Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்காக இந்த போராட்டம் ? எத்தனை தியாகங்கள், இழப்புக்கள் துயரங்கள்

இருந்ததும் இல்லாதது போன்ற நிலைமை

நினைக்கையில் தலைமை மீது தான் ஆத்திரம் வருகின்றது.

தலைவர் விட்ட பிழைகள் என்று ஆயிரத்தை அடுக்கலாம், அவர் செய்ததில் லட்சத்தில் ஒரு பங்கையாவது என்னால் இந்த இனத்துக்காக செய்ய முடியுமானால்!

  • Replies 109
  • Views 8.9k
  • Created
  • Last Reply

தமிழீழ விடுதலைக்கு சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் ஆதரவில்லை என்பதையும், இந்தியா முழுமையாக எதிர்ப்புடன் சிறிலங்காவுக்கு உதவுகிறது என்பதையும் அறிந்து, அவற்றையெல்லாம் வெற்றி கொள்ளும் திட்டம் தலைமையிடம் இருந்ததா?

நீங்கள் சொல்வதை பார்த்தால் அப்படி ஒரு திட்டம் இருந்தாகவே தெரியவில்லையே? வெற்றிபெற முடியாத ஒரு போராட்டத்துக்கா இவ்வளவு ஆயிரம் அழிவுகள்?

இதுக்கு பதிலை நான் சொல்லலாமோ....??

கொஞ்சம் வரலாற்றையும் சேத்து பாப்பம்... !

ஆனையிறவு வடபகுதி நிலமீட்ப்போடு பேச்சு வார்த்த்தைக்கு தன்னிச்சையாக புலிகள் உள்ளை போய் போர் நிறுத்தம் செய்த போது அமெரிக்காவின் Green parrots ன் பயிற்ச்சி திட்டத்தோடை தீச்சுவாலை நடவடிக்கையை இலங்கை படைகள் ஆரம்பித்தன... அதை முறை அடித்தது தான் புலிகள் செய்த முதல் தவறு... !

பேச்சுவார்த்தையின் போது எவ்வளவோ பேசிய புலிகள் எரிக்கிடம் சர்வதேச நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் எண்டு கேட்டு இருக்க மாட்டார்கள் எண்டா நினைக்கிறீர்கள்...?? அப்படி இல்லாமல் புலிகள் கேட்டத்துக்கு தெரிவிக்க பட்ட பதில் இலங்கையில் புலிகள் ஆயுத ரீதியில் பலமாக இருப்பதை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் விரும்பவில்லை என்பதாகும்... அதுக்கு தேவையானதுகளை புலிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் எண்று பதில் வழங்கப்பட்டது...

2003 ம் ஆண்டு அமெரிக்காவின் நியோர்க்கில் கூடிய இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் வலிந்து கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டு மூடிய கதவுக்குள் இரணில் உட்பட நடத்திய பேச்சுக்கள் இணைத்தலைமை நாடுகள் தோற்றுவிக்க பட்டு அங்கு தீர்வுத்திட்டம் சம்பந்தமாகவும் இரணிலுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டு இருந்தன...

பிறகு புலிகளையும் அழைத்து ரோக்கியோவில் இணைத்தலைமை நாடுகளின் மேற்பார்வையில் நடத்தப்பட இருந்த பேச்சு வார்த்தையில் கையொப்பத்துக்காக ஒரு வரைபும் தயாராக இருந்தது... அந்த வரைபை பற்றி எந்த தகவலும் தெளிவாக தெரியாத புலிகள் அந்த பேச்சுவார்த்தைக்கு போகாமல் வெளியேறினர்... !

பின்னர் எரிக்சொல்கைமுடனான, ரிட்சட் பௌச்சர் உடனான சில பேச்சுவார்த்தைகள் முடிவில் இணைத்தலைமை நாடுகளின் நடுநிலைமையில் ஐரோப்பிய நாடுகளில் பேசுவது எண்று முடிவெடுத்து ஒஸ்லோவில் கூடி ஒரு கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்தும் இட்டனர்... அந்த உடன் படிக்கையில் தலைவருக்கு உடன்பாடு இல்லை எண்டு சொல்லப்பட்டாலும் அந்த உடன் படிக்கையை இலங்கை அரசே நடை முறைப்படுத்தாது தவிர்த்து க்கொண்டது... இதுக்கு இணைத்தலைமை நாடுகள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை...

பின்னர் சுனாமி நிவாரணத்துக்காக இடைக்கால நிர்வாக சபைக்காக எல்லாம் இணைத்தலைமை நாடுகள் தலைமையில் ஜெனீவாவில் கூடினர்... முடிவுகளும் எட்டப்பட்டன... ஆனால் அவை எதுவும் சிறீலங்காவால் மதிக்கப்படவில்லை...

அப்படியும் ஒரு நம்பிக்கையில் சுவிஸ் , அயர்லாந்தின் ஆட்ச்சி அமைப்புக்களை கருத்தில் எடுத்து ஒரு தீர்வு திட்டத்தின் வரைபை புலிகள் அரசிடமும் இணைத்தலைமை நாடுகளிடமும் கையளித்தனர்.. இந்த வரைபை புலிகள் கையளித்து சில நாட்க்களில் சந்திரிக்க இரணிலின் ஆட்ச்சியை வெளிப்படையாக இதை பேச எடுக்க கூடாது எண்டு தெரியும் வண்ணம் கலைத்து விடுகிறார்...

பேச்சுக்களில் உடன்பாடு இல்லாத சிங்கள மக்கள் இரணிலை பதவியில் இருந்து அகற்றி மகிந்தவை முதல் மந்திரி ஆக்குகின்றனர்...

இப்ப நீங்கள் பதில் சொல்லுங்கோ இதுக்கு இணைத்தலைமை நாடுகள் என்ன செய்தவை....???

குறிப்பு :- புலிகளை அழிப்பது மேற்க்கு நாடுகளின் குறியாக எப்போதும் இருக்கவில்லை... ஆனால் அவர்களை பலவீனப்படுத்தி ஒரு தீர்வை திணிக்க வேண்டும் என்பது மட்டும் தான் குறியாக இருந்தது...

அப்ப அழிக்க வேண்டும் எண்டு முடிவெடுத்தது யார் எண்டு பிறகு கதைப்பம்... <_<

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பதிலை நான் சொல்லலாமோ....??

கொஞ்சம் வரலாற்றையும் சேத்து பாப்பம்... !

....

....

அப்படியும் ஒரு நம்பிக்கையில் சுவிஸ் , அயர்லாந்தின் ஆட்ச்சி அமைப்புக்களை கருத்தில் எடுத்து ஒரு தீர்வு திட்டத்தின் வரைபை புலிகள் அரசிடமும் இணைத்தலைமை நாடுகளிடமும் கையளித்தனர்.. இந்த வரைபை புலிகள் கையளித்து சில நாட்க்களில் சந்திரிக்க இரணிலின் ஆட்ச்சியை வெளிப்படையாக இதை பேச எடுக்க கூடாது எண்டு தெரியும் வண்ணம் கலைத்து விடுகிறார்...

பேச்சுக்களில் உடன்பாடு இல்லாத சிங்கள மக்கள் இரணிலை பதிவியில் இருந்து அகற்றி மகிந்தவை முதல் மந்திரி ஆக்குகின்றனர்...

இப்ப நீங்கள் பதில் சொல்லுங்கோ இதுக்கு இணைத்தலைமை நாடுகள் என்ன செய்தவை....???

ரனிலை முதல்மந்திரி பதவியில் இருந்து ஜனாதிபதி சந்திரிகா தமிழருக்கு சுயாட்சி கொடுத்துவிடுவார் என்ற நிலையில் பதவிவிலக்கியதை எழுதியிருக்கிறீர்கள்.

சிங்கள மக்கள் எப்படி ஏற்கனவே பதவி இழந்த ரனிலை மீணிடும் பதவியில் இருந்து அகற்றி மகிந்தவை பதவியில் ஏற்ற முடிந்திருக்கிறது?

இவ்வளவும் நடக்க தமிழ் மக்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? சமாதான காலத்தில் வடக்கு கிழக்கில் சமாதானம் கொண்டுவர ஒத்துழைத்த ரனிலுக்கு வாக்களித்தார்களா?

