Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எப்படி சமாளிப்பார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு உணவகம்.அங்கு ஒரு 25 வயதுடைய சகஜமாக பழகும் பரிமாறும் பெண்.அங்கு மாலை நேரங்களில் வழமையாக வாடிக்கையாளர்கள் வருவது மிகவும் குறைவு. இந்த நேரங்களில் வழமையாக வரும் ஒரு 64 வயதுடைய ஆண் வாடிக்கையாளர் ஒருவர் ஆரம்பத்தில் சாதாரனமாக கதைத்த அவர் காலப்போக்கில் விரசமாக கதைக்க தொடங்கினார். ஆரம்பத்தில் நல்ல முறையில் பழகி பின் இப்படி மாறியதால் அந்தப்பெண் எப்படி அவரை கையாள்வாள் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க அப்டி அவர் கதைத்த கதையில் ஒன்றுதான் என்னை இதை எழுத தூன்டியது.அது என்னவென்றால் உனது பின் அழகை பார்ப்பதால் ஏற்படும் தாக்கத்தால் நான் நாரி நோவால் அவஸ்த்தைப்படுகிறேன் என்றும் அதனால் உன் மீது நான் வழக்கு தொடுக்கப்போவதாகவும் சொன்னார்.இதுவும் ஒரு விரசக்கதையின் அங்கம் தான் என்றாலும்

மனிசன் வித்தியாசமாகசிந்திச்சு இருக்கு.எப்படித்தான் இதுகளை இந்த மாதிரி வேல செய்யும் பெண்கள் சமாளிப்பார்களோ.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எங்கள் சமூகத்தில் மட்டுமின்றி உலக சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கும் நாளாந்தப்பிரச்சினை இது.

வீட்டில் இருக்கும் பெண்களைவிட வெளியுலகில் அது தொழில்ரீதியாகட்டும், கல்விக்காகவாகட்டும் அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காகவாகட்டும் வெளியுலகில் பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் அனுபவங்களில் சஜீவன் குறிப்பிட்டதுபோனற அனுபவமும் உண்டு. இதை எந்தப் பெண்ணாலும் மறுக்க முடியாது, இப்படியான அனுபவம் எங்களுக்கு ஏற்படவில்லை என்று பெண்கள் யாரேனும் கூறுவார்களாகில் ஒன்று அவர்கள் விட்டில்பூச்சிகளாக இருப்பார்கள் இல்லையென்றால் கிணத்துத் தவளையைப் போல் உலகம் தெரியாதவர்களாக இருப்பார்கள். நிற்க.

சஜீவன் நீங்கள் குறிப்பிட்ட விடயம்போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு. இன்றுவரைகூட சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. இங்கு ஆண்களின் சிற்சில தோற்றங்களை நான கூற எத்தனிப்பது இங்குள்ள ஆண் நண்பர்கள் எவரையும் புண்படுத்துவதற்காக அல்ல. எமது சமூக வளர்ப்பு முறைகள் பெண்களை நலிந்தவர்களாகவும், பயந்தவர்களாகவும், எந்த ஒரு விடயததிற்கும்; துணிச்சலாக முகம் கொடுக்க முடியாதவர்களாகவும் கடந்த காலங்களில் அமைந்துவிட்டுள்ளது. அவ்வமைப்பில் இருந்து இன்னும் நாம் மீளாதவர்களாக இருப்பதை தினமும் சந்திக்கும் மனிதர்களிடம் காணமுடிகிறது. அடுத்து,

பொதுவாக சில பிரத்தியேகமாக வெளிப்படும் பெண்ணியல்பு, நலிவு, பயம், குழைவு போன்றவற்றை அதிகமாகக் கொண்ட பெண்களே அதிகமாக ஆண்களின் கண்களைக் கவர்பவர்களாகவும் அவர்களை விரசமாகப் பேச வைப்பவர்களாகவும் இருப்பார்கள். சஜீவன் இவ்விடயத்தை நான் எழுதுவதால் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் உள்ள பெண்ணை குறை சொல்வதாகக் கருதக்கூடாது. அப்பெண் இளையவர் அவர் இவ்விடயத்திலிருந்து சாதுரியமாக வெளியேவர முடியாதவராக இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது இச்சங்கடந்தான் அவருடைய வாழ்க்கையில் ஆண்களால் அவர் சந்திக்கும் பாரதூரமான முதலாவது பிரச்சினையாக இருக்கும்போல் தோன்றுகிறது. இருக்கட்டும்.

