Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

“தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித்

1.

இலங்கை அரசியல் பின்புலம்

60 ஆண்டு இலங்கை அரச பேரினவாத அரசியல், 70 களின் பின்னர் அரசியல், பொருளாதார, கலாச்சார ஒடுக்குமுறை என்ற தளத்திலிருந்து நேரடியான அரச இயந்திரத்தின் வன்முறையாக வளர்ச்சியடைந்தது. உறுதியான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்துத் திட்டமிடப்ப்படாத தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் அரச வன்முறையை எதிர்கொள்ளும் ஆயுதப் போராட்டத்தின் தேவையை உருவாக்கியது. 80களில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை பல அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பலிகொண்டது. ஆயுதப் போரட்ட்த்திற்கான சமூக அங்கீகாரமும் தேவையும் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.

80 களின் சமூகப் புறச் சூழல் போராட்டத்தின் தேவையை எவ்வாறு உருவாக்கியதோ, அதனிலும் அதிகமாக இன்றைய அரசியல் போராடத்தைக் கோரி நிற்கிறது.

முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையின் பின்னர், இலங்கை அரச பாசிசம் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பை நிகழ்த்துவருகிறது. சிங்கள – பௌத்த மயமாக்கல், பிரதேச ஆக்கிரமிப்பு, கலாச்சாரச் சீரழிப்பு, பேச்சுரிமை மறுப்பு, பாலியல் வன்முறைகள், அரசியல் படுகொலைகள் என்ற ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் சிறீ லங்கா அரச பேரினவாதம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்திய அரசின் பின்பலமும், சர்வதேச அரசுகளின் மௌனமும், ஐக்கிய நாடுகளின் கண்துடைப்பும் இலங்கை அரச பாசிசத்தை எதிர்கொள்வதற்கான உறுதியான எதிர்ப்பியக்கத்தின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இவ்வாறான எதிர்ப்பியக்கம் உருவாவதற்கான அனைத்து வழிகளையும் இலங்கை அரசு அழித்து வருகிறது. உளவியல் யுத்தம், இராணுவ விஸ்தரிப்பு என்ற அனைத்து அடக்குமுறை எல்லைகளையும் விரிவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலுள் பல தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

2

மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான போர்க்குற்ற வழக்கு

பல மாதங்களாக மகிந்த ராஜபக்சவோ அன்றி இலங்கை அரச சார் பிரதிநிதிகளோ பிரித்தானியாவிற்கு வந்தால் பிரித்தானிய சட்டவிதிகளுக்கு உட்படக்கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான வழக்கு முறையீட்டை நீதிமன்றத்தில் மேற்கொள்வதாக புலி சார் அமைப்புக்கள் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன. மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வந்திறங்கியதும் இதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று அவர்களிடம் பலர் கேள்வியெழுப்பினர். இது குறித்துக் கேள்வியெழுப்பிய ஒருவர் புலிகளின் அரசியல் வழிமுறை மீது நீண்டகாலமாகத் தீவிர விமர்சனத்தை முன்வைப்பவர்.

நவம்பர் 29ம் திகதி நடந்த உரையாடலில் புலிசார் அமைப்புக்களைச் சார்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.

1. வழக்குரைஞர்களுக்கான செலவுகளுக்குப் போதிய பணமில்லை.

2. பல வழக்குரைஞர்கள் போர்க்குற்ற வழக்கினால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

3. போதிய கால அவகாசமில்லை.

4. ஏனைய பல உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை.

புலிசார் அமைப்புக்களைச் சார்ந்த சிலர் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

நவம்பர் 30ம் திகதி இவ்வமைப்புக்கள் சார்ந்த ஒருவருடன் நிகழ்ந்த உரையாடலில் வழக்கைப் புலிசார் அமைப்புக்கள் தாக்கல் செய்யாவிடின் தாம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக அம்முயற்சியை மேற்கொள்ளப் போவதாக அதே புலிசாராதவர் தெரிவித்திருக்கிறார். அதற்கு நாம் இது குறித்து உரையாடிக்கொண்டிருக்கிறோம் மறு நாள் பதில் தருவதாகக் கூறியிருக்கிறார். தவிர, போர்க்குற்ற வழக்கை புலிசாராத அமைப்புக்களும் மேற்கொள்ள முயற்சிப்பதாக ஏனையோருக்குத் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

டிசம்ப்பர் 1ம் திகதி மதியமாளவில் பிரிஎப் உம் அதன் நட்பு அமைப்புக்களும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகத் தீர்மானித்துள்ளதாகத் பிரிஎப் அமைப்பினைச் சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் புலிகளின் அரசியல் வழிமுறை மீது விமர்சனம் கொண்டவர்களின் முயற்சி கைவிடப்பட பிரிஎப், ஜீரிஎப் ஆகியன நடவடிக்கைகளை கையிலெடுத்துக்கொண்டன.

இறுதியாக மகிந்தவும் அவரோடு பிரித்தானியா வந்திருந்த குழுவினரும் நாடு திரும்பிய பின்னரே வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

ஆக, வேறு சிலரும் வழக்குப் பதிவுசெய்வதற்கான முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தான் புலி சார் அமைப்புக்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டனவா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.

குறிப்பு : மேற்குறித்த சம்பவம் “உரிமை கோரலாக” அன்றி புலிசார் அமைப்புக்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பின்னணியிலேயே முன்வைக்கப்படுகிறது.

