Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர்களின் வரலாறுகள்

Featured Replies

இங்கே தமிழிழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கி வித்தாகிப் போன மாவீரர்களை நினைவு படுத்துவோம் உங்களுக்கு தெரிந்ததை மாவீரர்களின் வரலாறுகளை இங்கே பதியுங்கள்

ஓ..என் நண்பனே..! மாவீரனே..!

மாற்றான் குண்டுகள் - உன்

மர்பைத் துளைத்தனவோ!

மாமனிதன் உன்னை

மண்ணில் சாய்த்தனவோ!

சிதறிய தேங்காய் போல்

சில்லாகிப் போனாயோ! - அன்றி

நரிகள் கையில் சிக்காது

நஞ்சை நீ மென்றாயோ!

சூரியக் கதிர் சமர்தனிலே

சூரியன் நீ அணைந்தாயே!

ஈன்றெடுத்த மண்தனிலே

இரத்த விதை விதைத்தாயே!

மாவீரர் சமாதியிலே

மறவனாய் மலர்ந்தாயே

வெளிநாட்டுத் தமிழருக்கும்

வெகுட்சி வரச் செய்தாயே!

வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே

வேங்கையாய் பாய்ந்தவனே

வேட்டை ஆட வந்தவரை

வெட்டிப் புதைத்தவனே

ஊர் உறவு வாழ்வதற்காய்

உறங்காமல் உழைத்தவனே!

உறங்காமல் உழைத்ததினால் - இன்று

உறக்கத்தில் போனாயோ!

தானைத் தலைவன் ஆணைப்படி

அணி வகுத்த புலிகளைப் பார்

படையெடுத்த பகைவர் கொடி

பாதியிலே எரிந்ததைப் பார்

முப்படை மூடரெல்லாம்

முல்லையிலே முறிந்ததைப் பார்

கூவி வந்த கூட்ட மின்று

குரலிழந்து போனதைப் பார்

மண்ணோடு நீ கலந்து

மலராகிச் சிரிக்கின்றாய்

விண்ணோக்கி நான் பார்த்தால்

விண் மீனாய் ஒளிர்கின்றாய்

வாள் ஏந்தும் வீரருக்கு

வேராக நிற்கின்றாய்

விடிவு தேடும் மக்களுக்கு

விடிவெள்ளி நீ தானே.

(திலீபன்-யேர்மனி)

மக்கள் வாழ

மக்கள் வாழும் மண்ணது மீள

கற்கை மறந்து

தாயின் தழுவல் பொற்கை மறந்து

சொந்த வீட்டுப் படுக்கை மறந்து

புதுத் தளிர்க்கை மறந்து

மண்ணிலே தவழ்ந்து

மண்ணிலே நடந்து

மண்ணையே குருதியால் நனைத்து

மண்ணுக்காய் உரமாகி கண்ணொத்த விடுதலைக்காய்

விண்ணையே அளந்த....

மாவீரருடனான ஈரநினைவுகள்...... இதோ..

மாவீரர் பாடல்கள்

:arrow: [url=http://www.tamilnation.org/asx/mannile.asx]மண்ணில் விழைந்த முத்துக்களே...

:arrow: [url=http://www.tamilnation.org/asx/maaveeraryaaro.asx]மாவீரர் யாரோ என்றால் - மரணத்தை வென்றோர்கள்...

:arrow: [url=http://www.tamilnation.org/asx/maveerarpukal.asx]மாவீரர் புகழ் பாடுவோம்...

:arrow: [url=http://www.tamilnation.org/asx/maveerar.asx]மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது...

"நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன."

" தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்"

cemetry2004a4vb.jpg

cemetry2004d4ff.jpg

  • Replies 67
  • Views 16.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கரும்புலி மேஜர் டாம்போ

majortampo1jj.gif

கா. தயாபரன்

முழங்காவில் மன்னார்.

சோகத்தை வெல்ல வீரத்தை விதைத்தான்

அடர்ந்த காட்டின் நடுவிலிருக்கும் பயிற்சி முகாம். காட்டு மரங்கள் தலை குனிந்து சலசலப்பில்லாமல் சத்தமின்றி நின்றன. பயிற்சி முகாமின் உள்ளே ஓடும் ஒவ்வொரு ஒற்றையடிப்பாதையும் டாம்போவின் காலடியைத் தேடித் தேடி தவித்தன. காணும் ஒவ்வொரு மரமும் - அவற்றின் ஒவ்வொரு அசைவும் அவனின் நினைவையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தன.

மரங்களின் மறைவுகளில் தெரிந்தும் தெரியாமலும் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அவற்றிற்கு நடுவே அழகாக நிற்கும் வட்டவடிவக் காட்டில். காட்டின்சிறிய தடிகளால் அமைக்கப்பட்ட இருக்கைகள். எதைப் பார்த்தாலும் டாம்போவின் கதை சொல்லின.

இந்த முகாமின் அழகையும் - அமைப்பையும் நிர்மாணித்தவனே டாம்போ தான்.

முகாமினுள் தொலைக்காட்சியும் வானொலியும் அவனின் இழப்பின் பின் ஒருநாளும் இயங்கவில்லை. ஆனால்இ அவனிருக்கும் பொழுது அவை ஒரு நாளும் மௌனமாக நின்றதில்லை. போராளிகளின் இழப்புக்களின் போது மட்டும் சோகமாக நின்றுவிடும் அவை. இன்று நிரந்தரமாக மௌனமாகி நின்றன.

முகாமிற்கு அருகா ஓடும் காட்டுப் பாதையின் ஓரமாக நிற்கும் வாகனத்திடம் செல்லுங்கள். அது தன் சோகத்தைச்சொல்லும் டாம்போவின் சாரதியத் திறமையைப் பற்றிச் சொல்லும்.

வாகனங்களைச் செலுத்தும் பொழுது அருகில் இருப்பதே இனிமையானது. காட்டின் ஒவ்வொரு மரத்திற்கும் பாதைகளில் நீட்டிக் கொண்டு நிற்கும் கட்டைகளிற்கும் அழகாகஇ இலகுவாகஇ விலகி விலகி ஓடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

பயிற்சி முகாமில் - போரளிகள் ஓய்வு நாள் ஒன்றில் ஒன்றாகக் கூடுவார்கள். தங்கள் மனவுணர்வுகளைஇ எதிர்பார்ப்புகளை கலைவடிவங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள். சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதல் நடவடிக்கைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு கூடஇ அங்கு ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது. புதிய போராளிகள் டாம்போவை பாடச் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும் தலைவரைப் பற்றிப்பாடும் ஒரு பாடலைத்தான் அவன் பாடுவான் என்று. ஆனாலும் அவனின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க அவர்கள் விரும்பினார்கள். அவனும் பாடினான்.

பிரபாகரன் நினைத்தது நடக்கும் - அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் கவிஞர் காசி அண்ணனின் அந்தப்பாடல் இளைய போராளிகளின் மகிழ்ச்சிக் கூச்சல்களிடையே அவன் குரலில் ஒலித்து ஓயும்.

முகாமின் நடுவே நிற்கும் பெரிய மரத்தின் நிழலின் கீழ்த்தான் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழமை. அந்த மரத்திற்கும் டாம்போவைப்பற்றி அவனின் மனவுணர்வுகளைப்பற்றிநன்றாகவ

  • தொடங்கியவர்

லெப். கேணல் பாமா

pama5nw.jpg

சியாமளா சண்முகசுந்தரம்

இன்பருட்டி, பருத்தித்துறை

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா !

எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவனைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவனது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச் செய்யும்.

எங்கட பாமாக்காவோ ?

என்று அவளைப்பற்றிக் கூறி கண்கலங்கும் போராளிகள் அனேகம், நேற்றுவரை இந்தப் தென்னந்தோட்டங்களிலும், கடலின் உப்பு நீரிலும் கால்களை நீள நீள வைத்தபடி உலா வந்தவள். இன்று எங்கள் நினைவுக்குள் நீளமாய் உறைந்து போனாள்.

பருத்திதுறையிலுள்ள இன்பருட்டி கடற்கரை ஓரத்தில் சின்னக் குழந்தையாய் விளையாடி சிப்பிகளும் கிழிஞ்சல்களும் பொறுக்கி......... அவள் குழப்படிக்காரியாகத்தான் இருந்தாள். சண்முகசுந்தரம் ஐயாவுக்கும், இரத்தினேஸ்வரி அம்மாவுக்கும் நாலாவது பிள்ளையான அவள் சியாமளாவாக வலம் வந்து அந்த வீட்டை நிறைய வைத்தவள். 1971.03.28 இல் அவள் பிறந்த போது அந்த வீடு நிறைந்துதான் போனது. சியாமளா சரியான துடியாட்டக்காரி அம்மாவுக்கு விளையாட்டுக்காட்டிவிட்டு, இன்பருட்டிக் கடற்கரை ஓரங்களில் கால்கள் மண்ணிற் புதைய, சின்னக் குழந்தையாய் தத்தித் தத்தி வருவாள். தொடுவானைப் பார்த்தபடி, எறிகின்ற அலைகளில் நனைந்தபடி நீண்ட நேரங்கள் நிற்பாள். அம்மா அவளைக்காணாது தேடிவரும் வேளைகளில் ஓடி ஒளித்து, அவளது குழந்தைக் காலக் குழப்படிகள் சொல்லிமாளாது.

அவள் தனது பள்ளிக்கூட வாழ்க்கையிலும் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். தனது உயர்தரக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்ற் கல்லூரியில் கற்றபோது உயிரியல் விஞ்ஞானத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாள். படிபபிலும் சரி, விளையாட்டிலும் சரி என்றுமே பின்தங்கியது இல்லை. விளையாட்டுப் போட்டிகளில் அவள் பெற்ற சான்றிதழ்கள் ஏராளம்.

இப்படி இருந்தவளது வாழ்வின் அமைதியை இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் குலைத்தன. அவளது அண்ணன் கடற்புலி லெப்டினன்ட் வெங்கடே~; வீரச் சாவைத் தழுவிக் கொண்டபோது படிப்பை விட நாடடுப்பணி மேலாகப்பட்டது. அண்ணன் கொண்ட இலட்சியப்பணியைத் தொடர சியமளா இயக்கத்தில் இணைந்தாள்.

1989 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இவள் இயக்கத்துக்கு வந்தநேரம், தமிழீழத்தில் வழுக்கி விழுகிற இடமெல்லாம் இந்திய இராணுவம், புலிகளை இரவும் பகலும் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த நேரம். புலிகளின் முக்கியமான நடவடிக்கைகள் யாவும் காட்டிலே மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்த சூழ்நிலையில் இயக்கத்தில் போராளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதுவும் பெண்போராளிகளின் எண்ணிக்கை ஒரு சில நூறுகளுக்குள் மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில் சியாமளா, பாமாவாக தன் பெயரை வைத்துக் கொண்டு நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சியெடுத்தாள். பயிற்சிகளில் அவள் காட்டிய திறமையும் உயர்ந்த திடமான உடலமைப்பும் அவளை 50 கலிபர் துப்பாக்கியின் உதவிச் சூட்டாளராக செயற்பட வைத்தது. தனது கனரக ஆயுதத்தை தோளிலே சுமந்தபடி லிங்குகளை தொளின் குறுக்காகப் போட்டபடி அவள் நடப்பது தனியான கம்பீரம் ! காட்டுக்குள் நீண்டதூரங்கள் நடந்து, காடு முறித்து, எமக்குத் தேவையான சாமான்களை நாம் சுமந்துவருவது வழக்கம் கனத்த சுமைகள் தோளை அழுத்த அந்த வேளையிலும் இவள் கலகலத்தபடி வருவாள். எங்களுக்குப் பாரங்குறைந்தது போற்தோன்றும்.

1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய இராணுவம் எம் நாட்டைவிட்டு வெளியேறிய பொது காட்டில் இருந்த இருநூறு பேர் கொண்ட குழு யாழ்பாணம் வந்தது. இக் குழுவில் பாமாவும் ஒருத்தியாக இருந்தாள். அன்றிலிருந்து விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில் அவளது தடையங்கள் பதிந்த வண்ணமிருந்தன.

கோட்டை, பலாலி, காரைநகர், சிலாவத்துறை, பலவேகய ஒன்று, மணலாறு என்ற நீண்ட பட்டியலில் அங்குள்ள காவலரண்களில் அவளது கால்கள் அகலப் பதிந்தன.

பாமா ! குறிப்பிட்ட சில காலப்பகுதியினுள்ளே இவளது வளர்ச்சி அபாரமானது. இவளின் உறுதியான செயற்பாடுகளும் நினைத்தகைச் சாதிக்கும் பண்பும் இவளைப் படிப்படியாக வளரச் செய்தன.

பலாலி காவலரண்களில் பாமா நின்றபோது அவளது செயற்பாடுகள் யாவும் மறக்க முடியாதவை. எந்த வேலையையும் எனக்கு தெரியாது என்று இவள் தலையாட்டியதை நாங்கள் காணவில்லை. வீட்டிலிருந்து எல்லாம் தெரிஞ்சு கொண்டே வந்தனாங்கள். இயக்கத்தில் இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டோம். எல்லாம் முயற்சியாலைதான் என்று அடிக்கடி கூறுவாள்.

அவற்றை நாம் பலாலியில் கண்டோம். அது 1990 ஆம் ஆண்டின் மழைக்காலப் பகுதி. பலாலியின் செம்பாட்டுமண் மழை ஈரத்தில் பிசுபிசுத்தது. கால்கள் சேற்றில் புதைந்தன. சேற்றுக் குழம்புகளின் நடுவே இருந்த அந்தக் காவலரண் அடிக்கடி எதிரியின் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது. ஓயாமல் எறிகணைகள் விழுந்ததால் நிலம் கரியாகிப் போனது. அடிக்கடி அவ்விடத்துக்கு முன்னேற இராணுவம் முயற்சிப்பதும் நாம் அடித்துத் துரத்துவதும் வழக்கமான ஒரு நிகழ்வாகிப் போனது.

