Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் மகளையும், மகளின் காதலனையும் கொலை செய்ய முயற்சித்த இலங்கைத் தமிழருக்கு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை

Featured Replies

மகளையும், மகளின் காதலனையும் படுகொலை செய்ய முயற்சித்த இலங்கைத் தமிழருக்கு, கனேடிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

47 வயதான செல்வநாயகம் செல்லத்துரை என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளையும் மகளின் காதலனையும் வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது செல்லத்துரை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மகள் தமது அறிவுரைகளை கேட்காத காரணத்தினால் அவரது காதலன், மற்றும் மருமகன் ஆகியோரை வாகனத்தில் மோத முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதியை மூன்று தினங்களாக காணாத காரணத்தில் யுவதியின் தந்தையான செல்லத்துரை மன உலைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிப் பிரச்சினை காரணமாகவே இந்த காதல் திருமணத்திற்கு குறித்த நபர் மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

1994ம் ஆண்டு செல்லத்துரை கனடாவில் புகலிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=32924&cat=1

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சாதி மாறி காதலித்த மகள், காதலன் மீது வாகனத்தால் மோதிய தந்தை: ஐந்தாண்டு சிறைத்தண்டனை

[ வியாழக்கிழமை, 25 நவம்பர் 2010, 09:13 GMT ] [ கனடா செய்தியாளர் ]

தனது மகள் ஈழத்தமிழரைச் சேர்ந்த வேறுசாதி ஆணைக் காதலிக்கிறார் என அறிந்த ஈழத்தமிழ்த் தந்தை மகளின் மீதும் அவரின் காதலன் மீதும் வாகனத்தினால் மோதியிருக்கிறார்.

இந்தக் கோபக்காரத் தந்தையினைக் கடுமையாகத் திட்டித் தீர்த்த நீதிபதி அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறார்.

கனடாவில் இருந்து வெளிவரும் 'ரொரண்டே ஸ்ரார்' ஊடகத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செல்வநாயகம் செல்லத்துரை என்ற இவர் 19 வயதான தனது மருமகனையும் சிற்றூர்தி ஒன்றினால் மோதியிருக்கிறார்.

"உங்களது மகளுக்கும் 17 வயதான அந்தப் பையனுக்கும் இடையிலான தொடர்பினை நீங்கள் விரும்பாதமையினால் அவர்கள் மீது வாகனத்தினால் மோதியிருக்கிறீர்கள். இந்தச் சம்பவம் உங்களது குடுப்பத்தில் மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும்" என கடந்த செவ்வாயன்று ஒன்ராரியோ நீதிமன்றின் நீதியரசர் ஜோன் மக்மோகன் கூறியிருக்கிறார்.

'இந்தச் சம்பவத்தின் போது அதிஸ்ரவசமாக அனைவருமே உயிர் தப்பியிருக்கிறார்கள்.'

செல்லத்துரையின் வாகனத்தில் அடிபட்ட இந்த மூவரும் வாகனத்திற்குக் கீழே அகப்பட்ட நிலையில் வாகனம் ஐந்து மீற்றர் தூரம் இழுபட்டுச்சென்று வேலியுடன் மோதி நின்றிருக்கிறது.

வாகனம் எதிர்பாராத விதமாக மோதியமையினால் காயமடைந்த தனது மகளையும் பிரசன்னா ஆனந்தராசா என்ற மகளின் காதலனையும் "உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன்" எனக் கத்திக்கொண்டு செல்லத்துரை கொலைவெறியுடன் துரத்தியிருக்கிறார். செல்லத்துரை தன்னைக் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும் என நீதியாளர் கூறினார்.

தலை, முதுகு, ஈரல் மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளில் காயமடைந்த 16 வயதான இவரது மகள் அனித்தா மருத்துவமனையில் மூன்று வாரங்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருக்கிறாள். மகளின் காதலனுக்குச் சுளுக்கு ஏற்பட்டிருக்கிறது. லெனின் சந்திரலிங்கம் என்ற செல்லத்துரையின் மருமகனுக்கு இரண்டு எலும்புகள் முறிந்திருக்கிறது. தற்போதும் கைத்தடியின் உதவியுடனேயே இவர் நடக்கிறார்.

