Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிப்தில் மக்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனித்தான் இஸ்ரேல் அமெரிக்கா ஐரோப்பாகாரங்களுக்கு தலையிடி இருக்கு

  • Replies 146
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முபாரக் ஒரு சர்வாதிகாரியாக சில மேற்குலக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டாலும்.. அவர் நாட்டு மக்களின் ஒரு பகுதியினரின் குரலுக்கு செவி சாய்த்து பெரிய வன்முறைகளுக்கு இடம் கொடாது பதவி விலகியதை பாராட்ட வேண்ட்டும். இதை சிங்களத் தலைமைகள் செய்ய மேற்குலகம் ஊக்குவிக்குமா. இல்லவே இல்லை. :o:unsure:

நாங்களும் ஒரு போரை நிறுத்தச் சொல்லி மேற்குலக நாடுகளின் வாசல்களில் கிட்டந்தோம். அவர்கள் 50,000 மக்களை பலியிட்டும் அடங்கவில்லை. இப்போது புரிய வேண்டும் எங்கு யார் மக்களை மதிக்கும் ஜனநாயகத்தை நிறுவி வைத்திருக்கிறார்கள். யார் ஆயுத பலத்தால் பணப்பலத்தால் மமதை கொண்டு... ஜனநாயகத்தின் பெயரால் மனித அவலங்களுக்கு துணை போய் கொண்டிருக்கிறார்கள் என்று. :rolleyes:

வாழ்த்துக்கள் எகிப்திய மக்களே. அவர்களின் குரலை செவிமடுத்த அதிபருக்கும் நன்றிகள். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எகிப்தில் நடந்தது ....சர்வாதிக்காரிக்கு எதிரானா போராட்டம்.

அங்கு முஸ்லீமும், முஸ்லீமும் தான் அடி படுவான்.

அதனைத் தடுக்கு பல முஸ்லீம் நாடுகள் முன் நிற்கும்.

ஈழத் தமிழரது போராட்டம்...... பல எல்லைகளை தாண்டியது.

இன்று அந்தப் போராட்டம் தோற்றதன், பலாபலனை சந்திக்க, எந்த தமிழனும் இருக்க மாட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் எகிப்திய மக்களே. அவர்களின் குரலை செவிமடுத்த அதிபருக்கும் நன்றிகள். :)

மக்களின் குரலை செவிமடுக்க முபாரக்குக்கு 20 வருடங்கள் சென்றனவவோ????

30வருடங்கள் இவர் ஆட்சியிலிருந்தாலும்....... அன்றுதொடக்கம் இவருக்கெதிராக குரல்லெழுப்பியவர்கள் அனைவரும் இன்று மண்ணோடுமண்ணாகிப்போனார்கள்.

இன்று என்னமோ மேற்குலகின் அழுத்தத்தினால்த்தான் பதவியை துறந்தார் என்பது உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எகிப்தில் நடந்தது ....சர்வாதிக்காரிக்கு எதிரானா போராட்டம்.

அங்கு முஸ்லீமும், முஸ்லீமும் தான் அடி படுவான்.

அதனைத் தடுக்கு பல முஸ்லீம் நாடுகள் முன் நிற்கும்.

ஈழத் தமிழரது போராட்டம்...... பல எல்லைகளை தாண்டியது.

இன்று அந்தப் போராட்டம் தோற்றதன், பலாபலனை சந்திக்க, எந்த தமிழனும் இருக்க மாட்டான்.

நான் முபாரக்கை ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவில்லை. அந்த நாட்டின் அமைவிடம்.. அதன் எதிரிகள்.. குறிப்பாக இஸ்ரேலின் பலம்.. அது எகிப்த் மீது போர் தொடுத்த விதம்.. என்று நோக்கின் அப்படி பார்க்கவும் முடியாது. சவுதி மன்னர் அமெரிக்க ஆதரவோடு மேற்குலக ஆதரவோடு பன்னெடுங்காலமாக அதிகாரத்தில் இருக்கிறார்.. அவரை யார் இப்படி தூக்கி எறிய முன் வருவினம். ஒபாமா.. கம்ரூன்..????! நிச்சயமாக முடியாது.

முன்னாள் அமெரிக்க எதிரி இன்னாள் கூட்டாளி லிபிய அதிபர் கடாபி காலங்காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்.. அவரை தூக்கி எறிய முடியுமா..???!

சிம்பாபே அதிபர் அப்படி.

மேற்குலகின் நலன்களுக்கு ஏற்ப அது ஒரு தலைவரை ஜனநாயகவாதிகாகவும் காட்டும் சர்வாதிகாரியாகவும் காட்டும். அதற்கு நல்ல உதாரணம் ராஜபக்ச..! ஒரு சிறுபான்மை இனத்தை அழித்த போர்குற்றவாளியை அவர் சார்ந்த பெரும்பான்மை இன மக்கள் தெரிவு செய்துவிட்டதற்காக ஜனநாயகவாதியாக ஏற்று வாழ்த்தியவர் ஒபாமா.

அதே நேரம் இன்னொரு போர்குற்றவாளியான ஈராக் முன்னாள் அதிபரை தங்களின் தேவைக்காலத்தில் எல்லாம் ஜனாதிபதியாகப் போற்றிவிட்டு பின்னர் சர்வாதிகாரியாக சித்தரித்து ஈராக் ஆக்கிரமிப்பை செய்து முடித்தனர்.

இவர்களை நம்பி முபாரக்கை ஒரு சர்வாதிகாரி என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எமது தேசிய தலைவரும் ஒரு இயக்கதிற்கு 35 வருடம் தலைமை தாங்கினவர். அப்ப அவரையும் சர்வாதிகாரி என்று அழைப்பதை நீங்கள் ஏற்பீர்களா..??!

