Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் |கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!!

Featured Replies

(இந்த அறிக்கை நேற்று எனது மின்னஞசல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது)

புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும்

|கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!!

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின், உலகஅரங்கில் கடும்

தொனியில் எதிரொலித்த ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற முழக்கத்தில்

உண்மையான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதோ இல்லையோ, பல தேசிய இனங்களின்

விடுதலைப் போராட்டங்கள், நசிந்தும், மெலிந்தும், உயிர்பிரிந்தும் போயுள்ளன.

சிங்கள இனவாத அரசும், இந்தப் பொதுப்பதத்தை தன் கையில் கெட்டியாகப் பிடித்தே,

பல நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு

எதிரான மூர்க்கத்தனமான, கோழைத்தனமான பெரும் போரை நடத்தி முடித்திருக்கின்றது.

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், பெரும் இழப்புக்களைச்

சந்தித்து, முள்ளிவாய்க்காலில், ஆயுதங்கள் மௌனித்தபோதும், தமிழரின் விடுதலைப்

போராட்டம் புலத்தில் அரசியல் ராஜதந்திரத் தளங்களில் தன் அடுத்த கட்ட நகர்வுகளில்

முனைப்புக் கொண்டுள்ளது.

இத்தகு வீரியமிகு முனைப்புக்களை, முளையிலேயே கிள்ளியெறியும் செயற்பாடுகளும் கூடவே

முனைப்புப் பெற்றுள்ளன.

இதற்கு அவர்கள் பாவிக்கும் பதம் ‘கே.பி.யின் ஆட்கள்.| என்பதாகும்.

கே.பி. சிங்களச் சிறையில் இருக்கும் ஒரு கைதி. சிறீலங்காவின் வரலாற்றில் அதிகூடிய

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒருவர். அவர், தற்போது, சிங்கள அரசின் சொற்படி

பேசுகின்ற, கைப்பொம்மையாக செயற்படுகின்ற ஒருவர் என்பது, அறிவுக் குறைச்சலான

ஒருவருக்குக் கூட நன்கு புரிந்துவிடும்.

அப்படியிருக்க, கே.பி.யோடு தொடர்புபடுத்தி, தமிழர்களின் நியாயமான விடுதலைச்

செயற்பாடுகளை, முடக்க இவர்கள் ஏன் முயற்சிக்கின்றார்கள்?

நாடுகடந்த தமிழீழ அரசு மீதும், பிரான்சில் அண்மையில் உதயமான தமிழர்

நடுவம் மீதும், தாயகவிடுதலைக்கு அர்ப்பணிப்போடு உழைத்தவர்கள் மீதும் இதே வசவுகள்

முன்வைக்கப்பட்டன. இது தொடரவே செய்யும்.

ஊடகப் பணியில் பிரதான பணியாக இத்தகைய சேறடிப்புக்களை மாத்திரமே கொண்டிருக்கும்

குறிப்பிட்ட சில ஊடகங்கள். பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் மீது மேற்கொண்ட வன்மம்

மிக்க, பொய்யும் புனைகதையுமாக சோடித்து வெளியிட்ட செய்திகளுக்கு பதில் சொல்வதைத்

தவிர்க்கவே, விரும்புகின்றோம். இவர்களுடன் உரசி, எம்மை அழுக்குப் படுத்திக்கொள்ள

விரும்பவில்லை. நாம் மக்கள் மீதான கரிசனையின் பேரில், தூய நோக்குடன்

பயணப்படுகின்றோம்.

நாங்கள் விரும்பாத, வெறுக்கின்ற, அசிங்கமான தளம் ஒன்றில், எம்மை நோக்கி

விரிக்கப்படுகின்ற சதிவலையில் சிக்கிக்கொள்ள நாம் விரும்பவில்லை.

இருந்தபோதும், இச்சந்தர்ப்பத்தில், எம்மக்களுக்கு எம்மைப் பற்றி எடுத்துக்கூறும்

சந்தர்ப்பமாக இதனைக் கருதிக்கொள்கின்றோம்.

நாம் எதனையும் அழிக்கப்புறப்பட்டவர்கள் அல்ல. ஆக்கப் புறப்பட்டவர்கள்.

பொறுப்பற்ற, சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால், தேசியத் தலைவர் சிறிகச்

சிறுகக் கட்டியமைத்த பெருங்கோட்டை சிதைந்தழிந்து போய்விடுமோ என்ற பதைபதைப்பில்,

உந்துதலில், கைகோர்த்தவர்கள்.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் வரவேண்டும் என்று வலியுறுத்துபவர்கள்,

தேசியத் தலைவரின் பேரில் உண்மையான பற்றும் பாசமும், அவர் காட்டிய பாதையில்

உறுதியான ஈடுபாடும் கொண்ட யாவரும், இதனைத் தான் வலியுறுத்துவர். சிறு குழுக்களாகப்

பிரிந்துபோக யாரையும் அனுமதிக்கமாட்டார்.