இத்தருணத்தில் முதல் நாள் நடந்த கடுமையான சண்டையில் பதின்னான்கு பேர் காயம் அடைந்தனர். எதிரியின் இலக்கான அந்த இடத்தில் தொடர்ந்தும் எமது குழுவை நிலை நிறுத்துவதற்கு நாம் ஒரு பொறுப்பான ஆளைத் தேடிக் கொண்டிருந்தபோது பாமாவின் செயற்பாடு நம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.

நான் குறூப்பை கொண்டு போறன். அவள் எழுந்து சொன்னாள். இதுவரையும் பெரிய களங்களைக் கண்டவள் அல்ல அவள். ஆனால் அவளிடம் ஒரு வித்தியாசமான திறமை இருக்கத்தான் செய்தது. அவளுக்குக் கொடுக்கப்பட்ட குழுவைத் திறமையாகச் செயற்படுத்திய விதம் எமக்கு நிறைவைத் தந்தது. அடிக்கடி இராணுவத்துக்கு தலையிடி கொடுப்பதும் பாமாவின் வேலையாக இருந்தது. அந்தக் காலங்களில் பலாலியின் பனைவெளிகளை ஊடறுத்தபடி எதிரியின் தேடொளி இரவைப் பகலாக்கும். மிகமிகக் கிட்டவாக தனது ஒளியைப் பாச்சியபடி இருக்கும்போதெல்லாம் பாமா அதற்கு குறி வைப்பாள் அவளது பிறவுண் குறிதவறியதாக நாங்கள் கேள்விப்படவேயில்லை. பயிற்சி முகாமிலும் சரி சண்டைகளிலும் சரி அவள் நன்றாக குறிபார்த்துச் சுடும் திறமை பெற்றவளாக இருந்தாள்.

அப்படி ஒரு இடத்தில் தேடொளி உடைய மறு இடத்தில் எதிரி அதைப் பொருத்த மீண்டும் உடைய வைத்து, உண்மையில் அவர்களைச் சலிப்படையவே செய்துவிட்டாள். அந்த நீண்ட பனைகளில் நிலையெடுத்தபடி இராணுவக் காவலரண்கலைள நோக்கி அடிக்கடி அருள் 89 ஐ அடிப்பாள். அது ஒரு விளையாட்டுப் போலை........ ஆனால் குறிதப்பாத ஒன்றாக அவளுக்கு இருக்கும். இப்படி எத்தனை சம்பவங்கள் ! பாமாவின் துடிப்பான அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பலாலியின் புழுதி படிந்த செம்பாட்டுமண் சொல்லும் கனத்த காற்று சொல்லும்.

பலாலிக்கு பிறகு பெரிய களமாக இவளுக்கு ஆனையிறவுக்களம் அமைந்தபோது அதிலும் தன் திறமைகளை வெளிப் படுத்தத் தவறவில்லை. ஆ.க.வெ நடவடிக்கையில் மகளிர் படையணியின் பக்கம் மும்முரமான சண்டையில் இவள் நின்றாள். உக்கிரமான மோதல், மழை போல ரவைகள் காதை உரசுவதாக வரும் மயிரிழையில் தப்பித்த எறிகணை வீச்சுக்கள்....... பாமாவின் குழுவிலும் அனேகம் பேர் காயம்பட்டுத்தான் போனார்கள். எதிரி பின்வாங்கும் வரை பாமா மட்டும் தனித்து நின்று அடிபட்டதை நினைக்கிறோம். கடைசியாக காலிலே பலத்த காயமடைந்த ஒரு போராளியை அந்தக் கும்மிருடடு நேரத்திலே கண்டுபிடித்து பின்னுக்கு கொண்டு வந்து இவள் மூச்சுவிட்ட போது தனியோருத்ததியாக நின்று தடயங்கள் எல்லாவற்றையும் பொறுக்கியபோது.......... ஆனையிறவுச் சண்டையில் இவள் தலையில் காயப்பட்டாள். இவள் தப்பி வருவாள் என்பதில் எங்களுக்கு ஒரு துளியளவு நம்பிக்கையே இருந்தது. ஆனால் பாமாவின் திடமான உடல் அமைப்பும் உறுதியுமே அவளைத் தப்ப வைத்தது. மீண்டும் பழைய நிலைக்கு இயங்கவைத்தது.

நிறையக் களங்கண்ட ஒரு போராளியாக, ஒரு குறுமபுக்காரியாக, எல்லோருக்குமே உதவுகின்ற இளகிய மனம் படைத்தவளாக நாம் அவளைக் கண்டோம்.

இப்படித்தான் ஒருநாள்

அது லெப்.கேணல் ராஜனின் வழிநடத்தலில் நடைபெற்றுக் கொண்டிருந்த அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி. அதில் இவள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது, இவளது முகாமுக்கு ஒரு சிறுமியும் சிறுவனும் சாப்பாடு கேட்டு வந்தனர். அப்போது அங்கு உணவேதும் இருக்கவில்லை. இதை அவதானித்த இவள், எல்லோரிடமும் இருக்கும் காசு எல்லாவற்iயும் சேர்க்க ருபா வந்தது. அதை அவளிடம் கொடுக்கச் சென்றபோது, அச்சிறுமியிடம் உங்களது பெயர் என்ன ? என்று கேட்க, அப்பிள்ளை வாய்திக்க முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவள் ஏன் என்று விசாரித்தாள். விமானக் குண்டுவீச்சின்போது சன்னமொன்று தாடைக்குள் தாக்கியதால் வாய்திறக்க முடியாது என்ற விபரத்தை அந்தச் சிறுமி சைகை மூலம் கூற, இவளது கண்கள் குளமாகின.

அந்தக் காசைக் கொடுத்து அனுப்பிவிட்டு இந்தச் சின்னப் பிள்ளை என்ன பாவம் செய்தது.? இதுக்கு இவங்களிற்கு முறையான பாடம் படிப்பிக்கவேணும் என்று சொல்லிய போது இவளது குரல் தழுதழுத்தது. அடிக்கடி இநதக் க~;டமெல்லாம் எங்களொட முடிஞ்சிட வேணும். எங்கட சின்னனுகள் அனுபவிக்க கூடாது. அதுகள் சந்தோசமா தங்கட தாய் தகப்பனோட வாழானும் என்று கூறி அவள் கண்கள் கலங்கி தவித்ததை நினைக்கும் போது...........

இன்று படைத்துறைக் கல்லுரியில் வோக்கி பற்றிய வகுப்பு, புதிய ரகங்கள், புதிய தொழிற்பாடுபாடுகள் நுட்பமாக ஆராய்ந்து விளக்கப்பட்டது. இறுதியாக விரிவுரையாளர் இந்த ( Ci 25 ) வோக்கி புதிசு. இதன்ரை தொழிற்பாட்டை நான் உங்களுக்கு சொல்லித்தரமாட்டன். நீங்கள்தான் இதை ஆராய்ந்து கண்டு பிடிக்கவேணும். குறிப்பிட்ட கால அவகாசம் தருவன் என்று கூறி முடித்த போது பாமா அதோடு முழு மூச்சாய் அதனோடு ஒன்றி அதன் தொழிற்பாட்டை அறிவதில் நேரங்காலம் இல்லாது கண்ணாய் இருந்ததை இப்போது நினைத்தாலும்.................

அந்த முயற்சியில் அவள் வெற்றி பெற்றாள். அதன் தொழிற்பாட்டை முதலில் கண்டு பிடித்து விளங்கப்படுத்தினாள். அப்போது எல்லாப் போராளிகள் மத்தியிலும் இவளின் திறமை வெளிப்பட்டது. இவளின் விடாமுயற்சியை நாம் எங்களுக்குள் சொல்லிச் சொல்லி வியந்து போனோம்.

சதுரங்கம் விளையாடுவது இவளுக்கு பிடித்தமான ஒரு விளையாட்டு. நுட்பமாகவும் திறமையாகவும் அவன் விளையாடுவது யாவரையும் வியக்கவைக்கும். பார்ப்பவரைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் போல நினைக்கத் தூண்டும். அவளின் இராசாவும் இராணியும் தோற்றதாக வரலாறு இல்லை. அந்தளவுக்கு எதிரே விளையாடுபவரை விழுத்துவதில் குறியாக இருப்பாள். அவளின் இன்னொரு விருப்பமான விளையாட்டு கரப்பந்தாட்டம். மாலை நேரத்தில் அவள் மைதானத்தில் விளையாட வந்துவிட்டாள் என்றால், மைதானம் கலகலத்துப்போகும். தள்ளி எட்டி ஓடி ஓடி அடிப்பது அவளுக்கொரு கலையாகத்தான் தெரிந்தது.

1992.03.01 இல் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி தன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அத்திவாமிட்டது. அன்று கடற்புலிகள் மகளிர் அணி தோற்றம் பெற்றது. எங்கள் தலைவரின் கனவுகளுக்கு அபார நம்பிக்கை ஊட்டும்படியாக கடற்புலிகளின் வளர்ச்சியில் பாமா வகித்த பங்கு அளப்பரியது.

1992ம் ஆண்டின் பிற்பகுதியில் பாமா தன்னைக் கடற்புலிகளின் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்ப்பதில் அவள் தீவிர அக்கறை செலுத்தினாள். சகபோராளிகளுக்கு அணிநடை பழக்குவதிலிருந்து முக்கியமான வகுப்புக்களை எடுப்பது வரை முக்கியமாகப் பங்கேற்றாள். தலைமையேற்று நடத்தினாள்.

கிளாலில் மக்கள் பாதுகாப்புகாக எம்மால் நடத்தப்படும் பாதுகாப்புப் பணியில் இவளுடன் ஒரு குழு பங்களித்துக் கொண்டிருந்தது. கிளாலிக் கடலில் கொட்டும் பனியிலும், மழையிலும் ஊசியாகக் குத்தும் உப்புக் காற்றின் மத்தியிலும் அவள் விடிய விடிய காத்திருந்த காலங்களை நினைக்கின்றோம். தூரத்ததே புள்ளியாய் விசைப்படகுகள் தெரியும். கடற்பரப்பில் மக்களின் படகுகள் ஆடிச் செல்லும். நெஞ்சு நீரற்று வரண்டு போய் கண்கள் பீதியாய் வழிய அவலப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிய கடற் சண்டைகளில் பாமா பங்கேற்றதை நினைக்கிறோம். 'நீ வீட்டில் மிகுந்த பிடிவாதக்காரியாய் இருந்தாயாமே? நினைத்ததைச் செய்து முடித்து நினைத்ததை வாங்கித் தரும்படி அந்தப் பிடிவாதம்தான் கடலிலும் உன்னைச் சாதிக்க வைத்ததோ....

வோட்டர் ஜேட்டை ஏன் நீங்கள் எடுக்கவில்லை? என்று பாமாவின் மாமா கேட்ட பொழுது மாமா அதைக் கொண்டு வந்து விட்டுதான் உங்களுடன் கதைப்பேன். என்று கூறினாளாம். இதைக் கண்கலங்கியவாறு மாமா கூறினார்.நிதை;ததைச் சாதித்து முடிக்கும் அந்தக் குணம் பாமாவுடன் கூடப்பிறந்தது. என்பதை நாம் பல சந்தர்பங்களில் கண்டோம்.

இத்தகைய நினைத்ததைச் சாதிக்கும் பண்புதான் சாவின் இறுதிக்கணங்களிலும் அவளை இறுகப்பற்றியிருந்து. பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது. இத் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் மகளிர்படையணி முக்கிய இடம்பெற்றிருந்தது. இந்தச் சமரில் கடற்புலிகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் நாகதேவன் துறையில் கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு ஒரு படகுப் பொறுப்பாளராக பாமா அனுப்பப்பட்டாள். சண்டைக்குத் தனது படகைத் தயார் படுத்திக் கொண்டிருந்த பாமா கரையில் நின்ற போராளிகளிடம் ஆளை ஆள் தெரியாத இரளில், நம்பிக்தை தொனிக்க, இந்தச் சண்டையிலே நாங்கள் வோட்டர் ஜெட் ஒண்டைக் கொண்டு வருவோம். என்று சொல்லிவிட்டுப் போனாள். சொன்னபடி நாகதேவன் படைத்தளத்தை தகர்த்துவிட்டு ஒரு நீருந்து விசைப்படகோடு முகமெல்லாம் சிரிப்பாக வெற்றிப் பூரிப்போடு கரைக்கு வந்தாள்.

அதிகாலை திரும்பவும் அவளை வருமாறு வொக்கி கூப்பிட்டது. எல்லா ஆயுதங்களுடனும் அவளது படகு ஒரு குருவியைப் போல புறப்பட்டுப் புள்ளியாய்ப் போனது. ஏதோ ஒன்று அவளிடம் வித்தியாசமாகத் தென்பட்டது. வழமைக்கு மாறாக ஏதையோ கூற நினைப்பது போல அவளது கையசைப்பு அந்த இருளில் மங்கலாகத் தெரிந்தது. காற்றைக் கிழித்தபடி ஓயாத ரவைகள். காதை உரசுவதான அவற்றின் சத்தங்கள். அவைகளின் மத்தியில் அவளது படகு தூரத்தே மறைவதப் பாhத்துக் கொண்டிருந்தோம். கடலலைகள் ஆர்த்தெழுந்து படகை மறைத்தன. நிலவை விழுங்கிய வானத்தில் ஒளிப்பொட்டாய் விளங்கிய நட்சத்திரங்கள் வனம் அமைதியாகத்தான் இருந்தது. கனதியான குண்டுச் சத்தங்கள் கண்ணிமைக்கும் இடைவெளியில் அதற்கும் இடைவிடாத கணத்தளிகளில் ஓசைகள் கேட்டு கொண்டே இருந்தன. பாமா... பாமா வோக்கி கூப்பிட்டது. அவசரமாக தொடர் எடுக்க முயன்று தோற்றுப் போய் ............