நாம் மேற்குலகின் அடியொட்டி எமது கொள்கைகளை வகுக்கக் கூடாது. எமக்கான தெளிவான கொள்கை அவசியம். இன்றேல் நாம் மேற்குலகை நம்பி ஏமாந்து கொண்டிருக்க வேண்டிய சூழலே மிஞ்சும். அவர்கள் எம்மை அரவணைப்பது போல அணைச்சு தங்கள் தேவைக்கு ஏறி மிதித்துவிட்டும் செல்வர். அந்த நிலையை நாம் முள்ளிவாய்க்காலில் தெளிவாகக் கண்டுவிட்ட பின்னும்.. மேற்குலகால் தான் எல்லாம் என்று நம்புவது நமது கையாலாகத்தனம். அதுவே அவர்களின் பலம். :o:unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நான் முபாரக்கை ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவில்லை. அந்த நாட்டின் அமைவிடம்.. அதன் எதிரிகள்.. குறிப்பாக இஸ்ரேலின் பலம்.. அது எகிப்த் மீது போர் தொடுத்த விதம்.. என்று நோக்கின் அப்படி பார்க்கவும் முடியாது. சவுதி மன்னர் அமெரிக்க ஆதரவோடு மேற்குலக ஆதரவோடு பன்னெடுங்காலமாக அதிகாரத்தில் இருக்கிறார்.. அவரை யார் இப்படி தூக்கி எறிய முன் வருவினம். ஒபாமா.. கம்ரூன்..????! நிச்சயமாக முடியாது.

என்னை பொறுத்தவரையில் இவர் ஒரு சர்வதிகாரி. எதை வைத்து அவர் சர்வாதிகாரி?

தான் பதவியில் வந்த நாள் முதல் அவசரகால சட்டத்தை அமுலில் வைத்து ஒரு காவல்துறை - புலனாய்வுத்துறை அரசியலை நடாத்தி வந்துள்ளார். அதாவது, மக்களை பயத்துள் வைத்து ஆட்சி செய்துள்ளார். மேலும், ஒரு கட்சி அரசியல் அங்கு இருந்திருக்கின்றது.

ஒரு மக்களாட்சி நாடாகவும் இஸ்ரேலுடன் அமைதியை பேணமுடியும்.

சவூதியில் மசகு எண்ணெய் உள்ளது. அதன் விலை பீப்பா நூறு அமெரிக்கன் டாலர்கள் உலக சந்தையில், அங்கே எவர் ஆண்டாலும் மக்கள் மகிழ்வாகவே உள்ளனர். அது எகிப்து இல்லை யேமன் / ஜோர்தான் போன்ற நாடுகளுக்கு சரிவராது. இந்த நாடுகளில் மசகு எண்ணெய் வளம் இல்லை, மக்கள் வறுமைக்குள் வாழ்கின்றனர்.

லிபியா.. சிம்பாபே.. இவை எல்லாம் சவுதி போல பணக்கார நாடுகளா..???! அங்கெல்லாம் சர்வாதிகார ஆட்சி நடப்பது மேற்குலகிற்கு தெரியாதா..???!

சிரியா மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டை கொண்டு வந்த போது சிரியா அதை நல்ல விதமாகக் கையாண்டு நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆட்சியை கையளித்துவிட்டது. ஈரான் மீதும் குறிப்பாக அதன் மதத்தலைவர் கொமைனி மீதும் இப்படிச் சொல்லப்பட்டது. ஆனால் சவுதி தொடர்பில் மேற்குலகம் ஜனநாயகம் பற்றி பேசுவதே கிடையாது..???! அப்போ எண்ணைக்கும் பணத்துக்கும் முன்னாள் ஜனநாயகம் அவசியமில்லை. மக்களாட்சி அவசியமில்லை என்றா மேற்குலகம் கருதுகிறது..????!

சீனாவில் மக்கள் நலன் உயர்ந்தளவில் பேணப்பட்டு வரும் நிலையிலும் அங்கு ஜனநாயகத்தை வலியுறுத்தும் மேற்குலகம்.. சவுதி தொடர்பில் மெளனம் காப்பதும் ஏன்..???!

எங்கையோ இடிக்குதே...????!

எகிப்தின் முக்கிய பிராந்தியப் பிரச்சனை பலஸ்தீனம்... இஸ்ரேல். எகிப்தின் அரசியல் நிலவரம் உறுதியாக இல்லாவிட்டால் இஸ்ரேல் சந்தியில் சிந்துபாடும். அதேபோல் பலஸ்தீன மக்களின் குரலும் அடக்கப்பட்டு விடும். முபாரக்கின் இருப்பு பலஸ்தீன மக்களுக்கு ஒரு நேரடியாக இல்லாத போதும் மறைமுக ஆதரவை அளித்திருக்கிறது. அந்த வகையில் முபாரக்கின் வெளியேற்றம்.. பலஸ்தீன தேசத்தின் தோற்றதிற்கு பின்னடைவான ஒன்றாகவே இருக்கும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நாம் மேற்குலகின் அடியொட்டி எமது கொள்கைகளை வகுக்கக் கூடாது. எமக்கான தெளிவான கொள்கை அவசியம். இன்றேல் நாம் மேற்குலகை நம்பி ஏமாந்து கொண்டிருக்க வேண்டிய சூழலே மிஞ்சும். அவர்கள் எம்மை அரவணைப்பது போல அணைச்சு தங்கள் தேவைக்கு ஏறி மிதித்துவிட்டும் செல்வர். அந்த நிலையை நாம் முள்ளிவாய்க்காலில் தெளிவாகக் கண்டுவிட்ட பின்னும்.. மேற்குலகால் தான் எல்லாம் என்று நம்புவது நமது கையாலாகத்தனம். அதுவே அவர்களின் பலம். :o:unsure:

உங்கள் இந்த கருத்துடன் உடன்படும் அதேவளை , இதைப்பற்றி கூடுதலாக பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.

இன்று உலக மக்கள் மக்களாட்சியை, சனநாயகத்தை, திறந்த பொருளாதாரக் கொள்கையை உலகம் முழுவதும் விரும்புகிறார்கள். மத்திய கிழக்கில் ஒரு நாடான இஸ்ரேலை தவிர வேறு எங்கும் சுயாதீன தேர்தல் நடைபெறுவதில்லை. ஆனால், எல்லா தென் ஆசிய நாடுகளிலும் முறைகேடானது என்றாலும் தேர்தல் நடக்கின்றது. இலங்கை உட்பட பல "சர்வாதிகாரிகள்" ஒரு பல கட்சி கொண்ட மக்கள் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். மேற்குலத்தை பொறுத்தவரையில், தேர்தலால் தெரியப்படும் சர்வாதிகாரிகள் சற்று உயர்வாக பார்க்கப்படுகின்றார்கள்.