எனக்கும் இப்படிப்பட்ட பலவிதமான அனுபவங்கள் உண்டு.

திங்கள், செவ்வாய் தவிர்த்து மற்றைய நாட்களில் அந்த மில்லியனர்கள் வருகை தரும் உணவுச்சாலையில் நான் 'கோர்ட் கீப்பராக" மாலை 5 இலிருந்து நள்ளிரவு 1 மணிவரை பணியாற்றினேன். ஆட்டம் பாட்டம் போதை என்பனவற்றிற்கு குறைவில்லாத இடம் ஆனால் இது மட்டுப்படுத்தப்பட்ட செல்வந்தர்கள் மட்டுமே உலவும் இடம். அங்கு

என்னுடைய 24வது வயதில் நான் 'கோர்ட் கீப்பர"; வேலை செய்து கொண்டிருந்தேன். உணவுச்சாலைக்கு நாளாந்தம் வருகை தரும் ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த கனெடிய கோடீஸ்வரனுக்கு என்னில் தனியான கிறக்கம். (அப்போது நீங்கள் அவ்வளவு அழகா என்று கேட்கக்கூடாது) ஏன் அந்த கிறக்கம் என்னில் அவனுக்கு ஏற்பட்டது என்று இன்றைய நாளில் என்னால் உணர முடிகிறது. நாளாந்தம் வருகைதரும் அந்த மனிதன் (கிட்டத்தட்ட 40ற்குள்தான் இருக்கும்) எப்போதுமே நான் பணியாற்றும் சின்ன கூண்டுபோன்ற அறைக்கு முன்னால் உள்ள இருக்கையில் இருந்துதான் என்னை பார்த்தபடியே உணவருந்துவான். ஆரம்பத்தில் இதனை நான் கண்டு கொள்ளாவிட்டாலும் இரண்டு, மூன்று வாரத்தில் அவனுடைய பார்வை எனக்குச் சங்கடத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. தன்னுடைய கோர்ட்டைத் தரும்போதும் வாங்கும்போதும் இனிமையாகப் பேசுவான். எனக்கு டிப்ஸ்சும் தருவான். அவ்விடத்தில் அவனைச் சங்கடமான ஆளாக நான் தனிப்பட உணர்ந்தாலும் நான் ஆறு;றும் பணி கருதி இன்முகம் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். மனதிற்குள் பயம், நடுக்கம், நளினமான பெண்ணியல்பு எதுவுமே மாறாத காலப்பகுதியது. கனடாவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இப்படியான கட்டத்தில் கிறிஸ்மஸ்,புதுவருட நாட்களை ஒட்டி விடுமுறையால் என்னுடைய வேலையிடத்தில் இரவு பகலின்றி தனவந்தர்களின் பார்ட்டிகள் நடந்தது. உணவுச்சாலைக்கு வரும்போது சீரான ஆடை அணிகளுடனும், கம்பீரமான தோற்றத்துடனும் வருபவர்கள் முடிந்து போகும்போது போதையின் உச்சத்தில், விரசமாகவும், அலங்கோலமாகவும் வந்தே என்னிடம் தங்களின் கோர்ட்டுகளைப் பெற்றுச் செல்வார்கள். மொத்தத்தில் எல்லோருக்கும் முறுக்கேறியிருக்கும். நீலப்படக்காட்சிகள் இல்லையே தவிர மற்றவை எல்லாம் கண்முன்னே பார்க்கலாம். 11 மணியின் பின்னர் உணவுப் பரிமாறல்களை நிறுத்திவிடுவார்கள் அதன் பின் உச்ச இசையில் ஆண்களும் பெண்களும் ஆடுவார்கள். இதற்கு மேல் இவற்றை நீங்கள் கற்பனையில் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட வேளையில்தான் எனக்கும் சோதனை ஏற்பட்டது. கிறிஸ்மஸ்ஸிற்கு முன்தினம் இரவு அவன் நிறைந்த போதையில் நண்பனுடன் வந்து கோர்ட்டை கேட்டான் எடுத்துக் கொடுக்கும் போது என்கையை இழுத்து இறுக்கி அணைத்து முத்தங்கொடுக்க எத்தனித்தான். திமிறிய என்னைத் தன்னுடன் மேலும் மேலும் இறுக்கி அணைக்க முற்பட்டான். என்னுடைய நல்ல காலம் அங்கு எனக்கு மேலதிகாரியாக இருந்த கறுப்பினத்தவனுக்கு எங்களுடைய வாழ்க்கைமுறை நன்றாகத் தெரியும் அதனால் அவன் வந்து தலையிட்டு அந்த வெள்ளையினத் தனவந்தனை சமாதானப்படுத்தி அவனுடைய கைகளிலிருந்து என்னை விடுவித்தான். (இந்த இடத்தில் நெடுக்குத்தம்பி போன்றவர்கள் நீங்கள் அங்கங்களைக் காட்டி ஆண்களை உசுப்பேத்திவிட்டு என்று இழுப்பார்கள்.... பொதுவாக அவ்விடத்தில் வேலை செய்யும் மற்றைய பெண் வெயிட்டர்கள் மார்பு, முதுகு, தொடைகள் எல்லாம் பளிச்சென்று தெரிகிறமாதிரியான யூனிபோமைத்தான் அணிவார்கள் எனது மேலதிகாரி என்னுடைய சங்கடம் கருதி அவ்வுடை விடயத்தில் அங்குள்ள பொதுச்சட்டத்தைத் தவிர்த்திருந்தார். ஆதலால் கவர்ச்சியைக் காட்டாத ஒரு நிலையிலேயே எனது பணி அமைந்தது) அன்றுடன் என்னால் அவ்விடத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. என்னை அவன் என் அனுமதியின்றி தொட்டது தவறில்லை என்ற காரணத்தை கிறிஸ்மஸ்சும், புதுவருடமும் நியாயப்படுத்தின. அன்றுடன் அவ்வேலைக்கு முழுக்குப் போட்டேன். அன்றிலிருந்துதான் பெண்களின் நலிவு, குழைவு, பயம் எல்லாம் எப்படிப் பெண்களை ஆபத்திற்கு உள்ளாக்குகிறது என்று உணர முற்பட்டேன். பின்னரான காலங்களிலும் இப்படியான சம்பவங்களுக்கு முகங்கொடுத்துள்ளேன். அவ்வேளைகளில் சாதுரியமும் , துணிச்சலுமே எனக்கு கைகொடுத்துக் காப்பாற்றியுள்ளன.

