Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த ஓணான்.

Featured Replies

s15jj.jpg

சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த ஓணான்.

சரேலெனத் திரும்பினார் சந்திரோதயத்தார். கண்களைக் கசக்கி மறுபடியும் பார்த்தார்இ சந்தேகமே இல்லை...

வழவழப்பான தோற்றம்இ ஒவ்வொரு வளைவிலும் வெயில் பட்டுத் தெறிக்கும் மெர்க்குரி வெளிச்சம்.... அழகு ஜெகத்ஜோதியாக மின்னியது.

ஜில் ! ஜில் ! ஜிக்குமாலா ! இ எல்லோருக்கும் புரியும்படியாக நல்ல தமிழில் பேசிக் கொண்டார்.

அழகில் மயங்கி எவ்வளவு நேரம் நின்றாரோ தெரியவில்லை... இப்படி மயங்கினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்...

வேலிக்கட்டை ஓணான் போல சரக் சரக்கென தலையை ஆட்டினார்.

சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த குற்றத்திற்காக அவர் ஊரில் எத்தனையோ ஓணான்களைக் கொன்றிருக்கிறார். ஓணான்கள் போலவே தலையை சொடக் சொடக்கென ஆட்டியபடி கற்களை வீசிய தொட்டில் பழக்கம் இப்போது இந்தச் சுடுகாடுவரை ஆடிக்கொண்டே இருந்தது.

இனி இந்த நேரத்து உணர்விற்கு ஏதாவது பாடியாக வேண்டும்.

பச்சை நிறம் அவன் திருமேனி

பவள நிறம் அவன் செவ்விதழே

மஞ்சள் நிறம் அந்த பான நிறம்....

ஆகா.... என்ன பொருத்தம்... அந்த அழகிய பியர் போத்தலின் பச்சை நிறமான தோற்றம்இ அதை உவிந்து இழுத்துள்ள பெண்ணின் சிவந்த இதழ்கள் பட்ட சாயம்இ மஞ்சள் நிறமாக எஞ்சியிருக்கும் அரைப் போத்தல் பியர்....

அந்த பியர் போத்தலை எடுத்து விற்று... பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்... முட்டைவிற்று பணக்காரியாக வர ஆசைகொண்டு தலையை அசைத்து எல்லாவற்றையும் உடைத்த பவளக்கொடியின் நினைவு வந்தது...

இதற்கிடையில் நேற்று மாலை டென்மார்க் தொலைக்காட்சியில் தோன்றிய ஒருவன் தெருவில் கிடந்த பியர் போத்தல்களை சேகரித்து விற்றுஇ ஒரு புத்தம் புதிய காரை வாங்கியிருப்பதாக பேட்டி கொடுத்திருந்தான். அதைப் பார்த்தபிறகுதான் அவருக்கு இந்தப்பரவசம்.

கால்நடையாகத் திரியும் தன் வாழ்விற்கும் இந்த பியர் போத்தலில் இருந்துதான் விடிவு கிடைக்கப் போகிறதா...

கார் லைசென்ஸ் இல்லாவிட்டாலும் நினைவுகள் அவரை ஒரு புதிய காரில் ஏற்றிப் பவனி பார்த்தன.

அந்தக் காரின் பக்கத்தில் திடீரெனத் தோன்றிய தங்கராசு அவருடன் பேசிக்கொண்டார்.

நான் சம்பளக் காசில் ஒரு சதம் எடுக்காமல் அதைச் சாமி அறையில் வைச்சுப் பூட்டி தீபம் காட்டுவன்...இ

அப்ப செலவுக்கு என்ன செய்வாய் ?

பைத்தியக்காரா .... எல்லாம் தெருவிலை கிடக்கிற பியர் போத்தலுகளை பொறுக்கி வித்துத்தான் வீட்டுச் செலவு... அந்தக் காசிலை மூண்டுதரம் நாட்டுக்கே போய் வந்திட்டனெண்டால் பாரேன்...

சரேல் ! இ கடிவாளத்தை இழுத்தார். நினைவு திரும்பியது. போத்தலை எடுப்பதற்கு ஒரு அடி முன்னால் நெருங்கினார்.

அநாதரவாகக் கிடந்த அந்த பியர் போத்தல் அவரை வா ! வா ! என்று அன்போடு அழைத்தது. ஒரு அடி முன்னால் வைத்தார்... அந்த நேரம் பார்த்து சிவப்பு விளக்கு எரிவதுபோல தூங்கிச் செத்த பஞ்சாமிர்தத்தார் நினைவு வந்தது.

சாய் ! பேரோடையும்இ புகழோடையும் இருந்த மனிசன்ரை வாழ்க்கையிலை வந்த சோகம் அப்படியாய் போச்சுது... அலுத்துக் கொண்டார்.

குடி புகைத்தல் பழக்கம் எதுவுமின்றி கோயில் குளமென்று அலைந்து திரிந்த பஞ்சாமிர்தத்தார் ஒரு நாள் குடித்துவிட்டு பியர் போத்தலோடை ஆடிக்கொண்டு போனதாக கதை பரவியதால் வந்த வினை.

