Jump to content

பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடடா மறுபடி தொடங்கியிருக்கா. (இந்தப்பட்டிமன்றம் என்ன ஸ்பீட்ல போகுது என்று தெரியல) சரி இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற அணிக்காக கருத்தை வைச்சிருக்கும் அருவியின் விவாதத்தைப்பார்ப்போம்.

தனக்கு முன் வாதாடிச்சென்ற எதிரணி நண்பர் குழப்பவாதியாக மாறிவிட்டார் என்கிறார். தலைப்பைத்தொட்டுச்செல்லவில

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப்

பையல்என்ற போதே பரிந்துதெடுத்துச் - செய்யஇரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்து..

இப்படித்தான் எமது வாழ்க்கை ஆரம்பிக்கின்றது என்று பட்டினத்தடிகள் பாடினார். எங்கெங்கோ பிறந்து, எங்கெங்கோ அலைந்து, தமக்கென ஒரு வாழ்வை அமைத்து, புலத்திலே குழந்தைகளைப் பெற்று வளர்க்கும்போது எத்தனையோ சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தக் கணினி உலகிலே எம்மிளைஞர்கள் இந்த இணைய ஊடகத்தினால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிந்துபோகின்றார்களா? என்ற இந்த பட்டிமன்றத்திலே இதுவரை பத்துப்பேர் தமது கருத்துக்களை வைத்துள்ளனர். தமிழினியும் தனது கருத்துக்களை அவ்வப்போது அழகாக வைத்துள்ளார். கணினியோடு அமர நேரமின்மையால் அவற்றைப் பிரதி பண்ணியபோது அவை சுமார் 58 பக்கங்களை எட்டின. அவற்றிலிருந்து சிறிதளவாக என் கருத்தக்களைக் கூறுகின்றேன்.

சினிமாப்படங்ளையும், பாடல்களையும் சி.டி யில் அடிப்பதையும், சினிமா நடிக நடிகைகளின் நெளிகோல படங்களை பக்கம்பக்கமாக அலசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் திரும்பத்திரும்ப வைக்கப்பட்டன. இளைஞர்களுக்கு இணையம் கல்விகற்க வாய்ப்பளிக்கின்றது என்ற வாதமும் வைக்கப்பட்டது.

எம்மை தங்கத்தாமரையில் ஏற்றிவைத்து தான் பித்தளைத் தாமரையில் வீற்றிருந்து தனது கருத்துக்களை அழகாக மொழிந்தார் (சிறுபிள்ளை) அனித்தா. தமிங்கிலத்தில் உரையாடுபவர்கள் புலத்தில் மட்டுமல்ல தமது தாய்நாடுகளான இந்தியா, சிங்கப்புூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் வருகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். "இணையம் என்பதே உலககைச்சுருக்கி திரையில் விரிப்பது" என்று அழகாகக் கூறினார். யாகூ அரட்டை அறைகளில் நடக்கும் அவது}றுகளையும், அறிவுபுூர்வமான விடயங்களையும் இருபகுதியினரும் சுட்டிக்காட்டினர்.

பின்னர்வந்த பிரியசகி தனக்கே உரித்தான புன்சிரிப்புடன் பெற்றோரைக் குறைசொல்லவேண்டாம் என்றார். வேற்றுமொழித் தனங்களைப் பார்ப்பதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டினார். தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் நாட்டுப்பற்றுள்ள விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்றார். இறுதியாக சுனாமியை உதாரணம் காட்டிச்சென்றார்.

அடுத்துவந்த விஷ்ணு மனக்கட்டுப்பாட்டின் மகிமையை வியந்தார்.

எத்தனையோ சாதனைகளைப் படைக்க வழிசமைக்கும் "யத்தையும்" சேர்த்து "கொல்வது" எவ்வகையில் பொருத்தமாகும்? என்று கேட்டார். இங்கே தமிழைக்கொலை செய்ததனால் அவருடைய இந்தக் கருத்தும் கொலைசெய்யப்பட்டுவிட்டன. (தமிழைத் தவறாக எழுதவேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தேன்) ஆனால் பின்னர் சொல்லிய நல்ல கருத்துக்களால் தமது அணியை வலுப்பெறச்செய்தார்.

முகத்தார் மிக்க மரியாதையாக நீதி தவறாத பாண்டிய மன்னனுக்கு எம்மை ஒப்பிட்டார். உடனேயே நீதி தவறியதால் என்ன நடந்தது நினைவிருக்கும் என்று மிரட்டுவதுபோல்… மிரட்டுவதுபோல் அல்ல உண்மையாகவே மிரட்டினார். அவருக்கு நான் கூறுவது ஒன்றுதான் "பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது." தங்கள் அணியில் அனுபவசாலிகள் இருப்பதாயும், தலையிடி வாராமல் இருக்க உடற்பயிற்சி செய்யும்படியும், பெண்களின் சுதந்திரம் பற்றியும், இந்தியாவின் இணையத்தளம் பற்றியும், நண்பர் வீட்டில் 15 வயதுச்சிறுவனால் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் உதாரணம் காட்டி தனது அணிக்கு வலுச்சேர்க்கும் கருத்துக்களை ஆணித்தரமாக வைத்தார். ஒரு சந்தேகம், இவரின் வதிவிடமான சுன்னாகச் சந்தை பாலைவன நாட்டிலா இருக்கிறது?

சினேகிதி வந்தார் சுனாமியின் போதும், இனி வருங்காலங்களிலும் இளைஞர்களின் பங்களிப்புக்களையும், இணையத்தால் பெறும் நன்மைகளையும், ஆபாசக்காட்சிகளால் ஏற்படும் அவலங்களையும் விளக்கியதோடு, முன்னர் வந்தவர்களின் கருத்துக்களுக்கும் மற்றவர்களைப்போல் விளக்கமும் தந்தார்.

இவரையடுத்து வியாசன் வந்தார். கைகளில் வயலினைப் பிடித்தபடியே தன் கருத்துக்களையும் முன்வைத்தார். நடுவர்களாகிய எம்மை தன் இதயத்தாமரையில் வைத்திருப்பதாகக் கூறி தன் வறுமை நிலையினை சொல்லாமல் சொன்னார். வியாசன்! இதயம் விலைமதிப்பற்றது அல்லவா? புனைபெயரில் வருபவர்களைப்பற்றிக் குறிப்பிட்டார். "லங்காசிறி" இணையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு வேறும் பலவற்றையும் உதாரணம் காட்டிச்சென்றார். இறுதியில் தங்கள் கரும்புலிகள் தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்றும் பின்னால் வரும் பொங்கியெழும் மக்கள் படைக்கு வழிவிடுவதாகக் கூறிச்சென்றார்.

எல்லோருக்கும் கூறுவது ஒன்றே ஒன்றுதான் நடுவர்களாகிய நாங்கள் பகட்டிற்கு மயங்கவோ, பயமுறுத்தல்களுக்குப் பணியவோ மாட்டோம் என்பதுதான்.

பட்டிமன்றத்தை அலங்கரிக்க அடுத்து வந்தார் அஜீவன். கணினிகளைப் பற்றிய விளக்கத்துடன் தெரியாத சில விடயங்களையும் தெரியப்படுத்தினார். பலவற்றையும் பெரிதான எழுத்தில் எழுதியும் தந்தார். இறுதியில் இணையத்தைவிட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில் இணைய ஊடகமே உலகத்தை ஆழும். என்று அழகாகக்கூறிச்சென்றார்.

அடுத்து வந்த அருவி அசைந்துகொண்டிருக்கும் சிறுவனின் வாயைப்போல அழகாகத்தன் கருத்துக்களை முன்மொழிந்தார். எதிரணியினர் தலைப்பை மறந்து ஏதேதோ வெல்லாம் கூறுவதாகக்கூறினார். கணினியில் திருட்டு நடப்பதாகக்கூறினார். "பட்டிமன்றம் தொடர்வோமா?" என்ற பக்கத்தினையும் தொட்டுக்காட்டித் தன் கருத்தக்களை முன்வைத்தார்.

அனைவரது கருத்துக்களுக்கும் தமிழினி அழகாகப் பதில் எழுதியிருந்தார். களத்திலே வந்து கருத்துக்களை எழுதமுடியாமல் ஆனபோதிலும் எல்லாவற்றையும் இயலுமானவரை படித்தேன். "தமிழினி மகக் கஸ்டமான பணியை தனியே வெற்றிகரமாகச் செய்துள்ளார். செல்வமுத்து வந்துட்டார் இனி இன்னும் கலகலக்கும் இந்த பட்டி….மன்றம் அப்படித்தானே?" என்று அஜீவன் குறிப்பிட்டிருந்தார். கலகலக்குமோ என்னவோ ஆனால் நிச்சயம் கவலைகளை மறக்கவைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இவற்றை எழுதினேன்.

இன்னமும் 17 பேர் தமது கருத்துக்களை முன்வைக்க இருப்பதனால் அடுத்து வருபவர்கள் சகோதரி இரசிகை முன்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ஒழுங்கில் வந்து தமது அணிக்கு உரம்சேர்க்கும் கருத்துக்களை காலம் தாழ்த்தாது முன்மொழியுமாறு தயவாக கேட்டுக்கொள்கிறேன்.

மதன், அடுத்த உங்கள் வரவைத்தான் அனைவரும் எதிர்பார்த்துககொண்டு இருக்கிறார்கள். வாருங்கள், வந்து உங்கள் அணிக்கு பலம் கூட்டுங்கள்.

Posted

அனைவருக்கும் வணக்கம்.

நம்மவர்களிடையே ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்துவது இலகுவான ஒன்றல்ல பலசிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும், அவற்றை திறம்பட எதிர்கொண்டு இந்த பட்டிமன்றத்தை திறம்பட நடாத்தி கொண்டிருக்கும் ரசிகைக்கு எனது நன்றிகள். அதுதவிர தாயாரை இழந்த துயரத்தின் மத்தியிலும் பட்டிமன்ற நடுவராக இருந்து சிறப்பிக்கும் செல்வமுத்து அவர்களுக்கும், பட்டிமன்றத்தை வழிநடத்துவது இது முதல் தடவையாக இருந்தாலும் அதனை திறம்பட செய்துவரும் தமிழினிக்கும், இதனை நடாத்த தளம் அமைத்து தந்த யாழ் களத்துக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி.

பட்டிமன்றத்தில் எனது முறை வந்ததும் ரசிகையும் இளைஞனும் பலமுறை நினைவூட்டிய போதிலும் எனது வாதத்தை இன்றுதான் இணைக்க முடிந்தது. இதற்கு காரணம் ஏதும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட காலதாமத்திற்கு வருந்துகின்றேன்.

இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? என்பது தான். இதில் நன்மையடைகின்றார்கள் என்பது தான் உண்மை என்று எதிரணி நண்பர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் வாதாட வந்துவிட்டோமே என்பதற்காக ஒரு சில விதிவிலக்குக்களை பூதாகரமாக பெருப்பித்து காட்டி சீரழிந்துதான் போகிறார்கள் என்று நிறுவ முயல்கின்றார்கள். இதுவரை வாதாடிய எதிரணி நண்பர்களின் வாதங்கள் அனைத்தையும் படித்தேன். அவற்றில் இந்த விதிவிலக்குகளை தவிர சீரழிந்து போகிறார்கள் என்பதற்குரிய ஒரு சரியான காரணத்தை கூட அவர்களால் சொல்ல முடியவில்லை. இவற்றை நிரூபிக்க கடைசியாக வாதாடிய அருவியின் வாதத்தை பார்க்கலாம்.

எனக்கு முன் வந்து வாதாடிச்சென்ற எதிரணி நண்பரின் வாதத்திறனை பார்த்து வியந்து போய்விட்டேன். இணையம் அவரை எப்படிக் குழப்பவாதியாக மாற்றிவிட்டது பார்த்தீர்களா, இங்கு விவாதத்தின் தலைப்பு இணைய ஊடகத்தால் இளையோர் நன்மை அடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா என்று இருக்க அவர் அதனைத் தொட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. காரணம் அதனால் சீரழிந்த இளையோரே அதிகம் உள்ளதாலாகும். நடுவர் அவர்களே பாருங்கள் அவர்களிற்கே தங்கள் மேல் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் தான் தலைப்பை மறந்து ஏதேதோ எல்லாம் கூறுகிறார்கள்.

இதில் அருவி சொல்லியிருப்பது என்ன

1) அஜீவன் அண்ணாவின் வாததிறனை பார்த்து வியந்து போய்விட்டாராம் - ஆக அவரின் வாதமும் அதில் இருந்த எமது அணிக்கு சார்ப்பான கருத்துக்களும் தன்னை வாயடைக்க வைத்துவிட்டதாக மறைமுகமாக ஒத்து கொள்கின்றார்.

2) இதை சொன்ன அடுத்த கணமே அவரை குழப்பவாதி, தலைப்பை தொட்டு செல்லவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக பேசி தானே குழப்பவாதியாக காட்சியளிக்கிறார் அன்புக்குரிய அருவி. இதில் அருவி அஜீவன் அண்ணா தலைப்பை தொட்டு செல்லவில்லை என்பதை எங்காவது நிரூபித்திருக்கிறாரா? அப்படி செய்யாமல் குழப்பவாதி, தலைப்பை தொட்டுசெல்லவில்லை என்று கூக்குரலிட்டு என்ன பயன்? இது எப்படியிருக்கின்றது நிதிமன்றத்தில் ஒரு தரப்பை எதிர்தரப்பை சேர்ந்த சட்டதரணி ஆதாரம் ஏதையுமே சமர்ப்பிக்காமல் அவன் குற்றவாளி, குழப்பவாதி என்று புலம்புவதை போலிருக்கின்றது. இது பட்டிமன்றம் இங்கு வாதத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இனிமேல் எதிரணி தரப்பில் பேச வருபவர்களாவது வாதத்தை ஆதாரங்களோடு முன்வைக்குமாறு அன்புடன் கேட்கின்றேன்.

நண்பன் துணி இன்னும் விலகாதா என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். இளையோர் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்கள், அவர்களிற்கு இணையம் என்ற பெயரில் ஒரு கட்டில்லா சுதந்திரத்தை வழங்கி அவர்களைக் கெட்டுக் குட்டிச் சுவராக்கிறது என்று. படத்தில துணி விலகாதா என்று என்று பாத்துக்கொண்டிருந்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையில் இணையத்தில் பாக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல், படம் பாக்க போவதென்றால் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் இங்கு அது ஒன்றும் இல்லையே.கணினியை இயக்கி அதிலிருந்து மிகவும் இலகுவாக ஒருவரினதும் பயமின்றி செல்லவேண்டிய இடமெல்லாம் சென்றுவிட்டு வந்துவிடுகிறார்கள்.

கதைகள் என்பது எழுத்தாளன் தன்னுடைய கருத்துக்களை இலகுவான முறையில் வாசகர்களுக்கு உணர்த்த உபயோகிக்கப்படும் ஒரு ஊடகம். அந்த வகையிலேயே அஜீவன் அண்ணாவும் ஒரு குட்டிகதையை சொல்லி எப்படி சபை முழுவதும் நல்லதை நுகர ஒரு விதிவிலக்கு தீமையை மட்டும் நுகர்வதை சுட்டிக்காட்டி அதேபோல் இணையத்தில் பெரும்பாலான இளையோர் நன்மையடைகிறார்கள் ஒரு சில விதிவிலக்குகள் தவிர என்பதை அருமையாக உணர்த்தியிருந்தார். அப்படி உணர்த்திய பின்பும் நண்பர் அருவி துணிவிலகியதை மட்டுமே எடுத்து விவாதிக்கின்றார் என்றால் அவரை என்ன சொல்ல? அவர் அஜீவன் அண்ணா சொல்லிய கதையில் இருந்த நீதியை புரிந்து கொள்ளாமல் எப்படி அவரை துணி விலகியதை பற்றி கொண்டாரோ அதே போல் அவரது அணியினரும் நன்மையடைகிறார்கள் என்ற உண்மையை ஒத்து கொள்ளாமல் வேறு எதையோ பார்த்துகொண்டு சீரழிகிறார்கள் என்று புலம்புகிறார்கள். ஆக தப்பு இணையத்தில் இல்லை பார்வையில் தான்.

அடுத்தது புலம்பெயர்ந்த இளையர்கள் இணையத்தில் துணிவிலகிய நிலையில் யாருக்கும் தெரியாமல் பார்க்கிறார்களாம் மற்றய இடத்தில் எலலாம் கஷ்டமாம் யாராவது பார்த்துவிடுவார்களாம். இதுதான் இந்த ஆண்டின் மிகபெரிய நகைச்சுவை. பிரித்தானியாவில் சன் பத்திரிகையை எடுத்து பார்த்தால் அதில் மூன்றாம் பக்கத்தில் தினமும் துணிவிலகிய படம் தான் வருகின்றது. இவ்வளவிற்கும் அது வயது வந்தோருக்கான பத்திரிகை அல்ல? அப்போ அதில் பார்க்க மாட்டார்களா? அருவி வசிக்கும் கனடா நாடு சென்றிருந்த போது அங்கு இரவில் தொலைக்காட்சிகளில் எந்தவித கட்டுப்பாடுமின்றி துணிவிலகிய படங்கள் காண்பிக்கப்படுவதை அவதானித்தேன். புலத்தில் ஒவ்வொரு படுக்கையறையிலும் தொலைக்காட்சி உள்ள நிலையில் அதில் பார்க்கமாட்டார்களா? இதுதவிர இது போன்ற சிடிக்கள் கட்டுப்பாடு ஏதுமின்றி நடைபாதைகளில் வைத்து விற்கப்படுகின்றன. இவற்றை வாங்குவது ஒன்றும் சிரமமான காரியமே இல்லை. இதுபோல இணையத்தில் தான் யாருக்கும் தெரியாமல் துணிவிலகிய படங்களை பார்க்கின்றார்கள் என்ற அருவியின் வாதத்தை தவறு என்பதை நிரூபிக்க பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இணையத்தில் நல்ல வாழ்க்கைத்துணையைச் சந்திக்க முடியாதா என்று எதிரணியினர் கேள்வி கேட்கின்றனர். எப்படிச் சந்தித்து நல்லவர்கள் என்று அறிந்து கொள்வீர்கள். யாராவது இணையத்தில் தமது இயற்பெயர்களுடன் வருகிறார்களா. அம்மா அப்பா பார்த்து பேசி செய்து வைக்கும் திருமணங்களும் நேரில் கண்டு காதலித்து செய்து கொள்ளும் திருமணங்களுமே முறிந்து போய்நிற்கும் இன்றைய சூழலில், இணையத்தின் மூலம் துணையைத் தேடலாம் என்று சொல்கிறீர்கள், அதைக் கேட்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இதே யாழ்களத்தில் இணையக் காதலால் தன்னை ஏமாந்து தன் பொருளைப் பறிகொடுத்த ஒருவரைப்பற்றிய செய்தி வந்ததே மறந்து விட்டீர்களா நண்பர்களே. இணையத்தில்பல நல்ல விடயங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளலாம் அன்னம் போல பாலை மட்டும் குடிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் அன்பான எதிரணியினர். பாலை மட்டும் பிரித்து பிரித்து குடித்ததால் தான் தமயந்திக்கும் நளனிற்கும் தூது போன அன்னம் இன்று மிருகக்காட்சிச்சாலைகளில் பார்க்கும் ஒரு உயிரினம் ஆகிவிட்டது. அதுவும் எல்லா இடத்திலும் இல்லை. அதனால் தான் சொல்கிறோம் அன்னம் அழிந்ததுபோல் இளையோரையும் அழியவிடாதீர்கள் . எதிரணியினரிடம் ஒரு கேள்வி, இணையத்தில் நீங்கள் நல்லவை என்று கருதுபவைகளை இலவசமாகப் பெறமுடியுமா. அநேகமானவை பணம்செலுத்திப் பெறவேண்டியவைகளாக இருக்கின்றன. ஆனால் இளையோரைக் கவரும் விதத்தில் எவ்வாறு சீரழிக்கும் இணையத்தளங்கள் இயங்குகின்றன என்பது உங்களிற்குத் தெரியும். அவற்றிற்கு பணம் கூட செலுத்தத்தேவையில்லை.

தொலைபேசி, கடிதம் என்பவை எப்படி தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற உதவியதோ அதை போல இணையமும் ஒரு ஊடகமாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாற புரிந்துகொள்ள உதவுகின்றது. அதன் அடிப்படையிலேயே நமக்கு அறிந்தவர்களுடன் இணையம் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து புரிந்துகொண்டு பிடித்திருந்தால் வாழ்க்கை துணையாக மாற்றி கொள்ளலாம் என்கின்றோம். இணையம் இந்த யுகத்தின் அற்புதமான ஒரு தகவல் தொடர்பு ஊடகம் அதை சரியான வழியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உபயோகித்து நன்மையடைகிறார்கள். எதிர்காலத்தில் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தால் அதையும் நல்ல முறையில் உபயோகித்து நன்மையடைவார்கள் நமது இளையோர்.

ஒரு திருமணம் -முறிவடைவதற்கான காரணம் பெற்றோர் பார்த்து வைத்ததா, காதலித்து செய்ததா என்பதல்ல, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமையே அதற்கு காரணம். எந்தவிதமான விதமான திருமணத்திற்கு முன்பும் ஒருவரை ஒருவர் தயக்கமின்றி புரிந்து கொள்ள கருத்துக்களை பரிமாறிகொள்ள விருப்பு வெறுப்புக்களை அறிய இணைய ஊடகத்தை பயன்படுத்தி நமது புலம்பெயர் இளையோர் நன்மையடைகின்றார்கள்.

