Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் 2010 ம் ஆண்டிற்கான வருடாந்த கணக்கறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் அமைப்பினூடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளிற்கு உதவிய மற்றும் உதவிக்கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து அன்பான உள்ளங்களிற்கும் முதல் வணக்கங்களையும் நன்றிகளையும் நேசக்கரம் தெரிவித்துக்கொள்வதோடு, எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகெங்கும்சிறுகச் சிறுகச் சேகரித்த உதவிகளை நேசக்கரம் அமைப்பு ஒருக்கிணைத்து எமது மக்களிற்காக பெருமளவில் கொண்டு சென்று சேர்த்துள்ளது. நேசக்கரத்தின் அடிப்படைத்திட்டங்களான :-

1)பெற்றோரை இழந்த அடிப்படைக் கல்வி வசதிகளற்ற குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் சத்துணவு திட்ட அடிப்படையில் இந்த ஆண்டு பயனடைந்த மொத்தம் 1970 மாணவர்கள்.

2)வசதியற்ற உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களிற்கான உதவித் திட்டத்தில் பயனடைந்தோர் மொத்தம் 120 மாணவர்கள்.

3)யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் உடல் அவயவங்களை இழந்தவர்களிற்கான சுய உதவித் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் மொத்தம் 210 பயனாளர்கள்.

4)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காயமடைந்த அல்லது அவயவங்களை இழந்தோர் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களிற்கான மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர்.58 பயனாளர்கள்.

உதவிகளை வழங்கிக் கொண்டிக்கும் அனைனவருக்கும் பயனாளர்கள் விபரங்கள் தொடர்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதோடு அவர்கள் தொடர்பான கடிதம் படங்கம் வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப இணப்பில் , மாணவர்கள் இணப்புக்களில் உதவி பெறுவோருக்கும் இடையில் தொடர்பாடலுக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உதவி வேண்டி நின்ற எமது உறவுகளின் தொகையும் அதே நேரம் உதவியவர்களின் தொகையும் அதிகரித்திருந்தன் காரணத்தினால் நேசக்கரம் மூன்று மாதங்களிற்கொரு தடைவையாக ஒவ்வொரு காலாண்டும் தனது கணக்கறிக்கையினை தயாரித்து வெளியிட்டிருந்தது. அதனை தொகுத்து ஆண்டறிக்கையாக இங்கு வெளியிட்டிருக்கின்றோம்.

பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில் எமது மக்களின் தேவைகளும் துன்ப வாழ்வும் நீங்கி மன நிறைவோடு வாழவேண்டும் என்பதே நேசக்கரத்தின் நோக்கமாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்றது.

எமது மக்களின் தேவைகள் அனைத்தும் நீங்கி அவர்கள் மகிழ்வாக வாழும்போது நேசக்கரம் என்றொரு அமைப்பின் தேவையும் இல்லாது போய்விடும். எனவே அதுவரை உதவும் உறவுகள் அனைவரும் எம்முடன் இணைந்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி விடை பெறுகின்றோம்.

நன்றி வணக்கம்

உறவுகளிற்கு உதவுவோம்

நேசக்கரம்

2010 ஜனவரி முதல் டிசம்பர் வரையான கணக்கறிக்கையும் பயன்பெற்றோரின் விபரங்களும். கீழுள்ள இணைப்பில் இணைத்துள்ளோம்.

2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை

நேசக்கரம் 2010 சித்திரை,வைகாசி,ஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கையினைப் பார்க்க இங்கு அழுத்துங்கள்

ஆடி,ஆவணி,புரட்டாதி கணக்கறிக்கை PDF வடிவில். இந்த இணைப்பில் அழுத்தி கணக்கு விபரங்களை பார்வையிடலாம்.

ஒக்ரோபர் 2010 கணக்கறிக்கை.

01.11.10 – 30.11.10 வரையான கணக்கறிக்கை

01.12.10 – 31.12.10 வரையான கணக்கறிக்கை.

Edited by sathiri

நிச்சயம் தொடர்ந்து இணைந்து இருப்போம் சாத்திரி... அரசியல் தவரிந்த அனைத்து விதமான விடயங்களுக்கும் உதவி செய்ய தயாராக பலர் இருக்கின்றோம்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் தொடர்ந்து இணைந்து இருப்போம் சாத்திரி... அரசியல் தவரிந்த அனைத்து விதமான விடயங்களுக்கும் உதவி செய்ய தயாராக பலர் இருக்கின்றோம்