இணைத்தலைமை நாடுகளின் பார்வையில் தமிழர் தலைமையின் சமாதான தீர்வு முயற்சி பற்றி சந்தேகம் ஏற்பட்டதற்கு தேர்தலை புறக்கணித்து சமாதான முயற்சிக்காக பதவியிறக்கப்பட்ட ரனிலை பதவியில் ஏறாமல் தடுத்து மகிந்தவை பதவியேற வைத்தது ஒரு முக்கியமான காரணமாக அமையவில்லையா? இந்த திட்டம் தமிழருக்கான விடுதலையில் தலைமையின் வழிகாட்டலில் ஒரு பங்கு அல்லவா? இந்த தவறான வழிநடத்தலால் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் மாண்டுபோய் சமாதான வாழ்வுக்கு சந்தர்ப்பமே இல்லாமல் போய்விட்டதை பாருங்கள்.

ரனிலை முதல்மந்திரி பதவியில் இருந்து ஜனாதிபதி சந்திரிகா தமிழருக்கு சுயாட்சி கொடுத்துவிடுவார் என்ற நிலையில் பதவிவிலக்கியதை எழுதியிருக்கிறீர்கள்.

அப்படி ஒரு கோணம் நீங்கள் படிக்கும் போது வந்திருந்தால் உண்டு... நான் அப்படி எழுதவில்லை... ! இரணிலுக்கு அப்படி குடுக்கும் எண்ணம் இருந்ததாகவும் வரலாறுகளோ நடவடிக்கையோ இல்லை..

இரணில் இதை பரிசீலனைக்கு எடுப்பதை கூட சந்திரிக்கா விரும்பவில்லை.... இல்லை அதை ஒரு காரணமாக காட்டி தமிழர்களுக்கு ஒருதீர்வை இரணில் குடுத்து விடுவார் எண்று சொல்லியே ஆட்ச்சியை கலைத்தார்.... ஆட்ச்சி கலைத்தது சரிதான் எண்று சிங்கள மக்களும் தேர்தலில் பதில் அழித்தனர்...

சிங்கள மக்கள் எப்படி ஏற்கனவே பதவி இழந்த ரனிலை மீணிடும் பதவியில் இருந்து அகற்றி மகிந்தவை பதவியில் ஏற்ற முடிந்திருக்கிறது?

இவ்வளவும் நடக்க தமிழ் மக்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? சமாதான காலத்தில் வடக்கு கிழக்கில் சமாதானம் கொண்டுவர ஒத்துழைத்த ரனிலுக்கு வாக்களித்தார்களா?

இரணில் தான் ஆட்ச்சிக்கு வர நீண்டகால போரையும் தோல்வியையும், சரிந்த பொருளாதாரத்தை சரிப்படுத்த சமாதானத்தை பயன் படுத்தினாரே அண்றி இரணில் தானாக சமாதானத்துக்கு முன்வரவில்லை...

அப்படி சமாதானத்தில் இரணிலுக்கு நாட்டம் இருக்குமாயில் இரணில் காலத்தில் தான் பாதுகாப்புக்கு சரிந்த பொருளாதார காலத்திலும் இலங்கை 16 ஆயிரம் கோடி ரூபாவை முதல் முதலில் ஒதுக்கி சாதனை படைத்து இருக்க வேண்டியதும் இல்லை...

உங்களுக்கு முன்னாலை நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கு... அது உங்களுக்கு தராத தகவலை நான் தரமுடியாது...

தேடுங்கோ பதில் கிடக்கும்...

இணைத்தலைமை நாடுகளின் பார்வையில் தமிழர் தலைமையின் சமாதான தீர்வு முயற்சி பற்றி சந்தேகம் ஏற்பட்டதற்கு தேர்தலை புறக்கணித்து சமாதான முயற்சிக்காக பதவியிறக்கப்பட்ட ரனிலை பதவியில் ஏறாமல் தடுத்து மகிந்தவை பதவியேற வைத்தது ஒரு முக்கியமான காரணமாக அமையவில்லையா? இந்த திட்டம் தமிழருக்கான விடுதலையில் தலைமையின் வழிகாட்டலில் ஒரு பங்கு அல்லவா? இந்த தவறான வழிநடத்தலால் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் மாண்டுபோய் சமாதான வாழ்வுக்கு சந்தர்ப்பமே இல்லாமல் போய்விட்டதை பாருங்கள்.

இரணிலை பதவியில் இறக்கிறது மகிந்தவை பதவியில் ஏற்றுவது என்பதுக்கு அப்பால் நடு நிலைமை உங்களிட்டை கூட இல்லை எண்டது தான் உண்மையாக கிடக்கு... இரணில் பதவிக்கு வந்திருந்தாலும் இந்த போர் நடந்து இருக்கும் காரணம் இந்தியா... ! அது வேறை பிரச்சினை...

சிங்களவர் தமிழர்களுக்குள் பேச்சுவார்த்தை இதில் சிங்களவர் தங்களின் தலைவரை தேடுகின்றனர்... அதுக்கு தமிழர் ஏன் வாக்களித்து சிங்களவரின் தலைமையை தெரிவு செய்ய வேண்டும்... இதுக்கு நான் பல தடவை பல அரசியல் விற்பண்ணர்களிடம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை.. நீங்களாவது பதில் தாருங்கள்...

ஒரு தீர்வு ஒரு நாடு எனும் அடிப்படையில் கிடைத்து இருந்தால்கூட நாட்டின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலில் தமிழர் வாக்களிக்க வேண்டும் எண்டு கோரமுடியும்... ஆனால் அப்போது....??

இணைத்தலைமை நாடுகள்...

மகிந்த பதவிக்கு வந்தது 2005 ல் ஆனால் இணைத்தலைமை நாடுகள் தோண்றியது 2003 ம் ஆண்டில் .... அதுக்கு இடைப்பட்ட காலத்தில் இணைத்தலைமை நாடுகள் விட்ட அறிக்கைகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா....??? ஏதோ அதுவரை ஆதரவாக இருந்த இணைத்தலைமை நாடுகள் அதுக்கு பிறகு தான் ஆதரவு குடுக்காத மாதிரி சொல்கிறீர்கள்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இரணில் பதவிக்கு வந்திருந்தாலும் இந்த போர் நடந்து இருக்கும் காரணம் இந்தியா... !

நீங்கள், இந்த போர் தவிர்க்க முடியாதது, அதை தெரிந்திருந்தும் தலைமை மக்களை அழிவுப்பாதையில் வழிநடத்தி சென்று லட்சத்துக்கும் மேலான மக்களை பலிகொடுத்தது என்று சொல்கிறீர்களா?

சிங்களவர் தமிழர்களுக்குள் பேச்சுவார்த்தை இதல் சிங்களவர் தங்களின் தலைவரை தேடுகின்றனர்... அதுக்கு தமிழர் ஏன் வாக்களித்து சிங்களவரின் தலைமையை தெரிவு செய்ய வேண்டும்... இதுக்கு நான் பல தடவை பல அரசியல் விற்பண்ணர்களிடம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை.. நீங்களாவது பதில் தாருங்கள்...

ஒரு தீர்வு ஒரு நாடு எனும் அடிப்படையில் கிடைத்து இருந்தால்கூட நாட்டின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலில் தமிழர் வாக்களிக்க வேண்டும் எண்டு கோரமுடியும்... ஆனால் அப்போது....??

உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன. நியாயமானது தான். சரியான வழியில் வழிகாட்டப்பட்டிருந்தால் எங்களுக்கு விடைகள் கிடைத்திருக்கும். லட்சத்துக்கு மேலான மக்கள் அநியாயமாக மடிந்து, சமாதனமும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. சரியான வழியில் வழிகாட்டாத தலைமையை பலரும் குறை கூறுகிறார்கள். அது நியாயமானதாகவே எனக்கு தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான வழியில் வழிகாட்டப்பட்டிருந்தால்

சரியான வழி என நீங்கள் எதனை நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு வழியை உதாரணத்துக்காகவாவது சொல்லுங்கள் பார்ப்போம்?