இணைய திருமண சேவை பக்கங்கள், பல்கலைகழகங்களின் கருத்துகளங்கள், மெசஞ்சரில் நண்பர்கள் உறவினர்களால் அறிமுகம் உள்ளிட்ட பல வகைகளில் புதியவர்களை இயற்பெயருடன் அறிந்து பேசி புரிந்து வேறு விபரங்கள் ஏதும் தேவைப்பட்டால் இணைய மூலமே வேறு நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து பேசி வாழ்க்கை துணையை முடிவு செய்து பல இளையோர் நன்மையடைந்து இருக்கின்றார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு இயற்பெயருடன் வராத இடங்கள் தான் அருவியின் கண்களுக்கு பட்டிருக்கின்றது அங்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கலாமா என்று சிரிக்கிறாராம். இப்போதாவது எப்படி இளையோர் இணையம் மூலம் வாழ்க்கை துணையை தேர்தெடுக்கின்றார்கள் மற்றும் வேறு வழிகளில் அறிமுகமானோரை திருமணம் செய்ய முன்பு இணையம் மூலம் புரிந்து கொண்டு நன்மையடைகின்றார்கள் என்று எதிரணி நண்பர்களுக்கு புரிந்ததா அல்லது இன்னும் புரியாதது போல் நடிக்க போகிறீர்களா?

இங்கு அன்னம் ஏன் இறந்தது என்பதற்கு பாலை மட்டும் குடித்ததால் என்று புது விளக்கம் சொல்கின்றார் அருவி. அதை அப்படியே ஏற்று கொண்டாலும் அதில் ஒரு முரண்பாடு. அன்னம் பாலை மட்டும் குடித்ததால் அழிந்து போனது என்றால் அது பாலையையும் தண்ணீரையும் சேர்த்து அருந்த வேண்டும் என்று சொல்ல வருகிறாரா? இளையோர் நன்மை தீமை இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டுமா? என்ன அர்த்தமில்லாமல் புலம்புகிறாரே?

அடுத்து இணையத்தில் நல்லவற்றை பணம் கொடுக்காமல் இலவசமாக பெற்று கொள்ள முடியுமா ஆனால் கெட்டவை இலவசமாக கிடைக்கின்றனவே என்கிறார். அவருடைய வாதங்களில் எதுவுமே உண்மையில்லை போலிருக்கின்றது. அவருக்கு எந்த நன்மைகள் இலவசமாக கிடைக்கின்றன என்று அவர் உபயோகித்தவற்றில் சிலவற்றையே பட்டியல் போட்டு நினைவூட்டுகின்றேன்.

செய்திகள் - http://www.eelampage.com/

காலநிலை - http://www.bbc.co.uk/weather/

தகவல் தொடர்பு - MSN Messenger, Skype

நாணய மாற்று - http://www.xe.com/ucc/

இவைமட்டுமன்றி இலவச இணைய வங்கி சேவை உள்ளிட்ட பல விடயங்களை இலவசமாக பயன்படுத்துகின்றார். இவை அவருக்கு நன்மைகள் இல்லையா அல்லது அவர் இளையோர் இல்லையா? இது தவிர இலவசமாய் தர முடியாத உரிமமுடைய விட்யங்களை இளையோர் பணம் செலுத்தியும் பெற்று நன்மையடைகிறார்கள்.

எதிரணிச் சிப்பாய்களுள் ஒருவர் கூறிச்சென்றார் பாடல்களை படங்களைச் செலவின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று, இதைத்தானே இணையம் இன்றைய இளையோரிற்கு சொல்லிக் கொடுக்கிறது. எப்படித் திருடலாம் என்று. பாடல்கள் படங்களில் கைவைப்பவர்கள்தானே அடுத்து கடனட்டை வங்கிப்பணம் திருடல்களில் இறங்குகிறார்கள். இதைத்தான் அடுத்தநாள் வேலை என்று கூறுகிறீர்களா? ஒருவர் தன் முழு உழைப்பையும் சிந்தி ஒரு படைப்பினை வெளியே கொண்டுவர அதனைத்திருடி நீங்கள் உற்சாகமடைவதுமட்டுமல்ல அடுத்தவனது வியாபார உரிமையையும் அல்லவா நீங்கள் திருடுகிறீர்கள். கனடாவிலே பல்கலைக்கழகத்திலே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் கிட்டத்தட்ட 80வீதமானவர்கள் கணினி மென்பொருட்களை பணம்கொடுத்து வாங்குவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் கணினித் துறையைச் சேர்ந்தவர்களும் கணிசமானவர்கள் இதனைத் தாம் செய்வதாகச் சொல்கிறார். என்று அவ்வாய்வு சொல்கிறது. இப்படித்தான் இன்றை புலம்பெயர்ந்து வாழும் இளையோரும் இருக்கிறார்கள்.

நண்பருக்கு திரும்பவும் குழப்பம் வந்திருக்கிறது பாருங்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்பு இலவசமாக கிடைக்காதா என்று கேட்டவர் இப்போது பாடல்கள் இலவசமாக கிடைக்கின்றதே என்று புலம்புகின்றார். தமிழ் இசைதட்டுக்களின் உரிமம் ஆங்கில இசையை போல் இன்னும் இணையத்தில் ஒழுங்கு படுத்தபடவில்லை. அத்னால் தற்போதைக்கு தமிழ் பாடல்களை இலவசமாக பெற்று கொள்ளும் அதே சமயம் ஆங்கில பாடல்களை பணம் செலுத்தி பெற்று கொண்டு இளையோர் நன்மையடைகிறார்கள். முன்பு ஆங்கில பாடல்களில் உரிமம் இணையவழி ஒழுங்குபடுத்துவதற்கு முன்பு அதுவும் இலவசமாக கிடைத்து வந்தது அவை ஒழுங்கு படுத்தப்பட்டு பணம் செலுத்தி உரிய வழியில் உரிமம் பெற வழி செய்யப்பட்ட பின்பு அவற்றை இளையோர் பெருமளவில் உபயோகிக்கின்றார்கள் தானே? அப்பிள் நிறுவனம் எவ்வளோ பாடல்களை இணையவழி விற்றிருக்கின்றது என்று நீங்கள் அறியாததா? இவற்றை விளக்கமாக விபரிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றூ நினைக்கின்றேன். ஆக எந்த பாடல்களாக இருந்தாலும் அவற்றை ஒழுங்குமுறைகள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட பெற்று கொண்டு நன்மையடைகிறார்கள் நமது இளையோர்.

அடுத்து மென்பொருள் திருட்டு பற்றி சொல்லியிருக்கின்றார். உரிய வகையில் வாங்கப்படும் மென்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக பிரதி செய்யப்பட்டு நடைபாதையில் வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன நண்பர்களிடையே மென் தகடுகளாக பரிமாறப்படுகின்றன். இணையம் இன்றியே நடக்கும் ஒரு விட்யம் இது. ஆனால் இது இணையம் வழியால் தான் நடப்பதாகவும் அதனால் இளையோர் சீரழிவதாக புது கதை சொல்கின்றார் அருவி.

அடுத்து இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம் பற்றிப் பேசினார்கள். உண்மைதான் நீங்கள் கூறுவது போல் செய்திகளை உடனுக்குடன் அறியவும், கூட்டங்களை வைக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் இணையத்தில் தரப்படும் செய்திகளில் எத்தனை வீதமானவை உண்மையானவை; உறுதிப்படுத்தப்பட்டவை. இஸ்லாமியத் தீவிரவாதிகள் தம்மிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கு இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்று உளவு அமைப்புக்கள் கூறுகின்றன. அவற்றினைக் கண்காணிப்பதற்காகவே பல நூற்றுக்கணக்கான பணத்தினைக் கொட்டுகிறார்கள். இதுதான் நன்மையா.இவ்வாறான தளங்கள் யாரை மையப்படுத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் அழிவது யார்? ஒரு தடவை இலங்கை அரசாங்கத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இரத்தம் சிந்தும் மண்டையோட்டின் படம் பெரிதாக வந்திருந்ததாகப் பத்திரிகைகளில் செய்திபோட்டார்கள். இப்படி ஒரு அரசாங்க இணையத்தளமே மற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டு அந்நாட்டின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு சர்வதேச அளவில் இதற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்விணையத்தினால் இளையோர் நன்மையடைகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியலயே! சந்தேகம் தான் இணையப்பக்கங்களிலும் இணையத்தில் இணைபவர்களிலும் ஏற்படுமே தவிர அவை ஒருபோதும் இளையோர் நன்மையடையப் போவதில்லை.

இதற்கு பதிலை நீட்டி முழக்கி எழுத போவதில்லை சுருக்கமாகவே சொல்கின்றேன். தாயக செய்திகளை அறிய புலம் பெயர் இளையோர் உபயோகிக்கும் முக்கிய தளங்கள் தமிழ் நெட் மற்றும் புதினம். இவற்றை பெரும் தொகையானோர் பார்வையிடுகின்றார்கள். பிபிசி செய்தி தளத்தில் கூட முக்கிய இலங்கை செய்திகளின் போது தமிழ் நெட்டுக்கு இணைப்பு வழங்கப்படுகின்றது . இதே போல நம்பகதன்மை அற்ற அல்லது மாற்று கருத்துடைய சில இணையங்கள் உண்டு தான் இவை எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்த சிலராது அடிக்கடி படிக்கிறார்களா? அல்லது பிபிசி போன்றவற்றில் இணைப்பு தான் வழ்ங்கப்படுகின்றதா? இவை சரியான தளங்களை சரியான முறையில் தகவல்களை அறிய புலம் பெயர்ந்த இளையோர் பயன்படுத்தி பெரும்பாலானோர் நன்மையடைகின்றார்கள் என்று உணர்த்த போதுமானவை என்று நினைக்கின்றேன்.

"பட்டிமன்றம் தொடர்வோமா" என்னும் தலைப்பின் கீழ் தொடரும் கருத்தாடலில் எமது எதிரணி விவாதி குருவிகள் அவர்கள் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார். பாவம் அவர் அறிந்து செய்தாரோ அறியாமல் செய்தாரோ தெரியவில்லை. அது என்னவெனில் தமிழில் தோன்றும் புதுப்புதுச் சொற்கள். இலக்கண விதி மீறி அவை தமிழில் உருவாக்கப்படுகின்றன. இதில் முன்னிலை வகிப்பது ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பிக்கும் வலைப்பதிவுகள். அவற்றில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி யாரும் தம்விருப்பப்படி தமது கருத்துக்களை எண்ணங்களை விட்டுச்செல்ல முடிகிறது. அப்படியான ஒரு பக்கத்திற்குச் செல்லும் இளைஞன், ஏற்கனவே வேறு ஒரு நாட்ட மொழியுடன் தமிழின் பரீச்சயத்தை இழந்து நிற்கும் ஒருவனிற்கு, தமிழ் மீது ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி அவனது மொழியாற்றலையும் அல்லவா இவ்விணையம் சீரழிக்கிறது. இதுதான் இளையோர் பெறும் நன்மையா அல்லது தமிழ் பெறும் நன்மையா. தமிழ் இன்று இணையத்தில் இரண்டாம் மொழியாக இருந்தால் கூட ஒரு பொது தமிழ் எழுத்துருவைக் கண்டு பிடித்து ஒரே எழுத்துருவைக் கொண்டு இணையப்பக்கங்களை அமைக்கும் நிலைக்கு இன்னும் இளையோர் முன்வரவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா தாமும் அழிந்து பிறரையும் அழிக்கத்தான் இளையோரிற்கு இணையம் பயன்படுகின்றது என்று.

வலைப்பதிவுகள் அண்மைகாலங்களில் ஆரம்பமாகி இப்போது தான் பிரபல்யமாகி வருகின்றது. அவற்றை புலம்பெயர்ந்த இளையோர் தமது கருத்துக்களை எண்ணங்களை தங்குதடையின்றி வெளிப்படுத்த உபயோகிக்கின்றார்கள். தமிழில் தோன்றும் வலைப்பதிவுகளை எடுத்து கொண்டால் அவை தமிழ் நன்றாக தெரியாத புலம் பெயர்ந்த இளையோரினால் தமிழில் எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் ஆரம்பிக்கபடும் போது இலக்கண தவறுகள் ஏதும் நிகழலாம். அவை வேண்டுமென்றே செய்யப்படுவன அல்ல. இன்று இந்த வலைப்பதிவு மூலம் தமிழில் தனது புலமையை அதிகரித்து நன்மையடையும் இளையோர் நாளை அந்த இலக்கண தவறுகளையும் மற்றவர்களின் வழிகாட்டலுடன் சரி செய்வார்கள் என்பதை க்ருத்தில் கொள்ளுங்கள். இங்கு இளைன்யோரின் நோக்கம் தமிழில் எழுதுவதே அன்றி இலக்கண விதிகளை மீறுவது அல்ல.

இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாட்டுப்பொங்கல் முடிந்தும் மதனைக் காணவில்லையே என்று அனைவரையும் சிலநாள் ஏங்கவைத்து, அவரவர் சந்தேகங்களையும் தினம்தினம் ஓங்கவைத்து, அவசரமாக வந்து தனது கருத்துக்களை முன்வைத்துச் சென்றுவிட்டார் மதன். "பொறுத்தார் புூமியாள்வார்" என்பதைப்போல் தனது கருத்துக்களை ஆதாரங்களுடன் வைத்துள்ளார். இவற்றை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா?

எதிரணியினர் வாதாடவேண்டும் என்பதற்காக வாதாடுகின்றார்கள் என்றார். இரு அணியினர் வாதாடும்போது இது இயல்புதானே? எப்படித்தான் எதிரணியினர் தமது கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் எதுவும் வைக்கவில்லை என்று கூறுவது ஒன்றும் புதிதல்லவே! இப்படி நான் கூறவில்லை, இக்கருத்துப்பட மதன் கூறுகின்றார். எதிரணியினரின் பதில் என்னதான் என்று பார்ப்போம்.

அஜீவனின் வாதத்திறமையைப் பார்த்து தான் வியந்துபோய்விட்டதாகக் கூறியது உண்மைதான். வியந்ததற்கான காரணத்தை விளக்கிய மதனின் வாதத்தை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா? பார்ப்போம்.

துணிவிலகிய காட்சிகளைப்பற்றி காரசாரமான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. மதன் ஒரு பத்திரிகையையும், தொலைக்காட்சிகளையும், கனடா நாட்டையும் உதாரணம் காட்டினார். எதிரணியினர் இதனையும் ஏற்றுக்கொள்வார்களா?

மணவாழ்க்கை நீடிக்கவேண்டுமென்றால் கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு மிக அவசியம். பெற்றோருக்காகவும், மற்றோருக்காகவும் திருமணம் செய்து கடமைக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் பலரையும், திருமணத்தின் பின்னர் ஒன்றாக வாழமுடியாமல் விவாகரத்தில் முடிகின்ற எத்தனையே குடும்பங்களையும் நம் தமிழ்ச்சமுதாயத்தில் காண்கிறோம். தமது வாழ்க்கைத்துணையைத் தாமே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இன்றைய இளைஞர்களில் பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமணத்தின் முன்னர் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இணையம் நல்லதொரு ஊடகம் என்றார் மதன். கணினி வழியாக காதலராகிய கதையினைக்கொண்ட "காதலர் தினம்" என்கின்ற திரைப்படம் என் நினைவிற்கு வருகின்றது. காலம் மாறிவிட்டது, காதலிப்பதற்கு கணினியைப் பாவிப்பதில் தவறு என்ன இருக்கின்றது? இதற்கு எதிரணியினரின் பதில் என்னவாக இருக்கும்?

இணையத்தில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய நன்மைதரும் சிலவற்றைப் பட்டியலிட்டுக்காட்டினார். தமிழ்ப்படப்பாடல்களையும், ஆங்கிலப்பாடல்களையும் தரைவிறக்கம் செய்வதுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். இலவசமாகக் கிடைக்காதா? என்றவர் உடனேயே இலவசமாகக் கிடைக்கின்றது என்கிறார் என்பதையும் எளிதாகச் சுட்டிக்காட்டினார் மதன்.

வலைப்பதிவுகள் பற்றியும், பொது எழுத்துரு பற்றியும் சிறு விளக்கமும் தந்தார்.

மதனின் வாதத்திறமையைப் பார்த்துவிட்டுத்தான் வர்ணன் தான் எழுதிய கருத்தையே இடம்மாறி வைத்துவிட்டாரோ?

காலந்தாழ்த்தி களத்திலே வந்து தன் கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறார் மதன். இது அவரின் அனுபவமோ அல்லது அலசி ஆராயும் திறனோ தெரியவில்லை. ஒருவேளை பொங்கல் கொடுத்து புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம்.

ஒவ்வொருவரும் அவரவர் வாதங்களை முன்வைக்கும்போது தம் திறமைக்கேற்ப சிறப்பாகவே செய்கின்றார்கள். இருபக்க வாதங்களையும் பார்க்கும்போது இரு அணியினருக்கும் இடையிலுள்ள இடைவெளி மிகமிகக்குறைவாக உள்ளதாகவே படுகிறது.

இனி வரவிருப்பவர்களில் குருக்காலபோவான் குறுக்கால போவாரோ? அல்லது நாரதர் கலகம் நன்மையில் முடியுமோ? அல்லது புளுகர்பொன்னையா புளுகித்தள்ளுவாரோ? அல்லது காக்கைவன்னியன் காட்டிக்கொடுப்பாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி , நன்றி மண்டபம் நிறைந்த உங்கள் கர கோசத்திற்கு மிக்க நன்றி........

மைக் டெஸ்டிங் வன்,டூ,திறி ...தம்பி கொன்சம் சத்தத்தைக் கூட்டும்.....ம் இப்ப ஒகே..

என் உயிரினும் மேலானா உடன் பிறப்புக்களே,என் இரத்தத்தின் இரத்தங்களே,உங்கள் ஆரவாரமான வரவேற்பைக் கண்டு உளம் மகிழ்ந்தோம் ,

முதற்கண் என் வணக்கத்தை இந்த மேடையிலே நடு நாயகமாக வீற்றிருக்கின்ற பெருங்குடி மகன் நடு நிலமையின் உறைவிடம் ஐயா செல்வமுத்து அவர்களுக்கும்,

பட்டாடை பளபளக்க ,கழுத்திலே பொன் நகை அலங்கரிக்க உதட்டிலே புன் நகை தவழ வீற்றிருக்கின்ற மூத்த உறுப்பினர் ,சிந்தனைச் செல்வி இனிய தமிழினி அவர்களுக்கும் செலுத்திக் கொள்கிறேன்.

அத்தோடு இந்த நிகழ்வை வெகு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் செயல் வீராங்கனை ரசிகை அவர்களுக்கும்,இந்த வாய்ப்புக்கு களம் அமைத்துக் கொடுத்த விற்பனர் மோகன் அவர்களுக்கும் எனது பாராடுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது தானைத் தலைவர் சொல்லின் செல்வர் சோழியன் அவர்கள் இந்த வெற்றி அணிக்கு

வழங்கிய ஆரம்ப உரையிலே விழுந்த அடியில் புத்தி பேதலித்து எமது எதிர் அணியினர் பட்டி மன்றத் தலைப்பயே மறந்து விட்டார்கள் போல் உள்ளது.

ஐயாமாரே ,அம்மாமாரே இந்தப் பட்டி மன்றத்தின் தலைப்புத் தான் என்ன?

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளயோர் இணய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா?அல்லது சீரைந்துபோகிறார்களா? என்பதுவே.ஆனால் எதிரணித் தலைவர் முதற்கொண்டு ,மிகுந்த பிரயத்தனங்களின் மத்தியில் மண்டையைக் குடைந்து கருத்து எழுதிய அம்மன் பக்தன் மதன் வரை இணயத்தின் பயன்களைப் பற்றியே கதை அளந்து கொண்டு இருகின்றனர்.இந்த பட்டி மன்றத்தின் தலைப்பு இணயத்தினால் ஏற்படும் பயன்களா என்ன?இதைச் சொல்லவா இந்தப் பட்டி மன்றம்.அட இதை ஒரு மூன்று வயசு குழந்தை கூடச் சொல்லுமே.

இங்கே முக்கியமாக விவாதிக்கப் படும் பொருள் தான் என்ன?இணயம் தமிழ் புலம் பெயர் இழயோரைச் சீரழிக்கிறதா இல்லயா என்பது தானே?அங்கே ஒருவர் சொல்லுகிறார் அட இழஞ்சர் சீரழிய இணயமா வேணும் எண்டு.அட சீரழிய ஆயிரம் முறை இருக்கு.இணயம் மட்டும் தான் சீரழிக்கிறது என்பது அல்லவே பட்டி மன்றத்தின் விவாதப் பொருள்.இணையம் சீரழிக்கிறதா இல்லயா என்பது தானே விவாதப் பொருள்.

அப்படியாயின் இந்த இணயம் எப்படியானது?ஒருவரின் அந்தரங்கமான படுக்கை அறைக்குள் இந்த உலகத்தையே கொண்டு வருகிறது.ஒரு நான்கு சுவர்களுக்குள் முழு உலகத்தயே சந்தமிடாமல் ஒரு சில சொடுக்கு கழுக்குள் கொண்டு வருகிறது.உலகத்தின் ஒரு கோடியில் வக்கிர உணர்வுடயோரினால் கொட்டப்படும் குப்பைகளை அள்ளி பல்லாயிரம் மைல் களுக்கப்பால் இருக்கும் ஒரு வரின் வீட்டிற்குள்ளே கொட்டுகிறது.அட அதில நல்ல விசயங்களும் வருகுது தானே நீங்கள் ஏன் குப்பயக் கிளறு றீங்க எண்டு கினம். அட இங்க நாங்கள் விவாதிக்கிறது இழயோர் பற்றி, எனக்கு குப்பயாத் தெரியிறது அவைக்கு வேற மாதிரித் தெரியுது.ஒருத்தரும் தெரின்ச்சு கொண்டு சீரழியிறேல்ல ,தெரியாமத் தான் சீரழியிறவை.அப்ப நீங்கள் பெரியாக்கள் நல் வழிப் படுத்தலாமே எண்டு சொல்லுகினம்.அங்க தானே பிரச்சினை இருக்கு.இவை குப்பயக் கிளறுகினம் எண்டு என்னண்டு தெரியும்?அது தான் சத்தம் போடாம குப்பய இறக்க வழி இருக்குதே அதத் தானே இந்த இணயம் செய்யுது.இணயம் என்ற தொழில் நுட்பம் எவ்வாறு எமது இளயவரை இலகுவான வழியில் சீரழிக்கிறது என்பது தானே இங்கே கவனதில் எடுக்கப் பட வேண்டிய விடயம்.