3

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல்

இனச்சுத்திகரிபையும், இனவழிப்பையும் திட்டமிட்டு மேற்கொள்ளுகின்ற இலங்கை அரசு இலங்கையில் தொடர்ச்சியான மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளளது. ஈழத் தமிழர்களது குரல் இலங்கையில் முற்றாக நசுக்கப்படுகின்ற நிலையில் புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் எழக்க் கூடிய எதிர்ப்பியக்கங்களையும், போராட்டங்களையும் கையாள்வதே இலங்கை இந்திய அரசுகளின் இன்றைய உடனடித் தேவையாக அமைந்துள்ளது. பிரித்தானிய, கனேடியத் தனியார் நிறுவனங்களுக்கு மில்லியன்களை வழங்கி வாடகைக்கு அமர்த்தி கொண்ட இலங்கை அரசின் நடவடிக்கை இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது.

இந்த வகையில் மூன்று பிரதான செயற்பாட்டுத் தளங்களில் இலங்கை அரசின் நாடு கடந்த நடவடிக்கைகளை அவதானிக்கலாம்.

1. புலியெதிர்ப்பாளர்களைக் கையாள்தல்.

2. புலிகளின் வலையமைப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ளல்.

3. அரச எதிர்ப்பாளர்களுக்கு இவ்விரு பகுதியினரூடாகவும், சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட நிறுனவங்களூடாகவும் அரசியல் நெருக்கடிகளை உருவாக்குதல்.

புலியெதிர்ப்பாளர்களைக் கையாள்தல் என்ற வகையில், பிரதானமாக ஐந்து வேறு கூறுகளாக இவை நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றன.

1. அரச எதிர்ப்பாளர்கள் மீதான திட்டமிட்ட அவதூறுகள்.

2. புலிகளின் புலம்பெயர் வலையமைப்பைப் பயன்படுத்தல்.

3. அபிவிருத்தி, மறுவாழ்வு, ஜனநாயக மீட்ட்பு என்ற தலையங்கத்தில் உரிமைகான போராட்டத்தை மறுத்தல்.

4. புலிகள் அல்லது புலிகளின் இருப்பு குறித்த பய உணர்வை புலி எதிர்ப்பாளர்கள் மத்தியில் உருவாக்குதலும் அவர்களை அரச சார்பான தளத்திற்கு உள்வாங்குதலும்.

5. அழிவுகளை முன்வைத்துப் போராட்டத்திற்கான நியாத்தை மறுத்தல்.

4

புலிகளின் புலம்பெயர் வலையமைப்பைப் பயன்படுத்தல்

.

இலங்கை அரசாங்கம் புலிகளின் புலம் பெயர் வலையமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளல் என்பது சிக்கலான ஒன்றல்ல. உணர்ச்சியையும் அதன்வழியே உருவான சுலோகங்களையும், தனிமனித விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டே புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்ச அரசியல் நோக்கங்களும் வழிமுறைகளும் கூட முன்வைக்கப்படாத நிலையில் இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் இலங்கை அரசின் உளவு வலைக்குள் தெரிந்தோ தெரியாமலோ சிக்குண்டிருப்பவர்களுள் புலி சார் அமைப்புக்களும் ஆதரவாளர்களுமே அதிகம்.

மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு விவகாரம் இவர்களின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கான சிறிய உதாரணம் மட்டுமே.

கே.பியை இலங்கை அரசு விலைக்கு வாங்கிக்கொண்ட காலகட்டம் குறித்து ஊகங்கள் மட்டுமே நிலவுகின்றன. ஆனால் முள்ளிவாய்க்கால் தோல்விக்குப் பின்னதாக நூற்றுக்கனக்கில் புலிகள் அமைப்பிலிருந்து அரச உளவாளிகள் உருவாகியுள்ளனர்.

புலிகள் என்ற சிந்தனை முறைக்குள் உள்ளடங்குவதற்கான சில வரைமுறைகள் உள்ளன.

1. பிரபாகரனைக் கடவுளாக மதிப்பது.

2. தவறுகளை விமர்சித்தலோ புதிய வழிமுறைகள் குறித்துப் பேசுதலோ குற்றம்.

3. புலிகள் இலச்சனை, கொடி, இறந்த போராளிகள் ஆகிவற்றை வழிபடுவது.

மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு சென்ற போது அங்கு வழக்குத் தாக்கல் செய்யவெண்டும் என்பதில் தீவிர முனைப்புக்காட்டிய ஒருவர் புலிகளின் கடந்தகாலத் தவறை விமர்சித்த காரணத்தால் அதிர்வு என்ற அவர்களது இணையம் அவரைத் துரோகியாகச் சித்தரித்துக் கட்டுரை வரைந்திருந்தது.

தேசியத் தலைவர், புலி, புலிக்கொடி என்ற தலையங்கத்தில் “துரோகிகள்” குறித்துப் பேசும் அதிர்வு போன்ற புலிசார் இணையங்களை கூர்ந்து அவதானித்தால் அவர்கள் அரச ஆதரவாளர்கள் குறித்துப் பேசுவதில்லை. இவர்களில் பலர் புலம்பெயர் நாடுகள் எங்கும் பரந்து விரிகின்ற அரச உளவாளிகள் குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.