சிதைவுகளை ஏற்படுத்தவும் முனைய மாட்டார்கள்.

பொது இலக்கு நோக்கி, ஒத்திசைவாக நகருவதே பலம். திசைக்கொன்றாய் தான்தோன்றித்தனமாக

செயற்படுவது வெற்றிக்கு இட்டுச்செல்லாது.

சில ஊடகங்களும், சில தனிநபர்களும், இந்தச் சிதைவு முயச்சிகளையே தீவிரமாய்

மேற்கொள்ளுகின்றனர். தேசிய தலைவர் கட்டிவளர்த்த பலத்தைச் சிதைத்தல், செயற்பாடுகள்

அற்ற தன்மையை உருவாக்குதல், இதன்மூலம் சிங்கள அரசின் விருப்பத்திற்கு

ஏற்ப, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தல் என்ற,

திட்டமிடலுடன்தான் இவர்கள் இயங்குகின்றார்களா? அல்லது, தங்களது சொந்த நலன்கள்

பாதிக்கப்பட்டுவிடும் என்ற, கீழ்த்தரமான சுயநல அச்சமா?

இவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அவதானிக்கும் யாவரும், தெளிவான முடிவுக்கு

வரமுடியும்.

விமர்சனங்கள், வசைபாடல்கள், பொய்யான குற்றச்சாட்டுக்களின் ஊடாக, போராட்டத்தின்

ஆதரவாளர்களை, அனுதாபிகளை, பங்காளிகளை எதிரிகளாகக் காண்பிப்பது.

தூண்களாய் நின்ற தேசாபிமானிகளை தேசத் துரோகிகளாகப் பிரச்சாரப்படுத்துவது.

தேசியத்தலைவரை தமது சூரியத் தேவனாய் வரித்துக்கொண்டவர்களையே, தலைவருக்கு எதிரானவர்கள்

என முத்திரை குத்துவது.

எதிரியும், அதனைத்தான் கூறுகின்றான். இவர்களும் அதனைத்தான் செய்கின்றார்கள்.

உண்மையில், இவர்கள், போராட்டத்திற்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கின்றனர்.

தேசியத் தலைவருக்கு வரலாறு மன்னிக்காத பெரும் துரோகத்தைப் புரிகின்றனர்.

‘நாம் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் அல்ல’

‘கறையான் புற்றெடுக்க குடிகொண்ட பாம்புகளும் அல்ல நாம்’

விடுதலைப் போராட்டம் ஓங்கி வளர்ந்து பெரு விருட்சமான வரலாற்றின் பக்கங்களில்,

தமிழர் நடுவத்தின் பிரதிநிதிகளின், வேர்வையும், உழைப்பும், நாட்டில் போராடி,

தொடர் அறாமல் இங்கு சளைக்காமல் உழைத்தவரின் பங்களிப்பும், கரிசனையும்,

உயிர்த்துடிப்புள்ள அர்ப்பணிப்பும் விரவிக்கிடக்கிறது.

குருட்டுத்தனமான விமர்சனத்தை விட்டுவிட்டு, அறிவுக் கண்கொண்டு உண்மையை தேடிப்பாருங்கள்.

பெற்று வளர்த்த பெற்ரோருக்குத்தான் குழந்தையின் அருமை தெரியும். ஆதை

வெளியில் இருந்து பாத்தவர்களுக்கு குழந்தையின் அருமை தெரியா.

தமிழர் நடுவத்தின் பிரதிநிதிகளின் தகமை என்ன? தகுதி என்ன? என்பது குறித்து, யார்

எவர் அறிந்துவைத்திருக்கவேண்டுமோ அவர்கள் அறிந்தும் தெரிந்தும் வைத்திருக்கின்றனர்.

கடந்த ஒன்றரை வருடகாலமாக பொறுப்பில் இருந்தவர்கள் பொறுப்பற்ற முறையிலும,;

சிறுபிள்ளைத் தனமாகவும் செயற்பட்டதனாலேயே

இந்த தமிழர் நடுவத்தை உருவாக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

இடையில் வந்தவர்களின் விமர்சனங்கள் குறித்து நாங்கள்; அக்கறைப்படவுமில்லை,

அலட்டிக்கொள்ளவும் இல்லை.

எமது செயற்பாடுகளே எம்மை மக்களுக்கு அடையாளப்படுத்தட்டும்.

அன்பான மக்களே!

