Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலித்து நெருங்கி பழகிய சீமான் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார்: நடிகை புகாருக்கு சீமான் மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்து நெருங்கி பழகிய சீமான் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார்: நடிகை புகாருக்கு சீமான் மறுப்பு

Thursday, June 2, 2011, 9:28

சிறீலங்கா

பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில்,

சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.

இந்த புகார் தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது:

நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார்.

அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்.

இவ்வாறு வக்கீல் சந்திரசேகரன் தெரிவித்தார்.

tamilthai.com

  • கருத்துக்கள உறவுகள்

அ'றோ"கரா!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.

இது இந்தியாவில் முன்னுக்கு வருபவர்களுக்கு ஓர் சாபக்கேடு!

சில நாட்களுக்கு முன்பு, சாத்திரியும் தனது பயணக்கதையில் இவ்வாறான ஒரு சம்பவத்தை விபரித்திருந்தார்!

சரி, ஒரு கதைக்கு உண்மையாக இருந்தாலும், இந்தியாவில் எல்லாக் காதல்களும் கல்யாணத்தில் சுபமாகவா முடிகின்றன?

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கெட் போன நடிகையான விஜயலட்சுமி காங்கிரஸ் காரனிடமும் திமுக காரனிடமும் பண்ததை வாங்கி கொண்டு இந்த புகாரை கொடுத் இருக்கிறார்....தமிழக அரசியலில் சீமானின் வளர்ச்சி பலருடைய அரசியல் எதிhகால்தை கேள்விக்குறி ஆக்கலாம் என்றதால இது ஒரு கூட்டு சதியா கூட இருக்கலாம்...

இப்பிடி காதலிச்சிட்டு கைவிட்டதுன்னு புகார் சொன்னா நிறைய தமிழர்களும் தமிழச்சிகளும் ஜெயில்ல தான் இப்ப இருக்கனும்...

அட என்ன என்னத்துக்கு புகார் கொடுக்கிறதுன்னு ஒரு இதுவே இல்லாமா போயிடிச்சு...

நாராயனா............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் செல்வாக்குள்ள ஆண்கள் கிட்டத்தட்ட அனைவர் மீதும் வரும் குற்றச்சாட்டுத் தான் இது. அதுவும் திமுக.. காங்கிரஸ்.. என்று பெரிய கட்சிகளை அடித்துவிரட்டிய அண்ணன் சீமான் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அமைவது ஒன்றும் விஜப்பல்ல...!

விக்கிலீக்ஸ் அதிபர் மீதும் இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது. அதை வைச்சு அவரின் வாழ்க்கையை முடக்க முயற்சி செய்தார்கள்.

அதுவும் சொந்த மகளையே அங்கீகரிக்கத் தயங்கிய மூன்று பொண்டாட்டிக் கள்ளர்கள் எல்லாம் கட்சித் தலைமையில் இருக்கிறார்கள். 5 முறை முதலமைச்சராகக் கூட இருந்திருக்கிறார். அண்ணன் சீமான் ஒரு நடிகைக்கு தானே அல்வா கொடுத்தான். பெற்றுக் கொண்டு போகட்டன்.. என்று நக்கலாக சொல்லி விட வேண்டும். இப்படியான செய்திகளை பெரிதுபடுத்துவதே மனித இனத்துக்கு அவமானம்.

ஒருவேளை அண்ணன்.. சீமான்.. தனது தனிப்பட்ட வாழ்க்கையில்.. ஒரு ஆண் மனிதனாக ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படுவது தவறல்ல..! சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவரை திருமணம் செய்ய முடியாமலும் போயிருக்கலாம் அல்லது அப்படி எதுவுமே நடக்காமலும்.. வெறும் பத்திரிகைச் செய்திப் புகழுக்காக .. அல்லது பிறரிடம் பணம் வாங்கிக் கொண்டும்..அந்த நடிகை இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கலாம். பெண்கள் நடிகைகள் வழமையாக செய்யுற மிகவும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு இதுதான். எதுஎப்படி இருப்பினும் இது சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை. அதற்கும் அவரின் பொது வாழ்க்கைக்கும்.. அரசியல் நிலைப்பாட்டுக்கும்.. தலைமைத்துவ ஆற்றலுக்கும் தொடர்பு படுத்தக் கூடாது.