புலிகளுக்கு வெளியில் இலங்கை அரசிற்கு எதிராக குரல்கொடுக்கும், செயற்படும் சமூக அக்கறை உள்லவர்களைத் துரோகிகளாகச் சித்தரிக்கும் இவர்கள், சிதைந்து போன உரிமைப்போராட்டத்தை முற்றாக அழிப்பதற்குத் துணை போகிறார்கள்.

அதிர்வின் கட்டுரை சொல்லும் செய்தி என்ன? இலங்கை அரச எதிர்ப்பு ஆதரவு என்பதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டல்ல. புலிகளையும் பிரபாகரனையும் ஆதரித்தால் நீங்கள் தியாகி; அன்றேல் துரோகி.

இந்தச் சிந்தனையைத் தான் இலங்கை அரசு பயன்படுத்திக்கொள்கிறது. புலிகளின் புலம் பெயர் வலையமைப்புக்களுக்கு இருக்கும் ஆட்பலம், பணபலம் என்பன உலகம் முழுவதும் இலங்கை அரச இனப்படுகொலையை உலகம் முழுவது தீவிர பிரச்சாரத்திற்கு உட்படுத்த பயன்பட முடியும். ஐக்கிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்குகும் போராட்டங்களை நிகழ்த்த முடியும்.

வன்னிப் படுகொலை நிகழ்த்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகளின் பின்னரும் பிரபாகரன் வாழ்கிறாரா இல்லையா என்ற என்ற மூடத்தனமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இவர்களின் வியாபார நலன், படுகொலைகள் குறித்த முழுமையான ஆவணம் ஒன்றைத் தயாரிபதற்குக் கூட இடம் கொடுக்கவில்லை.

ஆரம்பத்தில் போர்க்குற்றங்கள் குறித்தும் படுகொலைகள் குறித்தும் கண்டனம் தெரிவித்த ஆயிரக்கணக்கான மனித உரிமைவாதிகளிடமிருந்தும், ஜனநாயாக சக்திகளிடமிருந்தும் கூட இவர்கள் அன்னியப்பட்டுள்ளனர்.

5.

என்ன செய்யவேண்டும்?

80 களில் போராட்டம் என்பது இலங்கை இந்திய அரசுகளைப் பிரதான எதிரியாகக் கொண்டதாக அமைந்திருந்தது. இன்றோ அதே போராட்டம் எதிர் கொள்ள வேண்டிய மற்றொரு பகுதி மில்லியன்களை தமது உடமையாக்கிக்கொண்ட புலிகளின் வலையமைப்புக்குள்ளிருந்து அரச ஆதரவாளர்களாக மாறிவரும் மாபியா அழிவு சக்திகள்.

புலிகள் மீண்டும் மீட்சிபெறுகிறார்கள் என்று இலங்கை அரசு வதந்திகளைப் பரப்பிவருகிறது. இதனை ஆதராமாகக் கொண்டு தமிழ்ப் பிரதேசங்களை யுத்தகளம் போல இராணுவ மற்றும் உளவுத்துறையின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தியுள்ளது.

சில நாட்களில் சரத் பொன்சேகா சார்பான இராணுவத்தினர் மீது புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட அரச ஆதரவாளர்களை வைத்தே தாக்குதல் தொடுத்துவிட்டு, புலிகள் தான் அதனை மேற்கொண்ட்டார்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்ளும் போது புலம் பெயர் புலியமைப்புக்களின் அரச கூறுகள் அத்தாக்குதலை காட்டியே பணம் வசூலித்து இலங்கை அரசோடு பகிர்ந்து கொண்டாலும் வியப்படைவதற்கில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் இவ்வாறான ஒரு நடவடிக்கைக்கு முன்னறிவிப்போ என அஞ்சத் தோன்றுகிறது.

“தேசியத் தலைவர்”க் கடவுளாக உருவகித்துக்கொண்டே இலங்கை அரசு தனது அதிகாரத்தையும் அழிப்பையும் தீவிரப்படுத்திவருகிறது. புலிகளைக் காட்டியே தனது இருப்பை நிலை நாட்டிக்கொள்கிறது. இதற்கு எதிரான அரசியலுக்குப் ஈழப் பிரச்சனையில் சமூகப் பற்றோடு அக்கறை கொண்டவர்களைத் தயார்படுத்துவதே இன்று எமக்கு முன்னாலுள்ள கடமை. இது இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை அரச பாசிசத்தின் மறைமுக அரசியலை இனம் கண்டுகொள்வதற்கு மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்,

1. இலங்கை அரசிற்கு எதிரான செயற்திட்டம் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது தேசியத் தலைவர், புலிகளின் தாகம் போன்ற வெற்று முழக்கங்கள் முன்வைக்கப்படுகிறதா என்று பிரித்தறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

2. இலங்கை அரசிற்கு எதிரான தேசிய ஜனநாயக சக்திகளைப் புலிகளை முன்வைத்துப் பிளவுபடுத்தும் செயற்பாடு குறித்த எதிர்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. இலங்கை இந்திய அரச பாசிசங்களுக்கு எதிரான சக்திகள் புலிகள் என்ற அடையாளத்திற்கு அப்பால் மக்கள் சார்ந்த ஒன்றிணைய வேண்டும்.