தேசிய விடுதலைப் போராட்டத்தை புலத்தில், சிதைப்பதற்கான பொறுப்பையும்,

தேசியத் தலைவர் புலத் தமிழனிடம் எதனை எதிர்பார்த்தாரோ அதனை முற்றாகத் தகர்க்கின்ற

நாசத்திட்டத்தையும் கையிலெடுத்திருப்பவர்கள் குறித்து உங்களுடையே பெரும் கேள்விகள்

நிட்சயமாய் எழும்.

ஊகங்களின் அடிப்படையிலான புனைகதைளையும் ஆய்வுகளையும் பரபரப்பு செய்திகளையும்

புனையும், திட்டமிட்டுப் பரப்பும்,

இவர்கள் யார்? இவர்களின் பின்னணி என்ன? இவர்களின் நோக்கம்தான் என்ன? ஏன் இப்படி

நடந்துகொள்ளுகின்றனர்.?

என்பன போன்ற பல கேள்விகள் உங்களிடம் ஏற்படக்கூடும்.

அதற்கான விடையை, அறிவின் துணைகொண்டு கண்டறியும் பொறுப்பையும் உங்களிடமே

விட்டுவிடுகின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

தற்போது கேபி நம்ப்ப கூடியவர் இல்லை ஆனால் புலத்தில் பூனைகளும் நல்லவர்கள் இல்லை.

தமிழர் நடுவகத்தின் இந்த அறிக்கையில எங்கட மகா மாண்புமிகு தேசிய ஊடகவியலாளர் பாலச்சந்திரன் அண்ணை போக்கிலி, ஊத்தையன், மோசடிக்காரன் எண்டெல்லாம் சொல்லிக்கிடக்கு. இத நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்கேலாது. அண்ணை பாலச்சந்திரன் நீங்கள் தான் எங்கட தேசியத்தலைவர். வாங்கோ அண்ணை கொடுக்க கட்டிக்கொண்டுவந்து இதுக்கு பதில சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நடுவர்கள் மையத்தின் ஒரு விளம்பரத்தில்

உண்மையாக தாயகத்துக்கு உழைத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டதைக்கேட்டேன்.

அதெப்படி

நாங்கள் ஒற்றுமையை விரும்புகின்றோம் என்பவர்களால் இப்படி சொல்லமுடியும்.............???

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சம்பந்தப்படடவர்கள் ஏன் பதில்தரவில்லை..........???

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சம்பந்தப்படடவர்கள் ஏன் பதில்தரவில்லை..........???

சம்பந்தப்பட்டவர்களுக்கு தாம்தான் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியாமல் இருக்கலாம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசிய போராட்டத்தில் கே.பி ஒரு முடிந்து போன அத்தியாயம், அதை ஏன் இவர்கள் திரும்ப திரும்ப கிண்டி கொடிருக்கின்றனர். சரி கே.பி துரோகி எண்டா அவரோட நிண்ட எல்லாரையும் துரோக்கி ஆக்குவது சரியா???

தலைமை தானே அனுப்பினது கே.பி-யோட இணைந்து வேலை செய்ய....அப்ப அவர்களையும் சேத்து துரோகி எண்டா..என்ன யாயம்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துரோகி என்ற சொல் தற்போதைய அவர்களது செயலிலேயே தங்கியுள்ளது. இதுவரையான செயற்பாடுகளைவிட, தற்போதைய அவர்களது செயற்பாடுகளே இவர்களை நாம் வகைப்படுத்துவதற்கு ஏற்றது. அந்தவகையில் கே.பியை கைதி என விட்டுவிட்டால், அவரது சொல்லுக்கு எவராவது கட்டுப்படுகிறார்களா அல்லது அவரது பாதையை எவரும் தொடர்கிறார்களா என்பது முக்கியம். அப்படி செய்வதற்கும் தொடர்வதற்கும் அவரவருக்கு உரிமையுண்டு. ஆனால் அது ரகசியமாக இருக்கக்கூடாது என்பது முக்கியம். ரகசியம் என்றால் அங்கு ஏதோ சதி நடக்கிறது அல்லது மக்களுக்கு ஏதோ மறைக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம். அந்த மறைத்தல் இனி ஒழிக்கப்படணும். அவரவர் தமது முகங்களை மக்களுக்கு காட்டணும். சரி அல்லது பிழையை மக்கள்தான் முடிவுசெய்யணும். கே.பியை தலைவர் என்று இங்கு சிலர் எழுதக்கண்டிருக்கின்றேன். அதை நான் வரவேற்கின்றேன். அவர்களது வருங்கால தமிழருக்கான நடவடிக்கைகளே அவர் மற்றவர்களுக்கும் தலைவரா என்பதை முடிவு செய்யும். எனவே இனி அவர்களது நடவடிக்கைகளை மக்கள் உற்று நோக்குவர். அவர்களது செயற்பாடுகள் அல்லது அவர்களது சேர்ந்து இயங்கும்தன்மையால் தமிழ்மக்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகளை வைத்தே அவர்களின் மக்கள் முன்பான செயற்பாடுகளுக்கான மக்கள் அனுமதியும் ஆணைகளும் கிடைக்கும்.