எப்போதுமே பெண்களாகிய நமக்கு மற்றவர்கள் வந்து உதவுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. அம்மா, அப்பா, சகோதரர்கள், கணவன் என்ற அரவணைப்பில் வீட்டுக்குள் இருக்கும்வரை பெண்களுக்கு பிரச்சினை இல்லை எப்போது வெளியுலகில் தனிய நடமாட வேண்டிய தேவை வருகிறதோ அப்போது அப்பெண்ணிடம் சாதுரியமும், துணிச்சலும் வளர்க்கப்பட்டிருக்கவேண்டும் இல்லையென்றால் மீளமுடியாத பிரச்சினைகளுக்குள் மாட்டிவிட்டுவிடும்.

இப்போதுகூட சஜீவன் எழுதிய விடயத்தில் உள்ள பெண்தான் அப்பிரச்சினையை முகங்கொடுத்து வெல்லவேண்டும்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

பெண்குழந்தை வளர்ப்பிற்கு நல்ல பயனுள்ள கருத்துக்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற சிரமங்களை நைசாக சமாளிக்க கூடியவர்களாகத்தான் அவர்கள் இருப்பினம், கூடும் போது உள்ளிருந்து ஆட்கள் வந்து நிலைமையை சரிசெய்து விடுவினம்! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எங்கள் சமூகத்தில் மட்டுமின்றி உலக சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கும் நாளாந்தப்பிரச்சினை இது.

