Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் உறவுகளிடம் வினாவொன்று....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உறவுகளிடம் வினாவொன்று.....

தமிழ் உறவுகளிடம் வினாவொன்று, தமிழ்ப் புத்திஜீவிகள் என்றால் யார்? அதாவது தமிழ்ப்புத்திஜீவிகள் என்று தமிழுக்காகத் தொண்டாற்றுபவர்கள் அல்லது தொண்டாற்றியவர்கள் இருக்கின்றார்களா? அப்படியிருந்து தமிழுக்காக, தமிழருக்காக, தமிழரது வாழ்வுரிமைக்காகத் தமது புத்தியைத் தீட்டிச் சிங்களத்தை வெட்டி வீழ்த்தியுள்ளார்களா? இந்தப் புத்திஜீவிகளில் எத்தனைபேர் சிங்களத்துக்கு ஆலோசனை வழங்குபவர்களாக இருந்தார்கள். இருக்கின்றார்கள். புத்திஜீவிகளாகட்டும், செயல்வீரர்களாகட்டும் தமக்குள், அதாவது தமிழருக்குள் தமிழரை வீழ்த்துவதில் மட்டுமே சூரர்களாக உள்ளமையே நிதர்சனமாக உள்ளது. உண்மையில் தமிழினம் புத்திஜீவிகளைக் கொண்டது என்பதாயின் 2009 மேயின் பின்னராவது ஒரு அணியாக நின்றிருக்கும் அல்லது தேவை கருதி இன்றைய உலக ஓட்டத்திற்கு இசைவாக பல தளங்களில் நின்று பயணிப்பதாயினும் ஒருவரது காலை ஒருவர் வாராது பயணிக்குமாயின் ஏற்புடையதாக இருக்கும்.ஏனெனில் சிங்களவர்களை "மோடன்"என்ற இழிபெயரால் அழைத்தவாறு நாம் கீழ்மை நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மையாகும். சிங்களம் தனக்கு ஒரு பாரிய நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் ஒன்று திரண்டு, ஒரு அணியாக நின்று தம்மைத் தற்காத்துக் கொண்டு முன்பிருந்த நிலையைவிட மேல்நோக்கியே சென்றுகொண்டிருக்கிறார்கள். அதற்காக சிங்கள புத்திஜீவிகள்,பேராசிரியர்கள், சட்டவல்லுனர்கள், மதபோதகர்கள், என ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி அதனை இறுதியில் அரசியல் இராசதந்திரப் பலமாக்கிவிடுகின்றார்கள். அதனை ஒரு Diplomacy ஆக்கித் தம்மைப் பலப்படுத்திவிடுகிறார்கள். இதற்கான அடிப்படைக் காரணம் சிங்களவர்கள் பெயருக்காகவோ புகழுக்காகவோ தமது இனத்தை விட்டுக் கொடுக்காதவர்களாக இருப்பதுமாகும். இனிமேலும் அவர்கள் அப்படியே. அதனால்தான் சிங்களத் தலைவர்களால், ஏன் இடதுசாரித் தத்துவார்த்த அரசியல் பேசியவாறு புரட்சிகரப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய றோகண விஜயவீர போன்றவர்கள் கூட எமது தாயக மண்ணிலே நின்று சனாதிபதித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலே பேசியபோது தமிழினத்தை ஒரு தேசிய இனமாகவோ அவர்களது தாயகக் கோட்பாட்டையோ ஒரு போதும் ஏற்கமுடியாதென்று துணிந்து கூறமுடிந்தது என்றால் எங்களது புத்திஜீவித் தனத்தை எப்படி நோக்குவது. இது போன்ற பரப்புரைக் கூட்டங்களை ஏற்பாடு செய்ததும் தமிழர்களல்லவா? 1948 முதல் 2011 அதாவது இன்றுவரை தமிழரது அரசியல் இராசதந்திர நடைமுறைகள் பெரும் சறுக்கல் நிறைந்ததாகவே கடந்து செல்கிறது அல்லது எங்களிடம் இந்தியாவைக் கடந்து சென்று எமது அரசியல் இருப்பை உறுதி செய்யக் கூடிய இராசதந்திர நடைமுறை ஏதாவது இருந்ததா? எங்களுடைய புத்திஜீவிகள் காத்திரமான முன்னெடுப்புகளைச் செய்துள்ளார்களா? ஆனால், நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர் தமது உயிரை அரப்பணித்து, இளமையின் வசந்தங்களைத் திறந்து, வதைகூடங்களில் வதைபட்டவாறு தமிழரது அரசியலை உலகின் முற்றத்துக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள் என்பதே இனறை நிதர்சனமாகும். இனியாவது இந்தப் புத்திஜீவிகள் என்போர் ஈகியரின் ஈகத்தின் மேல் கருக்கொண்ட அரசியல் உரிமையை உரிய முறையிலே வென்றெடுக்க ஈகோவைப்(ego) புறந்தள்ளிச் செயலில் இறங்குவார்களா? என்பதே பல்லாயிரம் பவுன் வினாவாகும்.