இவைகள் புதிய மக்கள் பற்றுள்ள ஜனநாயக முன்னணிக்கான அடிப்படைகளாக அமையும். இலங்கை அரசின் பயன்பாட்டிற்கு வழிகோலும் புலிகளின் சிந்தனை முறையைத் தகர்ப்பதற்கான குறைந்தபட்ச அடிப்படை இதுவாக அமையலாம். மக்கள் பற்றுள்ள ஒவ்வொரு மனிதன் முன்னாலும் உள்ள அவசர பணியாக இவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

http://inioru.com/?p=19242

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரை...இணைப்பிற்கு நன்றி

நவம்பர் 29ம் திகதி நடந்த உரையாடலில் புலிசார் அமைப்புக்களைச் சார்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.

புலிசார் அமைப்புக்களால் செய்ய முடியாவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது தானே...?? எதுக்கு இப்பவும் புலிசார் அமைப்புக்களையே நம்பி இருக்கிறீர்கள்....??

புலிகளை தாண்டி போக முடியாத இயலாமையை மட்டும் தான் இந்த கட்டுரை சொல்கிறது.... கையாலாகாத கூட்டம்... !

Edited by தயா

தமிழின விமோசனத்துக்கு ஆதரவாக புலத்தில்/களத்தில் சரியான பாதையில் தெளிவாக யாரும் நடைபோடலாம். அவர்கள் அதை செய்யும் பொழுது மக்கள் அவர்களை இனம்கண்டு ஆதரவளிப்பார்கள்.

இதன்மூலம் தவறான வழிகாட்டலை தவிர்க்கமுடியும். தமிழீழ மக்கள் சிங்களத்தின் நிகழ்ச்சி அட்டவணைப்படி நடப்பதையும் நிராகரிக்கமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிசார் அமைப்புக்களால் செய்ய முடியாவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது தானே...?? எதுக்கு இப்பவும் புலிசார் அமைப்புக்களையே நம்பி இருக்கிறீர்கள்....??

புலிகளை தாண்டி போக முடியாத இயலாமையை மட்டும் தான் இந்த கட்டுரை சொல்கிறது.... கையாலாகாத கூட்டம்... !

புலிகள் இல்லாது விட்டால் இவர்கள் அனைவரும் வெறும் பூச்சியங்கள், உதாரனமாக இக்கட்டுரை எழுதியவர் ஒரு ஊர்வலத்தை ஒழுங்கு செய்தால், இவர் மட்டும்தான் தெருவில் நிற்பார், இதுதான் இவர்களது அப்போதையதும்,இப்போதையதும், எப்போதையதும் நிலைமை.

  • தொடங்கியவர்

அது சரி.. மக்கள் ஆயிரம் ஆயிரமாய் யார் ஒழுங்கு செய்யும் ஊர்வலத்துக்குத் திரளுகின்றார்கள் என்பதையும் சொல்லிவிடுங்கள்..

மக்கள் எப்போதுமே தமிழ் மக்களின் துன்பங்களைத் தீர்க்க எவர் எவர் முன்வந்து செயற்படுகின்றார்களோ அவர்களின் பின்னரே திரள்வார்கள். அப்படித்தான் நம்பித் திரண்டார்கள். தற்போது உள்ள சூழலில் ஆயிரம் ஆயிரமாய் மக்களை எவராலும் திரட்டமுடியாது, ஆனால் எதிர்காலத்தில் சரியான அரசியல் தலைமைகளின் கீழே மக்கள் திரள்வார்கள்!

புலிக்கு பின்னாலதான் சனம் எப்பவும் அதிகமா திரளுது, அது படி பாத்த அவர்கள் மக்களின் துன்பங்களை தீர்த்து வைக்ககூடியவர்களாக அல்லவா இருக்க வேண்டும், அப்படி பார்த்தால் உங்கள் லொஜிக் உதைக்குதே, மாற்று கருத்து காறர் பெல்யியத்தில ஒரு ஊர்வலம் செய்தவை ஆறு பேர் 12 பியர் போத்தலுடன் நின்றவை, அவயளின்ர போராட்ட படங்களில ஆக்களுக்கு முதல் பியர் போத்தல்கள்தான் நின்றன, அதுவும் பியரின் பெயர் உட்பட ஏதோ கோனிக்கன் பியர் என்று ஞாபகம். :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு பின்னாலதான் சனம் எப்பவும் அதிகமா திரளுது, அது படி பாத்த அவர்கள் மக்களின் துன்பங்களை தீர்த்து வைக்ககூடியவர்களாக அல்லவா இருக்க வேண்டும், அப்படி பார்த்தால் உங்கள் லொஜிக் உதைக்குதே,

புலிகளின் வெளிப்படையாக மக்களைத் திரட்டிப் போராட்டம் செய்ததாகத் தெரியவில்லை!

பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை எல்லாம் புலிகளின் அமைப்புக்கள் என்று சொல்லுவதில்லை!

கடந்த வருடம் லண்டனில் கடுங்குளிரிலும் பேரணிகளில் திரண்ட ஒன்றரை லட்சம் பேரும் மக்களின் அவலங்களை தீர்க்க மேற்கு நாடுகள் உதவி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் திரண்டார்கள். எல்லோரும் புலிக்கொடிக்குப் பின்னால் திரளவில்லை!

30 வருடத்துக்கு பின் ஒருவர் துயிலெழுந்துள்ளார்.