பொதுவாக சில பிரத்தியேகமாக வெளிப்படும் பெண்ணியல்பு, நலிவு, பயம், குழைவு போன்றவற்றை அதிகமாகக் கொண்ட பெண்களே அதிகமாக ஆண்களின் கண்களைக் கவர்பவர்களாகவும் அவர்களை விரசமாகப் பேச வைப்பவர்களாகவும் இருப்பார்கள். சஜீவன் இவ்விடயத்தை நான் எழுதுவதால் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் உள்ள பெண்ணை குறை சொல்வதாகக் கருதக்கூடாது. அப்பெண் இளையவர் அவர் இவ்விடயத்திலிருந்து சாதுரியமாக வெளியேவர முடியாதவராக இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது இச்சங்கடந்தான் அவருடைய வாழ்க்கையில் ஆண்களால் அவர் சந்திக்கும் பாரதூரமான முதலாவது பிரச்சினையாக இருக்கும்போல் தோன்றுகிறது. இருக்கட்டும்.

இப்போதுகூட சஜீவன் எழுதிய விடயத்தில் உள்ள பெண்தான் அப்பிரச்சினையை முகங்கொடுத்து வெல்லவேண்டும்.

சகாரா உங்கள் நீன்ட கரத்து பகிர்வுக்கு நன்றி. (எனது முதல் பதிவில் நான் குறிப்பிட தவறியது நான் அங்கு முன் வேலை செய்திருக்கிறேன்)மற்றும் அந்தப்பெண்ணும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்தான்.அத்துடன் 4 வருடங்களாக இந்த துறையில் வேலை செய்பவர்.அவருக்கு இது முதல் பிரச்சனையாக இருக்கும் என்று நான் நினைக்க வில்லை.நான் நினைக்கிறேன் பிரச்சனை என்னவென்றால் ஒன்று நீங்கள் கூறிய மாதிரி பணிநிமித்தம் இன்முகம் காட்ட வேன்டியது.மற்றும் குறிப்பிட்ட காலம் நட்பாக பழகியதால் இப்பொழுது திடீர் என்று முகத்தை முறித்து கதைக்க இயலாத நிலமை.எனது நோக்கில் அவனின் எண்ணம் என்னவென்றால் ஊரில் சொல்கிற பழமொழியான முத்துக்கு அஞ்சி-------ஆடுவாள் என்ற நினைப்பு போல.

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் எங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் சில வற்றை பதிவிட்டேன் ஆனால் நீங்கள் சொல்லும் பெண் வெள்ளை இனத்தவர் என்னும் போது நிச்சயமாக இதைப்போன்ற பல விபத்துக்களை அவர் தாண்டியே வந்திருப்பார். நிச்சயம் அவரால் குறிப்பிட்ட அந்த நபரை தவிர்க்க முடியும். (குறிப்பிட்ட பெண்மணி எத்தகைய சந்தர்ப்பத்திலும் அந்த ஆணிடம் பசப்பு வார்த்தைகளை பேசி மயக்காதிருந்தால்)

உலகம் முழுக்க அன்றாடம் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையிது..

எத்தனையோ ஆயிரம் கதைகளும் படங்களும் (புவனா ஒரு கேள்விக் குறி,நெற்றிக்கண்) இப் பிரச்சனை பற்றி வெளிவந்துள்ளன.மூன்றாம் உலக நாடுகளில் மேலதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுபவர்கள் மிக அதிகம்.எனது வேலையிடத்தில் நோட்டீஸ் போட்டிலெயே போட்டிருக்கு சட்ட திட்டமெல்லாம்.ஆண்,பெண் இரு பாலாருக்கும் இது பொருந்தும்.