  • கருத்துக்கள உறவுகள்

சரியான வழி என நீங்கள் எதனை நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு வழியை உதாரணத்துக்காகவாவது சொல்லுங்கள் பார்ப்போம்?

  • சரியான வழி என்று எதுவுமே இருக்கவில்லை என்றா சொல்கிறீர்கள்?
  • அல்லது லட்சத்துக்கு மேலான மக்களை பலிகொண்ட இந்த வழி ஒன்று தான் வழியாக இருந்தது என்று சொல்கிறீர்களா?
  • அவ்வளவுக்கு மட்டுப்பட்டதாகவா எங்கள் தலைமை அமைந்திருந்தது?

லட்சத்துக்கும் மேலான மக்களை பலி கொள்ள வேண்டிய தேவையில்லாத, வெற்றி பெறும் சாத்தியம் போதுமான அளவுக்கு உள்ள வழி சரியான வழி. அப்படியான வழி தெரியாத தலைமை, இந்தியாவுடன் இணங்கி மக்களை இந்த பெரும் தொகையில் பலிகொள்ளாமல் காணப்பட கூடிய தீர்வுகளை காண முயற்சித்த பெருமாள், அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கலாம் அல்லவா? லட்சக்கணக்கில் மக்கள் மாண்டிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது. நிம்மதியாக மக்கள் வாழ்ந்திருப்பார்கள்.

  1. எரித்திரியர்கள் எதியோப்பியா பொருளாதார முடக்கால் முற்றாக முடங்கிய நிலையில் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தை பயன்படுத்த விடுவதற்காக, எதியோப்பியாவிடம் இருந்து விடுதலையை பேரம் பேசி பெற்றுக்கொண்டது சரியான வழி.

  2. கிழக்கு தீமோர் எண்ணை வயல்களை அவுஸ்திரேலிய எண்ணைவள வணிகர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவுஸ்திரேலிய அரசின் ஆதரவை பெற்று இந்தோநேசிய ஆக்கிரமிப்பாளரை விரட்டியடிக்கும் வழி அவர்களுக்கு காட்டப்பட்ட சரியான வழி.

  3. அமெரிக்க அரசுடன் தென் சூடானியர் எண்ணை வளங்களை காட்டி, வட சூடானுக்கு எதிரான போர்க்குற்றங்களை முன்னெடுத்தும், அதே வேளை தமது நிலத்தை பாதுகாத்தும் ஐ.நாவின் ஆதரவை பெற்று தனிநாடக கண்ட வழி சரியான வழி.

  4. அகதிகளாக வந்த யூதர்கள் தமக்கு புகலிடம் தந்த அமெரிக்காவிற்கு தமது அறிவு, ஆற்றல் அனைத்தையும் கொடுத்து அணுகுண்டு செய்து கொடுத்து வல்லரசாக்கி இசுரேலை பெற்றுக்கொள்ள வழி கண்டது சரியான வழி.

  5. சிங்கப்பூரியர்கள் துங்கு ரகுமானை மலேசியாவில் பதவிக்கு கொண்டுவருவதற்கு தமக்கு தேவையான உரிமைகளை பேரம் பேசி, பின்னர் துங்கு ரகுமான் வாக்கு தவறியபோது அவரை பேச்சுவார்த்தை மூலம் வழிக்கு கொண்டுவந்து தனிநாடாக வந்தது சரியான வழி.

  6. ஐக்கிய அமெரிக்காவுக்குள் செவ்விந்தியர்கள் போரட்டங்கள் மூலமும் சட்ட நடவடிக்கைகள் மூலமும் தமது நாடுகளை உருவாக்கி வாழ வழி கண்டது சரியான வழி.

  7. சீனாவுடன் இணைந்த பின்னும் குடியாட்சி முதலாளித்துவ நாடாக தன்னை நிலைக்க வைத்துக் கொள்ள ஹொங்கொங் தலைவர்கள் கண்ட வழி சரியான வழி.

ஈழத்தழிர் எந்த நாட்டுக்கு எதை கொடுத்து அவர்களது ஆதரவை பெற்று கொள்ள எங்கள் தலைமை வழிகாட்டியது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? கொடுப்பதற்கு எண்ணை வயல்கள் இல்லை என்பீர்கள். மகிந்த மன்னாரில் எண்ணை கிணறுகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இன்று கொடுக்கவில்லையா? அணுகுண்டு செய்து கொடுக்க விஞ்ஞானிகள் இல்லை என்பீர்கள். எரித்திரியாவும் சிங்கபூரும் அணுக்குண்டு செய்து கொடுக்கவில்லை.

வழிகாட்டும் பொறுப்பை ஏற்றவர்கள் நடந்து முடிந்த இழப்புகளுக்கும் தோல்விக்கும் பொறுப்பானவர்கள். அவர்களை மக்கள் குறை கூறுவது நியாயமானதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[வழிகாட்டும் பொறுப்பை ஏற்றவர்கள் நடந்து முடிந்த இழப்புகளுக்கும் தோல்விக்கும் பொறுப்பானவர்கள். அவர்களை மக்கள் குறை கூறுவது நியாயமானதே.

தாராளமாக குறை கூறுங்கள் ... அது உங்களுக்கு இருக்கும் வெட்டி நேரத்தைப் பொறுத்தது. ஆனால் 2005 உம் 2009 உம் திரும்பவரப் போவதேயில்லை. முடியுமானால் 2011 இல் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கப் பழகுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

லட்சத்துக்கும் மேலான மக்களை பலி கொள்ள வேண்டிய தேவையில்லாத, வெற்றி பெறும் சாத்தியம் போதுமான அளவுக்கு உள்ள வழி சரியான வழி. அப்படியான வழி தெரியாத தலைமை, இந்தியாவுடன் இணங்கி மக்களை இந்த பெரும் தொகையில் பலிகொள்ளாமல் காணப்பட கூடிய தீர்வுகளை காண முயற்சித்த பெருமாள், அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கலாம் அல்லவா? லட்சக்கணக்கில் மக்கள் மாண்டிருக்க வேண்டிய தேவை வந்திருக்காது. நிம்மதியாக மக்கள் வாழ்ந்திருப்பார்கள்.

இந்தியா பல வருடங்களாக இலங்கையில் வந்து செய்தவை மக்கள் மனதில் பசுமரத்தாணி போல உள்ளது.மறக்க முடியாத வடுக்களை அவர்கள் எமது மக்களுக்கு ஏற்படுத்தி விட்டு போய்விட்டார்கள். இவர்களுடன் திரும்ப எந்த முகத்தோடு போய் உடன்படிக்கை செய்வது? ஒரு பேச்சுக்கு மாத்திரம் வேணுமானால் கதைக்கலாம். ஆனால் நடைமுறைச்சாத்தியமற்றதை பூசி மெழுகி புலிகள் மேல் பழியை மாத்திரமே உங்களால் போட முடிகிறது.

அமிர்தலிங்கம் இதே இந்தியாவுடன் ஊடலில் ஈடுபட்டது தான் அவர் மக்களுக்கு செய்த சேவை.

பெருமாள் மக்களை பலோத்காரமாக பிடித்து பங்கர் வெட்ட விட்டது மட்டுமில்லாமல் எதிரியின் படைக்கு எமது மக்களை கட்டாய இராணுவப்பயிற்சிக்கு அனுப்பியவர்.இவர் கட்டாயம் எமது மக்களுக்கு விடிவை எடுத்து தந்திருப்பார் அல்லது தருவார் என நம்ம எமது மக்கள் கேணையர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

  • சரியான வழி என்று எதுவுமே இருக்கவில்லை என்றா சொல்கிறீர்கள்?
  • அல்லது லட்சத்துக்கு மேலான மக்களை பலிகொண்ட இந்த வழி ஒன்று தான் வழியாக இருந்தது என்று சொல்கிறீர்களா?
  • அவ்வளவுக்கு மட்டுப்பட்டதாகவா எங்கள் தலைமை அமைந்திருந்தது?