நன்றி

பலர் தங்கள் அரசியலிற்குள் இழுக்க எம்மை முயற்சித்தும் அவர்களிடம் சிக்காமல் தொடர்ந்து எங்கள் பணியை மேற்கொள்கிறோம். நேசக்கரம் தங்கள் அரசியலிற்கு உதவவில்லையென்பதால் கோபமடைந்து சில அரசியல்வாதிகள் எங்கள் செயற்பாடுகளில் குறுக்கிடுகின்றனர்.அப்படி குறுக்கிடும் சிலருடன் பேசி புரியவைத்துள்ளோம்.அப்படியும் புரிந்து கொள்ளாத சிலரை நேரடியாகவே அம்பலப்படுத்தவேண்டி வருகிறது எமக்கும் மனவருத்தம்தான். ஆனால் நாம் அம்பலப் படுத்தும் ஆதாரங்களை வைத்து வேறு பலர் தங்கள் தனிப்பட்ட காழ்ப்புணவினை சம்பத்தப்பட்டவர்கள் மீது வெளியிட்டு புகுந்து விழையாடுவதும் எமக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. எனவே பொது வேலையென்று வந்தவர்கள் நான்தான் என்கிற மமதையை பிடிவாதங்களை கைவிட்டு எல்லா உதவிகளும் எமது மக்களிற்குதானே போகின்றதென்கிற நல்ல நோக்கில் இணைந்தால் அவர்களிற்கு என்றும் நாங்கள் நேசக்கரம் நீட்டுவோம் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

வருடம் பிறந்துள்ளது

எல்லாம் சரிதான் அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி இருக்கும் எமது உறவுகளுக்கு எமது பதில் என்ன.....?

சரி

சொல் அல்ல செயலே முக்கியம்

நேசக்கர நிர்வாகிகளுக்கு

கனடாவில் வாழும் எனது சகோதரியார் தானும் தனது 3 பிள்ளைகளையும் சேர்த்து ஒண்றிணைந்து 3 குடும்பத்துக்கு சுயதொழில் செய்து கொடுக்க முன் வந்துள்ளார். புது வருடத்தை இப்படி ஆரம்பிக்க அவர்கள் ஆசைப்படுகின்றனர்.இதற்கான திட்டங்களை தரமுடியுமா.....?

பணம் கனடாவிலிருந்து அவர்களுக்கு நேரடியாக போகக்கூடியதாக.

பதிலை எதிர்பார்க்கின்றேன். நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கர நிர்வாகிகளுக்கு

கனடாவில் வாழும் எனது சகோதரியார் தானும் தனது 3 பிள்ளைகளையும் சேர்த்து ஒண்றிணைந்து 3 குடும்பத்துக்கு சுயதொழில் செய்து கொடுக்க முன் வந்துள்ளார். புது வருடத்தை இப்படி ஆரம்பிக்க அவர்கள் ஆசைப்படுகின்றனர்.இதற்கான திட்டங்களை தரமுடியுமா.....?

பணம் கனடாவிலிருந்து அவர்களுக்கு நேரடியாக போகக்கூடியதாக.

பதிலை எதிர்பார்க்கின்றேன். நன்றி

தொடர்ந்து நீங்களும் உதவிக்கொண்டு உங்கள் குடும்ப உறவுகளையும் உதவ இணைத்திருப்பதற்கு எமது நன்றிகள். மின்னஞ்சலில் உங்களுக்கான விபரங்களை அனுப்புகிறோம்.

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு 3குடும்ப விபரம் மின்னஞ்சலில் போட்டுள்ளேன். பாருங்கள். நேரடியாக தொடர்பு கொள்வதற்கான சகல விபரங்களும் அனுப்பியுள்ளேன்.

நிச்சயம் தொடர்ந்து இணைந்து இருப்போம் சாத்திரி... அரசியல் தவரிந்த அனைத்து விதமான விடயங்களுக்கும் உதவி செய்ய தயாராக பலர் இருக்கின்றோம்

நன்றி

அரசியலை இயன்ற வரை தவிர்க்கிறோம். சிலசமயங்களில் அரசியலாளர்கள் தாங்களாக நுளைந்து சண்டியர்களாகிவிடுகிறார்கள். எதுவாயிருப்பினும் தொடர்ந்து எங்களால் இயன்றதை எங்கள் மக்களுக்குச் செய்வோம்.

எமது உதவி திட்டத்தில் யாழ் இணையம் ஊடாகவே அதிகம் உதவிகள் கிடைத்துள்ளது. யாழ் இணையம் ஊடாக நாம் கொண்டு வரும் செய்திகளைப் பார்த்துப் பலர் தொடர்பு கொண்டு உதவுகிறார்கள்.அவர்கள் கள அங்கத்தவர்கள் இல்லை. ஆனால் இக்களம் ஊடாகவே நமது செய்திகளையும் தகவல்களையும் அறிகிறார்கள். அனைவருக்கும் எமது நன்றிகள்.

கருத்துமுரண்களுக்கு அப்பால் மக்களுக்கான உதவிகளை எல்லோரும் இணைந்து செய்வோம்.

Edited by shanthy

நேசக்கரம் குழுவினரின் அர்த்தமுள்ள, நேர்மையான செயற்பாடுகளுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.