Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்

Featured Replies

'குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலையே தற்போதுள்ளது. நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாக முன்னரே, அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என்று, பலர் கருதுகின்றனர்.

மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் இந்த அறிக்கை இலங்கைக்கு கடுமையானதொன்றாக அமையலாம் என்றே கருதுகின்றனர். அத்துடன் அரசாங்கத் தரப்பும் இது சாதகமற்றதாக அமையும் என்றே கருதுகிறது. சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் வெளிவரப் போகும் இந்த அறிக்கை இலங்கை தொடர்பான ஒரு பெரும் புயலைக் கிளப்பி விட்டாலும் ஆச்சரியம் இல்லை.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவர முன்னரே, அது சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை செய்யும் வகையில் அமைந்திருக்கும் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றிய ஆதாரங்களை அதிகளவில் ஐ.நா நிபுணர்கள் குழு சேகரித்துள்ளதாக கருதப்படுவதால் தான் இந்தக் கருத்து வலுப்பெற்றுள்ளது. அதேவேளை, இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அது அரசுக்கு சாதகமற்ற முறையில் இருந்தால்- இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி உள்ளது.

கடந்த வருடம் இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போது அதை நிராகரித்த அரசாங்கம், நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்து விசாரணை நடத்தவும் முடியாது, அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைக்கவும் மாட்டோம் என்றும் கூறியது. பின்னர் , ஏதோ ஒரு மாற்றமாக. வேண்டுமானால் இங்கு வந்து நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்து விட்டுப் போகலாம் என்று கூறியது. அரசாங்கம் இறுக்கமான பிடிவாதங்களைக் கடைப்பிடித்தாலும் கூட, உள்ளுக்குள் ஒருவித உதறல் அதற்கு இருந்து கொண்டு தான் இருந்தது. அதனால் தான் நியுயோர்க்கிற்கு அரசின் பிரதிநிதிகளை அனுப்பி நிபுணர்கள் குழுவை சந்திக்க வைத்தது. இந்தச் சந்திப்பு பற்றி தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது அதுபற்றிப் பேசாமல் இருந்தது அரசாங்கம். ஆனால் கடந்தவாரம் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், முதல் முறையாக இந்தச் சந்திப்பு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மையை அவர் இப்போது தான் போட்டு உடைத்துள்ளார்.

இதிலிருந்து அரசாங்கம் முன்னர் கூறிய இறுக்கமான நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.தமது அமைச்சின் அதிகாரிகள் ஐ.நா நிபுணர்கள் குழுவை சந்தித்துப் பேசியதாக கூறியுள்ள அமைச்சர் பீரிஸ், அவர்கள் எதற்காக சந்தித்தார்கள், என்ன பேசினார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஆனால் இந்தச் சந்திப்பானது,இலங்கை அரசாங்கத்தின் பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை. ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை அரசுக்குப் பாதகமான முறையில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்பதை அணுமாணிக்க கூடியதாக உள்ளது. அதேவேளை, ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரை எல்லோருமே இந்த நிபுணர்கள் குழு அரச மற்றும் இராணுவ அதிகாரிகளைக் குற்றம் சுமத்தலாம் என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனால் இந்த அறிக்கையை அரசாங்கம் மிகுந்த அச்சத்தோடு தான் எதிர்பார்த்துள்ளது. ஆனால் அதைப் பெரும்பாலும் வெளிக்காட்டிக் கொள்வதையும் தவிர்க்கிறது.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதற்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையலாம். ஏற்கனவே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போதும் உண்ணாவிரதம், பேரணி என்று பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.  அதைவிடத் தீவிரமான போராட்டங்கள் நடத்தி அரசுக்கான மக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆனால், இத்தகைய போராட்டங்களின் மூலம் ஐ.நாவின் நடவடிக்கைகளைத் தடுத்து விட முடியுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.

இலங்கை அரசாங்கம் எத்தனை எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை அமைத்து விசாரணை நடத்தும் முடிவைக் கைவிட்டுப் பின்வாங்கவில்லை. அவ்வப்போது அவர் மென்போக்குடன் நடந்து கொண்டாலும் கூட, அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  அவரது முடிவை மாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் அது இலங்கைக்கு எதிரான பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதேவேளை, இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதும் அதை பான் கீ மூன் வெளிப்படுத்துவாரா, இல்லையா என்ற கேள்வி இப்போது முதன்மை பெற்றுள்ளது.அவர் அதை வெளிப்படுத்தலாம், அல்லது அறிக்கை ஒன்றின் மூலம் அதன் முக்கிய பரிந்துரைகளை வெளிப்படுத்தலாம் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு அந்தப் பரிந்துரைகளை நிபுணர்கள் குழுவைக் கொண்டே செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தலாம் என்கிறது. அதேவேளை, இந்த அறிக்கை மீதான நடவடிக்கை ஆரம்பிக்கும் வரை அவர் வெளிப்படுத்த மாட்டார் என்கிறது வேறொரு தரப்பு. இப்படியாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும் இறுதி முடிவு என்பது பான் கீ மூனின் கையில் தான் உள்ளது.