இதற்கெல்லாம் ஒரே முடிவுதான். பெண்களோடு பழகும் போது.. மிகவும் அவதானமாக தூர விலகி இருந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டுவதே சில சந்தர்ப்பங்களில் ஆண்களுக்கு பிரச்சனை ஆகிவிடுகிறது. பெண்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்று இருக்க வாய்ப்பில்லை போல இருக்குது. எனவே ஆண்கள் குறிப்பாக புகழ்பெற்று விளங்கும் ஆண்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

தேசிய தலைவரின் வாழ்க்கைக் காலத்திலும் முக்கிய கட்டத்தில் அவர் மீதும் பொம்பிளக் குற்றங்கள் சுமத்தி அவரை வீழ்த்த பலர் கனவு கண்டனர். அந்த வகையில் எங்கள் அண்ணன் சீமான் இவற்றை தூசாக எண்ணித் தட்டிவிட்டு தன் கருமத்தில் கண்ணாக இருந்து செயற்படுவதே அவசியம்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பெயரைக் கெடுக்கும் சதியே விஜயலட்சுமியின் புகார்-வக்கீல்

வியாழக்கிழமை, ஜூன் 2, 2011, 10:21 [iST]

சீமான் பெயரைக் கெடுக்கும் சதித் திட்டத்துடன்தான் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ளார். இதை சட்டப்படி சீமான் சந்திப்பார் என்று அவரது வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமியின் புகாரைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர் சந்திரசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்கா விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார்.

அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்.

சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

02-vijayalakshmi33-300.jpg

இவர் தான் அண்ணன் சீமான் மீது காதலித்து ஏமாற்றிய குற்றம் சுமத்திய நடிகை.

அண்ணன் சீமானுக்கு ஒரு ஆலோசனை.. பேசாம குற்றச்சாட்டுக்களில் இருந்து வெளிவர.. உங்களை கட்டிக்க ஆசைப்படுற இவாவையே கட்டிக்குங்களேன். பிகரு சீப்பரா சா.. சூப்பரா இருக்குது. பிகரு என்றால் படம்..! :lol::D

பிகரை பார்த்து.. ஏமாந்திடாதிங்கண்ண.. இவா ரெம்ப கில்லாடி.. காசுக்காக புகார் கொடுத்து பின்னி விடுற.. மன்னி என்கிறார்கள்..

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திற்கு தென் சென்னை இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

விஜயலட்சுமி இவ்வாறு பரபரப்புப் புகார் கூறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரித்த ஒரு கேம் ஷோவில் தொகுப்பாளராக விஜயலட்சுமி பணியாற்றி வந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மீதும் இதுபோல புகார் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது அவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/movies/heroines/2011/06/vijayalakshmi-complains-cheating-by-seeman-aid0091.html

இப்படியான குற்றச்சாட்டுக்களை காதலித்து ஏமாற்றிய பெண்கள் மீதும் ஆண்கள் சுமத்தலாமா...???! இல்ல கேட்கிறன்.. நாட்டில அதுதானே அதிகம் நடந்துகிட்டு இருக்குது. :D:)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 2, ஜூன் 2011 (11:22 IST)

திருமணம் பற்றி சீமான் நினைத்துக்கூட பார்க்கவில்லை: விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு: சீமான் வக்கீல்

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து நடிகை விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான், என்னை காதலித்து ஏமாற்றி விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக சீமானும், நானும் பழகி வந்தோம் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேற்பார்வையில் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.

சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மையுள்ளதா என்பது குறித்து விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சீமானிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானின் வக்கீல் சந்திரசேகர் கூறியதாவது,

கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களுக்காக சீமான் போராடி வருகிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் வரை ஓயப்போவதில்லை என்று நாம் தமிழர் கட்சி கூட்டங்களில் அவர் பேசி வருகிறார். வேறு எதைப்பற்றியும் அவர் சிந்திப்பதில்லை. காதலிப்பதற்கெல்லாம் அவருக்கு நேரமில்லை.

தமிழ் இன உணர்வுடன் சீமான் பேசி வருவதால் அவரது பேச்சை கேட்க கூட்டம் கூடுகிறது. அவரது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை விரைவில் கண்டுபிடிப்போம்.

திருமணம் செய்து கொள்வது பற்றியும் சீமான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவருடன் இருக்கும் நாங்கள்தான் போராடி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளோம். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று சீமான் விரும்பினார்.

தற்போது அகதி முகாமில் தங்கியுள்ள அப்பெண்ணின் பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். விரைவில் சீமான் அப்பெண்ணை மணக்க உள்ளார். போலீஸ் விசாரணையில் விஜயலட்சுமியின் புகாரில் உண்மையில்லை என்பது தெரியவரும்.

சீமானின் புகழை கெடுக்கும் வகையில் செயல்பட்ட விஜயலட்சுமி மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம். சீமான் குற்றமற்றவர் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் என்றார்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் விஜயலட்சுமி சிமானுக்கு பதிலா எங்கள் ஆண்னளின் சிங்கம் பெண்களின் ஹீNhர வினித் அண்ணா தான் உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.. உங்களுக்கு ஒகேனா அவருக்கும் ஒகே...

இந்தச் செய்தியை எல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. சீமானின் செல்வாக்குக் கூடக் கூட இதைவிட அதிகமாக அவதூறுகள் அதிகாரவர்க்கத்தால் பரப்பப்படும்.

இல்லை தெரியாமத்தான் கேட்கிறன், எல்லாக் காதலும் திருமணத்திலேயா முடிகிறது? இவ்வளவு காலமும் இந்த விஜயலட்சுமி என்கிருந்தவ?

அதைவிட கோடம்பாக்க சினிமா உலகில் சான்ஸ் வாங்குவதற்காக எதையும் இழப்பார்கள்.

ஒருமுறை இயக்குனர் சுந்தரராஜன் சினிமா உலகைப் பற்றி கூறுகையில் 'தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்' என்று சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புனிதமான கொள்கையை வரித்தவர் வாழ்வில், இது போல் ஏராளமான பேர் வருவார்கள்!

வேதங்களில் ஊர்வசி,ரம்பை, திலோத்தமை என்று ஒரு படையே இருக்கின்றது!

இவற்றை ஏறெடுத்தும் பார்க்காது, தொடருங்கள் உங்கள் தவத்தை!

இலட்சிய வாதிகள் வீழ்வதும் இல்லை! எதிர்த்து நின்றோர் வாழ்ந்ததும் இல்லை.

இது வரலாறு காட்டி நிற்கும் பாடம்!!!

Edited by Punkayooran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் – மகிந்தா – விஜயலட்சுமி – சீமானை ஒழிப்பதற்குத் திட்டம்

Thursday, June 2, 2011, 16:52

இந்தியா

தி.மு.கவுடன் உறவை முறித்துக்கொண்டு, ஜெயலலிதாவுடன் தேன்னிலவைக் கொண்டாட முற்படும் காங்கிரஸ் கட்சியும், போர்க்குற்றங்களில் இருந்து தப்புவதற்கு முயன்றுவரும் சிறீலங்கா அரசும் இணைந்து நாம் தமிழர் கட்சியின் தலைவரும், இயக்குனருமான தமிழின உணர்வாளர் சீமானை குறிவைத்துள்ளன.