ஆகவே ஆயிரம் பயன்கள் இருக்கலாம் இணயத்திற்கு .அவற்றை இங்கே பட்டியல் இடுவதால் எது வித பயனும் இல்லை ஏனெனில் அது விவாதப் பொருள் அல்ல.இணயம் சீரழிக்கிறது.அது சீரழிப்பதற்கான வழியை இலகுவாக்கிறது.

இதனால் சீரழிபவர்களின் கண்ணீர் கதையை நாம் நாளாந்தம் பதிரிகைகளில் வாசிக்கிறோம், காதலர் போல் நடித்து ஏமாற்றி விடப்பட்ட இளயவர் ஆயிரம்.கடத்தப் பட்டு வன்புணர்ந்து ஈற்றில் கொல்லப் பட்டோர் ஆயிரம்.இவர்களின் குடும்பங்கள் பட்ட துன்பம் சொல்லி மாழாது.இவற்றை அறிந்தும் இங்கே இணயத்தின் சீர்கேட்டை மறந்து அல்லது மறைத்து ,இணயத்தின் நன்மைகளைப் பட்டியல் இடும் எமது எதிரணியினரை என்ன வென்று அழைப்பது.

ஆகவே நடுவர் அவர்களே இங்கே எதிரணியினர் இன்னும் விவாதத்தை தொடங்கக் கூட வில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இனி வருபவர்களும் அரைத்த மாவையே அரைப்பார்கள் போல் உள்ளது.இணயத்தால் இளயவர் சீரழிகின்றனர் என்பது மறுதலிக்க முடியாத உண்மை,உண்மை என்று ஆணித்திரமாகக் கூறிக் கொண்டு ,எனக்குப் பின்னால் வரும் எமது அணியினருக்கு நேரத்தை வழங்கும் நோக்கில் எனது இந்த வாதத்தை முடிக்கிறேன். எதிர் அணியினர் இனியாவது விவாததிற்கான பொருளை விளங்கி தமது வாதங்களை முன் வைப்பார்கள் என்று நம்புகின்றேன்.அவர்கள் தமது வாததிற்குத் தேவயான வார்த்தைகளைத் தேடி அலைந்து இந்தப்பார்வை ஆளர்களின் பொன்னான மணித்துளிகளை வீணாக்காமல் , அவர்களின் பொறுமையைச் சோதிக்காமல் விரைந்து வந்து தமது வாதத்தை வைப்பார்கள் என்று எண்ணி அமர்கிறேன் ,

நன்றி,

வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கற்பனையிலேயே கரகோசங்களையும் மைக்கையும் உருவாக்கி அசலாக ஒரு பட்டி மன்றத்தில் நிற்பது போன்ற தோற்றத்தோடு தனது விவாதத்தை வைத்துச் சென்றிருக்கிறார் புளுகர் பொன்னையா அவர்கள். என்னையா பொன்னையா பெயருக்கேற்ற படி புளுகிச்சென்றிருக்கிறீர்கள

Posted

அனல் பறக்கும் இருதரப்பு விவாதங்களிடையே பீனிக்ஸ் பறவைகள் போல் நின்று தலைமை தாங்கும் ஆற்றல் மிகு நடுவர்களான திரு.செல்வமுத்து...மதிப்புக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புளுகர் பொன்னையாவை அடுத்த தனது அணிக்கான வாதத்தை வைக்க வந்துவிட்டார் வர்ணன். அவர் கூறியதைப்போல பட்டிமன்றம் இப்போது மிகவும் சுூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பது உண்மைதான். வெப்பத்தின் நடுவே வாழும் பீனிக்ஸ் பறவைக்கு எம்மை ஒப்பிட்டு ஆரம்பித்துத் தன் வாதங்களை முன்வைத்தார். எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் இங்கு கருத்துக்களை வைக்கும் அத்தனைபேருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, ஆராய்ந்து பார்த்துத்தான் நாம் தீர்ப்பு வழங்குவோம்.

பல்கலைக்கழகங்களையே வீட்டுக்குள் கொண்டுவரும் கணினித்திரை தரும் இணையத்தளங்களின் நன்மையான தகவல்கள் தெரிந்திருந்தும் இல்லை இல்லை அவை தீங்குதான்.சீரழிவுதான் என்று எதிரணியினர் வாதாட வருகிறார்கள் என்று ஆரம்பித்தார். இக்கூற்று சரியா? தவறா?

எதிரணித்தலைவர் சோழியனுடைய கருத்துக்களையே மேற்கோள் காட்டி கனடாவில் இளையோரின் பொங்குதமிழ் நிகழ்ச்சி பற்றியும், சுனாமியின் அனர்த்தங்களின்போது சிறியோர்களின் பங்களிப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டார். இதற்கு எதிரணியினர் பதில் என்ன? இலண்டனில் இளையோருடன் நானும் சிலவேளைகளில் சேர்ந்து மடியேந்தினேன். அது ஒவ்வொருவரினதும் கடமைதானே!

"சாட்டிங்கிற்கும், டேற்றிங்கிற்கும்" இணையத்தளங்கள் தேவையில்லை என்றார். காதல் என்ற ஒன்று அதற்கு முன்னர் இருந்ததில்லையா? மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு மார்க்கங்கள் இருந்ததில்லையா? இணையம் வந்தபின்னர்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா? பல கண்காணிப்பாளர்கள் முன்னர் இருந்தும் அந்தக்குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா? என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார். இது ஒரு சிறிய பங்குதான் என்றும், இந்த ஒன்றை வைத்து பலதை தீர்மானிக்க முடியாது என்றும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டினார். காதல் புனிதமானது, அதைக் குப்பையாக்குவதும், தெய்வீகமாக்குவதும் அவரவரைப் பொறுத்தது அல்லவா? எதிரணியினர் இதனை ஏற்றுக்கொள்வார்களா?

முகத்தார் அவர்களும், அவரது அணியைச் சார்ந்தவர்களில் சிலரும் தலைப்பைப்பற்றிய தங்கள் கருத்துக்களை வைத்தனர். இணையத்தால் நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்படியான தலைப்புக்குக் கீழ் தாங்கள் வாதாடத்தேவையில்லை என்றும், எதிரணியினர் கொடுத்த தலைப்பில் இன்னும் தங்கள் விவாதத்தைத் தொடங்கவேயில்லை என்றும் குற்றம்சாட்டினர். இது உண்மையா? அல்லது நான் முன்பே குறிப்பிட்டதுபோல் "எப்படித்தான் எதிரணியினர் தமது கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் எதுவும் வைக்கவில்லை என்று கூறுவது ஒன்றும் புதிதல்லவே!" என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றார்களா?

எந்தத்தலைப்பிலும் விவாதமேடை வரலாம் என்று கூறி சில உதாரணங்களையும் கொடுத்தார் வர்ணன். "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்" என்பதுபோல. தாம் தீமை வாதம் புரிந்து நன்மைக்கு வழிகாட்டுகிறோம் என்றார். முகத்தார் அவர்கள் எதிரணியில் இருந்தாலும் தங்கள் அணிக்கே வலுச்சேர்க்கிறார் என்றார். அதற்குப் பாராட்டும் தெரிவித்தார். உண்மையில் அப்படிச் செய்கிறாரா? முகத்தார் அவர்கள் இருக்கும் அணிக்கே குpழி தோண்டுகின்றாரா? அல்லது அவர் ஒரு முதியவர் என்பதால் அங்கிருக்கும் இளைஞரை தன் சொல்லம்புகளால் தாக்கப் பயந்து ஒரு முதியவரை வேண்டுமென்றே வர்ணன் தாக்குகின்றாரா? எதிரணிதான் இதற்குப் பதில் கூறவேண்டும்.

இணையத்தால் மிகச்சில சீரழிவுகள்தான் உண்டு ஆனால் பயனடைபவர்கள் பலர் என்றும் தன் வாதத்தை வைக்கிறார். சீரழிவை உண்டாக்காத ஊடகத்தை அவர்கள் காட்டவில்லை, காட்டவும் மாட்டார்கள் ஏனென்றால் அவர்களிடம் இதற்கு விடையே இல்லை என்று தனது கருத்தை ஆணித்தரமாக வைக்கிறார்.

எதிரiணியினர் இணைய அரட்டை, ஆபாசத்தளங்கள் என்ற சிலவிடயங்களையே வைத்து மல்லுக்கட்டுகிறார்கள் ஆனால் எத்தனையோ பயனுள்ளன இருக்கின்றன என்று பொருளாதாரம்- மருத்துவம்… என்று தொடங்கி விண்ணியல், வரலாறு, இயற்கை பற்றிய ஆய்வு என்று அடுக்கிக்கொண்டே போகிறார். சில காரணங்களை மட்டும் கூறி ஓர் இனத்தின் முன்னேற்றத்தையே இருளில் தள்ளி பாழடித்துவிட எதிரணியினர் சம்மதமா? என்றும் கேட்கிறார்.

அவர் கூறுவதில் நியாயம் உள்ளதுபோலவே தெரிகிறது. ஆனால் வரப்போகும் தீர்ப்புபற்றி பேசவோ, கருத்துச்சொல்லவோ தான் வரவில்லை என்றும், இளையோருக்கு அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக வரும் தீர்ப்பு அமையுமோ என்று ஒரு சந்தேகத்தைத் தன்னுள் எழுப்பி முடித்திருக்கின்றார்.

நல்ல கருத்துக்களை வைத்து வாதம் செய்வது ஒரு திறமை. எதிரணியினரை தாக்கியே வாதமிடுவதும்; ஒருவித திறமைதான். இந்தவகையில் இரு அணியினரும் தாம் என்ன செய்கிறோம் என்று தெளிவுடனே செய்கின்றார்கள் என்றே நடுவர்களாகிய நாம் எண்ணுகிறோம். வரப்போகும் முடிவும் அதனைப்பொறுத்தே அமையும் என்று கூறி தீமை அணியிலிருந்து ஈஸ்வர் அவர்களை அழைக்கிறேன்.

நன்றி

Posted

ஐயா எனக்குத் தெரியாதையா வார்த்தை ஜாலம் தெரிந்ததை சொல்லுகின்றேன்.

அறிஞர்கள் நிறைந்த அரங்கில் என் கருத்துக்களை வைக்க பயமாக இருக்கின்றது.

பாருங்கோ பயத்திலை உங்களுக்கு வணக்கம்

சொல்ல மறந்திட்டன். தன் துயரத்திலும் இந்த பட்டிமன்றத்தில் முலம் இந்த இளைஞர்களை

திருத்த நல்ல தீர்ப்பு சொல்லவேண்டுமென்று ஆர்வத்துடன் வந்திருக்கும் நடுவர்

செல்வமுத்து ஐயா அவர்களே களத்திலை நல்ல கருத்துக்கள் வரவேண்டுமென்பதற்காக

பலருடைய கருத்துக்களில் வீச்சரிவாளை வீசிய அனுபவத்தில் இந்த பட்டிமன்றத்தை

திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் யாழினி அவர்களே டங் சிலிப்பாகிவிட்டது மன்னித்துக்

கொள்ளுங்கள் தமிழினி அவர்களே

மற்றும் மாண்புமிகு எனதணித்தலைவர் சோழியன்

அண்ணா அவர்களே மற்றும் இணையத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இணையத்தால்

சீரழிகின்றனர் என்ற உண்மையை எடுத்துரைக்க வந்த நண்பர்களே

ஏதோ இந்த ரசிகை வில்லங்கத்தில் மாட்டிவிட்டா

வந்த நாங்கள் ஒப்புக்காக என்னத்தையாவது சொல்லிவிட்டு போவம் என்று ஒப்புக்காக

வாதாடும் எதிரணி நண்பர்களே

இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக ஒழுங்கு படுத்தி நடாத்தும்

ரசிகை அவர்களே ஀னைவருக்கும் எனது வணக்கங்களை சிரம் தாழ்த்தி கூறிக்கொள்கின்றேன்.

என்னுடைய அணியினர் அனைவரும்

திரும்ப திரும்ப ஒரு விடயத்தை சொல்லவேண்டியிருக்கின்றது. காரணம் எதிரணியினர் தோல்வியை

தவிர்ப்பதற்காக தலைப்பை விடுத்து இணையம் என்று பொதுவாக கருத்தை கூறுவதைப்பார்த்தால்

அவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். தலைப்பிலிருந்து நழுவி

நடுவர்களை திசைதிருப்பி வெற்றியை தமதாக்குவோம் என்ற நப்பாசைதான்.

நாங்கள் உயரத்தில் ஏறுவதற்காக ஒருவருடைய

தோளில் ஏறி மேலே சென்றுவிட்டபின் ஐயோ நான் கட்டையனுக்கு மேலே மிதிச்சு

மேலே ஏறினனான் என்று குறை கூறுகவர்களல்ல. ஐயா இணையம் நல்லது. இது தகவல்களை

விரைவாக்குகின்றது. உண்மைதான். படத்தை பார்த்தபடி சுவாரசியமாக பேசமுடிகின்றது.

என்ன ஆச்சரியமான வளர்ச்சி. இலவச தொலைபேசிகளை வளங்குகின்றது. அற்புதம்.

பல அரியதகவல்களை நொடியில் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. இவற்றை நாங்கள்

மறுத்தால் நாங்கள்தான் உலகின் பெரிய பொய்யர்கள். இன்னும் எத்தனையோ நன்மைகள்.

தலைவணங்குகின்றோம். விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் இவற்றை மறுக்க

அஞ்ஞானவாதிகளல்ல. ஆனால் தவறு ரசிகையினுடையது அவர் தலைப்பை இணையம்

இளைஞர்களை கெடுக்கின்றதா அல்லது வளர்க்கின்றதா என்று வைக்காமல்

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால்

நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? என்ற தலைப்பை

வைத்துவிட்டார்.

அதனால்தான் எதிரணியினர் தலைப்பிலிருந்து எல்லோரும்

நழுவுகின்றனர். தலைப்பை தங்களுக்கு சார்பாக வைத்துக்கொள்கின்றனர்.

சுவிஸிலிருந்து சிலகாலத்துக்கு முன்னர் எனக்கு ஒரு துண்டுப்பிரசுரம்

ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இளைஞர்கள் பலர் புகையிரத நிலையங்களில்

நின்று கைத்தொலைபேசி கமாராவூடாக அங்கு செல்லும் தமிழ்பெண்களை

படம்பிடித்து அந்த படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து அந்த பெண்களை

மிரட்டுவதாக (அதை களத்தில் இணைத்திருக்கின்றேன்.) அவற்றை இணையத்திலும்

சேர்த்துவிடுவார்களாம்.

புலம்பெயர் பெற்றோர்கள் அதிகம்

கணனி அறிவில்லாதவர்கள். அதை பயன்படுத்தி இளைஞர்கள் தங்கள் இச்சைகளை

இணையமூலம் நிறைவேற்றுகின்றனர். இணையம் வருவதற்கு முன்னர் ஆபாச வீடியோக்களை

அதற்குரிய இடங்களில் வாடகைக்கு பெற்றுக்கொள்ளமுடியும். அதனால் சிறுவர்களை அவை

சேருவதை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது இணையத்தில் பலபக்கங்களுக்கு

சென்றால் விளம்பரம் வ஀¨்து ஆர்வத்தை தூண்டுகின்றது. நீங்கள் சொல்லாம் இணைய

தீச்சுவர் மூலம் தடைசெய்யமுடியுமென்று. ஒருதடவை அந்த இணையத்துக்கு சென்றால்

இளைஞர்கள் தூண்டப்பட்டுவிடுவர். அதன்பிறகு தீச்சுவர் போட்டென்ன போடாமல் விட்டென்ன?

இங்கு ஒருவர் கனடாவில் பொங்கு தமிழ்

இளைஞர்கள் நடாத்தினர் என்றார். சுனாமி நிதிசேர்த்தார்கள் என்றார். கனடாவின் பொங்கு

தமிழுக்கு இளைஞர்கள் பெயர் லேபிளாகப் பயன்பட்டதே ஒழிய அவர்கள முழுவதுமாக நிற்கவில்லை.

சில அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பெயர்பயன்பட்டது.

மற்றது தமிழ்நெற் யாழ் சங்கதி

என்ற இணையங்களின் பெயர் கூறப்பட்டது. அவை நமது விடுதலைக்காக உருவாக்கபட்ட

இணையங்கள். அவை இளைஞர்களை திசைதிருப்ப முயலாது. இணையத்தினால் இளைஞர்கள்

தெரிந்து கொள்ளமுடியாத அசிங்கங்களை நாலு சுவருக்குள் இணையம் என்ற ஊடகமூலம்

பெற்றுக்கொள்ள வழிசெய்துவிட்டது.

பார்த்துப்பேசுவதற்கு உருவாக்கப்பட்ட நெற்மீற்றிங்கை

பயன்படுத்தி சுயஇன்பம் கற்றுக்கொடுக்கின்றார்கள். எதிரணியினர் கூறலாம் தொலைக்காட்சியில்

ஆபாசபடங்கள் இல்லையா என்று? அதை பெரிதாக இளைஞர்கள் பார்க்கமுடியாது. பெற்றோர்களும்

சேர்ந்திருந்து பார்ப்பதால் தொலைக்காட்சிகளில் ஆபாசங்களை அவர்கள் பார்க்கமுடியாது.

மற்றையது அவை கட்டணமாக இயங்குகின்றன. இணையங்களுக்கு தொலைபேசிமூலமும்

பணம் செலுத்தமுடியுமென்பதால் சுலபமாகிவிடுகின்றது.

எதிரணியினர் இணையத்தால் நன்மை என்கின்றார்கள் ஏதாவது ஒன்றை காட்டினார்களா? பொதுவான இணையத்தை நன்மை என்று

வாதாடாமல் தலைப்புக்கேற்றவாறு உதாரணங்களுடன் வாதாடுங்கள். ஏன் யாழ் களத்திலேயே தேவையில்லாத அரட்டை சினிமா பகுதிகளில் எழுதுபவர்கள் தொகைதான் அதிகம். எதிரணியினர் இங்கு புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இணையத்தில் ஏதாவது சாதித்திருக்கின்றார்கள் என்று கூறமுடியுமா? புலம்பெயர் நாட்டில் ஒரு குழப்பவாதி விடுதலைக்காக ஒரு இணையமும் எதிராக பல இணையங்களும் நடாத்துவதாக யாழில் ஒருவர் கூறியிருந்தார்.

நடுவர்களே உங்களை குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக தலைப்பை

விட்டு நழுவுகின்றார்கள். நீங்கள் தடம்புரளமாட்டீர்கள் என்பதை நானறிவேன். கூறுவதற்கு நிறைய இருக்கின்றது.

பின்னால் வரும் மக்கள் படைக்கு வழிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அறிஞர்கள் நிறைந்த அவையிலே, வார்த்தைஐhலம் தெரியாத காக்கைவன்னியன், ஈஸ்வர் வரமுன்னரே வந்து, ஆரம்பிக்கும்போதே அனைவருக்கும் வணக்கம் கூறமறந்து, பயந்து பயந்து தன் வாதத்தினை முன்வைத்தார்.

இவரும் பெரும்பாலான தனது அணியினர் கூறுகின்ற குற்றச்சாட்டையே கூறுகிறார். எதிரணியினர் தலைப்பை விடுத்து நழுவுகிறார்கள் என்றார். தலைப்பைத் தங்களுக்குச் சார்பாக வைத்துக்கொள்கின்றார்கள் என்றார். இவர்கள் இதனைத் திரும்பத்திரும்பக் கூறுவதைப்பார்த்தால் இது உண்மைதான் என்று எதிரணியினர் இனிமேல் ஒத்துக்கொண்டுவிடுவார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பதை எதிரணியினர் மெய்யாக்கப்போகிறார்களா? இதற்கு எதிரணியினரின் பதில் என்ன?

இரசிகை தலைப்பை "இளைஞர்களைக் கெடுக்கின்றதா அல்லது வளர்க்கின்றதா" என்று வைக்காமல் "புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிகின்றார்களா?" என்று வைத்துவிட்டார் அதனால்தான் எதிரணியினர் தலைப்பிலிருந்து எல்லோரும் நழுவுகின்றார்கள் என்றும் கூறுகிறார்.

இந்த இடத்தில் நான் இதற்கு முன்னர் வாதாடிய வர்ணன் "எந்தத்தலைப்பிலும் விவாதமேடை வரலாம் என்று கூறி சில உதாரணங்களையும் கொடுத்தார்" என்று முன்பு கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்றைய தலைப்பு இதுதான். இதற்குள் நின்று வாதாடுவதுதான் சிறப்பு. ஆனால் இத்தனை நாட்களுக்குப்பிறகு இது சரியல்ல என்று கூறுவதும் சரியல்ல.

அதிகமானோர் ஆபாசப்படங்களையும், சினிமாவையும், வீணான அரட்டைகளையும் அடிக்கடி ஆதாராமாகக் காட்டுகிறார்கள். விடுதலைக்காக உருவாக்கப்பட்ட இணையங்கள் இளைஞர்களைத் திசைதிருப்ப முயலாது என்றும் மற்றவைகளால் அவர்களைத் திசைதிருப்ப முயலும் என்பதுபோல் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவ்வாதமே பலமுறைகளில் முன்வைக்கப்பட்டது. இதனை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா? எதிரணியினர் தகுந்த பதில் தருவார்கள் என்ற எதிர்பார்க்கிறேன்.

நடுவர்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்றார். எம்மைக் குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக தலைப்பைவிட்டு நழுவுகின்றார்கள். நீங்கள் தடம்புரளமாட்டீர்கள் என்பதை நன்கறிவேன் என்று எமக்கும் ஓர் எச்சரிக்கை விட்டுச்செல்வதுபோல் படுகின்றது. ஆனால் அது யாராலும் முடியாததொன்று.