ஆனால், அவர் இந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதற்கான அதிகாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை. ஒன்றில் ஐ.நா. பாதுகாப்புச்சபை ஊடாக எதையாவது செய்ய வேண்டும் அல்லது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஊடாக செய்ய வேண்டும்.இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஜுன் மாத அமர்வில் பான் கீ மூன் சமர்ப்பிக்கலாம் என்றும் அதன் பின்னர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.இதைச் செய்யாமல் பான் கீ மூன் வேறு எதையும் செய்ய முடியாது. அப்படிச் செய்யாது போனால்; இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே மேல் நடவடிக்கை என்பது நிச்சயம் இடம்பெறவே செய்யும்.

மனிதஉரிமைகள் பேரவை மற்றும், பாதுகாப்புச்சபை ஆகியவற்றின் கவனத்துக்கு இந்த அறிக்கை போனால், அடுத்து அதன் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதெல்லாம் இலங்கை அரசுக்கு அதிகளவில் நெருக்கடியைக் கொடுக்கும். சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுப்பதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பவும் இல்லை- விரும்பப் போவதும் இல்லை. இந்தநிலையில் அரசுக்கான சர்வதேச அழுத்தங்கள் தீவிரமடைவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அண்மையில் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையும், ஆதாரமாக முன்வைத்த வீடியோ இணைப்பையும் அரசாங்கமும், படைத்தரப்பும் நிராகரித்திருந்தாலும், சர்வதேச விசாரணைகளின் போது இவற்றையெல்லாம் பொய் என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட முடியாது. அதை நிரூபிக்க வேண்டும். இலங்கை அரசிடம் இது பொய் என்று நிரூபிப்பதற்கு உள்ள தொழில்நுட்பத்தை விட, மிகவும் உயர்வான தொழில்நுட்பங்கள் சர்வதேச விசாரணையாளர்களிடம் இருக்கலாம். இதுபோன்ற பல ஆதாரங்களை நிபுணர்கள் குழு பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே தான் அரசாங்கம் தமக்குச் சாதகமற்ற அறிக்கையை எதிர்பார்க்கிறது போலுள்ளது.

அடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட இலங்கை தொடர்பான மனிதஉரிமை அறிக்கை அரசாங்கத்தை சாடும் வகையில் அமைந்துள்ளது 40 பக்கங்களில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, முற்றிலும் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டும் வகையிலும், அழுத்தம் கொடுக்கும் வகையிலும் அமைந்த ஒன்று.

முன்னர் இப்படியான அறிக்கைகளில் விடுதலைப் புலிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெறும். இப்போது புலிகள் இல்லாதுள்ள நிலையில், அரசதரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம். இவை மட்டுமன்றி கடந்தவாரம் கொழும்பு வரவிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கின் பயணத்தையும் அரசாங்கம் பிற்போட்டுள்ளது. அவர் இலங்கை வருவதற்குத் தெரிவு செய்த காலம் மிகவும் முக்கியமானது.அவரது கடந்தவாரப் பயணம் பிற்போடப்பட்டாலும் இந்த வாரமோ அடுத்த வாரமோ அவர் கடுமையானதொரு செய்தியுடன் வரப் போவது உறுதி. இவையெல்லாம் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இறுகி வருவதற்கான அறிகுறிகளாகவே தென்படுகின்றன. வரும் நாட்களில் இந்த அழுத்தங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் எப்படித் தப்பித்துக் கொள்ளப் போகிறது என்பது தான் இப்போது அதிகமாகியுள்ள எதிர்பார்ப்பு.

http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/19618-2011-04-12-07-09-34.html

  • தொடங்கியவர்

நிபுணர்கள் குழுவின் அறிக்கை பான் கீ மூனிடம் இன்று கையளிப்பு! கொழும்புக்கும் ஒப்படைக்கப்படுமா