சனம் பஞ்சாமிர்தத்தார்க்கு குடிகாரப்பட்டம் கட்டி மகிழஇ அதுதான் சந்தர்ப்பம் என்று பார்த்து கோயில் நிர்வாகத்தாலை மனிசனை கலைச்க... மனமுடைஞ்சு மனிசன் முழுக் குடிகாரனாகி தற்கொலை செய்து....

இதெல்லாம் தேவைதானா ?

கவட்டிலை கிடந்த ஒரு கட்டு உடைச்சதாலைதான் மனிசன் அப்பிடி ஆடி ஆடிப் போயிருக்கு.. கையிலை பியர் போத்தலும் இருக்க சனம் ரெண்டையும் சேர்த்து வசதியா முடிச்சுப் போட்டிருக்குது...

பியர் குடிச்சவனை விட்டுப்போட்டுஇ வெறும் போத்திலை தூக்கினவனை குடிகாரனாக்கும் சனத்தை நினைத்தபோது சந்திரோதயத்தாருக்கு தேகமெல்லாம் விதிர்விதிர்த்தது.

திடீரென எங்கோ ஓர் அசரீரி...இபைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு !இ

ஐயையோ இது எங்கேயோ கேட்ட பாடல் என்பதை நினைத்த போது மனதில் மறுபடியும் சிறிய துணிச்சல் உண்டானது. தாய்ப்பசுவின் குரல் கேட்ட கன்றாகி போத்தலை நெருங்கினார். கையில் இருந்த காரிக்கன் துணியில் நெய்யப்பட்ட அகிலாஸ் புடவைக்கடையின் சீலைப் பையை கச்சிதமாக உதறிக் கொண்டார்.

செல்லமாகப் பியர்ப் போத்தலைத் தூக்கினார்...

பதமான இளஞ்சூடு சற்று முன்தான் யாரோ அரை குறையாகக் குடித்துவிட்டு வைத்திருக்க வேண்டும்...

குலுக்கிப் பார்த்தார்.... சரியாக அரைப் போத்தல் அளவிற்கு இருந்தது... அதைக் குடித்து புதிய சாதனை படைக்க அவர் மனம் அவாவியது..

உதடுகளை ஒரு தடவை சின்னமேளமாக ஆடவிட்டார். இ நான் குடிக்காமல் இருந்தால் போல ஈழத் தமிழன் திருந்தவா போறான்... போடா போ...இ என்று தன்னைத் தானே திட்டினார். ஓசியென்றால் தமிழன் நஞ்சையும் குடிப்பான் என்ற தேசியகீதம் நினைவுக்கு வர அதையும் விரட்டிவிட்டு நாலு பக்கமும் பார்த்தார்.

வண்.... ரூ..... த்றீ.... போர்....

மடமடவென போத்தலில் இருந்த பியரை வாயில் சரித்தார்.

வாழ்க்கையில் முதல்தரமாகக் குடித்தாலும் அரைப் போத்தலையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தார். கடைசித் துளியையும் நக்கிவிட்டுஇ வெற்றுப் போத்தலை அகிலாஸ் கடைப் பைக்குள் போட்டுக் கொண்டார். மேலும் எங்காவது போத்தல் இருக்கிறதாவென கண்களை துளாவியபடி நடந்தார்.

நடக்க நடக்க வாய்க்குள் ஏதோ ஒரு நெடில் ... இந்த உப்புத்தண்ணியை ஏன்தான் குடிக்கிறாங்களோ ? வயிற்றைப் புரட்டியது...

அங்குமிங்கும் பதகளித்து ஓடினார்... சுனாமி தூக்கி மரத்தில் அடித்தது போல தேகத்தை ஏதோ ஒரு மொச்சை நெடில் தூக்கிச் சுழற்றியது.. வ்.... வாய்க்.... மஞ்சள் மஞ்சளாக சத்தி எடுத்தார். ஒருவித பாதாள நாற்றம் கிளம்பியது... கெட்ட மூத்திர நெடில்...

போத்தலை எடுத்து மணந்து பார்த்தார். சந்தேகமே இல்லை அவர் குடித்தது பியர் அல்ல மூத்திரம் கலந்த பியர்...

தலை சுற்றியது... வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். மனிச மூத்திரம் குடிச்ச நானே இந்த ஓட்டம் ஓடுறன் அப்ப போன பிறவியிலை ஓணான் மூத்திரம் குடிச்ச சிவபெருமான் என்ன ஓட்டம் ஓடியிருப்பாரென நினைத்தார்இ அந்த நேரத்திலும் அவருடைய குசும்பு போகவில்லை.

உலகம் எங்கையோ கிடக்க ஓணான்களுக்கு கல்லெறியிற எங்கடை சனத்தோடை சேர்ந்த பாவம்தான் இப்பிடிப் பிடிச்சு சிப்பிலி ஆட்டுதோ என்ற விசயத்தையும் யாருக்கும் சொல்லாமலே தனக்குள் நினைத்துக் கவலைப்பட்டார்.