எமது தாயக அரசியல் அழுத்தங்களை பொறுத்தவரை மேற்குலகம், இந்தியா, சீனா என மூன்று வெளிக்காரணிகள் உள்ளன. மூன்றும் சேர்ந்து எம்மை முள்ளிவாய்க்காலில் அழித்தன. இன்றும் எமக்கு இந்த மூன்றில் இருந்துதான் அங்கீகாரம் தேவை. மாறிவரும் உலக அரசியலில் அதற்கேற்ப எமது காய்களை நகர்த்த திறந்த மனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். "அந்த நாடு எங்களை இப்படி அழித்தது" என்பதற்காக நாம் உறவுகளை வளர்க்க மறுப்பது தவறாகும். மூன்று தரப்பினரிடமும் எமது உறவுகளை வளர்த்து அதற்குள்ளே ஒரு இராசதந்திரத்தை நகர்த்தல் என்பதே விடிவை தேடும் வழி.

நாம் இந்தியாவோடு நட்பு வளர்த்திருக்கிறோம் (கார்கில் போரில் விடுதலைப்புலிகள் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்டனர். தேசிய தலைவர் இந்தியா எமது நட்பு நாடு என்று பகிரங்கமாகச் சொன்னார்.) மேற்குலகோடு பகைமை பாராட்டாத நிலையை பேணி இருக்கிறோம்.. (நோர்வேயை மத்தியத்துக்குள் கொண்டு வந்தோம். மேற்குலக கண்காணிப்புக் குழுவை நிறுவினோம்.). சீனாவோடு.. (சீன ஆதரவு கம்னீசியவாதிகளோடு பகைமை பாராட்டாத நட்பை கொண்டிருந்திருக்கிறோம்.. மாவோயிட்டுக்களோடு வெளிப்படையாக இல்லா விட்டாலும் தார்மீக உறவு பேணி இருக்கிறோம்.) ஜப்பானோடு.. (ஜப்பானிய அக்காசியோடு பேசி இருக்கிறோம்.) நடுநிலையோடு இருந்திருக்கிறோம். இந்தியாவிற்காக ரஷ்சியாவை அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

எமது விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் யாரையும் எதிரிகளாக வகுத்துக் கொண்டு போராடியதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் எம்மை அப்படி அணுகவில்லையே..??! அதற்கான காரணத்தைக் கண்டறியாது எப்படி இவர்களிடம் இருந்து ஒரு பலமான எமக்கு ராஜதந்திர பயனளிக்கக் கூடிய உறவை கட்டி வளர்க்க முடியும் என்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

லிபியா.. சிம்பாபே.. இவை எல்லாம் சவுதி போல பணக்கார நாடுகளா..???! அங்கெல்லாம் சர்வாதிகார ஆட்சி நடப்பது மேற்குலகிற்கு தெரியாதா..???!

சிரியா மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டை கொண்டு வந்த போது சிரியா அதை நல்ல விதமாகக் கையாண்டு நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆட்சியை கையளித்துவிட்டது. ஈரான் மீதும் குறிப்பாக அதன் மதத்தலைவர் கொமைனி மீதும் இப்படிச் சொல்லப்பட்டது. ஆனால் சவுதி தொடர்பில் மேற்குலகம் ஜனநாயகம் பற்றி பேசுவதே கிடையாது..???! அப்போ எண்ணைக்கும் பணத்துக்கும் முன்னாள் ஜனநாயகம் அவசியமில்லை. மக்களாட்சி அவசியமில்லை என்றா மேற்குலகம் கருதுகிறது..????!

சீனாவில் மக்கள் நலன் உயர்ந்தளவில் பேணப்பட்டு வரும் நிலையிலும் அங்கு ஜனநாயகத்தை வலியுறுத்தும் மேற்குலகம்.. சவுதி தொடர்பில் மெளனம் காப்பதும் ஏன்..???!

எங்கையோ இடிக்குதே...????!

எகிப்தின் முக்கிய பிராந்தியப் பிரச்சனை பலஸ்தீனம்... இஸ்ரேல். எகிப்தின் அரசியல் நிலவரம் உறுதியாக இல்லாவிட்டால் இஸ்ரேல் சந்தியில் சிந்துபாடும். அதேபோல் பலஸ்தீன மக்களின் குரலும் அடக்கப்பட்டு விடும். முபாரக்கின் இருப்பு பலஸ்தீன மக்களுக்கு ஒரு நேரடியாக இல்லாத போதும் மறைமுக ஆதரவை அளித்திருக்கிறது. அந்த வகையில் முபாரக்கில் வெளியேற்றம்.. பலஸ்தீன தேசத்தின் தோற்றதிற்கு பின்னடைவான ஒன்றாகவே இருக்கும்.

உங்கள் கேள்விகள் எல்லாம் நியாயமானவையே.

ஆனால், ஒவ்வொரு நாட்டையும் மேற்குலம் பல காரணிகளை வைத்து முடிவெடுக்கின்றார்கள். ஒரே கொள்கையை எல்லா நாடுகளுக்கும் பிரயோகிப்பதில்லை.

கிடத்தட்ட முன்னூறு மில்லயன் மக்களை கொண்ட அரபு உலகத்தில், மேற்குலகம் எகிப்திடம் நெருங்கிய உறவை வைத்திருந்தது. பிரித்தாளும் கொள்கைக்கு, எண்பது மில்லியன் மக்களை கொண்ட எகிப்தினை தனது கொள்கை வகுப்புக்குள் வைத்திருப்பதன் மூலம் முழு அரபு உலகத்தையும் அது வைத்திருந்தது.

சீனாவை பொறுத்தவரையில் அந்த நாடு பெரிய வல்லரசாக வரக்கூடாது என்பதற்காக பல அணுகுமுறைகளை மேற்குலகம் கையாளுகின்றது. அதில் ஒன்று அடிக்கடி மனித உரிமைகள், மக்களாட்சி என்று கதைப்பது.

