Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்ட மக்களின் தொகையை மறைத்தது ஏன்?

Featured Replies

கொல்லப்பட்ட மக்களின் தொகையை மறைத்தது ஏன்? ஐ.நா செயலருடன் இன்னர் சிற்றி பிரஸ் நேரடி மோதல்

2009 ம் ஆண்டு போரின் இறுதிக்கட்டம் நெருக்கடியானதாகவும் யாருடைய பாதுகாப்பிற்கும் உத்திரவாதமற்றதாகவுமே இருந்தது. இந்நிலையில் இலங்கையில் பணிபுரிந்த ஐ.நா அதிகாரிகளின் பாதுகாப்பை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என சிறிலங்கா அரசாங்கம் எமக்கு அறிவித்திருந்தது. சிறிலங்கா அரசின் இந்த அறிவிப்பினால் எமது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இவ்வாறு ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான்.கி.மூன் இன்னர் சிற்றி பிரஸ் இற்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் அரச படைகளின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றத் தவறியமை மற்றும் இறந்த மக்களின் சரியான எண்ணிக்கையினை வெளியிடாமல் மறைத்தமை தொடர்பாக ஐ.நா மீது வைக்கப்பட்டுவரும் விமர்சனம் குறித்து பான் கி மூனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:

அப்படியாயின், சிறிலங்காவில் பணிபுரிந்த ஐ.நா அதிகாரிகள் மீது ராஜபக்ச துப்பாக்கியை குறிபார்த்ததால் போரில் இறந்த பொதுமக்களின் உண்மையான தொகையை வெளியிடாது ஐ.நா மௌனம் காத்ததா? என இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

அக்காலகட்டத்தில், மனிதநேய விவகாரங்களுக்கான ஐ.நா அலுவலக அதிகாரிகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான உள்ளக விவரங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அதனை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்ட பிறகும் நியூயார்க்கில் இருக்கும் ஐ.நா அலுவலகம் அதனை உறுதிப்படுத்த மறுத்துவிட்டதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

வெள்ளைக் கொடி விவகாரத்தில் விஜய் நம்பியாரின் பங்கு தொடர்பாகவும் இன்னர் சிற்றி பிரஸ் ஐ.நா செயலாளர் நாயகத்திடம் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

இக் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்த பான் கி மூன், இலங்கையில் இக்காலப்பகுதியில் ஐ.நா மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து தனது முன்னணி ஆலோசகர்களுடன் தான் ஆலோசிக்க உள்ளதாகப் பதிலளித்துள்ளார். இவர் தனது முன்னணி ஆலோசகர்களாகக் குறிப்பிடுபவர்களில் சர்ச்சைக்குரிய விஜய் நம்பியாரும் ஒருவர் என இன்னர் சிற்றி பிரஸ் எழுதியுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள், சிறிலங்கா அரசின் சம்மதத்துடனோ அன்றி ஐ.நா உறுப்பு நாடுகளின் முன்னெடுப்புடனோ மட்டுமே மேற்கொள்ள முடியும் என பான் கி மூன் தெரிவித்திருந்தமை குறித்தும் 'இத்தகைய அறிவுரையை தங்களுக்கு வழங்கியது யார்? என இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இக் கேள்விக்குப் பதிலளித்த பான் கீ மூன், 'இதுபோன்ற சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழுவினை வருங்காலத்தில் அமைக்க வேண்டுமெனில் அதற்கு ஐ.நா உறுப்பு நாடுகளின் ஆணையோ அல்லது இலங்கையின் சம்மதமோ இருப்பதுதான் முறையானதும் சரியானதும் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் பாதுகாப்பு சபை இப்பிரச்சனையை கையிலெடுத்து விசாரணைக்கான வாக்கெடுப்பு நடத்துமா எனக் கேட்கப்பட்டதற்கு, அனைத்து நாடுகளிடமும் ஐ.நாவின் அறிக்கை இருக்கிறது என்று மட்டும் கூறிய பான்.கி.மூன் அவர்களிடம் இதுபற்றி கேட்கவில்லை என்பதனை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார். ஐ.நா நிபுணர் குழு இலங்கைக்கு செல்லமுடியாத சூழல் நிலவியபோழுதும் நிபுணர் குழு இலங்கை செல்ல வேண்டும் என்று பான் கீ மூன் தொடர்ந்து அறிக்கை விட்டதன் பின்னணி பற்றி கேட்கப்பட்ட பொழுது, 'இலங்கையைத் தான் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் ஆனாலும் ஐநா நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும் நிபுணர் குழுவுடன் சிறிலங்காவின் சட்ட மா அதிபர் மொகான் பிரீஸ் இரகசிய சந்திப்பினை மேற்கொண்டதை அவர் ஒத்துக் கொண்டார்.

இச்சந்திப்பையே முதலில் ஐ.நா மறுத்ததாக கூறியுள்ள இன்னர் சிட்டி பிரஸ், ஐ.நா வின் இத்தகைய நெறிமுறையற்ற நடவடிக்கைகள் எதனை வெளிப்படுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. எத்தகைய துப்பாக்கியைக் காட்டி ராசபக்சே ஐ.நாவை மிரட்டி வருகிறார் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={CDEC2D7D-AC8F-41B1-BF57-D9DC2E6427A7}

  • தொடங்கியவர்

to : Matthew.Lee@innercitypress.com

Subject: Sri Lanka

Dear Mr. Matthew Lee,

Senior Reporter

I cannot thank enough you for your tireless work on holding UN accountable on its mandate. In particular on Sri Lanka, you have been very persistent. This is a noble service for thousands of hapless Tamils who continue to seek justice.

If I ever wished anything I would have made you a Noble prize winner for peace!

Keep up the great work.

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அகோதா. hapless ஐ helpless என மாற்றி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்,

அகோதா எழுதியது சரியே hapless- என்றால் "துரதிஷ்ட்டவசமாக அல்லது அதிஷ்ட்டமற்ற" என்று பொருள் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லியவாறுhelpless - என்று வந்தாலும் அது தவறில்லை.

:)

Edited by ragunathan

.... இன்ரசிற்றி பிரஷ் ...

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் ... போர்க்குற்றங்களை சர்வதேச கவனத்துக்கு கொணர சனல்4, இன்ரசிற்றி பிரஷ் எடுத்த முயற்சிகள் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை!! அதில் இன்ரசிற்றி பிரஷ் ஓர் சிறிய ஊடகம்!!! அதனோடு அமெரிக்காவில் இருக்கும் எம்மவர்கள் ஓரிருவர் தொடர்பில்/முயற்சியினால்தான் அந்நிறுவனம் உண்மைகள் வெளிவர பாடுபடுகிறது. ... அச்சிறிய ஊடகத்துக்கு எம்மாலான சிறு உதவிகள் ... எமக்கு பெரிய பலன்களை தரும்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.