Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு

Featured Replies

ஏமனில் போராட்டம்: ராணுவம் ராக்கெட் வீச்சு

ஏமனில் அலி அப்துல்லாசலே கடந்த 32 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். அவரது ஆட்சியில் லஞ்சம் பெருகி விட்டது. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தியும், அரசியல் மாற்றம் தேவை என்றும் ஷியா பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது கூட்டத்தினர் மீது ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசியது. இதனால் பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்.

அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. எனவே, ராணுவம் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியது. இதில் 25-க் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=49720

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே... இந்தப் போராட்டம் பாகிஸ்தான், பங்களாதேசம், இன்டியா வரை பரவும் போது.....

சோனிய்யாவும், எங்கடை கிழட்டு கருணாநிதியும்.... சக்கர நாற்காலியில் ஓடுவதை கற்பனை பண்ண....

கண்ணாலை ஜலம் வடியுது.

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...

- யேமனில் நேற்று முன்தினம் நடந்த அரச துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

- பலரும் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்

- எதிர்க்கட்சிகள் ஆர்ப்பட்டக்கரர்களுக்கு ஆதரவு தொடர்ந்து தந்துள்ளனர்

- பல உலக நாடுகள் இந்த படுகொலையை கண்டித்துள்ளன

Yemen protests: Evidence snipers shot to kill

Photographs and amateur video footage have provided the first compelling evidence that professional snipers shot to kill when they opened fire on an anti-government demonstration in Yemen that left at least 52 protesters dead.

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/yemen/8392796/Yemen-protests-Evidence-snipers-shot-to-kill.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டுக்கணக்கா சவுதியில் சர்வாதிகார ஆட்சி செய்யும் அமெரிக்கா சார்பு மன்னரையும் மேற்கு நாடுகள் தூக்கி எறிந்து அங்கு ஜனநாயகம் மலரச் செய்ய வேண்டும். செய்வார்களோ...???! அது தங்கட ஆள் என்றால் செய்யாயினம்..! அவர் எவ்வளவு அநியாயமும் செய்யலாம். :unsure::lol::o

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டுக்கணக்கா சவுதியில் சர்வாதிகார ஆட்சி செய்யும் அமெரிக்கா சார்பு மன்னரையும் மேற்கு நாடுகள் தூக்கி எறிந்து அங்கு ஜனநாயகம் மலரச் செய்ய வேண்டும். செய்வார்களோ...???! அது தங்கட ஆள் என்றால் செய்யாயினம்..! அவர் எவ்வளவு அநியாயமும் செய்யலாம். :unsure::lol::o

மேற்குலகுக்கு சார்பானவர்களை ஜனநாயகரீதியாக மேற்குலகம் பாதுகாக்கும்.மேற்குலகுக்கு சார்பான நாட்டுக்கு எதிராக போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவார்கள் அல்லது அரசின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டு கொள்ளவே மாட்டார்கள் இந்த மேற்குலகம்.

மேற்குலகுக்கு எதிராக செயற்படும் நாடுகளில் (உ+ம் லிபியா,யேமன்)அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தால் அங்கு அந்நாட்டு அரசு பயங்கரவாதி. அரசுக்கு எதிராக போராடுபவர்கள் பயங்கரவாதிகள்.போதாதற்கு மேற்குலக ஊடகங்கள் இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா என கூவி விற்பார்கள்.

இப்படியான ஜனநாயகவாதிகள் வாழும் உலகில் நாம் வாழக் கொடுத்து வைத்தவர்கள். :wub::wub:

மூன்று சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் எத்ர்க்கட்சிகள் பக்கம் தாவியுள்ளனர்.

இது ஆளும் கட்சிக்கும் அதன் சர்வாதிகாரி சாலா அவர்களுக்கும் பெரிய சவாலாக அமையலாம்.

Top army commanders defect in Yemen

Troops and tanks deployed in Sanaa to protect anti-government protesters as senior military officials back uprising.

Several top Yemeni army commanders have declared their support for anti-government protesters seeking the resignation of the country''s president, Ali Abudullah Saleh.

Major General Ali Mohsen Saleh, the head of the north western military zone and the head of the first armoured division, said on Monday that he had deployed army units to protect the protesters.

