Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை செல்வராசா பத்மநாதன் கண்டித்தார்

Featured Replies

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை செல்வராசா பத்மநாதன் கண்டித்தார்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை, இலங்கையில் தேசிய மீள் இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்குத் தடையாக அமைவதாக செல்வராசா பத்மநாதன் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் தி ஐலன்ட் நாளேட்டிற்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்தைக் கூறினார்.

போர் முடிவடைந்தமை, போரால் நாசமடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதாகவும், போரின் பின்னரான மீளமைப்புப் பணிகளில் உண்மையான அக்கறை கொண்டிருந்தவர்களுக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கை பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் செல்வராசா பத்மநாதன் கூறினார்.

நிபுணர் குழுவின் அறிக்கை, எந்தச் சமுகத்திற்கும் உதவியாக அமையாதெனவும் சமுகத்தில் புதிய பிளவுகளை ஏற்படுத்துமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேச்சுக்கள் தான் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியெனவும், பல தசாப்த காலப் பிரச்சினைகள் இரண்டு மாதங்களில் தீர்க்கப்படமுடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணரவேண்டுமெனவும் பொறுமையைக் கடைப்பிடிப்பது முக்கியமானதெனவும் செல்வராசா பத்மநாதன் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உண்மையான விசுவாசத்துடன் பேச்சுக்களை நடத்துவதாகவும், அவருடன் இணக்கம் ஒன்றை ஏற்படுத்தத் தவறினால், தமிழர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பம் கிடைக்காதெனவும் அவர் கூறினார்.

முன்னாள் போராளிகளிற்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கைகள் முன்னேற்றப்படலாமென அவர் கூறினார். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் கள நிலைமையை உணர்ந்துள்ளதாகவும், ஆனால், விடுதலைப் புலிகளை அழித்தமைக்கு தற்போதைய அரசுக்குப் பாடம் புகட்டப்படவேண்டுமெனக் கருதும் சில சக்திகள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ளதாகவும் செல்வராசா பத்மநாதன் மேலும் தெரிவித்தார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7814

  • தொடங்கியவர்

‘Darusman Report’ won’t help national reconciliation process, says KP

The Island: The government and a section of the Opposition strongly oppose UNSG Ban Ki-moon’s move targeting SL over unsubstantiated war crimes allegations. UNP MP Wijeyadasa Rajapakshe on Apr 25 wrote to UNSG Ki-moon urging him to drop his anti-SL plans. The UNP MP alleged that the UNSG’s action would undo national reconciliation efforts. As LTTE leader Velupillai Prabhakaran’s successor, could you comment on the crisis caused by the UN?

Pathmanathan: There is absolutely no point in living in the past. The conclusion of hostilities gave us an opportunity to develop areas devastated as a result of fighting. The UNSG’s move couldn’t have come at a worse time for those genuinely interested in going ahead with post-war recovery plans. The ‘Darusman Report’ is nothing but an obstacle to national reconciliation. The bottom line is that it will not benefit any community, except to cause fresh wounds, leading to further divisions among the people.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=25221

தஞ்சாவூர் பொம்மைகள் இப்போது சிறிலங்காவில் வாழ்கின்றன. அதற்கு ஐ நா அறிக்கை பற்றி என்ன தெரியும்.?

  • கருத்துக்கள உறவுகள்

இவரை உலகத்துக்கு தெரியாதா?

இவரது சொல்லுக்கு ஏது மதிப்பு?

ஐநா அறிக்கையை அவர் இன்னும் வாசிக்கவில்லை போலை. ஆராவது அவருக்கும் ஒரு பிரதியை கொடுங்காப்பா

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு வக்காலத்து வாங்கி யாழ் களத்தில் கொஞ்சப்பேர்.சொல்லி வேலையில்லை."கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை".கொல்லப்பட்ட மக்களுக்கு மகிந்த அரசு என்ன நீதி வழங்கியது என இவரால் கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா அறிக்கையை விடுங்கோ.. :unsure: இன்ரர்போலின் பிடியாணையை கண்டிக்கிறாரா இல்லையா? :wub: இதைக் கேட்டுச் சொல்லுங்கப்பா முதல்ல...! :lol:

இலங்கை அரசின் பிடிக்குள் இருக்கும் மக்கள் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுவதோ கண்டிப்பதோ தவிர்க்க முடியாத நிர்ப்பந்த வாழ்வை சுட்டிக்காட்டுகின்றது. அவ்வாறான நிர்பந்தங்களை விட அதிகமான நிர்ப்பந்தம் முன்னாள் புலிகள் முக்கியஸ்தர்களான பத்மநாதன் கருணா போன்றவர்களுக்கு இருப்பது வெளிப்படையாக உணரக்கூடியது. நிர்ப்பந்தங்களுக்குள்ளும் சு+ழ்நிலைகளுக்குள்ளும் அகப்படும் தமிழர்கள் எல்லோரும் துரோகியானால் சரணைடைதிலில் இருந்து புலப்பெயர்வுவரை தூரோகமே பரந்துநிற்கின்றது. துரோகி என்று சுட்டிக்காட்டும் தகுதியுடைய தியாகி எவரும் உயிருடன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் பிடிக்குள் இருக்கும் மக்கள் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுவதோ கண்டிப்பதோ தவிர்க்க முடியாத நிர்ப்பந்த வாழ்வை சுட்டிக்காட்டுகின்றது. அவ்வாறான நிர்பந்தங்களை விட அதிகமான நிர்ப்பந்தம் முன்னாள் புலிகள் முக்கியஸ்தர்களான பத்மநாதன் கருணா போன்றவர்களுக்கு இருப்பது வெளிப்படையாக உணரக்கூடியது. நிர்ப்பந்தங்களுக்குள்ளும் சு+ழ்நிலைகளுக்குள்ளும் அகப்படும் தமிழர்கள் எல்லோரும் துரோகியானால் சரணைடைதிலில் இருந்து புலப்பெயர்வுவரை தூரோகமே பரந்துநிற்கின்றது. துரோகி என்று சுட்டிக்காட்டும் தகுதியுடைய தியாகி எவரும் உயிருடன் இல்லை.