ஒரு ரவை அவளது காலை ஆழமாக பிய்த்துச் சென்றது. பீறிட்ட இரத்தக்குளியலில் பாமா வீழ்ந்த போது........... மீண்டும் மங்கலான குரலில் அவள் கட்டளை பிறப்பித்துக் கொண்டுதான் இருந்தாள். மெல்ல மெல்ல குரல் மங்கி, துடிப்படங்கி............

காலிலைதான் காயம் என்று....... பிரச்சனை இல்லை என்ற எங்கள் எல்லலோரினதும் நம்பிக்கைகளை பொய்யாக்கிக் கொண்டு மெல்ல மௌனித்துப் போனாள். அந்தப் பிடிவாதக்காரி உப்புக்கரிக்கும் கடனீரேரியோடு கலந்து போனாள். கிளாலிக் கடல் உதிரத்தில் தோய்ந்தபடி மீண்டும் மீண்டும் பொங்கியேழுந்தது.

ஆயிரமாயிரம் மாவீரர்களோடு எங்கள் பாமா விடுதலையின் பெருநெருப்பாய்ச் சுவாசித்தபடி...... வெற்றியின் வேராய் உறங்கட்டும் அமைத்தியாய்.

  • தொடங்கியவர்

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

ஆண்குரல்:- அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா..... உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்....

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை... தன்தாயை நேசித்தது போலவே... தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்.....

தாய்:- என்ரபிள்ளை... என்ர பிள்ளை எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிப்படிச்சது... இப்ப.... இப்ப... அதுக்குப்பலனாய் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு.. கேள்விப்பட்டால் பிள்ளை எவ்வளவு சந்தோஷம்படுவான்.. ம்... என்ர பிள்ளையின்ர கெட்டித்தனத்துக்கு பரிசு கிடைச்சிருக்கு...

மகன்:- அம்ம.......... என்னை எங்கையும் தேடவேண்டாம்... நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.........

குரல்:- அவன் தன்னுடையதும்...தன் குடும்பத்தினதும் முன்னேற்றத்தைவிட தேசத்தின் விடுதலையே பெரிதென்று சிந்தித்தான். கொற்றவன் தம்மைக் கண்டுகண்டுள்ளம் குளிர எம் கண்கள் குளிர்ந்தனவே என்று எல்லோரும் எண்ண இந்தத் தேசத்தின் புதல்வனாய் தன்னை அர்ப்பணித்துச் சென்றவன் அறிவுக்குமரன்.

அறிவுக்குமரன் மென்மையின் உறைவிடம்...அவன் மென்மையாய்... புன்னகை சுமந்து திரிந்தாலும் அவனுக்குள்ளே எப்போதும் ஓர் எரிமலை கனன்று கொண்டே திரிந்தது... தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் விட....... தேசியத்தலைவரையும்......... போராளிகளையும்........ மக்களையும் உன்னத உறவுகளாய் நேசித்தான்.. தான் எத்தனை துயரங்களை துன்பங்களை அனுபவித்தாலும் தன்சக போராளிகளோ......... தன் நேசத்துக்குரிய மக்களோ துன்பப்படுவதை அவன் தாங்கிக் கொள்ளமாட்டான்...

தேசத்தைச் செதுக்கியவர்களே........

இன்று உங்களுக்காய் கல்லறையில்

நினைவுக்கல்லில் உங்கள் பெயர்களைச்

செதுக்குகின்றோம்.

செதுக்கப்படாமலும் இன்னும் சிலர்

வெளித்தெரியாமலும்... எங்கள் மனதில் மட்டும்.

உண்ணாமல் பசிகிடந்து... உறங்காமல் விழித்திருந்து

கால்வலிக்க காடுதாண்டி

கைகள்வலிக்க கடல் தாண்டி

ஈழம் வேண்டிடப்போனீர்... நாம்...

இதயம் விம்மிட நிற்கின்றோம்...

என்று இடியாய்க் கனன்ற கரும்புலிகளை எண்ணி இதயத்தில்

துடித்தவன் அறிவுக்குமரன்....

தெளிந்த சிந்தையோடு போராட்டத்தில் இணைந்துகொண்ட அறிவுக்குமரன்... தன்னை அழித்தெனினும் தன் தேசத்து மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை.... கௌரவமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத்துடித்து நின்றவன்... கடுமையான பயிற்சிகளையெல்லாம் தன்மக்களின் விடுதலைவாழ்வை எண்ணி ஏற்றுக் கொண்டவன்...

அவன் முதலில் கந்தகப்பொதிசுமந்தகளம் ஜெயசிக்குறு சமர்க்களம.; விடுதலைப்புலிகள் பலமிழந்திருப்பதாய் கற்பனைபண்ணி விடுதலைப்புலிகளை அழித்துவிடலாமென்ற நம்பிக்கையோடு எதிரி நன்கு திட்டமிட்டு தொடக்கிய சமர்முனை ஜெயசிக்குறு. இந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்க்காலத்தில்... 10.06.97 அன்று தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கரும்புலி ஊடறுப்புத் தாக்குதலும் நடந்தது. இந்தத்தாக்குதலில் அறிவுக்குமரனும் பங்கேற்றான்.

அந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்முனையில் தாண்டிக்குளத்தில் வரலாறாய் நிலையான தன் சககரும்புலிகளின் பிரிவு இவனை நெருப்பாய்ச் சுட்டது. தன்னோடு ஒன்றாயிருந்து.. ஒன்றாய் உண்டு... ஒன்றாய் வந்தவர்கள் வரலாற்றில் வரலாறானபோது... இவன்மனம் பெருமையுடன் துயரமும் சுமந்தது.

1997ஆம் ஆண்டின் இறுதிநாட்கள்... ஒரு நாட்பொழுதில் அந்த மகிழ்ச்சிமிக்க சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கரும்புலிகளில் ஒருவனாய் அறிவுக்குமரனும் தெரிவானான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமலிருக்க.... அந்தமகிழ்வை இரட்டிப்பாக்குவதுபோல தேசியத்தலைவர் அவர்களும்.. அவர்களைச் சந்தித்தார். தலைவரின் சந்திப்போடும்... அறிவுறுத்தலோடும்... ஆசிகளோடும் புறப்பட்ட அறிவுக்குமரன் உட்பட்ட கரும்புலி அணியினர் 02.01.1998 அன்று தமக்குரிய இலக்குள்ள இடத்தை வந்தடைகின்றனர்.

அதுவும் ஜெயசிக்குறு களமுனைப்பகுதிகளில் ஒன்றான கரிப்பட்டமுறிப்பு ஆக இருந்தது. அங்கிருந்துதான் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வான்வழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் எதிரி. அன்று அந்த விநியோகத்தளத்தையும்.... எதிரியின் ஆ.ஐ.17 உலங்கு வானூர்தியையும் ஒருசேர தாக்கி அழித்தார்கள் கரும்புலி அணியினர். தேசியத்தலைவனின் வழிகாட்டலில் எதிரியின் வானூர்தியையும்இ தளத்தையும் சிதறடித்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.. இந்த துணிகரமான வெற்றியைப் படைத்துவிட்டு வந்தவர்களில் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனும் ஒருவன். அவனுடைய இயந்திரத்துப்பாக்கி அன்று பேசியவை வெறும் வார்த்தைகளல்ல.....

மீண்டும் கடுமையான பயிற்சிகள் அறிவுக்குமரன் சோர்ந்து போய் விடவில்லை.. தேசியத்தலைவரின் உற்சாகமான வார்த்தைகள் அவர்களை உந்தின. 01.02.1998 இல் இன்னொருகளமுனை ஆனையிறவுத் தளம்... அங்கே உப்பளமுகாம் அழிப்புக்காக நுழைந்த கரும்புலிகளில் அறிவுக்குமரனும் அடக்கம். அதிகாலை 1.15 இற்கு தாக்குதல் ஆரம்பமாகிறதுஇ எதிரி கடுமையான எதிர்ப்புக்காட்டுகிறான். அந்த கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் உப்பள முகாம்மீதான தாக்குதல் உச்சம் பெறுகின்றது.

கடுமையான காயங்களுக்குள்ளான கரும்புலி சபேசன் வெடியாய் அதிர்ந்து விடுகிறான். எதிரியும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குகிறான். கரும்புலி குமரேசுவுக்கும் காயம்......... கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன.. அவனும் வெடியாகிப் போகிறான்... எஞ்சியோரைப் பின்வாங்கச் சொல்கிறான் இந்தத் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய குமுதன்.

அறிவுக்குமரன் பின்வாங்கி வந்தது இன்னமும் மெய்சிலிர்க்கும் நினைவுகளாகவே உள்ளன. உயிரோடு மீண்டுவந்து நடந்தவற்றை ஏனைய போராளிகளிடம் சொல்லிவிடுவதற்காக அவன் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் வார்த்தைகளுக்கும் வரிவடிவங்களுக்கும் அப்பாற்பட்டவை... எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உயிர்பறிக்கும் ஆபத்துக்கள் காத்திருந்தன. சாதாரண மனிதப்பிறவிகளால் நினைத்துப்பார்க்கமுடியாத அந்த ஆபத்துக்களையெல்லாம் கடந்து அவன் தன் தோழர்களை வந்தடைந்தான். அவன் கடந்த ஒவ்வொரு கணமும் மரணம் அவனைத்துரத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் மரணத்தை நெஞ்சிலுதைத்து வீழ்த்திவிட்டு அவன் நிமிர்ந்தான்.

இப்போது தாக்குதலுக்கு தலைமைதாங்கிவந்த குமுதனுக்கும் உடல்முழுக்க காயம்.

நான் சாச்சை இழுக்கப்போறன்.. நீங்கள் போங்கோ.... அந்தவார்த்தைகளும் அறிவுக்குமரனுக்குள் துழைந்தன அறிவுக்குமரன் குமுதனைப்பார்க்கிறான்...........

நீங்கள் வெளியிலை போகோணும்.. உங்களுக்குள்ளை கிடக்கிற முழுத்தகவல்களையும் போய்ச்சொல்லவேணும்.. அது... இன்னொரு சண்டை செய்யிறதுக்கு உதவும்...

சிறிது நேரத்தில்...அந்த வெடிச்சத்தம் பெரிதாய் ஒலிக்கிறது.. இப்போது அறிவுக்குமரன் மட்டுமே.... அறிவுக்குமரன் தன்னை எப்படியோ பாதுகாத்துக் கொண்டு... எத்தனையோ இடர்களைத் தாண்டி வெளிவருகிறான்.. மரணத்தைத் துரத்தி தேசத்தின் புதல்வனாய் வெளியேவந்தவன்.... தன் உணர்வுகளை கவிதை வரிகளாக்கினான்...

இளமையை இதமான உணர்வுகளை

இனியசுகங்களை ஒதுக்கியவர்களே....

தமிழர் எம் தேசத்தை செதுக்கியவர்களே..

இன்று உங்களுக்காய் கல்லறையில்

நினைவுக்கல்லில் உங்கள்

பெயரைச்செதுக்குகின்றோம்...

செதுக்கப்படாமலும்... இன்னும்சிலர்

வெளித்தெரியாமல் எங்கள் மனதில் மட்டும்

அறிவுக்குமரன் ஒருபோதும் ஓயாத புயற்காற்றுஇ ஆனையிறவுப் படைத்தளப்பிரதேசத்துக்குள்.. வேவுப்பணிகளில் ஈடுபட்டான்.... வேவுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது... கையில் காயமுறுகிறான்.. ஆனாலும்... காயம்மாறமுன்பு... மீண்டும் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறான்...

10.10.1999 அன்று அவன் திருமலைக்கு செல்லவேண்டும்... அங்கும் அவனது கடமைகள் இருந்தன... அன்று - முதல் பெண்மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளில் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டி அனைவருடனும் பழகுகின்றான்.. அவனது அன்பில் எல்லோரும் திளைத்திருக்க... கையசைத்து படகேறுகிறான் அறிவுக்குமரன்.

திருமலையில்... அவனுடைய பணிகள் தொடர்ந்துகொண்டிருந்தன....இரவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா

விடுதலைப்போரில் வித்தாகிப்போன கரும்புலிகளை நினைவுகூர்ந்தமைக்கு எனது நன்றிகள்.

தொடருங்கள்....

நன்றி நர்மதா

கரும்புலிகளின் தியாகங்கள் சராசரி மனிதனால் கற்பனை பண்ணியும் பார்க்க முடியாதவை.

இங்கே புலத்தில் இப்பிடி எல்லாம் எங்கள் இனம் போராடுது என்று வேற்று நாட்டவர்க்கு சொன்னால் ஓ ரியலி?

எண்டு கேட்டு போட்டு அங்கால போய் நல்லாதான் ரீல் விடுறான் எண்டு சொன்னவர்களையும் சந்திதிருக்கிறேன். அதில் எனக்கு கோபம் கிடையாது உண்மையில பெருமை கரும்புலிகள் இனத்தவனாய் நானும் இருப்பதால். அவர்களிலயும் தவறு இல்லை

ஏனெனில் யாராலயும் நம்ப முடியாத தற்கொடை அவைகள்! தொடருங்கள்.

