Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக ஜே.வி.பி.யினரின் நாடகம்:

Featured Replies

ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ( உச்சரிக்க முடியாத கரடுமுரடான பெயர் ) யாழ்ப்பாணம் சென்ற போது இனந்தெரியாதவர்கள் தாக்கியதாக தலையில் கட்டுப்போட்டவாறு அவர் அண்மையில் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார்.

அவரை தமிழ் மக்கள் தான் தாக்கினார்கள் என்று அரசாங்கமும், இல்லை இல்லை அரசாங்க புலனாய்வு பிரிவினர்தான் தங்களை தாக்கினார்கள் என்றும் ஜே.வி.பியும் மாறி மாறி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஜே.வி.பியினரை யார் தாக்கினார்கள் என்பதை பற்றி நாம் யோசித்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது சிங்களவர்களுடைய பிரச்சினை. அதைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் ஜே.வி.பி தமிழ் மக்கள் தொடர்பாக அண்மைக்காலத்தில் வெளியிடும் அறிக்கைகளும் சில நடவடிக்கைகளும் அவர்களுடன் இப்போது புதிதாக கூட்டுச்சேர்ந்திருப்பவர்கள் பற்றியுமே இக்கட்டுரையில் ஆராய உள்ளேன்.

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாக ஒரு கதை ஒன்று உள்ளது. ஜே.வி.பியினர் தமிழ் மக்கள் தொடர்பாக இப்போது பேசி வருவதை பார்க்கும் போது இந்த கதைதான் ஜே.வி.பியினரை பற்றி சரியாக தெரிந்து கொண்ட அனைத்து தமிழ் மக்களுக்கும் ஞாபகத்தில் வரும்.

யார் இந்த ஜே.வி.பி, இவர்கள் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியும் என்றாலும் அதை தெரியாதவர்களைப்போல அவர்களை வீட்டுக்கு அழைத்து கொஞ்சிக்குலாவி விருந்து கொடுக்கும் தமிழ் தேசியவாதிகள் என தங்களை அழைத்துக்கொள்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜே.வி.பியினர் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி மிகச்சுருக்கமாக பட்டியல் இடுகிறேன்.

ஜே.வி.பி தென்னிலங்கையில் அரசியலுக்குள் பிரவேசித்த காலம் தொடக்கம் இனவாதத்தை பரப்பியே தென்னிலங்கையில் தமது வாக்கு வங்கியை நிரப்ப ஆரம்பித்தார்கள்.

வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதை தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்க மறுத்த ஜே.வி.பியினர் தமிழர்களுக்கு என்று பிரச்சினை இல்லை. சிங்களவர்கள் முஸ்லீம்களைப்போல பொதுவான பிரச்சினைகளையே தமிழர்களும் எதிர்நோக்குகின்றனர் என கூறிவந்தவர்கள்தான் ஜே.வி.பியினர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் போராட்ட அமைப்பையும் தமிழ் மக்களையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டனர். இதற்காக சந்திரிகா ஆட்சிக்காலத்தில் அரசுடன் இணைந்து கொண்டு வடகிழக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவந்த இனப்படுகொலைகளை நியாயப்படுத்தி இராணுவத்தினருக்கான பிரசாரத்தில் ஈடுபட்டதையும் நாம் மறந்து விட முடியாது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அப்போது தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட போது அதை மிகக்கடுமையாக எதிர்த்த ஜே.வி.பியினர் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு சில நாட்களில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க வடக்கு கிழக்கை தமிழ் மக்களுக்கு பிரித்து கொடுக்கப்போகிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விடுதலைப்புலிகள் தமிழீழத்தை பெறப்போகிறார்கள் என தென்னிலங்கையில் நஞ்சை விதைத்தவர்களும் ஜே.வி.பியினர்தான்.

அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் உள்ள முக்கிய மூன்று அமைச்சுக்களை அரசுத்தலைவர் சந்திரிகா பறித்தெடுத்தார். அதனைத்தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க அரசைக்கலைத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆட்டம் காணச்செய்தனர். இந்த நடவடிக்கைகளுக்கு தன்னை ஜே.வி.பியினரே தூண்டினர் என்றும் தான் செய்த மிகப்பெரிய பிழை ஜே.வி.பியினரின் சொல்லைக்கேட்டு அந்த அரசாங்கத்தை கலைத்ததாகும் என சந்திரிகா அரசுத்தலைவர் பதவியிலிருந்து இறங்கிய பின்னர் தெரிவித்திருந்தார். ( இது சந்திரிக்கா அம்மையாரின் சுடலை ஞானம்)

வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமையை பறிப்பதில் கங்கணம் கட்டி செயற்பட்ட ஜே.வி.பியினர் இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணத்தை பிரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வடகிழக்கு மாகாணத்தை சட்டரீதியாக பிரித்து வைத்தார்கள். இந்த தீர்ப்பை வழங்கியவர் இப்போது ஜே.வி.பியினர் ஆலோசகராக இருக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாதான்.

தமிழர்களை எங்கு எங்கு நசுக்கலாமோ அங்கெல்லாம் தேடித்தேடி அவர்களின் உரிமைகளை வாழ்வியலை பறித்தெடுத்து அரசியல் பொருளாதார ரீதியில் தமிழர்கள் அனாதைகளாக நடுத்தெருவில் நிற்க வேண்டும் என ஜே.வி.பியினர் செயற்பட்டனர்.

இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல ஆழிப்பேரலையால் வடகிழக்கு மாகாணம் அழிக்கப்பட்டிருந்த போது அந்த அழிவிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான திட்டத்தை தயாரித்து அதை அங்கீகரிக்குமாறு அரசாங்கத்தை கோரி நின்ற போது அந்த கட்டமைப்பை செயற்பட விடாது தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதையும் தடுத்து நிறுத்தியவர்கள் ஜே.வி.பியினர்தான். அந்த வழக்கின் தீர்ப்பைக்கூட வழங்கியவர் ஜே.வி.பியின் ஆலோசகரான சரத் என் சில்வாதான்.

வடகிழக்கில் ஆழிப்பேரலையால் அழிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வைக்கூட தடுத்த மிகப்பெரிய கொடுமையை செய்து முடித்தார்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமை, சுனாமி கட்டமைப்பை செயற்பட விடாமல் தடுத்தமை போன்ற நடவடிக்கைகளே போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. ஒருவகையில் போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்து தமிழ் மக்கள் பேரழிவை சந்திப்பதற்கு ஜே.வி.பியும் முக்கிய காரணமாகும்.

இதுவரை காலமும் தமிழ் மக்களுக்காக ஜே.வி.பி ஒரு துரும்பைக்கூட தூக்கி போட்டது கிடையாது. முழுக்க முழுக்க தமிழ் மக்களை அழித்து அடிமைப்படுத்துவதற்கும் அவர்களின் தாயகப்பூமியை களவாடுவதற்கும் முனைந்து நின்றார்களே தவிர ஒரு போதும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை அங்கீகரித்தது கிடையாது.

சிங்கள பேரினவாதிகளான அவர்கள் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பார்கள் என எதிர்பார்ப்பது எங்களது மடைத்தனம்தான்.

அப்படியானால் இப்போது காணாமல் போன தமிழ் மக்களுக்காக பேசுகிறார்கள், தமிழ் தேசியத்தை கட்டிக்காப்பவர்கள் என கூறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர்களான பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் ஆகியோருடன் பேசுகிறார்கள். அவர்களின் வீடுகளுக்கு சென்று விருந்துண்ணுகிறார்கள், ஆகவே ஜே.வி.பி இப்போது தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறது என உங்களில் சிலர் எண்ணலாம்.

காணாமல் போனவர்கள் பற்றி பேச வேண்டிய தேவையும் பத்மினி மற்றும் கஜேந்திரன் தரப்புடன் பேச வேண்டிய தேவையும் இப்போது ஜே.வி.பிக்கு ஏற்பட்டிருக்கிறது.

தென்னிலங்கையில் தமது செல்வாக்கும் பலமும் வீழ்ச்சியடைந்து வரும் இன்றைய நிலையில் வடகிழக்கில் எந்த தெருநாய்களும் வந்து ஊழையிடக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாலும் இதை பயன்படுத்திக்கொண்டு வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கு ஜே.வி.பி முற்பட்டிருக்கிறது.

தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்வதாக இருந்தால் தமிழ் மக்களின் உணர்வுகளை தொடக்கூடிய விடயங்களை பேசி அதற்காக தாம் போராடுவதாக காட்டிக்கொள்வதன் மூலம் தான் அதை சாதிக்க முடியும். யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவதாக இருந்தால் அந்த மக்களை சேர்ப்பதாக இருந்தால் காணாமல் போனவர்கள் பற்றிய விடயத்தை கையில் எடுத்தால்தான் அது முடியும் என்பதை ஜே.வி.பி நன்றாக அறிந்திருக்கிறது.

தமது உறவுகளை பறிகொடுத்துவிட்டு இராணுவ முகாம் என்றும் பணம் பறிக்கும் கூட்டத்திடமும் அலைந்து திரிந்து எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என துடிக்கும் அப்பாவிகளை வைத்து இப்போது ஜே.வி.பி அரசியல் நடத்த முற்பட்டிருக்கிறது.

ஒருவகையில் பார்க்க போனால் தமிழ் மக்கள் படுகொலை செய்வதற்கும் காணாமல் போவதற்கும் முக்கிய பங்குதாரர்களாக இருந்தவர்கள் இந்த ஜே.வி.பியினர்தான். ஒரு புறத்தில் தமிழ் மக்களை பேரழிவுக்குள் தள்ளிவிட்டு மறு புறத்தில் அதற்காக கண்ணீர் விடுவதாக நடிப்பதை பார்க்கும் போது நான் முதலில் சொன்னமாதிரி ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை ஞாபகத்தில் வராமல் இருக்க முடியாது.

எனக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வியும் சந்தேகமும் இதுதான். தமிழ் தேசியத்தை கட்டிக்காப்பதாக கூறிக்கொள்ளும் பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் போன்றவர்கள் ஜே.வி.பியினருடன் கூட்டுச்சேர்ந்தது எவ்வாறு? இத்தனை அழிவுகளையும் தீராத துன்பங்களையும் தமிழ் மக்களுக்கு தந்த ஜே.வி.பினரை வீட்டுக்கு அழைத்து பேசுவதற்கும் விருந்து கொடுப்பதற்கும் பத்மினி சிதம்பரநாதனால் எப்படி முடிந்தது?

வடகிழக்கு தமிழர் தாயகத்தை பிரித்து சுனாமி கட்டமைப்பை செயற்படவிடாது தடுத்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை முற்றாக அழித்தவர்களுடன் எப்படி முகம் கொடுத்து பேச மனம்வருகிறது?

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பல ஓநாய்கள் இப்போது சுதந்திரமாக வந்து ஊழையிட ஆரம்பித்திருக்கின்றன.

பேரழிவுகளை சந்தித்து மீண்டும் தமது வாழ்விடங்களில் குந்தியிருக்கும் தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை மீளக்கட்டி எழுப்பும் பணிகளில் மட்டுமல்லாது எங்கிருந்தோ வந்து ஊழையிடும் ஓநாய்களையும் அவர்களுக்கு பின்னால் திரியும் உள்ளுர் நாய்களையும் விரட்ட வேண்டிய பணியும் தமிழ் மக்கள் முன் விரிந்திருக்கிறது.

thurair@hotmail.com

ஜே. வி. பி. இன் உண்மையான சொரூபம் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தேசியம் பற்றி சொன்ன கருத்துக்கள் பொருத்தமில்லாதவை!.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கொடிய நஞ்சு ஜே. வி .பி

எனவே கணம் தப்பினால் மரணம் தான்

ஆனால் மகிந்தரைத்தொலைக்க எமக்கு பயன்படக்கூடிய முக்கிய ஆயுதம் ஜே. வி .பி

மின்னஞ்சலில் கிடைத்தது :

image1p.png

எம் அரசியல்வாதிகளில் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கு அப்பால் ...

...... சரி, பத்மினி சிதம்பரநாதன் ஜே.வி.பியுடன் கதைத்துக் கொண்டிருந்தார்!!!!! ..... புரியவில்லை ஏன் கதைக்க/பேசக்கக்கூடாது??????????????? ... சரி ஜே.வி.பி ஒரு இனவாதிகளாக இருக்கட்டும், எமக்கு எதிரான செயற்பட்டவர்களாக இருக்கட்டும், .... அதற்காக .........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிங்களவன் அறுபது வருடங்களுக்கு மேலாக எம்மை அழித்தான், அதற்காக சிங்களவனுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது????????? ... இந்தியன், சேர்ந்து எம்மை அழித்தான், அவனுடன் பேசக்கூடாது??????????? ... அப்படிப்பார்த்தால் நாம் உலகில் ஒருவருடனும் கதைக்க முடியாது!!!