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று (12.04.11) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இந் நிபுணர்கள் குழுவின் அறிக்கை உடனடியாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படமாட்டாது எனவும் சிலவேளைகளில் இவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்படாமல் விடுபட்டுப் போகலாம் எனவும் இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிடுவதற்கு முன் தம்மிடம் கையளிக்கும்படி சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பான் கீ மூனை நியூயோர்க்கில் சந்தித்த போது கோரிக்கை விடுத்திருந்ததாக் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந் நிலையில், கொழும்பின் போரிக்கைக்கு ஏற்ப இவ்வறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையிக்கப்படுமா என்பது தொடர்பில் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வன்னிப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதட பொறிமுறையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தாவிட்டால், அது சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள கொழும்பை நிர்ப்பந்திக்கும் என அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்திருந்த நிலையில் இவ்வறிக்கை பான் கீ மூனிடம் இன்று கையளிக்கப்படுகின்றது.அதேவேளை. இவ்வறிக்கையில் சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு பாதகமான கருத்துக்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பான் கீ மூனுக்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டங்களை சிங்கள பௌத்த தேசியவாதிகள் மேற்கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், வன்னி இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைய முன்வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹன்ன மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

http://www.ponguthamil.org/news/contentnews.asp?sectionid=1&contentid={A6F614B3-5B9D-4492-B0EE-69A4AAC00BCA}

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அண்ணாவின் ஆய்வு ஒரு ஆறுதலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.இன்னர் சிற்றி பிரசைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே பான் கி மூனின் ஒரு பக்கச் சார்பைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்துள்ளனர்.குறிப்பாக மத்தியூ லீ அவர்களின் பங்களிப்பு நன்றியுடன் எம்மால் நினைவு கூறப் பட வேண்டிய ஒன்று.இவ்வளவு தூரம் இந்தப் பிரச்சனையக் கொண்டு வந்த புலம் பெயர் உறவுகள் இன்னும் சிறிது தூரம் செல்லும் வரை தங்கள் 'உள் வீட்டுச் சண்டைகளை' ஒரு புறம் வைத்து விட்டு எங்களோடு கை கோர்ப்பார்கள் என்று நம்புவோமாக!!! என்ன இருந்தாலும் அவர்களும் நமது இரத்த உறவுகள்!!!

பதிவுக்கு நன்றிகள் அண்ணா!!!

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கையை தமிழர் தரப்பில் யார் கேட்டு வாங்கப் போகினம். அந்த அறிக்கையின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழர் தரப்பு யார் யாரை சந்திக்கப் போகிறது.. அழுத்தம் கொடுக்கப் போகிறது.. என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது.

அல்லது அறிக்கை பாங்கிமூனுக்கும்.. கொழும்புக்கும் அனுப்பப் படுவதை எண்ணி காலத்தை கடத்திக் கொண்டு இருக்கப் போகிறார்களா. சிங்களவன் என்ன எதிர் நடவடிக்கை எடுக்கப் போறான்.. என்று காத்திருந்து அதன் பின்னர் தான்.. இவர்கள் தொடங்கப் போகிறார்கள் போல. எல்லாம் முடிஞ்சு சிங்களவன் செய்ய வேண்டியதை செய்துவிட்டு பிரமிப்போடு நிமிரும் போதுதான் எம்மவர்களை செயற்படுவார்கள். பின்னர் அதுவும் தோல்வியில் முடிஞ்சுது என்று ஆளை ஆள் குற்றம் சாட்டி இன்னும் நாலு குழு அமைச்சு அடிபடுவார்கள். யார் செய்தது பிழை.. என்ன செய்ய வேணும் எதிர்காலத்தில். எனி ஒன்றும் புடுங்க முடியாது எப்படி சிங்களவனுக்கு ஒத்துழைப்பது என்று கூடி ஆராய்ந்தாலும் ஆராய்வார்கள் போல இருக்கே..! :(:unsure::o

  • கருத்துக்கள உறவுகள்

:( எல்லாம் சரி, இங்கு இந்தியா இனி செய்யப்போகும் நகர்வை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை? ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் இரு நாடுகளால் கொண்டுவரப்பட்ட இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகள் இந்திய தலையீட்டினால் புறம் தள்ளப்பட்டது, ஐ.நாவுக்கான இந்தியத் தூதுவர் தானே முன்னின்று இந்த பிரேரணைக்கு எதிரான பிரச்சாரத்தை அங்கத்துவ நாடுகளுக்கிடையே செய்ததும் நினைவிருக்கிறதா? எந்த காரணத்தைக் கொண்டு இந்தியா இம்முறையும் ஏதும் செய்யாது என்று முடிவிற்கு வந்தீர்கள்??