தமிழகத்திலும், டெல்லியிலும் உள்ள நல்லுறவுகளை பேணும் நிறுவனங்கள் மூலம் ஜெயலலிதாவை வீழ்த்த சிறீலங்கா அரசு முனைத்துவருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது சீமானை வீழ்த்துவதற்கான முதலாவது அஸ்த்திரத்தை ஏவியுள்ளன சிறீலங்கா அரசு, காங்கிரஸ் கட்சியும்.

தமிழகத்தின் நடிகை விஜயலட்சுமி மூலமே முதலாவது நகர்வை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

விஜயலட்சுமி என்ன கூறுகின்றார்?

நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. ஆரம்பத்தில் கன்னடப் படங்களில் நடித்து வந்த விஜயலட்சுமி பிரண்ட்ஸ் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ்ப் பெண்ணான விஜயலட்சுமி கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.

சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் விஜயலட்சுமி நேற்று மாலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திற்கு தென் சென்னை இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

விஜயலட்சுமி இவ்வாறு பரபரப்புப் புகார் கூறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரித்த ஒரு கேம் ஷோவில் தொகுப்பாளராக விஜயலட்சுமி பணியாற்றி வந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மீதும் இதுபோல புகார் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

இது தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் சட்டவாளர் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

ரூ. 5 கோடி கேட்டு வழக்கு தொடரப்படும்-சீமான் வக்கீல்

இதற்கிடையே, சீமான் மீது அவதூறாகப் புகார் கொடுத்துள்ள நடிகை விஜயலட்சுமி மீது ரூ. 5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் துயரங்களை கண்டு மன வேதனை அடைந்த சீமான், அதனை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சீமான் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார்.இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு சென்றார். சுமார் ஓராண்டிற்கு மேலாக சிறையிலேயே அவர் காலத்தை கடத்தி உள்ளார்.

இந்த நிலையில் சீமான் காதல் கத்திரிக்காய் செய்யும் மனநிலையில் இருந்ததில்லை. விஜயலட்சுமியை சீமான் உண்மையில் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள மறுத்திருந்தால் முதலில் விஜயலட்சுமி என்னிடமோ, சீமானின் நல விரும்பிகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது அவரது பெற்றோரிடமோ புகார் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து போலீசாரிடம் சென்று சீமான் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே சீமானுக்கு எதிராக திட்டமிட்டு யாருடைய தூண்டுதலின் பேரில் விஜயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வலியுறுத்தி உலக நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் சீமான் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்கும் வகையில் மத்திய உளவுத்துறையினரும், தேர்தலில் சீமானின் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் விரைவில் முறியடிப்போம். சீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் கூறிய விஜயலட்சுமியிடம் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம் என்றார் அவர்.

சீமான் மீது புகார்: நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை: விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் முடிவு?

இயக்குனர் சீமான் மீது தெரிவித்துள்ள புகார் குறித்து, நடிகை விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

01.06.2011 அன்று மாலையில், விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவரும், இயக்குனருமான சீமான் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இந்த புகார் மனு பற்றி முதலில் போலீஸ் தரப்பில், உறுதி செய்ய மறுத்துவிட்டனர். 01.06.2011 அன்று இரவு புகார் கொடுத்தது உண்மைதான் என்று தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறினார்.

சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் மேலும் கூறினார்.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் விஜயலட்சுமி வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரûணை மேற்கொண்டனர். தேவைப்பட்டால் விஜயலட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விஜயலட்சுமி புகார் குறித்து இயக்குனர் சீமானிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

விஜயலட்சுமி புகார் குறித்து சீமான் நேரடியாக பதில் எதுவும் கூறவில்லை. வழக்கறிஞர் ஒருவர் மூலம் விஜயலட்சுமியின் புகாரை மறுத்துள்ளார்.

தமிழ்தாய்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சீமானை இதுவும் கடந்து போகக்கடவது............... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.