Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் தோற்கிறோம்..? ஒரு பத்துக் காரணங்கள்.....!

Featured Replies

வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு.

தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம் மட்டும் தான்!

டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள் என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள் கொஞ்சம் யோசிக்க வைப்பதாக இருக்கும். அப்படிப் படித்த நல்ல பதிவுகளில் ஒன்று, எப்படித் தோற்கிறோம் என்பதைப் பற்றியது.

தோல்வி எதனால் ஏற்படுகிறது, என்பதைக் கொஞ்சம் நன்றாகவே ஒரு பத்து அம்சமாக யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதன் மீது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்த்து ஒரு பத்து விஷயங்களாகச் சொல்கிறார்.

என்னவென்று பார்ப்போமா?

முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது.

இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.

நான்காவதாக, கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.

ஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும் போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.

ஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.

அப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.

ஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது?

அப்படித் தடையாக இருப்பதை மாற்றிக் கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.

எட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும்! வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்! வேலைக்காரர்கள் அல்ல.

சுருக்கமாக, குழுவை உருவாக்குங்கள், ! குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

ஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.

பத்தாவதாக, "அச்சமே கீழ்களது ஆச்சாரம்" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள் தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்று விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்!

ஆமாம்! கொஞ்சம் கூடப் பொய்யில்லை, உண்மையாகவே வெற்றியை நம்மால் பெற முடியும்!

இப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்களை டோனி மார்கன் முன்வைத்திருக்கிறார்.

உங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே..:)

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் நித்திரையால் எழும்பும் போது..... இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடுங்கள்.

அது வேலை இடமாகவோ, பள்ளிக்கூடமாகவோ, வீட்டு வேலையாகவோ.... இருக்கட்டும்.

நேர ஒழுங்கை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

அன்று இரவு படுக்கப் போகும் போது... காலையில் திட்டமிட்டவற்றை சரியான.... முறையில் செய்தேனா என்பதை மனதில் படமாக ஓடவிடுங்கள்.

அதிலிருந்து விட்ட தவறுகளை அடுத்த நாள், திருத்திக் கொண்டால் வாழ்க்கையில் தோல்விகள் ஏற்பட சந்தர்ப்பம் குறைவு. :)

"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்னும் பழமொழியின் படி அனைவரையும் சமமாக பாவிக்க மறவாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தோற்கின்றோம் என்பதற்கான காரணங்களை இலகுவில் சொல்லிவிட முடியாது. அப்படி வகைப்படுத்தி அவதானப்படுத்தமுடியுமெனில் தோல்வி என்ற வார்த்தையும் வந்திருக்காது. உலகில் தோற்றவர் என்று எவரும் இருக்கவும் முடியாது. இங்கு யாழில் கூட ஒருவர் எல்லோருக்கும் வகுப்பெடுக்கின்றார். ஆனால் நானறிந்தவரையில் அவரது வாழ்க்கையில் எதிலுமே அவர் வென்றதில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம் ! பரீட்சையில் வெற்றி , விளையாட்டில் வெற்றி சரி.

வாழ்க்கையில் வெற்றி என்றால் அதன் அளவுகோல் என்ன!

இடி அமீன், சதாம் ஹுசெய்ன் , தற்போது கர்னல் கடாபி போன்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களா? எதுவரை வெற்றிபெற்று விட்டார்கள்!

கருணாநிதியை விடுவோம். அவரது குடும்பத்தில் கடைக்குட்டி பேரன் ஈறாக எல்லோருமே கோடீஸ்வரர்கள், அவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களா!

பிரேமானந்தா, நித்தியானந்தா, விஜஜெந்திரா போன்றவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டார்களா!

ஜூலியன் அசான்கே , பின்லேடன் ,வீரப்பன் போன்றவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டார்களா!

சொத்து சுகங்கள் என்று பெரிதாக எதுவும் வைத்திருக்காமல் வாழ்ந்து மறைந்த காமராசர், அறிஞர் அண்ணா, போன்றவர்கள் வாழ்க்கையில் வென்றவர்களா, தோற்றவர்களா!

தெரியவில்லை! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சொத்து சுகங்கள் என்று பெரிதாக எதுவும் வைத்திருக்காமல் வாழ்ந்து மறைந்த காமராசர், அறிஞர் அண்ணா, போன்றவர்கள் வாழ்க்கையில் வென்றவர்களா, தோற்றவர்களா!

வாழ்வில் தமது இலக்கை(positive) இறக்க முன் அடைகிறார்களா என்பது தான் முக்கியம்.அது சமுகத்துக்கு உதவுமாயின் சமூகம் அவரை வாழ்க்கையில் வென்றவர் என்கிறோம்.அதற்கு பணம் ஒரு ஏதுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை.அத்தோடு வாழ்வில் வெற்றியடைந்தவர் இறந்த பின்பும் அவரது அடியை மக்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் அம்மனிதர் வாழ்வில் வென்றவராக கொள்ளலாம்.

உ+ம் அன்னை திரேசா

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பாராத அதிர்ச்சி தாக்கினாலும் நிலை குலையாமல் நிற்பது அல்லது தாங்கிச் சுதாகரித்து நிற்பதும் வெற்றியை நிர்ணயிக்கும்.

Edited by valvaizagara

வெற்றி எதில் என்பதுதான் பிரச்சனை.

அதை பொதுமைப்படுத்த நினைப்பது மடத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி எதில் என்பதுதான் பிரச்சனை.

அதை பொதுமைப்படுத்த நினைப்பது மடத்தனம்.

அர்ஜுன் பதிந்த பதிவிலை...

இது ஒண்டு தான்.... பெறுமதியான பதிவு.

ஒவ்வொருவரது வெற்றியும் அவரின் மனதை பொறுத்ததே....

சின்னப்பிள்ளை சுவிங்கத்துக்கு ஆசைப் பட்டு, அது கிடைத்தால்... அதுகும் வெற்றியே....

Edited by தமிழ் சிறி

ஒரு சந்தேகம் ! பரீட்சையில் வெற்றி , விளையாட்டில் வெற்றி சரி.

வாழ்க்கையில் வெற்றி என்றால் அதன் அளவுகோல் என்ன!

இடி அமீன், சதாம் ஹுசெய்ன் , தற்போது கர்னல் கடாபி போன்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களா? எதுவரை வெற்றிபெற்று விட்டார்கள்!

கருணாநிதியை விடுவோம். அவரது குடும்பத்தில் கடைக்குட்டி பேரன் ஈறாக எல்லோருமே கோடீஸ்வரர்கள், அவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களா!

பிரேமானந்தா, நித்தியானந்தா, விஜஜெந்திரா போன்றவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டார்களா!

ஜூலியன் அசான்கே , பின்லேடன் ,வீரப்பன் போன்றவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டார்களா!

சொத்து சுகங்கள் என்று பெரிதாக எதுவும் வைத்திருக்காமல் வாழ்ந்து மறைந்த காமராசர், அறிஞர் அண்ணா, போன்றவர்கள் வாழ்க்கையில் வென்றவர்களா, தோற்றவர்களா!

தெரியவில்லை! :unsure:

சுவி,

ஏதாவது ஒன்றை அடைவது வாழ்க்கையின் இலட்சியமாக இருக்கலாம். அது நல்லதோ கெட்டதோ பார்ப்பவர் மனங்களை பொறுத்தது. ஆனால் அது மட்டுமே வெற்றியாகாது. நாம் இறந்த பின்பும், மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக, மக்கள் மனங்களில் வாழ முடிந்தால் அது தான் வாழ்க்கையின் வெற்றி என நான் நினைக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.