உழைத்து உண்டு உடுத்துக் கொடுத்துச் சிறப்போடு வாழ்ந்த இனம் இந்தப் பெருந்துயரச் சூழலில் மிக மோசமான இனவழிப்பு, படுகொலைகள், சிறைப்படுத்தல்கள், பாலியல்வன்புணர்வுகள், நில ஆக்கிரமிப்பு, கல்விப்பறிப்பு, வாழ்வுரிமைமறுப்பு என நீண்டு செல்லும் அவலவாழ்வைக் கண்ட பின்பும் தமது சுயநலனுக்காகவும், சுகபோகங்களுக்காகவும், தமிழரை இழிமைப்படுத்தி வாழ முனையும் கூட்டத்தை என்னவென்று சொல்வது என்று புரியாது, பாமரத் தமிழர் பதைபதைப்பதை மட்டுமே இன்றைய தரிசனமாகக் காணமுடிகின்றது. ஆனால், காலம் தொடர்ந்தும் ஒரே திசையில் நகராது என்பதைக் காலங்கடந்தாவது புரிந்து கொள்வார்களா? இவர்கள் தமிழருக்கு மட்டுமன்றித் தமது சொந்தச் சந்ததிகளுக்கும் சேர்த்தே குழி வெட்டுகிறார்கள் என்பதை இலகுவாக மறந்துவிடுகின்றார்கள்.

நிறைவாகத் தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிவரிகளிலிருந்து

விரியும் பக்கமெல்லாம் விளம்பரங்கள்

நடப்பவை யாவும் நல்லன அல்ல.

கவனம்?

கைதவறிப் போகிறது எம் காலம்.

Edited by nochchi

என்னைப்பொறுத்தவரை இது பற்றி மிக நீண்ட கட்டுரை ஒன்றே எழுதலாம். முற்று முழுதாக தமிழ் கல்வி மான்கள் இன விடுதலைக்கு, பொருளாதார விடுதலைக்கு உதவவில்லை என்ரும் கூற முடியாது. ஆனால் ஒப்பீட்டு ரீதியாக புலமைசார் நிபுணர் கள் கூட்தலாக தமது புலமை மற்றும் செல்வாக்குகளை பிறருக்கு நிரூபித்து அல்லது சேவகம் செய்து பட்டங்கள் வாங்குவதில் பிரியம். தமது கிராமத்திற்கு அல்லது தனது பாடசாலைக்கு அல்லது வம்சத்திற்கு அல்லது தனது ஊர்க்கோயிலுக்கு ஏதாவது செய்துவிட்டால் சாதித்துவிட்டதாக பெருமை.

இதெல்லாம் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று அதே வேளை ஒட்டுமொத்தமான இனத்தின் இருப்புத்தான் எம் மொழிக்கோ அன்றி எம் வம்சத்திற்கோ அல்லது எம் பண்பாடு கலாச்சாரம் எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு என்பதனை எம் புத்திஜீவிகள் மறந்து விடுவார்கள்.

மகாராணியாரிடம் வருடம் தோறும் பட்டம் வாங்குவோர்கள் எத்தனை பேர்?

இலங்கை அரச பதவிகளில் உயர் பதவிகளில் இருந்து சிங்களத்திற்காக உழைத்து தேய்ந்து போனவர்கள் எத்தனைபேர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கிகளில் சிங்களத்திற்காக மண்டியிட்டு திட்டங்கள் போட்டு நிதி பெற்றுக்கொடுப்பவர்கள் யார்?

