Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் தமிழ் வாலிபர் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் இப்படி புட்டுப்புட்டு வைக்கிறீர்களே......

ஒருசிறு மாற்றம் 14 வருடங்களுக்கு மேல் சட்டரீதியற்ற முறையிலிருந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்......

  • Replies 116
  • Views 19.6k
  • Created
  • Last Reply

அஜிவன் அண்ணா சரியாக கூறியிருக்கிறீர்கள்..

மீரா சொல்வதும் சரிதான் சட்டரீதியற்ற முறையில் 14

வருடங்கள் இருந்தால் தான் விண்ணப்பிக்கலாம்..

  • தொடங்கியவர்

அஜீவன் இப்படி புட்டுப்புட்டு வைக்கிறீர்களே......

ஒருசிறு மாற்றம் 14 வருடங்களுக்கு மேல் சட்டரீதியற்ற முறையிலிருந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்......

7 வருடங்கள் என்று ஒரு வழக்கறிஞர் கூறினார்.

அப்படி என் முன்னே ஒருவரது விடயத்தை

வழக்காக பதிவதற்கு

அந்த வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார். :?:

:arrow: திருத்தத்துக்கு நன்றி மீரா + வசீ.

மாற்றி விடுகிறேன்.

இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட விரும்பகின்றேன். இலங்கையில் மோசமாக கலவரங்கள் நடந்த காலத்தில் பிரித்தானியாவிற்குள் வந்த நம்மவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து அங்குள்ள தமிழர் யாராவது பொறுப்பெடுத்தால் அகதி அந்தஸ்து கொடுத்தார்கள். இந்த விடயத்தில் அப்போது ஆரம்பத்தில் பிரித்தானியாவில் வந்திருந்த பலர் முன்வந்து உதவினார்கள். ஆனால் வந்தவர்களோ சிறிது காலத்தில் தமது கைவரிசையைக் காட்டி பொறுப்பெடுத்தவர்கள் தலையில் மண்ணைப் போட்டு விட்டார்கள். இதனாலேயே முன்பு வந்தவர்கள் பலர் இப்போ தாமுண்டு தம் வேலையுண்டு என்று தெரிகின்றார்கள்.

வசம்பு கண்ணா பொறுபடுத்தவங்களின் மண்ணை தலை கட்டிட்டு போகல்லை அண்ணா.. அவங்க பாணியை தொடரவில்லை அவங்க பேச்சை கேட்கவில்லை என்பது சிலவேளை உண்மையாயிருக்கலாம் 83 முன்பு வந்த படிக்கவந்த வசதி படைத்த கோஸ்டிகள். பிழைக்க தெரியாத உடம்பை வலிக்க தெரியாமால் சிலதுகள் ஊரிலே இருந்து பணத்தைஎடுத்து படித்த படித்ததுபோல இருந்ததுகள். உந்த பயபிராந்திகளின் கதையை கேட்டிருந்தால் அவங்களை மாதிரியே இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்..83க்குபின் வந்து உடம்பை வளைச்சவங்களால் தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்தது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது மட்டும் இல்லாமல் இண்றைக்கு ஐரோப்பாக்காறர்(தமிழ்)எல்லாம் வந்து தொழில் செய்யலாம் எண்ட நம்பிக்கையையும் அதற்கு அடித்தளத்தைப் போட்டவர்கள். அதோட இண்றைய தமிழ் தலைமுறை திறைமையின் அடிபடை கொண்டு எவ்வளவு உயர் பதவியையும் வகிக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

நான் அறிந்த அளவுக்கு ஐரோப்பாவில எங்கையும் ஒரு (GAS station) எரிபொருள் நிலையத்தில கூட காசாளராக் கூட வேலை கிடைக்கிரது கஸ்ரம். விசயம் இப்படி இருக்க லண்டன் காறரை குறை சொல்லுறது அவ்வளவு நல்லா இல்லை.