"காக்கைவன்னியன்!" எச்சிரிக்கையாக இருக்கவேண்டிய பெயர்தான். களத்துள் நுழையும்போதே கடவுள் (ஈஸ்வர்) என்றும் பாராமல் அவருக்கு முன் வந்து சிறு குழப்பத்தை உண்டாக்கினார். இவரது வாதம் இனிமேல் பெரிய பெரிய குழப்பங்களையே உருவாக்குமா? அவரது அணியினர்கூட இவர் ஆப்பு வைத்துவிட்டார் என்று கூறுகின்றனர். இது தனது வாதத்தை களத்திலே முன்வைக்கவேண்டுமென்ற தீராத ஆவலினாலும் இருக்கலாம் அல்லவா?

எதிரணியினர்தான் இவை எல்லாவற்றிற்கும், அவருக்குப் பின்னால் வரும் மக்கள் படைக்கும் தகுந்த பதிலைத்தரவேண்டும். நன்மை அணியிலிருந்து அடுத்து பிருந்தனை அழைக்கிறேன்.

Posted

எல்லாருக்கும் நமஸ்தே

எனது பெயரை குருக்காலபோவான் என்று பிழையாக எழுதிய தமிழ்ரசிகையை வன்மையாகக் கண்டித்து எனது விவாதத்தை ஆரம்பிக்கிறேன்.

விவாதத் தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? என்றதற்கு எமது தரப்பு இதுவரை உருப்படியான வாதம் வைக்கவில்லை நழுவி ஏதே எல்லாம் எழுதுகிறோம் என்றார்கள் எதிர்தரப்பார்கள்.

அதாவது புலம் பொயர்ந்த இளையோரை மாத்திரம் கருத்தில் கொண்டு அவர்கள் இணையம் என்னும் ஒரு ஊடகத்தால் நன்மையடைகிறார்களா இல்லையா என்ற வாதத்தை நாங்கள் சரியாக எதிர் கொள்ளவில்லை என்று தங்களைத் தாங்களே குளப்புகிறார்கள்.

இலத்திரனியல் தகவல் களஞ்சியங்களை இணைக்கும் பாலமாக, சுயகருத்துக்களை குழுமங்களில் குடில்களில் பலரோடு பகிர்ந்து விமர்சனம் பெற்று முன்னேறவும், கல்வித்துறையில் ஆசிரியரோடு சக மாணவர்களோடு, பொழுதுபோக்கும் துறையிலும் சமூகச்சேவையிலும் சகாக்களுடன் வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறையாகவும் எமது புலம் பெயர்ந்த இளையவர்கள் பயன்படுத்தி தம்மையும் வளம்படுத்தி எமது தேசியத்திற்கு வலுச்சேர்க்கிறார்கள். இவற்றை எனக்கு முன் வந்த எனது அணியினர் விபரமாக உதாரணத்தோடு தந்திருந்தார்கள்.

எமது தரப்பார் ஏற்கனவே ஒத்துக் கொண்டுவிட்டார்கள் இணையத்தால் தீமைகளும் இருக்கு என்று. அதற்காக இணையத்தால் இளையவர்களிற்கு சீரழிவு மட்டும் தான் என்ற வாதம் தவறானது என்றதை தான் நிலை நாட்டி வருகிறார்கள். ஒருவர் கேட்டிருந்தார் இணையத்தால் எமது புலம்பெயர்ந்த சமூகத்தில் இளையவர் சாதித்த ஒன்றையாவது உதாரணமாக தரமுடியுமா என்று. புலம் பெயர்ந்த சமூகத்தில் எமது இளையவர் முன்னின்று ஒழுங்குபடுத்தும் நிகழ்வுகளில் பங்கெடுத்த சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அப்படியான ஒரு அறியாமை அவருக்கு இருக்காது. ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்கு பங்களிக்கும் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சி முதல் நிகழ்ச்சி நிரல், இடம் காலம் என்பன உறுதிசெய்யப்பட்டு அனைத்து ஆர்வமுள்ளோருக்கும் அறிவிக்கும் இறுதிக்கணம் வரை மாத்திரமல்ல நிகழ்ச்சி முடிந்த பின் அதன் நிழற்படங்கள், அங்கு பரிமாறப்பட்ட கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவது வரை மின்னஞ்சலின் அரட்டை மென்பொருட்களின் இணையத்தளங்களின் பங்கு முக்கியமானது. இவற்றிற்கு தொலைபேசி பத்திரிகைகள் வானொலி

போன்ற ஏனைய தொடர்பாடல் முறைகள் நிச்சையமாக உதவுகிறது. அதுமாத்திரமல்ல இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கடிதம் எழுதி வசதி கிடைக்கும் பொழுது நேரே சந்தித்தும் நடைமுறைப்படுத்தலாம் ஆனால் குறுகியகாலத்தில் தனிப்பட்ட பொறுப்புக்கள் மத்தியில் வினைத்திறன் மிக்க முறையில் ஒழுங்கு செய்ய எமது இளையவர்கள் இணையத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவை (தொடர்பாடல் முறைகள்) எல்லாம் அத்திவாரங்கள் போன்றவை, ஒரு கட்டிடத்தின் வெளி அழகைத்தான் ரசிப்பார்களே தவிர அதன் அத்திவாரத்தில் தான் அது தங்கியிருக்கிறது என்று ஒரு கணம் கூட சிந்திப்பவர்கள் மிக அரிது.

சிலர் வாதிடலாம் இணையத்தால் பல பயன்களிருந்தாலும் சில தீமைகளே அதை ஒரு சீரழிவுக்கருவியாக நோக்க வைக்கிறது என்று, அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் கலந்துவிட்டால் அந்த ஒரு குடம் பாலும் நாஞ்சுதான் என்ற பாணியில். நஞ்சையும் நன்மையான வழிகளில் பாவிப்பதா இல்லையா என்பது முற்று முழுதாக எமது கைகளில் தான் உள்ளது, அதற்கு சிறந்த உதாரணம் எமது போராட்டம்.

எதிர்தரப்பு தலைவர் அரைத்த மாவை அவருக்கு பின்னர்வந்தவர்களும் அரைக்கிறார்கள் ஆபாசம் அறைக்குள் வருகிறது என்று. ஆபாசத்தை தேடுபவர் இருக்கும் வரை அவர் இருக்குமிடமெல்லாம் கிடைக்கும் எல்லா வழிமுறைகளாலும் அது வந்தே தீரும். அதற்கு தீர்வு வரும் வழியில் ஒன்றை அடைப்பது அல்ல. தேடுபவர் ஏன் தேடுகிறார், அதை எவ்வாறு திருத்திக் கொள்ளலாம் என்று சிந்தியுங்கள். அதே போல் தான் இன்னெருவர் தமிழ் அரட்டை ஒன்றில் தனது அனுபவமாக எழுதியிருந்தார், தன்னை ஒரு குடும்பப் பெண்ணாக எண்ணிய பின்பும் ஒருவன் தொலைபேசி இலக்கம் கேட்டான் என்று. தனது நிலையில் ஒரு அப்பாவி குடும்பப்பெண்ணிருந்திருந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இன்னொரு மொழியில் வணக்கம் கூறி, ஒருங்கிணைப்பாளரை வன்மையாகக் கண்டித்து தன் வாதத்தை முன்வைத்தார் குருக்காலை..... மன்னிக்கவும் குறுக்காலைபோவான். ஆங்காங்கே சிறிய எழுத்துப்பிழைகள் விட்டிருந்தாலும் ஆணித்தரமாக தன் கருத்துக்களை எழுதியிருக்கின்றார்.

எதிரணியினர் வாதங்களை நன்றாகப் புரிந்துகொள்ளாமல் தங்களைத்தாங்களே குளப்புகிறார்கள் என்று ஆரம்பித்தார். இது உண்மையா?

இலத்திரனியல் தகவல் களஞ்சிங்களை இணைக்கும் பாலம், இதனு}டாக வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறைகளை ஏற்படுத்தி வளம்பெறலாம் என்று முன்வந்தோர் உதாரணத்தோடு தந்திருந்தார்கள் என்றார். தனது அடுத்த கருத்தில் இளையவர்கள் முன்னின்று ஒழுங்குபடுத்தும் நிகழ்வுகளில் எதிரணியிலிருந்து கருத்துக்கூறுபவர்களில் சிலர் பங்கெடுப்பதில்லை அதனால்தான் இந்த அறியாமை என்றார். இது உண்மையா?

இணையத்தால் பல நன்மைகள் இருந்தும் சில தீமைகளே அதை ஒரு சீரழிவுக்கருவியாக நோக்க வைக்கிறது என்று கூறி, அதனை கொடிய நஞ்சிற்கு ஒப்பிட்டார். நஞ்சையும் நல்லவழிகளில் பாவிக்கலாம் என்று எமது போராட்டத்தை உதாரணம் காட்டினார். இவைகளுக்கு எதிரணியினர் என்ன பதில் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ஆபாசம், ஆபாசம் என்று எதிரணியினர் அரைத்தமாவையே திரும்பத்திரும்ப அரைக்கிறார்கள் என்றார். ஆனால் அவர்களுடைய இந்த மா இன்னும் நன்றாக அரைபடவில்லைப்போல் இருக்கிறது. ஆபாசத்தைத் தேடுபவர் இருக்கும்வரை அது வந்தே தீரும் என்றார். அதுதானே! கூடாது என்று தெரிந்தும் ஏன் தேடுகிறார்கள்? இணையத்தளத்தினு}டாக ஒரு குடும்பப் பெண்ணிற்கு வரவிருந்த ஆபத்து வெளியிலும் ஏற்படலாம் என்று விரிவாக எழுதியிருந்தார்.

இதுவரை எதிர்தரப்பார் சீரழிகிறார்கள் என்பதற்கு உதாரணங்களை அடுக்கினார்களேயன்றி, அவற்றைத் தடுப்பதற்கோ, குறைப்பதற்கோ ஆக்கபுூர்வமான எதனையும் முன் வைக்கவில்லை என்றார். இப்படி ஓலமிட்டு நேரத்தை விரையமாக்க வேண்டாம் என்று உரத்துக் கூறுவதுபோல் எனக்குப்பட்டது. இது எதிரணியினருக்கு நன்றாகவே விளங்கியிருக்கும். என்று நினைக்கிறேன். விரைந்துவந்து உங்கள் வாதங்களை முன்வையுங்கள்.

இணையத்தின் சிறந்த எதிர்காலம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போ, எதிர்காலத்தில் இந்தச் சீரழிவுகள் இன்னும் அதிகரிக்குமா? இல்லை இதனால் ஏற்படும் நன்மைகள் பெருகுமா?

தகவல் தொழில்நுட்பம் தனது புரட்சிப்பாதையில் தொடரத்தான் போகிறது, தொடர்பாடல்களுக்கு புதிய புதிய வினைத்திறன் மிக்க வழிகள் இன்னும் இலகுவாக இருக்கத்தான் போகின்றன, அவற்றை "குரங்கின் கை புூமாலை" போல் ஆக்காது எல்லோருக்கும் பயனுள்ளதாக ஆக்கும் முற்போக்கான சிந்தனையில் எமது நேரத்தைச் செலவிடுவோம் என்று அழகாகக்கூறி அற்புதமாகத் தன் வாதத்ததை முடித்திருந்தார்.

பெயர்தான் குறுக்காலை போவான், அனால் அவர் குறுக்கலை போகாமல் ஓர் உறுதியான நேர்வழியில் செல்வதுபோல் எனக்குப்படுகிறது. அவரது வாதத்திறமை அப்படி இருக்கின்றது. அடுத்து தீமை அணியிலிருந்து வரப்போகும் ஈஸ்வர் காத்திருந்து, காத்திருந்து பொறுமையை இழந்து, டென்சனாகி, பக்கத்திலிருப்பவரைக் கடிக்காமல் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.

நன்றி.

Posted

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ் வழி வந்த பெருங்குடி மக்களே (பார்வையாளர்களே) சீர்தூக்கிச் சமன் செய்யும் துலாக்கோல் போல் நடுநிலைமை தவறாது தீர்ப்புச் சொல்ல வந்திருக்கும் நடுவர்களே, எனக்கிங்கு நான் கேட்டவுடன் சீட்டுத்தந்த இரசிகை அவர்களே, மற்றும் இணைய ஊடகம் எம்தமிழ்ச் சிறார்களுக்கு விளைவிக்கும் பெருஞ் சீர்கேடுகளைக் கண்டு, மனம் நொந்து, வெந்து, குமுறிக் கொண்டிருக்கும் எனதணியினரே, எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

மன்னிக்கவும். இன்னும் சிலர் இங்கு இருக்கிறார்கள். என்னவோ இணைய ஊடகங்கள் புலம்பெயர் தமிழ் இளைஞர்களை ஏதோ வாழவைக்கிறதாம் என்று கூறிக்கொண்டு (புூனை பால் குடிக்கும்போது கண்ணை மூடிக் கொள்ளுமாம் அதுபோல) சமூகத்தின் சீரழிவு புரியாத அப்பாவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங் கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே!. உங்களுக்குத் தெரியாதது இல்லை. உண்மை செருப்புப் போட்டுக் கொண்டு வீதியில இறங்க முதல பொய் பல்லக்கில ஏறி ஊரையே சுற்றி வந்துவிடுமாம். அதுபோலத்தான் எதிரணியினர் பாவம் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நடுவர் அவர்களே! உலகத்து மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. தாங்கள் சீரழிகிறோம் என்பது கூடத் தெரியாமல் (புரியாமல்) சீரழிந்து கொண்டிருப்பவர்கள்.

2. தங்களுக்கு சீரழிவு வருவதை புரிந்து கொண்டு சுதாகரித்துக் கொள்பவர் (தப்பித்துக் கொள்பவர்)

இதில எதிரணியினர் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்களாகவே புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நடுவர் அவர்களே!

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். எதிரணியினர் புலம்புவது போல மனக்கட்டுப்பாடு இருந்தா சீரழியாமல் தப்பித்துக் கொள்ளலாம் (பார்க்க- சிநேகிதியின் கருத்து) என்ற கருத்தை நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்களா?.

மனக்கட்டுப்பாடு - அது பெரியவங்க நாங்களே இல்லாம அல்லாடிட்டுக் கிடக்கிறோம். இதில இளைஞர்களுக்கு இருக்கும் எண்டு நினைக்கிறீங்க????

எத்தனையோ அடிபட்டு, அவமானப்பட்டு, அனுபவப்பட்டு இன்னுமே பெரியவங்களால தங்கட மனசக் கட்டுப்படுத்த (மனம் ஒரு குரங்கு. அதைத் தாவவிட்டால் தப்பி ஓடவிட்டால்............)

மார்க்கம் இல்லாம ஓடுப்பட்டுத் திரியுறாங்க.

மனக்கட்டுப்பாடு என்ன கடையில வாங்கிற கொம்பியுூட்டர் பாட்ஸ் எண்டு நினைச்சாங்களா. வாங்கிப் புூட்டிவிட்டா சரி எண்டு........

அது ஒண்ணுமில்ல நடுவர் அவர்களே. எதிரி அணியில பாத்தீங்கெண்டா பெரும்பாலும் (ஒன்றிரண்டு கட்டையில போறதுகள தவிர) பட்டிமன்றத் தலைப்புக்கு சம்பந்தப்பட்ட புலம்பெயர் இளைஞர்களே ஆக்கிரமிச்சு இருக்கிறப் பாக்கலாம். அதுதான் அவர்களுக்கு தாங்கள் சீரழிஞ்சு கொண்டிருக்கிறது தெரியேல்ல. அவர்களின் நலன்களில அக்கறை உள்ள நான் (தூயவன் கவனிக்கவும்) இந்தப்பக்கம் இருந்து பார்த்து கவலைப்பட்டு, ஏதோ என்னால் இயன்றவரை புத்திமதி சொல்லலாம் என்று வந்தேன்.

இன்னுமொரு முக்கியமான ரகசியம் உங்களுக்கு மட்டும் சொல்லுறன் நடுவர் அவர்களே.

உலகத்திலேயே பகுத்தறிவு உள்ள மிருகம் என்று மனிதனை சொல்லுவினம். பகுத்தறிவு எண்டா என்ன???? நல்லது எது கெட்டது எதுஎண்டு அலசி ஆராய்ந்து (பகுத்து, அறிந்து) சரியான, மிகச் சரியான, மிகமிகச் சரியான முடிவை எடுப்பது.

இங்கு எத்தனைபேர் அப்படி சரியான முடிவு எடுக்கிறார்கள். (உங்களைத் தவிர) சரியான முடிவுதான் எடுத்திருப்பதாக நாம் முடிவு எடுக்கும்போது நினைத்திருப்போம். ஆனால் பின்னர் அதுவும் பிழையான முடிவுதான் என்று அறிந்து கவலைப்படாதவர் யாராவது இங்கிருக்க முடியுமா????

ஏதாவது ஒரு இடத்தில எப்பவாவது ஒரு சந்தர்ப்பத்தில எல்லோருமே பிழையான முடிவு எடுத்துத்தான் இருப்போம். (அப்பிடி நான் ஒருக்காலும் செய்ததில்லை என்று இங்கு யாராவது வாதிடுவார்களானால், அவர்களுக்கு தான் பிழையான முடிவு எடுத்தது இன்னும் தெரியாமல் இருக்கும்) பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியில வரும்போது, எல்லாமே சரியான விடை எழுதிப் போட்டு வாறவை எத்தினைபேர் வெளியில வந்து மற்ற மாணவரோடு கதைச்சபிறகு கவலைப் பட்டிருப்பினம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நடுவர் அவர்களே! அழிவுப் பாதையில போறவன் எவனுமே தான் அழிவுப்பாதையில போறது தெரிஞ்சு போறதில்ல. அது நல்ல பாதையெண்டு பிழையான ஒரு முடிவை அவன் எடுத்திருந்தா, அவனுக்கு எவ்வளவுதான் மனக்கட்டுப்பாடு இருந்தும் பிரியோசனமில்லை. அப்பிடி பிழையான முடிவை எடுத்தவர்கள்தான் எதிரணியில நிறையப் பேர் இருக்கினம். அங்க மனக்கட்டுப்பாடு இருந்தும் என்ன லாபம். சீரழிவு சீரழிவுதானே. இதைவிட முக்கியமான ஒரு விடயத்திற்கு வருகிறேன்.

உலகத்தில எந்தப் பொருள் (அல்லது ஒரு விடயம்) கவரும் தன்மையைக் கொண்டிருக்கோ, அது எப்போதுமே தனக்குள்ளே மறைமுகமான (Hidden traps) பொறிகளைக் கொண்டிருக்கும். இதை யாரும் விஞ்ஞானிகளோ, மேதைகளோ முதல்லேயே சொல்லியிருக்காவிடில், எழுதி வச்சுக் கொள்ளுங்கோ இன்றையில் இருந்து இது ஈஸ்வர் விதி (Eswar`s law) என்று அழைக்கப்படும்.

இதற்கு உதாரணம் நான் பக்கம் பக்கமா எழுதலாம். ஏனெண்டா இந்த விதிக்குள்ள அடங்காதது எதுவுமில்ல. இங்க நான் பொறி என்று சொன்னதுக்குள் இழப்புக்கள் எதுவாகவும் இருக்கலாம். நேர விரயம், பண விரயம், பொருள் விரயம், உடல் சீர்கேடு, இறப்பு உட்பட எதுவாகவும் இருக்கலாம். ஏன் எத்தனையோ பேர் பைத்தியமாக் கூடத் திரியிறாங்க. இதுவும் ஒரு பொறிதான் என்று அவர்கள் கண்டுபிடித்து திருந்துவதற்குள் காலம் கடந்திருக்கும். இதற்கு மாமன்னர் முதல் மகாமுனி வரை எவரும் விதிவிலக்கல்ல.

சிகரட் குடிக்கிறவை, மதுபானம் பாவிக்கிறவை, போதைப்பொருள் பாவிக்கிறவை சீட்டு விளையாடுறவை, இவ்வளவு ஏன் தொலைக்காட்சியில தொடர்நாடகம் பார்க்கிறவை எல்லாரையும் கேளுங்கோ. ஒரே பதில்தான் வரும். தொடக்கத்தில சும்மா பொழுதுபோக்குக்குத்தான் தொடங்கினது. இப்ப விட ஏலாமக் கிடக்கு.

ஏன் யாழ் களத்துக்கு சும்மா வந்து போன நாங்களே இதுக்குள்ள கட்டுண்டு கிடக்கேல்லையா. ஒருநாளைக்கு யாழுக்கு வராட்டி ஏதோ முக்கியமான வேலையை செய்யாம விட்டமாதிரி மனசு குறுகுறுக்காதவர் யாரும் இருக்கிறீர்களா.

இப்ப எதிரணியினர் பலரும் வைத்த கருத்தின் சாராம்சத்தை எடுத்து நோக்குவோமாக இருந்தால், அங்கே இணையத்தின் பலாபலன்கள் பக்கம் பக்கமாக எடுத்துக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

அதெல்லாம் வெறும் கவர்ச்சி!!!!!!!

அதற்குள்ளே மறைந்து கிடக்கின்ற தீமைகள் அவர்களின்ட கண்ணுக்கு இப்ப தெரியாது. அதால அவர்கள் படப்போற சீரழிவுகள் அவர்களுக்கு இன்னும் புரியேல்லை. எங்கட அணி நண்பர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இளையோர்தானே. இனி நீங்கள் ஒருக்கா ஆணித்தரமா சொல்லிவிட்டீங்களெண்டா அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு இருக்கு.

எதிரணி அப்பாவிகள் பட்டியலிட்டதுபோல் இணையத்தின் பயன்கள் சொல்லிடங்காதவைதான். இளைஞன் முதல் இறுதியாக வந்தவர்வரை இணையத்தின் நன்மைகளை எக்கச்சக்கமாக எடுத்து வீசினார்கள். ஆனால்......... ஆனால்............ புலம் பெயர்ந்த தமிழ் இளைஞருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நன்மைகளை பட்டியலிட மறந்து விட்டார்கள். பாவம் அவர்கள் அப்படியொன்று இருந்தால்தானே.......