கொலை செய்ய முற்பட்டமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட 47 வயதான செல்லத்துரை தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டார்.

தனது பெண்ணின் காதலன் ஈழத்தமிழ் சமூகத்தில் வேறுசாதியினைச் சேர்ந்தவன் அதாவது சாதித் தரத்தில் குறைந்தவன் என்பதாலேயே தான் இவ்வாறு நடந்துகொண்டதாக செல்லத்துரை முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இறுதியாக இடம்பெற்ற அமர்வின் போது சாதிப் பிரச்சினை என ஒன்றும் இல்லை என்றும் குறித்த இளைஞர் குழுவொன்றின் தலைவராக உள்ளார் என்ற அச்சத்திலேயே தான் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் செல்லத்துரை கூறுகிறார்.

சாதிப்பிரச்சினைதான் காரணம் என முன்னதாக செல்லத்துரை உளவளத் துணைளயாளர்களிடம் கூறியிருந்த கருத்துடன் அவரது இந்தக் கருத்து முரண்படுவதாகக் கூறி அந்தக் கருத்தினை மக்மோகன் நிராகரித்தார்.

குறித்த இந்த நபருடன் தனது மகள் தொடர்பினை வைத்திருந்தால் தான்சார்ந்த சமூகத்தில் தன் மகளைத் திருமணம் செய்வதற்கு யாரும் விரும்பமாட்டார்கள் எனத் தான் அஞ்சியதாக செல்லத்துரை மருத்துவர் யூலியன் ஜோயர் இடம் கூறியிருக்கிறார்.

குறித்த இந்தப் பையன் பயங்கரவாதிகளுடன் தொடர்பினைக் கொண்டிருக்கலாம் என்ற அச்சத்தினால் தனது மகளின் பாதுகாப்புத் தொடர்பில் தான் கவலைகொண்டதாகவும் அவர் கூறுயிருக்கிறார்.

செல்லதுரையினது குடும்பக் கலாச்சாரத்திற்கும் தமிழர்களது பண்புகளுக்கும் அமையத் தனது மகள் செயற்படவில்லையே என இவர் விரக்தியடைந்திருக்கிறார் என்றும் ஒருமுறை தற்கொலை முயற்சியில்கூட செல்லத்துரை இறங்கியிருக்கிறார் எனவும் மருத்துவர் தனதறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கு விசாரணையின் முதலாவது அமர்வின் போது தான் புரிந்த இந்தக் குற்றத்திற்கும் அதன் விளைவாக இவர்கள் மூவரும் காயமடைந்தமை தொடர்பிலும் செல்லத்துரை வருத்தம் தெரிவிக்கவிலலை என மக்மோகன் குறிப்பிட்டார்.

முதலில் செல்லத்துரைக்கு எதிரான இந்த வழக்கினை மீளப்பெறுவதற்கே குடும்பத்தினர் விரும்பினர். பாதிக்கப்பட்ட மூவரும் செல்லத்துரைக்கு எதிராகச் சாட்சிசொல்லவும் விரும்பவில்லை.

செல்லத்துரைக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் அவர் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நல்லொழுக்கத்துடன் நடந்துகொண்டமையினால் இன்னமும் நான்கு ஆண்களுக்கு இவர் சிறையில் அடைக்கப்படுவார்.

http://www.puthinappalakai.org/view.php?20101125102562

எம்மவர்களுக்கு ... தமிழன் தமிழிச்சியை பிடிக்கிறான்/கட்டுகிறான் என்ற திருப்தி கூட இல்லாத சமூகமாய்!!!!!!!!!?????? ... நாளை மகனோ/மகள் வெள்ளையோ, கறுப்பனோ ஒருவனுடன் வந்தால் பெருமிதப்படுவார்கள்????!!!!