அது எண்டால் மெய்தான் சிக்ஸ்பேஸ் அண்ணா. இங்கை வேலை செய்ய எவ்வளவோ இடம் இருக்க ஏன் நாங்கள் பெற்றோல் பம்ப் ல வேலை செய்ய வேண்டும். இங்க ஜேர்மனில நிறைய பெடியள் பெற்றோல் பம்ப் ல வேலை செயுறாங்கள் தான். இதுதெரியாம லண்டன் காரர் கள்ள கிறடிற்காட்டோட இங்கவந்து தமிழ் பெடியள் வேலை செயுறாங்கள் எண்டு தெரியாமல் கள்ள பெற்றோல் அடித்து இப்பவும் சிலர் இங்க உள்ளுக்க இருக்கினம்

500 எக்கவுண்ட் புகழ் ஞானன் வாழ்ந்த ஊர் அல்லே நட்டுவன் பிள்ளையளுக்கு சொட்டியா காட்டிக்கொடுக்கணும்

வசம்பு கண்ணா பொறுபடுத்தவங்களின் மண்ணை தலை கட்டிட்டு போகல்லை அண்ணா.. அவங்க பாணியை தொடரவில்லை அவங்க பேச்சை கேட்கவில்லை என்பது சிலவேளை உண்மையாயிருக்கலாம் 83 முன்பு வந்த படிக்கவந்த வசதி படைத்த கோஸ்டிகள். பிழைக்க தெரியாத உடம்பை வலிக்க தெரியாமால் சிலதுகள் ஊரிலே இருந்து பணத்தைஎடுத்து படித்த படித்ததுபோல இருந்ததுகள். உந்த பயபிராந்திகளின் கதையை கேட்டிருந்தால் அவங்களை மாதிரியே இருந்திருக்கவேண்டி வந்திருக்கும்..83க்குபின் வந்து உடம்பை வளைச்சவங்களால் தான் இன்று இவ்வளவு முன்னேற்றம் வந்தது.

போற போக்கை பார்த்தால் சின்னக்குட்டியாரும் தத்துப்பிள்ளை போல கிடக்குது. :lol::(:(:lol::lol::lol::lol:

அது மட்டும் இல்லாமல் இண்றைக்கு ஐரோப்பாக்காறர்(தமிழ்)எல்லாம் வந்து தொழில் செய்யலாம் எண்ட நம்பிக்கையையும் அதற்கு அடித்தளத்தைப் போட்டவர்கள்
உங்கை என்ன தொழில் செய்ய ஐரோப்பாகாரர் வருகினம் பிறிடிஸ் காரரின் பழைய வீடுகளை விலைப்படுத்தவல்லோ வருகினம். ஆனவாயில சாப்பாடும் இல்லாம நித்திரையும் இல்லாம உங்க யாரால வாழ முடியும்.

சொன்னா நம்பமாட்டீங்க ஒரு 6 மாதம் இங்க வந்து வசித்து தான் பாருங்களன் அப்புறம் தெரியும். புலம் பெயர் நாடுகளில ஜேர்மனின் வாழ்க்கை முறை மாதிரி நான் எங்கும் காணவில்லை. லண்டனுல டொக்டர் வந்து தொட்டாலே காசு......................

என்ன செய்ய ஊமை. ஆறுமுகத்தார் சொல்லுறது உண்மை எண்டாலும் லண்டனில பழகீட்டு ஜேர்மனி வாறது கஸ்ரம் அதோட பாசைப் பிரச்சின வேற. எல்லாம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி நிலைமைதான்.

என்னைக் கேட்டால் லண்டனை விட்டு வெளீல புறநகரங்களுக்கு போய் வாழுறதும் கஸ்ரம் இல்லை ஆனால் பாசை தெரியாத ஊரில வேண்டாம் அப்பா. கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது போல கிடக்கும்.