எனது வேலை தளத்திலிருந்து மதியம் சாப்பிட சுற்றியிருக்கும் ஏதாவது உணவுவிடுதிக்குபோவார்கள் ஒரு பியரும் சிலவேளைகளில் அடிப்போம்.என்னுடன் வேலை செய்யும் பல வெள்ளைகளுக்கு அங்கு அன்று என்ன சாப்பாடு என்பதைவிட யார் அன்று உபசரிக்கின்றார்களென்பது தான் முக்கியம்.ஏறக்குறைய அந்த வெயிற்றெஸ்களின் டைம் டேபில் இவர்களுக்கு தெரியும், சாப்பிட்டு முடிய நல்ல டிப்ஸும் கொடுப்பார்கள் .பின்னர் வேலைக்கு திரும்பி அவர்களின் உடுப்புகள்,மற்ற சில அந்த விடயங்களும் கதைப்பார்கள்.எனக்கு என்னடா ஒரு முக்கால் மணித்தியாலம் சாப்பிட போய் அந்த நேரம் பார்கிறது கூட இவர்களுக்கு முக்கியமாக இருக்கின்றத்ர்ர் என்று.அன்றாடம் ஒரு நிகழ்வாகவே அது அவர்களுக்கு இருக்கின்றதே ஒழிய கெட்ட நோக்கம் ஒன்றும் இல்லை.

நம்மவர் மனப்பாங்குதான் ரொம்ப கூடாதது.வெளிப்படையா இல்லாமல் எல்லாம் மனதிற்குள் அடைத்து வைத்திருப்பார்கள்.

இது எல்லோர் வாழ்விலும் நடக்கும் ஒரு விடயம். எமது பேச்சுக்களை அளவோடு வைத்துக் கொண்டால் அவர்கள் அத்து மீறமாட்டார்கள். ஆனால், பல பெண்கள் இதனைச் சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. இப்படி ஜொள்ளு விடுவது ஆண்களின் குணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். அவர்களோடு அளவோடு வைத்துக் கொண்டால் அவர்கள் அத்துமீற மாட்டார்கள். அதனை வளரவிட்டால்தான் பிரச்சனை. அதனை வளரவிடுவதற்குப் பெண்கள்தான் காரணம். ஆரம்பம் ஆண்களின் கையில் இருந்தாலும் முடிவு பெண்களிடம்தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பொண்ணு இதுதான் சாட்டென்று.. அவரை டேற்றிங் செய்து எஞ்யாய் பண்ணிட்டு.. அடுத்த நாள் இன்னொரு இடத்தில வேலை தேடிக்கும். நீங்க இப்படியான பொண்ணுகளுக்கு பரிந்து பேசிக்கிட்டு இருங்கோ..! அதுகள் ஊரை மேச்சு உங்களை மேச்சு.. உலகத்தையே மேய்க்குங்கள்.

நான் அறிய விழுந்து விழுந்து காதலிச்சதுகளே... கூட இருந்து கொஞ்சிக்குலாவினதுகளே.. இப்ப அவங்களை எல்லாம் கழற்றிவிட்டிட்டு.. பலதும் பத்தும் என்று அலையுதுகள்..!

ஒரே கிணத்துக்க கிடக்காம வெளில வந்து பாருங்கோ..!

பெட்டைகளுக்கும் இப்படியான விசரமா கதைக்கும் ஆண்களைத்தான் ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும். நீங்கள் நல்லவனா பழகிப் பாருங்க.. செம போர் என்றிட்டு கழற்றி விட்டிட்டுவாளவ..! இது தெரியாம...! நீங்க வேற...! இதுதான் இன்றைய நிஜம்..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா.. இதுக்குத்தான் சொல்லுறது எங்களைப் போல தம்பிங்க இருக்கிற இடமா பார்த்து வேலைல சேரணும் என்று. நான் என்றால் முட்டுக்காலால.. முக்கியமான இடத்தில குத்தி இருப்பன்... அவன் வாழ்க்கையில அந்தப் பக்கம் திரும்பி பார்த்திருக்கமாட்டான். நிதானமிழந்த வெறிக்குட்டிகள் மீது தாக்குதல் நடத்தினாலும் அதுகளுக்கு ஒன்றும் புரியாது.

ஒன்று தெரியுமோ தற்காப்புக்காக தாக்குதல் நடத்தலாம். ஆனால் அது மேடர் செய்யுற அளவுக்கு இருக்காதிருந்தால் சரி. இப்படியான ஆக்களுக்கு அதுதான் சரியான பாடம். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கிணத்துக்க கிடக்காம வெளில வந்து பாருங்கோ..!