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் இந்தியா நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறதென்பது யாவரும் அறிந்ததுதான். இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணைகள் வெற்றிபெறும் பட்சத்தில் அது தன்னுடன் இந்தியாவையும் சேர்த்துக்கொள்ளாது என்று எப்படி நம்புவது ?? அப்படி இலங்கை இந்தியாவை நோக்கி விரலை நீட்டும்போது இந்தியாவின் "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு" என்கிற இமேஜ் என்னாவது ? ஆகவே இந்தியா மீளவும் தனது புற நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம். இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதன் மூலம் அது தன்னையும் பாதுகாத்துக்கொள்ள முனையலாம்.

சரி, இந்தியாவை விடுவோம், மேற்குலகு என்ன சட்டங்களை ஐ.நாவில் கொண்டுவந்தாலும், சரி, பிழை பார்க்காது அதை எதிர்த்தே தீருவது என்று கங்கணம் கட்டி நிற்கும் சீனாவும், ரஷ்ஷியாவும் இந்த விடயத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?? அதுமட்டுமல்லாமல் இவ்விரு நாடுகளும் வன்னி இனவழிப்புப் போரில் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் விட, பான் கீன் மூன், சதீஷ் நம்பியார் போன்ற ஐ.நா .அதிகாரிகளின் வன்னிப்போரின்போதான் நடத்தைகள் சந்தேகத்துக்குரியவை. ஆகவே அவர்கள் கூட இந்த போர்க்குற்ற விசாரணைகளில் எந்தளவிற்கு இதய சுத்தியுடன் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியே??

அமெரிக்கா போன்ற ஒரு பலமான நாடு முன்னின்று இதைச் செய்தால் ஒழிய ஐ.நா வினால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடுமி எப்போதும் தமிழர் கையில் இருக்கவேண்டும்.

இந்த அறிக்கையை ஊத்தி பெரிதாக்கி ஸ்ரீ லங்காவின் வெளிநாட்டு கூலிகளுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். தம்மை ஸ்ரீ லங்கன் என்று தமிழீழ ஆதரவாளர்களை பயங்கரவாதிகள் என்று கூவி திரியும் தமிழ் கைத்தடிகளையும் வெளிநாட்டு உளவுத்துறையிடம் போர் குற்றவாளிகள் என்று காட்டிகொடுக்கலாம்.

ஹை கொமிசனில் ஹாயா குந்தி இருந்து எங்களுக்கு எதிராக சதி செய்வோரை ஸ்ரீ லங்காவிற்கு விரட்டி அடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிக்கையை தமிழர் தரப்பில் யார் கேட்டு வாங்கப் போகினம். அந்த அறிக்கையின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழர் தரப்பு யார் யாரை சந்திக்கப் போகிறது.. அழுத்தம் கொடுக்கப் போகிறது.. என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது.

அல்லது அறிக்கை பாங்கிமூனுக்கும்.. கொழும்புக்கும் அனுப்பப் படுவதை எண்ணி காலத்தை கடத்திக் கொண்டு இருக்கப் போகிறார்களா. சிங்களவன் என்ன எதிர் நடவடிக்கை எடுக்கப் போறான்.. என்று காத்திருந்து அதன் பின்னர் தான்.. இவர்கள் தொடங்கப் போகிறார்கள் போல. எல்லாம் முடிஞ்சு சிங்களவன் செய்ய வேண்டியதை செய்துவிட்டு பிரமிப்போடு நிமிரும் போதுதான் எம்மவர்களை செயற்படுவார்கள். பின்னர் அதுவும் தோல்வியில் முடிஞ்சுது என்று ஆளை ஆள் குற்றம் சாட்டி இன்னும் நாலு குழு அமைச்சு அடிபடுவார்கள். யார் செய்தது பிழை.. என்ன செய்ய வேணும் எதிர்காலத்தில். எனி ஒன்றும் புடுங்க முடியாது எப்படி சிங்களவனுக்கு ஒத்துழைப்பது என்று கூடி ஆராய்ந்தாலும் ஆராய்வார்கள் போல இருக்கே..! :(:unsure::o

சகோதரம் நெடுக்ஸ், இப்படி கேள்வி கேட்டு எங்களது குழுக்களை உசுப்பிவிடாதீர்கள்.

