Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானும் , குழுவினரும் டென்மார்க்கில் வந்திறங்கியுள்ளனர்

Featured Replies

அரச ஆதரவுடன் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானும் அவரது சகாக்களும் டென்மார்க்கில் வந்திரங்கியுள்ளனர். டென்மார்க்கில் ஓகுஸ் என்ற இடத்தில் இவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக அங்கிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. இவர்கள் டென்மார்க்கில் இருக்கும் ஓர் முக்கிய விரோத கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஒருவரின் அழைப்பின் பேரில் வந்துள்ளதாகவும் எதிர்வரும் 24 திகதி நடைபெறவிருக்கும் நத்தார் களியாட்ட விழா ஒன்றில் பங்குபற்றவுள்ளதாகவும் கூறபப்டுகின்றது. இந்த விழாவிற்கு சமூகம் கொடுக்கவெனவே வீசா பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

பிள்ளையான் பல்வேறு கடத்தல் காணாமல் போதல் ஆகியவற்றிற்கு பொறுப்பாக செயற்பட்டவர். குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளர்கள் உட்பட ஒன்பது பேரை கடத்தி , பாலியல் வல்லுறவு செய்தபின் சித்திரவதை செய்து கொலைசெய்தமைக்கும் பிள்ளையானே பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையான் அவர்களும் அரச ஆதரவுடன் சேர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் என்ற வகையில் புலம்பெயர் மக்களின் சீற்றத்திற்கு ஆளாகலாம் என அறியப்படுகின்றது.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கில் கேஸ்போட ஒருவரும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியம்தான். வந்தவர்கள் கொஞ்சம் குளிரையும் அனுபவித்துவிட்டுப் போகட்டுமே.

  • தொடங்கியவர்

டென்மார்க்கில் கேஸ்போட ஒருவரும் முன்வரமாட்டார்கள் என்ற தைரியம்தான். வந்தவர்கள் கொஞ்சம் குளிரையும் அனுபவித்துவிட்டுப் போகட்டுமே.

டென்மார்க்கில சனங்கள் சிங்களவனிற்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருக்குங்கள்.. பிள்ளையான் போன்றவர்களுக்கு என்ன செய்யலாம் என இனித்தான் சிந்திக்க வேண்டும்.

டென்மார்க்கில சனங்கள் சிங்களவனிற்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருக்குங்கள்.. பிள்ளையான் போன்றவர்களுக்கு என்ன செய்யலாம் என இனித்தான் சிந்திக்க வேண்டும்.

ஒத்தாசையாக இருந்தவனும், தமிழத் தேசிய விடுதலை போராளிகள் மற்றும் உணர்வாளர்களை படுகொலை செய்தவனுமான பிள்ளையான் எனப்படும் ஆயுததாரி சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது ஒருசில ஐரோப்பிய வாழ் சகாக்களை சந்திப்பதற்காக டென்மார்க் வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை கடந்த வாரமே அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையின் மானிட விவகார குழுவின் சிறப்புப்பிரிவினர் டென்மார்க் அரசின் அனைத்துலக குற்றவியல் பிரிவினரிடம் தமிழ் மக்கள் மீது ஆயுததாரி பிள்ளையான் புரிந்த மானிடத்திற்கெதிரான குற்றங்களில் சிலவற்றை சேகரித்து டென்மார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் ஊடாக முறையிட்டுள்ளனர்.

மானிடத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததற்காக ஆயுதாரி பிள்ளையான் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், ஆயுததாரியை கைது செய்து அனைத்துலக நீதிமன்றிலோ அல்லது டென்மார்க் நீதிமன்றிலோ நிறுத்துவது தொடர்பாக தான் விரைவில் தெரிவிப்பதாகவும் டென்மார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசுகள் புரிந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் கடந்த ஒக்ரோபர் மாதம் வழக்குப் பதிவு செய்த அதே வழக்கறிஞரே ஆயுததாரி மீதான வழக்கையும் இப்பொழுது பதிவுசெய்துள்ளார்.

ஆயுததாரி பிள்ளையான் டென்மார்க் காவல் துறையினரால் கைதுசெய்யப்படலாம் என்பதை அறிந்த ஆயுததாரியின் ஆதரவாளர்கள், ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றை இரத்துச் செய்ததுடன் ஏனைய சந்திப்புகளையும் இரத்துச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் ஆயுததாரியின் டென்மார்க் பயணமே இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் வதந்தியை பரப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் இறுதியாக கிடைக்கப்பட்ட செய்திகளின் படி ஆயுததாரி பிள்ளையான் நேற்று (21.12.2010) டென்மார்க் தலைநகரை வந்தடைந்து, அவனது ஆதரவாளன் ஒருவனால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுததாரி பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், மனிதவுரிமைசெயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான மேலதிக விபரங்களையும் ஆதாரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவையினர் எதிர்பார்க்கின்றனர்.

ஆயுததாரியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆயுததாரி பிள்ளையான் தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் டென்மார்க் காவல்துறையின் விசேட பிரிவினரிடம் தங்கள் பதிவுகளை நேரடியாக மேற்கொள்ள டென்மார்க் தமிழர் பேரவையினரை தொடர்புகொள்ளவும்.

மின்னஞ்சல் : forum@dansktamilskforum.dk

ஆயுததாரி பிள்ளையான் மற்றும் அவனுடன் டென்மார்க் வந்துள்ள சகாக்கள் தொடர்பான விபரங்களையும் ஆயுததாரிகள் டென்மார்க்கில் தங்கியிருக்கும் விபரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவைக்கு தெரிவித்து ஆயுததாரிகள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு டென்மார்க் வாழ் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு :

மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk

தொலைபேசி: 00 45 5217 3671

Pathivu

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நேரத்தில் ஓடுபட்டுத் திரியாமல், இலங்கையரசியலிலும், இராணுவத்திலும் உள்ள மனிதவுரிமை மீறியோர் அனைவருக்கும் எதிராக மேற்கு நாடுகள் (மற்றும் பல உலகநாடுகள்) அனைத்திலும் வழக்குத்தாக்கல் செய்யப்படவேண்டும்.

புலத்தில் .. குறிப்பாக டென்மார்க்கில் தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவைகள் என்ன செய்யப் போகினம் பார்ப்பம்???? ... இதுவரை காலமும் சேறடிப்புகளிலும், துரோகிப்பட்டங்கள் கட்டுவதிலும் நேரத்தை செலவளித்தார்களா??? இல்லை சிங்க்ளத்தினதும், ஒட்டுக்குழுக்களினதும் இனவழிப்பு ஆதாரங்களை திரட்டி, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக இருந்தார்களா? ... என்பது தெரிய வரும்!!!!

... எங்கே இந்த நாலறிவு மிருகம் பிள்ளையானையும் கோட்டை விடப் போகிறார்களா????? ... என்பதைப் பார்ப்போம்!!!

உந்த நாலறிவு மிருகம், டென்மார்க்கில் உள்ள சிங்களத்திற்கு காலம் காலமாக காட்டிக் கொடுத்து வாழ்ந்து வரும் குமாரதுரை குடும்பத்தின் பாதுகாப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்!!!

... எங்கே இந்த நாலறிவு மிருகம் பிள்ளையானையும் கோட்டை விடப் போகிறார்களா????? ... என்பதைப் பார்ப்போம்!!!

கருணாவை தமிழ்மக்கள் விடுதலை புலிகளில் இருந்து பிரித்து வெளியாலை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்க அவனை திருப்பி ஊருக்கு அனுப்பி வைச்ச புண்ணியவான்கள் எங்கட ஆக்கள்...

வெறும் கள்ளப்பாஸ்போடு வழக்கு மட்டும் போட்டு அனுப்பி வைச்சதை மறக்க முடியுமா...??

இந்த ஒட்டுக்குழுவை சிங்ககத்திற்கு எதிராக, மகிந்தர் கூட்டம் செய்த / செய்யும் மனித உரிமை மீறல்களை / போர்க்குற்றங்களை

ஐ. நா.வுக்கும் உலகிற்கும் சொல்லவைக்கும் பிரதிவாதியாக மாற்ற முயற்சிப்பதும் ஒரு அணுகுமுறையாக இருக்கும்.

  • தொடங்கியவர்

இந்த ஒட்டுக்குழுவை சிங்ககத்திற்கு எதிராக, மகிந்தர் கூட்டம் செய்த / செய்யும் மனித உரிமை மீறல்களை / போர்க்குற்றங்களை

ஐ. நா.வுக்கும் உலகிற்கும் சொல்லவைக்கும் பிரதிவாதியாக மாற்ற முயற்சிப்பதும் ஒரு அணுகுமுறையாக இருக்கும்.

அமெரிக்கா அப்படி சரத் பொன்சேகாவை மாற்ற முயற்சி செய்தது... ஆனால்..

பிள்ளையான் மஹிந்தருக்கு எதிராக சிறு மூச்சு விட்டால் கூட அங்கு போக ஏலாது

two separate abductions of TRO employees by the Karuna faction then coordinated by Sivanesathurai Chandrakanthan alias Pillaiyaan. Seven TRO personnel were killed. One was a woman. She was gang raped before death./

http://www.tamilsydney.com/content/view/369/37

http://dbsjeyaraj.com/dbsj/archives/1187

இங்கு புலத்தில் ... மே18இற்கு பின்னம் ... உருத்திரகுமாரில் காதல் கொண்டும், புலம்பெயர் தமிழீழ அரசில் அன்பு கொண்டும் தமது வீர தீரங்களை கொட்டித்தீர்த்த ... நெடியமானின் சேரமானும், அதியமானும், மற்றைய புள்ளிமான்களும் ... இவைகளில் கொஞ்சமாவது கவனம் செலுத்தியிருக்கலாமே??? இல்லை இன்றாவது இதற்கேதாவது செய்யலாமே??? ... ஏன் முடியாதோ??? இல்லை பணம் இல்லையோ??? ...