புலிகள் மனித உரிமை மீறுகின்றனர் என கட்டுரை கட்டுரையாக எழுதி ஐ. நா விலும் பல்வேறு நாடுகளிலும் பட்டம் வாங்கியோர் எத்தனை பேர்?

பிரச்சினை என்னவென்றால் இனத்தோடு ஊறிப்போன , பண்பாட்டுடன் ஊறிப்போனவற்றை நாம் உடனடியாக கைவிட முடியாதுதான் மாற்ற முடியாதுதான் ஆனால் வெளி நாட்டில் வதியும் மக்களும் அதனைத்தானே செய்கின்றார்கள். நாங்கள் படிக்கும் படிப்பும் அப்படித்தான் எங்கள் பெற்றோர்களும் அதனைத்தான் செய்கின்ரார்கள். மற்றவர்களுக்கு சேவகம் செய்யும் துறைகளில்தானே வழிகாட்டுகின்ரார்கள்.

அரசியல், சர்வதேச உறவு, பொருளாதாரம், பத்திரிகைத்துறை, சட்டம், மனித உரிமை போன்ற சமூக மற்றும் பன்னாட்டு அலகுகளுக்குள் செல்லும் துறைகளை இப்போதும் கூட பெற்றோர்கள் விரும்புவதில்லை. அப்படி படிப்பவர்கள் ஒரு சிலர் கூட தம் இனத்தை திரும்பி பார்ப்பதில்லை.

சிங்களவன் என்ன செய்கின்றான் எதை எம் பெற்றோர்கள் செய்யவிரும்புவதில்லையோ அதனைத்தான் செய்கின்றனர். எனக்கு சில நேரங்களில் செத்துவிடவேண்டும் போலவும் தோன்றும். நவனீதம் பிள்ளையை சந்திக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தபோது ஒரு புத்திஜீவியையும் அழைத்துக்கொண்டு போனால் பிறகு அவர் அந்த பணியை செய்வார் ( ஏனென்றால் அவர் குறிப்பிட்ட நாடு ஒன்றிற்கே பொருளாதார சட்ட ஆலோசகர்) நல்லா இருக்கும் என கேட்டால் அவர் சொன்ன பதில்... நான் ஒரு நியூட்டரலான ஆள் அப்பிடித்தான் தொடர்ந்து இருக்க விரும்புகின்றன் வேணுமென்றால் உங்களுக்கு கடிதங்கள் ட்ராவ்ற் பண்ணி தரமுடியும் என்றார்.

பசுபிக் தீவுகள், ஆபிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளில் பிரபல பத்திரிகைக்கு ஆசிரியர்களாக சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகளில் தமிழர்களை விட சிங்களர்தான் அதிகம்.

சுருக்கமாக சொல்லபோனால் அடிப்படையிலேயே எம் பரம்பரை சில தவறுகளை விட்டிருக்கின்றது. புலம்பெயர் மக்கள்தான் இவற்றை மாற்றவேண்டும்.

எதற்கெடுத்தாலும், கெளரவம், குடும்ப மானம், பக்கத்து வீட்டுக்காரர் என்ன செய்கினம் என்று ஆய்வு செய்து முடிவெடுக்கின்ற நிலமை மாறவேண்டும்.

தேசியத்தலைவரை சந்திக்க வந்த சில புலம்பெயர் மக்களிடம் அவர் சில வேண்டுகோளை விடுத்தார். அதாவது அரசியல், பன்னாட்டு உறவு, சட்ட , பத்திரிகை, தொழில் நுட்ப துறை ஆகியவற்றில் வீட்டிற்கு ஒருவரையாவது படிக்க வையுங்கள் என்றார்.

சொல்லிவிட்டு தலைவர் சும்மா இருக்கவில்லை. தானும் பல போராளிகளை வெளினாடுகளுக்கு விட்டு படிப்பித்தார். ஆனால் எம் இனத்திற்கு கஸ்டகாலமோ எல்லாம் ........

சமாதான காலத்தில் கிட்டத்தட்ட 20 இற்கு மேற்பட்ட பேராசிரியர்களை ( வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள்) நான் சந்தித்தேன் அவர்களில் இப்போ மூவர் மட்டும்தான் தேசியத்தலைவரை சந்தித்ததில் இருந்து ஏதோ இனத்திற்காக செய்து கொண்டு இருக்கின்றனர்.