மிக்க நன்றி நர்மதா..

கரும்புலிகளின் வரலாற்றுத்தொடரை எழுத தொடங்கியிருக்கிறீர்கள். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது நானும் பதிவுகளை இனைக்கின்றேன். அவர்களின் உணர்வுகளை எழுத்துக்களால் வடிக்க முடியாது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கப்டன் அக்காச்சி

சிவகுமாரன் சிறீகாந்தன்

நீர்வேலி, யாழ்ப்பாணம்.

யாழ்.நீர்வேலி பிரதேச பொறுப்பாளர்

வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இந்தியப் படையின் முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் கே.பி.தாஸ் அச்செழு அங்கிளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அக்காச்சி எப்படிப்பட்டவன் என்பதே அக்கேள்வி. அதற்கு அங்கிள் நல்ல போராளி அதைவிட மிகச் சிறந்த சமூகசேவையாளன் என்று பதில் கொடுத்தார். இதன் பின் அக்காச்சியின் பொதுப் பணிகள் பற்றி ஆராய்ந்த மேஜர் கே.பி. தாஸ் தான் அக்காச்சியைப் பார்க்க வேண்டும் என்றும், அக்காச்சியருகில் இருந்து தேனீர் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அடுத்த போர் நிறுத்தம் வரும்போது தனது கண்களைக் கட்டுக்கொண்டுபோயாவது அக்காச்சியின் முன் நிறுத்துங்கள் என்றார். தெற்கு புன்னாலைக்கட்டுவன் முகாம் அதிகாரியான மேஜர் ஒபரோய் பத்து நாட்களுக்குள் அக்காச்சியை உயிருடன் பிடிப்பேன் என்று தோற்றுப் போனார். ஆனால் பின்னர் அக்காச்சி சமூகத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ளான். என்று பிரஜைகள் குழுவிடம் சொன்னான். இதேபோல் நீர்வேலிச் சந்தியில் முகாமிட்டிருந்த இராணுவ அதிகாரியான மேஜர் பாபுஜி ஏபிரகாம், அக்காச்சியின் சமூக சேவைகள் பற்றி தான் கேள்விப்பட்டதாக பொது மக்களிடம் சொன்னான்.

அனைத்து மக்களதும் அன்பிற்கு பாத்திரமான அந்த வெள்ளை உள்ளம் மறைந்த செய்தி குடாநாடெங்கும் பரவியது. எல்லோர் முகத்திலும் ஒரே சோகம். வலிகாமம் மேற்கில் வட்டுக்கோட்டை தொடக்கம் வலிகிழக்கு அச்சுவேலி, புத்தூர் பகுதியில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக துவிச்சக்கரவண்டிகள், உழவு இயந்திரங்கள், லான்ட்மாஸ்ரர்கள் மூலமும் கப்டன் அக்காச்சியின் மரணச் சடங்கு இடம்பெற்ற அந்த இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். தியாகி திலீபன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள் ஆரம்பித்த 15.09.1989 நினைவு அஞ்சலி சோடனைகளிலும் பதாகைகளைக் கட்டுவதிலும் ஈடுபட்டிருந்த மக்களின் செவிகளில் அக்காசியின் மரணச் செய்தி விழுந்த போது அக்காச்சியின் உடலையாவது கடைசியாகப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவலில் எல்லோரும் மரணச் சடங்கு இடம்பெற்ற அந்த ஒதுக்குப் புறமான ஏகாந்தமான பிரதேசத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம். தரிசு நிலப்பகுதி அந்த தரவை நிலத்தை ஊடறுத்துச் செல்லும் களிமண் பாதையில் நெடுந்தூரம் சென்று பின்னர் இடைக்கிடை கரடுமுரடான பாதையிலும் சேற்று நிலத்திலும் மாறி மாறி சில மைல்கள் தூரம் சென்று அக்காச்சியின் மரணச் சடங்கு அந்த இடத்தை அச்செழு அங்கிளும் எனது மகனும் நானும் அடைந்தோம். இன்னுமொரு பாதைவழியாகää யாழ். மாவட்ட மக்கள் முன்னணி அமைப்பளார் ராஜன் அவர்களை வழிமறித்து அக்காச்சி பற்றிய செய்தியை வினவிய நீர்வேலி உதயதாரகை வாசிகசாலை மக்கள்ää சோகம் ததும்பிய குரலில் "ஐயோ எங்கள் தலைவனை இழந்து விட்டோம்" என்று அழுது கூறினார்கள். இப்படித்தான் அக்காச்சியின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த பேழையைச் சுற்றி அமர்ந்திருந்த மக்கள் பெண்கள் முதியவர்கள் தமது தலைவனை இழந்த சோகத்தில் மூழ்கியிருந்த காட்சி என் நெஞ்சை பிழிவதாக இருந்தது.

இளமைக்காலம்

இளமைக் காலம் வசந்த காலம் என்பர். நீர்வேலியைச் சேர்ந்த சிவகுமாரன்ää கனகமணி தம்பதிகள் தாம் பெற்ற இரட்டைக் குழந்தைகளுக்கு ஸ்ரீகாந்தன் என்றும் ஸ்ரீரஞ்சன் என்றும் பெயரிட்டிருந்தனர். ஸ்ரீரஞ்சன் சிறு வயதிலேயே இறந்து விட்டான். ஸ்ரீகாந்தன் விடுதலை இயக்கத்தில் ஜெகன் என்ற பெயரில் இணைந்து கொண்டு அக்காச்சி என்ற பெயரில் மக்கள் தலைவனாக இருந்தான். அக்காச்சி பாடசாலையில் படிக்கும் காலத்தில் விளையாட்டுக் போட்டிகளிலும் கராட்டிப் பயிற்சிகளிலும் குதிரையேற்றப் பயிற்சிகளிலும் மிகுந்த ஆர்வமுள்ளவனாக இருந்தான். துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் ஆகிய வற்றோடு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக அக்காச்சி விளங்கினான். குதிரையேற்றப் பயிற்சிக்காக சிறுவயதில் ஒரு குதிரையை வளர்த்து வந்தான். சிறுவயதிலிருந்தே கீழ்ப்படிவு, நேர்மை, கண்ணியம், ஜீவகாருண்யம்ää இரக்கம் சகிப்புத் தன்னை, கொடுத்த வேலைகளை திறம்படச் செய்யும் மனப்பான்மை என்பன இவனிடம் குடிகொண்டிருந்தன. ஒரு முறை தியாகி திலீபனின் தந்தையார் இராசையா மாஸ்ரர் "உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத வெள்ளையுள்ளம் அக்காச்சியின் உள்ளம்" என்று குறிப்பிட்டார். கப்டன் அக்காச்சி (சிவகுமாரன் ஸ்ரீகாந்தன்) எப்படிப் போராளியானான்.

இயக்கத்தில் அக்காச்சி

1983ஆம் ஆண்டு கலவரத்தின் எதிரொலிகள் எல்லோரையும் போல அக்காச்சியையும் பாதித்தது. இதனால் விடுதலை இயக்கத்தின் போரணியில் ஒர் உறுப்பினனாக இணைந்து கொண்டான். நீர்வேலியைச் சேர்ந்த கப்டன் கண்ணாடி ராஜனும்(இராஜதுரை ஜெயக்குமார்) இவனும் ஒரே நாளில் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 'அக்காய் ரீசேர்ட்' அணிந்து கொண்டு நின்ற ஜெகனைக் கண்ட, மறைந்த கப்டன் பண்டிதர் "அக்காச்சி" என்ற பெயரை வைத்தார். அன்றிலிருந்து அப்பெயரே நிலைத்து நின்றதோடு பிரபல்யமும் பெற்று விட்டது.

விடுதலை இயக்கத்தின் இரண்டாம் படைப்பிரிவில் இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1985ஆம் ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்பிய அக்காச்சி அக்கால கட்டத்தில் விடுதலை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட பல இராணுவ நடவடிக்கைகளிலும், 1985 பெப்ரவரியில் இடம்பெற்ற கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதல், 1985 ஏப்ரல் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத் தாக்குதல், 1985 மே மாதம் நடைபெற்ற மன்னார் பொலீஸ் நிலையத் தாக்குதல் என்பவற்றில் பங்கேற்றான். யாழ். பொலீஸ் நிலையத் தாக்குதலில் அக்காச்சி குருநகர் பாஷையூர் பகுதிகளில் தாக்குதலுக்குத் தயார் நிலையில் நின்ற விடுதலைப் புலிகளுடன் இணைந்து குருநகர் இராணுவ முகாமைச் சேர்ந்தோர் வெளியேறி முன்னேறாதபடி தடுத்துக் கொண்டிருந்தான்.

1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் குடா நாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் பின் நீர்வேலிப் பிரதேச பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட அக்காச்சி ஸ்ரீலங்காப் படைகள் முகாமைவிட்டு வெளியேறாத படி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் பங்குபற்றினான். குறிப்பாக பலாலியிலிருந்த இராணுவ விமானப்படை கூட்டு முகாமிலிருந்து இராணுவம் வெளியேற முயன்றபோது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல எதிர்த் தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றான். நீர்வேலிப் பகுதியில் பொம்மர் குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்ககுதல் மேற் கொண்டபோது அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்காச்சி உதவி செய்தான். இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வேலி கூட்டுறவுச் சங்கக் கட்டடமொன்றை ஒதுக்கிக் கொடுத்து அவர்கள் நலன்களைக் திறம்படக் கவனித்துக் கொண்டான். பல அகதி முகாம்களை அமைத்து மக்களைப் பாதுகாத்தான். மழையில் நனைந்து கொண்டு சென்று அகதிகளுக்கு உதவிகள் செய்திருக்கிறான். விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்டு உழைத்த பொது மக்களுக்கு தோள் கொடுத்து உதவியிருக்கிறான். வறுமையில் வாடிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அளிக்க பண்ணைகளை நிறுவினான். கிராமிய உழைப்பாளர்களை பூர்சுவா வர்க்கம் சுரண்டியபோது அம்மக்களின் நியாய ப10ர்வமான ஊதியத்திற்காகவும் நேரப்படியான உழைப்பிற்காகவும் போர்கொடி தூக்கிப் போராடியவன் அக்காச்சி. ஏழைகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக தளபதி கிட்டுவின் அறிவுரையில் பல நியாய விலைக் கடைகளைத் திறந்தான்.

பொதுப்பணிகள்

தமிழ் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பொதுப்பணி செய்ய முன்வரவேண்டும் என அறிஞர் அண்ணாத்துரை ஒரு முறை குறிப்பிட்டார். விடுதலைப் போராளியாகவும், சமூக சீர்திருந்த வாதியாகவும் பொதுப் பணியாளனாகவும் விளங்கிய கப்டன் அக்காச்சியை மக்கள் தலைவனாக்கிய சிறப்புப் பரிமாணங்கள் அவனது யாதார்த்தமான செயற்பாடுகளேயாகும். சக விடுதலைப் போராளிகள் அக்காச்சியை ஏழைகளின் தொண்டன்ää மக்கள் தலைவன் என்று சுவையாக குறிப்பிடுவதுண்டு. படித்தவர்கள் பலர் புத்தகப் ப10ச்சிகளாகவே வாழ்நாளை வீண் நாளாக்கி மறையும் காலத்தில் கிராமத்தையே கலாசாலையாக்கி ஏழைகளையே தனது ஆசான்கiளாக்கி அக்காச்சி அனுபவக் கல்வியூடாக மக்கள் பணிசெய்யக் கற்றுக் கொண்டவை ஏராளம். அவையே அவனது முன்னேற்றப் பாதையின் படிக்கற்களாகும்.

அபிவிருத்தியென்பது சமூகத்தின் அடி மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டு என ஒர்சுலாக்கிக்ஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டார். அபிவிருத்தியில் பல்வேறு பரிணாமங்களை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப விரும்பிய கப்டன் அக்காச்சிää கீழ் மட்டத்தில் வாழும் மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவைப் போதிக்க விரும்பி அதற்கான திட்டங்களை முதலில் வகுத்துக் கொண்டான்.

கல்விப் பணிகள்

'அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' இப்படி மகாகவி பாரதியார் பாடினார். கப்டன் அக்காச்சியின் கல்விப் பணிகளும் பாரதி பாடலின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன.

நீர்வேலி பல பொருளாதார கட்டுமானங்களைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியாகும். பொருளாதார வசதி படைத்த செல்வந்தர்களும் சீவனோபாய மட்டத்திற்குக் கீழே வாழும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். முற்றிலும் கிராமப் புறம் சார்ந்த ஒரு பிரதேசப் பொறுப்பாளனாக பொறுப்பேற்றுக் கொண்ட அக்காச்சி இப் பகுதியில் வாழும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு கல்வியூட்ட விரும்பி பல பகுதிகளில் பாலர் பாடசாலைகளை ஸ்தாபித்தான். புத்தூர் வாதரவத்தையில் இரண்டு பாலர் பாடசாலைகளை திறந்து வைத்தான். நீர்வேலி கந்தசாமி கோயில் அருகில் ஓர் பாலர் பாடசாலையை ஸ்தாபித்தான். இதைவிட இடைநிலைக் கல்வி கற்கும் மாணவர்களது வசதி கருதி அக்காச்சி இலவச வகுப்புக்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு ஸ்தாபித்து நடத்தினார். அக்காச்சி அச்செழுவில் நூல் நிலையம் ஒன்றை அமைத்திருந்தான். வெளிநாட்டு விடுதலைப் போராட்டங்கள் பற்றி அபூர்வமான நூல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

தனது போராளிகளை அரசியல் பிரக்ஞையுள்ளவார்களாக வளர்த்து எழுப்பதில் அவன் அதிக நாட்டமுடையவனாக இருந்தான். அந் நூல் நிலையத்தில் அருந்த நூல்களையெல்லாம் 1987 ஒக்ரோபர் - நவம்பர் மாத காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பு அள்ளிக் கொண்டு சென்று நீர்வேலி - மாசுவன் சந்தியில் போட்டுத் தீயிட்டது. யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்பட்டபோது அதனைக் கண்டத்த இந்தியா தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மூலம் ஈழத்தின் பலபாகங்களிலும் பல நூல் நிலையங்களைத் தீக்கிரையாக்கி 'வரலாற்று பெருமை' யைப் பெற்றுக் கொண்டது.