சகாரா அக்கா.. இதுக்குத்தான் சொல்லுறது எங்களைப் போல தம்பிங்க இருக்கிற இடமா பார்த்து வேலைல சேரணும் என்று. நான் என்றால் முட்டுக்காலால.. முக்கியமான இடத்தில குத்தி இருப்பன்... அவன் வாழ்க்கையில அந்தப் பக்கம் திரும்பி பார்த்திருக்கமாட்டான். நிதானமிழந்த வெறிக்குட்டிகள் மீது தாக்குதல் நடத்தினாலும் அதுகளுக்கு ஒன்றும் புரியாது.

ஒன்று தெரியுமோ தற்காப்புக்காக தாக்குதல் நடத்தலாம். ஆனால் அது மேடர் செய்யுற அளவுக்கு இருக்காதிருந்தால் சரி. இப்படியான ஆக்களுக்கு அதுதான் சரியான பாடம். :unsure:

கிணத்துக்குள் இருந்து கடல் இந்தக் கிணற்றைவிடப் பெரியதா? என்று கேட்காமல் கடற்கரையில் இருக்கும் கிணற்றுக்கட்டிலிருந்து கடலைப் பார்த்துக் கதைக்கிறேன் நெடுக்குத் தம்பி. என்ன கடலில் குதித்துக் காணாமல் போவதற்கு தயாரில்லை.

உங்களுடைய முழங்கால் அறிவுரை இந்தக் கருத்துக்களத்தை வாசிக்கும் பல பெண்களுக்கு உதவியாக இருக்கும் நெடுக்குத் தம்பி.

சபலக்காரர்களைச் சமாளிக்க கொஞ்சமாகப் புத்திசாலித்தனம் இருந்தால் போதும் ஆளைத் தொடாமலே அச்சத்தை உருவாக்கலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எங்கள் சமூகத்தில் மட்டுமின்றி உலக சமூகத்தில் உலவிக் கொண்டிருக்கும் நாளாந்தப்பிரச்சினை இது.

வீட்டில் இருக்கும் பெண்களைவிட வெளியுலகில் அது தொழில்ரீதியாகட்டும், கல்விக்காகவாகட்டும் அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காகவாகட்டும் வெளியுலகில் பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் அனுபவங்களில் சஜீவன் குறிப்பிட்டதுபோனற அனுபவமும் உண்டு. இதை எந்தப் பெண்ணாலும் மறுக்க முடியாது, இப்படியான அனுபவம் எங்களுக்கு ஏற்படவில்லை என்று பெண்கள் யாரேனும் கூறுவார்களாகில் ஒன்று அவர்கள் விட்டில்பூச்சிகளாக இருப்பார்கள் இல்லையென்றால் கிணத்துத் தவளையைப் போல் உலகம் தெரியாதவர்களாக இருப்பார்கள். நிற்க.

சஜீவன் நீங்கள் குறிப்பிட்ட விடயம்போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு. இன்றுவரைகூட சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. இங்கு ஆண்களின் சிற்சில தோற்றங்களை நான கூற எத்தனிப்பது இங்குள்ள ஆண் நண்பர்கள் எவரையும் புண்படுத்துவதற்காக அல்ல. எமது சமூக வளர்ப்பு முறைகள் பெண்களை நலிந்தவர்களாகவும், பயந்தவர்களாகவும், எந்த ஒரு விடயததிற்கும்; துணிச்சலாக முகம் கொடுக்க முடியாதவர்களாகவும் கடந்த காலங்களில் அமைந்துவிட்டுள்ளது. அவ்வமைப்பில் இருந்து இன்னும் நாம் மீளாதவர்களாக இருப்பதை தினமும் சந்திக்கும் மனிதர்களிடம் காணமுடிகிறது. அடுத்து,

