Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுப்பிரமணியப் பூங்கவின் இன்னோர் எழுச்சி) காணொளி‏

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் சுப்பிரமணியம் பூங்காவில் எலிபன்ட் குளிர்பாண விற்பனை நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிறுவர்களுக்கான விளையாட்டுக் கருவிகளை இயங்க வைக்கும் நடவடிக்கை இன்று யாழ் மாநகரசபை ஆணையாளர் மு. சரவணபவ தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணநாதன் பிரதம விருந்தினராகவும் எலிபன்ட் குளிர்பான இரண்டாவது தலைமை அதிகாரி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றார்கள். யாழ் மாநகர சபையின் பிரதம எந்திரவியலாளர் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

thx

http://www.newjaffna.com/

Edited by pirasath20

சறுக்கீஸ்,சீ ஸோ, இந்த இரண்டையும் நான் முதலில் கண்டதும் விளையாடியதும் இங்குதான்.வீட்டிற்கு வந்து ஒரு உலக்கையை இரண்டாகவெட்டி நட்டு அதன் மேல் ஒரு நீளப்பலகையை வைத்து சீ சோ செய்தது இன்னமும் நல்ல ஞாபகம்(உலக்கையை வெட்டியதற்கு அடி வங்கியது வேறு கதை)

அங்கு பெரிய சத்தமாக வானொலியை கேட்க மிக இனிமையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியம் பூங்கா இருந்தது தான் இந்த அம்மாட்டிக்கு தெரியுது. ஆனால் போர் சூழலிலும் நாங்கள் குழந்தைகளாக இருந்து எமக்கும் உலக தரத்தோடு ஒப்பிடுகையில் ஒரு குறையில்லாத பொழுதுபோக்கை விடுதலைப்புலிகள் குறிப்பாக யாழ் மாநகர எல்லைக்குள் இரண்டு பூங்காக்களை அமைத்து ஈட்டித் தந்திருந்தனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

say050.jpg

ஒன்று விலங்குகள் சரணாலயத்தோடு கூடிய கந்தர்மடத்தில் அமைந்திருந்த பொன்னம்மான் நினைவுப் பூங்கா. இரண்டு நல்லூரடியில் அமைந்திருந்த கிட்டு நினைவுப் பூங்கா.

அவை இதே சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசின் விமானக் குண்டு வீச்சுக்களுக்கு இலக்காகின. பின்னர் யாழ்ப்பாண ஆக்கிரமிப்போடு அவை அழிக்கப்பட்டு விட்டன.

ஆக.. புலிகள் பொழுதுபோக்கை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. சிங்கள அரசும் சிங்கள முதலாளிகளும் ஏற்படுத்திக் கொடுப்பதுதான் நன்றிக்கடனுக்குரியது.

ம்ம்ம்.. நல்ல கொள்கை.

எதுஎப்படியோ.. கடந்த காலங்கள் கடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தில் வடக்குகிழக்கு சிறார்களின் நலன் கருதி அமையும் திட்டங்களில் இதுவும் ஒன்று என்றால் வரவேற்பதில் தவறில்லை. ஆனால் கடந்த காலங்களில் சிங்களம் அழித்தவற்றையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் எதிரிக்கு சேவை செய்யாமல் எமக்கு எமது இனத்திற்கு என்று உழைக்க முன்வர வேண்டும். எமது முதலீடுகளை அங்கு செய்ய வேண்டும் என்று முன்னரும் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.. இப்போ சிங்களம் எமது மண்ணில் தனது முதலீடுகளின் மூலம்.. வலுவான பொருளியல் மற்றும் வள பயன்பாட்டு ஆக்கிரமிப்பையும் செய்கிறது.

எமது போராட்ட வடிவம்.. எதிர்ப்புக் காட்டுவதோடு நின்று விடாது இராஜதந்திர மக்கள் நலன் பேணும் வடிவிலும் அமைய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சிறு சலுகைகளை வழங்கி அவர்களின் மனதை வெல்ல நினைக்கும் எதிரி மற்றும் அவனின் அடிவருடிகள் பற்றியும் மக்கள் அறிய முடியும். தெளிவு பெற முடியும்.