இந்த அறிக்கையை தமிழ் ஈழத்தின் விடிவிற்காக போராடும் யாரும் கையில் எடுத்து அழுத்தம் கொடுக்கலாம். இந்தியாவில் நாம் தமிழர் செய்யலாம், பிரித்தானியாவில் தமிழர் பேரவை செய்யலாம், கனடாவில் நாடுகடந்த அரசாங்கம் செய்யாலாம், அமெரிக்காவில் டாக் செய்யலாம்.

இப்போது நாம் குழு அமைப்பதில் செலுத்தும் கவனத்தை தமிழ் ஈழத்தில் செலுத்தவேண்டும்.

அண்ணாவிற்கு பின் ஒருத்தரையும் நம்பி தனியாக இந்த தார்மீக பொறுப்பை கொடுக்கமுடியாது.

நாம் எல்லோரும் "தமிழ் ஈழம்" என்ற கொள்கைக்கு கீழ் முதல் கூடி பின் எமது செயல் குழுக்களின் கீழ் சேரவேண்டும்.

:( எல்லாம் சரி, இங்கு இந்தியா இனி செய்யப்போகும் நகர்வை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை? ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் இரு நாடுகளால் கொண்டுவரப்பட்ட இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகள் இந்திய தலையீட்டினால் புறம் தள்ளப்பட்டது, ஐ.நாவுக்கான இந்தியத் தூதுவர் தானே முன்னின்று இந்த பிரேரணைக்கு எதிரான பிரச்சாரத்தை அங்கத்துவ நாடுகளுக்கிடையே செய்ததும் நினைவிருக்கிறதா? எந்த காரணத்தைக் கொண்டு இந்தியா இம்முறையும் ஏதும் செய்யாது என்று முடிவிற்கு வந்தீர்கள்??

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் இந்தியா நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறதென்பது யாவரும் அறிந்ததுதான். இலங்கைக்கெதிரான போர்க்குற்ற விசாரணைகள் வெற்றிபெறும் பட்சத்தில் அது தன்னுடன் இந்தியாவையும் சேர்த்துக்கொள்ளாது என்று எப்படி நம்புவது ?? அப்படி இலங்கை இந்தியாவை நோக்கி விரலை நீட்டும்போது இந்தியாவின் "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு" என்கிற இமேஜ் என்னாவது ? ஆகவே இந்தியா மீளவும் தனது புற நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம். இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதன் மூலம் அது தன்னையும் பாதுகாத்துக்கொள்ள முனையலாம்.

சரி, இந்தியாவை விடுவோம், மேற்குலகு என்ன சட்டங்களை ஐ.நாவில் கொண்டுவந்தாலும், சரி, பிழை பார்க்காது அதை எதிர்த்தே தீருவது என்று கங்கணம் கட்டி நிற்கும் சீனாவும், ரஷ்ஷியாவும் இந்த விடயத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?? அதுமட்டுமல்லாமல் இவ்விரு நாடுகளும் வன்னி இனவழிப்புப் போரில் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் விட, பான் கீன் மூன், சதீஷ் நம்பியார் போன்ற ஐ.நா .அதிகாரிகளின் வன்னிப்போரின்போதான் நடத்தைகள் சந்தேகத்துக்குரியவை. ஆகவே அவர்கள் கூட இந்த போர்க்குற்ற விசாரணைகளில் எந்தளவிற்கு இதய சுத்தியுடன் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியே??

அமெரிக்கா போன்ற ஒரு பலமான நாடு முன்னின்று இதைச் செய்தால் ஒழிய ஐ.நா வினால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியாது.

நீங்கள் மேல சொன்ன ஆக்களுக்கு வேலை இருக்காது, ஏன் எனில் அந்த வேலையை தமிழர்பேரவையும், நாடுகடந்த அரசின் முரண்பாடுகள் செய்யும்.

லிபியா மீது தாக்குதல் செய்வதுக்கு ஜ நா வில் கொண்டு வந்த பிரேரனையை இந்த நாடுகள் ஆதரிக்காவிட்டாலும் வீட்டோ அதிகாரத்தை எதிர்க்கவில்லை. தெரியுமா?

இதே ஈராக் மீது அமெரிக்க கொண்டு வந்த பிரேரனைய பிரான்ஸ் எதிர்க்க போகிறது என்பதும் அமெரிக்கா ஜ நாவில் பிரேரனை கொண்டுவராமலே தாக்குதல் செய்தது.

இலங்கை விடயம் அந்த சூழ்நிலைக்கு வராமலே விலை போகும் சாத்தியம் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.