Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைப்பு

Featured Replies

கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைப்பு

திங்கள், 22 நவம்பர், 2010

கொழும்பில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திரு.கார்த்திகேசு திருலோகச்சந்தர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்தி குறித்து மேலும் தெரியவருவதாவது; கடுமையாக சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்வையிடுவதற்கு சென்ற பிரித்தானியா குடியுரிமை பெற்ற தமிழ் ஊடகவியலாளர் திரு கார்த்திகேசு திருலோகச்சந்தர் (37) கொழும்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினரால் கடந்த புதன்கிழமை 17.11.2010 அன்று கைது செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது யாவரும் அறிந்ததே.

ஆனால் இவர் தற்போது கே.பியின் அறிவுறுத்தலுக்கமைய விடுவிக்கப்பட்டு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கே.பியுடன் பங்குபற்றியிருந்ததாக அறியப்படுகிறது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட தீபம், ஜி.ரி.வி மற்றும் ஐ.பி.சி ஆகிய ஊடகங்களில் பணியாற்றிய இவருக்கு இலங்கை அரசால் கே.பியிற்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்று திணிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொண்டாலே விடுதலை என்ற நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

sundar.jpg

அண்மை நாட்களாக தமிழீழ விடுதலையில் ஆழமான பற்றுறுதிகொண்டவர்களை தங்கள் வலையில் விழ வைத்து சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச ரீதியில் பலமாக விளங்கும் தமிழர் கட்டமைப்புக்களை சிதைக்கும் முயற்சியில் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலிற்கு உயிர் கொடுப்பவர்கள் முழுவேகத்துடன் செயற்பட்டு வருவது அனேகமான இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக புலம்பெயர் தமிழ் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் கேபி தீவிரமாக ஈடுபட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்தகாலங்களில் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சில தமிழ்த்தேசியத்திற்காகவென உருவாக்கப்பட்ட ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வலை வீசப்பட்டுவிட்டதாக அறியப்படுகிறது. இந்த வலைக்குள் சிக்காத ஊடகங்களை சிதைத்து செயலிழக்க வைக்க பல படிமுறைச் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

ஊடகங்களுக்கு கேபியால் அச்சுறுத்தல் விடப்பட்டதென்ற விபரமும். எந்தெந்த ஊடகங்கள் வலையில் சிக்கித்தடுமாறுகின்றன என்ற விபரமும் மக்கள் முன் ஆதாரத்துடன் வெளிவரும் என அறியப்படுகிறது.

எனவே பொறுப்புள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எத்தகைய சவால்கள் வரினும் எதிரியின் நரித்தனமான நகர்வினை புரிந்து கொண்டு தமிழீழ விடியல் என்ற உண்ணத இலட்சியத்துக்காக உண்மையுடனும் உறுதியுடனும் உழைக்க மாவீரத் தெய்வங்களை வணங்கும் இப்புனிதமான காலத்தில் திடசங்கற்பம் ஏற்க வேண்டும்.

http://www.tharavu.com/2010/11/blog-post_1607.html

1. "ஆனால் இவர் தற்போது கே.பியின் அறிவுறுத்தலுக்கமைய விடுவிக்கப்பட்டு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கே.பியுடன் பங்குபற்றியிருந்ததாக அறியப்படுகிறது."

ஒரு கை பிடிக்கும் மறு கை விடும் - மொத்தத்தில் இரண்டும் ஒரே கையே.

2. ஒரு வெளிநாட்டு ஊடகவியலாருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு சிங்கள அரச பயங்கரவாதம் மிகக் கொடூரமானதே!

இக்கைது தொடர்பாக சில சந்தேகங்கள் ...

***

... எம்முன் எழும் கேள்வி என்னவெனில் ...

* இக்கைதுக்கும், லண்டனில் இயங்கும், கேபியின் கும்பலுக்கும் தொடர்பிருக்கிறதா????

* இவ்வூடகவியலாளரின் பயணம் தொடர்பான விடயங்கள், இக்கேபிக்களினால்தான் சிங்களத்திற்கு அறிவிக்கப்பட்டதா????

* இக்கைது நாடகத்தில் தொடர்புடையவர்கள் யார் யார்????

* இப்படியான கைதுக்கள் இனியும் தொடர போகின்றனவா????

... கடந்த காலங்களில் புலி என்றும், புலனாய்வுத்துறை என்றும் திரிந்தவர்களே, இன்று கேபியின் கும்பலில் உள்ளனர். இவர்களுக்கு இங்குள்ள பலரின் விபரங்கள் அனைத்தும் தெரியும்!!!! ... இன்று எமக்கு முன் இன்னொரு ஒட்டுக்கும்பல் காட்டிக்கொடுக்க ... கேபிக்களாக ....??????????????

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கைதே வெறும் நாடகமும்,கண் துடைப்பும் தான் :D

இந்த கைதே வெறும் நாடகமும்,கண் துடைப்பும் தான் :D

இது நாடகமோ? திரைப்படமோ? ... யாமறியோம்???, கேபிக்கள் அறிவார்!!! ...

... அதற்கு மேல் ... இங்கிருந்தி இயக்கப்படும் ஓர் இணையம் ... முன்னாள் மா.க.மாக்களாக வலம் வந்து, பின் கேபிக்காக கூட்டங்கள் கூட வைத்து, அதனை விட கேபியின் உத்தியோகபூர்வமற்ற புகழ் பாடும் இணையம்(இங்கு செக்கட்டரி ஜெனரல், சில வாரங்களுக்கு முன் கேபியை மகாத்மாவாக வர்ணித்து கட்டுரை வடித்தவர் ... அதில் இந்த ஊடகவியலாலரை புலியென்று நிரூபிக்க பல முயற்சிகளில் சிலர்!!!! ...

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே புரியவில்லை

ஒரு கைதிக்குக்கீழ் இன்னொரு கைதி

கைது செய்தவர்களை எடுத்தவிடப்போனவரிடம் இன்னொரு சிறைக்கூடம்

ஒன்றுமே புரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.