Two more commanders, Mohammed Ali Mohsen and Hameed al-Qusaibi, rallied behind Major General Saleh soon after.

Addressing a news conference, Major General Saleh said: "Yemen today, is suffering from a comprehensive and dangerous crisis and it is widespread.

"Lack of dialogue and oppression of peaceful protesters in the public sphere, resulted in crisis which has increased each day.

"And it is because of what I feel about the emotions of officers and leaders in the armed forces, who are an integral part of the people, and protectors of the people, I declare, on their behalf, our peaceful support of the youth revolution and their demands and that we will fulfil our duties."

http://english.aljazeera.net/news/middleeast/2011/03/2011320180579476.html

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சு போச்சு... எண்ணை விலை கூடப் போகுது!!

கிழிஞ்சு போச்சு... எண்ணை விலை கூடப் போகுது!!

Tricks and tips to lessen gas pain

- First, the majority of fuel is burnt during acceleration. Accelerating slowly not only improves safety, but also fuel economy. “The harder you accelerate, the more fuel you use,”.

- Second, maintaining a steady speed will help reduce consumption. “It takes more fuel to constantly adjust your speed. For example, if you’re going 80 km/h on the highway, but every 18-20 seconds you’re fluctuating between 75 and 85 km/h, you’ll use about 20 per cent more fuel. If you’re changing that speed every 10-12 seconds, you’re probably using about 40 per cent more fuel with all those little adjustments,” .

- Third, anticipate traffic. “Look well ahead to prevent stopping and quick startups, such as a bus in your lane that’s constantly pulling over to drop off or pick up passengers. A simple lane change may avoid stopping and starting all the time,”.

- Fourth, if you see a red light ahead, provided you’re not impeding other traffic, coast to decelerate. “For one red light, it’s pennies – but if you do that all day, week- and month-long, it adds up,” .

- Finally, don’t speed. Remember that drag increases with speed, so the faster a car goes the harder it has to work. According to Natural Resources Canada, driving at 120 km/h instead of 100 km/h will cost you 20 per cent more fuel. On a 25-km trip, you’ll only save two minutes of time.

http://www.theglobeandmail.com/globe-drive/car-life/auto-therapy/tricks-and-tips-to-lessen-gas-pain/article1944472/

- இதுவரை இராணுவ அதிகாரிகள் எதிர்க்கட்சி பக்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர்

- யேமனின் ஐ. நா. பிரதிநிதி பதவியை இராஜினாமா செய்துள்ளார். மேலும், யேமன் அதிபரை பதவியில் இருந்து இறங்க வேண்டியுள்ளார்.

ஆண்டு இறுதியில் பதவி விலகுவேன்- ஏமன் அதிபர்

இந்த ஆண்டு இறுதியில் நானே பதவி விலகி விடுகிறேன் என்று ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே தெரிவித்துள்ளார்.

ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அமெரிக்க கூட்டுப் படைகள் ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே குறைந்தது 3 மூத்த ராணுவ கமாண்டர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதில் மேஜர் ஜெனரல் அலி மொஹ்சன் அல் அஹ்மரும் அடக்கம்.

இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகிவிடுவதாக அதிபர் சலே உறுதி அளித்துள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று தெரிவித்தார்.

அதிபரை பதவியில் இருந்து தூக்க செல்வாக்கு மிக்க பழங்குடியினத் தலைவர்கள், ராணுவ கமாண்டர்கள் ஆகியோரின் ஆதரவை பெற்ற எதிர்க்கட்சி அதிபரின் அறிவிப்புக்கு பதிலே கூறவில்லை.

இந்த ஆண்டு இறுதியில் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முன்பு வற்புறுத்தியபோது அதிபர் சலே மறுத்துவிட்டார். தற்போது நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் அகமது அல் சுபி கூறியதாவது,

நேற்றிரவு சலே மூத்த ஏமன் அதிகாரிகள், ராணுவ கமாண்டர்கள் மற்றும் பழங்குடியினத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களிடம் நாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேஜர் ஜெனரல் அலி மொஹ்சன் அல் அஹ்மர் உள்ளிட்ட ராணுவ கமாண்டர்களின் ராஜினாமா அதிபருக்கு எதிரான சதி என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/03/22/yemeni-leader-says-he-will-step-down-aid0128.html

Pressure for Yemen’s Saleh to step down builds

Pressure is building, seemingly from every corner of Yemen, for Saleh to step down immediately, even as the United States and its allies appear to favor a more gradual transition of power in a fragile nation beset by multiple emergencies, including a potent al-Qaeda presence.