மதிய போசனம்

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும் திட்டமும் இலங்கை அரசின் மாணவர் மதிய போசனத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படு முன்னரேயே கப்டன் அக்காச்சி பாலர்களுக்கு மதிய போசனம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தான். இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அரசியல் நோக்குடன் இத்திட்டம் அடுத்த தேர்தலை நாக்காக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த சந்ததின் ஆரோக்கியமான வாழ்வுக்காக அக்காச்சி இத்திட்டத்தை அறிமுகம் செய்தான். நீர்வேலி கந்தசுவாமி கோயில் அருகில் அமைக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக்காக காலஞ்சென்ற மக்கள் கலைஞர் வி.எம்.குகராஜா அவர்கள் தயாரித்த "மனிதனும் மிருகமும்" என்ற நாடகத்தை அரங்கேற்றி அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பாலர் பாடசாலைக்கான சுற்றுமதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான். பாலர் பாடசாலை காலையிலும் மாலை வேளையிலும் இலவசமாக இருநேர போசனம் வழங்க ஏற்பாடு செய்தான். பொருளாதார வசதியுடையவர்களை அணுகி அவர்கள் மூலமாக தளபாட வசதிகளைப் இப் பாடசாலைக்குச் செய்த கொடுத்தான்.

நீர்வேலி வீரபத்திரர் கோயில் அருகில் தியாகி திலீபன் ஞாபகார்த்தமாக ஒரு வாசிகசாலையை அமைத்த அக்காச்சிää அக் கட்டடித்திற்குத் தேவையான சீமெந்து கற்களை தனது சொந்த வீட்டிலிருந்தே எடுத்து வந்து பயன்படுத்தினான். ஏழை மக்கள் விஷக்கடிக்கு இலக்காகி குடும்பங்கள் சீரழியாமல் தடுக்க விரும்பிய அக்காச்சி கசிப்பு அழிப்பு நாடக மூலம் பிரச்சாரம் செய்தான். கசிப்பு ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான்.

சிரமதானம்

அக்காச்சி தான் பிரதேசப் பொறுப்பாளராகவிருந்த நீர்வேலிப் பகுதியில் காலத்திற்குக் காலம் பல சிரமதானப் பணிகளைச் செய்து வந்தான். இப் பணிகளில் போராளிகளும் பொது மக்களும் இணைந்து பங்கேற்றார்கள். நீர் பாசன வசதி குறைந்த இடங்களில் குளங்களைத் திருத்தும் வேலைகளை அக்காச்சி செய்து வந்தான். அந்த வகையில் நீர்வேலிப் பகுதியிலுள்ள நடுவத்தாள், கிராஞ்சி போன்ற குளங்களின் திருத்த வேலைப் பணிகள் கப்படன் அக்காச்சியால் மேற்கொள்ளப் பட்டவையாகும். அக்காச்சி ஜீவகருண்யம் மிக்க போராளி என்ற முறையில் வரட்சிக் காலத்தில் மேய்ச்சலுக்காக செல்லும் கால் நடைகளும் இக் களங்களில் நீர் பருக வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. வாதரவத்தைப் பகுதியில் கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அயராது உழைத்த அக்காச்சி இப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையை தீர்கும் முகமாக வாகரவத்தையில் பெரியபொக்கணைக்கும் வீரவாணிக்கும் இடையில் வாழ்ந்த மக்கள் நலன் கருதி தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்தான்.

சிவில் நிர்வாகம் இல்லாத வேளையில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட சச்சரவுகளையெல்லாம் மனச்சாட்சியின் படி இயற்கை நீதிக் கோட்பாட்டைப் பின்பற்றி தீர்த்து வைத்தான். காணிப் பிரச்சினைகளை அவன் அணுகிய விதமும் தீர்த்து வைத்த முறையும் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது.

ஒப்பரேஷன் லிபரேஷன்

1987இல் இலங்கை அரசு வடமராட்சி மீது தொடுத்த ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான யுத்தத்தில் அக்காச்சி பங்குபற்றினான். இலங்கை இராணுவம் எனது பகுதிக்குள் நுழைய முயன்றால் எல்லையில் வைத்து மோதுவேன், என் பிணத்தைத் தாண்டி வந்தே அவர்கள் எனது பகுதிக்குள் நுழையலாம் என சபதம் எடுத்துச் செயற்பட்டான். வடமராட்சி சென்று பலதாக்குதல்களில் பங்குபற்றிவிட்டு பொது மக்களுக்கு உதவியும் செய்துவிட்டே அக்காச்சி மீண்டும் வந்தான்.

இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்

இந்திய இராணுவம் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளுடன் மீது போர் தொடுத்தது. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேற முயன்று கொண்டிருந்த அதே வேளையில் வேறு படைப் பிரிவினர் பலாலி வீதிää கே.கே.எஸ். வீதிää கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேற முயன்று கொண்டிருந்தனர். கைதடி - கோப்பாய் வீதி வழியாக கோப்பாய்ச் சந்திக்க வரமுயன்ற இந்திய இராணுவத்தை அந்த இடத்தை நோக்கி நகரவிடாமல் பதினொரு நாட்கள் அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டது. உக்கிரமான போர் இடம்பெற்றது. பலத்த ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. யுத்த களத்தில் நின்ற இந்திய ஜவான்களுக்கு உணவு கொண்டு வந்த இந்திய உலங்குவானூர்திகள் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதலால் அவை உணவுப் பொட்டலங்களை நாவற்குழி தரவகை; காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு ஓடித்தப்பி தலைமறைவாயின. இந்த உக்கிரமான போரில் கோப்பாய் சந்திக்கு வரமுடியாத நிலையில் நின்ற இந்திய இராணுவத்தின் ஒரு படைப் பிரிவை அக்காச்சி குறுப் தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்ட நிலையில் இன்னுமொரு இந்தியப் படைப்பிரிவு மறுபக்கத்தால் உரும்பிராய் கிருஷணன் கோயிலடிக்கு வந்து வாழைத் தோட்டங்களுக்கூடாக நீர்வேலி வெங்காயக் கூட்டுறவுச் சங்கமருகில் வந்தது. கொமாண்டோ மோட்டார் ஷெல் தாக்குதல்களும் செயின் புளக்கு(டாங்கி) களாலும் தாக்கிய வண்ணம் கோப்பாய்ச் சந்திக்கு இந்திய இராணுவம் நள்ளிரவு கன்னிரண்டு மணிக்கே சென்றடைந்தது. இந்திய இராணுவ நடவடிக்கைளின் போது நீர்வேலிப்பகுதியில் அதிக உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாமல் அக்காச்சியே ஏற்ற நடவடிக்கைகளையெடுத்து தனது திறமையால் கிராமத்தைக் காப்பாற்றினான். என இப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள்.

வேறும் பல தாக்குதல்கள்

1987 அக்டோபர் தொடக்கம் 1988 மார்ச் வரையுள்ள காலப்பகுதியில் நீர்வேலிப் பகுதியில் இந்திய இராணுவத்துடன் பல தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றான். இந்தத் தாக்குதல்களில் பலவும் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மேற் கொள்ளப்பட்டவையாகும். அதாவது 1987 டிசம்பர் மாதத்தின் பின்னர் நீர்வேலிää அச்செழுப் பகுதிகளில் போராளிகளைத் தேடி இந்திய இராணுவம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களை உடைத்து அவர்களது தேடுதல் வேட்டைகளை நிர்மூலப்படுத்திய பின் அக்காச்சி அங்கிருந்து தப்பி பிறிதொரு பகுதிக்குள் நுழைந்தான். இந்த சுற்றி வளைப்பின் போது காயப்பட்ட மன்னாரைச் சேர்ந்த பெண் போராளி சகிலா சயனைட் உட்கொண்டு தியாக மரணமுற்றார்.

பொதுமகன் காப்பாற்றல்

1988 முற்பகுதியில் ஒரு நாள் அச்செழு பகுதிக்கு வந்த இந்திய இராணுவத்தினர் பற்றை மறைவுகளின் பின்னால் படுத்துக் கொண்டு போராளிகளது வாருகைக்காகக் காத்துக் கிடந்தனர். முக்கிய போராளிகளான லெப்டினன்ட் கேணல் இம்ரான், கப்டன் நேரு, அக்காச்சி இப்படியாக பல போராளிகள் அங்கே தங்கியிருந்தனர். அதிகாலை ஆகையால் சன நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இராணுவ நடமாட்டம் பற்றிய தகவல் அன்றைய தினம் போராளிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பொதுமகன் மீன் வலைகளைத் தன் தோளில் போட்டுக் கொண்டு வந்து இராணுவ நடமாட்டம் பற்றிய தகவலைக் கொடுத்து போராளிகளைக் காப்பாற்றினார். தலைவர் பிரபாகரன் கூறியது போல "நாம் கடக்க வேண்டியது நெருப்பாறு என்பது எமக்குத் தெரியும். ஆனால், அதனைக் கடக்க மக்கள் ஆதரவு எனும் கவசம் எம்மிடம் உண்டு" என்ற கூற்றை இச் சம்பவம் நினைவு படுத்துவதாக அமைந்தது.

வன்னியில் அக்காச்சி

1988 மார்ச் மாதம் தொடக்கம் 1989 தை மாதம் வரை அக்காச்சி வன்னிப் பகுதியில் இந்திய இராணுவத்துடன் பல மோதல்களில் ஈடுபட்டான். காலத்திற்குக் காலம் பல்வேறு சங்கேத மொழிகளில் இந்திய இராணுவம் விடுதலைப் புலிகள் மீது தொடுத்த யுத்தத்தில் இந்திய இராணுவம் ஒவ்வொரு தடவையும் பலத்த இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டது. போராட்டத் தலைமையையும் போராட்டத்தையும் இக் கால கட்டத்தில் காப்பாற்றுவதில் வன்னிப் பகுதி வகித்த பங்கு வரலாற்றுச் சிறப்புடையது. அளப்பரிய இழப்புக்களை இந்திய இராணுவம் அடைந்ததோடு,பெரும் தியாகத்தைச் செய்து வரலாற்றுக் கடமையை விடுதலைப் புலிகள் நிறைவேற்ற வன்னியின் இயற்கை அரணுடன் மக்களும் உறுதுணையாயினர். முல்லைத்தீவுப் பகுதியில் நின்று யுத்தத்தில் ஈடுபட்ட அக்காச்சியிடம் வன்னி அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது, ஒரு நாள் அடர்த்தியான காட்டில் பொழுது இருண்ட வேளையில், ஒரு இளம்புலி தனது கையிலிருந்த துப்பாக்கியால் இரண்டு தடவைகள் சுட்டான். மறுநாள் காலையில் இந்திய மாநிலச் செய்தி அந்த இடத்தைக் குறிப்பிட்டு அந்த இடத்தில் இரண்டு ஜவான்கள் இறந்ததாகச் சொன்னது. தலைவர் அந்த இளம் போராளியை அழைத்துப் பாராட்டினார். அதனை என்னால் மறக்க முடியாது என்று அக்காச்சி பதில் சொன்னான்.