நடக்கட்டும் நடக்கட்டும்

ஏதோ தங்களால்முடிந்தவரை தூற்றுங்கள் :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30 வருடத்துக்கு பின் ஒருவர் துயிலெழுந்துள்ளார்.

நடக்கட்டும் நடக்கட்டும்

ஏதோ தங்களால்முடிந்தவரை தூற்றுங்கள் :(

30 வருடத்திற்கு முன்னம் நாம் நித்திரைக் குளிசை போடவில்லை, அதனால் நித்திரை மயக்கத்தில் தற்போது இல்லை.

உலகத் தமிழர் பேரவை தங்களைப் பற்றி இப்படித்தான் சொல்லியிருக்கின்றது.

Evolve an independent, international organization which adheres to the principles of democracy and non-violence and derives its strength from grassroots organizations of the Tamil Diaspora that will work in solidarity with Tamils in Eelam and other communities in Sri Lanka to restore Tamil Peoples right to self-determination and democratic self-rule in their traditional homeland in the island of Sri Lanka that would lead to self-sufficiency, sustainability and equal opportunity to its people, through its political and economic successes by engaging the international community.

பிரித்தானியத் தமிழர் பேரவை தங்களைப் பற்றி இவ்வாறு சொல்லியிருக்கின்றது.

British Tamils Forum (“BTF”) is an umbrella organisation by bringing together individuals, and Tamil community organisations to highlight the humanitarian crises and human rights violations perpetrated by the Government of Sri Lanka (GOSL), and to advance the Tamil national cause through democratic means.

மேலை இருக்கிற கட்டுரையிலை புலிசார் அமைப்பு எண்டு கட்டுரையாளர் குறிப்பிட்டதில் BTF ம் ஒண்டு...

BTF உங்களிட்டை காசு கேக்கினம் எண்டதுக்காகவே புலிசார் அமைப்புக்கள் எண்டு கட்டுரை எழுதுறவை... இல்லை அங்கை கட்டுரை எழுதுற ஆக்களுக்கு பதவி குடுக்க இல்லையோ....???

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலை இருக்கிற கட்டுரையிலை புலிசார் அமைப்பு எண்டு கட்டுரையாளர் குறிப்பிட்டதில் BTF ம் ஒண்டு...

BTF உங்களிட்டை காசு கேக்கினம் எண்டதுக்காகவே புலிசார் அமைப்புக்கள் எண்டு கட்டுரை எழுதுறவை... இல்லை அங்கை கட்டுரை எழுதுற ஆக்களுக்கு பதவி குடுக்க இல்லையோ....???

இந்த அமைப்புக்கள் தாங்கள் தனித்துவமானவை என்று என்னதான் ஓயக் கத்தினாலும் (எழுதினாலும்) புலிசார் அமைப்புக்கள் என்று கட்டுரையாளர் சொல்வதுபோலத்தான், சர்வதேச நாடுகளும் கருதுகின்றன, புலம்பெயர் தமிழர்களும் கருதுகின்றனர் (மேலுள்ள சித்தன், விசுகு அண்ணையின் கருத்துக்கள் சில உதாரணங்கள்). இதனால்தான் இத்தகைய அமைப்புக்களின் நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.. அதே நேரத்தில் தங்கள் உள்ளூர் அரசியல் லாபத்திற்காக மேற்கு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகள் இப்படியான அமைப்புக்களுடன் சிநேகபூர்வமான உறவுகளையும் பேணிவருகின்றன என்பது உண்மைதான். எனினும் தமிழர்களினது உரிமையைப் பெற்றுக்கொள்ள இவ்வுள்ளூர் அரசியல்வாதிகள் ஒரு வரையறைக்கு மேல் ஒன்றும் செய்யமாட்டார்கள்.

அது BTF இன் தவறு இல்லை... புலிகள் எண்டது ஒரு கருத்துருவாக்கம்....!

எவர் எல்லாம் தமிழீழம் நோக்கி செயற்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் புலிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்... அது என்னை பொறுத்தவரைக்கும் தவிர்க்க முடியா நிலை... !

இதுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட விதிவிலக்கு இல்லை... அவர்களும் புலிசார் அமைப்பாக உலகுக்கு தெரிந்தவர்கள் தான்... இண்று மீண்டும் தனிநாடு கேட்டால் மீண்டும் புலிசார் அமைப்பு... அப்போ இப்படியான கடுரையாளர் அவர்களையும் எதிர்ப்பார்கள்... இதை உணர தலைப்படாத ஆக்களின் கூச்சல் தான் புலிசார் அமைப்புக்கள்... புலிகளை தவிர்க்க வேண்டும் என்பது கூட தனி நாட்டு கோரிக்கை மீதான வெறுப்பே காரணமாகின்றது...

மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விடயம் ஒண்டு இருக்கு... புலிகள் போராடினதால் தோத்தார்கள்... அதனால் தான் புலிகளை எல்லாருக்கும் தெரிகிறது... ஆனால் புலிகளை விமர்சிப்பவர்கள் தோல்வி புலிகளுக்கானது எண்டு மட்டும் சொல்லிக்கொள்கிறார்கள்... அவர்களுக்கு தெரியாத விடயம் என்ன எண்டால் அவர்கள் போராடாமலே தோத்து போய் இருக்கிறார்கள் என்பது... அதனால் அவர்களை உலகுக்கு தெரியவில்லை... புலி மட்டுமே உலகுக்கு கண்ணுக்கு தெரிகிறது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்புக்கள் தாங்கள் தனித்துவமானவை என்று என்னதான் ஓயக் கத்தினாலும் (எழுதினாலும்) புலிசார் அமைப்புக்கள் என்று கட்டுரையாளர் சொல்வதுபோலத்தான், சர்வதேச நாடுகளும் கருதுகின்றன, புலம்பெயர் தமிழர்களும் கருதுகின்றனர் (மேலுள்ள சித்தன், விசுகு அண்ணையின் கருத்துக்கள் சில உதாரணங்கள்). இதனால்தான் இத்தகைய அமைப்புக்களின் நம்பகத்தன்மை சர்வதேச நாடுகளால் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.. அதே நேரத்தில் தங்கள் உள்ளூர் அரசியல் லாபத்திற்காக மேற்கு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகள் இப்படியான அமைப்புக்களுடன் சிநேகபூர்வமான உறவுகளையும் பேணிவருகின்றன என்பது உண்மைதான். எனினும் தமிழர்களினது உரிமையைப் பெற்றுக்கொள்ள இவ்வுள்ளூர் அரசியல்வாதிகள் ஒரு வரையறைக்கு மேல் ஒன்றும் செய்யமாட்டார்கள்.

நீங்கள் குறிப்பிடும் அமைப்புக்கள் இன்னொரு நாட்டில் அதன் சட்டத்தின்கீழ் பதியப்பட்டவை. எனவே இப்படித்தான்அவர்கள் பதிந்துள்ளார்கள். அதனடிப்படையில்தான் அவர்களின் செயற்பாடுகள்அமையும். ஆனால் அவர்கள் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் விடுதலை அமைப்பாக ஏற்பதை இந்த சட்டங்களோ பதிவுகளோ தடுப்பதில்லை. அந்தவகையில் பலமுறை அவர்கள் அதை உறுதி செய்துள்ளனர்.

எனக்கு புரியாதது என்னவென்றால்

ஒரு உயிருக்கு பயந்து பயந்து ஒழித்து ஓடி காவித்திரியும் நாம் அதே உயிரை இளவயதில் எமக்காக ஈந்தவரை வசை பாடுவதே.............. :(:(:(

இப்ப எல்லாம் நண்றி என்பதை எதிர்பாத்தீர்கள் எண்டால் உங்களை போல முட்டாள் உலகத்தில் யாரும் இருக்க முடியாது... எல்லாரும் தங்களுக்கு யாராவது இலவசமாய் செய்து தாற ஆக்களை தான் எதிர்பார்க்கிறார்கள்....

அதைவிட சிங்களம் என்ன எதிர்பார்க்கிறது எண்டால் புலியை முழுமையாக அழிக்க வேண்டும் அப்படி எண்டால் மக்களிடம் இருக்கிற தனி நாடு என்கிற கருத்துருவை சிதைக்க வேணும்... இதுக்காக களம் இறக்கப்பட்ட பல முன்னாள் மாற்று இயக்க காறரை நண்பராய் கொண்டவை புலிகளின் ஆதரவாளர்களை நோக்கி செய்யப்படும் பிரச்சாரத்தின் ஒரு அங்கம் தான் இந்த மக்கள் நலன் பாடுதலும், இணக்க அரசியலும் ...

மற்றும் படி எல்லாருக்கு தெரியும் ஊரிலை என்ன நடக்குது... சிங்களவன் தமிழனுக்கு எப்படியான தீர்வை தருவான்... அப்படி ஒரு தீர்வு தந்தாலும் அதன் வாழ்நாள் என்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கொண்ட இலங்கயில் குறைவானது எண்டு...

இதுக்கும் மேலை என்னத்தை சொல்ல....?

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரியாதது என்னவென்றால்

ஒரு உயிருக்கு பயந்து பயந்து ஒழித்து ஓடி காவித்திரியும் நாம் அதே உயிரை இளவயதில் எமக்காக ஈந்தவரை வசை பாடுவதே.............. :(:(:(

ஒப்பற்ற தியாகங்களைச் செய்தவர்களை வசைபாடுவதாக நீங்கள் நினைப்பது தவறு. மாறாக அவர்களுடைய தியாகங்களை வீணாக்கிய அரசியல் பலவீனத்தை (உதாரணமாக அனைத்துலகத்துடன் சண்டை பிடிக்கப் போகின்றோம்) தொடர்வது தமிழினத்துக்குக் கேடு என்பதை இன்னமும் புரியாமல் இருப்பது முட்டாள்தனம்.

சரணாகதி அரசியலுக்கும், சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத வன்முறை அரசியலுக்கும் இடையில் பலவழிமுறைகள் உள்ளன. அவற்றில் எம்மின விடிவிற்குச் சாதகமானவற்றைத் தேடவேண்டும். அதைவிடுத்து "வளர்த்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை" என்று இருப்பது நல்லதல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட சிங்களம் என்ன எதிர்பார்க்கிறது எண்டால் புலியை முழுமையாக அழிக்க வேண்டும் அப்படி எண்டால் மக்களிடம் இருக்கிற தனி நாடு என்கிற கருத்துருவை சிதைக்க வேணும்... இதுக்காக களம் இறக்கப்பட்ட பல முன்னாள் மாற்று இயக்க காறரை நண்பராய் கொண்டவை புலிகளின் ஆதரவாளர்களை நோக்கி செய்யப்படும் பிரச்சாரத்தின் ஒரு அங்கம் தான் இந்த மக்கள் நலன் பாடுதலும், இணக்க அரசியலும் ...