But Saleh, one of the wiliest politicians in the modern Middle East, has survived for 32 years. Although many here hope he will step down peacefully, some fear he will stay and fight, further weakening Yemen and perhaps bringing civil war.

Officials align with foes

Over the past week, influential generals, tribal leaders, diplomats and ministers have either resigned or aligned themselves with his opponents. On Thursday, a prominent leader of Yemen’s largest tribe, the Baqeel, added his support for the uprising, joining Saleh’s Hashid tribe, which also backs the opposition.

http://www.washingtonpost.com/world/pressure-for-yemens-saleh-to-step-down-builds/2011/03/24/ABXWZwRB_story.html

'யேமன் போட்டி ஆர்ப்பாட்டங்கள்'

யேமனின் தலைநகர் சனா'ஆவில் அந்த நாட்டின் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் என எதிரெதிர் போராட்டங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

அரசாங்க தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் சாலிஹ், இரத்தக்களரியை தடுக்கும் நோக்கில் தான் பதவி விலகத்தயாராக இருப்பதாகவும், ஆனால், மிகவும் பாதுகாப்பானவர்கள் என்று நம்பக்கூடிய தரப்பிடமே தான் ஆட்சியை ஒப்படைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

தனது அதிகார மாற்றம் அமைதியானதாகவும், மக்களை நோக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றும், ஆனால் ஊழல் பேர் வழிகளிடம் ஆட்சி சென்று சிக்க அது காரணமாகிவிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110325_mideastunrest.shtml

Thousands in Yemen march against Saleh

Crowds on the streets for protests dubbed a "day of departure" but president delivers a defiant speech to supporters.

Tens of thousands of protesters are on the streets of Sanaa, Yemen's capital, to call for an end to Ali Abdullah Saleh's 32-year rule, as the embattled president said he would only hand over power "to capable, responsible hands".

Addressing a large rally of his own supporters in a speech carried on state TV earlier on Friday, Saleh said he was ready to meet with protesters, but warned that those demanding his resignation had been influenced by the Houthis - an armed Shia Zaidi group demanding autonomy in the country's north - and "drug dealers".

Saleh was president of North Yemen until its 1990 unification with the south - and has ruled the country since.

But Al Jazeera's special correspondent, reporting from the capital's Change (Taghyir) Square - where 52 protesters were killed last Friday - said little new was offered in the speech; on one hand, warning and threatening those standing against him, and on the other, promising reforms and saying he would listen to the demands of the people. Soldiers who have abandoned the president and were deployed to protect protesters in the square shot in the air to disperse groups of Saleh supporters who were attempting to reach the protest after the president's speech.

Our correspondent added that protesters said a sniper had shot and injured one of the soldiers guarding the square.

http://english.aljazeera.net/news/middleeast/2011/03/201132511732578174.html

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடங்களுக்கு மேலாகா தான் ஆதரித்து வந்த யேமனின் தலைவரை அமெரிக்கா கைவிட முடிவு செய்துள்ளது - நியூயார்க் டைம்ஸ்

The United States, which long supported Yemen’s president, even in the face of recent widespread protests, has now quietly shifted positions and has concluded that he is unlikely to bring about the required reforms and must be eased out of office, according to American and Yemeni officials.

http://www.nytimes.com/2011/04/04/world/middleeast/04yemen.html

யேமனில் அதன் அதிபர் சாலா மற்றும் அவர் குடும்பம் பாதுகாப்பாக வேறு ஒரு நாட்டுக்கு செல்ல அமெரிக்கா கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றது. அவர் அமெரிக்கா எதிர்பார்த்த அரசியல் மற்றங்களை ஏற்படுத்த தயங்கும் நிலைமையிலேயே இந்த நிலையை அமெரிக்கா எடுத்துள்ளது.