ஆனாலும் இங்கை இங்கிலாந்தில் இருப்பவர்கள் பகட்டு வாழ்க்கையோடு நிறையச் சொத்து சேர்க்கிறார்கள். அதனால் அவர்கள் கடுமையாய் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

அஜீவன் வயதுக்க மூத்தவர்களிற்கு மரியாதை கொடுக்காமல் தொலைபேசியில் காவல்துறையை கூப்பிடுவதை பெருமையாக சொல்லுகிறீர்களா? தமிழ் கலாச்சாரம் வெளிநாடுகளில் வந்து எந்தளவுக்கு சீரழியிது எண்டு பாருங்கோ? எங்களை மாதிரி ஊரிலை வழர்ந்திருந்;தா தொலைபேசி இருந்ததோ அப்படி இருந்தாலும் தொலைபேசயிலை கதைச்சு பொலிசை யாரும் வீட்டை கூப்புடுவியளோ? அங்கை எல்லாம் உந்த ஜம்பங்கள் பலிக்காது. கட்டுப்பாடா அடக்க ஒடுக்கமா இருந்து வழந்திருக்குங்கள்.

குறுக்கால வந்து குசும்பு பேசுறீங்களே. தமிழ் கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே அந்த கலாச்சாரத்தில் என்ன இல்லை. பெரியோர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கச் சொல்லுறீங்களா? அல்லது கல்வியறிவுடன் தன் சமூகத்தை திருத்துவதை விட்டுவிட்டு பெரியோர் சொல்கிறார்கள் என்று கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?

  • தொடங்கியவர்

காசு மட்டும் இருந்து போதாது ராசா

ஊரில மாதிரி யார் வந்தாலும் ஒரு செம்பு தண்ணியாவது கொடுக்கிறவங்கள லண்டன் தவிர்ந்த ஐரோப்பாவிலதான் நான் பார்த்தேன்.

ஆகக் குறைந்தது ஒரு இலவச சிரிப்பு.......... :oops:

பாவம் அவங்களுக்கு உண்மையிலயே நேரமில்லை.

அவங்க வாழ்கை நிலை அப்படி?

பெற்றோல் நிலையமில்லை.

புலம் பெயர் வானோலி தொலைக் காட்சி விளம்பரங்களை பாருங்க.

யாருடைய விளம்பரங்கள் மூலம் இவை ஓடுதெண்டு?

உண்மை தெரியும்.

ஆரம்ப தமிழர்கள் சுவிஸுக்கு வந்த நேரம்

யாரும் படிக்க இல்ல.

இப்ப இங்க நம்பர் வன் புள்ளிகள் வாங்கி மேல் நிலைக்கு போற குழந்தைகள் தமிழ் குழந்தைகள் என்று

சுவிஸ் கல்வித் திணைக்களம் சொல்லுது.

உண்மையான கடும் உழைப்பாளிகள்

குற்றவியல் தன்மை குறைந்தவர்கள் தமிழர்கள் என்று

வேலை செய்யும் நிறுவனங்கள் - மற்றும் போலீஸ் திணைக்களம் சாட்சி சொல்லுது.

முன்ன கறுப்பா பார்த்தவங்க

இன்றைக்கு தமக்குள் ஒருவனா பார்க்கிற நிலை.

இன்றைக்கு அதிக சுவிஸ் குடியுரிமை பெறும்

வேற்று இனம் இலங்கையர் என்பது பெருமை.

எந்த ஒரு வெள்ளைக் குழந்தையும்

தன் நண்பர்கள் தமிழ் குழந்தைகள் என்று

சொல்லிப் பெருமைப்படுவதைப் பார்ப்பதில்

எமக்கே பெருமை.

சுவிஸ்காரர்கள் தமிழரைப் பார்த்ததும்

வணக்கம்.

எப்படி சுகம்?

நல்ல சுகம். என்று ஓரிரு வார்த்தைகளையாவது பேசுவது

அவர்கள் மேல் உள்ள பாசத்தினால்தான்.

தமிழரோடு போகும் சுவிஸ் குழந்தைகளுக்கு

நிச்சயம் பாதுகாப்பு இருக்கு என்று இந்த மக்கள்

நம்புவது பல வேளை என்னையே வியப்பில் ஆழ்த்தியவை!

விடுதலைப் புலிகளை தடை செய்ய நெருக்குதல்கள் வந்த போது

அதை நிராகரித்தது சுவிஸ் போலீஸ் திணைக்களம்தான்.

அவர்களால் எமக்கு ஆபத்து இல்லை.

போலீஸ் பந்தோபஸ்து கூட இல்லாமல்

அமைதி காப்பவர்கள் என்ற கருத்து.............