Edited by உமை

இது தான் எனக்கு என்றுமே புரியாது உள்ளது நொச்சி!

எவ்வாறு சிலரால் முடிகின்றது?

பாரதியின் பாடலுக்குப் பதில் தேடுகின்றேன்! பாரதி எமது இந்த கேடு கேட்ட மனநிலையைப் புரிந்து வைத்திருந்தான் என்றே எண்ணத்தோன்றுகின்றது!

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடல் கண்டும், சிந்தை இரங்காரடி கிளியே!

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!!!

இந்த பாரதி இறந்த போது அவனது நிறை வெறும் முப்பது கிலோ மட்டுமே! அவனது மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் பதின்மூன்று பேர் மட்டுமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உமை மற்றும் புங்கையூரான் ஆகியோருக்குக் கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

உமை கூறியது போல் இதை ஒரு மிகப்பெரும் பரந்த கருதியல் கொண்ட கட்டுரையாக எழுதலாம். ஆனால் அவசர உலகில் ஒரு சிறுபொறியைத் தட்டிவிடவே வார்த்தைகளைக் கோர்வையாக்கிப் பதிந்தேன். இன்றுவரை எம்மிடையே ஒரு ஆரோக்கியமான புரிதலோ கருத்தியலோ இன்றிப் பல்வேறு திசைகளில் அலைகின்றோம். (பயணிக்கிறோம் என்று கூறமுடியாது. பயணத்துக்கு ஒரு இலக்கு இருக்குமல்லவா?)

புங்கையூரான், அதனால்தான் என்னவோ அவன் நீண்டகாலம் வாழ்ந்து இந்த உலகைக் காணவிரும்பவில்லைப் போலும்.

என்னைப்பொறுத்தவரை இது பற்றி மிக நீண்ட கட்டுரை ஒன்றே எழுதலாம். முற்று முழுதாக தமிழ் கல்வி மான்கள் இன விடுதலைக்கு, பொருளாதார விடுதலைக்கு உதவவில்லை என்ரும் கூற முடியாது. ஆனால் ஒப்பீட்டு ரீதியாக புலமைசார் நிபுணர் கள் கூட்தலாக தமது புலமை மற்றும் செல்வாக்குகளை பிறருக்கு நிரூபித்து அல்லது சேவகம் செய்து பட்டங்கள் வாங்குவதில் பிரியம். தமது கிராமத்திற்கு அல்லது தனது பாடசாலைக்கு அல்லது வம்சத்திற்கு அல்லது தனது ஊர்க்கோயிலுக்கு ஏதாவது செய்துவிட்டால் சாதித்துவிட்டதாக பெருமை.

இதெல்லாம் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று அதே வேளை ஒட்டுமொத்தமான இனத்தின் இருப்புத்தான் எம் மொழிக்கோ அன்றி எம் வம்சத்திற்கோ அல்லது எம் பண்பாடு கலாச்சாரம் எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு என்பதனை எம் புத்திஜீவிகள் மறந்து விடுவார்கள்.

மகாராணியாரிடம் வருடம் தோறும் பட்டம் வாங்குவோர்கள் எத்தனை பேர்?

இலங்கை அரச பதவிகளில் உயர் பதவிகளில் இருந்து சிங்களத்திற்காக உழைத்து தேய்ந்து போனவர்கள் எத்தனைபேர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கிகளில் சிங்களத்திற்காக மண்டியிட்டு திட்டங்கள் போட்டு நிதி பெற்றுக்கொடுப்பவர்கள் யார்?

புலிகள் மனித உரிமை மீறுகின்றனர் என கட்டுரை கட்டுரையாக எழுதி ஐ. நா விலும் பல்வேறு நாடுகளிலும் பட்டம் வாங்கியோர் எத்தனை பேர்?

பிரச்சினை என்னவென்றால் இனத்தோடு ஊறிப்போன , பண்பாட்டுடன் ஊறிப்போனவற்றை நாம் உடனடியாக கைவிட முடியாதுதான் மாற்ற முடியாதுதான் ஆனால் வெளி நாட்டில் வதியும் மக்களும் அதனைத்தானே செய்கின்றார்கள். நாங்கள் படிக்கும் படிப்பும் அப்படித்தான் எங்கள் பெற்றோர்களும் அதனைத்தான் செய்கின்ரார்கள். மற்றவர்களுக்கு சேவகம் செய்யும் துறைகளில்தானே வழிகாட்டுகின்ரார்கள்.