இணையத்தின் வசதிகள் எங்களுக்கும் தெரியுமையா. இந்த இணைய நூற்றாண்டில் காலைக் கடன் கழிப்பதற்கு மட்டும் கதிரையை விட்டு எழுந்தால் போதும். (அதுவும் எடுத்துச் செல்லும் கணனி இருந்தா காலைக்கடன் கழிக்கிற நேரத்திலும் இணையத்தை பார்வையிடலாம்)

படிக்க வேணுமா.......... இணையம்.

வங்கிக்கு போக வேணுமா.......... இணையம்

கடைக்கு போக வேணுமா........ இணையம்

வாசிகசாலை............. ஊகூம் இணையம்.

ஊருக்குச் சென்று உறவினரைப் பாக்க வேணுமா, கதைக்க வேணுமா........... இணையம்

இனி கோயிலுக்கும் ஒருவனும் போகமாட்டான் ......... இணையத்தில இருக்கிற கோயிலைப் பாத்து ஒரு கும்பிடு போட்டா காணாதே?

காசி என்ன கங்கை என்ன..... கைக்கெட்டும் தூரம்தான்.......போங்கடா!

எங்கட காலத்தில பையன்கள் (நானல்ல நண்பர்கள்) விடியக் காலம எழுந்து, சீவிச்சிங்காரிச்சு சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கேயோ போய்விட்;டு களைத்து விழுந்து வருவார்கள். வீட்ட வந்தா அப்பா கேட்பார், என்ன கொண்டுபோய் விட்டுட்டு வந்தாச்சா. இதே போல மாலையிலும் வீட்டை கொண்டை விடவேணும். இதைவிட கோயில் குளத்துக்கு கூட்டிக்கொண்டு போக வேணும். பயந்து பயந்து சந்திக்க வேணும். இப்படி அல்லாடி வளர்ந்தது எங்கள் காலத்து காதல். ஆனா இப்ப இருந்த இடத்தில இருந்து இணையக் காதல். காதலுக்காக அலைவதிலும் ஒரு சுகமுண்டென்று சொல்லக் கேள்வி. அந்த சுகம் இப்ப கிடைக்குமா.???????

அந்தக் காலத்தில வாசிகசாலைக்குப் போனா, பத்திரிகை படிச்சு அறிவைப் பெருக்குவது மட்டுமல்ல, நாலு தெரிஞ்ச மனிசரைச் சந்திக்கலாம், அவையோட கேள்விப்பட்ட செய்திகளை கலந்து பேசலாம் காற்றோட்டமா இருந்து. நாலு சுவத்துக்கு நடுவில இருந்து உங்களோட நான் கதைச்சாலும் முகம் பாத்துப் பேசுறது மாதிரி வருமே.

இப்பிடி எல்லா வசதிகளும் கைக்கெட்டும் நிலை இருந்தாலும், அதில ஒருவகை இழப்பு இருக்கிறதை நீங்கள் எல்லோருமே உணர்ந்திருப்பீங்கதானே.

இனி புலம் பெயர்ந்த தமிழ் இளையோர் இந்த இணையத்தால் எப்பிடி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறனர் என்று பார்ப்போம்.

உங்களுக்குத் தெரியாததா, தமிழ்சமூகம் தங்கட பிள்ளைகளை பொத்திபொத்தி வளர்க்கிற சமூகம். தோளுக்கு மேல வளர்ந்த பையன் எண்டாலும் சரிதான், வயதுக்கு வந்த பெண் எண்டாலும் சரிதான் முடிவுகள் அப்பா அம்மாதான் எடுக்க வேணும். பிள்ளைகளுக்கு சுயமா முடிவு எடுக்கத் தெரியாது என்பது பெற்றோரது கணிப்பு.

எங்கட காலத்தில ஒரு திருட்டு தம் அடிக்கிறதெண்டாலும் எவ்வளவு கஷ்டங்கள், யாராவது பாத்திடப் போயினம். சொந்தக்காரர் மட்டுமெண்டில்லை. ஊரவன் யார் பார்த்தாலும் துலைஞ்சிது. போறபோக்கில வத்தி வச்சிட்டுப் போயிடுவாங்கள். ஒரு பிள்ளை நல்ல பிள்ளையா வளக்கப் படவேணும் எண்டதில ஊரே கவனமா இருக்கும்.

ஆனா இப்ப புலம் பெயர்ந்த இடத்தில???????? கட்டுப்பாடுகள் எதுவும் அற்ற நிலை. தமிழன் யார் பார்த்தாலும் எனக்கென்ன. அப்பா அம்மாவே என்னை அடிக்கேலாது. இதில மற்றவன் என்ன சொல்லுறது எண்ட நிலை.

அதைவிட முக்கியமாக வெளிநாடு வந்த பெரும்பான்மை பெற்றோர் தங்கள் வசதிகளைப் பெருக்குவதில் காட்டுற அக்கறையை, தங்கள் அறிவைப் பெருக்குவதில் காட்டுவதில்லை.

நாளுக்குநாள் முன்னேறிவரும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை விளங்கிக் கொள்வதில் பல பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான இடைவெளி அதிகம். பிறகென்ன பிள்ளைகள் காட்டில மழைதான்.

மதன் அண்ணாச்சி சொல்லியிருந்தார் பத்திரிகை, தொலைக்காட்சியில இல்லாத கெட்ட விசயங்களா எண்டு (பார்க்க மதனின் கருத்தை).

ஐயா ! லண்டன் பத்திரிகையில மூண்டாம் பக்கத்தில என்ன வருதெண்டு லண்டனில இருக்கிறவங்களுக்கு தெரியும். ஜேர்மனில இருக்கிறவங்களுக்குத் தெரியுமா????

கனடாத் தொலைக்காட்சியில காட்டிறது இத்தாலியில தெரியுமா?????

ஆனா இணையத்தில போட்டா, அது எல்லா இடத்திலும் தெரியுமய்யா. இணையத்தின்ரை சக்தி பெரிசய்யா. பத்திரிகையும் தொலைக்காட்சியும் சேர்ந்து பத்துப் பேரைக் கெடுத்தா, இணையம் நூறு பேரைக் கெடுத்த மாதிரி.

அதுமட்டுமில்ல, அந்தக்காலத்தில யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் வந்ததாக. பெரியவர்களுக்கே அங்கொன்று இங்கொன்றாகத்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்ப புலம்பெயர் நாட்டில் இளையோர் பலருக்கு நீரிழிவு நோய். காரணம் என்ன. அதுதான் எல்லாமே இருந்த இடத்திலேயே கிடைக்குதே. உடல் வருத்தி உழைப்போ, உடற்பயிற்சியோ இல்லையே. புலம் பெயர்ந்த இளையோர் உடற்பயிற்சியையும் இணையத்தின் மூலம் செய்ய வசதியேதும் இருக்கா எண்டு தேடுவதாகக் கேள்வி.

இது நன்மையா மறைந்திருக்கும் தீமையா????????

இதைவிட புலம்பெயர் தமிழ் இளையோரிடம் சாதாரணமாகக் காணக்கூடியது மூக்குக் கண்ணாடிப் பாவவை. எங்கட காலத்தில எங்காவது ஒருவன் கண்ணாடி பாவிப்பான். அவனுக்கு கண்ணாடி எண்டே பட்டப் பெயர் வைத்திருப்போம். இப்ப கண்ணாடி எண்டா எந்தக் கண்ணாடி என்று கேள்வி வரும்.

இதைவிட பல புதிதுபுதிதான நோய்கள் மௌஸ் பிடிச்சா கைநரம்பு பிச்சுக்குதாம். தொடர்ந்து தட்டச்சை தட்டிக்கொண்டே இருந்தா தட்டச்சேபோவியா என்றொரு நோய். ஒக்காந்து ஒக்காந்து ஒக்கார்ற இடமே காய்ச்சுப் போச்சு. (எந்திரிச்சு வேல செய்யுங்கப்பா). இன்னும் பல புதுநோய்கள் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எல்லாமே இணையத்தின் உதவியுடன் (கணனிக்;கு முன்னால) மனிதன் சோம்பேறியா மாறுவதால.

இவ்வளவு நேரமும் நான் சொன்னதில இருந்து நடுவர் அவர்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். ஆஆஆஆஆ அதேதான்.

அளவுக்கு மிஞ்சினா இணையமும் நஞ்சு

மீண்டும் எனக்கு (இப்பவாவது) சந்தர்ப்பம் அளித்த எனதணி நண்பர்கள், ஒருங்கிணைப்பாளர், மட்டுறுத்துனர், மற்றும் பார்வையாளர் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.....

அன்புடன்

ஈஸ்வர்

உடல் உழைப்புக்கு மதிப்பில்லாமல் செய்த இணையத்தை அளவோடு பாவிப்போம். இணையம் எங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது. அது சீரழிவை நோக்கிய பாதை!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக பல அரிய கருத்துக்களை வைத்துச்சொன்ற ஈஸ்வர்.. சீரழிவுகளை புரியாத(அறியாத) அப்பாவிகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கூறிச்செல்கிறார். தனது காலத்து அனுபவங்கள் பலவற்றையும் பகிர்ந்து செல்கிறார். எங்கே பார்ப்போமே...

உண்மை செருப்புப்போட்டு வீதியில் இறங்கமுதல் பொய் பல்லக்கில் ஏறி ஊரையே சுற்றி வந்துவிடும் என்று

கூறிச்செல்கிறார். கடைசியாய் வெளியுலகம் காணப்போவது உண்மையைத்தானே ஈஸ்வர்..?? :wink:

உலகத்து மக்களை இருவகையாகப்பிரிக்கும் ஈஸ்வர்..

1) தாங்கள் சீரழிகிறோம் என்பது கூடத்தெரியாமல் சீரழிந்து கொண்டிருப்பவர்கள்.

2) தங்களுக்கு சீரழிவு வருவதை புரிந்து கொண்டு சுதாகரித்துக்கொள்பவர்கள்

என்கிறார்.. அப்ப தாம் சீரழிகிறோம் என்று தெரிந்தும் சீரழிபவர்கள் உலகத்தில் இல்லையா என்ன..??

மனக்கட்டுப்பாடு இருந்தா சீரழியாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்புகிறார் ஈஸ்வர்.. பெரியவர்களே மனக்கட்டுப்பாடு இல்லாமல் அல்லாடிக்கிடக்கிறோம் இதில்

இளைஞருக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறார்..?? எங்கே பார்ப்போம் எதிரணியினர் என்ன பதில் வைக்கிறார்கள் என்று.

மனம் ஒரு குரங்கு அனுபவப்பட்ட பெரியவர்களே அதை அடக்கமுடியாமல் திண்டாடுறார்கள். இளையோரால்

முடியுமா என்று கேட்கிறார்..?? எங்கே எடுத்துவிடுங்கள் உங்கள் பதிலை எதிரணியினர்.

எதிரணியில் இருப்பவர்களில் ஓரீருவரைத்தவிர மற்றவர்கள் இளையோரே அது தான் அவர்களுக்கு தாங்கள் சீரழிந்து கொண்டிருப்பது தெரியவில்லை என்கிறார். அவர்களது நலன்களில் அக்கறை உள்ள ஈஸ்வர் கவலைப்படுகிறாராம்.. இளையோரை அந்தப்பாட்டன் உங்களுக்காக கவலைப்படுகிறார் ஒரு கணம் செவி சாயுங்களேன்.

பாத்துப்பாத்து ஈஸ்வர்.. இந்தக்காலத்தில புத்திமதியை எல்லாம் நம் இளையோர் எங்க கேக்கிறாங்க..?? :wink:

உலகத்தில் பகுத்தறிவு கொண்ட மிருகம் மனிதன் தான் என்று சொல்லும் ஈஸ்வர்.. இங்கு எத்தனைபேர் ஒரு

விடையத்தை அலசி ஆராய்ந்து சரியான முடிவை எடுக்கிறீர்கள்...? என்று கேள்வியை எழுப்பியதோடு.. நாம்

எடுத்த முடிவு பிழையென பின்னர் வருந்தாதவர் யாராவது இருக்கிறீர்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்..

யாராவது இருக்கிறீர்களா..?? ஒரு தடவையேனும் பிழையான முடிவு எடுக்காதவர்கள் இருக்கிறீர்களா??

ம் இல்லாத்தையும் விட.. பட்டிமன்றத்தில் ஈஸ்வர் விதி என்ற ஒரு விதியை வேறு உருவாக்கிச் செல்கிறார். அதாவது "கவரும் தன்மை கொண்ட பொருள் எப்போதுமே தனக்குள் மறைமுகமாக பொறிகளைக்கொண்டிருக்கும்" என்று

கூறுகிறார். இதை ஏற்கனவே யாரும் சொல்லியிருக்காவிட்டால் யாழ் சார்பாக.. அறிமுகப்படுத்திவிடுவம். :wink:

அந்த விதியை நிறுவுவதற்கு பல உதாரணத்தை காட்டமுடியும் என்று கூறும் ஈஸ்வர். அந்த மறைமுக பொறியிற்குள் மாட்டிக்கொண்டு நாம் இழப்பது எதுவாகவும் இருக்கலாம் நேரம், பணம், பொருள், ஆரோக்கியம், உடல். ஏன் உயிரைக்கூட என்று கூறிச்செல்கிறார். என்ன சொல்கிறார்கள் எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.. ஏதாவது ஒருவகையிலாவது இந்த பொறியிற் சிக்கியிருக்கிறீர்களா..??

எதிரணியினர் பலரும் வைத்த கருத்தின் சாராம்சத்தை நோக்க வெளிக்கிட்ட ஈஸ்வர். அவர்கள் இணையத்தின்

பலாபலன்களை பக்கம் பக்கமாய் கூறியிருக்கிறார்கள் என்கிறார். இந்த பலாபலன்களிற்குள் கிடக்கின்ற சீரழிவுகளை புரிய மறுக்கிறார்கள் எதிரணியினர் என்று கவலைப்படிற மாதிரியிருக்கு. இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார்.. இணையத்தின் பலன்களை வைத்துச் சென்றவர்கள். புலம் பெயர் வாழ் இளையோருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பட்டியல் இட மறந்துவிட்டார்கள் என்கிறார்.. எங்கே தகுந்த விளக்கம் கொடுக்கிறார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்... அந்த பலா பலன்கள் தமிழ் இளையோருக்கு

பொருந்தாதா என்ன..? அப்படி என்று கேக்கிறாங்க எதிரணியினர்.

இணையத்தின் பயன்கள் பலவற்றை தானும் எடுத்து விட முடியும்.. என்று கூறி பல நன்மைகளை எடுத்து

விட்டிருக்கிறார். கழிப்பறைக்கு மட்டும் கதிரையை விட்டு எழுந்தால் போதும். அதுவும் மடிக்கணணி வைத்திருந்தால்

அங்கும் கூட இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறி.. நன்மைகளை சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த நன்மைகளால் இளையோருக்கு கிடைக்காது போகும் பலவற்றையும் விளக்கியிருக்கிறார்..

இணையக்காதலில் காதலுக்காய் அலையும் சுகம் உண்டா..?? என்று கேட்கிறார். துணையை பத்திரமாய் வீடு

சேர்க்க வழி உண்டா கேட்கிறார். இந்த நாடுகளில தான் உந்த பிளாக் கற் வேலை அவசியம்.. :wink:

இணையத்தில் நூல் நிலையம் இருக்கலாம் ஆனால் வாசிகசாலை சென்று படிச்சு நாலு மனிசரை சந்திச்சு..

அறிஞ்சதைப்பகிர்ந்து பிறர் அறிஞ்சதைப்பெற்று.. காற்றோட்டமாய் இருந்து பேசமுடியுமா அப்படி என்று கேக்கிறார்.. நாலு சுவற்றுக்குள் சுவாசித்த காற்றையே சுவாசிக்கிறீர்கள் என்கிறார்.

இன்னொன்றை சொல்கிறார்.

உங்களுக்குத் தெரியாததா, தமிழ்சமூகம் தங்கட பிள்ளைகளை பொத்திபொத்தி வளர்க்கிற சமூகம். தோளுக்கு

மேல வளர்ந்த பையன் எண்டாலும் சரிதான், வயதுக்கு வந்த பெண் எண்டாலும் சரிதான் முடிவுகள் அப்பா

அம்மாதான் எடுக்க வேணும். பிள்ளைகளுக்கு சுயமா முடிவு எடுக்கத் தெரியாது என்பது பெற்றோரது கணிப்பு

அவர்களது இந்த எண்ணம் சரியா..?? பிள்ளைக்கு சுயமா முடிவை எடுக்கத்தெரியாது என்று முடக்கி வைக்கலாமா..??

பாவம் ஈஸ்வர் ஒரு திருட்டு தம் அடிக்க எவ்வளவு கஸ்டப் பட்டிருககிறார் என்றது இப்பான் தெரியுது. பெற்றார்

மட்டும் அல்ல ஊரே கண்ணுக்க எண்ணையை விட்டுக்கொண்டு திரிஞ்சிருக்குது என்றால் பாருங்களேன். அப்படி வளர்ந்ததால் பிள்ளையள் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டார்களா?? பெற்றோருக்காய் வெளியில் நடித்து பள்ளிக்கூட கழிவறை வழிய தம்மடிச்ச அனுபவங்கள் பலருக்கு இருக்குமே..?? :wink:

ஒரு நாட்டுப்பத்திரிகையையும் தொலைக்காட்டிசியையும் இன்னொரு நாட்டைச்சேர்ந்தவர்கள் பார்க்க முடியாது என்று

கூறும் ஈஸ்வர் ஆனால் எல்லா நாட்டைச் சேந்தர்வகளும் இணையம் பார்க்கலாமே என்று மதனது கருத்திற்கு தனது

கருத்தை வைத்திருக்கிறார். பத்திரிகையும் தொலைக்காட்சியும் பத்துப் பேரைக் கெடுத்தா, இணையம் நூறு பேரைக் கெடுத்த மாதிரி. என்கிறார் எங்கே என்ன சொல்கிறார்கள் பார்ப்போமே..

தனது கருத்தில் தொடர்ந்து.. கணணியை பாவிப்பதால் ஏற்படுகின்ற நோய்கள் பற்றி தெரிவித்து அளவுக்கு

மிஞ்சினா இணையமும் நஞ்சே என்று கூறிச்செல்கிறார் ஈஸ்வர்..இணையம் எம்மைக் கட்டுப்படுத்தக்கூடாது அது சீரழிவை நோக்கிய பாதை என்று கூறிச் செல்லும் ஈஸ்வரைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற

அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.

Posted

யாழ்க்கள உறவுகளாகிய உங்களின் அன்பினை பகிர்ந்து இப்பட்டிமன்றத்துள் நுளைகின்றேன்.

தவறுகள் இருப்பின் பொறுத்தருளுக.

முதலில் நல்ல ஒரு ஆழமான தலைப்பினைத் தேர்ந்தெடுத்து பட்டிமன்றத்தை ஒழுங்கு படுத்திய ரசிக்கைக்கு எனது நன்றிகளைத்தெரிவித்து.

யாழ்க்களத்தை நானறிந்த காலம்வரை நாணயத்துடன் நேர்மையையும் கொண்டுள்ள நடுவர்களான தமிழினி அக்கா மற்றும் செல்வமுத்து ஐயா ஆகிய இருவருக்கும் எனது தாழ்மையான வணக்கத்தை தெரிவித்து.

கருத்துக்களில் காந்தமும் கள உறவுகளிடம் கண்ணியத்தோடும் களமாடும் எங்கள் அணியின் வெற்றிக்கு வளிகாட்டும் இளைஞ்ஞனுக்கும் எமது இளைஞ்ஞன் ஏவும் கணைகளாய் மாறி எதிரிகளைத்தாக்கும் கருத்துக்கணைகளாகிய எமதணி நண்பர்களை வாழ்த்தி.

என்நேரமும் ஏதோ ஒன்றுக்காய் ஒடுவதோடு நில்லாது. கனிவான வார்த்தைகளால் எழிமையான கருத்தோடு எங்கிருந்தாலும் யாள்கள உறவுகளோடு உறவாட ஓடிவரும் எதிரணிதலைவர் சோழியன் அண்ணாவுக்கும். அவர் ஓடும் பொழுது அவருக்கு உதவிக்காய் ஓடி எதிரணியின் வெற்றிக்காய் பாடுபடும் எதிரணி உறவுகளின் வெற்றிக்காய் அவர்களையும் வாழ்த்தி, எனது வாதத்தை தொடர்கின்றேன்.

புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?"

photo95jz.jpg

நன்றி பதிவு இணையம்

இணயத்தினால் தமிழ் இளைஞ்ஞர்கள் பயனைடைகின்றார்கள் இதுவே எனது வாதம்.

புலம்பெயர் தமிழ் இளைஞ்ஞர்கள் அறிவாளிகள். அவர்கள் அன்னப்பறவை போல பாலையும் தண்ணீரையும் பிரித்தறிந்து தமக்கு பயயுள்ளவற்றையே உண்பார்கள்.அவர்கள் நமது எதிர்காலதூண்கள். நீங்கள் புலம்பெயர் தமிழ் இளைஞ்ஞர்களை கவனித்திருப்பீர்களானல். ஒன்றை கவனித்திருப்பீர்கள். ஒருகாரியத்தில் ஈடுபட்டால் மிகவும் சாதுரியமாக செய்து முடிப்பார்கள். அதுவும் கணனியில் என்றால் சொல்லவே வேண்டாம். இங்கே பாடசாலை செல்கின்ற பல நமது இளைஞ்ஞர்கள் இணையத்தின் பயனாளிகளே. இணயத்தின் பயனால் இவ் மாணவர்களே இன்றய புலம்பெயர் சமூகத்தில் கொடிகட்டி பறக்கின்றார்கள்.

