை அரசு. மேலும் 70 சிங்களக் குடும்பங்கள் தென்னிலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்களுக்கும் தமிழர்களின் வீடுகளை தாரை வார்த்துள்ளனர்.

வீடுகளை உடனடியாக காலி செய்து கொண்டு ஓடாவிட்டால், சுட்டுத் தள்ளுவோம் என்று சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர் அனைத்து தமிழ்க் குடும்பங்களும்.

இவர்கள் ஏற்கெனவே போரினால் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு நாவட்குழிக்கு இடம்பெயர்ந்தவர்கள். இரண்டு மூன்று குடும்பங்களாக சேர்ந்து ஒரு வீட்டில் நெருக்கியடித்து வசித்து வந்தனர். இப்போது அந்த வீடும் பறிபோய்விட, தங்கள் சொந்த ஊரிலிருந்த சொத்துக்களையும் ராணுவம் வளைத்துக் கொண்டதால் எங்கு செல்வதென தெரியாமல் தவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, தங்களிடம் மிச்சமுள்ள நிலங்களும் பிடுங்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தவிக்கின்றனர் யாழ்ப்பாணம் தமிழர்கள்.

இந்த சிங்கள குடியேற்றத்துக்கு முழுக் காரணமும் அமைச்சர் விமல் வீரவன்ச என்று கூறப்படுகிறது. "இலங்கை முழுவதும் சிங்களர்களின் உடமை. தமிழர்களின் நிலங்களைப் பிடுங்கி சிங்களர்களுக்கு தருவதை யாராலும் தடுக்க முடியாது" என்று ஏற்கெனவே இவர் சவால் விட்டது நினைவிருக்கலாம்.

தற்ஸதமிழ்

இந்தப் பகுதியையும் சேர்ந்தவன் என்பதால் ஒரு விடயத்தை இங்கு எழுத மனம் சொல்லுது

சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பக்கம் இருக்கும் கோவில் ஒன்றின் திருவிழா காலத்தில் தலித் மக்களை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். ....

சாதி வேறுபாடுகள் ஒழிய வேண்டும் என்பதற்கு மாற்று கருத்தில்லை.

ஆனால், ஏதோ உயர்ந்த கருத்து எழுதுவதாக கற்பனை செய்து கொண்டு, இந்திய போலிப் பகுத்தறிவு சந்தர்பவாதிகளால் உருவாக்கப்பட்ட "தலித்" என்ற விஷ வார்த்தையை ஈழத்துக்குள் திணிக்க முயலுவது நன்மையை விட தீமையையே தரும்.

புதுப்புது வார்த்தைகளில் மக்களை பிரித்து மகிழுவோர் திருந்த வேண்டும்.

இந்தப் பகுதியை நன்கு அறிந்தவன் என்ற வகையில் ஒருபக்கம் டக்லஸ் உப்பளம் அமைப்பதாக கடல் நீரை இறைத்து, நிலத்தடி நீரை மேலும் உப்பாக்கி வருகின்ற அதேவேளை, மறுபக்கம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் தமிழ் மண் சுரண்டப்படுவது மிகக் கவலையானது.

சிங்கள மக்களை தங்கவைத்து நாகவிகாரை பணம் ஈட்டுவதற்கு இங்குள்ள களஞ்சிய சாலையை உள்ளூர் நிர்வாகம் வழங்கியதும் மாபெரும் பெரும் வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

தலித் என்பது வினோதமான இந்தியச் சொல், காந்தியின் "அரிஜனர்கள்" போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.