மீண்டும் அக்காச்சி

சில மாதங்களை வன்னியில் கழித்துவிட்டு மீண்டும் 1989 தை மாதமளவில் அக்காச்சி குடா நாட்டிற்குள் வந்தான். இக்காலத்தில் அக்காச்சியும் அவனது தோழர்களும் கெரில்லா வாழ்க்கையே மேற்கொண்டனர். வீதிகளைக் கடக்கும் போது அல்லது தனது ஆதரவாளர்களைச் சந்திக்க வரும்போது எதிர்பாராமல் இந்திய இராணுவத்தைச் சந்திக் நேரிட்டால் மோதல்கள் ஏற்படுவதுண்டு. இவ்வாறான மோதல்களில் பெரும் இழப்புக்களோடு இந்திய இராணுவம் முகாம் திரும்பிய ஒரு மோதல் 17.05.1989 அன்று நீர்வேலிப் பகுதியில் நிகழ்ந்தது. இதேபோல் 30.05இ1989 அன்று அக்காச்சியும் சிவநேசன் என்ற இன்னொரு போராளியும் எதிரும் புதிருமாக இந்திய இராணுவத்தைச் சந்தித்தபோது பெரும் மோதல் ஒன்று நிகழ்ந்தது. இந்த மோதலின் போது கப்டன் நேரு, லெப்.குட்டி ஆகியோரும் இராணுவத்தினருடன் மோதினர். நீர்வெலி - அச்செழு வீதியில் நிகழ்ந்த இந்த மோதலில் எல்லோரும் சுற்றி வளைப்பை உடைத்து வெளியேறினர். ஆனால் போராளி சிவநேசன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்தான். இதே போன்ற பிறிதொரு மோதல் 8.8.1989 அன்று பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கு அருகே ஏற்பட்டது. இந்த மோதலில் கப்டன் ஒருவன் உட்பட இரண்டு இந்திய இராணுவத்தினர் இறந்தனர். இந்த மோதலில் அக்காச்சி முக்கிய பங்கு வகித்தான். இந்த மோதல் நிகழ்ந்த மறுதினம் காலை 7:15 மணிக்கு ஆகாசவாணி டில்லி தமிழ்ச் செய்தியில் இந்த மோதல் பற்றிக் குறிப்பிட்டு அக்காச்சி தலைமையிலான குழுவே இந்த மோதலில் ஈடுபட்டது என்று அந்தச் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சுவையான சம்பவங்கள்

1987 ஒக்டோபர் தொடக்கம் 1989 செப்ரம்பர் வரை ஏறத் தாழ இரண்டு ஆண்டுகளில் அக்காச்சி கரந்துறை வாழ்வில் பல சுவையான சம்பவங்கள் நிகழ்நதன. 1987 டிசெம்பர் மாதம் ஒருநாள் அக்காச்சி இராஜ வீதி வழியாக வந்துகொண்டிருந்தான். இந்திய இராணுவச் சிப்பாய்கள் வீதியில் நின்று வீதியாற் செல்வோரை வழிமறித்து விசாரிப்பதும் அவர்களைச் சோதனையிடுவதுமாக நின்றனர்.எதிரும் புதிருமாக அந்த வீதி வழியாக வந்த அக்காச்சி இராணுவத்தைக் கண்டவுடன் பதட்டமடையாமால் வாழைத் தோட்டம் ஒன்றுக்குள் இறங்கினான். மறு மக்கமாக சீக்கியச் சிப்பாய் வருவதைக் கண்ட அக்காச்சி சமயோசிதமாக அந்தத் தோட்டத்திலே நின்று வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரின் கையில் தனது சேட்டைக் கழற்றிக் கொடுத்து விட்டு அந்த விவசாயியின் சவுக்கத்தை(சால்வை)யை வாங்கி தலைப்பா கட்டிக் கொண்டு அந்த விவசாயின் மாட்டை மேய்த்துக் கட்டுவதுபோல் சாய்த்துக் கொண்டு சென்று அப்பால் உள்ள மரம் ஒன்றில் கட்டிவிட்டுத் தலைமறைவானான். மாட்டைப்பற்றிக் கட்டுரை எழுதச் சொன்னால் மாட்டைக் கொண்டு சென்று மரத்தில் கட்டுவிட்டு மரத்தைப்பற்றி கட்டுரை எழுதும் மாணவர்கள் மலிந்த இக் காலத்தில் மாட்டைக் கொண்டு போய் மரத்தில் கட்டிவிட்டுத் தலைமறைவான அக்காச்சியின் புத்தி சாதுரியமும் திறமையும் போற்றுதற்குரியது.

இதேபோல் இந்திய இராணுவம் நூற்றுக் கணக்கில் ஒரு கிராமத்தைச் சுற்றி வளைத்த போது ஒரு வீட்டின் தண்ணீர்த் தாங்கி ஒன்றினுள் ஏறி அக்காச்சியும் அவனது தோழர்களும் படுத்துக் கொண்டனர்;. நீண்ட நேரமாகியும் இராணுவம் அகல்வதாக இல்லை. திடீரென தண்ணீத்தாங்கி அருகில் இருந்த பப்பாசி மரம் அசைந்தது. திகைப்படைந்த அக்காச்சி எட்டிப் பார்த்தான். அந்த வீட்டுக்காரர் பப்பாசிமரம் மரம் வழியாக ஏறி தண்ணீர்த் தாங்கி அருகில் வந்து "இந்தாங்கோ ஜூஸ் கரைச்சுக் கொண்டு வந்தனான்" என்று கொடுத்துவிட்டு மரத்தில் இருந்து இறங்கிச் சென்றார்.

இதேபோல் பிறிதொரு இடத்தில் அக்காச்சியும் அவனது நண்பர்களும் ஒரு சுற்றிவளைப்பின் போது தண்ணீர்த் தாங்கி ஒன்றினுள் ஒளிந்து கொண்டனர். ஏணி வழியாக ஏறி மேலே வந்த அந்த வீட்டின் ஐந்து வயதுச் சிறுவன் தானும் அக்காச்சியோடு தண்ணீர்த் தாங்கியினுள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்று அடம்பிடித்தான். உடனே அக்காச்சி "நீ போகாவிட்டால் அடிப்பேன்" என்று அதட்டிக் கூறினான். உடனே அந்தச் சிறுவன் "அண்ணை இப்ப அடிப்பியளோ? அல்லது ஆமி போனப்பிறகு அடிப்பியளோ?" என்று வினா எழுப்பினான்.

இதேபோல் அக்காச்சியும் அவனது தோழர்களும் ஒரு வீட்டு மதியபோசனத்திற்காக அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வீட்டிற்குள் நுழைந்த அக்காச்சி குழுவினர் "எம்மைப் போல் இன்னும் இரண்டு நண்பர்கள் இங்கோ சாப்பிட வருவார்கள்" என்று கூறிவிட்டு உள்ளே இருந்த தமது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். திடீரென அங்கு வந்த அந்த வீட்டுக்கார அம்மா, "தம்பியவை, இரண்டுபேர் படலேலை வந்து நிக்கினம். ஒருவர் தாடியும் தலைப்பாகையுமாக நிற்கிறார், மற்றவர் ஆமி உடுப்புப் போட்டிருக்கிறார். அவையளைக் கூட்டிக் கொண்டு வரட்டோ" என்றார். வெளியே அக்காச்சி எட்டிப் பார்த்தான். படலையில் ஒரு சீக்கியனும் அவனுக்குதவியாக ஒரு தேசத் துரோகியும் நின்றனர்.

இப்படியாகப் பல சுவையான சம்பவங்களையெல்லாம். தனது கெரில்லா வாழ்க்கையின் போதுதான் சந்திக்க நேரிட்டது என்று அக்காச்சி தனது நண்பர்களுக்குக் கூறி தானும் சேர்ந்து சிரிப்பான். அக்காச்சியின் வசீகரமான அந்த முகத்தில் அடிக்கடி உதிரும் புன்னகை ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டது. அவனது அந்தப் புன்னகையில் எம்மை மறந்து எமது கவலைகளை மறந்து மகிழ்சியடைந்த நாட்கள் எத்தனை எத்தனை.

மக்கள் காப்பாற்றல்

ஒரு நாள், 1989 ஆகஸ்ட் மாதமளவில், அக்காச்சியும் அவனது நண்பர்களும் கப்புது என்ற கிராமத்தில் தங்கியிருந்தனர். கிராமத்தை 800க்கு மேற்பட்ட இந்தியச் சிப்பாய்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர். வீடுவீடாகத் தேடுதல் நடவடிக்கைகளை இந்திய இராணுவம் மேற்கொண்டது. சாதாரண மக்களைக் கொண்ட அந்தக் கிராமம் மிகவும் புத்தி சாதுரியமாக அக்காச்சியையும் அவனது தோழர்களையும் காப்பாற்றியது. இந்தக் கிராம மக்கள் நீண்ட காலமாகவே போராளிகளுக்கு உறுதுணையாக இருந்து வருபவர்கள்.

இன்னும் ஒரு சம்பவம் மறக்க முடியாததது.

1987 ஜூலை 5ஆம் திகதி மில்லர் இலங்கை இராணுவம் தங்கியிருந்த நெல்லியடி மத்திய கல்லூரி முகாம் மீது தாக்குதலைத் தொடுக்க முன்னர் தயாரிப்பு வேலைகளை முடித்துக் கொண்டு இக் கிராமத்துக்குள் சென்றான். கப்டன் மில்லர் எடுத்துச் சென்ற அந்த வாகனம் இலங்கை இராணுவத்தின் கண்களில் படாதபடி அந்தப் பெரிய வாகனத்தை இலைகுழைகளில் மூடி மறைத்து உருமறைப்புச் செய்து உதவியவர்கள் இந்தப் பகுதி மக்கள் தான் என்று தியாகி திலீபன் பெருமையோடு சொன்னான். மில்லரின் அந்தத் தாக்குதல் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனைக்கு வழிவகுத்தது.

கடைசித் தாக்குதல்

ஓட்டுமடம் என்ற இடத்தில் கூடாரமடித்து தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டிருந்த ஈ.என்.டி.எல்.எப். என்ற தேசவிரோதக் கும்பல் 15.09.1989 அன்று தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு மக்களை இம்சைப்படுத்தி நிகழ்ச்சிகளைக் குழப்பும் நோக்குடன் நீர்வேலிக்கு ஹைஎஸ் வாகனம் ஒன்றைக் கடத்திக் கொண்டு வந்தார்கள். திலீபனின் அஞ்சலிப் பிரசுரம் ஒட்டிய மதனா என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். இவற்றையெல்லாம் கேள்வியுற்ற அக்காச்சி நீர்வேலிச் சந்தியில் நின்ற தேசவிரோதிகளை நோக்கி சக போராளிகளோடு விரைந்தான். அங்கே பெரும் மோதல் ஒன்று ஆரம்பமானது. தேசத் துரோகிகள் தாம் கடந்தி வந்த வானையும் விட்டுவிட்டு நீர்வேலி தரவைப் பாதையூடாக ஓட்டம் பிடித்தனர். சண்டையில் பல துரோகிகள் மாண்டுபோயினர். ஒருவன் உயிருடன் பிடிபட்டான். தற்செயலாக நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலைக்குச் சென்ற அக்காச்சி மீது அங்கு ஒளிந்திருந்த கோழையொருவன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையால் மார்பினில் குண்டேந்தி அக்காச்சி மறைந்தான்.

நீர்வேலியில் பிறந்து நீர்வேலியில் கல்வி கற்று நீர்வேலிப் பிரதேசப் பொறுப்பாளனாக இருந்து நீர்வேலியில் வீரமரணமடைந்த அக்காச்சியின் வாழ்வு விடுதலைக்குப் போராடும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவுள்ளது. அவன் செய்த சேவையின் நினைவுச் சின்னங்களாக நீர்வேலிப் பிரதேசத்தில் காணப்படும் கட்டங்களே மிளிர்கின்றன. இவனது ஒன்றுவிட்ட சகோதரர் பல தடவை தன்னுடன் வெளிநாடு வருமாறு அழைத்தும் அங்கு செல்ல மறுத்து விட்டான். இவன் இறப்பதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னரும் இவ்வாறான வேண்டுகோளை அவர் அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவரிடம் அக்காச்சி பின்வருமாறு சொன்னான் "நான் செய்யும் பணிகளை வேறு ஒருவரைக் கொண்டு நிறைவு செய்ய முடியுமாயின் தான் வருவேன். அதுவரை நான் வரமாட்டேன்." இந்த ஆணித்தரமான பதில் வெறும் மேனி மினுக்கு வார்ததைகளல்ல, அது ஒரு உறுதியான பிரஞையின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நர்மதா? ஆனாலும் அவர்களின் வாழ்க்கைப் பகிரும் அளவுக்கு என்னிடம் தகவல்கள் கிடையாது

  • தொடங்கியவர்

கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

துரைசிங்கம் புஸ்பகலா

மண்கும்பான் யாழ்ப்பாணம்

ankayatkanni3ia.jpg

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.

"இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்"

அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.

தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சிஇ எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும்இ அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும்இ ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம்இ தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.

தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும்இ 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும்இ நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.

கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.

ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.

லெப்.கேணல் பாமாவுக்கும்இ மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள்இ பண்புகள்இ எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள்இ நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும்இ படிச்சு முன்னுக்கு வரவேணும்இ என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.

'நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா' என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதைஇ தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.

'பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை'

என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடுஇ வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால்இ இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால்இ தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.

கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம்இ நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.

எல்லாம் தயார்.

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம்இ என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும்இ அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும்இ தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும்இ தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்பஇ அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்பஇ அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.

இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.

என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.

1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில்இ காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

எல்லோருக்குமே பரபரப்பு.

தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.

ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.

'ரைட்இ கட்டளைக் கப்பல் அவுட்' என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.

சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்துஇ ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி 'எங்கள் தோழிகள்இ தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே' என்ற எண்ணமே மேலோங்கியது.

அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணிஇ ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.

ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.

தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோதுஇ தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.

இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.

  • தொடங்கியவர்

maaveerarmajatithan3eu.jpg

கரும்புலி

மேஜர்ஆதித்தன்

(முனியாண்டி சுதாகரன் பதுளை மாவட்டம்)

மலர்வு 28-08-1978

உதிர்வு 25-12-1999

1983ஆம் ஆண்டு யுூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இருபிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும். சிறிய மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பிள்ளைகளுடன் ஒழித்துக்கொள்கிறாள் அந்தத்தாய்.

'என்ர உயிர் போனாலும் பரவாயில்லை. நீங்கள் எங்கையாச்சும் ஓடித் தப்புங்கோ' பிள்ளைகளைப் பார்த்துக் கெஞ்சுகிறாள். பருந்துகளிடம் இருந்து தன் குஞ்சுகளைக் காக்கப் பரிதவித்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் இரு குஞ்சுகளில் ஒன்றுதான் பின்னாளில் கரும்புலி மேஜர் ஆதித்தன். சின்னவயதில் இருந்தே வயதுக்குமீறிய பொறுப்புக்களையும், அவனது அளவைவிட பெரிய அளவில் துன்பங்களையும், துயரங்களையும் தன் தோள்களில் தாங்கி வளர்ந்தவன்தான் கரும்புலி மேஜர்ஆதித்தன். இவனைப் பற்றிச் சொல்லும்பொழுது வார்த்தைகள்கூட ஈரமாகும்.