போரைத்தவிர்த்து

மக்களை சிறகுக்குள் வைத்தபடி

பின்னோக்கி பின்னோக்கி சென்றபடி

அத்தனை தாக்குதல்களுக்குள்ளும்

பசி பட்டினியுடன் அந்த மக்களுக்குள்ளே கிடந்தவனை கேள்வி கேட்கிறார்கள்

ஆனால்இத்தனை அக்கிரமங்களையும் செய்தவனை

இத்தனை கொலைகளையும்நடாத்தியவனை

கெஞ்ச கெஞ்ச துடிக்கத்துடிக்க அத்தனை மக்களையும் கொன்றவனை

மறந்துவிட்டுவிட்டார்கள்

உருப்படுமா இந்த சமூகம்

மீண்டும் வருவார்களா எவராவது எமக்காக சிலுவை சுமக்க.....???

விசுகு,

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. நானும் முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்திருக்கிறேன். ஆனால் மனம் வெறுத்து போவதும், கவலைப்படுவதும் வெற்றிக்கான வழிகள் அல்ல.

தோல்வியின் பாதை சரியான பாதையல்ல. மக்கள் கேள்விகள் கேட்டு வழிகாட்டுபவர்களை தோல்வியடையக்கூடிய பாதையில் போகாமல் பார்த்து கொள்ளும் போது வெற்றிக்கான சாத்தியம் அதிகம். அதற்கு மாறாக, மக்கள் குறிப்பிட்ட சிலரின் அறிவையும் ஆற்றலையும் மட்டும் நம்பி பின்தொடர்வது தோல்வியிலும் முடியலாம். எமக்கு முடிந்திருக்கிறது.

இன்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். எந்த தலைமையையும் நம்பி கேள்வி கேட்காமல் பின்தொடர தயாராக இல்லை. இது நல்லதொரு வளர்ச்சி. கேள்வி கேட்டு தவறுகளை திருத்தி செல்வது சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும்.

தாராளமாக குறை கூறுங்கள் ... அது உங்களுக்கு இருக்கும் வெட்டி நேரத்தைப் பொறுத்தது. ஆனால் 2005 உம் 2009 உம் திரும்பவரப் போவதேயில்லை. முடியுமானால் 2011 இல் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கப் பழகுங்கள்.

கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்று கொள்வது வெட்டி நேரத்தை பொறுத்தது என்ற உங்கள் கருத்து தவறானது. அது எதிர்காலத்தில் கடந்த கால தவறுகளை திருத்த உதவ போவதில்லை. 2011ல் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க பழக சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக 2011ல் நாம் 2005ல் இருந்து 2009 வரை செய்தது போல கேள்வி கேட்காமல், குறை சொல்லாமல் ஒரு தலைமையை மட்டும் நம்பி ஆயுதத்தில் அபரீத நம்பிக்கை வைத்து செயற்படக்கூடாது.

  • எமக்கு பல தலைவர்கள் தேவை. மக்கள் பொருத்தமான தலைமையை பின்பற்றும் சந்தர்ப்பம் தேவை.
  • மக்கள் எதையும் கேள்வி கேட்டு பின் தெரிந்து கொள்ளும் உரிமை 2011 ல் தேவை.
  • தலைமையை குறை சொல்லவும் மாற்றவும் மக்கள் முன்வரும் சந்தர்ப்பம் 2011ல் இருக்க வேண்டும்.
  • புதிய சிந்தனைகளும், உலக உறவுகளும் சாணக்கியமும் தேவை.
  • ஆயுதங்களும் மரணமும், அழிவும் எமக்கு வேண்டாம்.

அமிர்தலிங்கம் இதே இந்தியாவுடன் ஊடலில் ஈடுபட்டது தான் அவர் மக்களுக்கு செய்த சேவை.

பெருமாள் மக்களை பலோத்காரமாக பிடித்து பங்கர் வெட்ட விட்டது மட்டுமில்லாமல் எதிரியின் படைக்கு எமது மக்களை கட்டாய இராணுவப்பயிற்சிக்கு அனுப்பியவர்.இவர் கட்டாயம் எமது மக்களுக்கு விடிவை எடுத்து தந்திருப்பார் அல்லது தருவார் என நம்ம எமது மக்கள் கேணையர்களா?

இந்தியப்படை எதிரியின் படையானது எப்படி? உண்மையில் ஏன் முழு உலகுமே எதிரியானது? முழு உலகும் அரசுகளும் தவறானவை நாம் மட்டுமே சரியானவர்கள் என்ற சிந்தனை தவறான சிந்தனை.

மக்கள் கோணையர்கள் தான். அதனால் தான் இன்று அழிந்து போனார்கள். யாரை நம்பி அழிந்து போனார்கள்? பெருமாளை அல்ல.

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழிகாட்டும் பொறுப்பை ஏற்றவர்கள் நடந்து முடிந்த இழப்புகளுக்கும் தோல்விக்கும் பொறுப்பானவர்கள். அவர்களை மக்கள் குறை கூறுவது நியாயமானதே.

நாம் கனக்க பேசவேண்டும் எதுவும் செய்யாதிருப்பதற்காக.

பேச்சுக்களில் உடன்பாடு இல்லாத சிங்கள மக்கள் இரணிலை பதவியில் இருந்து அகற்றி மகிந்தவை முதல் மந்திரி ஆக்குகின்றனர்...
:D:D:D:D:D

இதில கடந்த காலம் - நிகழ்காலம் எண்டு என்ன இருக்கு? ஆனா ஒண்டு மட்டும் உண்மை, நாங்கள் எங்களால முடிஞ்ச அளவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டிருக்கிறம். அதாவது போராட்டத்தில தவறுகள் பிழைகள் இருக்கலாம். போராளிகளிலயும் அந்தப் பலவீனங்கள் இருக்கலாம். அப்பிடி ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்.இல்லையெண்டால் எப்பிடித் தோற்க முடியும். அதுவும் உயிரையே ஆயுதமாக்கிய ஒரு அமைப்புத் தோற்கிறது எண்டால் என்ன சாதாரண சங்கதியா? ஆகவே எங்கோ குறைபாடு இருக்கு.

நான் இப்ப அதைப் பற்றியெல்லாம் கதைக்க விரும்பேல்ல. அதைக் கதைக்கிறதால எனக்குத்தான் இப்ப பிரச்சினை. ஆனால், இப்ப எங்கட போராட்டத்தின்ர சரி பிழைகளைக் காணக்கூடியதாக இருக்கு. இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும்.

சரி, என்ன மாதிரியான பிழைகள் நடந்திருக்கு? அதை எப்படிச் சீர்ப்படுத்தியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைப் பற்றி இஞ்ச இப்ப கதைக்க விரும்பேல்ல. அதுக்கு காலம் இருக்கு. அல்லது அதை நான் கதைக்க விரும்பேல்ல. அதில கன பக்கங்களிருக்கு. பல காரணங்களும் அந்தக் காரணங்களோட தொடர்பான கன தரப்பும் இருக்கு. எல்லாத்தையும் சரியாக அறியாமல் கதைக்கவும் முடியாது.

ஆனால், ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்த பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?

இதையெல்லாம் ஆரோ ஒரு நாளைக்கு வெளியில சொல்லத்தான் போகினம். சிலர் &ndash; பல விசயங்களையும் அறிஞ்ச ஆட்கள் - இதையெல்லாம் எழுதக் கூடும்.

தவறு செய்தவர் என்று இவர் சொல்லும் ஆள் யாரு என்று வெளிவரும் போது இவர் துரோகி என்ர பட்டம் பெற்று இருப்பார் என நினைக்கிறேன்.

தடுப்பு முகமில் சிங்கள இராணுவத்தால் மனமாற்றம் செய்யப்பட்டவர் அல்லது புகழுக்கு பொய் சொல்கிறார் என்று பல்முனைத் தாக்குதல் இவர் மீது நடத்தப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்று கொள்வது வெட்டி நேரத்தை பொறுத்தது என்ற உங்கள் கருத்து தவறானது. அது எதிர்காலத்தில் கடந்த கால தவறுகளை திருத்த உதவ போவதில்லை. 2011ல் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க பழக சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக 2011ல் நாம் 2005ல் இருந்து 2009 வரை செய்தது போல கேள்வி கேட்காமல், குறை சொல்லாமல் ஒரு தலைமையை மட்டும் நம்பி ஆயுதத்தில் அபரீத நம்பிக்கை வைத்து செயற்படக்கூடாது.