இன்றய புலம்பெயர் தமிழ் இளைஞ்னன் இணய உதவியுடன் தகவல் சேகரிப்பினால் பன்மடங்கு அறிவாற்றலுள்ளவனாக விளங்குகின்றான்.

ஐய புளுகர் பொன்னையா அவர்களே! தலைப்பினை எமக்கா விளங்கப்படுத்துகின்றீர்கள். தலைப்பை விளங்கித்தானையா களமாட வந்தோம். எமது அணியினர் எமது நிலையை விளக்கிய பின்பும் உங்கள் அணியின் வீண்வாதம் தொடர்கின்றது.

ஐயா புளுகர் பொன்னையா என்னையா நீங்கள் சொல்வது நீயாயமா? ஐயா முத்து எடுக்கவேண்டுமென்றால் மூச்சடக்கித்தான் ஆகணும். முத்து குளிக்கும்போது முழ்ச்சங்கு குத்திவிடும்மென பயந்தால் எப்படி? முத்தை சுற்றி முள்சங்கு இருக்கத்தான் செய்யும்.

முள்சங்கின் குத்தினை வாங்காது முத்தை எடுப்பதுதில்த்தான் உங்கள் வெற்றி. சரி முள் குற்றினாலும் முத்தை எடுத்தீர்களானால் அதுகும் ஒருவகை வெற்றிதான். வயலில் நெல் விதத்தவன் தரையில் பாம்பு பூச்சிகள் இருக்குமென பயந்து.வயலுக்க பாம்பு வருமே... வந்தால் கடிக்குமே... கடித்தால் நான் என்ன செய்வேன் என விவசாயி எண்ணினால் நிலமை என்ன ஆகும். துணிந்து களம் புக வேண்டும். களத்திலுள்ள நன்மைகளை பெறவேண்டும். அதுதான் இன்றய நமது இளைஞ்ஞர்கள் செய்கின்றார்கள். ஒருசில புலம்பெயர் தமிழ் இளஞ்ஞர்கள் இணையத்தால் சீரளிகின்றார்கள் என்பதற்காய் ஒட்டுமொத்த தமிழ் அறிவாற்றல் படைத்த இளைஞ்ஞர்களையும்

குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நானும் எனது அணியினரும் தயாராக இல்லை என கூறி.

இவ்வரிய வாய்ப்பினை எமக்களித்த யாள் களத்திற்கும், பொறுப்பாளருக்கும், மட்டுறுத்தினர்களுக்கும் நன்றியைக்கூறி விடைபெறுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்கள் என்ற தனது அணிக்காக மதுரன் அவர்கள் கருத்து வைத்துச்சென்றுள்ளார். அவரது கருத்தைப்பார்ப்போம்.

இணையத்தின் பயனால் புலம் பெயர் வாழ் தமிழ் இளைஞர்கள் சமூகத்தில் கொடி கட்டிப்பறக்கிறார்கள் அப்படி

என்று கூறும் மதுரன். நம் இளையோர்கள் அன்னப்பறவை போல தமக்கு பயனுள்ளவற்றையே உண்பார்கள். அதுமட்டும் அல்ல அவர்களே நமது எதிர்காலத்தூண்கள் அப்படி என்று புலம் பெயர் வாழ் இளையோரை பாராட்டி, நம் இளையோர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதை சாதுரியமாக முடிப்பார்கள் என்று கூறிச்செல்கிறார். எங்கே நமது இளையோர் கொடிகட்டிப்பறக்கிறார்கள் என்ற கருத்திற்கு என்ன பதில் வருகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போமே.

புளுகர் பொன்னையா அவர்கள் எதிரணியினர் தலைப்பை விளங்கிக்கொள்ளவில்லை என்று கூறிய கருத்திற்கு மறுதலித்து தலைப்பை விளங்கித்தான் ஐயா கருத்து வைக்க வந்துள்ளோம் அப்படி என்று கூறுகிறார்.

இன்னொன்றைக்கேட்கிறார்.. வயல் விதைத்த ஒருவன் வயலில் பாம்பு பூச்சி வருமே என்னைத்தீண்டுமே என்று

பயந்தால்.. அந்தப்பயத்தினால் வயலில் இறங்காமல் விட்டால் நிலைமை என்ன?? அப்படி என்று கேக்கிறார்.

பயப்பிடாமல் களத்தில் இறங்கினால் தான் அறுவடை செய்ய முடியும் என்கிறார். இணையத்தில் தீமை இருக்கு

அப்படி என்று நீங்க ஒதுங்கினால் இணையம் தரும் நன்மையை அறுவடை செய்ய முடியுமா அப்படி என்று

கேக்கிறாரோ.

கடைசியாக ஒரு சில இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்றதை ஒத்துக்கொண்டு.. அதற்காக ஒட்டுமொத்த இளையோரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நாங்கள் தயார் இல்லை என்று கூறி அமர்கிறார். அவரைத்தொடர்ந்து புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.

Posted

நடுவர்கள் தமிழினி அவர்களே செல்வமுத்து அவர்களே... எமதணித் தலைவர் அவர்களுக்கும் எமது அணியினருக்கும் எனது மகிழ்ச்சியான வணக்கங்கள்... எதிரணியில் தோல்வியின் விளிம்பில் விளிபிதுங்க இருப்பவர்களுக்கும் என் அண்பான வணக்கம்......

அமெரிக்க ராணுவத்தால் தகவல் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டு பின் வெகுசனப்பாவனைக்கு விடப்பட்ட இணையஊடகத்தால் புலம் பெயர் இளைஞர்கள் நன்மைஅடைகிறார்களா அல்லது சீரளிந்து போகிறார்களா..??

எதிரணித் தலைவர் இளைஞன் உழைப்பாளியாய் ஒரு கவிஞனாய் உயர்ந்த இந்த சஞ்சீவ் என்கின்ற இளையோன்... இணையத்தால் உயரவில்லை சொந்த உழைப்பால் போற்றப்படுகிறார்... என்பதுதானே உண்மை...

தலைவர் அவர்களே...! இளையோருக்கு இந்த இணையங்கள் புதிதாக ஓண்றையும் செய்துவிடவில்லை... வானொலிகளும்,தொலைக்காட்ச்சிக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இணைய ஊடகத்தால் புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக வாதாட வந்திருக்கும் தல அவர்கள். தானே ஒரு தீர்ப்பை கூறிவிட்டார். தீர்ப்பை கடைசில பார்ப்பம் இப்ப ஏன் வீணான பிரச்சனையை.

புலம் பெயர்வாழ் தமிழ் இளையோருக்கு இந்த இணையமானது புதிதாக எந்த நன்மையையும் செய்யவில்லை என்று கோடிட்டுக்காட்டுகிறார். இணையமானது புதிதாக எதையும் தந்துவிடவில்லை வானொலி தொலைக்காட்சி என்று இதர ஊடகங்கள் நமக்கு அழித்ததையே தருகின்றது. சோம்பேறித்தனத்தையும் சேத்து தருகிறது என்கிறார். இதை எதிரணியினர் ஏற்றுக்கொள்கிறீர்களா..?? மற்ற ஊடகங்கள் தராத எத்தனை சிறப்புகளை இணையம் தருகிறது எங்கே பதில் வருகிறதா பொறுத்திருந்து பார்ப்போம். எங்கே தொடர்ந்து கருத்தைப்பார்ப்போமே..

எதிரணித்தலைவர் கூட உழைப்பால் தான் முன்னேறினார் இணையத்தால் அல்ல.. உழைப்பிருந்தால் தான் முன்னேறலாம் என்கிறார்.

உடல் தளர்ந்து போய் இருக்கும் முதியவர்களுக்கு இணையம் பயன்படலாம் ஒரே இடத்தில் இருந்து தங்கள் வேலையைச் செய்ய என்கிறார். இளையோர் ஓடியாடி பெற்றால் தான் அவர்களுக்கு உடல் உழைப்பு அப்படி என்கிறார். பொன்னான நேரத்தை இணையம் சேமிக்கிறது அல்லவா என்ன சொல்கிறீர்கள்.??

இணையமானது முதிர்ந்த ஒரு வியாபாரிக்கு உதவலாம் இன்னும் உத்தியோகத்தருக்கு உதவலாம் அவர்கள் நன்மை அடைவார்கள் அப்படி என்கிறார். இளையோருக்கு உதவாது என்கிறார்.... இளையோர்கள் வியாபாரிகளாய் இருக்க கூடாதோ..?? கேள்வி வருகிறது.

கணணியறிவற்ற பெற்றோர்கள் மத்தியல் இணையத்தில் உலாவரும் இளையோர்கள் கட்டாக்காலி மாட்டுக்கு ஒப்பாக திரிகிறார்கள். எங்கும் மேயலாம் எங்கும் அசைபோடலாம் அப்படி என்கிறார். உங்க எல்லாரையும் கட்டாக்காலி மாடுகள் என்கிறார்.. கேளுங்களேன்.

சும்மா இருக்கும் மனமே சாத்தானின் ஊறைவிடம்... என்று கூறும் தல அவர்கள். இணையமானது இளையோரை சோம்பேறியாக்குது தேவையில்லாத நடவடிக்கையில் ஈடுபட வழிவகுக்குது அப்படி என்கிறார்.

மதகுகள் விளையாட்டுத்திடல்கள் தோழியர் வீடுகள் என்று உறவாடி மகிழ்ந்த நம் இளையோருக்கு இணைய சற்றூம்கள் அதே பயன் தருவதுண்டா அப்படி என்று கேக்கிறார். அந்த மதகடி கடலையை இன்னும் மறக்கிறதாய் இல்லைப்பாருங்க. நேரடி வாழ்வில் கண்ணியவானாய் இருக்கும் ஒரு இளைஞன் முகம் தெரியாமல் கண்ணியவானாய் இருப்பதில்லை என்கிறார.?? ஏன் கண்ணியத்திற்கு என்ன நடந்தது என்று கேக்கிறார்களா பார்ப்போமே...

என் பெற்றோருக்கு கணனி தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே.

எதிரணி உறுப்பினர் கூற்று என்று போட்டு விட்டு கேக்கிறார்.. யாழ் வாறதால கெட்டுப்போகவில்லை என்று யார் சொன்னார்கள். இராவணன் அவர்கள் வெட்டிய கருத்துக்கள் சொல்லும் நம் இளையோர் கட்டுப்பாடானவர்களா என்று.. என்கிறார். கடைசில யாழுக்கு வாறவங்க கெட்டுப்போறாங்க அப்படி என்றிட்டார். தல அவர்களே.. 21 பக்கத்தை தாண்டிய அந்தப்பிரிவில்.. நகர்த்தப்பட்டது பெயர்மாற்றப்பட்டது ஆங்கிலத்தில் தலைப்பு.. தலைப்பு மாற்றப்பட்டவை.. பற்பல விடயங்கள் இருக்கின்ற கவனித்துப்பாருங்கள். அவையாவும் கட்டுப்படாததால் வந்தவை அல்ல.. யாழ் இளையோரைக்காக்க மட்டுறுத்தினர்கள் கடினப்படினம் என்று கவலைப்பட்டு தனது கருத்தை நிறைவு செய்கிறார். அடுத்ததாக இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்த இணையப் பட்டி மன்றத்தின் நடுவர்களே,எதிரணியினரே,எமதணிய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற தனது அணிக்காக கருத்து வைக்க வந்த மேகநாதன். எதிரணியினர் வெளிப்படை உண்மைகளைக்கூட வெளிச்சம் போட்டுக் காட்டினால் தான் ஏற்றுக்கொள்வார்கள் அப்படி என்று ஆரம்பிக்கிறார். எங்கே தொடர்ந்து தான் பார்ப்போமே.. என்னத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் என்பதை....

சொல்கிறார் இந்தப்பட்டி மன்றமானது கற்பில் சிறந்தவள் சீதையா கண்ணகியா என்றது அல்ல.. (இப்ப பலரும் கற்பென்றா என்ன என்று கேக்கிறாங்க நீங்க வேறை ) தொழில் நுட்பப்பாய்ச்சலோட இயந்த உறவுகளை கட்டி எழுப்ப நற்களம் தந்த யாழ் ஒரு இணையம் தானே இதற்கு மேல் நன்மையை விளக்க வேண்டுமா என்கிறார்

இணைய ஊடகத்தால் புலம் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் அப்படி என்று வாதாடுபவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் இணையத்தை குற்றம் சாட்டுகிறார்கள் அவர்களை மதித்து சமூக அக்கறையுடன் சரியான பார்வையைக்காட்டுவது எது அப்படி என்று கேக்கிறார்..?? நீங்கள் குற்றம் சாட்டும் இணையம் தானாம் காட்டுது அப்படி என்கிறார். சே சே என்ன பழக்கம் இது நன்மையை அனுபவிச்சுக் கொண்டும் குற்றம் சாட்டலாமோ அப்படி என்று கேக்கிறார் மேகநாதன். பார்ப்போமே என்ன பதில் வருகிறது என்று...

ம் எதிரணியினரை கேட்கிறார் வாய் கிழிய பேசும் உங்களுக்கு கருத்தை சுதந்திரமாக வைக்க உதவிய ஊடகம் எது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். என்ன பதில் சொல்கிறீர்கள். ?? பார்ப்போமே..

இவ்வளவு உண்மைகளை வைத்த பின்னும் ஏன் விதண்டா வாதம் பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள் அப்படி என்று கேக்கிறார். (இதே கேள்வியை அடுத்த அணியினரும் கேக்கிறார்கள் போலிருக்கே)

தொடர்ந்து தல அவர்களது பெயர் பற்றிக்கேக்கிறார். (அது அவர் சொந்த விருப்பம் விட்டு விடலாம்). தொடர்ந்து கேக்கிறார்.. அமெரிக்காவை துணைக்கு இழுத்து பயம் காட்டி தங்களது வாதத்திற்கு பலம் சேத்து தங்களது வாதம் அநீதியானது பலவீனமானது என்பதை உணர்த்திவிட்டார் அப்படி என்கிறார். (அமெரிக்கா என்றால் அநீதி என்று அர்த்தமா என்ன?? சரி சரி இரண்டு அணியினரும் அமெரிக்கா இணையத்தை உருவாக்கியது அப்படி என்று கூறியதாக நினைவு)

மதவடி நினைவுகள் சுகமாய் கூறினார்கள் சிலர்.. இவர் அதை பண்பாட்டுச் சீரழிவு என்று கூறிவிட்டார். இந்த மதவடி தானே.. பயிற்சி நிலையம் எதுக்கு என்று கேக்றியளா.. தம்.. சைட் இப்படி பலவற்றிற்கு அப்படியா..?? அதைத்தான் சொல்கிறார் போல..

இணையத்தால் இளையோர் சோம்பேறி ஆகிறார்கள் என்ற கருத்துக்கு பதில் வைக்கையில்.. உங்கட சோம்பேறித்தனத்தை பொதுப்படையாக எடுத்துக்கொள்வது சின்னப்பிள்ளைத்தனமானது அப்படி என்கிறார். உங்கட அனுபவத்தை ஏன் எல்லா இளையோருக்கும் பிரதியிடுறியள் என்று கேக்கிறார் போல.

இணையமானது எங்கள் நேரத்தை மிச்சப்படுத்த.. அறிவுப்பரப்பை விசாலப்படுத்த.. என்று இணையம் பலவழிகளில் உதவுகிறது.. இணையத்தால் கருத்து மயக்கம் உள்ளவர்களை தெளிவுபடுத்தக்கூட முடிகிறது என்கிறார்...

இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் இதை அழுத்தி உரைக்கிறோம் என்று கூறி அமரும் மேகநாதனைத் தொடர்ந்து புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

(மக் ரெஸ்ட் 1 2 3 அட என்ர மக்கின்ர சவுண்ட எதிரணியினர் சார்பான ஒலியமைப்பாளர் குறைச்சு வச்சிருக்கிறார்...இதை முதல் நிறுத்தனும்... :evil:)

பட்டிமன்றத்தை மீள நினைவுக்கு கொண்டு வந்து அதை ஒழுங்கமைத்து சிறப்புற நெறிப்படுத்தும் இரசிகை அவர்களே! நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்ற மாதிரி பேச வெளிக்கிட்டம் ஏதாவது பேசி முழுப்பூசனிக்காயை சோற்றில புதைப்பம் என்று பகல் கனவு கண்டுகொண்டு எதிரணியில் இருக்கும் நண்பர்களே! ஐயோ எல்லா வேலையும் முடிச்சு இணையத்தில அரட்டை அடிப்பம் என்று சொல்லி வந்தால் அதில நடுவர் என்று சொல்லி என்ர நேரத்தை விரையமாக்கு கின்றனரே என்ற ஏக்கத்துடன் எதிரணிக்கும் எமதணிக்கும் இடையே நோர்வே மாதிரி திரியும் நடுவர்களே! உண்மை இது தான் யாதார்த்தம் இது தான் புரியாத அறிவிலிகளே! புரிந்து கொள்ளுங்கள் இணையத்தால் இளைஞர்கள் சீரழிது கொள்கிறது என்று ஆணித்தரமாகவும் ஆழமாகவும் வாதாட வந்திருக்கும் எனதணி நண்பர்களே!

எங்கள் சமூகத்தின் தொன்று தொட்ட பழக்கத்தில் ஒன்றான புதினம் பார்க்கிறது (புதினம் இணையத்தை பார்த்தே தான் தீரணும் என்று முணுமுணுக்காதீங்க, அது வேற இது வேற) அந்த வகையில் யாழ் களத்தை சுற்றி வரும் வாசகர்களே! அனைவருக்கும் இனிய இந்நேர வணக்கங்கள்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?

அருமையான தொரு தலைப்பு நன்மையடைகின்றனரா? அல்லது சீரழிந்து போகின்றார்களா? நன்மையடைகின்றனர் என்று பலர் இங்கே வாதாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு நன்மை என்பதன் வரைவிலக்கனம் புரியவில்லை. இணைய ஊடகத்துக்குள் பல பிரிவுகள் உண்டு அதனடிப்படையில் இளைஞர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பது என்ன? இளைஞர்களை சோம்பொறி ஆக்கி இளைஞர்களை சீரழிக்கும் ஒரு வித கிருமியே இணைய ஊடகமாகும். நோய் பிடிக்கும் முதல் தான் இதற்க்கு சிகிச்சையளிக்க முடியும் வந்த பின் எந்த சிகிச்சையும் பலனளிக்காது. இதற்க்கு இணைய நிலையங்களிலும்..வேலைக்கு போன இடத்தில் வேலை மறந்து தகவல் பரிமாறியில் அலவளாவுவோரையும் குறிப்பிடலாம். இணையம் இளைஞரை சீரழிக்கிறது என்றால் அது மிகையாகாது. எந்த அளவுக்கு இணையம் நன்மையை தருகின்றதோ அதை விட இரு மடங்கு தீமையை இணையம் இளைஞர்களுக்கு வழங்கி அவர்களை சீரழிக்கின்றது. குறிப்பிட்டு சொல்வதானால்..

தேடலற்ற தன்மையை உருவாக்குகின்றது

பள்ளியில் பாடத்திட்டத்தின் படி ஒப்படைகளை வழங்கும் போது புத்தகத்தை வாசி அல்லது பத்திரிகையை படி என்று சொன்னால் மாணவன் இங்கே என்ன செய்கிறான்? இணையத்தில் ஒட்டி விடுகிறான் இது அவனது தேடலை குறைக்க வில்லையா? ஆராயும் வாசித்து அறியும் பழக்கத்தை தடுக்கவில்லையா? இந்த பிரதி செய்து ஒட்டுவதால் பல்கலைக்கழககங்களில் இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் பல மாணவர்கள் இடை நிறுத்தப்படுகின்றனர். தேடலற்ற ஆக்கங்களால் மாணவர்களை சோம்பொறியாக்கி அவர்களை சுயமாக சிந்திக இந்த இணைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை. ஒரு புத்தகத்தின் சுருக்கத்தை எழுதச் சொன்னால் அதனை இணையத்தில் இருந்து பெற்று ஆசிரியரிடம் வழங்குகின்றனர் இந்த இணையம் அந்த மாணவர்களை எவ்வளவு சீரழிக்கிறது பாருங்கள்.