Edited by nedukkalapoovan

யாழ் அரச அதிபர் மாண்புமிகு திருமதி.இமெல்டா சுகுமார் அவர்களுக்கு கொழும்பிலிருந்து ஒரு பகிரங்க கடிதம்

[ புதன்கிழமை, 15 டிசெம்பர் 2010, 03:04.10 PM GMT +05:30 ]

மாண்புமிகு யாழ் அரச அதிபர் அவர்களே!.தாங்கள் புலம்பெயர் தமிழர்கள் வீண் வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமென“ தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ற நினைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தீர்கள். இப்படியான சின்னப்பிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிட்டு.......

கொழும்பு

14.12.2010

மாண்புமிகு திருமதி.இமெல்டா சுகுமார் அவர்கள்,

யாழ் அரசாங்க அதிபர்,

யாழ்ப்பாணம்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய யாழ் அரசாங்க அதிபர் மாண்புமிகு திருமதி. இமெல்டா சுகுமார் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழினத்தின் ஒரு பரம்பரையை முள்ளிவாய்க்காலில் வைத்து கொலை செய்த இலங்கை ஜனாதிபதி அவர்கள் அண்மையில் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார். அங்குள்ள புலம்பெயர் தமிழர்களின் சீற்றத்திற்கு உட்பட்டு போர்க்குற்றவாளியான இலங்கை ஜனாதிபதிக்கெதிரான ஜனநாயக மரபிற்குட்பட்டு அவரின் நிகழ்ச்சிகளை முடக்கிய புலம்பெயர் தமிழர்களுக்கு தாங்கள் அறிவுரை சொல்ல புறப்பட்டு இன்று தாங்களும் ஈழத்தமிழர்-புலம்பெயர் தமிழரென அனைத்து தமிழர்களின் வெறுப்பிற்கு ஆளாகியிருப்பதை அறிவீர்களா.

தாங்கள்“புலம்பெயர் தமிழர்கள் வீண் வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமென“தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ற நினைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தீர்கள்.தங்களது இந்த அறிக்கையை இணையத்தளம் ஒன்று, திங்கட்கிழமை (13.12.2010) வெளியிட்டு தமிழருக்கெதிரான, இலங்கை இனவாத அரசிற்கு விசுவாசமான தங்கள் முகத்திரையை கிழித்து உலகத் தமிழர்களுக்கு இனங் காட்டியுள்ளது.

மாண்புமிகு யாழ் அரச அதிபர் அவர்களே!.

புலம்பெயர் தமிழர்கள் இனமானத்துடனும் வலி நிறைந்த இதயத்துடனும் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை உணர மறுத்து,அவர்களை சீண்டும் விதத்தில் உங்கள் கல்வித்தகைமைக்கு ஏற்ப பொதறிவு அற்றவராக இப்படியான சின்னப்பிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிட்டு தமிழச்சியாகிய தாங்கள் வெட்கக்கேடான நிலைக்குள் உங்களைக் கொண்டு சென்றுள்ளீர்கள்.

தங்களை தமிழச்சி என்று விளித்தமைக்கு காரணம் தாங்கள் தமிழச்சி என்ற நிலை உணராது கீழ்நிலைக்கு போய்க் கொண்டிருப்பதை உணர்த்தவே, தாங்கள் தமிழினத்தைச் சார்ந்தவர் என்பதை எப்பொழுது உணர்வீர்கள்?

தங்கள் நிர்வாகத்திற்குட்டபட்ட மக்களுக்கு என்னென்ன நன்மைகளை அபிவிருத்திகளைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாது அரசாங்கத்தின் ஏவலாளாக வெறும் கொண்டாட்டங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு புலம்பெயர் தமிழர் பற்றி அறிவுரை சொல்லவோ, அபிப்பிராயங்கள் சொல்லவோ எவ்வித தகுதியோ, உரிமையோ கிடையாது. தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை புலம்பெயர் தமிழர்களைக் கொண்டு சொல்ல வைக்காதீர்கள்.

புலம்பெயர் தமிழர்கள் ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் சுதந்திரமற்று வாழும் தமது உறவுகளை ஒவ்வொரு விநாடியும் நினைத்துக் கொண்டேதான் வாழ்கிறார்கள். பனியிலும் குளிரிலும் உணவு விடுதிகளிலும் இரவு பகலாக தமது உறவுகளுக்காக உழைத்து உடல் நலிந்த போதும் மனம் தளராது ஈழத்தில் வாழும் உறவுகளின் விடுதலைக்காக எரிமலையாக குமுறியே நிற்கின்றனர்.