சின்ன வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்துவிட்டான். உடலில் வலுவற்ற நிலையிலும் பிள்ளைகளுக்காக இயந்திரமாய் "எஸ்ரேட்டில்" கூலி வேலை செய்கிறாள் தாய். தமையன் ஒருவன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான். சின்னண்ணனும் இவனைப் போலவே பாடசாலைக்குச் செல்லும் சிறுவன். இந்த நிலையில் நோயின் பிடி இறுக்கியதால் படுக்கையில் விழுந்துவிடுகிறாள் தாய். தங்களைக் காத்த தாயைக் காக்க இந்தச் சிறுவர்களால் என்ன செய்யமுடியும்? அண்ணனும் தம்பியும் சிந்திக்கிறார்கள், முடிவெடுக்கிறார்கள். அண்ணன் எப்படியோ எங்கோ ஓர் இடத்தில் வேலையில் சேர்ந்துகொண்டான். இவனும் கொழும்பில் ஒரு பலசரக்குக் கடையில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். நாட்கள் கழிகின்றன.

தாயின் நினைவுடனும், நெஞ்சு நிறையக் கனத்த சுமையுடனும் பொழுதைக் கழிக்கும் சுதாகரனுக்கு (ஆதித்தனுக்கு) அன்று ஒரு புதிய திருப்புமுனையான நாள். வேலை முடிந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கின்றார

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தில் பிறந்து தமிழன் என்ற உணர்வோடு எம் மக்கள் வாழ்விற்காக காவியமான இக் கரும்புலியை நினைக்கையில் உடல் புல்லரிக்கின்றது

நன்றி நர்மதா

விடுதலைப்போரில் வித்தாகிப்போன கரும்புலிகளை நினைவுகூர்ந்து எழுதுவதற்கு நன்றிகள் மேலும் தொடருங்கள்....

நர்மதா, நல்ல முயற்சி. ஆனால் நீங்கள் இங்கு போடுபவற்றின் மூலத்தையும் போட்டால் நல்லா இருக்கும். அல்லது சிறு குறிப்பை மாத்திரம் போட்டுவிட்டு இணைப்பை குடுக்கலாம்.

நர்மதா, நல்ல முயற்சி. ஆனால் நீங்கள் இங்கு போடுபவற்றின் மூலத்தையும் போட்டால் நல்லா இருக்கும். அல்லது சிறு குறிப்பை மாத்திரம் போட்டுவிட்டு இணைப்பை குடுக்கலாம்.

மூலம் போடுவது நல்லதுதான் ...ஆனால் கட்டாயம் என்று இல்லை என்று நினைக்கின்றேன். ஏனெனில் இவற்றை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. அத்தனையும் கண்முன்னால் நடந்த சம்பவம் போன்றவை!

நன்றி நர்மதா தொடருங்கள் .கரும்புலிகள் பற்றிய பதிவுகள் ஒரு ஆவணப்படுத்தப்படுவதான உணர்வை உங்கள் பணி தருகிறது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா, நல்ல முயற்சி. ஆனால் நீங்கள் இங்கு போடுபவற்றின் மூலத்தையும் போட்டால் நல்லா இருக்கும். அல்லது சிறு குறிப்பை மாத்திரம் போட்டுவிட்டு இணைப்பை குடுக்கலாம்.

http://www.erimalai.info/2005/july/thokupp...ajor_tampo.html

http://www.erimalai.info/2005/july/thokupp...ivukumaran.html

இவற்றை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. கண்முன்னால் நடந்த சம்பவம் போன்றவை என்று எல்லோரும் எழுத வெளிக்கிட்டால் பல பிரச்சனைகளிற்கு வழிகோலும். வேறு இணையத் தளத்திலிருந்து போட்டால் அந்த இணையதை தயவு செய்து போடுங்கள். இல்லை சஞ்சிகைகள் ஏடுகளில் நீங்கள் வாசித்ததை தட்டச்சு செய்து போடுகிறீர்கள் என்ற அவற்றின் விபரத்தை இணையுங்கள்.

  • தொடங்கியவர்

மேஜர் சோதியா

sothiya4aw.jpg

மைக்கேல் வசந்தி

கரவெட்டிஇ யாழ்பாணம்.

மகளீர் படையணின் முதற் தாக்குதற் தளபதி

உதிர்வு 26.09.1963

மறைவு 11.01.1990

விடுதலைப் புலிகள் மகளிர் படையின் மூத்த போராளிகளுள் ஒருவரும் முதலாவது தளபதியுமான சோதியா, உடற் பலவீனத்தையும் பொருட்படுத்தாது பணி செய்த போது மூளைக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டு சாவை அணைத்துக்கொண்டார்.

பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள்இ போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக... நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.

இந்திய இராணுவக் காலப்பகுதிஇ ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகிஇ வழிநடந்தஇ நேசித்த காலம்.

நெடிதுயர்ந்த பெண்இ வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.

சோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.

ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரிஇ இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.

விடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறைஇ இல்லை பாசறை எம்மை வளர்த்த பாசத்தாய்ப்பூமி என்பேன்.

அந்த இனிய கணப்பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.

காடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வியாபித்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை பயம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக்கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ? என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.

எங்கும் தேடல்இ எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வனத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். சிங்காரித்துப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.

சமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி நிர்வாகத் திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும்இ அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.

உணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்காஇ நாள் கணக்காஇ அளவு தண்ணிஇ அளவு சாப்பாட்டுடன் நடை... நடை. தொலைதூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் நட்சத்திரங்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பணியும்இ உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடியஇ மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சுகனத்தாலும் தொடர்கின்றேன்.

கனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமேஇ ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற்இ குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும்இ இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை ஞாபகமூட்டும்.

கண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா ஞாபகம் வரும்.

கல கல என பஜார் அடித்து சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.

கள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது கிறிஸ்தவ பாதிரியாரை ஞாபகம் ஊட்டும் சோதியாக்கா... அதுதான் எங்கள் சோதியாக்கா.

பச்சை சேட்இ பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும்இ ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சுவாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. ~கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...

காட்டில் சகல வேலைகள்இ முகாம் அமைத்தல்இ கொம்பாசில் நகர்த்தல்இ கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு சகல போராளிகளையும் விளக்கிக் கொண்டுஇ அவர்களது ஆலோசனைகளையும் கேட்கும் பண்பும்இ வேலைகளைப் பங்கிடும் நிர்வாகத் திறனும்இ மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.

உழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ~நையிற்றிங் கேலான அவர் நோயால் அவதியுற்றபோது துடித்துப் போனோம்.

அந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னைஇ தந்தை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. மரணச்சடங்கில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்;து அழுதபடி அஞ்சலித்த காட்சிஇ நாம் நிமிர்ந்தோம்.

வளர்வோம்இ நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.

சோதியாக்கா! நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் நிர்வாகம் செய்யும் நேர்த்தியைப் பாருங்கள்.

உங்கள் பெயரை இதயத்தில் ஏந்திஇ உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.

source : Maaveerarkal - Heroes

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நர்மதா, நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

ஆனால் தலைப்பை 'மாவீரர்கள்" என்று மாற்றிவிடலாமே? மாவீரர்கள் என்றாலே எல்லோரும் அடங்கிவிடுவார்களல்லவா?

-----------------------------------

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் ஒரு கவிஞரும்கூட. கரும்புலி மேஜர் நிலவனும் அப்படித்தான். இருவரும் நெருங்கிய தோழர்களும்கூட.

அறிவுக்குமரன், சில அருமயான பாடல்களை இயற்றியுள்ளார்.

தேசத்தின் புயல்கள் இரண்டில் அவரது இரு பாடல்கள் இருப்பதான நினைக்கிறேன்.

--------------------------------

1998 இல் ஆனையிறவு மீது நடந்த கரும்புலித்தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். அவ்வணியில் சென்ற அறிவுக்குமரனும் வீரச்சாவென்றே அனைவரும் நினைத்திருந்தனர். சிலநாட்களின் பின் கடுமையான காயங்களுடன் மீண்டு வந்து சேர்ந்தார். அவரின் நாட்குறிப்பில் இச்சம்பவம் பற்றி விரிவாக எழுதியுள்ளாரென்று அறிகிறேன். தனியொரு புத்தகமாகப் போடுமளவுக்கு அறிவுக்குமரன் இத்தாக்குதல் அனுபவங்களைத் தன்கைபடத் தொகுத்துள்ளார். ஒருநேரத்தில் அது புத்தகமாக வெளிவரலாமென்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1998 புதுவருடத் தினத்தன்று கரிப்பட்ட முறிப்பில் உலங்குவானூர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சித்தரித்து எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் பார்த்தீர்களா?

அத்தாக்குதலுக்குச் சென்ற ஐவர் கொண்ட கரும்புலியணியில் அறிவுக்குமரனும் ஒருவர். அந்த ஐவரில் நால்வர் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் வீரச்சாவடைந்துவிட்டனர். ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். அத்திரைப்படத்தில் அவர் அந்தப் பாத்திரமாகவே நடிக்கிறார்.

என்னைப்பொறுத்தவரை அத்திரைப்படத்தை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமென்று படுகிறது. புனைவுகளைப் படமாக்குகையிலேயே பிறரால் எவ்வளவு அழுத்தமாகப் படைப்பாக்க முடிகிறது. உண்மைகளை இன்னும் எவ்வளவுக்கு அழுத்தமாகப் படைப்பாக்க முடியும்?

உங்கள் தகவல்களுக்கு நன்றிகள் நர்மதா நல்லவன். அந்த திரைப்படத்தின் பெயதை அறியத் தருவீர்களா? பார்க்க ஆவலாய் உள்ளோம்...

சோதியாக்கா கரவெட்டி இல்லை...நெல்லியடி!

அவ வீரமரணம் அடைஞ்சபிறகுதான் நிறையபேருக்கு தெரியும் .. இப்பிடி ஒரு போராளி இந்த ஊரில் இருந்தாரா என்று!

எந்த தற்புகழும் தேவை இல்லையென்று ... இனத்துக்காய் மடிந்துபோன போராளிகள்.. சோதியாக்கா போல் ஏராளம்!

  • தொடங்கியவர்

லெப்.கேணல் ராதா

maaveerarltcolraatha5gn.jpg

கனகசபாபதி ஹரிச்சந்திரா

வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம்.

தாயின் மடியில்: 22-12-1958 - தமிழிழத்தின் மடியில் 20-05-1987

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச அதிகாரியைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு விதமான பார்வையைக் கொடுக்கவில்லை.

சாந்தமும் வசீகரமும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் நிர்வாக ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.

யாழ். இந்துக்கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் அதிபரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.

கல்வி, விளையாட்டு, நிர்வாகம் என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக்கொண்டு கொழும்பில் வங்கியொன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.

அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வித்தியாசமான வீரனை, நடமாடும் பல்கலைக்கழகத்தினை இனங் கண்டுகொண்ட தேசியத்;தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக்கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை?

பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய இராணுவ அதிகாரி ஒருவனை அங்கே காணமுடிந்தது.

ஸ்கவுட் அரென்சன் என்ற அதிகார அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான இராணுவ நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, அசுர வேகம் அதுதான் ராதா.

ராதா அசைக்கமுடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே டம்ப் ரவுன்ஸ் எனப்படும் போலிக்குண்டுகளைப் பாவித்து போர்க்கள நிலைமையைப் போன்ற பிரமையை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பாவிக்க விரும்பவில்லை, நிஜமான குண்டுகளை பாவிக்கப்போவதாக ராதா தலைவரிடம் அனுமதி வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு அனுமதி கொடுத்தார்.

டவுன் பொசிசன் இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். நிஜமான குண்டுகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றனர். அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பாலான அடிப்பாகங்களைக் கொண்ட சப்பாத்துக்களை கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த "அத்pகாரி ராதாவைக்" காணவில்லை. ஒரு நல்ல நண்பனை, தோழனை அங்கே காணமுடிந்தது. என்ன ஐஸே கஸ்டமா இருக்கா, துன்பந்தான். இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.

பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப்பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடலை மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வித்தியாசமானவர்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மேசையில் புத்தகங்களும் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.

அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் வாக்கிடோக்கியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "டவுன் பொசிசன்" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியுூகம்; அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட hPங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய பட்டாளம் ஒன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து பறந்து சென்றது.

தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். "காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கொமான்ட் கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்" என்று ராதா கூறி முடித்தார்.

ராதாவைத் தொடர்ந்த பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து "இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் அலேட் வந்தால் எப்படி நிலை எடுக்கிறது ஒன்று . கட்டளை வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் டவுன் என்றால் டவுன் தான்" என்று சொல்லிச் சிரித்தார்.

இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற விசேட கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் பொலிஸ் நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.

விக்டர் இறந்த பின் மன்னார்ப் பிரதேசத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவள்" கவச வாகனத்தைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.

கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். பிராந்தியத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி இராணுவமுகாம், மயிலியதனை இராணுவமுகாம், காங்கேசன்துறை காபர்வியுூ இராணுவமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐஸே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது ஐஸே" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வாசகம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள் பல தாண்டிய போதும் அவரது பசிய நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.

source : Maaveerarkal - Heroes

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை மாற்றியமையும்,

கட்டுரைகளின் அடியில்

சிறிதளவிலேனும் தகவல் மூலங்களையும் குறிப்பிடுகின்றமையும்

வரவேற்கத்தக்கது.....

நர்மதா,

உங்கள் தகவல் பகிர்வு பயனுடையது..

மேலும் தொடருங்கள்..