யேமன் அரபு நாடுகளுக்கு இடையில் வறுமை மற்றும் சனத்தொகை கூடிய நாடு. அங்கு அல்கைடா காலூன்றி உள்ள நிலையில் அது மேலும் பலம் அடைவதை அமெரிக்கா தடுக்க முயன்று வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

யேமன் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்கள் நூற்றுக்கணக்கில் காயப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு ஏமன் போராட்டமும் வெற்றியுடன் முடிகிறது..

மத்திய கிழக்கு ஏமன் நாட்டில் சுதந்திரம் கேட்டு போராடிய மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வெற்றிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக இன்றைய மத்திய கிழக்கின் மாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்ற வாரம் பதவியில் இருந்து விரைவில் விலகுவதாக மக்களை ஏமாற்றிய அதிபர் அலி அப்துல்லா சலா நேற்று முன்தினம் ஆர்பாட்டக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய உத்தரவிட்டார். இதனால் சுமார் 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இப்போது நிலமைகளின் இறுக்கத்தை உணர்ந்த நாட்டின் சர்வாதிகார அதிபர் பதவியில் இருந்து விலகிச் செல்லத்தயார் என்று அறிவித்துள்ளார். பாரசீகக்குடாவின் சமாதான ஆணைப்பிரிவு தமது நாட்டின் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அராபியா, குவைத், பகரைன், ஓமான், கட்டார், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து ஏமன் நாட்டின் சமாதான ஜனநாயக வாழ்விற்கான பிரேரணையை நேற்றே முன் வைத்துவிட்டன. சலா அதிபர் பதவியில் இருந்து வெளியேற தயார் என்று கூறிவிட்டதால் பிரச்சனையை சுமுகமாக முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி விலக ஏமன் அதிபர் மறுத்தால் அவர் போர்க்குற்ற நீதிமன்று செல்ல நேரிடும். காரணம் 100 ஆர்பாட்டக்காரரை சுட்டுக்கொன்ற குற்றம் அவருக்கு இருக்கிறது.

http://www.alaikal.com/news/?p=64795

ஏமன் ஆர்பாட்டங்கள் ஏழுபேர் கொலை

ஏமன் நாட்டின் அதிபர் தனது சொத்துக்களுடன் தப்பிப் போக முடியாத பொறிக்குள் தொடர்ந்து இறங்கி வருகிறார்.

தான் பதவி விலகுகிறேன் என்று வெறும் ஜாலம் காட்டி மக்களை ஏமாற்றிவிட்டு துப்பாக்கிப் பிரயோகங்களை அரங்கேற்றியுள்ளார். ஏமனில் ஆர்பாட்டக்காரருக்கும் படைகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 இராணுவத்தினரும் மூன்று பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனுடைய கருத்து ஆயுதப்படைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதுதான். தலைநகர் சனானாவுக்கு 170 கி.மீ தொலைவில் உள்ள இராணுவச்சாவடி ஒன்றின் மீது போலீசார் சுட்டதில் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளை அதிபருக்கு எதிரான ஆர்பாட்டங்களும் பெருமெடுப்பில் நடைபெற்று வருகின்றன.

மேலும் ஜேர்மனியில் உள்ள லிபியத் தூதரகத்தின் இராஜதந்திர மட்ட அதிகாரிகள் ஐந்துபேர் திடீரென லிபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் மேலும் ஒரு வாரத்தின் பின்னரே ஜேர்மனி வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கடுமையான உளவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததாக ஜேர்மனிய உளவுப்பிரிவு தெரிவித்ததை அடுத்தே லிபியா விரட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜேர்மனி வழங்கிய ஏழு நாட்கள் அவகாசமும் கடாபியின் தலைவிதி நிர்ணயமாகும் காலமும் சமமாக இருக்கலாம் என்று அவதானிகள் கருதுகிறார்கள்.

http://www.alaikal.com/news/?p=65151

யேமன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பேச்சுக்களை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்தது.

யேமன் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற கூட்டம், பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும், பேச்சுக்களை நடத்துமாறும், அரசு மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தது.