பல ஆபிக்க நாடுகளிலும் சர்வதிகாரிகள் உள்ளனர். பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக தென்னாபிரிக்க நாடு, நைஜீரியா போன்ற ஒரு சில நாடுகளே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. சிம்பாபே நாட்டில் வெள்ளையர்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்த படியால் மட்டுமே மேற்குலகத்திற்கு ஒருவித கரிசனை இருக்கின்றது.

ஆக, ஒவ்வொரு நாட்டையும் மேற்குலம் பல காரணிகளை வைத்து முடிவெடுக்கின்றார்கள். ஒரே கொள்கையை எல்லா நாடுகளுக்கும் பிரயோகிப்பதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எகிப்தின் முக்கிய பிராந்தியப் பிரச்சனை பலஸ்தீனம்... இஸ்ரேல். எகிப்தின் அரசியல் நிலவரம் உறுதியாக இல்லாவிட்டால் இஸ்ரேல் சந்தியில் சிந்துபாடும். அதேபோல் பலஸ்தீன மக்களின் குரலும் அடக்கப்பட்டு விடும். முபாரக்கின் இருப்பு பலஸ்தீன மக்களுக்கு ஒரு நேரடியாக இல்லாத போதும் மறைமுக ஆதரவை அளித்திருக்கிறது. அந்த வகையில் முபாரக்கின் வெளியேற்றம்.. பலஸ்தீன தேசத்தின் தோற்றதிற்கு பின்னடைவான ஒன்றாகவே இருக்கும்.

இல்லையே...இனித்தானே பலஸ்தீனத்திற்கு முன்னேற்றம் இருக்கு என்று சொல்கிறார்கள்.

அன்வர் சதாத் விட்ட பிழையத்தான் முபாரக்கும் தொடர்ந்தார் என்றும் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்விகள் எல்லாம் நியாயமானவையே.

ஆனால், ஒவ்வொரு நாட்டையும் மேற்குலம் பல காரணிகளை வைத்து முடிவெடுக்கின்றார்கள். ஒரே கொள்கையை எல்லா நாடுகளுக்கும் பிரயோகிப்பதில்லை.

கிடத்தட்ட முன்னூறு மில்லயன் மக்களை கொண்ட அரபு உலகத்தில், மேற்குலகம் எகிப்திடம் நெருங்கிய உறவை வைத்திருந்தது. பிரித்தாளும் கொள்கைக்கு, எண்பது மில்லியன் மக்களை கொண்ட எகிப்தினை தனது கொள்கை வகுப்புக்குள் வைத்திருப்பதன் மூலம் முழு அரபு உலகத்தையும் அது வைத்திருந்தது.

சீனாவை பொறுத்தவரையில் அந்த நாடு பெரிய வல்லரசாக வரக்கூடாது என்பதற்காக பல அணுகுமுறைகளை மேற்குலகம் கையாளுகின்றது. அதில் ஒன்று அடிக்கடி மனித உரிமைகள், மக்களாட்சி என்று கதைப்பது.

பல ஆபிக்க நாடுகளிலும் சர்வதிகாரிகள் உள்ளனர். பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக தென்னாபிரிக்க நாடு, நைஜீரியா போன்ற ஒரு சில நாடுகளே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. சிம்பாபே நாட்டில் வெள்ளையர்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்த படியால் மட்டுமே மேற்குலகத்திற்கு ஒருவித கரிசனை இருக்கின்றது.

ஆக, ஒவ்வொரு நாட்டையும் மேற்குலம் பல காரணிகளை வைத்து முடிவெடுக்கின்றார்கள். ஒரே கொள்கையை எல்லா நாடுகளுக்கும் பிரயோகிப்பதில்லை.

உண்மை. இதையே தான் நானும் குறிப்பிட்டிருக்கிறேன். மேற்குலக நாடுகள் எகிப்த் தொடர்பில் சொல்லுவதை நம்பிக் கொண்டு நாம் அதேவழியில் போக தீர்மானிக்க முடியாது. எமக்கென்றான தனித்துவமான இராஜதந்திரம் மிக்க.. கொள்கைகள் நிலைப்பாடுகள் இந்த விடயங்களில் அவசியம். மேற்குலகம் தனது சொந்த நலனிற்காக மாறுபட்ட .. சுயமுரண்பாட்டுக் கொள்கை வகுத்துச் செயற்படும். அவற்றை அளவுகோலாகக் கொண்டு மேற்குலகை கணிப்பது எமக்கு நல்லதல்ல. அதை முள்ளிவாய்க்கால் நிறுவி விட்டுள்ளது. அதே தவறை நாம் மீண்டும் இழைக்கக் கூடாது... என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக மேற்குலகோடு உறவே வேண்டாம் என்று அர்த்தமல்ல. மேற்குலகுடனான உறவில் எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படை தன்மை இருக்கோ அவ்வளவிற்கு அவ்வளவு அவதானமும் அவசியம். :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே...இனித்தானே பலஸ்தீனத்திற்கு முன்னேற்றம் இருக்கு என்று சொல்கிறார்கள்.

அன்வர் சதாத் விட்ட பிழையத்தான் முபாரக்கும் தொடர்ந்தார் என்றும் சொல்கிறார்கள்.

பலஸ்தீனம் முபாரக்கின் வெளியேற்றத்தோடு குழம்பாமல் இருக்க மேற்குலகமே இப்படி ஒரு கருத்தையும் சொல்லிக் கொண்டிருக்கும். பலஸ்தீனம் குழம்பினால் அது மேற்குலகம் எகிப்தில் ஆட்சிப் பீடத்தில் இருத்த விரும்பும் ஆட்சியாளர்களை பதவியில் அமர்த்துவதை பாதிக்கும். அந்த வகையில்.. இப்போதைக்கு பட்டும் படாமலும் முபாரக்கை குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். பலஸ்தீன தேச எல்லை நிர்ணயம்.. பலஸ்தீன தேச அங்கீகாரம் அளிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் சுதந்திர பலஸ்தீனத்தை பிரகடனம் செய்ய விடாமல்.. மேற்குலகம் தடுத்து நிற்பது ஏன்..???! முபாரக் பலஸ்தீன போராட்டத்தை இந்தளவுக்கு நகர்த்தி வந்திருப்பது முக்கியம். அதேவேளை அவர் அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்தே வந்திருக்கிறார். இன்றேல் அவரால் இவ்வளவு காலத்திற்கு ஆட்சியில் இருந்திருக்க முடியாது.