மற்றும் படி கேபியை நானும் ஏற்பேன்.

அவர் எப்போது மகிந்தவுடன் சேர்ந்தார் என்பதை உண்மையை சொன்னால். (அது மே 2009க்கு முன் இருக்கவே கூடாது.)

எப்படி பிடிபட்டார். (தானாக சரணடைந்ததாக இருக்கவே கூடாது.)

ஏனெனில் இவை அவர் தனது வாயாலேயே ஏற்கனவே சொன்னவை.

நவம் அண்ணை... !

இந்த அறிக்கையை வரைந்தவர்களிடம் முடிந்தால் ஒரு வேண்டுகோளை வைத்து விடுங்கள்... மக்களுக்கான அறிக்கைகள் எப்போதும் பொது மக்களை நோக்கி வைக்கப்பட வேண்டியவை... ஆனால் இது ஒரு தரப்பை நோக்கி எழுதப்பட்டு இருப்பதாக இருக்கிறது...

பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது அமைப்புக்களின் கடமை... ஆனால் ஒரு தரப்புக்கு கொடுக்கப்படும் விளக்கம் போல இருப்பது அந்த தரப்பை நீங்கள் கவனீக்கிறீர்கள் அல்லது ஒரு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது அவர்களை இன்னும் ஊக்கம் அடைய செய்யும் செயல்...

இதற்கு சம்பந்தப்படடவர்கள் ஏன் பதில்தரவில்லை..........???

நீங்களும் எங்களை போல விலகி நிண்டு வேடிக்கை பாக்கிறதுதான் இப்போதைக்கு நல்லது... ! சில சிக்கல்களுக்கு காலம்தான் சிறப்பான பதிலை தரும்...

Edited by தயா

நவம் அண்ணை... !

இந்த அறிக்கையை வரைந்தவர்களிடம் முடிந்தால் ஒரு வேண்டுகோளை வைத்து விடுங்கள்... மக்களுக்கான அறிக்கைகள் எப்போதும் பொது மக்களை நோக்கி வைக்கப்பட வேண்டியவை... ஆனால் இது ஒரு தரப்பை நோக்கி எழுதப்பட்டு இருப்பதாக இருக்கிறது...

பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது அமைப்புக்களின் கடமை... ஆனால் ஒரு தரப்புக்கு கொடுக்கப்படும் விளக்கம் போல இருப்பது அந்த தரப்பை நீங்கள் கவனீக்கிறீர்கள் அல்லது ஒரு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது அவர்களை இன்னும் ஊக்கம் அடைய செய்யும் செயல்...

நீங்களும் எங்களை போல விலகி நிண்டு வேடிக்கை பாக்கிறதுதான் இப்போதைக்கு நல்லது... ! சில சிக்கல்களுக்கு காலம்தான் சிறப்பான பதிலை தரும்...

வேலைத்திட்டங்களை முன்வைத்து அதனை மக்கள் முன் விளங்கப்படுத்தி அவர்கள் ஏற்றுக்கொண்டால் அதனை செயற்படுத்தும் வகையில் எந்த அமைப்பாவது முன்வர வேண்டும்.

ஆனால் அப்பிடி பெரிசா தெரிய இல்ல

வேலைத்திட்டங்களை முன்வைத்து அதனை மக்கள் முன் விளங்கப்படுத்தி அவர்கள் ஏற்றுக்கொண்டால் அதனை செயற்படுத்தும் வகையில் எந்த அமைப்பாவது முன்வர வேண்டும்.

ஆனால் அப்பிடி பெரிசா தெரிய இல்ல

ஒரு தரப்பு அரசாங்கத்தோடை நிண்டு குழப்புது... இன்னும் ஒரு தரப்பு பெரிய அளவு சொத்துக்களோடை நிண்டு அதை காப்பதே வேலை எண்டு நிக்குது... மூண்டாவதாக எந்த அடித்தளமும் இல்லாமல் ஒரு அமைப்பால் வேகமாக முன் வர முடியவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது...

ஆள்பற்றாக்குறை ( நம்பிக்கையானவர்கள் யார் என்பது தெரியாமை) பொருளாதாரம் எண்று பல தடைகள் இருக்கின்றன...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.