நீங்கள் வரலாறாக எதை எடுத்துக்கொள்கின்றீர்கள் என்பது தடுமாற்றமாகவுள்ளது.

பத்மநாதன் பற்றிக்கூட சில சந்தேகங்களுண்டு.

ஆனால் கருணா எனப்படும் முரளிதரன் சிங்களத்தின் பிடியின்பால் தளரவேண்டியுள்ளார் என்பது..........???

முழுப்பூசனிக்காயை ........................மூடும் செயல்.

இதைத்தாங்கள் தொடர்ந்து இங்கு செய்ய தொடர்பிராயத்தனம் செய்வதுதான்...................??? :(:(:(

Edited by விசுகு

  • தொடங்கியவர்

செல்வராசா பத்மநாதன் அவர்கள் மேலே அளித்த செவ்வியில் தான் "நேரடியாக எந்த யுத்தத்திலும்" பங்குபற்றவில்லை என கூறியுள்ளார். இது தான் தன்மேல் போர்குற்றச்சாட்டுக்கள் சுமத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

இந்த சிங்கள இனவாத பத்திரிகை இவரை தற்போதைய விடுதலைப்புலிகளின் தலைவர் என வர்ணித்துள்ளது.

மேலும் சிங்களம் இவரை வைத்து ஆடும் நாடகங்கள் கூட ஒரு காலத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களை குற்றவாளிகளாக காட்ட உதவும்.

... கேபி, இதென்ன இதற்கு மேலும் கண்டிப்பார்!!!!!! :o கேபியை சிங்களம் ஓர் அடி பாய வைத்தால், இங்கு கேபியின் வால்கள் என சிங்களத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் நூறடி பாய நிற்கிறார்கள்!!! ... :lol:

நீங்கள் வரலாறாக எதை எடுத்துக்கொள்கின்றீர்கள் என்பது தடுமாற்றமாகவுள்ளது.

பத்மநாதன் பற்றிக்கூட சில சந்தேகங்களுண்டு.

ஆனால் கருணா எனப்படும் முரளிதரன் சிங்களத்தின் பிடியின்பால் தளரவேண்டியுள்ளார் என்பது..........???

முழுப்பூசனிக்காயை ........................மூடும் செயல்.

இதைத்தாங்கள் தொடர்ந்து இங்கு செய்ய தொடர்பிராயத்தனம் செய்வதுதான்...................???

எவரையும் அல்லது எவரது செயற்பாட்டையும் நான் நியாயப்படுத்த முனையவில்லை அதேநேரம் துரோகம் என்ற அளவுகோலை எந்த இடத்திலும் நான் பயன்படுத்த விரும்பவில்லை. அதற்கான தகுதி எனக்கிருப்பதாகவும் நான் உணரவில்லை. அது கருணா டக்ளஸ் பத்மநாதன் அல்லது எவராகவும் இருக்கட்டும். துரோகங்களால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் துரோகத்தை தனியொருவனது செயற்பாட்டில் இனம்காண முற்படுவதில் உடன்பாடு இல்லை. அவ்வளவுதான்.

தமிழர்களின் விடுதலைக்காக புறப்பட்டு போராடிய எத்தனையோ தலமைகள் குழுக்கள் போராளிகள் அரசுடன் இணக்க அரசியலுக்குள் நுளைந்தது தனிப்பட்ட விருப்பு சார்ந்தது சுயநலம் சுகபோகம் சார்ந்தது அதுவே தூரகம் என்பதும் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்தான். எங்கும் நிர்ப்பந்தங்கள் சு+ழ்நிலைகள் சமூக இறுக்கங்கள் விரிந்துகிடக்கின்றது. கருத்துக்கள் அதற்குள்ளாக இருந்து வருகின்றது. செயற்பாடுகள் அதற்குள்ளாக அமைகின்றது. இவைகளை எல்லாம் ஆத்திரத்துடனும் உணர்ச்சிவசப்பட்டும் கையாழுதல் என்னும் புதிய நிர்ப்பந்தங்களையும் சு+ழ்நிலைகளையும் அதற்குள் ஏராளமானவர்களது வாழ்வையும் உருவாக்கும். தமிழ்த்தாயக்கு இரண்டு பிள்ளைகள் ஒன்று தியாகி மற்றது துரோகி என்பார்கள். தமிழ்த்தாயே தியாகமும் துரோகமும் கலந்த ஒருவளாக இருக்கின்றாள். பிள்ளைகளுக்குள் சண்டை பிடிக்கலாமா? சகோதரங்களுக்குள் விரோதம் வளர்க்கலாமா? நாமெல்லோரும் ஒரு தாய் பிள்ளையல்லவா? ஒரு பாச உணர்வுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.