புதிய தொரு கலாச்சார சூழலை உருவாக்குகின்றது

இணையத்தில் தற்போது புதிய கலாச்சார புற நிலை ஒன்று உருவாகியிருக்கின்றது. எங்கள் அணித்தலைவர் சொன்னது போல தமிழில் கருத்தாடுபவர்கள் மிக மிக குறைவாக உள்ளனர். அப்படியிருக்கையில் உலகலவிய ரீதியில் தமிழ் மொழி இணையப்பாவனையில் இரண்டாவது மொழியாக இருந்து என்ன பலன்? சீரழிவு என்பதை எல்லோரும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறீர்கள். சீரழிவு என்பது அவன் நடையுடை பாவனை வரை இணையத்தால் மாற்றப்படுகின்றது. தகவல் பரிமாறியில் ஸ்ரீலங்காவில் இருக்கும் தங்கையை / அக்காவை காதல் புரிகின்றான்...கனடாவில் இருக்கும் அண்ணன்/தம்பி இந்த கலாச்சாரம் தான் நன்மையா? இது தான் இளைஞர்களுக்கு இணையம் வழங்கும் நன்மையா? முகம் தெரிய முகவரி தெரிய உறவுகளை உறவாக்கி கொண்டுள்ளோம் என்று யாழில் நீங்கள் பெருமை கொள்கின்றீர்களே இங்கு களத்தில் இருக்கும் எத்தினை பேரது உண்மை விபரம் தெரியும்? அந்த நம்பிக்கை ஏன் இன்னும் வளரவில்லை? இணையம் சீரழிக்கவில்லை என்றால் உங்கள் சொந்த பெயர்களில் உங்கள் சொந்த படத்தை இட்டு கருத்து வைப்பதில் என்ன தயக்கம்? உங்களுக்கே தெரிகின்றது. இந்த இணையம் ஒரு விஷம் என்று பின் எதற்க்கு வாதட வருகின்றீர்கள் அது நன்மையளிக்கின்றது என்று? யாகூ குழுக்களில் பல தமிழ் குழுக்களை பார்த்தேன் மகிழ்ச்சி தான் ஆனால் அவற்றில் அரை வாசி ஆபசங்களுக்கு முன்னூரிமை கொடுத்திருப்பது வெட்க கேடல்லவா? எமது சமூகத்துக்கு கேவலமல்லவா? ( இதை இல்லை என்று வாதாடும் கூட்டம் யாழ் களத்தில் இருக்கின்றது என்று எனக்கு தெரியும் ஏன் எதிரணி தலைவர் கூட வாதாடாலாம் ஆனால் யாதார்தம் எதுவோ அது தான் வெளிப்படும்) பெண்களை அவர்களுக்கு தெரியமல் கவர்ச்சியாக படமெடுத்து இணையத்தில் இணைப்பவர் யார்?அவற்றை இரசித்து பார்ப்பவர்கள் யார்? இது தான் இணையத்தின் நன்மையா? உங்கள் உற்றவருக்கு இப்படியோரு நிலை ஏற்ப்பட்டால் நீங்கள் அதை நன்மை என்பீர்களா? (அதற்காய் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்தது என்று கருதாதீர்கள்) அண்மையில் கூட ஒரு செய்தியை இணையத்தில படித்தேன் ஒரு உயர் கல்வி நிலைய மாணவர்கள் மற்ற மாணவர்களின் நிழற்ப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் இணையத்தில் பல்வேறு வடிவத்தில் போட்டுள்ளனர். அது அந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதா? இது தான் இணையம் இளையவருக்கு தந்த நன்மையா? நிழற்ப்படங்களை கிராபிக்ஸ் செய்து அவற்றை இணையத்தில் போடும் புதிய கலாச்சாரம் இளைஞர்களுக்கு நன்மையா? சினிமா நடிகைகளின் படங்களை நிர்வாணமாக இணையங்களில் போடுவதும் இளைஞர்களுக்கு நன்மையா? ஈழ விடுதலை போரின் மாற்றுக்கருத்தாளர் என்றபோர்வைக்குள் எத்தனை இளைஞர்கள் இணையத்தில் அரசியல் செய்கின்றனர்? இது ஈழத்துக்கும் இளைஞருக்கும் நல்ல சமிக்கையா? இது தான் சீரழிவு சீரழிவிலிருந்து பிறக்கும் எந்த நன்மையும் தீமையே!

பணத்தை/நேரத்தை விரையமரக்குகின்றது

பள்ளியில் கொடுக்கப்படும் பாடங்களை செய்யாது தகவல் பரிமாறியில் நேரத்தை செலவு செய்யும் எத்தனை மாணவர்கள் உள்ளனர். இது அவர்களின் எதிர் காலத்துக்கு நன்மையா? வீட்டில் இணையதொடுப்பு இல்லை எனில் நெற்கபேகளுக்கு காசு கொடுத்து இணையத்தை பாவிக்கும் எத்தனை இளைஞரை கண்டிடுக்கின்றேன். ஏன் பள்ளியில் வகுப்புக்களை புறக்கணித்து விட்டு நூலகங்களில் எம்.எஸ்.என் பாவிக்கும் எத்தனை தமிழ் மாணவர்களை கனடிய பள்ளி களில் கண்டிருக்கின்றேன். இவற்றிற்க்கு நானும் விதிவிலக்கல்ல. இது இளைஞர்களுக்கு நன்மையா? புதிய கண்டுபிடிப்புக்களை அதாவது மென் பொருட்களை கண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கு அதனூடாக வருமானத்தை பெற இந்த இணையம் அனுமதிப்பில்லை. காரணம் அதற்க்குரிய சீரியல் இலக்கங்கள் இணையத்தில தாராளமாக பெற்றுக் கொள்ளலாம். இது அதை உருவாக்கிய இளைஞனை பாதிக்காதா?

விஸ்னு எழுதியதிலிருந்து.....

நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம்.

நடுவர் அவர்களே! மனக்கட்டுப்பாடு எங்கிருந்து வருகின்றது? ஒரு பொருளை விற்பதற்க்கு ஏன் விளம்பரம் செய்கின்றனர்? அப்படி விளம்பரம் செய்வதால் மனக்கட்டுப்பாட்டை உடைத்து அதை வாங்கு வார்கள் என்று தெரிந்து தானே!..விளம்பரத்தை பார்த்து பொருட்களை வாங்குவதில்லை என்று எந்த புலத்தவராவது கூறுவார்களா? அப்படி தான் இந்த இணைமும் நீங்கள் ஒரு இணையத்துக்கு போகும் போது அந்த இணையத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கும் விளம்பரமே உங்கள் மனக்கட்டுப்பாட்டை உடைத்து சீரழிக்கின்றது. மனக்கட்டுப்பாட்டை இணையம் உடைக்கின்றது. என்பதை விஸ்னு அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

அஜீவன் அவர்கள் எழுதியதிலிருந்து...

எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,

அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி!

நடுவர் அவர்களே! இது எழுதப்படாத விதியல்ல ,ஒரு முயற்ச்சி செய்தால்....அதில் தீமையிருந்தால்.. அதை சுட்டிக்காட்ட வேண்டியது கடமை இது குறையல்ல பிழைகளை தவறுகளை சீரழிவுகளை சுட்டிக்காட்டுகின்றோம்... முடிந்தால் எதிர்த்து வாதாடுங்கள் மாற்று வழியை சொல்லுங்கள்...முடியவில்லையா மன்னிக்க தவறாய் சொல்லி விட்டோம் என்று பாதையை விட்டு நகருங்கள்.... இப்படி சொல்லி சொல்லியே பலரது கருத்துக்களை எமது சமூகம் ஏளனமாய் பார்க்கின்றது. இணையம் சீரழிக்கின்றது என்று நாங்கள் சொல்கின்றோம். இல்லை நீ கண்டாயா என்று கேட்டால்...நாம் என்ன செய்ய முடியும்.. சீரழிக்கின்றதா..? என்று ஆராய வேண்டாமா? அதை ஆரய விடாமல் அந்த நேரத்தை யாருடனாவது சற் பண்ண செலவழிக்கின்றனர் போல எதிரணியினர்.

வர்னன் அவர்களது கருத்திலிருந்து...

நீங்க சொன்ன 2 வது வகை தமிங்கிலம் பேசுபவர்கள்தான் கனடாவின் சரித்திரம் கண்டிராத ஒரு பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள்!

வர்னன் அது இன உணர்வு... இதற்க்கும் இணையத்துக்கும் என்ன தொடர்பு? இணையம் இளையவரை சீரழிக்கின்றது என்று தானே சொன்னோம். எத்தினை போர் சற்றூமில் ஒரு மாதிரியும் நேரே ஒரு மாதிரியும் இருக்கின்றனர். அப்படி ஏன் இவர்கள் இருக்க கூடாது? நீங்கள் கூட வர்னன் என்று புனைபெயரில் இங்கும், சொந்தமாக மற்ற பெயரில் இதற்க்கு நேர் எதிரான கருத்துடன் இருக்க மாட்டீர்கள் என்பதற்க்கு என்ன உத்தரவாதம்? கணனி என்ற அழகிய பெட்டியை மட்டும் பார்ப்பவராக நீங்கள் இருக்கின்றீர்கள். ஆனால் நாமோ.. கணனியில் இருக்கும் இணையத்துக்குள் இறைந்து கிடக்கும் தீமைகளை பார்க்கின்றோம்..

* இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா?

நல்லதொரு வினா வர்னன் இணையம் தொடங்க முதல் காதல் இருந்தது. ஆனால்..அதற்க்கு பேர் தான் காதல் இப்போது இணையத்தில் வருவது காதலல்ல.. காமத்திலிருந்து காதல் வருகின்றது என்று இணையத்தில் காதல் செய்கின்றனர் பலர். நள்ளிரவில் 12 மணிக்கு வெப்காமில குடும்பம் நடத்தும் காதலர்களை யார் உருவாக்கினார்கள்?

*இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா?

சத்தியமாக உங்கள் கருத்தை ஏற்க்கின்றேன். அப்படியான காலத்தில் நண்பர்களோடு அதைப்பற்றி பேசினார்கள். ஆனால் இணையம் வந்தவுடன் நண்பாகளின்றி அவற்றை நேரடியாக அறிகின்றனர்...அவற்றில் நேரடியாக ஈடுபடுகின்றனர்...

*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?

வர்னன் நாற்றத்துக்கும் வாசனைக்கும் வித்தியாசத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...

காகங்கள் கறுப்பானவை-ஆகவே

கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!

என்பது போல் உள்ளது!

அட அட என்ன தத்துவம்... உங்களுக்கு நன்மை மட்டும் தெரிந்தால் இணையம் புலத்து தமிழ் இளையோருக்கு நன்மை பயக்கிறது என்று ஆகிவிடுவா?

உண்ணும் உணவில் இருந்து - ஒரு சிலரின் உயிர்வாழ்வு வரை சில அம்சங்கள் பிறருக்கு தீங்காய் இருக்கிறது! அதனால் உணவே கூடாது என்று ஒதுக்கி வைக்கிறோமா?

வர்னன் உணவை உண்டால் மரணம் நிச்சயம் என்றால் நீங்கள் உணவருந்து வீர்களா? இல்லை தானே அதே போல தான் இணையத்தில் தீங்கு இருக்கிறது அவற்றை தவிருங்கள் என்கின்றோம் இல்லை அவையேல்லாம் எமக்கு நன்மை என்று நீங்கள் வாதாடுகின்றீர் அப்படியாயின் நாங்கள் சீரழிவு என்பது உங்கள் அணியினருக்கு நன்மையாய் தெரிகின்றதா? அந்த அளவிற்க்கு இணையம் உங்களை சீரழித்து விட்டதா?

ஆனால்... ஒரு வேளை உங்கள் முடிவு இளையோர்க்கு இணையதளங்கள் சீரழிவுதான் என்று அமைந்தால்-- புதுயுகத்துடன் போட்டி போட்டு ஓடும் இளையவர்களின் கால்களுக்கு குறுக்கே தடையாய் அது அமைந்துவிடுமோ- அவர்கள் ஆற்றலை முடக்கி போட்டுவிடுமோ?என்ற ஒரு சந்தேகத்தைஎன்னுள் நானே எழுப்பி -இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள்? சீரழிக்கின்றது என்று தீர்ப்பு வழங்கி இளையோரை திருத்தி விடாதீர்கள் என்றா?

மேகநாதன் அவர்களது கருத்திலிருந்து...

பாவம்,"வாழைப்பழத்தை உரித்துத் தந்தால்தான் சாப்பிடுவோம்" என அடம் பிடிக்கும் மிகச் சிலருக்காக தொடர்ந்து பார்ப்போம்....

நீங்கள் இப்பவும் உரித்து கொடுபதில் நிற்க்கின்றீர்கள் ஆனால் இணையமோ வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்து விடுவது போல தீயவற்றை இளையவர்கள் முன் கொண்டு செல்கின்றது....

எதிரணியினரை கேட்கிறார் வாய் கிழிய பேசும் உங்களுக்கு கருத்தை சுதந்திரமாக வைக்க உதவிய ஊடகம் எது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். . ??

ஐயா மேகநாதன் அவர்களே! நடுவர் அவர்களே! நீங்கள் இணையத்தில் கருத்தெழுத முதல் வேறு எந்த ஊடகத்திலும் கருத்து வைக்கவில்லையா? பத்திரிகையில் சுகந்திரமாக நீங்கள் எழுதியது இல்லையா? ஏன் வானலைகளில் நீங்கள் சுகந்திரமாக பேசியதில்லையா? மேக நாதன் எந் உலகத்தில் இருக்கிறார். இந்த இணையம் வரமுதல் நீங்கள் உங்கள் ஆக்கங்களை கருத்துக்களை வெளியே சொல்லவில்லையா? அப்படியாயின் அது உங்கள் அறியாமை. நீங்கள் இருந்த சூழல் உங்களுக்கு அப்படியா சந்தர்ப்பத்தை வழங்கா விட்டால் அனைவருக்கும் அப்படியா?

இறுதியாக... கண்மூடிக்கொண்டு பூனை பால் குடித்தால் அது இருட்டாகாது என்பதை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும். இணையம் புலத்து தமிழ் இஞைர்களை சீரழிக்கிறது என்பதில் இணையத்தை புரிந்து கொண்ட எவருக்கும் இரண்டு கருத்து இருக்காது. நிறைகுடம் ஒரு போது தளம்பாது ... இணையத்தை முழுமையாக அறியாத எதிரணியினரின் அதை அறிந்து விட்டு வாதாட வருமாறு அன்போடு வேண்டி...

ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.

நல்ல கண்டு பிடிப்பை இளைஞன் அவர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்..அதையே நானும் சொல்கின்றேன். துரும்பும் சீரழிக்க கூடிய நிலையிலே எங்கள் இளைஞர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களை இணையம் இலகுவில் சீரழிக்கின்றது. எனவே உங்கள் பழமொழியும் இணையம் இளையவரை சீரழிக்கிறது என்றே சொல்கிறது.

என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்..

நன்றி

வணக்கம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

முழுப்பூசனிக்காயை சோற்றில புதைப்பம் என்று பகல் கனவு கண்கின்ற எதிரணியினரே நடுவர்களே எனதணியினரே என்று வணக்கத்துடன் ஆரம்பிக்க்கின்றார் நிதர்சன். தொடர்ந்து என்ன தான் சொல்கிறார் பார்ப்போம். (என்ன இன்னும் இந்த முழுப் பூசனிக்காய்க்கதை வரவில்லையே என்று யோசிச்சிட்டிருந்தன் வந்திட்டு..)

இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தலைப்பின் கீழ் வாதாடுவோருக்கு நன்மை என்பதன் வரைவிலக்கணம் புரியவில்லை அப்படி என்கிறார். நன்மையின் வரைவிலக்கணத்தை அவராவது சொன்னாரா..?? பார்ப்போம்.

இணையமானது தேடலற்ற தன்மையை உருவாக்குகின்றது என்கிறார். இணையத்தில் இருப்பவற்றை பிரதி செய்து கொடுப்பதால் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் இடைநிறுத்தப்படுகிறார்கள். இது வாசிப்புப்பழக்கத்தை தடுக்கிறது என்கிறார். இது நன்மையா என்று கேக்கிறார்.

இணையமானது புதியதொரு கலாச்சார சூழலை உருவாக்குகிறது என்கிறார். எப்படி என்றால்.. இலங்கையில் இருக்கும் தங்கையை அல்லது அக்காவை கனடாவில் இருக்கும் அண்ணன் அல்லது தம்பி முகம் தெரியாது சரியான அறிமுகம் இல்லாது காதலிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது என்கிறார். எதிர் முனையில் இருப்பவர் யார் என்று தெரியாமலே இந்த கலாச்சார சீரழிவு நடக்கிறது என்கிறார்.

இன்னொன்றைச் சொல்கிறார் பெண்களை அவர்களுக்கு தெரியமல் கவர்ச்சியாக படமெடுத்து இணையத்தில் இணைப்பவர் யார்?அவற்றை இரசித்து பார்ப்பவர்கள் யார்? எல்லாம் இளையோர்கள் தான் என்கிறார்.

மற்றொரு முக்கிய கருத்தைச்சொல்கிறார் ஈழ விடுதலை போரின் மாற்றுக்கருத்தாளர் என்றபோர்வைக்குள் எத்தனை இளைஞர்கள் இணையத்தில் அரசியல் செய்கின்றனர்? இது ஈழத்துக்கும் இளைஞருக்கும் நல்ல சமிக்கையா? இது தான் சீரழிவு சீரழிவிலிருந்து பிறக்கும் எந்த நன்மையும் தீமையே! அப்படி என்று அறிதியிட்டுக்கூறுகிறார்.

இந்த இணையமானது இளையோரின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறது என்கிறார் பள்ளிகளில் பாடங்களிற்கு மட்டம் போட்டு நூல் நிலையங்களிலல் எம் எஸ் என்னில் அரட்டை அடித்ததாக தனது அனுபவத்தை பகிர்ந்து செல்கிறார். இது இளையோருக்கு நன்மையா என்றும் கேக்கிறார். இன்ரர் நெட் இணைப்பு பெற பணம் செலவழியுது... அது இல்லாதவர்கள் இன்ரர் நெட் கபேக்கு போக பணம் செலவழியுது என்கிறார்.

எதிரணியினர் வைத்த கருத்துக்களை வெட்டும் விதமாக வந்த கருத்துக்களை பார்ப்போம்.

இணையத்திற்கு அடிமையாவதற்கு மனக்கட்டுப்பாடின்மையே காரணம் என்று வைக்கப்பட்ட வாதத்திற்கு பதில் வைக்கிறார். எவ்வளவு தான் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் அதை உடைக்க விளம்பரங்கள் செய்து சீரழிவுப்பாதையை நோக்கி இணையம் இழுக்கிறது இளையோரை என்கிறார்.

இணையம் இளையோரை சென்றடைய முன்னர் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா. என்ற கேள்விக்கு பதில் தருகிறார். முதல் காதல் இருந்தது அதற்குப்பெயர் தான் காதல். இப்போது இணையம் நல்லிரவு 12 மணிக்கு வெப்காமில் குடும்பம் நடத்தும் காதலர்களை உருவாக்கியுள்ளது என்கிறார்.? இது காதலா என்கிறார்..?? வெப்காமிலையும் குடும்பம் நடத்தலாமா.. :wink:

காகங்கள் கறுப்பானவை - ஆகவே

கறுப்பானவை எல்லாம் காகங்கள் !!

( எங்காவது லோப்புத்தகத்தில இது இருக்கா..)

தொடர்ந்து சொல்கிறார்.. உங்களுக்கு இணையம் தருகின்ற நன்மைகளை மட்டும் தெரிந்ததால் இணையம் புலத்து இளையோருக்கு நன்மை பயக்கிறது என்று ஆகிவிடுமா..?? என்று கேக்கிறார். எதிரணியினரை..

தொடர்ந்து இணைய ஊடகம் கருத்தை சுதந்திரமாக வைக்க உதவுகிறது என்ற கேள்விக்கு பதில் வைக்கையில்் இதற்கு முதல் பத்திரிக்கையில் சுதந்திரமாக நீங்கள் எழுதியதில்லையா? என்று கேக்கிறார். இல்லையாயின் நீங்கள் இருந்த சூழல் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு தராவிட்டால் அனைவருக்கும் அப்படியா என்று கேக்கிறார்.

இலங்கையில் சுதந்திரமாய் கருத்து வைத்து காணாமல் போன பல பத்திரிகையாளர் இருக்கிறார்கள். இணையத்தில் கருத்து வைத்து பாதிக்கப்பட்டவர்கள் உண்டா என்று கேக்கிறார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.

இணையத்தை புரிந்து கொண்ட எவருக்கும் இணையம் இளையோரை சீரழிக்கிறது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது என்று கூறும் நிதர்சன்.

ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.

என்ற வரியை மேற்கோளாக ஏடுத்து சிறு துரும்பும் சீரழிக்கிற நிலையில் தான் இளையோர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணையம் சீரழிக்கிறது என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்கிறார்...

இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனதணிக்கு பலம் சேர்க்கும் பல கருத்துக்களை வைத்து பல கருத்துக்களை வெட்டிப்பேசிச் செல்லும் நிதர்சன் அவர்களைத் தொடர்ந்து புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடத்தால் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் நடுவர் அவர்களே ...மற்றும் சபையோர் யாவருக்கும் வணக்கம்

புலம் பெயர் இளைஞனுக்கு நன்மை பயக்கிறது என்பதனை எமது அணியைச் சேர்ந்தவர்கள் அழகாகக விளக்கியிருநதார்கள்....

ஒரு உருவாக்கம் செய்வதற்க்கு ஊக்குவிப்பதற்க்கு இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.அதை புல இளைஞன் கடைப்பிடித்து நன்மை அடைகிறான்...ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது. இலமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளி கொணரமுடிகிறது .முன்னரென்றால் சின்னபயலே உனக்கு புரியாதாடா என்று உந்த அரை குறை விற்ப்பனர்கள் அவனது கனவுகளை இலைமறைகாயான திறமைகளை முளையிலையே நசுக்கிவிடுவார்கள்..

அண்மையில் சினிமா சம்பந்தமான கொசுறு செய்தி வாசித்தேன்.காதல் கடிதம் புலம் பெயர் இளைஞர்களால் தாயரிக்கப்படும் படம்...அப்படத்தின் கவிஞன் இசையைப்பாளர் உதயாவை இணையத்தில் சந்தித்து தனது ஆற்றலை காட்டி வாய்பை பெற்றார் கூறப்படுகிறது...பலரது உண்மையான திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவுகிறது கோடம் பாக்கத்தின் கதவுகளை மீறி உட்புகுவதற்க்கு கஸ்டப்படுவேளையில் புல இளைஞனுக்கு தனது ஆக்க சக்தியை வெளியிட கை கொடுக்கிறது .இதே போன்றே லண்டன் ஈழ தமிழ் ஆகாஸ் என்ற நடிகரும் சுகாசினியிடம் இணயம் போல தொடர்பு கொண்டு வாய்ப்பு பெற்றாரென்று கூறப்படுகிறது.

இந்த முன்னாள் இளைஞர்கள் இன்றைய நடுத்தர வயது, முதியவர்கள் இவர்கள் காட்சியறையிலையே மட்டும் கம்பியுட்டர் பார்த்து பிரமித்து இருப்பார்கள் இணையத்தை கூட நாசா வுக்கும் பென்ரகனுக்குமுள்ள விசயமாகத்தான் கண்டிருப்பார்கள் ஏதோ அப்பலோ கலம் சந்திரன் இறங்கவது போன்ற விசயமாகத்தான் நினைத்திருப்பார்கள் .ஆனால் இன்றைய புல இளைஞன் பங்கு சந்தையென்ன வியாபாரம் கொடுக்கல் வாங்கல்கள் என்ன உலகத்தில் முன்னேறிய நுணுக்கங்களென்ன தனது சிறிய மவுசால் வீட்டுக்குள்ளையே உலகத்தை காட்டி பிரமிக்க வைக்கிறான் அவனுக்கு கிடைத்த வரப்பிரசாதமாயே நான் நினைக்கிறன்.

