Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்-இந்தியா 'அறிவுரை.!

Featured Replies

இலங்கை கடற்படை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்-இந்தியா 'அறிவுரை'!

வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011, 15:42[iST]

டெல்லி: இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்து இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, இனிமேல் இதுபோல நடக்கக் கூடாது, நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது.

தமிழக மீனவர் பாண்டியன் என்ற 19 வயது இளைஞரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது. குருவியைப் போல சுட்டுக் கொன்ற இந்த சம்பவத்தால் தமிழர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட கூறாத இந்திய அரசு மாறாக, இலங்கைக்கு அறிவுரைகளை அடுக்கியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கைப் பாதுகாப்புத்துறைக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒரு இடத்தில் கூட இந்த சம்பவத்தை கண்டிப்பதாக அவர் கூறவில்லை.

கிருஷ்ணாவின் கடிதத்தில் உள்ள விவரம்:

இலங்கைக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்திருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். நடந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தமும், கவலையையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது நியாயமற்றது. எனவே படை பலத்தை பிரயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்துகிறது.

இந்தியா, இலங்கை இடையிலான கடல் பிரதேசத்தில் நமது மீனவர்களின் நலனும், பாதுகாப்பும் முக்கியமானது. அதற்கு இந்திய அரசு அதி உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.

படை பலத்தை பிரயோகிக்க வேண்டாம், சுட வேண்டாம் என்று தொடர்ந்து இலங்கைத் தரப்பிடம் இந்திய அரசு வலியுறுத்தியபடியே உள்ளது.

மேலும், 2008ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் நடக்குமாறும் கேட்டுக் கொண்டு வருகிறோம்.

மிகவும் குறைந்த அளவிலான எதிர்ப்பைக் காட்டுமாறும், படை பலத்தை பிரயோகிக்க வேண்டாம் என்றும் இலங்கை கடற்படையை கேட்டுக் கொள்கிறோம் என்று காலில் விழாத குறையாக கெஞ்சல் அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய அரசு.

மேலும், இந்தியாவுக்கான இலங்கைத் தூதரையும் நேரில் வருமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்துள்ளதாம்.

இத்தனை காலமாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் இந்திய அரசு இவ்வளவு வேகமாக கடிதம் எழுதியதில்லை. மாறாக, இலங்கையுடன் பேசுகிறோம் என்று மட்டுமே கூறுவது வழக்கம். ஆனால் தற்போதைய சம்பவத்தால் தமிழக சட்டசபைத் தேர்தலில் பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில்தான் இந்தக் கடிதத்தையாவது அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/01/13/indian-fisherman-s-killing-india-official-response-aid0091.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கோ நாளைக்கோ

இன்னொருவனுடன் ஓடப்போகும் மனநிலையிலுள்ள மனைவியை கண்டித்தால்...........??? :(

தமிழனின் படுகொலையை கண்டிப்பதை விட்டுவிட்டு, வட இந்திய காட்டுமிராண்டிகளின் முதலைக் கண்ணீர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளே இல்லாத நிலையில் சிறீலங்கா கடற்படை ஏன் மீனவர்களை சுட வேணும், காங்கிரசுடன் கூட்டு சேரும்கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற நிலை தமிழ் நாட்டில் போய், காங்கிரசுடன் கூட்டு சேரும் கட்சி இனி ஒரு காலமும் தமிழ் நாட்டில் ஆட்சிசெய்ய முடியாது என்ற நிலை வர வேண்டும், இதை மான முள்ள ஒவ்வொரு தமிழனும் இந்த நிலையை கொண்டு வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா மீனவனையோ, கர்நாடக மீனவனையோ.... மற்றவ‌ன் சுட்டிருந்தா... மாநிலமே ஸ்தம்பிச்சிருக்கும்.

இது தமிழ்நாடு தானே...., பைத்தியக்கார அரசியல்வாதிகள் என்று, எப்பவோ சிங்களவன் சொல்லிப் போட்டான்.

Edited by தமிழ் சிறி

கையாலாகதுகளுக்கு அறிவுரைகள் சொல்ல மட்டும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனு அர்தாவலட்டலேது நேனு கணுபிச்சு சூச்சுகுண்டதேமோ குவாட்டரு .. பிரியாணி அந்தே காதா?

1zp6qde.jpg

எவரு இச்சாடு எலக்கசன் ஓட்டுக்கு 500 ரூபாயிலு ..இவரு ஈழ ஜனரு எல்லாம் இனம் கினம் எந்து ஏதோதோ செப்புண்டாரு நனுக்கு அர்த்த ஆவட்டலேது.. :(

டிஸ்கி:

இனம் என்றால் என்ன ? என்ற கேள்விகுறிதான் இங்குள்ள நிலை .. யாருக்கும் போதிய அறிவு இல்லை ... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.