ஆனால், ரஷ்யாவின் எதிர்ப்புக் காரணமாக, பொதுவான கூட்டு அறிக்கை எதுவும் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்படவில்லை.

நேற்றைய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு முன்னர், கருத்து வெளியிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கி லவ்றோவ் (Sergei Lavrov) லிபியாவைப் போன்று மேற்கு நாடுகள் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு உதவிக்கு வரப்போவதில்லையெனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, யேமன் நாட்டின் தலைநகர் சானாவிலும் (Sanaa), தென்பகுதியில் உள்ள ரைய்ஸ் (Taiz) நகரத்திலும் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். அவற்றில் மூன்று பேர் உயிரிழந்து, மேலும் பலர் காயமடைந்தார்கள்.

கடந்த சுமார் இரண்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், 120 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7492

ஏமன் அதிபர் பதவி விலகத்தயார் !

ஏமன் அதிபர் பதவி விலகுவதற்கு ஏறத்தாழ தயாராகிவிட்டார் என்று பாரசீகக்குடா, அரபுநாடுகளின் சகோதர அமைப்பின் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் அதிபர் அலி அப்துல்லா சலா தனது பதவியை உதவி அதிபரிடம் ஒப்படைத்து வெளியேறிவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பதவி விலகுவதாக நாடகம் ஆடி, ஆர்பாட்டங்களின் வேகம் குலைய மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல இவர் ஏறியதால் வந்தவினை இதுவாகும்.

பதவி விலகல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாதத்தில் வெளியேறுவார் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. இது இவ்விதமிருக்க கடந்த வெள்ளி ஆர்பாட்டம் செய்த 80 பேரை சிரியப்படைகள் சுட்டுக் கொன்றது தெரிந்ததே. இந்தச் சடலங்களை அடக்கம் செய்யச் சென்ற பொது மக்கள் மீது மீண்டும் சிரியப் படைகள் சுட்டதில் 12 பேர் கொல்லப்பட்டார்கள். டமாஸ்கஸ், இஸ்ஸாரா ஆகிய இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் இடம் பெற்றுள்ளன.

http://www.alaikal.com/news/?p=66581

  • 4 weeks later...

மக்கள் போராட்டம் வெற்றி அரபிய சர்வாதிகாரி வெளியேறுகிறார்

ஏமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லா சலா இன்று புதன் தனது பதவி வெளியேற்றத்திற்கான கடிதத்தில் கையெழுத்து வைக்கவுள்ளார். வரும் 30 தினங்களுக்குள் பதவியை விட்டு வெளியேற இவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

முன்னர் ஓர் ஆண்டில் பதவி விலகுவதாகக் கூறி, பின் கபட நாடகங்கள் பலதை ஆடிய இவர் இப்போது படியிறங்கி வந்துள்ளார். அரபிய நாடுகளில் நடைபெறும் போராட்டம் இன்னொரு சர்வாதிகாரியை வேரோடு பிடுங்கி எறியும் பொன்னான நிகழ்வு இதன் மூலம் நடைபெற்றுள்ளது.

ஏமனில் நடைபெற்ற மக்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தோடு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்த விவகாரத்தில் முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. ஏமன் அதிபர் வரும் 30 நாட்களில் முற்றாக வெளியேறிப் போனாலும் சுமார் இரண்டு மாதகாலம் அவருடைய நிர்வாக அதிகாரிகள் பதவியில் இருப்பர். இவர்கள் இதர காரியங்களை செய்து பொதுத் தேர்தலை நடாத்த உதவி புரிவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பாட்டங்களை நடாத்திய ஏமன் மக்களின் போராட்டம் வெற்றிப் புள்ளியில் திரும்பியுள்ளது.

அடுத்து லிபியாவா, சிரியாவா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

http://www.alaikal.com/news/?p=70736

Countdown to end of Saleh rule in Yemen

May 18 - Saleh and the opposition agree to sign a Gulf-brokered deal for a transition of power with modifications after diplomatic intervention from the U.S. and Europe.

-- The deal will ease Saleh out of power within a month.

http://www.reuters.com/article/2011/05/18/us-yemen-events-idUSTRE74H2M320110518

  • 2 weeks later...