எம்மவர்களுக்கு ... தமிழன் தமிழிச்சியை பிடிக்கிறான்/கட்டுகிறான் என்ற திருப்தி கூட இல்லாத சமூகமாய்!!!!!!!!!?????? ... நாளை மகனோ/மகள் வெள்ளையோ, கறுப்பனோ ஒருவனுடன் வந்தால் பெருமிதப்படுவார்கள்????!!!!

இதை அடுத்த தலைமுறைக்கும் பரப்புகிறார்கள் என்பது மிகவும் வேதனையான விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மவர்களுக்கு ... தமிழன் தமிழிச்சியை பிடிக்கிறான்/கட்டுகிறான் என்ற திருப்தி கூட இல்லாத சமூகமாய்!!!!!!!!!?????? ... நாளை மகனோ/மகள் வெள்ளையோ, கறுப்பனோ ஒருவனுடன் வந்தால் பெருமிதப்படுவார்கள்????!!!!

சகல இனத்தவரும் அருவருக்கத்தக்க வகையில்தான் எம்மவரின் குழந்தைகள் நாகரீகம் அல்லது முன்னேற்றம் எனும் போர்வையில் பல கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள்.ரோட்டிலும் புகையிரதநிலையங்களிலும் வேலைவெட்டியில்லாமலும் ஒழுங்கான படிப்பறிவில்லாமலும் இருக்கும் பையன்களுக்கு எந்த தாய்தகப்பன் தங்கள் மகளை சேரவிடுவார்கள்?

சாதி,தமிழ் எனும் பெயரில் சின்னஞ்சிறுசுகள் வழிமாறிப்போவதை சரியென நிலை நிறுத்தாதீர்கள்?

அதே நேரம் அங்கு வெளிவராத பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கலாம்?

சகல இனத்தவரும் அருவருக்கத்தக்க வகையில்தான் எம்மவரின் குழந்தைகள் நாகரீகம் அல்லது முன்னேற்றம் எனும் போர்வையில் பல கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள்.ரோட்டிலும் புகையிரதநிலையங்களிலும் வேலைவெட்டியில்லாமலும் ஒழுங்கான படிப்பறிவில்லாமலும் இருக்கும் பையன்களுக்கு எந்த தாய்தகப்பன் தங்கள் மகளை சேரவிடுவார்கள்? அதே நேரம் அங்கு வெளிவராத பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கலாம்?

கடந்த சில வாரங்களாக இதுபற்றி இங்கு எழுதலாம் என்று யோசித்தேன், சமயம் கிடைக்கும்போது கூறுகின்றேன்.

திறந்த மனமும் அகண்ட பார்வையும் இருந்தால், இப்படியான எமது சமூக நிகழ்வுகளை குறைக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும்பனமை இனத்தவர்கள் மத்தியில் கூட ஒரு காலத்தில் தொழில்மயமாக உருவாக்கப்பட்ட பாகுபாடுகள் அதிகளவில் இருந்தன. இன்றும் இங்கு அவர்கள் "பொருளாதார" / "தொழில்" அடிப்படையிலேயே அதிகளவு திருமணங்களை செய்கிறார்கள்.

"பொருளாதார" / "தொழில்" அடிப்படை - உதாரணத்திற்கு, மருத்துவருக்கு படிக்கும் ஒருவர் ஒரு மருத்துவரையே திருமணம் செய்வது அதிகமாயும் ஒரு கிராமத்தில் பண்ணை வைத்திருப்பவர் ஒரு விவசாயம் சம்பந்தப்பட்ட ஒருவரை திருமணம் செய்யும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.

அதே வேளை, சில திருமணங்களை சில பெற்றோர் அனுமதிக்காத காரணத்தால் எல்லா சமூகங்களிலும் தற்கொலைகளும் கொலைகளும் நடக்கின்றன. இளவரசி டயானா அவர்களின் ( முஸ்லீம் பணக்காரரை காதலித்தால் / வயிற்றுக்குள் பிள்ளையை சுமந்ததால் ) கொலை உலகப் பிரசித்தி பெற்றது.