[i]"மாவீரர்கள்" என்ற தகவல்மூலம் "பொது" வாக இருப்பது

தகவல் தேடலாளர்களுக்குச் சற்று நெருடலாக இருக்கிறது;

கவனியுங்கோ நர்மதா

  • தொடங்கியவர்

கேணல் கிட்டு

kittu75kw.jpg

சதாசிவம் கிருஷ்ணகுமார்

வல்வெட்டித்துறை

கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்லஇ அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகிஇ நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்

அதனால்தான்இ தமிழீழத் தேசியத் தலைவர் "கிட்டுவை ஆழமாக நேசித்தேன்இ தம்பியாகஇ தளபதியாகஇ எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்துஇ போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது" என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்துஇ தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம், சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்றுஇ பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும்இ இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களைஇ சிந்தனைகளைஇ மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தைஇ தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார்.

1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர், தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில், துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர, பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது.

1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல, ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார்.

பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்திஇ அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.

யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாகஇ மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள்இ நூலகங்கள்இ மலிவுவிலைக் கடைகள்இ பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடையஇ அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.

தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்லஇ எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகராஇ கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது.

1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும்இ திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில்இ இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள்இ பத்திரிகையாளர்களர்இ கலைஞர்கள்இ பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்துஇ எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும்இ சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார்.

இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும்இ ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.

கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும்இ நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில்இ எரிமலை' எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்புஇவிடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம்இ எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும்இ தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரைஇ தாயகத்தைஇ தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.

கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பாஇ புலேந்திரன்இ திலீபன்இ ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாதுஇ தமிழீழத்தைஇ தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.

கேணல் கிட்டுவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர்

கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப் புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக் கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப் பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின் றார். "கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச் சாக பிறந்திருக்கிறாய்" எனக்கூறி தனக் குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.

இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில்கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.

கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரி யற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.

ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.

சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.

எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றி ருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது. "கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு" எனக்கூறும் தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களோடு ஒன்றிணைந்து கேணல் கிட்டுவை நெஞ்சிலேற்றுவோம். அவர் நினைவு தினத்தில் உறுதியெடுத்துக்கொள்வோம்

நடுகடலில் படுகொலை

'கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் - லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ''இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை"" என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால் எந்த நாட்டுக்கொடியும் கதிரவன் மறைந்த பி;ன்பு பறக்கவிடுவது வழக்கமல்ல. ஏன் இந்தியாவின் கொடி பறக்கவில்லை.

7.1.93 அன்று இந்தோனேசியாவின் மலாக்கா - சந்தியிலுள்ள பியுூபர் - கலா தீவி;ல் தளபதி கிட்டுவும் மற்றும் 9 விடுதலைப் புலிகளும் இந்தக் கப்பலில் ஏறி;னார்கள். இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. தமிழீழப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றுடன் ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ எடுத்து வருவது அபாயகரமானது. எனவே அவற்றைக் கொண்டு வரவில்லை.

13.1.93 அன்று இந்தியாவில் இருந்து 440 மைல்களுக்கு இப்பாலும், இலங்கையின் தென் முனையிலிருந்து 290 மைல்களுக்கு அப்பாலும், நிலநேர்கோட்;டிற்கு வடக்கில் 6 பாகையிலும் நிலக்கோட்டிற்கு கிழக்கே 8 பாகையிலும் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பல் நிறுத்தப்பட்டு கடலைகளின் இயற்கையோட்டத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சனவரி 16-ஆம் நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிஞ்கைக்காகக் காத்திருந்தார்கள். அதே இரவு 10.30 மணியளவில் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் கப்பலை அணுகியது. இரவு நேரம் ஆதலால் இந்தியக் கப்பலை விடுதலைப் புலிகளால் அடையாளம் காண முடியவில்லை. இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக் கப்பலின் காப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. 'திரிகோணமலையை நோக்கி இந்தக் கப்பல் செல்கிறதா" என்று கேட்டபொழுது 'ஆம்" என்று பதில் கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கப்பலை நோக்கி இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இடுத்த கேள்வியாக 'நீங்கள் இலங்கைத் தமிழர்களா"? என்று கேட்கப்பட்டது. அதற்கும் 'ஆம்" என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் 'யகர்தா" கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தி;யக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ''கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார்?"" என்று வினாவினார். தாங்கள் 'சர்வதேசக் காவல் பணிபுரிவதாக" இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். 'யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா"? என்பதை அறிந்து கொள்வதில் மாத்திரமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். அதன் பின்பு தங்கள் கப்பலை நெருங்கக்கூடாது என்று ஜெயச்சந்திரன் இந்தியக் கடற்படைக் கப்பலை எச்சரித்தார்.

சிங்களக் கடற்படைக் கப்பல்தான் தங்களை வழிமறிக்கிறது என்று ஜெயச்சந்திரனும் மற்றவர்களும் நினைத்தார்கள். எனவே அதை தாக்குவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதற்குப் பின்னர்தான் இந்திய கடற்படைக் கப்பலின் காப்டன் தாங்கள் யார் என்ற உண்மையைத் தெரிவித்தார்.

ஜ.என்.எஸ்.38 விவேகா என்னும் இந்தியக் கடற்படைக் கப்பல்தான் தங்களை மறிக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்ததும் அந்தக் கப்பலை தாக்கவேண்டாம் என்று தளபதி கிட்டு ஜெயச்சந்திரனுக்கு ஆணையிட்டார். ஏற்களவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள உறவு சீராக இல்லாததாலும் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் பகையுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சுூழ்நிலையிலும் இந்தியக் கடற்படைக் கப்பலை நாம் தாக்கினால் அது மேலும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவே, நமது உயிரை இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை இந்தியக் கப்பலைத் தாக்க வேண்டாம் என்று தளபதி கிட்டு திட்டவட்டமாகச் கூறினார்.

அதன் பின்பு இந்தியக் கடற்படைக்கப்பலின் காப்டனுடன் வானொலி மூலம் பேசுவதற்கு கிட்டு விரும்பினார்.

இந்திய காப்டன் கிட்டுவை யார் என் விசாரித்தார். அதற்கு கிட்டு பதில் அளிக்கும்போது 'தன்னை இப்பொழுது மாறன் என்று அழைக்கலாம்" பின்பு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிவிக்கிறேன்" என்று பதில் கூறினார். எங்களுடைய கப்பலை எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அதற்குப் பதில் அளித்த இந்தியக்; கப்பலின் காப்டன் 'அது பற்றி எனக்குத் தெரியாது, உங்களுடைய கப்பலை கடற்கரைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கப்பலைத் தாக்க நேரிடும்" என்று எச்சரித்தார்.

தங்களுடைய கப்பலில் பெட்ரோல், டீசல் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருப்பதால் சண்டை மூண்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்தியக் கடற்படைக் கப்பலைத் தொடர்ந்து செல்லக் கிட்டு முடிவு செய்தார்.

சனவரி 14-ஆம் நாள் காலை 6 மணிக்கு மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பல் கிட்டுவின் கப்பலுக்கு அருகே வந்தது. ஜ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒருபுறமும், ஜ.என்.எஸ் 38 விவேகா மறுபுறமும் கிட்டுவின் கப்பலுக்குத் காவலாக இந்தியக் கடற்கரையை நோக்கி வழிநடத்திச் சென்றன. எம்.வி.யகதா கப்பலில் தளபதி கிட்டு பயணம் செய்கிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு, அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாமல் தடுத்து உயிரோடு சிறைபிடித்துச் செல்லவே இந்தியக் கடற்படைக்கப்பல்கள் வந்திருக்கின்றன என்ற உண்மை தெளிவாகியது. இருந்தாலும்; கிட்டு இந்தியக் கடற்படைக் காப்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து சமாதான் திட்டம் ஒன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகச் கிட்டு கூறினார். ஆனால் இந்தியக் காப்டனோ அவர்களைச் சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத் தினார். சென்னை அழைத்துவரவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டபொழுது அவர் அதற்கு மழுப்பலான பதில் கூறினார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், கிட்டு சென்னை வந்த பின்பு உயர் அதிகாரிகள் அவரைச் சந்தித்து மேலும் பேசுவார்கள் என்றும் கூறினார்.

இந்தப் பேச்சுக்களிடையே பயணட் தொடர்ந்தது. சென்னை அருகேயுள்ள எண்ணு}ரிலிருந்து கிழக்கே 16ஆவது மைலுக்கு யகாதா கப்பல் வந்த பொழுது அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும்படி கிட்டு ஆணையிட்டார். அதற்குமேலும் பயணம் செய்தால் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பலான ஜ.என்.எஸ் சாவித்திரி விரைந்து வந்து கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்ட கப்பல்களுடன் சேர்ந்துகொண்டது. உடனடியாகச் சரண் அடையும்படி கிட்டுவுக்கு ஆணையிடப்பட்டது. அதற்குக் கிட்டு மறுத்துவிட்டார். தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத்துறை தலைவர்களையோ சென்னையில் உள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கிட்டு கேட்டுக்கொண்டார். அதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்துவிட்டார்.

16-ஆம் நாள் காலை 6 மணி வரை அவகாசம் தருவதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்னறால் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் என்றும் எச்சரித்தார். சரியாக காலை 6 மணிக்கு இரண்டு உலங்குவானு}ர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்கத் தயாரானார்.

சிறிது நேரத்தில் கிட்டுவின் கப்பலை நோக்கி இந்திய கடற்படைக் கப்பல்கள் பீரங்கிகளால் சுட்டன. கப்பலின் கேப்டன் ஜெயசந்திரனையும் மற்றும் மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்புமாறு கிட்டு ஆணையிட்டார். தன்னுடனிருந்த விடுதலைப் புலிகளை நச்சுக்குப்பிகளைத் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார். ஆனால் மாலுமிகள் கிட்டுவை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாங்கள் மட்டும் தப்பிச்செல்ல விரும்பவில்லை. 'தேவையில்லாமல் அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை" என்று கூறிய கிட்டு அவர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கடலில் தள்ளினார். கடலில் அவர்கள் குதிக்கும்பொழுது தங்கள் கப்பல் பற்றி எரிவதையும் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலைக்கு நடுவே தளபதி கிட்டுவும் மற்ற விடுதலைப் புலிகளும் கம்பீரமாக நிற்பதையும் பார்த்தனர்.

16.1.93 அன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பல்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கியதால் கிட்டுவின் கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலில் குதித்த கப்பலின் மாலுமிகளை இந்தியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றிச் சிறைபிடித்தது. அவர்களில் சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் படுகாயம் எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நியாயமாக சென்னைக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனென்றால் சென்னைக்கு அருகே கிட்டுவின் கப்பலைச் சுற்றி வளைத்தாக இந்தியக் கடற்படை குற்றம் சாட்டி இருந்தது. அதற்கு மாறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு சென்றார்கள். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

கிட்டு தன்னுடைய கப்பலில் ஏறிற பொழுது ''தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கொடுப்பதற்காக பல முக்கியமான ஆவணங்களை ஒரு கைப்பெட்டியில் கிட்டு வைத்திருந்தார்.மேலும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வைத்து இருப்பதாகக் கிட்டு என்னிடம் கூறியிருந்தார்"" எனக் கப்பலின் கேப்டன் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

மேற்கு ஜரோப்பிய நாடுகள் தயாரித்து அளித்த சமாதானத் திட்டத்துடன் தமது தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தளபதி கிட்டுவை இந்தியக் கடற்படை வழிமறித்துப் படுகொலை செய்தது.

"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்

நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்

எமது விடுதலை வரலாற்றின்

ஒரு காலத்தின் பதிவு"

கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும்

k106gl.gif

கேணல் கிட்டு

சதாசிவம் கிருஷ்ணகுமார்

வல்வெட்டித்துறை

k29qx.gif

கடற்புலி கப்டன் ஜீவா

நடராசா மார்க்ஜெராஜ்

கொய்யத்தோட்ட ஒழுங்கை,

பாசையுூர், யாழ்ப்பாணம்

k36av.gif

கடற்புலி கப்டன் குணசீலன் (குணராஜ்)

சேகரன்குருஸ் மைக்கல்;ஜீவா

2-ம் குறுக்குத்தெரு,

உதயபுரம், மணியம்தோட்டம்

k47wr.gif

கடற்புலி கப்டன் றொசான்

இரத்தினசிங்கம் அருணராசா

அரசடி வீதி,

நல்லுர், யாழ்ப்பாணம்

k51jz.gif

கடற்புலி கப்டன் நாயகன்

சிவலிங்கம் கேசவன்

பொலிகண்டி, வல்வெட்டித்துறை

k62jq.gif

கடற்புலி லெப். துாயவன்

மகாலிங்கம் ஜெயலிங்கம

கண்டிவீதி, யாழ்ப்பாணம்

k73ly.gif

கடற்புலி லெப். நல்லவன்

சிலஞானசுந்தரம் ரமேஸ்

மணியந்தோட்டம், கொழும்புத்துறை

யாழ்ப்பாணம்

k84sz.gif

கடற்புலி லெப். அமுதன்

அலோசியஸ் ஜான்சன்

2-ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு,

யாழ்ப்பாணம்

k95dr.gif

லெப். கேணல் குட்டிசிறி

இராசையா சிறிகணேசன்

சுதுமைலை வடக்கு, மானிப்பாய்.

k17sq.gif

மேஜர். வேலன் மலரவன்

சுந்தரலிங்கம் சுந்தரவேல்

வியாபாரிமூலை, பருத்தித்துறை

தகவல்

காவியநாயகன் கிட்டு - Maaveerarkal - Heroes

நடுக்கடலில் படுகொலை - பழ நெடுமாறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.