  • எமக்கு பல தலைவர்கள் தேவை. மக்கள் பொருத்தமான தலைமையை பின்பற்றும் சந்தர்ப்பம் தேவை.
  • மக்கள் எதையும் கேள்வி கேட்டு பின் தெரிந்து கொள்ளும் உரிமை 2011 ல் தேவை.
  • தலைமையை குறை சொல்லவும் மாற்றவும் மக்கள் முன்வரும் சந்தர்ப்பம் 2011ல் இருக்க வேண்டும்.
  • புதிய சிந்தனைகளும், உலக உறவுகளும் சாணக்கியமும் தேவை.
  • ஆயுதங்களும் மரணமும், அழிவும் எமக்கு வேண்டாம்.

இனியொரு பலம் மிக்கதொரு விடுதலைப் புலிகள் உருவாகப் போகிறதா? இல்லை. பிரபாகரன் திரும்ப வந்து படை நடத்ததப் போகிறாரா? இல்லை. அப்படிப் பட்ட நிலையில் பாடம் படிப்பதால் பயனென்ன?

இன்றைய நிலையோ தமிழன் வரலாற்றில் என்றுமில்லாத கேவல நிலை. இந்த நிலைக்கு எவ்வாறு வந்தோம் என்று ஆராய்வதிலும் இந்த நிலையில் இருந்து சற்றாவது மேல் நோக்கி வரமுடியுமா என சிந்திப்போம். அதற்கப்புறம் பார்க்கலாம் எமக்கு ஆயிரம் தலைவர்கள் தேவையா? அல்லது ஒரு தலைமை போதுமாவென.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் காட்டாறு

எல்லோரும் உளி எடுத்து குனிந்து கொத்திக் கிளறிக்கொண்டிருக்கின்றோம் பழசுகளை.....

நிமிர்ந்து பார்த்தால் எம்முன்னே எத்தனையோ செயல்களும் அதனால் எம்மக்களுக்காக விடுதலையும் விரிந்து பரந்து கிடக்கிறது.

செய்யத்தான் நிமிர்ந்து பார்க்கத்தான் நாதியில்லை.

Edited by விசுகு

நீங்கள், இந்த போர் தவிர்க்க முடியாதது, அதை தெரிந்திருந்தும் தலைமை மக்களை அழிவுப்பாதையில் வழிநடத்தி சென்று லட்சத்துக்கும் மேலான மக்களை பலிகொடுத்தது என்று சொல்கிறீர்களா?

போர் தவிர்க்க முடியாதது தான்... ஆனால் ஏன் போர் நடந்தது என்பதில் பிரச்சினையே....??? இந்த போர் தற்பாதுகாப்புக்காக மட்டும் தான் நடந்தது, மக்களுக்கு வேண்டிய பாதுகாப்பை போர் குடுக்க தவறியது உண்மையே... அந்த பாதுகாப்பு ஏன் பறி போனது எண்று உங்களால் தேடல் செய்ய முடியாத வரைக்கும் வெறும் புலிகளை குறை சொல்லும் நிகழ்வு மட்டும் தான் கடைசி வரைக்கும் நடந்தேறும்... இரண்டு வருடமாக முன்னேறாமல் நடக்கும் குறைசொல்லும் இதுவே நல்லதொரு சாட்ச்சி....

இதுக்கும் மேலை நீங்கள் யாரும் முன்னேறுவியள் எண்டும் எனக்கு நம்பிக்கை இல்லை...

சரி புலிகள் போர் மக்களை கொல்லும் எண்டு முன்னமே சரண் அடைஞ்சு இருக்கிறார்கள் எண்டு வைச்சு க்கொள்ளுங்கள்...

மகசீன் சிறைசாலை மூடப்பட்டு இருக்குமா...?? இல்லை கெப்பிடிகொலாவ , குறுநாகல் முகாம்கள்.,.. ??? புலிகளின் தளபதிகள் கொல்லப்படாமல் தப்பி இருப்பார்களா....?? இல்லை போரின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை விட அதிகமாக காணாமல் போனவர்கள் காணாமல் போய் இருக்க மாட்டார்களா....?? எது சாத்தியமாக இருந்து இருக்கும் எண்டு சொல்லுங்கோ....??

இலங்கைக்கு இந்தியா உதவுவதை நிப்பாட்டி இருக்குமா இல்லை சீனா தான் நிப்பாட்டி இருக்குமா... ?? எது சாத்தியமாக இருந்தது....?

சரி போர் முடிஞ்சு போச்சு... அதன் பிறகு காணாமல் போனவை தொகை குத்துமதிப்பாக என்ன இருக்கும் எண்டு சொல்லுங்கோ... அதுக்கு பிறகு சொல்லுறன் நீங்கள் எவ்வளவு அக்கறை உள்ளீர்கள் ஈழப்போர் உங்களுக்கு இளப்பை குடுத்தது எண்டு...

உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன. நியாயமானது தான். சரியான வழியில் வழிகாட்டப்பட்டிருந்தால் எங்களுக்கு விடைகள் கிடைத்திருக்கும். லட்சத்துக்கு மேலான மக்கள் அநியாயமாக மடிந்து, சமாதனமும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. சரியான வழியில் வழிகாட்டாத தலைமையை பலரும் குறை கூறுகிறார்கள். அது நியாயமானதாகவே எனக்கு தெரிகிறது.

இதுக்கு நான் உங்கட மற்ற பதிலுக்கு அழிக்கும் பதிலை பார்க்கவும்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்க முடியாது.

இங்கு எழுதப்படும்ம் கருத்துக்கள் தான் முக்கியமே தவிர,அவர் பின்னணி என்ன,பூர்வீகம் என்ன என்பது முக்கியமல்ல.

"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும்'என்பார்கள்.

புலிவாலாக இருந்தால் செய்வது எழுதுவது எல்லாம் சரி,மாற்றுக்கருத்தாளன் எனில் அவன் எவ்வளவு நல்லது செய்தாலும் பிழை.இதைத்தான் உந்தவாலுகள் காலம் காலமாக வெளிநாடுகளில் கடைபிடித்தார்கள்.தாங்கள் செய்யும் சுத்துமாத்துக்களையெல்லாம் புலி என்றபோர்வையில் மூடிமறைத்தார்கள்.இதனால் சமூகவிரோதிகளெல்லாம் தாங்களும் நாலு காசைகொடுத்துவிட்டு அதே போர்வைக்குள் புகுந்துகொண்டார்கள்.இவைகள் எல்லாம் தெரிந்தும் தங்களுக்கு காசு வந்தால்காணும் என்று புலிகளும் அவர்களை அரவணைத்துக்கொண்டார்கள்.

அதன் பலாபலன் தான் முள்ளிவாய்கால் இரத்தம் காயமுன் இவர்களில் பலர் போய் ராஜபக்சாவின் கையை பிடித்தது.

அதைவிட யாரும் எந்த அதிகாரமும் கொடுக்காமல் வெளிநாடுகளிலும் தமது அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.பல பிரச்சனைகளுக்கு கட்டைபஞ்சாயத்து நடாத்தினார்கள்.இவைகளெல்லாம் மேற்குலகு அவதானித்துக்கொண்டே இருந்தது.இவங்களுக்கு ஒன்றும் தெரியாது சுத்திப்போட்டு போகலாம் என இருந்த பலர்தான் இப்போ ஓடுப்பட்டுத்திரிகின்றார்கள்.இதன் முதல் படிதான் சுவிஸ் கைதுகள்.இன்னமும் சில வருடங்களில் இந்த இனத்துரோகிகள் துடைதெடுத்துபட்டுவிடுவார்கள்.இவர்களுக்கு ஓடிஒழியக்கூட ஒரு நாடு இல்லை.அடுத்த தலைமுறைகூட இவர்களால் பிழையாக வழிநடத்தபாட்டுவிட்டார்கள்.வன்முறைகலாச்சாரத்தை இங்கு பரப்பியதில் இவர்களின் பங்கு அளப்பரியது.விடுதலைபோராட்டம் என்ற போர்வையில் இவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.எப்படியோ எல்லாவற்றிற்றும் ஓரளவு முடிவு வந்து விட்டது எஞ்சியவர்களும் இன்றோ நாளையோ என்ற நிலைதான்.