பெரும்பாலான புலம்பெயர் தமழ் மக்கள் தம் பிள்ளைகள் தமிழரை திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். பெரும்பாலானோர் தமது மொழி, சமய, கலாச்சார பண்புகளை படிக்க/தெரிய வைப்பதன் மூலம் இப்படியான சாத்தியத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள். இதை நாமும் ஊக்குவிக்க வேண்டும்.

இந்த விடயத்தில் பிழை திரு. செல்வநாயகம் அவர்களுடையது மட்டுமல்ல. சனமெல்லாம் சேர்ந்து அவரை மட்டும் போட்டு தாக்காமல் இந்த குடும்பத்தின் (மருமகனையும் சேர்த்து) மறு வாழ்வுக்கு வழி செய்ய வேண்டும்.

இங்கே முக்கியமான பிழை எமது சமூகத்திலேயே உள்ளது. பலருக்கு சாதி என்பதை விட, வேற சாதியை மணமுடித்தால் மற்றவர்கள் என்ன கதைப்பார்கள் என்ற பயமே மேலோங்கி நிற்கிறது. இந்த நிலை மாற வேணும். அதுக்கு எங்கடை சமூகம் மற்ற குடும்பத்தை பற்றி அளவுக்கு மீறி Gossip பண்ணுவதை நிறுத்த வேணும்.

எமது சமூகத்தில் பலர் பாக்டரி மற்றும் உணவு விடுதிகளில் கடுமையாக வேலை செய்து தமது குடும்பத்தை கஷ்டம் தெரியாமல் வைத்திருபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமது பிள்ளைகளுக்கு கொஞ்சம் கஷ்டத்தை காட்ட வேணும். செல் போன் பிள்ளைகள் வைத்திருக்க விரும்பினால் அவர்களையே ஒரு பகுதி நேர வேலை செய்து அதை pay பண்ண விட வேணும். பல்கலை கழகம் சென்று படிக்க விரும்பினால் செலவில் ஒரு பகுதியை மட்டும் கொடுத்து மிகுதியை அவர்களே உழைத்து கட்ட விட வேணும்.

முக்கியமாக கண்டதுக்கெல்லாம் hall போட்டு பார்ட்டி செய்வதை நிறுத்த வேணும்.

எனது 2 சதம்.

Edited by nadodi

இன்று உலகத்தில் பொருளாதார அடிப்படியிலேயே ஒருவகை சமூக பிரிவு உருவாகின்றது என்பதை உலகத்தின் முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் கண்கூடு.

நடக்கும் பொருளாதார சரிவு தொடரும் வேலையில்லாத திண்டாட்டம் - இவையால் பாதிக்கப்படுவது பொருளாதார ரீதியில் பலவீனமான மக்களே!

இதைப்பற்றி ஒரு கட்டுரை இன்றைய நியூயார்க் ரைம்சில் வந்துள்ளது.

The class war that no one wants to talk about continues unabated.

Even as millions of out-of-work and otherwise struggling Americans are tightening their belts for the holidays, the nation’s elite are lacing up their dancing shoes and partying like royalty as the millions and billions keep rolling in.

Recessions are for the little people, not for the corporate chiefs and the titans of Wall Street who are at the heart of the American aristocracy. They have waged economic warfare against everybody else and are winning big time.

The ranks of the poor may be swelling and families forced out of their foreclosed homes may be enduring a nightmarish holiday season, but American companies have just experienced their most profitable quarter ever. As The Times reported this week, U.S. firms earned profits at an annual rate of $1.659 trillion in the third quarter — the highest total since the government began keeping track more than six decades ago.

The corporate fat cats are becoming alarmingly rotund. Their profits have surged over the past seven quarters at a pace that is among the fastest ever seen, and they can barely contain their glee. On the same day that The Times ran its article about the third-quarter surge in profits, it ran a piece on the front page that carried the headline: “With a Swagger, Wallets Out, Wall Street Dares to Celebrate.”

http://www.nytimes.com/2010/11/27/opinion/27herbert.html?_r=1&hp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.