அமெரிக்காவின் எகிப்த் மீதான இந்த நகர்வுகள் விரும்பி வந்தனவோ விரும்பாமல் வந்தனவோ... இஸ்ரேலுக்கு அவசியமானதாக இது மாற்றப்படும்... என்பதில் ஐயமில்லை. :D:)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

எமது விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் யாரையும் எதிரிகளாக வகுத்துக் கொண்டு போராடியதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் எம்மை அப்படி அணுகவில்லையே..??! அதற்கான காரணத்தைக் கண்டறியாது எப்படி இவர்களிடம் இருந்து ஒரு பலமான எமக்கு ராஜதந்திர பயனளிக்கக் கூடிய உறவை கட்டி வளர்க்க முடியும் என்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.

உண்மை. முடிந்தளவுக்கு எல்லா தரப்பினரிடமும் எமது உறவுகளை வளர்த்து அதற்குள்ளே ஒரு இராசதந்திரத்தை நகர்த்தல் தேவையாக உள்ளது.நாம் எமது கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை இப்படி ஒரு நாள் எகிப்தில் வரும் என்று. 1989 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் உடைந்தது போன்றது இந்த நிகழ்வு என்கிறார்கள். நாளை இந்தியாவில் கூட ஒரு மாற்றம் வரும், அதன் மூலம் எமக்கும் ஒரு திறவுகோல் வரலாம். இல்லை சிங்கள - சீன உறவுகள் பலப்படும் பொழுது இந்திய - மேற்குலக நாடுகளுக்கு ஊடாக ஒரு மாற்றம் வரலாம். இல்லை சிங்கத்திற்குள்ளேயே ஒரு மாற்றம் வரலாம்.

சந்தர்ப்பங்கள் வரும்பொழுது அவற்றை தவறவிடாமல் நமதாக்குவது தான் வரலாற்று தேவையாக உள்ளது.

  • தொடங்கியவர்

இல்லையே...இனித்தானே பலஸ்தீனத்திற்கு முன்னேற்றம் இருக்கு என்று சொல்கிறார்கள்.

அன்வர் சதாத் விட்ட பிழையத்தான் முபாரக்கும் தொடர்ந்தார் என்றும் சொல்கிறார்கள்.

நானும் அப்படித்தான் எண்ணுகின்றேன். இன்னும் முப்பது வருடம் இப்படியே சென்றால் பாலஸ்தீனம் இல்லாமலே போய்விடலாம்.

பாலஸ்தீனியர்கள் எவ்வளவோ தமது ஆரம்ப உரிமை கோரல்களையும் விட்டுக்கொடுத்தும் அவர்களை உலகம் ஏமாற்றியே வந்துள்ளது. காரணம், இந்த சர்வாதிகார அரசியல்வாதிகள். முபாரக் மட்டுமே 40-75 பில்லியன்களை சுருட்டியவர் என்றால் முழு அரபு தலைவர்களுமே எவ்வளவு தூரம் தமது மக்களை ஏமாற்றி வந்துள்ளனர்? பணத்துக்கும் பதவிக்கும் பாலஸ்தீனர்கள் உட்பட பல தமது நியாமான உரிமைகளை இழந்துள்ளனர்?

முந்நூறு மில்லியன் அரபர்களையும் ஒற்றுமைபடாமல் பிரித்து ஆளுவதே மேற்குலக தந்திரம். அது இனி இலகுவில் எடுபடாது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. முடிந்தளவுக்கு எல்லா தரப்பினரிடமும் எமது உறவுகளை வளர்த்து அதற்குள்ளே ஒரு இராசதந்திரத்தை நகர்த்தல் தேவையாக உள்ளது.நாம் எமது கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை இப்படி ஒரு நாள் எகிப்தில் வரும் என்று. 1989 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் உடைந்தது போன்றது இந்த நிகழ்வு என்கிறார்கள். நாளை இந்தியாவில் கூட ஒரு மாற்றம் வரும், அதன் மூலம் எமக்கும் ஒரு திறவுகோல் வரலாம். இல்லை சிங்கள - சீன உறவுகள் பலப்படும் பொழுது இந்திய - மேற்குலக நாடுகளுக்கு ஊடாக ஒரு மாற்றம் வரலாம். இல்லை சிங்கத்திற்குள்ளேயே ஒரு மாற்றம் வரலாம்.

சந்தர்ப்பங்கள் வரும்பொழுது அவற்றை தவறவிடாமல் நமதாக்குவது தான் வரலாற்று தேவையாக உள்ளது.

உண்மையில் இந்த மாற்றங்களை அமெரிக்கா உலகமே அறியாது இருந்த துனிசியாவில் வைத்துத் தொடங்கியது. இதற்குக் காரணம் இருண்ட கண்டம் மீது சீன ஒளி பரவுவதுதான். சீன நிறுவனங்கள் இருண்ட கண்ட வளத்தை நோக்கி பெரிய அளவில் படையெடுக்கும் நிலையில்.. தங்களின் நிலை பறிபோகக் கூடாது என்பதை உணர்ந்து மேற்குலகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே இவை. சீன முதலீடுகளால் ஆபிரிக்க நாடுகள் பல வளர்ச்சி கண்டு வரும் நிலையில்.. எனியும் ஆபிரிக்கா இருண்ட கண்டமாக இருக்கப் போவதில்லை.

அங்கு அமெரிக்காவின் மேற்குலகின் செல்வாக்கை நிறுவ உள்ள ஒரே வழி.. ஜனநாயகம். அந்த வகையில் தான் 30 ஆண்டு காலம் கண்ணை மூடிக் கொண்டிருந்த அமெரிக்க - மேற்குலக ஜனநாயகம் இப்போ இருண்ட கண்டத்தில் கண்ணை திறக்க ஆரம்பித்துள்ளது. பலமிக்க கேந்திர முக்கிஸ்துவம் வாய்ந்த நாடுகளை தனது கைக்குள் கொண்டு வருவதன் மூலம்.. சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த விரும்புகிறது.. அமெரிக்க மேற்குலகம்.