இதன் பின் தான் ஒரு ஆரோக்கியமான புலம் பெயர் சமூகம் உருவாகும்.

புலிப்போராட்டமும், புலிகளும் விமர்சனத்திற்குள்ளாவது அபத்தமான ஒன்று என்று எவருமே சொல்ல வரமாட்டார்கள்?

ஆனாலும் அதற்கு உரிய அருகதை என்ற ஒன்று மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே?

புலிப்போராட்டத்தை ஒட்டுமொத்த மோசமாக பார்ப்பவனை கேவலமாகவே பார்கின்றது எமது சமூகம்.

அதுவும் இழவுவீட்டில் வந்தே மரணத்தை பரிகாசம் செய்கின்ற உம்போன்றவர்கு, நாகரீகமான முறையில் பதிலளிப்பதே என்போன்றவர்கு மிகவும் கடினமானது.

சரிஎது, பிழை எது என்பதை மிகவும் ஆதாரமான முறையில் எவருடனும் பதிலளிக்கத்தயாராகவே உள்ளேன். ஆனால் அவர்களில் ஒருவர் திமுகவின் ஆதரவுத்தளத்தில் நின்று கொண்டு புலிகளின் செயல்பாடுகளில் தவறுகளை எடுத்துக் கூறினால், அது எப்படி மலையாய் இருக்கின்ற குற்றம் தோன்றாத கண்ணிற்கு குண்டுமணியில் இருக்கும் குற்றம் எப்படித் தோன்றும் என்று எவருமே ஆவேசம் அடைவார்கள். இந்தவகையாகவே இருக்கும் உமது கருத்துக்களின் அடிப்படைத்தளம், வெறும் காழ்புணர்ச்சியின் கொப்பளம் என்றே எமக்கு உணர்த்துகின்றது.

புலியின் ஆட்சியின் பலவருடங்கள் வாழ்ந்தவர்களின் புலிபற்றிய விமர்சனத்தை அந்த ஆட்சியினை என்ன என்றே அறியாத உம்போன்றவரின் விமர்சனம் அறியாமை என்று பட்டம் கொடுக்கின்ற அருகதை, உரிமை எவரிடம் இருந்து வாங்கி வந்துள்ளீர்கள்? இதில் விளங்காத உங்கள் அறிவுத்திறனின் மீதத்தையா நாம் இனி பார்க்கப் போகின்றோம்?

கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்று கொள்வது வெட்டி நேரத்தை பொறுத்தது என்ற உங்கள் கருத்து தவறானது. அது எதிர்காலத்தில் கடந்த கால தவறுகளை திருத்த உதவ போவதில்லை. 2011ல் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க பழக சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக 2011ல் நாம் 2005ல் இருந்து 2009 வரை செய்தது போல கேள்வி கேட்காமல், குறை சொல்லாமல் ஒரு தலைமையை மட்டும் நம்பி ஆயுதத்தில் அபரீத நம்பிக்கை வைத்து செயற்படக்கூடாது.

  • எமக்கு பல தலைவர்கள் தேவை. மக்கள் பொருத்தமான தலைமையை பின்பற்றும் சந்தர்ப்பம் தேவை.
  • மக்கள் எதையும் கேள்வி கேட்டு பின் தெரிந்து கொள்ளும் உரிமை 2011 ல் தேவை.
  • தலைமையை குறை சொல்லவும் மாற்றவும் மக்கள் முன்வரும் சந்தர்ப்பம் 2011ல் இருக்க வேண்டும்.
  • புதிய சிந்தனைகளும், உலக உறவுகளும் சாணக்கியமும் தேவை.
  • ஆயுதங்களும் மரணமும், அழிவும் எமக்கு வேண்டாம்.

எங்களுக்கு இருந்த அபரீதமான திறமையும் குறைந்த வலுவிடன் நடத்தப்படும் சிறப்பான கட்டுக்கோப்பும் மிக்க நடவடிக்கைகளும், ஆயுத பலமும் தான் உலகை எங்களில் இருந்து தள்ளி நிக்க வைத்தது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை... எஙகளுக்கு இருந்த ஆயுத பலம் தான் எங்களுடன் இலங்கையை பேச சம்மதிக்க வைத்தது எண்டதையும் மறந்து விடாதீர்கள்... அதனால் தான் பேச்சுவாத்தை கூட சாத்தியமானது...

ஆனால் புலிகள் ஆயுதத்தை மட்டும் நம்பி இருந்தார்கள் என்பதில் எனக்கு உடன் பாடும் இல்லை... இது அபாண்டமான பொய்... அப்படியாக இருந்தால் புலிகள் போர் நிறுத்தத்தில் இருந்து எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும்...

கடந்த 9 வருடங்களாக உலகை திருப்தி படுத்த இலங்கை படைகளின் கடும் முன்னேற்றங்களின் போதும் , தற்காப்பு தாக்குதல்களை மட்டுமே புலிகள் நடத்தினர் என்பதுதான் அழிவுக்கான ஆரம்பம்....

வெறும் பொய்களை புனைந்து புலிகள் மீது அவதூறு சொல்வது மட்டும் உங்களை உண்மையான பாதையில் பயணிக்க தூண்டாது...

இந்தியப்படை எதிரியின் படையானது எப்படி? உண்மையில் ஏன் முழு உலகுமே எதிரியானது? முழு உலகும் அரசுகளும் தவறானவை நாம் மட்டுமே சரியானவர்கள் என்ற சிந்தனை தவறான சிந்தனை.

முழு உலகும் தமிழருக்கு எதிரி என்பதும் கூட அப்பட்டமான மிகைப்படுத்தல்... உலகம் எண்டு சொல்வது வெறும் ஐரோப்பாவும் , அமெரிக்காவும் இல்லை... அதோடை பேரழிவு தந்த இந்தியாவும் கூட இல்லை...

இதிலையும் அமெரிக்க ஐரோப்பியர்கள் அழிவுக்கு துணை போனார்கள் என்பதில் கூட உண்மை இருப்பதாக தெரியவில்லை... புலிகளை பலவீனப்படுத்த முயண்றார்கள் என்பது உண்மைதான்... ஆனால் தமிழர்களை அழிக்க வேண்டும் எண்டு செயற்பட்டார்களா என்பதை அவதானிக்க இறுதி போர் காலத்தில் சிங்களவர், பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பா மீது காட்டிய கோபத்தை பார்த்தால் புரியும்... அதிலும் புலிகளை காப்பாத்த முயல்கிறார்கள் எனும் தொனிப்பட அமைச்சர்கள் கருணா உட்ப்பட சொன்னவை இப்போதும் இணையங்களில் காணலாமே... ஏன் அவைகள் மறுக்கிறீர்கள்....?

இலங்கையில் பிரித்தானியாவின் தூதரகத்தை சேதப்படுத்த முனையும் அளவுக்கு நடந்தனவே....?? கிலாரி,, மிலிபானின் வெள்ளை புலிகள் எண்டு புலிகளுடன் சீருடையுடன் ஏன் போஸ்ரர் அடித்து ஒட்டினார்கள்....??

மக்கள் கோணையர்கள் தான். அதனால் தான் இன்று அழிந்து போனார்கள். யாரை நம்பி அழிந்து போனார்கள்? பெருமாளை அல்ல.

நீங்கள் பெருமாளுக்கு ஆதரவாளராக இருக்கலாம் ஆனால் முழு பூசணிக்காயை சோத்திலை மறைக்காதீர்கள்... இந்திய இராணுவ காலத்தில் பெருமாளின் கூலிகளால் எவ்வளவு மக்கள் புலி ஆதரவாளர்கள் எண்டு பலி எடுக்கப்பட்டார்கள்... ஏன் அவைகளை மறைக்கிறீகள்... ???