இப்ப யாராவது தம்மைப் புலி என்று சொன்னால், அவர் ரோவின் ஆளோ, அல்லது சிங்களப் புலனாய்வினைச் சேர்ந்தவரோ, அல்லது கோத்தபாயாவின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளவரோ என்று சனம் குழம்புது. :mellow:

இப்ப யாராவது தம்மைப் புலி என்று சொன்னால், அவர் ரோவின் ஆளோ, அல்லது சிங்களப் புலனாய்வினைச் சேர்ந்தவரோ, அல்லது கோத்தபாயாவின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளவரோ என்று சனம் குழம்புது. :mellow:

அதாலைதான் புலிசார் ஆக்களை நோக்கி காய்ச்சல் காறர் கட்டுரையள் எழுதுறவை எண்டு தெரியும்...!

வெளிப்படையாக புலி எண்டு சொல்லிக்கொண்டு செயற்படும் நிலையில் புலிகள் இல்லை எண்டது சனத்துக்கு தெரியும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சரணாகதி அரசியலுக்கும், சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத வன்முறை அரசியலுக்கும் இடையில் பலவழிமுறைகள் உள்ளன. அவற்றில் எம்மின விடிவிற்குச் சாதகமானவற்றைத் தேடவேண்டும்.

அதற்கும் புலிகள் தான் வரவேண்டும்.மிச்ச ஆட்கள் (மேற்படி கட்டுரையாளர் உட்பட) "நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வாறான்" ஊதி ஊதி சாப்பிடலாம் என்ற மன நிலையில் இருந்தவர்கள், இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பற்ற தியாகங்களைச் செய்தவர்களை வசைபாடுவதாக நீங்கள் நினைப்பது தவறு. மாறாக அவர்களுடைய தியாகங்களை வீணாக்கிய அரசியல் பலவீனத்தை (உதாரணமாக அனைத்துலகத்துடன் சண்டை பிடிக்கப் போகின்றோம்) தொடர்வது தமிழினத்துக்குக் கேடு என்பதை இன்னமும் புரியாமல் இருப்பது முட்டாள்தனம்.

சரணாகதி அரசியலுக்கும், சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத வன்முறை அரசியலுக்கும் இடையில் பலவழிமுறைகள் உள்ளன.

அவற்றில் எம்மின விடிவிற்குச் சாதகமானவற்றைத் தேடவேண்டும். அதைவிடுத்து "வளர்த்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை" என்று இருப்பது நல்லதல்ல.

அதைத்தானே நாங்களும் சொல்கின்றோம்

கிட்டத்தட்ட 2 வருடமாக ஏன் இதை உங்களைப்போன்றோர் மேற்கொள்ளவில்லை.

நுணாவிலான் சொன்னதுபோல் அவர்கள்தான் வரவேண்டுமென்றால் எதற்கு இந்த வசைபாடல்கள்...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதற்கும் புலிகள் தான் வரவேண்டும்.மிச்ச ஆட்கள் (மேற்படி கட்டுரையாளர் உட்பட) "நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வாறான்" ஊதி ஊதி சாப்பிடலாம் என்ற மன நிலையில் இருந்தவர்கள், இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.

புலிகள்தான் வரவேண்டும் என்று கட்டாயமில்லை. தற்போது தலைவர் இல்லாத நிலையில் புலிகள் என்று சொல்லிக்கொள்வோருக்கும், மற்றையவர்களுக்கும் வித்தியாசங்கள் குறைவு. முன்னாள் புலிகள்தான் தற்போது சிறிலங்கா அரச படைகளின் ஏவலாளிகளாக வேலை செய்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரப் புலிகள் முப்பது வருடம் போராடி, அவர்களது அத்தியாயம் முடிந்துவிட்டது. எனினும், தமிழ் மக்களின் விடுதலை இன்னமும் வெல்லப்படவில்லை. ஆகையால் எதிர்காலத்தில் புலிகளின்றிய தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வழிமுறைகள்தான் தேவையானது.

பிடிஎப்க்கு சனம் கூடுவது புலிகளின் போராட்டத்தினால் தான்.புலிகளின் தியாகம் அர்ப்பணிப்பு உண்மை ,தாம் கொண்ட கொள்கை மீதான பற்றுதி என்பனவற்றின் அடிப்படையிலையே மக்கள் அவர்களை ஆதரிக்கின்றனர்.இதே குண இயல்புகள் மாற்ற்கக் குழுக்களிடம் இருந்ததில்லை.இனி ஒருவின் திசைகள் குழு களத்தில் இறங்கி உள்ளதா? கவர்களின் அரசியலை எங்கனம் களத்தில் முன்னெடுக்கப் போகின்றனர்.தமது சுய நலனை விட்டு விட்டு இவர்கள் இலண்டனில் இருந்து சிறிலங்கா சென்று தமது உயிரைப் பணயம் வைப்பார்களா? இவை எதுவும் நடக்கப் போவதில்லை.புலிகள் பற்றிய பல விமர்சனக்களை முன் வைக்கலாம் ஆனால் அதற்க்குப் பதிலீட்டான செயற்பாடு இல்லாதவிடத்து விமரிசங்கள் பொழுது போக்கவே பயன் படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தானே நாங்களும் சொல்கின்றோம்

கிட்டத்தட்ட 2 வருடமாக ஏன் இதை உங்களைப்போன்றோர் மேற்கொள்ளவில்லை.