யேமனில் சிவில் யுத்தம் வெடிக்கும் அபாயம்

யேமன் நாட்டில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து உக்கிரமடைந்துள்ள நிலையில் அங்கு சிவில் யுத்தம் ஏற்படும் அபாயம் நிலவுவதாக அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு தலை நகர் சானாவில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பலர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். யேமனிய ஜனாதிபதி அலி அப்துல்லா சாலியை பதவி விலகக் கோரி பழங்குடி இன எதிர்க்கட்சித் தலைவர் சாதிக் அல் அஹமர் தலைமையில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி எதிர்க் கட்சித் தலைவரை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு தொடர்ச்சியாக வன்முறைகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31844

யேமனில் மோதல்

யேமன் தலைநகர் சனாவில் அரசு படைக்கும் எதிர்ப்பு பிரிவுக்குமிடையே மே 31ம் நாள் நிகழ்ந்த மோதலில் குறைந்தது 24பேர் உயிரிழந்தனர். அதில் 4 அப்பாவி மக்கள் அடங்குவர். மேலும், 15 அப்பாவி மக்கள் காயமடைந்தனர்.

யேமனில் மோதல்களால் பாதிப்படையும் பெரும் எண்ணி்ககை, அப்பாவி மக்களின் காயம், உயிர் இழப்பு, வீடுவாசலின்மை ஆகிய பிரச்சினைகளில் மிகுந்த கவனம் செலுத்துவதாக, ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார். அரசுப் படையும் எதிர்ப்பு பிரிவும் உடனடியாக போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்ததார்.

http://tamil.cri.cn/121/2011/06/01/1s107972.htm

யேமன் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் ஷெல் தாக்குதல்; பிரதமர் காயம்

யேமன் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தின் மீது  இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் அந்நாட்டு பிரதமர் , துணைப் பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், காயமடைந்ததாக முதலில் செய்திகள் தெரிவித்தன. யேமன் எதிர்க்கட்சிகளின் தொலைக்காட்சியான சுஹைல், ஜனாதிபதி சலேஹ் ஷெல் தாக்குதலில் இறந்துவிட்டதாகவும் முன்னர் அறிவித்தது.

எனினும் அவர் காயமின்றி தப்பியதாகவும் விரைவில் அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பிரதமர் அலி முஹமட் முஜாவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய தீபகற்ப நாடான யேமனில் 33 வருடங்களாக சலேஹ், ஜனாதிபதி பதவியிலிருந்து வருகிறார். அவரை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அரசாங்கத்துக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இன்று வெள்ளிக்கிழமை தலைநகர் சனாவில் பல ஷெல் வீச்சுகளும் வெடிப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற தாக்குதல்களுக்கு அல் அஹ்மார் குடும்பத்தின் தலைமையிலான பழங்குடியினரை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/22454-2011-06-03-13-55-58.html

தாக்குதலில் படுகாயமடைந்த யெமன் ஜனாதிபதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

யெமன்(Yeman) நாட்டிலுள்ள இரண்டாவது ஜனாதிபதி மாளிகை மீதும், மோட்டார் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலி அப்துல்லா சலே (Ali Abdullah Saleh) – தங்கியிருந்த ஜனாதிபதி மாளிகை மீது, நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட தாக்குதலில், அலி சாலே காயமடைந்து வைத்திய சிகிச்சைக்காக சவுதி அராபியா கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக, அல் ஜஷீரா (Al-Jazeera) தொலைக்காட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், அரச எதிர்ப்பாளர்களும், ஆயுதக் குழுவினரும், இரண்டாவது மாளிகை மீதும் உக்கிரமான தாக்குதலைத் தொடுத்தனர். ஒரு போராளியும், ஐந்திற்கும் அதிகமான இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த ஜனாதிபதி அலி சலே, தங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதை உறுதிசெய்துள்ள சவுதி அரேபிய வைத்தியர்கள், அவரது உடல்நிலை குறித்து சற்று முன்னர் கருத்துக் கூறுகையில், படுகாயமடைந்த அவரது நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறியுள்ளனர்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8093

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.