அரசியல், சர்வதேச உறவு, பொருளாதாரம், பத்திரிகைத்துறை, சட்டம், மனித உரிமை போன்ற சமூக மற்றும் பன்னாட்டு அலகுகளுக்குள் செல்லும் துறைகளை இப்போதும் கூட பெற்றோர்கள் விரும்புவதில்லை. அப்படி படிப்பவர்கள் ஒரு சிலர் கூட தம் இனத்தை திரும்பி பார்ப்பதில்லை.

சிங்களவன் என்ன செய்கின்றான் எதை எம் பெற்றோர்கள் செய்யவிரும்புவதில்லையோ அதனைத்தான் செய்கின்றனர். எனக்கு சில நேரங்களில் செத்துவிடவேண்டும் போலவும் தோன்றும். நவனீதம் பிள்ளையை சந்திக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தபோது ஒரு புத்திஜீவியையும் அழைத்துக்கொண்டு போனால் பிறகு அவர் அந்த பணியை செய்வார் ( ஏனென்றால் அவர் குறிப்பிட்ட நாடு ஒன்றிற்கே பொருளாதார சட்ட ஆலோசகர்) நல்லா இருக்கும் என கேட்டால் அவர் சொன்ன பதில்... நான் ஒரு நியூட்டரலான ஆள் அப்பிடித்தான் தொடர்ந்து இருக்க விரும்புகின்றன் வேணுமென்றால் உங்களுக்கு கடிதங்கள் ட்ராவ்ற் பண்ணி தரமுடியும் என்றார்.

பசுபிக் தீவுகள், ஆபிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளில் பிரபல பத்திரிகைக்கு ஆசிரியர்களாக சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகளில் தமிழர்களை விட சிங்களர்தான் அதிகம்.

சுருக்கமாக சொல்லபோனால் அடிப்படையிலேயே எம் பரம்பரை சில தவறுகளை விட்டிருக்கின்றது. புலம்பெயர் மக்கள்தான் இவற்றை மாற்றவேண்டும்.

எதற்கெடுத்தாலும், கெளரவம், குடும்ப மானம், பக்கத்து வீட்டுக்காரர் என்ன செய்கினம் என்று ஆய்வு செய்து முடிவெடுக்கின்ற நிலமை மாறவேண்டும்.

தேசியத்தலைவரை சந்திக்க வந்த சில புலம்பெயர் மக்களிடம் அவர் சில வேண்டுகோளை விடுத்தார். அதாவது அரசியல், பன்னாட்டு உறவு, சட்ட , பத்திரிகை, தொழில் நுட்ப துறை ஆகியவற்றில் வீட்டிற்கு ஒருவரையாவது படிக்க வையுங்கள் என்றார்.

சொல்லிவிட்டு தலைவர் சும்மா இருக்கவில்லை. தானும் பல போராளிகளை வெளினாடுகளுக்கு விட்டு படிப்பித்தார். ஆனால் எம் இனத்திற்கு கஸ்டகாலமோ எல்லாம் ........

சமாதான காலத்தில் கிட்டத்தட்ட 20 இற்கு மேற்பட்ட பேராசிரியர்களை ( வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள்) நான் சந்தித்தேன் அவர்களில் இப்போ மூவர் மட்டும்தான் தேசியத்தலைவரை சந்தித்ததில் இருந்து ஏதோ இனத்திற்காக செய்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம், அவர்கள் படிக்காத ஒருவருக்குக் கீழ் வேலை செய்வது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம். படித்த புத்திஜீவிகள் தாம் சேவை செய்யமாட்டோம் எனக் கூறியதில்லை. அவர்கள் முயற்சி எடுத்து தலைவரைச் சென்று சந்தித்தனர்தானே? அதுவே பெரிய விடயம். ஆனால், அவர்கள் சந்தித்து விட்டு வந்த பின்பு ஏற்பட்ட அனுபவங்களால்தான் அவர்கள் மேலும் சேவை செய்ய முடியவில்லை. அவர்களை அவர்கள் வழியில் வேலை செய்ய விட்டிருந்தால் எம்மினத்திற்கு இந்த நிலை வந்திருக்காது. இந்த நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த படித்ததுகளில் நம்பிக்கையோ மரியாதையோ கிடையாது

உண்மையில் இவர்கள் படிக்க படிக்க பொதுநலங்களிலிருந்தும் மக்களிடமிருந்தும் விலகி

நான் எனக்கு என இறுமாப்படைந்து செல்வதையே காணலாம்.