நுணாவிலான் சொன்னதுபோல் அவர்கள்தான் வரவேண்டுமென்றால் எதற்கு இந்த வசைபாடல்கள்...?

வசை பாடல்கள் என்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள்? தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வாய் கூடத் திறக்க முடியாத தற்போதைய நிலைக்குப் புலிகளின் சமாதான கால அரசியல் செயற்பாடுகள் காரணம் என்று சொல்லுவதை நீங்கள் வசைபாடல் என்றால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

முப்பது வருடங்கள் சிறுகச் சிறுகச் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் புலிகள் மே 2009 இல் மெளனிக்கப் பண்ணியதின் சூட்சுமத்தைப் புரியாமல், மீண்டும் வன்முறைப் போராட்டம் மூலம்தான் தமிழர்கள் உரிமைகளைப் பெறலாம் என்று நம்புவர்களும், மற்றவர்களை நம்பவைத்துக் கொண்டிருப்பவர்களும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தீங்குதான் செய்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடிஎப்க்கு சனம் கூடுவது புலிகளின் போராட்டத்தினால் தான்.புலிகளின் தியாகம் அர்ப்பணிப்பு உண்மை ,தாம் கொண்ட கொள்கை மீதான பற்றுதி என்பனவற்றின் அடிப்படையிலையே மக்கள் அவர்களை ஆதரிக்கின்றனர்.இதே குண இயல்புகள் மாற்ற்கக் குழுக்களிடம் இருந்ததில்லை.இனி ஒருவின் திசைகள் குழு களத்தில் இறங்கி உள்ளதா? கவர்களின் அரசியலை எங்கனம் களத்தில் முன்னெடுக்கப் போகின்றனர்.தமது சுய நலனை விட்டு விட்டு இவர்கள் இலண்டனில் இருந்து சிறிலங்கா சென்று தமது உயிரைப் பணயம் வைப்பார்களா? இவை எதுவும் நடக்கப் போவதில்லை.புலிகள் பற்றிய பல விமர்சனக்களை முன் வைக்கலாம் ஆனால் அதற்க்குப் பதிலீட்டான செயற்பாடு இல்லாதவிடத்து விமரிசங்கள் பொழுது போக்கவே பயன் படும்.

பிரிஎவ்வின் அழைப்பைப் புலிகளின் அழைப்பாகக் கருதுவது சரியல்ல. புலிகளின் தியாகம், அர்ப்பணிப்பு என்பது போற்றப்படவேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை, எனினும் தமிழ் மக்கள் தமது சொந்த இனத்தின் பாலுள்ள அக்கறை காரணமாகத்தான், அவர்களின் விடிவை நோக்கித்தான் எப்போதும் அணிதிரண்டார்கள். வரலாற்றின்படி, 1980 வரை அது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்ட்டணி என்றிருந்தது. 1980 களின் பிற்பாடு புலிகளின் பின் அணிதிரண்டனர். 2009 மேக்குப் பிந்தைய புலிகள் அமைப்பு இல்லாத காலகட்டத்தில் (இருக்கின்றது என்று சொல்லுபவர்களும் உள்ளனர்!) மக்கள் தம்மை அரசியல் ரீதியாக வழிகாட்ட ஒரு தலைமையை எதிர்பார்க்கின்றனர். அது கட்டாயம் புலிகள்தான் என்றில்லை. அத்துடம் இனியொரு அல்லது புதிய திசைகள் அமைப்பு என்றும் இருக்காது. ஆனால் மக்களின் விருப்பத்திற்கு, அவர்களை வழிநடாத்தக் கூடிய தமிழர் அரசியல் சக்தி ஒன்று கட்டாயம் வரும். இந்த அரசியல் சக்தி புலம்பெயர் தமிழர்களையும், தாயகத் தமிழர்களையும் ஒரே கொள்கையின்கீழ் ஒன்றிணைத்தால்தான் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வெல்லக் கூடிய சாத்தியத்தைப் பெறும். இது ஒன்றிரண்டு வருடங்களில் சாத்தியப்படக்கூடிய நிலைமை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இல்லை. எனினும் புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகளாக வர எடுத்த காலத்தை அல்லது அதை விடக் கூடக்/குறைய எடுத்த காலத்தை ஏதோவொரு அமைப்பு எடுத்தேயாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தில்எனக்கும் உடன்பாடு உண்டு

ஆனால் அதை செய்வதைவிடுத்து அவர்கள் அங்கே பிழைவிட்டார்கள் இங்கே பிழைவிட்டார்கள் என்பதைத்தான் வசைபாடல் என்றேன். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அப்படி ஒரு அமைப்பு உருவாகும்போது அதை ஆதரிக்கும் முதல் நபர்களில் ஒருவராக நானிருப்பேன்.

ஏனெனில் எமது இலட்சியம் நீங்கள் சொல்வதுபோல் புலிகளுடன் நின்றுவிடுவது அல்ல..............

அது தன் பாதை நோக்கி நடந்தபடியே இருக்கும். அதை சிங்களம் துரத்தியபடியேதான் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.