... உந்த நாலறிவோ, மூன்றறிவுகள் புலத்துக்கு வாறது ... வாறவங்களுக்கல்ல, இங்குள்ள தமிழ்த்தேசியத்தை குத்தைக்கு எடுத்த பூசாரிகளுக்கு தான் பிரஷர்!! ... இனி சனம் ......

..... என்ன செய்தனீங்கள்? ஏன் விட்டனீங்கள்? ஏன் தயாராக இருக்கவில்லை??? இலட்சக்கணக்கானவர்களை பற்றியா நீங்கள் தரவெடுக்க வேண்டும்? ஓரிரு சிங்கள அரசியல்வாதிகள், சில சிங்கள இராணுவ தளபதிகள், சில ஒட்டுக்குழு தலைவர்கள்!!! இவைகளும் உங்களால் முடியாதா, இன்றைய சூழ்நிலையில்!!! ... இதைச் செய்ய முடியாதென்றால், வேறென்னத்தை செய்ய/சாதிக்கப் போகிறீர்கள்???????....

........ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கப் போகிறார்கள்!!!

Edited by Nellaiyan

பிள்ளையான் மஹிந்தருக்கு எதிராக சிறு மூச்சு விட்டால் கூட அங்கு போக ஏலாது

அவருக்கு அரசியல் புகலிடம் கிடைக்கும்.

  • தொடங்கியவர்

அவருக்கு அரசியல் புகலிடம் கிடைக்கும்.

அப்பிடித்தான் ஐடியாவோ தெரியாது ஆனால் .. அங்க செய்தது மாதிரி இங்க செய்ய முடியாதே..

two separate abductions of TRO employees by the Karuna faction then coordinated by Sivanesathurai Chandrakanthan alias Pillaiyaan. Seven TRO personnel were killed. One was a woman. She was gang raped before death./

உண்மையில் நாலறிவு மிருகம் பிள்ளையான் டென்மார்க் வந்திருக்கிறானா???? வந்திருப்பது உண்மையாயின் ... இங்கு புலத்தில் குறிப்பாக டென்மார்க்கில் உள்ள TRO உறுப்பினர்கள் கூட என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்??? ... தம் சக TRO உறுப்பினர்கள் கற்பளிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதும் இவர்களுக்கு தெரியாததா???

Edited by Nellaiyan

தலைவர் பிள்ளையானவரை எந்த பூனைகளாலும் ஒன்றும் செய்ய முடியாது.

  • தொடங்கியவர்

தலைவர் பிள்ளையானவரை எந்த பூனைகளாலும் ஒன்றும் செய்ய முடியாது.

தலைவரா.... எதற்கு??

பிள்ளையானை கைதுசெய்ய குற்றவியல் பிரிவுக்கு மின்னஞ்சல்

http://www.pathivu.com/news/14645/57//d,article_full.aspx

இங்கே ... பதிவார் சொல்கிறார்கள், மின்னஞ்சல் அனுப்பட்டாம்!!!!!!!!!!!!!! பாவங்கள் குத்தகைக்கு எடுத்துப் போட்டு ... மே18இற்குப்பின்னம் சேற்றை அள்ளி வீசியும், துரோகப்பட்டங்கள் கொடிகட்டி பறக்க விட்டும் தான் இன்றுவரை இருந்திருக்கிறார்கள்!!! .... சரியான பரிதாபத்துக்கு உரியவர்கள், இந்த புலத்து பூசாரிகள்????

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஆதரவுடன் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானும் அவரது சகாக்களும் டென்மார்க்கில் வந்திரங்கியுள்ளனர். டென்மார்க்கில் ஓகுஸ் என்ற இடத்தில் இவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக அங்கிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. ]

ஓகுஸ் மக்கள் மிகத்தெளிவானவர்கள்

அங்கு நின்றால் எமது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை நிச்சயம் சந்திப்பார்

  • தொடங்கியவர்

ஓகுஸ் மக்கள் மிகத்தெளிவானவர்கள்

அங்கு நின்றால் எமது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை நிச்சயம் சந்திப்பார்

டென்மார்க்கில் வழக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது... ஆரோ ஒரு சட்டவாளர் ஊடாக செய்துள்ளனராம்.. விபரம் தெரியவில்லை.

முதலில் சிங்கள பயங்கரவாதிகளை, சிங்கள அமைப்புக்களின் இனவெறிப் பயங்கரவாதங்களை அடக்குங்கள்.

சில பின்புலங்களை அறியாது செயற்படுவது பாதகமாகலாம்.

வழக்குகள் தாக்கல் செய்யும் போது போர்க்குற்றங்கள் புரிந்த சிங்கள பயங்கரவாதிகளின் தூதரகங்கள் மீதும், அரசு மீதும் போடுவது முக்கியமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.