சில உதைபந்தாட்ட நிகழ்வுகளில்

சில வன்முறைகள் நடைபெறுவது வருத்தமானது.

இதுகூட சாட்சி சொல்லாத காரணத்தால் தொடர்கிறது.

இது வெகு காலம் தொடராது..................

ஒன்று ரெண்டு அப்பிடி இப்பிடித் துள்ளும்...........

முறையான தகவலோட

மாட்டினா உள்ள இல்லாட்டி வெளிய

எது வசதியோ அவங்க தீர்மாணிக்க வேண்டிய விடயம்?

லண்டன் காட் கொண்டு வந்து பெற்றோல் அடிச்சவங்க

சாமான் வாங்கினவங்க

சிலர் இன்னும் பத்திரமா உள்ள இருக்கிறாங்க.

சிலர் எதுக்கு பாதுகாப்பா இருக்க வேணுமெண்டு

கனடா - லண்டன் பக்கம் ஓடிட்டாங்க?

ஐரோப்பாவோட சுவிஸ் இணைஞ்சா

அவங்களுக்கு ஆப்பு இருக்காம் :lol:

ஒன்று மட்டும் நிச்சயம்

நாளைய உலக வரலாற்றில்

தாம் வாழும் நாட்டு மக்களுடன் சரிசமமாக இணைந்து ஈகோஎன்பது

என்னவென்று தெரியாது

முன்னேறி நிற்கப் போவது என்னவோ

இங்கிலாந்து தவிர்ந்த

ஐரோப்பிய - ஸ்கண்டிநேவிய தமிழரது குழந்தைகள்தான்

ஆனால் ஒன்று இவர்கள் தம்மை தமிழர் என்று சொல்லாமல்

இந்த நாட்டு மக்களாக தம்மை ஆக்கிக் கொள்வார்கள் :?: :oops:

அஜீவன் அண்ணா உண்மையை சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக இது அனைவரது மனச்சாட்சிக்கு முன்னாலும் கண்ணாடி மாதிரி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தொடருங்கள் மகிழ்சியான வாழ்த்துக்கள்.

இப்ப இங்க நம்பர் வன் புள்ளிகள் வாங்கி மேல் நிலைக்கு போற குழந்தைகள் தமிழ் குழந்தைகள் என்று

சுவிஸ் கல்வித் திணைக்களம் சொல்லுது.

உண்மையான கடும் உழைப்பாளிகள்

குற்றவியல் தன்மை குறைந்தவர்கள் தமிழர்கள் என்று

வேலை செய்யும் நிறுவனங்கள் - மற்றும் போலீஸ் திணைக்களம் சாட்சி சொல்லுது.

அஜீவன் அண்ணா...! இதற்கு முன் லண்டன் இருந்த இட்சத்தில் சுவிஸ் இருக்கிறது எண்டுறீங்கள்... லண்டண் நிலைமைக்கு சுவிஸ்வர காலம் எடுக்கும்தான்..... :P :P :P

கல்விபற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்... நீங்கள் அறியவில்லையா லண்டனிலும் ஈழத்து குழந்தைகள் படிப்பில் முதல் எண்டு... சில காலத்துக்கு முன்னர் 12 வயதில் பல்கலைக்களகம் போன மாணவனைப் பற்றியுமா அறியவில்லை......??

காசு மட்டும் இருந்து போதாது ராசா

ஊரில மாதிரி யார் வந்தாலும் ஒரு செம்பு தண்ணியாவது கொடுக்கிறவங்கள லண்டன் தவிர்ந்த ஐரோப்பாவிலதான் நான் பார்த்தேன்.

ஆகக் குறைந்தது ஒரு இலவச சிரிப்பு.......... :oops:

பாவம் அவங்களுக்கு உண்மையிலயே நேரமில்லை.

அவங்க வாழ்கை நிலை அப்படி?

பெற்றோல் நிலையமில்லை.

புலம் பெயர் வானோலி தொலைக் காட்சி விளம்பரங்களை பாருங்க.

யாருடைய விளம்பரங்கள் மூலம் இவை ஓடுதெண்டு?