அதேதான் இரண்டு மாதத்திற்குள்.. இத்தனை.. மாற்றங்கள். சீன பொருளாதாரம் வளர வளர மேற்குலக பொருளாதாரம் நலிவுற வுற இன்னும் ன்னும் அரசியல்.. ஜனநாயம்.. பாம்புப் புத்துக்கால வெளிவந்து மாற்றங்கள் வரும். இந்த மாற்றங்களை வைத்துக் கொண்டு பலஸ்தீனம்.. பெரிய இலாபம் அடையும்.. உலகம் உய்வுறும் என்று கணக்குப் போடுவது கொஞ்சம் கூடுதலான எடை கூடிய கணக்காகவே இருக்கும்.

முபாரக்கின் வெளியேற்றத்தோடு கம்ரூன் விட்ட அறிக்கை.. எகிப்தில் சிவில் ஆட்சி வரவேண்டும் என்பதே. அதாவது மேற்குலக நலன் விரும்பியோர் அங்கு ஆட்சியில் அமர தேர்தல்களால் மக்கள் ஏமாற்றி தாம் வெல்ல வேண்டும் என்பதே ஆகும். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இந்த வரலாற்று நிகழ்வை, தமிழர் தரப்பு ( நாடு கடந்த அரசு, கூட்டமைப்பு, தமிழர் "திங் ராங்" (think tank) :

  1. மிக உன்னிப்பாக படிக்க வேண்டும்

  2. வரும் மாதங்கள், ஆண்டுகளில் வரக்கூடிய பிரதேச மாற்றங்கள் பற்றி எதிர்வுகள் கூறி விவாதிக்க வேண்டும்

  3. நிலைமைகளுக்கு ஏற்ப கொள்கைகளை அமைக்க / மாற்ற வேண்டும்

ஒற்றுமையானால் ஒரு வல்லரசாக வரக்கூடிய வளங்கள் மத்தியகிழக்கிற்கு உண்டு. அவர்களை ஒற்றுமைப்படுத்தாமல் சர்வாதிகரிகளை உருவாக்கி ஆளையால் மோதவிடுவது மேற்குலகின் வேலை. முஸ்லீமகள் என்ற ரீதியில் ஒற்றுமைப்பட அங்குள்ள மக்கள் விரும்புகின்றார்கள்.

முபாரக் முஸ்லீம் அடிப்படைவாதிகள் அழுத்தி வைத்திருந்தார். இனி...

இஸ்ரேலிற்கு அச்சுறுத்தல் சிரியா, ஜோர்தான் , ஈரான் வரிசையில் எகிப்தும் இணையப் போகிறது.

போராட்டம் ஏனைய நாடுகளுக்கும் பரவுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

மத்திய கிழக்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகும். மேற்குலகிற்கு பொருளாதாரப் பாதிப்புகள் நிறைய உண்டு (மசகெண்ணை).

இந்தியாவிற்கும் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும்.

எமக்கு இதனால் நன்மை உண்டா ?

எகிப்திய நவீன வரலாற்றில் கடந்த மூன்று அதிபர்களும் இராணுவத்தில் இருந்து வந்தவர்கள். முதலில் நாசர் ( மக்களால் அதிகம் விரும்பப்பட்டவர்), பின்னர் சதாத் (ஒரளவு விரும்பப்பட்டவர்), கடைசியாக முபாரக் ( வெறுக்கப்பட்டவர்). உலகின் பத்தாவது பெரிய இராணுவத்தை கொண்ட எகிப்திய மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றங்கள் வர பல வருடங்கள் செல்லும். தலைவர் தான் அகற்றப்பட்டுள்ளார், நாட்டின் நாலு இலட்சம் காவல்துறை / இரகசிய காவல்துறை மற்றும் இராணுவம் என்பன உடனடியாக மாற்ற முடியாதவை.

ஆகவே ஒற்றுமை ஏற்பட சில காலம் செல்லும்.

முபாரக் முஸ்லீம் அடிப்படைவாதிகள் அழுத்தி வைத்திருந்தார். இனி...

இஸ்ரேலிற்கு அச்சுறுத்தல் சிரியா, ஜோர்தான் , ஈரான் வரிசையில் எகிப்தும் இணையப் போகிறது.

போராட்டம் ஏனைய நாடுகளுக்கும் பரவுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

மத்திய கிழக்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகும். மேற்குலகிற்கு பொருளாதாரப் பாதிப்புகள் நிறைய உண்டு (மசகெண்ணை).

இந்தியாவிற்கும் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும்.

எகிப்தில் மசகு எண்ணெய் வளம் கிடையாது ஆனால், எகிப்து மத்தியகிழக்கின் அறிவகம். எண்ணெய் வளம் கொண்ட நாடுகளும் எகிப்தும் சேரும் பொழுது நிச்சயம் அவர்கள் ஒரு அரசியல், பொருளாதார சக்தியாக மாறுவார்கள். இதை மேற்குலகமும், இஸ்ரேலும் விரும்பா. இதை குழப்புவதில் பல நாசகார வேலைகளை "அபிவிருத்தி" "சனநாயகம்" என்ற பெயரில் அவர்கள் செய்ய முயல்வார்கள். ஆனால், எகிப்திய மக்கள் இதை எல்லாம் மீறி ஒரு பலமான மக்களாட்சி நாடாக வரும் சாத்தியங்கள் உண்டு.

எமக்கு இதனால் நன்மை உண்டா ?

இதைவிட முதலாவதாக நாம் கேட்க வேண்டியது எமக்கு இவ்வளவு நாளும் என்ன இலாபம்/நட்டம் இருந்தது என.

உலகில் சரிந்து வரும் அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கால், அது புதிய "சந்தைகளை" தேடும். அது எமக்கு நன்மை அளிக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

100 ஆண்டுகால உலக ஜனநாயகத்தில் ஒரு மாற்றம் – அறிஞர் கருத்து

எகிப்தில் நடைபெற்றுள்ள மாற்றம் கடந்த 100 வருடகால ஜனநாயகப் பாதையில் ஒரு முக்கிய மாற்றம் என்று டேனிஸ் மத்திய கிழக்கு விவகார நிபுணர் மைக்கல் இயர்வின் ஜென்சன் தெரிவித்துள்ளார். வரும் செப்டெம்பரில் தேர்தலை நடாத்த இருப்பதாகக் கூறும் இராணுவம் மறுபடியும் மக்களை ஏமாற்றுமா என்று கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்.