Edited by தயா

ஈழத்தழிர் எந்த நாட்டுக்கு எதை கொடுத்து அவர்களது ஆதரவை பெற்று கொள்ள எங்கள் தலைமை வழிகாட்டியது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? கொடுப்பதற்கு எண்ணை வயல்கள் இல்லை என்பீர்கள். மகிந்த மன்னாரில் எண்ணை கிணறுகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இன்று கொடுக்கவில்லையா? அணுகுண்டு செய்து கொடுக்க விஞ்ஞானிகள் இல்லை என்பீர்கள். எரித்திரியாவும் சிங்கபூரும் அணுக்குண்டு செய்து கொடுக்கவில்லை.

வழிகாட்டும் பொறுப்பை ஏற்றவர்கள் நடந்து முடிந்த இழப்புகளுக்கும் தோல்விக்கும் பொறுப்பானவர்கள். அவர்களை மக்கள் குறை கூறுவது நியாயமானதே.

இப்ப என்ன சொல்லவாறியள்....?? புலிகள் நேரடியாக எந்த நாட்டுடனும் பேசவோ உறவை விருத்தி செய்யவோ இல்லை எண்டா....?? அப்படி பேச வில்லை என்பதை எப்படி உறுதியாக சொல்லவாறியள்.....???

நான் நினைச்சன் கொஞ்சம் தன்னும் உங்களுக்கு தெளிவான பார்வை இருக்கும் எண்டு... ஆனால் அர்சுணை விட மோசமாக இருக்கிறீர்கள்.....?? ஏன் இப்படி....??

இது வெளிப்படையானது அடிப்படையானது... இதுக்கு பதில் சொல்லுங்கள்.... ?

உங்களிட்டை கேக்க விரும்புவது... 2000 ம் ஆண்டு தன்னிச்சையாக புலிகள் போர் நிறுத்தம் செய்த போது எப்படி நோர்வே சமரசத்துக்கு நடுநிலையாளராக வந்தது என்கிறீர்கள்... அவர்கள் புலிகளின் தொடர்பை எப்படி பெற்றுக்கொண்டனர்... ஒரு நாள் நித்திரையில் இருந்த விளித்த சொல்கைம் புலிகள் சமாதானத்துக்கு வாற மாதிரி கனவு கண்டு சந்திரிக்காவுடன் பேசி ஒரு ஹெலியை எடுத்துக்கொண்டு வன்னியிலை பயங்கரவாதிகளாக உலகால் நம்பப்படும் புலிகளிடம் எந்த பயமும் இல்லாமல் போனார் எண்டா சொல்லப்போறியள்....??

நோர்வே புலிகளுக்கு பணம் கொடுத்தது வானொலி உபகரணங்களை எல்லாம் ஏன் கொடுத்தது...?? அதுவும் அமெரிக்காவில் கைப்பிள்ளை எண்டு சொல்லப்படும் நோர்வே....??

உலகம் எல்லாம் இருக்கும் ஆயுத வியாபாரிகளிடம் இருந்து ஓரிருவரால் தூக்கவே முடியாத பெரிய பெரிய ஆயுதங்களை எல்லாம் பேரம் பேசி வாங்கி யாருக்கும் தெரியாமல் கப்பல்களில் ஏத்தி இலங்கை வரைக்கும் கொண்டு போக தெரிந்த புலிகளுக்கு ஒரு நாட்டின் அதிகார மட்டங்களில் பேச முடியவில்லை , தொடர்புகளை பேண முடியவில்லை எண்டா சொல்ல வாறியள்....???

Highly confidential and secret ஆன விடயங்கள் புலிகளால் வெளிப்படையாக எப்போது கையாளப்படுவதில்லை.... அதுக்காக செய்யவே இல்லை என்பது கூட பொய்யான புனைவு தான்...

இந்த பொய்களும் புனைவுகளும் கூட உங்களுக்கு சரியான பாதையை காட்ட போவதில்லை... புலிகள் தவறி விழுத குழியை கண்டு பிடியுங்கள் அப்ப தான் உங்களால் அதை தாண்டி நடக்க முடியும்... !

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைக்கு சீனாவும், இந்தியாவும், அமெரிக்காவும் ஆதரவில்லை என்பதையும், இந்தியா முழுமையாக எதிர்ப்புடன் சிறிலங்காவுக்கு உதவுகிறது என்பதையும் அறிந்து, அவற்றையெல்லாம் வெற்றி கொள்ளும் திட்டம் தலைமையிடம் இருந்ததா?

நீங்கள் சொல்வதை பார்த்தால் அப்படி ஒரு திட்டம் இருந்தாகவே தெரியவில்லையே? வெற்றிபெற முடியாத ஒரு போராட்டத்துக்கா இவ்வளவு ஆயிரம் அழிவுகள்?

அப்படி வெற்றி பெற முடியாத போராட்டத்தின் அழிவுப்பாதையில் தான் எமது மக்கள் வழிநடத்தப் பட்டிருந்தார்கள் என்றால் யார் அதற்கு பொறுப்பு, வழிகாட்டியல்லவா?

வாக்களிப்பு மூலம், அல்லது திறமை காரணமாக வேறு ஒரு தலைமையை கொண்டுவரும் சந்தர்ப்பம் இருந்தால் அது இனிமேலாவது வித்தியாசமான முறையில் தவறுகளுக்கு காரணமான கொள்கைகளை விட்டு வெற்றி பெறும் பாதையில் போக பயன்படும். கடந்து வந்த பாதையில் தொடருவது அழிவுகளின் தொடர்ச்சியாக அமையாதா?

இந்தியாவின் ஆதரவுடன் மறுபடியுமா? என்று இந்த கனவு முடிவுக்கு வரும்?

யூட், நாம் 2006 இல் என்று நினைக்கின்றேன், ஜீவன்கூலை மாகான் என்று கொண்டாடி புலிகள் செயல்கள் மீது வசைமாரி பொரிந்து தள்ளி இருந்தீர்கள். இந்த நிலையால் நீங்கள் இப்போது யதார்த்தபூர்வ வாதங்களை முன்வைத்து புலிகளை வைதால் கூட, தங்களிடம் இருக்கும் பழைய வஞ்சத்தை சொறிவதாகவே எனக்கு உருவகமாகின்றது.

போராட்டம் தோல்வி அடைந்தாலோ, இல்லை முடிவு இழப்புக்கள் அதிகமானாலோ அங்கே இருந்த நியாயம் இடம்மாறி விடுவதில்லை.

ஏன் முள்ளிவாய்க்காலின் தோல்வி புலிகளால் வெற்றியாக மாற்றப்பட்டு, அந்தப் புள்ளியே நிலமீட்பின் முதல் புள்ளியாகக் கொண்டு மொத்த நிலம் முழுவதும் மீண்டு வெற்றியை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே வேளை இந்தியப் படை எடுப்பால் அனைத்தும் மீண்டும் இழந்தாலும். அந்தத் தோல்வியின் கனம் இன்றைய தோல்வியை விட மோலானது என்று சொல்லப்படவும் முடியாது.

சிங்களம் எந்த சூழலுக்குள் சிக்கவைக்கப் பட்டால் பூகோழரீதியான பிராந்திய அரசுகளுக்கு பிராந்தியவாத புது நிலைப்பாடு அவசியமாகும்.

விமானப்படை கொண்டும் செய்யமுடியாததை. வெறும் அரசியல் கொண்டே அது பெற்றுத்தரும் போன்ற சிந்தனைகளினதும் விளைவும் ஆகும் இந்த நிலை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிப்போராட்டமும், புலிகளும் விமர்சனத்திற்குள்ளாவது அபத்தமான ஒன்று என்று எவருமே சொல்ல வரமாட்டார்கள்?

ஆனாலும் அதற்கு உரிய அருகதை என்ற ஒன்று மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே?

புலிப்போராட்டத்தை ஒட்டுமொத்த மோசமாக பார்ப்பவனை கேவலமாகவே பார்கின்றது எமது சமூகம்.

அதுவும் இழவுவீட்டில் வந்தே மரணத்தை பரிகாசம் செய்கின்ற உம்போன்றவர்கு, நாகரீகமான முறையில் பதிலளிப்பதே என்போன்றவர்கு மிகவும் கடினமானது.