உண்மையில் படிப்பை இவர்களை சாந்தப்படுத்தும்

ஆனால் இது எதிர் விளைவையே எமது இனத்தைப்பொறுத்தவரை தந்துள்ளது. காரணம் எதிரி குள்ளநரிக்குணம் கொண்டவன். இவர்களை அவன் அறிவான்.

இருந்தாலும் நானறிந்தவரை பேராசிரியர் மாமனிதர் துரைராசா .......முதல் மாமனிதர் குமார் பொன்னம்பலம்வரை எமக்காக சாகும்வரை வாழ்ந்தோரும் உண்டு

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நீலன், லக்ஸ்மன், கேதீஸ்… புத்திஜீவிகளா? புறம்போக்குகளா?

Homeby:

- எழுபரிதி -

முன்னர் வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராய் பணிபுரிந்த டேவிட் ஜெயராஜ் என்பவர் தற்போது ரொறொன்ரோ நகரில் வசிக்கிறார். தொலைபேசி வாயிலாகவும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமும் கிடைக்கப்பெறும் செய்திகளை வைத்துக்கொண்டு ஏற்கனவே தான் சேர்த்து வைத்திருக்கும் சில தகவல்களையும் சேர்த்து இலங்கைத்தீவில் நடைபெறும் விவகாரங்கள் பற்றி அருகிலிருந்து பார்த்ததுமாதிரி ஆங்கிலத்தில் வாராந்தம் எழுதித் தள்ளுகிறார்.

சரித்திரக்குறிப்புகள் சிலவற்றை வைத்துக்கொண்டு கல்கி கிருஸ்ணமூர்த்தி, சாண்டில்யன் போன்றோர் எப்படி சரித்திர நாவல்கள் படைத்தார்களோ அதேபோன்று இவரது ஆக்கங்களும் விடயம் தெரியாது படிப்பவர்களுக்கு சுவையாக இருக்கும் பெரும்பாலும் ஈழத்தமிழரல்லாத வாசகர்களுக்காக எழுதும் ஜெயராஜ் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாமல் அடையாளங்காணப்பட்ட சிலதரப்பினரை திருப்பதிப்படுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார். அவரது கட்டுரை தனிநபர் பற்றியதாக இருக்கும்போது சம்பந்தப்பட்டவரது குலம் கோத்திரம் தகப்பனாரது தொழில் என பிற்போக்குத்தனமான விடயங்களை ஆங்கில Tabloid களின் பாணியில் விபரித்து விடுப்புப்பிடுங்க முயல்பவர்களுக்கு தீனி போடுகிறார்.

இப்பொழுது நான் சிலாகிக்க விரும்புவது ஜெயராஜ் பற்றி அல்ல. ஈபிஆர்எல்எப் அமைப்பின் முக்கியஸ்தராகவிருந்த, கடந்த வருடம் கொழும்பில் கொல்லப்பட்ட திரு கேதீஸ்வரன் லோகநாதன் பற்றி ஜெயராஜ் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரைபற்றியது. இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களை பரவவிடுவது தொடர்பானது. “ஐக்கியஇலங்கைக்குள் தமிழர் உரிமைகளுக்காக போராடியவர்” (Ketheesh: Champion of Tamil Rights in United Lanka) என்ற தலைப்பில் கேதிஸ்வரனை போற்றுவதாக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இது போன்ற கட்டுரைகளை முன்பும் ஜெயராஜ்; போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். சாராம்சம் இதுதான் மேலைத்தேச நாடுகளில் உயர்கல்வி கற்ற மேல்தட்டைச் சேர்ந்த தமிழ் கல்வியாளர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்படுவதே தமிழ் மக்களின் இன்றய அவல நிலைக்கு காரணமாக இருக்கிறது.

நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், போன்றவர்களின் பட்டியலில் கேதீஸ் லோகநாதனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். முன்னயவர்கள் போன்று பிரசித்தி பெற்ற ஹவார்ட், ஒக்ஸ்போர்ட் பட்டதாரியாக இல்லாதவிடத்தும் சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை படித்த கேதீஸ் விடுதலைப்புலிகளை எதிர்த்தவர் என்பதால் பெரும் கல்வியாளராய் ஜெயராஜ் போன்றவர்களால் தரம் உயர்த்தப்பட்பட்டிருக்கிறார். (கேதீஸ் நெதர்லாந்து ஹேக் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு அபிவிருத்தித்துறை பற்றி கற்றிருக்கிறாராம்.) ஜெயராஜ் மட்டுமல்ல அமெரிக்காவில் வாழும் அகிலன் கதிர்காமர், வாசுகி நேசையா போன்றோரும் மேற்குலகை திருப்திப்படுத்தும் வகையில் இந்தப்பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

இனந்தெரியாதவர்களால் கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன கதிர்காமர், கேதீஸ்வரன் மட்டுமல்ல ஐ.நா. சபையின் விசேட பிரதிநிதியாகவிருக்கும் ராதிகா குமாரசாமி, பாக்கியசோதி சரவணமுத்து போன்றவர்களும் ஈழத்தமிழர்கள் மத்தியிலுள்ள விரல் விட்டு எண்ணப்படக்கூடிய கல்வியாளர்களாக இந்த எழுத்தாளர்களால் சித்தரிக்கப்படுகிறார்கள். மற்றய தமிழர்கள் எத்தனை உயர்கல்வித்தகமை உள்ளவர்களாக இருப்பினும் தமிழ் தேசியத்தை பற்றி நிற்பவர்களாக இருப்பின் அவர்கள் தேசியவாத பாசிஸ்டுகளாக (Ethno facists) இவர்களால் வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் கல்வித்தகமைகள் தரம் குறைக்கப்படுகின்றன.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களது முனைவர் பட்டம் பற்றி அறிய ரத்னஜீவன் கூல் பட்டபாடு அவர் இன்னொரு முனைவர் பட்டத்தினை பெறுவதற்கு தேவையான அளவு உழைப்பாக இருந்தது. இத்தனைக்கும் தமிழ் மக்களின் நேசிப்பினை பாலசிங்கம் பெற்றது அவரது பட்டங்களால் அல்ல என்பது இவர்களுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை.

மேற்குறிப்பிட்ட கல்வியாளர்களிடத்தில் ஒரு பொதுமைப்பாடு உள்ளது. இவர்கள் அனைவரும் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இலங்கைதீவின் வடக்கு கிழக்குப்பகுதிகளில் வாழந்த அனுபவமோ அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் பழகிய அனுபவமோ இவர்களுக்கு கிடையாது. இவர்களில் சிலருக்கு தமிழில் உரையாடவே தெரியாது. இருப்பினும் சிங்கள மேல்வகுப்பினருடன் உறவு வைத்திருந்தவர்கள் என்பதனால் சிறிலங்காவின் ஆங்கில ஊடகங்களும், இந்திய மேல்தட்டினர் குறிப்பாக பிராமணிய கல்வியாளர்கள், ஊடகவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் என்பதனால் இந்திய ஊடகங்களும், தங்களது நலனை பாதுகாக்ககூடியவர்கள் என்ற வகையில் மேற்கத்தைய ஊடகங்களும் இவர்களை உயர்த்திப் பிடிக்கின்றன.

நீலன் இறந்தபோது பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் இரங்கற் கட்டுரை எழுதிய மைல்ஸ் லற்வினப் என்பவர் அண்மைக்காலத்தில் எனது நண்பரானார். நீலன் சாதாரண தமிழ் மக்களுடன் தொடர்புகளை வைத்திருக்காத மக்கள் ஆதரவற்ற ஒருவர் என் நான் அவரைப்பற்றி குறிப்பிட்டபோது மைல்ஸ்க்கு இத்தகவல் நம்ப முடியாததாக இருந்தது. (நீலன் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Minority rights group என்ற அரசு-சாரா அமைப்பின் தலைவராக இருந்தபோது மைல்ஸ் அதன் பணிப்பாளராக கடமயாற்றினார்.)