இராணுவம் தொடர்ந்தும் அதிகாரமுள்ள அமைப்பாகவே இருக்கும் ஆனால் இராணுவத்தைவிட உயர்ந்த இடத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபரும், பாராளுமன்றும் இருக்கும் என்பதை இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

வரும் தேர்தலில் கொஸ்னி முபாரக்கின் என்.டி.பி கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை, அக்கட்சியில் இருந்து ஒருவர் அதிபராக வருவதற்கு வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன.

கடும்போக்கு அரசியல்வாதிகள் இல்லாத பல புதிய ஜனநாயகக் குழுக்கள் எகிப்திய அரசியல் அரங்கில் வந்து சேரும். இதில் முக்கியமானது நடுத்தர வர்க்கத்தில் இருந்து இளைய அரசியல்வாதிகள் சொலிடாரிட்டி முறையில் ஒன்றிணைய வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அதேவேளை இஸ்லாமிய சகோதர அமைப்பு என்ற தடைசெய்யப்பட்ட தாபனம் மறுபடியும் தடை விலகி அரசியல் அரங்கிற்கு வரும்.

எகிப்தைப் பின்பற்றி மத்திய கிழக்கின் மற்றய நாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட வழி பிறந்துள்ளது, மாற்றங்கள் அசுர வேகம் பெறாவிட்டாலும் சந்தேகமே வேண்டாம் நடைபெறும்.

அத்தோடு கடந்த 100 வருட காலத்தில் மத்திய கிழக்கு வட்டகையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் இது என்பதில் இரு கருத்துக்கு இடம் இல்லை என்றும் எகிப்திய ஆய்வுத்துறை நிபுணர்கள் காலைச் செய்தியில் எழுதியுள்ளார்கள்.

http://www.alaikal.com/news/?p=57152

Edited by akootha

  • தொடங்கியவர்

எகிப்தில் நடந்தது ஒரு இராணுவப்புரட்சி என்கிறார்கள் பல வல்லுனர்கள். பொதுவாக இராணுவப்புரட்சிகள்:

  • மக்களின் விருப்புக்களுக்கு மாறாக நடப்பவை
  • நாட்டின் அதிபருக்கு எதிராக நடப்பவை

அப்படி நடக்கும் பொழுது அவை உலகத்தின் கண்டனங்களுக்கு உள்ளாகும். தமது அரசியல், இராணுவ, பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப பல நகர்வுகளை மேற்கொள்ளும். கூடுதலாக இராசதந்திர உறவுகளை துண்டிக்கும். ஆனால், எகிப்தில் அப்படை நடக்கவில்லை. காரணம், மக்கள் விருப்பத்துடன் இராணுவம் நடந்தமை.

பொதுவாக ஒரு நாட்டில் பிரச்சனை நடக்கும் பொழுது அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் தான் கூடுதலாக ஈடுபடும். ஆனால், இந்த எகிப்திய பிரச்சனையில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சு கூடுதலாக ஈடுபட்டது. அதிலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் றொபேட் கேட்ஸ் (இவர் ஜோர்ஜ் புஸ் இளையவர் காலத்திலும் செயலாளராக இருந்தவர்) தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார். கராணம், அங்கு இராணுவமே தலைவிதியை நிர்ணயிக்கும் காரணி என்பதை அவர்கள் துல்லியமாக அறிந்திருந்தமையே.

எகிப்திய இராணுவத்தில் யார் கூடிய செல்வாக்கு உள்ளவர் ?

இராணுவ அதிகாரியாக பீல்டு மார்ஷல் மொகது உசேன் கந்தாவி (75) உள்ளார். மார்ஷல் கந்தாவி முபாரக்கின் ஆதரவாளர் ஆவார். அடுத்தவர் லெப்டினனட்ட் ஜெனரல் சமி ஹபீஸ் எனான். இவர் முப்படையின் ஒருங்கிணைக்கும் அதிகாரி ( Joint Chief of Staff). எனான் அமெரிக்காவின் ஆதரவாளராக உள்ளார். இவர் அமெரிக்கவில் பயிற்சி பெற்றவர். எனவே இவரிடம் பொறுப்பை ஒப்படைக்க அமெரிக்கா விரும்புகிறது என கூறப்படுகின்றது.

Edited by akootha

இன்று சீ.என்.என். தொலைக்காட்சியில், மக்கள் தாமே முன்வந்து நாட்டை முன்னேற்ற உழைக்க போவதாக கூறினர். அங்கு சராசரியாக ஒன்று தொடக்கம் மூன்று விழுக்காடு மக்களே பணம் மிகுந்தவராக இருக்கின்றனர். இந்த மக்கள் புரட்சி ஒரு ஒழுங்கமைக்கபட்ட நிகழ்வாகவே தெரிகிறது. முடங்கிப்போய் உள்ள பொருளாதாரத்தை அசைவியக்கம் பெற செய்யும் முயற்சியாக கூட இருக்கலாம். நிச்சயமாக குடும்பம் குடும்பமாக சொத்து குவிப்பவர்களுக்கு இது விருப்புக்குரிய செய்தியாக இருக்கமாட்டாது.

  • தொடங்கியவர்

அமெரிக்கா எகிப்து விவகாரத்தில் பிளவு பட்டிருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது. கொஞ்சம் வயது கூடிய உறுப்பினர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையில் பலத்த கருத்து வேறுபாடு இருந்ததாக மேலும் அது சொன்னது. உதவி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இராஜாங்க செயலாளர் கிளிண்டன் போன்றோர் முபராக்கை பாதுகாக்க வேண்டும் எனவும் பெஞ்சமின் ரோட்ஸ், சமந்தா பொக்ஸ் போன்ற இளையவர்கள் எகிப்திய மக்கள் பக்கம் நிற்க வேண்டும் எனவும் ஒபாமாவுக்கு முன்னால் வாதிட்டார்கள் என அது மேலும் கூறியுள்ளது.