சரிஎது, பிழை எது என்பதை மிகவும் ஆதாரமான முறையில் எவருடனும் பதிலளிக்கத்தயாராகவே உள்ளேன். ஆனால் அவர்களில் ஒருவர் திமுகவின் ஆதரவுத்தளத்தில் நின்று கொண்டு புலிகளின் செயல்பாடுகளில் தவறுகளை எடுத்துக் கூறினால், அது எப்படி மலையாய் இருக்கின்ற குற்றம் தோன்றாத கண்ணிற்கு குண்டுமணியில் இருக்கும் குற்றம் எப்படித் தோன்றும் என்று எவருமே ஆவேசம் அடைவார்கள். இந்தவகையாகவே இருக்கும் உமது கருத்துக்களின் அடிப்படைத்தளம், வெறும் காழ்புணர்ச்சியின் கொப்பளம் என்றே எமக்கு உணர்த்துகின்றது.

புலியின் ஆட்சியின் பலவருடங்கள் வாழ்ந்தவர்களின் புலிபற்றிய விமர்சனத்தை அந்த ஆட்சியினை என்ன என்றே அறியாத உம்போன்றவரின் விமர்சனம் அறியாமை என்று பட்டம் கொடுக்கின்ற அருகதை, உரிமை எவரிடம் இருந்து வாங்கி வந்துள்ளீர்கள்? இதில் விளங்காத உங்கள் அறிவுத்திறனின் மீதத்தையா நாம் இனி பார்க்கப் போகின்றோம்?

:) :)

உங்கட வீட்டில் விழுந்தால் இழவு துக்கம் கொண்டாடவேண்டும்,மற்றவர்கள் வீட்டில் விழுந்தால் வெடி கொழுத்தி கொண்டாடிய கூட்டமல்லவா.

எதுவும் தனக்கு தனக்கு வரும் போதுதான் தெரியும்.தாங்கள் நாலுபேர் தப்புவதற்காக 40,000 பேரை பலி கொடுத்த கூட்டமல்லவா?

அந்த 40,000 பேரையும் கொன்றத்தற்குத்தான் ராஜபக்சாமேல் உலகம் போர்குற்றம் சுமத்தவேண்டுமென வேண்டுகின்றோமல்லாமல் புலிகளை அழித்தது பற்றி எந்த உலகும் கேள்வி கேடகவில்லை.ராஜபக்சா புலிகளை அழித்ததை உலகம் பெருமையாகத்தான் பார்க்கின்றது அதனால் தான் அந்த அப்பாவி 40,000 உயிர்களையும் அழிந்ததையும் கருத்தில் எடுக்குதில்லை.

நீங்கள் இப்படியே குண்டிசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருங்கள்.25 வருடமாக எத்தனை வானொலிகள், டீ.வீ.கள். பத்திரிகைகள், இணையதளங்கள்.யாரையாவது மதித்தீர்களா?

முழுத்தமிழனையும் நடுரோட்டில் கொண்டுவந்துவிட்டுவிட்டு இழவுவீட்டில் வந்து நான் மரணத்தை பரிகசிக்கின்றேனா?.

மரணத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.வருசத்தில் இரண்டு நாளைக்கு கொடியை பிடித்துவிட்டு பஞ்சுமெத்தையில் வந்து படுத்துறங்கிவிட்டு யாரோ பெத்த 10,12 வயது சிறுவர்,சிறுமிகளை பலவந்தமாகபிடித்து 2,3 மாத பயிற்சியுடன் முன்னரங்களில் விட்டு காவு கொடுத்துவிட்டு உலகமே குற்றம் சொல்ல ஏதும் கேட்காது போல் இருந்தவர்களல்லவா? உலகிற்கு எல்லாம் தெரியும் உங்களுக்கும் எல்லாம் தெரியும்.உங்களை நீங்கள் ஏமாற்றலாம் உலகையல்ல.

உங்கட வீட்டில் விழுந்தால் இழவு துக்கம் கொண்டாடவேண்டும்,மற்றவர்கள் வீட்டில் விழுந்தால் வெடி கொழுத்தி கொண்டாடிய கூட்டமல்லவா.

எதுவும் தனக்கு தனக்கு வரும் போதுதான் தெரியும்.தாங்கள் நாலுபேர் தப்புவதற்காக 40,000 பேரை பலி கொடுத்த கூட்டமல்லவா?

புலிகள் ஒட்டு மொத்தமாக ஒரு நாலு பேருக்காக போராடவில்லை... ஒட்டு மொத்தமான சனத்துக்குமாக போராடினார்கள்... எல்லாருக்குமான பாதுக்காப்பு தான் அவர்களின் நோக்கம்...

தப்பி வெளியிலை வந்த சனம் 4 லச்சம்...! ஆனால் இப்ப இருப்பதாக சொல்லப்படுவது வெறும் 2 லட்ச்சமே.... அதில் உண்மையில் காணாமல் போனவர்கள் எத்தினை பேர்...?? அப்படி எண்டால் அவர்களை ஏன் உங்களால் காப்பாத்த முடியாமல் போனது...??

உங்கட சொறி குணங்களை மாத்தாத வரைக்கும் நீங்கள் இந்த இடத்தை விட்டு வேறு தளங்களுக்கு நகர போவதில்லை... இரண்டு வருடமாக நிக்கும் இந்த இடத்திலை தான் இனிவரும் காலம் முழுவதும் நிக்கப்போறியள்... !

அந்த 40,000 பேரையும் கொன்றத்தற்குத்தான் ராஜபக்சாமேல் உலகம் போர்குற்றம் சுமத்தவேண்டுமென வேண்டுகின்றோமல்லாமல் புலிகளை அழித்தது பற்றி எந்த உலகும் கேள்வி கேடகவில்லை.ராஜபக்சா புலிகளை அழித்ததை உலகம் பெருமையாகத்தான் பார்க்கின்றது அதனால் தான் அந்த அப்பாவி 40,000 உயிர்களையும் அழிந்ததையும் கருத்தில் எடுக்குதில்லை.

அப்ப மகிந்தவை கைது செய்ய கோரும் சர்வதேச மனித உரிமை குழு யார் அண்ணை... ??? அவைக்கும் சர்வதேசத்துக்கும் சம்பந்தமே இல்லையோ....??

இருக்கிற பத்திலை பதினொன்றாக மட்டும் தான் நீர்....!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மகிந்தவை கைது செய்ய கோரும் சர்வதேச மனித உரிமை குழு யார் அண்ணை... ??? அவைக்கும் சர்வதேசத்துக்கும் சம்பந்தமே இல்லையோ....?? இருக்கிற பத்திலை பதினொன்றாக மட்டும் தான் நீர்....!

அவர் தமிழ் நாட்டில் கனகாலமாக பார்சல் சாப்பிட்டதால...

அவர்களையும் நாங்க வாங்கிட்டம் என்று நினைத்துக்கொண்டிருப்பார். எழுதுவார்.

மக்கள் மீதான பற்றும் அக்கறையும் தானாக வரவேணும் நாம் என்ன தான் ஏத்தினாலும் கருங்கல்லுக்குள் ஈரத்தை எதிர்பார்க்கமுடியுமா தயா.... :(

புலிப்போராட்டமும், புலிகளும் விமர்சனத்திற்குள்ளாவது அபத்தமான ஒன்று என்று எவருமே சொல்ல வரமாட்டார்கள்?ஆனாலும் அதற்கு உரிய அருகதை என்ற ஒன்று மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே?

புலிப்போராட்டத்தை ஒட்டுமொத்த மோசமாக பார்ப்பவனை கேவலமாகவே பார்கின்றது எமது சமூகம்.

புலியின் ஆட்சியின் பலவருடங்கள் வாழ்ந்தவர்களின் புலிபற்றிய விமர்சனத்தை

அந்த ஆட்சியினை என்ன என்றே அறியாத உம்போன்றவரின் விமர்சனம்

அறியாமை என்று பட்டம் கொடுக்கின்ற அருகதை, உரிமை எவரிடம் இருந்து வாங்கி வந்துள்ளீர்கள்? இதில் விளங்காத உங்கள் அறிவுத்திறனின் மீதத்தையா நாம் இனி பார்க்கப் போகின்றோம்?

நன்றி ஐயா

தங்களது நேரத்திற்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.