உண்மை தெரியும்.

ஆரம்ப தமிழர்கள் சுவிஸுக்கு வந்த நேரம்

யாரும் படிக்க இல்ல.

இப்ப இங்க நம்பர் வன் புள்ளிகள் வாங்கி மேல் நிலைக்கு போற குழந்தைகள் தமிழ் குழந்தைகள் என்று

சுவிஸ் கல்வித் திணைக்களம் சொல்லுது.

உண்மையான கடும் உழைப்பாளிகள்

குற்றவியல் தன்மை குறைந்தவர்கள் தமிழர்கள் என்று

வேலை செய்யும் நிறுவனங்கள் - மற்றும் போலீஸ் திணைக்களம் சாட்சி சொல்லுது.

முன்ன கறுப்பா பார்த்தவங்க

இன்றைக்கு தமக்குள் ஒருவனா பார்க்கிற நிலை.

இன்றைக்கு அதிக சுவிஸ் குடியுரிமை பெறும்

வேற்று இனம் இலங்கையர் என்பது பெருமை.

எந்த ஒரு வெள்ளைக் குழந்தையும்

தன் நண்பர்கள் தமிழ் குழந்தைகள் என்று

சொல்லிப் பெருமைப்படுவதைப் பார்ப்பதில்

எமக்கே பெருமை.

சுவிஸ்காரர்கள் தமிழரைப் பார்த்ததும்

வணக்கம்.

எப்படி சுகம்?

நல்ல சுகம். என்று ஓரிரு வார்த்தைகளையாவது பேசுவது

அவர்கள் மேல் உள்ள பாசத்தினால்தான்.

தமிழரோடு போகும் சுவிஸ் குழந்தைகளுக்கு

நிச்சயம் பாதுகாப்பு இருக்கு என்று இந்த மக்கள்

நம்புவது பல வேளை என்னையே வியப்பில் ஆழ்த்தியவை!

விடுதலைப் புலிகளை தடை செய்ய நெருக்குதல்கள் வந்த போது

அதை நிராகரித்தது சுவிஸ் போலீஸ் திணைக்களம்தான்.

அவர்களால் எமக்கு ஆபத்து இல்லை.

போலீஸ் பந்தோபஸ்து கூட இல்லாமல்

அமைதி காப்பவர்கள் என்ற கருத்து.............

சில உதைபந்தாட்ட நிகழ்வுகளில்

சில வன்முறைகள் நடைபெறுவது வருத்தமானது.

இதுகூட சாட்சி சொல்லாத காரணத்தால் தொடர்கிறது.

இது வெகு காலம் தொடராது..................

ஒன்று ரெண்டு அப்பிடி இப்பிடித் துள்ளும்...........

முறையான தகவலோட

மாட்டினா உள்ள இல்லாட்டி வெளிய

எது வசதியோ அவங்க தீர்மாணிக்க வேண்டிய விடயம்?

லண்டன் காட் கொண்டு வந்து பெற்றோல் அடிச்சவங்க

சாமான் வாங்கினவங்க

சிலர் இன்னும் பத்திரமா உள்ள இருக்கிறாங்க.

சிலர் எதுக்கு பாதுகாப்பா இருக்க வேணுமெண்டு

கனடா - லண்டன் பக்கம் ஓடிட்டாங்க?

ஐரோப்பாவோட சுவிஸ் இணைஞ்சா

அவங்களுக்கு ஆப்பு இருக்காம் :lol:

ஒன்று மட்டும் நிச்சயம்

நாளைய உலக வரலாற்றில்

தாம் வாழும் நாட்டு மக்களுடன் சரிசமமாக இணைந்து ஈகோஎன்பது

என்னவென்று தெரியாது

முன்னேறி நிற்கப் போவது என்னவோ

இங்கிலாந்து தவிர்ந்த

ஐரோப்பிய - ஸ்கண்டிநேவிய தமிழரது குழந்தைகள்தான்

ஆனால் ஒன்று இவர்கள் தம்மை தமிழர் என்று சொல்லாமல்

இந்த நாட்டு மக்களாக தம்மை ஆக்கிக் கொள்வார்கள் :?: :oops:

அஜீவன் இங்கு ஜேர்மனியிலும் இதே மாதிரித்தான் நன்றி எடுத்து கூறியதற்கு.