பொதுவாக சில பிரத்தியேகமாக வெளிப்படும் பெண்ணியல்பு, நலிவு, பயம், குழைவு போன்றவற்றை அதிகமாகக் கொண்ட பெண்களே அதிகமாக ஆண்களின் கண்களைக் கவர்பவர்களாகவும் அவர்களை விரசமாகப் பேச வைப்பவர்களாகவும் இருப்பார்கள். சஜீவன் இவ்விடயத்தை நான் எழுதுவதால் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் உள்ள பெண்ணை குறை சொல்வதாகக் கருதக்கூடாது. அப்பெண் இளையவர் அவர் இவ்விடயத்திலிருந்து சாதுரியமாக வெளியேவர முடியாதவராக இருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது இச்சங்கடந்தான் அவருடைய வாழ்க்கையில் ஆண்களால் அவர் சந்திக்கும் பாரதூரமான முதலாவது பிரச்சினையாக இருக்கும்போல் தோன்றுகிறது. இருக்கட்டும்.

எனக்கும் இப்படிப்பட்ட பலவிதமான அனுபவங்கள் உண்டு.

திங்கள், செவ்வாய் தவிர்த்து மற்றைய நாட்களில் அந்த மில்லியனர்கள் வருகை தரும் உணவுச்சாலையில் நான் 'கோர்ட் கீப்பராக" மாலை 5 இலிருந்து நள்ளிரவு 1 மணிவரை பணியாற்றினேன். ஆட்டம் பாட்டம் போதை என்பனவற்றிற்கு குறைவில்லாத இடம் ஆனால் இது மட்டுப்படுத்தப்பட்ட செல்வந்தர்கள் மட்டுமே உலவும் இடம். அங்கு