ஐரோப்பிய சொகுசு வாழ்க்கைக்குள் அவர்கள் அமிழ்ந்து போகாமல் தமது உறவுகளுக்காக எந்நேரமும் ஈழத்து உறவுகளின் அரசியல் உரிமைக்காக களத்தில் குதிக்கிறார்கள், குதிக்கத் தயாராகவிருக்கிறார்கள்.

ஆனால் தாங்கள் தமிழர்களின் அவலமான சூழ்நிலையில் வாழ்ந்தும் அதை உணர மறந்து தமிழர்களின் இயலா நிலையைப் பயன்படுத்தி அவர்களை பகடைக்காய்களாக்க முயற்சிக்கின்றீர்கள். இலங்கை அரசின் நிர்வாக சேவைப் பிரிவைச் சேர்ந்த தங்களுக்கு இலங்கையின் பரப்பளவு தொடங்கி மக்கள் தொகை, இலங்கையின் பொருளாதார வளங்களான தொழில்துறைகள், விவசாயம், கடல், ஆறு, குளம், ஏரிகள், மூலவளங்கள், களனிவளங்கள் என்பனவற்றை தெரிந்து வைத்திருப்பது போல் ஈழத்தமிழரின் சரித்திரமும் தெரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.

கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனிதப் பேரழிவை தாங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது அதுபற்றித் தெரியாதா?

அந்த மனிதப் பேரழிவின் எதிரொலிதான் இலங்கை ஜனாதிபதிக்கெதிரான பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களின் ஜனநாயக எழுச்சி என்பதை உணருங்கள். தமிழினத்தை காட்டிக் கொடுப்பதற்கென்றே நிறையப் பேர் உருவாகிறீர்களே!.

பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டோம் என்பவர்களிடமிருந்து தமிழர்களுக்கான உரிமையாக எதைக் கண்டிருக்கின்றீர்கள். வெள்ளைப் புறாக்களை பறக்கவிடுவதாலோ நட்சத்திர விடுதிகளில் தமிழர்களைக் கொன்றவர்களுக்கு விருந்து வைப்பதாலோ தமிழர்கள் உரிமை பெற்று மகிழ்வாக வாழ்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ள முடியுமா?.

ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழர் வரலாறு பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை அறிய முயலுங்கள். புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து வீண் வேலைகளைச் செய்ய வேண்டாம் என்ற வீண் வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் என உங்களுக்கு அறிவுரை கூறுகின்றோம்.

-அங்கயற்பிரியன்

இங்கு காணொளியில் 52வது செக்கனில் seesaw விளையாடுகின்ற சிறுமி ஓர் விபத்தில் இருந்து தப்புகின்றார். காரணம் seesaw சரியான முறையில் தயாரிக்கப்பட்டு பரீட்சிக்கப்படவில்லை போலத் தெரிகின்றது. குறிப்பிட்ட seesaw திருத்தம் செய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் சிறுவர், சிறுமியர் விபத்தில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதுகாப்பு காரணங்களிற்காக seesawஇன் இரண்டு முனைகளிலும் அடிப்பகுதியில் தடுப்புக்கள் இடப்படுவது வழமை. இந்ததடுப்பு இல்லாத காரணத்தினாலேயே எதிர்முனையில் உள்ள சிறுமி பலங்கொண்டு எத்தும்போது மேலே உயர்த்தப்படும் மற்றைய சிறுமி விழுகின்றார். அத்துடன் seesawவெறும் புற்தரையில் விளையாடப்படுவது பாதுகாப்பானது அல்ல. அது மணல் நிரம்பிய தரையாக அமையவேண்டும்.

Ozbozz-Cosmic-See-Saw-Blue.jpgSeeSaw_Safety.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு காணொளியில் 52வது செக்கனில் seesaw விளையாடுகின்ற சிறுமி ஓர் விபத்தில் இருந்து தப்புகின்றார். காரணம் seesaw சரியான முறையில் தயாரிக்கப்பட்டு பரீட்சிக்கப்படவில்லை போலத் தெரிகின்றது. .

தமிழரை சந்தோசப்படுத்தவோ

தமிழரின் நலன் சார்ந்தோ

தமிழரை பாதுகாக்கவோ அது அமைக்கப்படவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.