Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர் குழு அறிக்கையினை ஏற்கமுடியாது; ஐ. நா விற்கு உத்தியோகபூர்வ பதில்

Featured Replies

வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினை வைத்துக் கொண்டு இலங்கை மீது எதுவிதமான நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அவ்வறிக்கையானது தவறானது எனவும் ஏற்றுக்கொள் முடியாதது எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சற்றுமுன்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளார்.

My link

தமிழர் தரப்பை பொறுத்தவரையில் இது ஒரு நல்ல செய்தி என பார்க்கப்படலாம்.

அடுத்து இந்த வரம் செல்லும் றொபேட் பிளேக்கும் இதற்கு ஏற்ப கருத்துரையாட வேண்டிவரும்.

இச் செய்தியை வெளிநாட்டு ஊடகங்களில் காண முடியவில்லை.

AFP யில் இப்படிப் போட்டுள்ளார்கள்.

Sri Lanka asks UN not to publish war crimes report

Sri Lanka asked the United Nations on Thursday not to publish a forthcoming report on alleged war crimes during the island's ethnic, saying it could set back reconciliation efforts.

Foreign Minister G. L. Peiris said UN Secretary General Ban Ki-moon should not release the report, compiled by a panel of experts who studied alleged rights abuses and crimes against humanity during the war which ended in 2009.

"The publication of this report will cause irreparable damage to the reconciliation efforts of Sri Lanka. It will damage the UN system too," Peiris told reporters in Colombo.

"This UN report is preposterous."

இது உண்மையோ பொய்யோ தெரியவில்லை ,ஆனால் தயவுசெய்து கடைசிக்கட்ட யுத்தத்தின் போது ஏட்டிக்கு போட்டியாக தமிழ் ஊடகங்கள் தங்கள் நலனுக்காக செய்தி போட்டது போல் இம்முறையும் செய்யவேண்டாம், கொஞ்சம் இணைய வடிவமைப்பு தெரிந்தால் யார் வேண்டுமானாலும் ஊடகவியளாளராக மாறிவிடலாம் என்ற நிலை மாற வேண்டும்

படங்கள்:

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1691:2011-04-21-17-22-17&catid=1:latest-news&Itemid=18

ஐ.நா. நிபுணர் குழுவின் தவறான அறிக்கையை வைத்துக் கொண்டு இலங்கை மீது எவ்வித நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.இதனை வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையானது தவறானது எனவும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வரும் இலங்கையைப் பாதிக்கும் வகையில் ஐ.நா. நிபுணர் குழு நடந்துகொள்ளக்கூடாதென்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயற்படாது இருக்க வேண்டும்.இதேவேளை ஐ.நா.வின் செயற்பாடுகள், கடமைகள் குறித்து எமக்கு தெளிவில்லை. இவ்வாணைக்குழுவை பொறுத்த வரையில் ஆலோசனை கூறும் ஆணைக்குழுவாக செயற்பட வேண்டுமே தவிர விமர்சிக்கும் குழுவாக இருக்கக் கூடாது.

ஒரு விடயத்தை ஆராய்ந்து முன்வைப்பதற்கு முன் அதன் உண்மைத் தன்மைகளை ஆராய்வதோடு அதனால் ஏற்படவுள்ள பாதிப்புகள் எவை என ஆராய்ந்து முன்வைக்க வேண்டும். ஆனால் ஐ.நா. நிபுணர் குழுவின் செயற்பாடுகளில் இவை முற்றாக தவிர்க்கப்பட்டு இவற்றில் ஒன்றாவது கடைப்பிடிக்கப்படவில்லை.

எமது நாட்டின் வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தலைமையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கடந்த காலத்தைப் போன்று இனபேதம் இன்றி ஒரே இன மக்களாக வாழும் சமூகத்தையை நாம் உருவாக்கியுள்ளாம்.

ஆனால் ஐ.நா வினால் முன்வைக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையினால் ஏற்பட்டுள்ள அனுகூலம் என்ன. இதனைக் கருத்திற் கொண்டே அரசாங்கத்தினால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதனை அனைத்து உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன. மேற்கு நாடுகள் இதற்கு வாழ்த்து தெரிவித்தன. நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மே மாதம் 15 ஆம் திகதி வரை இடம்பெறும்.

வடக்கு, கிழக்கு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வாணைக்குழு தனது செயற்பாடுகளை நடத்தி வருகின்றது. அதற்கு முன் நாம் எவ்விடயத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் வெளியிட முடியாது. ஆனால் ஐ.நா.வின் நிபுணர் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை இதில் இந்த அடிப்படையும் கொண்டு அமைய வில்லை. இது முற்றிலும் பிழையானதாகும்.

எனவே இந்த அறிக்கையை வெளியிடுவது முற்றிலும் தவறான ஒன்றாகும். இதனை விடுத்து இலங்கையின் கௌரவத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஐ.நா உதவ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஐ.நா வினால் முன்வைக்கப்பட்டுள்ள இவ்வறிக்கையினால் ஏற்பட்டுள்ள அனுகூலம் என்ன. இதனைக் கருத்திற் கொண்டே அரசாங்கத்தினால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதனை அனைத்து உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன. மேற்கு நாடுகள் இதற்கு வாழ்த்து தெரிவித்தன. நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் 3050 மே மாதம் 15 ஆம் திகதி வரை இடம்பெறும்.

:( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.