யாருடனும் கதை/பேசு ... உன் கொள்கையில், உன் மக்களின் விடிவில், உன் மக்களின் சுதந்திரத்தில் ... உறுதியாக இரு!!

Edited by Nellaiyan

"எதிரிக்கு எதிரி நண்பன்" - இது எழுதப்படாத அரசியல் 101.

அமெரிக்காவை (எதிரி) எடுத்துப்பாருங்கள், அல் - கைடாவை (நண்பன்) பாவித்து அப்கானிஸ்தானில் இருந்து சோவியத் (எதிரி) படைகளை கலைக்க உதவியது. பின்னர் அல் - கைடாவே மார்பில் பாய்ந்துவிட்டது - அது வேறு கதை.

இன்று மகிந்த ராசாவை கவிழ்க்க ஒரு குறிப்பிட சிங்களவரும் ( ஜே.வி .பி. அதில் ஒன்று ) முயலுகின்றனர். சிங்களத்துக்குள் ஒரு அரசியல் பலம் இல்லாமல் போகும்போது பொருளாதாரத்தையும் பாதிக்கும். அது மக்களை இன்னும் அரசர் மீது கோபமடைய வைக்கும்.

பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம்.

இப்படி பட்ட குழுக்களுடன் சேர்ந்து வேலைசெய்வதால் சிலவேளை தமிழருக்கும் பயன் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜே. வி. பி. இன் உண்மையான சொரூபம் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தேசியம் பற்றி சொன்ன கருத்துக்கள் பொருத்தமில்லாதவை!.

மிகவும் கொடிய நஞ்சு ஜே. வி .பி

எனவே கணம் தப்பினால் மரணம் தான்

ஆனால் மகிந்தரைத்தொலைக்க எமக்கு பயன்படக்கூடிய முக்கிய ஆயுதம் ஜே. வி .பி

எம் அரசியல்வாதிகளில் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கு அப்பால் ...

...... சரி, பத்மினி சிதம்பரநாதன் ஜே.வி.பியுடன் கதைத்துக் கொண்டிருந்தார்!!!!! ..... புரியவில்லை ஏன் கதைக்க/பேசக்கக்கூடாது??????????????? ... சரி ஜே.வி.பி ஒரு இனவாதிகளாக இருக்கட்டும், எமக்கு எதிரான செயற்பட்டவர்களாக இருக்கட்டும், .... அதற்காக .........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிங்களவன் அறுபது வருடங்களுக்கு மேலாக எம்மை அழித்தான், அதற்காக சிங்களவனுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது????????? ... இந்தியன், சேர்ந்து எம்மை அழித்தான், அவனுடன் பேசக்கூடாது??????????? ... அப்படிப்பார்த்தால் நாம் உலகில் ஒருவருடனும் கதைக்க முடியாது!!!

யாருடனும் கதை/பேசு ... உன் கொள்கையில், உன் மக்களின் விடிவில், உன் மக்களின் சுதந்திரத்தில் ... உறுதியாக இரு!!

"எதிரிக்கு எதிரி நண்பன்" - இது எழுதப்படாத அரசியல் 101.

அமெரிக்காவை (எதிரி) எடுத்துப்பாருங்கள், அல் - கைடாவை (நண்பன்) பாவித்து அப்கானிஸ்தானில் இருந்து சோவியத் (எதிரி) படைகளை கலைக்க உதவியது. பின்னர் அல் - கைடாவே மார்பில் பாய்ந்துவிட்டது - அது வேறு கதை.

இன்று மகிந்த ராசாவை கவிழ்க்க ஒரு குறிப்பிட சிங்களவரும் ( ஜே.வி .பி. அதில் ஒன்று ) முயலுகின்றனர். சிங்களத்துக்குள் ஒரு அரசியல் பலம் இல்லாமல் போகும்போது பொருளாதாரத்தையும் பாதிக்கும். அது மக்களை இன்னும் அரசர் மீது கோபமடைய வைக்கும்.

பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம்.

இப்படி பட்ட குழுக்களுடன் சேர்ந்து வேலைசெய்வதால் சிலவேளை தமிழருக்கும் பயன் இருக்கலாம்.

thumb_up.gif மிகச் சரியான கருத்துக்கள். :DsmileyThumbsUp.gif

.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.