  • தொடங்கியவர்

இங்கிலாந்து வேறு ஐரோப்பா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் வேறு தலை.

இங்கிலாந்து ஒரு காலத்தில் ஆசியாவை ஆண்ட அவர்களது சட்ட திட்டங்களை திணித்து எம்மை அடிமையாக வைத்திருந்த ஒரு வல்லரசு.

இங்கிலாந்து மக்களுக்கு இலங்கை - இந்திய நாடுகளைப் பற்றிய தெளிவும்

அங்கு வாழும் மக்கள் பற்றியும் தெரியும்.

இலங்கையில் கல்வி கற்றவர்கள் எல்லாம் இங்கிலீஸ்காரன் போல் வாழ நினைப்பவர்கள் என்பது பலருக்கு நான் சொல்லி விளக்கத் தேவையில்லை.

இங்கிலாந்து - அமெரிக்கா . அவுஸ்திரேலியா - கனடா போன்ற ஆங்கில நாடுகளில் கல்வி கற்று முன்னேறுவது

ஒன்றும் இன்று நேற்று தொடங்கியதல்ல.

காந்தியை - புத்தனை - சேனாநாயகாவை - சேர் பொன் இராமநாதனை - அருணாசலத்தை - கட்டபொம்மனை............இப்படிப்பட

குறுக்கால வந்து குசும்பு பேசுறீங்களே. தமிழ் கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே அந்த கலாச்சாரத்தில் என்ன இல்லை. பெரியோர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கச் சொல்லுறீங்களா? அல்லது கல்வியறிவுடன் தன் சமூகத்தை திருத்துவதை விட்டுவிட்டு பெரியோர் சொல்கிறார்கள் என்று கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?

அது ஒரு கலாச்சாரமோ? கண்டவனும் கண்டவளும் ஏதே எல்லாம் கண்ட கண்ட இடத்திலை செய்யினம். கண்டதையும் தின்னுதுகள் குடிக்குதுகள். நினைச்சாலே ஏதோ எல்லாம் செய்து. எங்கடை கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் மாதிரி வருமே. அடக்க ஒடுக்கமா பயபக்தியா இருந்தம் நாங்கள்.

அரைகுறை உடுப்பும் சென்ரும் பூசிக் கொண்டு 4 சொல்லு இங்கிலீசோ வேறை ஜரோப்பிய மொழிகளில் கதைச்சுக் கொண்டு எம்எஸ்என் இலை சட் பண்ணினா உங்களுக்கு நினைப்பு கல்வியறிவு வந்துட்டுது சமூகத்தையும் திருத்த முடியும் எண்டு என்ன? பெரியவர்கள் எல்லாம் சரியா செய்யாமல் தான் உங்களை பெத்து வழத்து ஆளாக்கி கொண்டு உந்த நிலையிலை விட்டிருக்கினம் நீங்கள் கேள்வி கேக்கிற அளவுக்கு என்ன?

அஜீவன் நீங்கள் சொந்தக் கருத்துக்கள் என்ற பெயரிலை மக்கள் முன் பெய்யான தகவல்களை வைக்கப்பாக்குறீங்கள். நீங்கள் எழுதியிருக்கிறது எல்லாத்துக்கும் என்ன ஆதாரம்? ஊகங்களின் அடிப்படையில் எழுதாமல் ஆதாரபூர்வமாக எழுதுவது தான சாலச்சிறந்தது.

உதாரணத்துக் எனக்கு ஊடகத்துறையில் பல நண்பர்கள். அதாலை எனக்கு எல்லாம் அத்துப்படி.