On Egypt, Obama administration was divided

A president who himself is often torn between idealism and pragmatism was navigating the counsel of a traditional foreign policy establishment led by Mrs. Clinton, Mr. Biden and Defense Secretary Robert M. Gates, against that of a next-generation White House staff who worried that the American preoccupation with stability could put a historic president on the wrong side of history.

Inside the White House, the same aides who during his campaign pushed Mr. Obama to challenge the assumptions of the foreign policy establishment were now arguing that his failure to side with the protesters could be remembered with bitterness by a rising generation.

Those onetime campaign aides included Denis McDonough, the sharp-tongued deputy national security adviser; Benjamin J. Rhodes, who wrote the president’s seminal address to the Islamic world in Cairo in June 2009; and Samantha Power, the outspoken Pulitzer Prize winner and human rights advocate who was once drummed out of the campaign for describing Mrs. Clinton as a monster.

http://www.nytimes.com/2011/02/13/world/middleeast/13diplomacy.html?_r=1&hp

  • தொடங்கியவர்

இன்று அதிகாரத்தில் உள்ள இராணுவ சபை இரண்டு முக்கிய நகர்வுகளை மேற்கொண்டு ஒருவித தெளிவை தந்துள்ளது.

  • எகிப்திய பாராளுமன்றத்தை (மேல்சபை, கீழ்சபை) கலைத்தது (parliament dissolved)
  • அரசியல் யாப்பையும் தற்காலிகமாக நிராகரித்துள்ளது (constitution suspended)

ஏற்கனவே "செப்டெம்பர்" மாதம் தேர்தலை நடாத்த உறுதி வழங்கியிருந்ததை மீண்டும் உறுதி செய்தது. இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தையும் மதிப்பதாக இராணுவம் கூறியிருந்தது.

அதேவளை அமெரிக்கா ஈரானுக்கு முடிந்தால் எகிப்து மக்கள் போராட்டத்தை ஆதரித்தமாதிரி உங்கள் மக்களையும் சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுவருகின்றது. அதேவேளை யேமனில் தொடரும் ஆர்ப்பாட்டத்தை அமெரிக்கா விரும்பவில்லை.

Edited by akootha

  • தொடங்கியவர்

What Egypt Can Teach America

By NICHOLAS D. KRISTOF

Published: February 12, 2011

The truth is that the United States has been behind the curve not only in Tunisia and Egypt for the last few weeks, but in the entire Middle East for decades. We supported corrupt autocrats as long as they kept oil flowing and weren’t too aggressive toward Israel. Even in the last month, we sometimes seemed as out of touch with the region’s youth as a Ben Ali or a Mubarak. Recognizing that crafting foreign policy is 1,000 times harder than it looks, let me suggest four lessons to draw from our mistakes:

1.) Stop treating Islamic fundamentalism as a bogyman and allowing it to drive American foreign policy. American paranoia about Islamism has done as much damage as Muslim fundamentalism itself.

In Somalia, it led the U.S. to wink at a 2006 Ethiopian invasion that was catastrophic for Somalis and resulted in more Islamic extremism there. And in Egypt, our foreboding about Islamism paralyzed us and put us on the wrong side of history.

We tie ourselves in knots when we act as if democracy is good for the United States and Israel but not for the Arab world. For far too long, we’ve treated the Arab world as just an oil field.

Too many Americans bought into a lazy stereotype that Arab countries were inhospitable for democracy, or that the beneficiaries of popular rule would be extremists like Osama bin Laden. Tunisians and Egyptians have shattered that stereotype, and the biggest loser will be Al Qaeda. We don’t know what lies ahead for Egypt — and there is a considerable risk that those in power will attempt to preserve Mubarakism without Mr. Mubarak — but already Egyptians have demonstrated the power of nonviolence in a way that undermines the entire extremist narrative. It will be fascinating to see whether more Palestinians embrace mass nonviolent protests in the West Bank as a strategy to confront illegal Israeli settlements and land grabs.

2.) We need better intelligence, the kind that is derived not from intercepting a president’s phone calls to his mistress but from hanging out with the powerless. After the 1979 Iranian revolution, there was a painful post-mortem about why the intelligence community missed so many signals, and I think we need the same today.

In fairness, we in the journalistic community suffered the same shortcoming: we didn’t adequately convey the anger toward Hosni Mubarak. Egypt is a reminder not to be suckered into the narrative that a place is stable because it is static.

3.) New technologies have lubricated the mechanisms of revolt. Facebook and Twitter make it easier for dissidents to network. Mobile phones mean that government brutality is more likely to end up on YouTube, raising the costs of repression. The International Criminal Court encourages dictators to think twice before ordering troops to open fire.

Maybe the most critical technology — and this is tough for a scribbler like myself to admit — is television. It was Arab satellite television broadcasts like those of Al Jazeera that broke the government monopoly on information in Egypt. Too often, Americans scorn Al Jazeera (and its English service is on few cable systems), but it played a greater role in promoting democracy in the Arab world than anything the United States did.

We should invest more in these information technologies. The best way to nurture changes in Iran, North Korea and Cuba will involve broadcasts, mobile phones and proxy servers to leap over Internet barriers. Congress has allocated small sums to promote global Internet freedom, and this initiative could be a much more powerful tool in our foreign policy arsenal.

4.) Let’s live our values. We pursued a Middle East realpolitik that failed us. Condi Rice had it right when she said in Egypt in 2005: “For 60 years, my country, the United States, pursued stability at the expense of democracy in this region, here in the Middle East, and we achieved neither.”

I don’t know which country is the next Egypt. Some say it’s Algeria, Morocco, Libya, Syria or Saudi Arabia. Others suggest Cuba or China are vulnerable. But we know that in many places there is deep-seated discontent and a profound yearning for greater political participation. And the lesson of history from 1848 to 1989 is that uprisings go viral and ricochet from nation to nation. Next time, let’s not sit on the fence.

After a long wishy-washy stage, President Obama got it pitch-perfect on Friday when he spoke after the fall of Mr. Mubarak. He forthrightly backed people power, while making clear that the future is for Egyptians to decide. Let’s hope that reflects a new start not only for Egypt but also for American policy toward the Arab world. Inshallah.

http://www.nytimes.com/2011/02/13/opinion/13kristof.html?src=ISMR_AP_LO_MST_FB

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.