என்னுடைய 24வது வயதில் நான் 'கோர்ட் கீப்பர"; வேலை செய்து கொண்டிருந்தேன். உணவுச்சாலைக்கு நாளாந்தம் வருகை தரும் ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த கனெடிய கோடீஸ்வரனுக்கு என்னில் தனியான கிறக்கம். (அப்போது நீங்கள் அவ்வளவு அழகா என்று கேட்கக்கூடாது) ஏன் அந்த கிறக்கம் என்னில் அவனுக்கு ஏற்பட்டது என்று இன்றைய நாளில் என்னால் உணர முடிகிறது. நாளாந்தம் வருகைதரும் அந்த மனிதன் (கிட்டத்தட்ட 40ற்குள்தான் இருக்கும்) எப்போதுமே நான் பணியாற்றும் சின்ன கூண்டுபோன்ற அறைக்கு முன்னால் உள்ள இருக்கையில் இருந்துதான் என்னை பார்த்தபடியே உணவருந்துவான். ஆரம்பத்தில் இதனை நான் கண்டு கொள்ளாவிட்டாலும் இரண்டு, மூன்று வாரத்தில் அவனுடைய பார்வை எனக்குச் சங்கடத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. தன்னுடைய கோர்ட்டைத் தரும்போதும் வாங்கும்போதும் இனிமையாகப் பேசுவான். எனக்கு டிப்ஸ்சும் தருவான். அவ்விடத்தில் அவனைச் சங்கடமான ஆளாக நான் தனிப்பட உணர்ந்தாலும் நான் ஆறு;றும் பணி கருதி இன்முகம் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். மனதிற்குள் பயம், நடுக்கம், நளினமான பெண்ணியல்பு எதுவுமே மாறாத காலப்பகுதியது. கனடாவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இப்படியான கட்டத்தில் கிறிஸ்மஸ்,புதுவருட நாட்களை ஒட்டி விடுமுறையால் என்னுடைய வேலையிடத்தில் இரவு பகலின்றி தனவந்தர்களின் பார்ட்டிகள் நடந்தது. உணவுச்சாலைக்கு வரும்போது சீரான ஆடை அணிகளுடனும், கம்பீரமான தோற்றத்துடனும் வருபவர்கள் முடிந்து போகும்போது போதையின் உச்சத்தில், விரசமாகவும், அலங்கோலமாகவும் வந்தே என்னிடம் தங்களின் கோர்ட்டுகளைப் பெற்றுச் செல்வார்கள். மொத்தத்தில் எல்லோருக்கும் முறுக்கேறியிருக்கும். நீலப்படக்காட்சிகள் இல்லையே தவிர மற்றவை எல்லாம் கண்முன்னே பார்க்கலாம். 11 மணியின் பின்னர் உணவுப் பரிமாறல்களை நிறுத்திவிடுவார்கள் அதன் பின் உச்ச இசையில் ஆண்களும் பெண்களும் ஆடுவார்கள். இதற்கு மேல் இவற்றை நீங்கள் கற்பனையில் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட வேளையில்தான் எனக்கும் சோதனை ஏற்பட்டது. கிறிஸ்மஸ்ஸிற்கு முன்தினம் இரவு அவன் நிறைந்த போதையில் நண்பனுடன் வந்து கோர்ட்டை கேட்டான் எடுத்துக் கொடுக்கும் போது என்கையை இழுத்து இறுக்கி அணைத்து முத்தங்கொடுக்க எத்தனித்தான். திமிறிய என்னைத் தன்னுடன் மேலும் மேலும் இறுக்கி அணைக்க முற்பட்டான். என்னுடைய நல்ல காலம் அங்கு எனக்கு மேலதிகாரியாக இருந்த கறுப்பினத்தவனுக்கு எங்களுடைய வாழ்க்கைமுறை நன்றாகத் தெரியும் அதனால் அவன் வந்து தலையிட்டு அந்த வெள்ளையினத் தனவந்தனை சமாதானப்படுத்தி அவனுடைய கைகளிலிருந்து என்னை விடுவித்தான். (இந்த இடத்தில் நெடுக்குத்தம்பி போன்றவர்கள் நீங்கள் அங்கங்களைக் காட்டி ஆண்களை உசுப்பேத்திவிட்டு என்று இழுப்பார்கள்.... பொதுவாக அவ்விடத்தில் வேலை செய்யும் மற்றைய பெண் வெயிட்டர்கள் மார்பு, முதுகு, தொடைகள் எல்லாம் பளிச்சென்று தெரிகிறமாதிரியான யூனிபோமைத்தான் அணிவார்கள் எனது மேலதிகாரி என்னுடைய சங்கடம் கருதி அவ்வுடை விடயத்தில் அங்குள்ள பொதுச்சட்டத்தைத் தவிர்த்திருந்தார். ஆதலால் கவர்ச்சியைக் காட்டாத ஒரு நிலையிலேயே எனது பணி அமைந்தது) அன்றுடன் என்னால் அவ்விடத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. என்னை அவன் என் அனுமதியின்றி தொட்டது தவறில்லை என்ற காரணத்தை கிறிஸ்மஸ்சும், புதுவருடமும் நியாயப்படுத்தின. அன்றுடன் அவ்வேலைக்கு முழுக்குப் போட்டேன். அன்றிலிருந்துதான் பெண்களின் நலிவு, குழைவு, பயம் எல்லாம் எப்படிப் பெண்க ஆபத்திற்கு உள்ளாக்குகிறது என்று உணர முற்பட்டேன். பின்னரான காலங்களிலும் இப்படியான சம்பவங்களுக்கு முகங்கொடுத்துள்ளேன். அவ்வேளைகளில் சாதுரியமும் , துணிச்சலுமே எனக்கு கைகொடுத்துக் காப்பாற்றியுள்ளன.

எப்போதுமே பெண்களாகிய நமக்கு மற்றவர்கள் வந்து உதவுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. அம்மா, அப்பா, சகோதரர்கள், கணவன் என்ற அரவணைப்பில் வீட்டுக்குள் இருக்கும்வரை பெண்களுக்கு பிரச்சினை இல்லை எப்போது வெளியுலகில் தனிய நடமாட வேண்டிய தேவை வருகிறதோ அப்போது அப்பெண்ணிடம் சாதுரியமும், துணிச்சலும் வளர்க்கப்பட்டிருக்கவேண்டும் இல்லையென்றால் மீளமுடியாத பிரச்சினைகளுக்குள் மாட்டிவிட்டுவிடும்.

இப்போதுகூட சஜீவன் எழுதிய விடயத்தில் உள்ள பெண்தான் அப்பிரச்சினையை முகங்கொடுத்து வெல்லவேண்டும்.

நல்ல கருத்து சகாரா அக்கா பெண்கள் தங்களை காப்பாற்ற தாங்களே போராட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.