அஜீவன் சொன்னமாதிரி...ஆரம்பகால ஐரேப்பா புலம் பெயர் பயணமும் .புலம் பெயர் வாழ்வு ஆரம்பமும் ஒவ்வொருதருக்குள்ளும் கதை சொல்லும் தான்

80 களில் ஆரம்பித்த பயணம் 83களில் அதிகமானது அதிகமானோர் east berlin வந்து west berlin க்கு வந்து சேர்ந்தார்கள்.west berlin அப்போதைய மேற்கு ஜெர்மனிக்கு சொந்தமாய் இருந்தாலும் நிலப்பரப்போடு தொடர் பற்று இருந்தது.. கிழக்கு ஜெர்மனியோடு தான் வரவேண்டும்

west berlin பிடிபட்டால் காம்பில் போட்டுவிடுவார்கள்... முன் வந்து பெர்லின் வசிக்கும் சீனியர்கள் உதவி ஓருபுறமும் எங்கள் டொலர்களை சுத்தி கள்ளமாக ரயிலேற்றி விடுவார்கள் இதற்க்கென நம்மவர்கள் ஒரு கூட்டம் புதியவர்களை வரவேற்க காத்திருக்கும்...கணவனுடன் இணைய வந்த மனைவியையும் காதலனை தேடிவந்த காதலியையும் இடையில் கொத்திக் கொண்டு போனவர்களுமுண்டு.

விளம்பரத்து கடையில் வைத்திருந்த மெழுகு சிலையிடம் விலாசம் கேட்டவர்களுமுண்டு.. உல்லாச பறவைகள் கமலகாசன் போல உடலசைவு செய்து கதைத்து இடம் கேட்டவர்களுமுண்டு..

west berlin மேற்கு ஜெர்மனி அங்கமாக இருந்தாலும் பிரிட்டிஸ் பிரான்ஸ் அமெரிக்க இராணுவ சூனிய பிராந்தியங்களாக இருந்தன 80களில் யாழ் வீதிகளில் ஓடிய ஆமட் ராணுவ வாகனம் பெர்லின் வீதிகளில் அமெரிக்க பிரிட்டிஸ் பிரான்ஸ் அமெரிக்க கொடிகளுடன் ஓடி திரிநதது ஆச்சரியமும் திகிலாகவூம் இருந்தது. வெஸ்ற் ஜெர்மனிக்கு ரயிலேறி தப்பி சென்றவர்கள் தவிர மற்றவர்கள் வெஸ்ற்பெர்லின் அகதி முகமால் முடங்கி அரசின் விருப்பத்துகமைய பின் ஜெர்மனியின் பலமாகணங்களுக்கு அனுப்ப்பட்டனர்

அகதி முகாமில் நடந்தவை சொல்ல வெளிக்கிட்டால் ஆயிரம் கதை சொல்லும்

  • தொடங்கியவர்

அஜீவன் நீங்கள் சொந்தக் கருத்துக்கள் என்ற பெயரிலை மக்கள் முன் பெய்யான தகவல்களை வைக்கப்பாக்குறீங்கள். நீங்கள் எழுதியிருக்கிறது எல்லாத்துக்கும் என்ன ஆதாரம்? ஊகங்களின் அடிப்படையில் எழுதாமல் ஆதாரபூர்வமாக எழுதுவது தான சாலச்சிறந்தது.

உதாரணத்துக் எனக்கு ஊடகத்துறையில் பல நண்பர்கள். அதாலை எனக்கு எல்லாம் அத்துப்படி.

சொந்தக் கருத்துகளை விட சொந்த அனுபவங்கள்.

ஒரு அருமையான நிகழ்வு:-

அகதியாக விண்ணப்பித்த ஒரு தமிழ் இளைஞன்

போலீஸாரிடம் தன் பிரச்சனையை விளக்கினான்.

தாயக்த்தில் விமானப்படை போட்ட குண்டுகளால் தன் குடும்பமே அழிந்தது என்றான்.

அதற்கு அதிகாரி சொன்னார்.

அப்படி எந்த தகவலும் என்னிடமில்லை.

அதற்கு என்ன ஆதாரம் என்றான்.

சாவின் பயத்தில் நிற்பவன்

உயிரை காப்பாத்த ஓடுவானே தவிர

குண்டு போடும் போது படம் எடுத்துக் கொண்டு இருக்க மாட்டான்.