நீலன், ராதிகா ஆகியோர் இயக்குனர்களாக இருந்த கொழும்பில் இயங்கும் International Centre for Ethnic Studies, (ICES) என்ற அமைப்பிலும் பாக்கியசோதி சரவணமுத்து இயக்குனராய் இருக்கும் Centre for Policy Alternatives(CPA) என்ற அமைப்பிலும் கேதீஸ் பணிபுரிந்திருக்கிறார். இவை வெளிநாட்டு நிதி உதவியில் இயங்கும் நிறுவனங்கள். மேலத்தேச “சனநாயகத்தை” அது தேய்வடைந்துள்ள மூன்றாம் உலக மக்களுக்கு கற்றுத்தர இந்த நிறுவனங்களுக்கு பாரிய நிதி உதவி வழங்கப்படுகினறது. இவற்றினை கொண்டு உலகம் சுற்றி கருத்தரங்களில் கலந்து கொள்ளுதல். அறிக்கைகள் வெளியிடுதல் எனக் சுகமாகக் காலம் கழிக்கும் இவர்கள்தான் தமது மக்களின் நலனில் அக்கறை கொண்ட மிதவாதிகளாக மதிக்கப்படுகிறார்கள். பதிலுக்கு மேற்கத்தைய அரசுகள் இவர்களின் தகவல்களைக் கொண்டே அரசியல் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. இவர்களது அறிக்கைகள் நாட்டின் அரசியல் உறுதிநிலை, வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் போன்ற தகவல்களை மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு தெரிவிக்கிறதே தவிர இலங்கைத்தீவின் தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டுக்கு இதுவரை எந்தத்த தீர்வையும் தரவில்லை.

உண்மையில் இந்த கல்வியாளர்கள் சுயநலத்திற்காக தமது இனத்தின் நலனை ஏன் தமது சுயமரியதையே விற்று வாழ்கிறர்கள். நீலன் தலைசிறந்த அரசியல் சட்ட வல்லுனராக இருந்திருக்கலாம் ஆனால் அவரது ஆற்றல் சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு உதவியதே தவிர தமிழ்மக்களுக்கு உதவவில்லை. சந்திரிகாவின் ஆலோசகராக இருந்த நீலன் அவரது சமாதானத்துக்கான யுத்தத்துக்கு ஆதரவு செலுத்தி வந்தார்.

வெறுமனே கல்வித்தகமைகளும் சான்றிதழ்களும் ஒரு இனத்தின் விடுதலைக்கு உதவப்போவதில்லை என்பதனை ஈழத்தமிழ் மக்கள் உணர்ந்திருந்தமையால் இவர்கள் கொல்லப்பட்டபோதுகூட பெரிதாக அனுதாப அலை வீசவில்லை.

சமுகவியல், வெளிநாட்டு அபிவிருத்தி, அரசியற் சட்டம் போன்ற துறைகளில் கல்வி பயின்றவர்களே மேற்குறிப்பிட்ட கல்வியாளர்கள். ஏனைய துறைகளில் சாதனை படைத்தவர்கள் பொதுவிடயங்களில் ஈடுபடுவதில்லை என்பதால் அவர்கள் பற்றி ஊடகங்களும் அரசியல் வாதிகளும் கண்டு கொள்வதில்லை. இன்று புலம் பெயர்ந்துள்ள நாடுகளில் வளரந்து வரும் நமது இளைய தலைமுறையினர் மேற்கண்டதுறைகளிலும் நாட்டம் கொண்டுள்ளனர்;. இங்கிலாந்தின் ரஸ்ஸல் கல்லூரிகளிலும், அவுஸ்திரேலிய, வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கல்விநிறுவனங்களிலும் கல்வி கற்கும் இந்த இளையவர்கள் முன்னையவர்கனை விஞ்சும் வண்ணம் கல்வியாளர்களாய் திகழ்வார்கள் என்பதனையும் இந்த இளையவர்கள் தங்கள் தன்மானத்தை இழந்து சமரசம் செய்ய தயாராய் இருக்க மாட்டார்கள் என்பதனையும் உறுதியாக நம்பலாம்..

ஒரு பேப்பரிலிருந்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.