நடுவர் அவர்களே புல இளைஞன் இணையத்தில் நன்மை பெறுகிறானென்ற கூற்றுக்கு வலு சேர்ப்பதற்க்கு தாயகத்தின் நிலமை கூறலாமென்று நினைக்கிறேன்... தாயகத்தில் சிறுவயதிலிருந்து கபொத உயர்தரம் வரை வெறும் ஒப்பிப்பிப்பதையூடாகவும் மீள் நினைவு செய்யுமுறையையூடாகவும் பாடவிதானத்துக்குட்பட்ட தூடாகவும் தான் கல்வியாக தந்து கொண்டிருந்தார்கள்...ஆனால் பல்கலை செல்லும் போது தான் அங்கே புதிய கல்வி முறை காத்திருக்கிறது அங்கே பேராசிரியர் சிறியவழி நடத்தலையே தருகிறார் மிகுதி அவனே தரவுகளே தேடி தொடரபாடல்கள் மூலமும் தானே கற்று கொள்ள வேண்டியவனாகிறான் .இந்த தீடிரென்ற ஏற்படும் புதியமுறைக்கு சிரமத்துக்குள்ளாகிறாகிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைவருக்கும் எனது வணக்கம்.

ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக்கொண்டால் அதனை எப்படியாவது மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். அதுபோல்தான் ஸ்ராலினும் செய்திருக்கிறார்.

ஓர் உருவாக்கம் செய்வதற்கும், ஊக்குவிப்பதற்கும் இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது என்று ஆரம்பித்து அவற்றிற்கு ஊதாரணங்களாக "காதல் கடிதம்" படத்தையும், இலண்டன் ஆகாஸையும் எடுத்துக்காட்டினார். ஆனால் நடுத்தர வயதுடையவர்களையும், முதியவர்களையும் பார்த்து சிறிது நையாண்டி செய்வதுபோல் தெரிகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி இன்றைய இளஞர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் அதற்காக மேற்கூறியவர்களைச் சாடுவது முறையாகுமா? யாரிடமிருந்து என்ன பதில் வருகிறதென்று பார்ப்போம்.

தாயகத்து பல்கலைக்கழக இளைஞர்களையும், புலத்து பல்கலைக்கழக இளைஞர்களையும் ஒப்பிட்டார். அதேவேளை இவர்கள் இணையத்தால் பெறும் நன்மையையும் விளக்கினார். தேசியத்துக்கு வலுவுூட்டுவதாகக் கூறினார். ஆனால் எதிரணியினர் திரும்பத்திரும்ப ஒன்றையே கூறி கூக்குரலிடுகிறார்கள் என்றார். இவருடைய விளக்கம் தலை வெளித்தவர்களையும், தலைமுடி காதோரம் வெளுத்தவர்களையும், வேட்டி கட்டுபவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதுபோலவும் இருக்கிறது. எதிரணியினர் பதில் என்ன?

மீண்டும் முன்னாள் இளைஞர்களையும், நடுத்தர முதியவர்களையும் பார்த்து ஆங்கிலப்பட ஆபாசக் காட்சிகளையும், புலத்து தெருவோர முத்தங்களையும் ஒப்பிடுகிறார். இவற்றைப் பார்த்துவிட்டு புலத்தில் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பில்லை, மற்றவர்களே கெட்டுப்போகிறார்கள் என்கிறார். புலச்சுூழல் இளைஞர்களுக்கு சாதகமும்கூட என்கிறார். அவற்றை ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி, வளரச்சிக்குப் பங்களிப்பான் என்று முடித்துள்ளார். இனி வரப்போகும் நபர் எப்படித் தன் வாதத்தை வைக்கிறார் என்று பார்ப்போம்.

சில இடங்களில் அவரது தமிழ் தெளிவில்லாமல் இருக்கின்றது. நல்ல தமிழில் தருவதற்கு அவருக்கு தட்டச்சு அனுபவம் போதாமல் சிறிது சங்கடப்பட்டுத்தான் பட்டிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்திருக்கிறர். நான் ஆரம்பத்தில் கூறியதுபோல் ஒரு விடயத்தை விளக்குவதற்கு நல்ல மொழியறிவு அவசியமில்லை. ஆனால் தெளிவாக இருந்தால் அனைவருக்கும் இலகுவாக இருக்கும்.

தனது வாதத்தை வைத்த ஸ்ராலினுக்கு எனது பாராட்டுக்கள். எதிர் அணியிலிருந்து அடுத்தவர் வந்து தனது வாதத்தை முன்வைக்குமாறு அழைக்கிறேன்.

Posted

"வணக்கம் வணக்கம் பல முறை சொன்னேன்.

சபையோர் முன்னால் தமிழ் மொழி முன்னால்.

இது தேன் போன்ற உயிரான தமிழில்

இளையோர்கள் நாம் தரும் பட்டிமன்றம்."

(என்ன இது வெறும் காற்று தான் வருகுது)

நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று நிருபிக்கும் நக்கீரர் பரம்பரையில் வந்து உதித்த நம்ம நடுவப் பெருமக்களாகிய திரு செல்வமுத்து அவர்களுக்கும் தமிழினி அவர்களுக்கும்! திரைக்கு பின்னால் நின்று தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் அன்பு சகோதரி இரசிகைக்கும்! ஓடி ஓடியே எத்தனை பதக்கங்களை வென்றாலும் இந்த பட்டிமன்றத்திலும் தங்க பதக்கம் நமக்கே என்று சொல்லி நம்மையும் ஓட வைத்திருக்கும் எமதணி தலைவர் அவர்களே! சோழி அண்ணாவின் ஓட்டத்திற்கு இணையாக வெற்றி பெறும் நோக்குடன் ஓடிக்கொண்டிருக்கும் எமதணி உறுப்பினர்களுக்கும்! கொமாண்டோக்கள் என்றும் சிப்பாய்கள் என்றும் சொல்லிக்கொண்டு கொமடியன்ஸ்கள் போலும் சின்னப்பிள்ளைகள் போலவும் பாட்டி வடை சுட்ட கதையை திருப்பி திருப்பி நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டு இருக்கும் எதிரணி தலைவர் அவர்களுக்கும்! அவர் அணி உறுப்பினர்களுக்கும்! நல்லதொரு பட்டிமன்றத்தை இங்கு நடத்த அனுமதித்த களப் பொறுப்பாளார் திரு மோகன் அண்ணா அவர்களுக்கும் எனது முதற் கண் காலை (மாலை இரவு) வணக்கங்கள் _/_

நடுவர்களே! பட்டிமன்ற தலையங்கத்தையே எதிரணியினருக்கு நமது அணி உறுப்பினர்கள் எல்லோரும் ஞாபகப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றோம். புலம் பெயர்ந்து வாழும் இளையோர் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? சீரழிந்து போகின்றார்களா? என்பது தான் தலைப்பு

நடுவர்களே! வழமையான எதிரணின் பாணியில் இணையத்தின் நன்மைகள் சிலவற்றை சொல்லியிருக்கிறார்.. இணையத்தின் நன்மை தீமைகளை பற்றி நாங்கள் இங்கு வாதாட வரவில்லை. பதிலாக புலம்பெயர்ந்த இளையோர்கள் இணையதால் நன்மை அடைகிறார்களா இல்லையா?? என்று தான் வாதிட வந்திருக்கிறோம் என்று எமதணியினர் போதும் போதும் என்ற அளவுக்கு சொல்லிவிட்டனர். இருப்பினும் எதிரணியினர் அதை எந்த அளவுக்கு உள்வாங்கி கொண்டனர் என்பது அவர்களது கருத்துகளில் இருந்து தெரிகிறது.

நடுவர்களே! இந்த இணையத்தால் நாம் அடைந்த பயன்களிற்கு உங்கள் வலக்கையில் உள்ள விரல்களே போதும் எண்ணுவதற்கு. தீமைகளை இங்கு எழுத தான் எனக்கு ஆசை. ஆனால் அது இலங்கையை எரித்த அனுமாரின் வால் போல் நீண்டு கொண்டு போகும் என்ற பயத்தில் தான் சில தீமைகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்ட வந்திருக்கின்றேன்.

நடுவர்களே! எதிரணியினர் கூறுகின்றார்கள்; படிப்பதற்கு பல தேடுதல்கள் செய்வதற்கு இணையம் இலகுவாக இருக்கின்றதாம். ஆமாம் எனது அருமை நகைச்சுவை மன்னர்களே உங்கள் அப்பு ஆச்சி காலத்தில் எல்லாம் இந்த படிப்பிற்கு தேவையான தேடுதல்கள் எங்கிருந்து பெறப்பட்டன? அப்போ அவர்கள் வைத்தியர்களாகவோ நல்ல வக்கீலாகவோ வரவில்லையா? இப்போ பாடசாலைக்கான தேடுதல் என்று சொல்லி விட்டு இளைஞர்கள் வேறு எல்லாவற்றையும் தேடுகின்றார்கள் இணையத்தில் படிப்பை தவிர.

இணையத்தின் நன்மைகளை பற்றி சொல்லிய ஸ்டாலின், இந்த நன்மைகளை இளையோர் முறையாக பயன் படுத்தி நன்மை அடைகிறார்கள் என்று சொல்லிவிட்டு, உதாரணமாக காதல் கடித தயாரிப்பாளர்களையும், திரைப்பட நடிகர் ஆகாஸையும் சுட்டிக்காட்டினார்.

புலத்தில் இணையத்தைப் பயன்படுத்தும் எத்தனையோ இளையவர்கள் இருக்கிறார்கள். யாரோ ஓரிருவர் இவ்வாறு முன்னேறி விட்டார்கள் என்று சொல்லி... எல்லா இளையவர்களும் அப்படித்தான் என்று கூற வருகிறார் நண்பர். இது எவ்வகையில் பொருத்தமாகும்? இணையத்தின் சீரழிவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் அவற்றின்; விளைவுகளால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி புலம்பெயர் நாடுகளில் வெளியாகும் பத்திரிகைகளில் நாளாந்தம் காண்கிறோம்.

அம்மா: பிள்ளை வந்து சாப்பிட்டு கொம்பியுட்டரில் இருக்கலாம் தானே

பிள்ளை: நோ மம்மி எனக்கு நிறைய வேலை கொம்பியுட்டரில் செய்யணும்.நான் பின்னார் சாப்பிடுகின்றேன்

எம்எஸ்என்னில் நண்பர்: எங்கை போட்டாய் எங்கை போட்டாய் (என்று எழுதிகின்றார்)

பிள்ளை: அம்மா சாப்பிடச்சொல்லி வந்தா நான் பள்ளிக்கூட வேலை செய்வதாக சொல்லி அனுப்பி விட்டேன். நீ சொல்லு அப்ப நீ இன்னும் சாப்பிடலையா?

இது தான் இப்ப பல வீட்டில் நடக்கும் உரையாடல். நடுவர்களே! பிள்ளை அழகாக சுத்த தமிழில் எம்எஸ்என்னில் கதைத்தால் கூட கண்டுபிடிக்க முடியாதளவுக்கு பல புலம்பெயர்ந்த பெற்றோர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் கண்ணுக்கு பிள்ளைகள் படிக்கின்றார்கள் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அந்தப்பிள்ளைகள் செய்யும் லொள்ளுகள் நம்மளை மாதிரி இளையோரிற்குத் தானே தெரியும். வெளியில் போக அனுமதி கிடைக்காத சமயத்திலும் கூட யாரை சந்திக்க நினைத்தார்களோ அவர்களை நேரில் சந்திப்பதை போல் கதைப்பதற்கு வழி வகுக்கின்றது இந்த இணையம். இணையத்தின் எம் எஸ் என் க்கு பின்னால் இருந்து பெற்றோருக்கு காதில் பூ வைத்து விட்டு சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் இளையவர்களே.. ஆபாசப்படங்களை அதிகம் பரிமாறி, மற்றயவர்களின் வாழ்க்கையையும் அவ்வப்போது சீரழித்து விடுபவர்கள் இளையோர்கள் தான் நடுவர் அவர்களே... கிழக்கில் சூரியன் உதிக்கிறது என்பதற்கு உதாரணம் தேவையில்லை. நடைமுறையில் நடப்பவற்றை பார்த்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.

இளையோரால் இணையத்தினால் நேரத்தைச் சேமிக்கமுடிகிறது என்று எதிரணியினர் சொல்கிறார்களே..! அதனால் இளையோருக்கு நன்மையா கிட்டுகிறது...??? எந்த வகையில் அவர்கள் அதனை தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்?;. குழு மோதல்களிற்கும்;, பணமோசடிக்கும், தீய பழக்கவழக்கத்துக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் அவர்களை அடிமையாக்க அல்லவா இந்த மேலதிக விடயங்கள் பயன்படுகின்றன.! இதுவே அவர்களின் கல்வியை அடியோடு பறிக்கக் காரணமும் ஆகின்றது. அதாவது சேமிக்கப்படும் நிமிடங்களால் அவர்கள்; சீரழிக்கப்படுகிறார்கள்....

நடுவர்களே! இணையம் இளையோரை வாழவைக்கும் கண்ணுக்குத் தெரியா தெய்வமாம். ஏதிரணி அறிவுக்கொழுந்துகளே! அந்த தெய்வத்தை காட்டும் கணினிக்குப் பூமாலை சாத்தி, கற்பூரம் காட்டி அருகிலேயே உண்டியல் வையுங்கள். பிழைத்துக்கொள்வீர்கள்.

இணைய அறிமுகமே இளையோருக்கு வரப்பிரசாதம் போல் என்று நினைக்கும் எதிரணியினர்... இணையம் ஒரு ஊடகம் அதனால் இளையோரை ஆக்க முடிவதில்லை.... ஊக்கம் உள்ள இளைஞனுக்கு தகவல்களை வழங்குகிறது அதைவைத்து திறமையானவன் உயர்கிறான்.... ஆனால் எல்லோரையும் (திறமை இல்லதாவனையும்) சீரழிக்கக் கூடியதாய் இணையம் இருக்கிறது, எல்லோரையும் சீரழிக்கிறது.

நடுவர்கள் அவர்களே! இணையத்தால் எத்தனை பேருக்கு மன உளைச்சல்கள் அதிகமாகின்றது தெரியுமா? இணையத்தில் கதைக்கும் போது நமது உணர்ச்சிகளை வார்த்தைகளால் வடிப்பது கடினம். அப்படி முகநயங்களை போட்டு எழுதினாலும் தகவல்கள் பிழையான கருத்தை கொள்கின்றது. அதனால் தான் இந்த களத்தில் கூட எவ்வளவு சண்டைகள் சச்சரவுகள்? ஏற்கனவே கூறப்பட்ட ஒரு உதாரணம் தான் இருப்பினும் இங்கே கூறுவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். யாழ் போன்ற நல்ல இணையத்தளங்கள் எத்தனை இளையோர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்?? புதியவர்கள் எத்தனை பேர் தொடர்சியாக நிலைத்து நிற்கிறார்கள் என்று பாருங்கள்? அதே வேளை கீழ்தரமான வாதங்களில் ஈடுபடும் தளங்களுக்கு எத்தனை இளையோர் செல்கிறார்கள் என்று பாருங்கள்?? ஏற்கனவே இது பற்றிய புள்ளிவிபரங்கள் எமதணியினரால் கூறப்பட்டுள்ளது

ஸ்டாலின் கூறியது:-

ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது. இலைமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளிக்கொணரமுடிகிறது.

நடுவர் அவர்களே.... அக்காலத்தில் இசை அமைத்தோர் தாம் கற்றுக்கொண்டதோடு.. தமது முயற்சி... தமது புதிய எண்ணங்களை சேர்த்து தரமான இசையை வழங்கினார்கள். எமது பாரம்பரிய முறைகள் அழியாமல் பாதுகாத்தார்கள். ஆனால் இப்போது ஸ்டாலின் கூறியது போல செய்கின்றபடியால் தான் தரமான எமது பாரம்பரிய பாடல்கள் நமக்கு கிடைப்பதில்லை. மாறாக களவாடப்பட்ட... களவாடப்பட்ட மெட்டுகளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்ட பாடல்கள் தான் நமக்குக் கிடைக்கின்றன.. இவை அனைத்துமே மேலைதேய பாணியில் அமைந்தவை தான். இந்திய திரையிசையாகட்டும், அல்லது புலத்தில் உருவாகும் நம்மவர் ஆக்கங்களாகட்டும் மேலைதேய ஆக்கங்களின் செல்வாக்கு மிக மிக அதிகமாக இருப்பதை எதிர் அணியினர் மறுக்க முடியுமா?? ஈழத்தில் அதிகம் இணைய பாவனை இல்லை. அங்கிருந்து உருவாகும் ஆக்கங்களில் நமது பாரம்பரியம் அழியாமல் பாதுக்காக்கப்பட்டு நமது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதைத்தானும் எதிர் அணியினர் மறுக்க முடியுமா??

வாதத்தின் பல இடங்களில் நடுத்தரவயது உடையவர்களை சற்று தாக்கி பேசியிருக்கிறார்.... எதற்காக அவர் அப்படியான ஒரு தொனியில் பேசினார் என்று அறிய முடியவில்லை. ஆனால் நான் கூறுகிறேன். இணையத்தில் தமிழ் சார்ந்த விடயங்களை அதிகம் பேசி.... கட்டுரைகள் எழுதி... தமிழை, தமிழ் பாரம்பரியதை வளர்க்க அதிகம் பாடுபடுபவர்கள் நடுத்தரவயதுக்காரர்கள் தான் என்பதை எதிர் அணியினர் ஏன் புரிந்துகொள்ளவில்லை? இளையோர்களால் உருவாக்கப்படும் அதிகமான தளங்கள் திரையிசைப்பாடல், படங்கள், நடிகர்களின் படங்கள் தான் கணப்படுகின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். பல இளையோர் இணையத்தால் மேலைதேய பாரம்பரியங்களிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அவற்றை தடுத்து நிறுத்த நடுத்தரவயதுக்காரர் போராடுவதால் தான் அவர்களுக்கு இப்படியான ஒரு அவப்பெயரோ என்னவோ??

ஸ்டாலின் கூறியது:-

க.பொ.த உயர்தரத்தில் திறமைச் சித்தி பெற்றவர் கூட பல்கலை கழகத்தில் ஒளிர்விட முடியாததைக்கண்டிருக்கிறோம்..

.....ஆனால் புலஇளைஞனுக்கோ இணையத்தோடு இணைந்து இளமையிலிருந்து கல்வி பயில்வதால் உருவாக்கத்துக்கு மிகவும் பயனுள்ளதாகிறது.

பாடசாலை தேவைகளுக்காக மாணவர்கள் இணையத்தில் தேடல்களை மேற்கொள்வது பற்றி ஏற்கனவே வாதங்கள் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன... இதுபற்றி இன்னும் அதிகம் பேசத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். இணையத்தில் இலகுவாக தகவல்களை பெற்றுக்கொண்டு.. அதை முழுமையாக வாசிக்காமலே கொப்பியடித்து பயன் பெறும் புலம்பெயர்ந்த மாணவன் எப்படி தேடலற்ற ஒரு மாணவனாகிப்போகிறான் என்பது பற்றி எமதணியினர் கூறிவிட்டார்கள். இருப்பினும் ஈழத்து மாணவன் சிரமத்துக்குள்ளாகின்றான் என்று கூறுகிறார் நண்பர்.

முட்டி மோதுபவனே புத்திசாலி ஆகிறான். எல்லாமே இலகுவாக கிடைக்கும் என்றால். வாழ்வில் சுவையும் இருக்காது முன்னேற்றமும் இருக்காது.

ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட முயல்கிறேன். ஈழத்து மாணவன் சிரமத்துக்கு மத்தியில் தேடல்களை மேற்கொண்டு படிக்கிறான். புலம் பெயர்ந்த மாணவனும் உயர் தொழில் நுட்பவசதியுடன் படிக்கிறான். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்போமே ஆனால்.. புலம் பெயர்ந்த மாணவன் உயர் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ள போதும். ஒரு பிரச்சினையை எதிர் நோக்குவதிலும், புத்திக்கூர்மையிலும் ஈழத்து மாணவனே சிறந்துவிளங்குறான். மொத்தத்தில் புலம் பெயர்ந்த இளையோர் இணையத்தால் தேடலற்ற பாடசாலை ஒப்படைகளை சுயமாக எழுதாமல் கொப்பி அடித்து விட்டு சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்று நான் கூறுகிறேன்.

ஆபாசப் படங்கள், சாட்டிங், டேற்றிங் பற்றி கூறிய நண்பர்... வயது முதிர்ந்தவர்களை தேவையில்லாமல் சாடியிருக்கிறார், நடுவரவர்கள் சொன்னதுபோல நையாண்டி செய்திருக்கிறார். அத்துடன் இவற்றை வயது முதியவர்கள்தான் செய்கிறார்கள்... புலம் பெயாந்த் நாட்டில்; தான் காணும் இளையவன் தெளிவாக இருக்கிறான் என்று கூறி.. தெளிவில்லாத.. நடைமுறையில் இல்லாத... நம்பமுடியாத ஒரு கருத்தை சொல்லி சென்றிருக்கிறார். ஒரு பிழையான கருத்தை எதிர் அணியினரை நையாண்டி செய்து சத்தம் போட்டு கூறிவிட்டால். அது சரியென்று ஆகிவிடாது.

அன்றைய முன்னாள் இளைஞன் இன்றைய நடுத்தர முதியவர்கள் அடல்ஸ் ஒன்லி ஆங்கிலபடத்தில் வரும் அரை குறை வெட்டுகளுடன் வரும் ஒரு இரு நிமிடக்காட்சி கூட தங்கள் வக்கிரத்தை தீர்த்து கொள்ள ஆ வென்று காத்திருப்பார்கள்....புலத்தில

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.