விரும்பினால் என்னோடு தாயகத்துக்கு வாருங்கள்

குண்டு போடும் போது நீங்களே ஆதாரத்தைக் காண்பீர்கள் என்றான்.

அதிகாரி அடுத்த கேள்விக்கு போகவே இல்லை.

அது போலத்தான் பல உண்மைகள்.

பலர் இப்போது சொல்ல விரும்புவதில்லை.

இப்போதைய நிலை அப்படி..................

உதாரணத்துக் எனக்கு ஊடகத்துறையில் பல நண்பர்கள். அதாலை எனக்கு எல்லாம் அத்துப்படி.

:lol::lol: :P

  • தொடங்கியவர்
தவறாக இரு முறை இடம்பெற்றது.
  • தொடங்கியவர்

அது போலத்தான் பல உண்மைகள்.

பலர் இப்போது சொல்ல விரும்புவதில்லை.

இப்போதைய நிலை அப்படி..................

இன்னுமொரு முக்கிய விடயம்

இந்த நாடுகளில் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட 98% வீதமானவர்கள்

உண்மையில் பாதிக்கப்பட்டவர்களே இல்லை.

மத்திய கிழக்கு மற்றும் வேறு நாடுகளில் இருந்தும் வந்தவர்களுக்கே

முறையான சான்றிதழ்கள் ஆதாரங்கள் கொடுக்க முடிகிறது.

உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உடுத்த உடையோடு ஓடியவர்களே................

அவர்களிடம் ஏதய்யா ஆதாரம்?

செஞ்சிலுவைச் சங்கம் சான்றிதழ் கொடுத்தவர்கள் கூட

இவர்கள் நிரபாராதிகள் என்று காவல் துறையால் விடுவிக்கப் பட்டவர்களே!

உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளே

இல்லை மண்ணோடா.........?

செஞ்சிலுவைச் சங்கம் சான்றிதழ் கொடுத்தவர்கள் கூட

இவர்கள் நிரபாராதிகள் என்று காவல் துறையால் விடுவிக்கப் பட்டவர்களே!

ஆம் அஜீவன் அண்ணா இப்படி விடுதலையாகியவர்கள் இங்கு வந்து எனக்கு இலங்கையில் பிரச்சனை என்னை பொலிஸ் பிடிக்கிறது என இங்கு வந்து அந்தந்த நாட்டு குடிவரவு திணைக்களத்துக்கு இந்தச் சான்றிதளை கொடுத்தால் அவர்கள் எங்களை எப்படி எண்ணுவார்கள். இதனை இங்கு ஜேர்மனியில் ஒரு நீதிமன்றத்தில் புகலிட தஞ்ச வழக்கின் போது எனது சினேகிதரிடம் நீதிபதி கேட்டார். உங்களை இலங்கை பொலீசார் உங்கள் மீது எதுவித குற்றமும் அற்றவர் என்ற பின்னரே விடுதலை செய்தார்கள் அதன் பின்னர் தான் உங்களால் இப்படிப்பட்ட ஆவணத்தைக்கூட பெற முடிந்தது. பின்னர் இப்பொழுது மீண்டும் பிரச்சனை என்று சொன்னால் நான் எப்படி நம்புவது உம்மீது குற்றம் இருந்தால் நீர் தொடர்ந்தல்லவா தடுத்து வைக்கப்பட்டிருப்பீர் என வினாவினார். நண்பர் கப் சிப் என இருந்தார். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் வீல்ஸ்டன் பகுதியில் அண்மையில் கொல்லப்பட்ட வர்த்தகரான சிவகுமாரின் புகைப்படம் கீழுள்ள இணையப்பக்கத்தில் ......

http://www.geocities.com/surya100/kumar.html

இந்த தலைப்பில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்கள் பற்றி பெரிய விவாதமே நடந்திருக்கு போலிருக்கு. அது சரி ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தம்மிடையே தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும் போதும் நேரே சந்திக்கும் போதும் வணக்கம் சொல்வதாகவும் ஆனால் பிரித்தானியாவில் அப்படி இல்லை என்றும் ஐரோப்பா வாழ் தமிழர் ஒருவர் குறைப்பட்டு கொண்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.