மஞ்சள் கரைச்சுக் குடிச்சுஇ பேதிக்கக் குடித்துஇ வயிறு கழுவி ஒரு வாரத்தின் பிறகுதான் பழைய நிலைக்குத் திரும்பினார். இருப்பினும் அந்த நாற்றத்தை நினைக்கக் குமட்டலாகவே வந்தது.

இ சிவபெருமானே ! ஓணான்களைக் கொன்று உனக்கு நான் செய்த தொண்டுக்கு இதுதானா தண்டனை... ? இ கேவி அழுதார்.

பியர் போத்தலுக்குள் மூத்திரம் பெய்த ஓணான் யார் ? தமிழனா ? டேனிஸ்காரனா? கோபம் சிரசில் ஏறியதுஇ துப்பறியும் சிங்கமானார்.

மறுபடியும் அதே இடத்தை நோக்கி வந்தார்இ நோட்டம் விட்டார். இப்போதும் அந்த இடத்தில் ஒரு பியர் போத்தல்இ ஆனால் அது எறிந்து உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதை யார் உடைத்தார்கள்... ஏன் உடைத்தார்கள்....

கிறீங்க்... ! கிறீங்க் ! மடியில் இருந்த கைத்தொலைபேசி அடித்தது.

உறலோ !

இ பியர் போத்தில் உடைங்சிருக்குமே ? இது என்ரை ஏரியா ! மவனே இஞ்சை வந்து பியர் போத்தில் பொறுக்கிற வேலையை விட்டிடு ! நேற்றுப் பொறுக்கின போத்திலை மரியாதையா எடுத்த இடத்திலையே வைச்சிடு...

வைக்காட்டி என்ன செய்வாய் ?

இப்பிடித்தான் எல்லா இடமும் போத்திலுகள் உடைஞ்சு கிடக்கும்... உன்னை வாழ விடமாட்டன்... என்னைத்தவிர வேறை ஒருதனையும் போத்தலெடுக்க விடமாட்டன் !

நீ ஆர்ரா பொறுக்கி !

இ யுயுப்பி... எப்படி மூத்திரம் ? உறி.... உறி.... இ போனைக் கட்பண்ணிவிட்டான். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

வேகமாக நடந்தார்.... வழியில் ஒரு பியர் போத்தல் கிடந்தது...

அதைத் தூக்கி நிலத்தில் சடாரென எறிந்தார்... போத்தல் உடைந்து நொருங்கிப் பறந்தது...

அப்போது பார்த்து கையில் ஒரு சிறிய மழைத்துளி விழுந்தது!

ஆகாயத்தைப் பார்த்தார்.

வானத்திலிருக்கும் சிவபெருமான் தமிழினத்தின் பெருமையை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாரா ஒருவேளை அழுகிறாரா அவரால் மட்டுக்கட்ட முடியவில்லை.

அலைகள்

  • 1 year later...

இத வாசிக்கும் குடிமக்கள் கோபப்பட மாட்டார்களா? எதற்கெடுத்தாலும் ஏனுங்க சிவபெருமான கூப்பிடுறீங்கள்? பாவம் அவர்!

ஒரே மழைநீர் அருவியில் விழும் போது குடிநீர் ஆகிறது. அதுவே சாக்கடையில் விழும் போது?

அது போல் தான் சிலரின் கருத்துக்களும் மொழிநடையும். சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும். பாவம் அவர்கள் தான் என்ன செய்வார்கள்

இதை வாசிக்கும் போது வயிற்றைக் குமட்டிக் கொண்டுவந்தது.... நன்றாக எழுதுகின்றீர்கள் ஆனால் கொஞ்சம் இனிமையாக இதமாக எழுதினால் மக்கள் அருவெருக்காமல் வாசிப்பார்களல்லவா..... ??

தொடர்ந்து எழுதுங்கள் வேறு புதிய கோணத்தில்...

நன்றி...! :lol:

இதை வாசிக்கும் போது வயிற்றைக் குமட்டிக் கொண்டுவந்தது.... நன்றாக எழுதுகின்றீர்கள் ஆனால் கொஞ்சம் இனிமையாக இதமாக எழுதினால் மக்கள் அருவெருக்காமல் வாசிப்பார்களல்லவா..... ??

தொடர்ந்து எழுதுங்கள் வேறு புதிய கோணத்தில்...

நன்றி...! :lol:

ஒருவர் க_கா கதை எழுதுகிறார். மற்றவர் மூ__ரம் கதை எழுதுகிறார். இதே போக்கில் போனால்.... கடவுளே!

:lol:

இப்படியும் எமது உறவுகள் புலம் பெயர் தேசங்களில் வாழ்கின்றதை கதை விபரித்திருக்கின்றது. எழுத்துக்கள் நாகரீக உடை அணிந்திருக்க வில்லை. இதன் மூலம் சொல்ல வரும் செய்தி என்ன? ஒன்று அவலம் இரண்டாவது நாகரீகமற்ற வாழ்க்கை முறை என்று கருதலாமா? இதில் சிவபெருமானின் பங்கு என்பது நாகரீகமானவர்களையும் அதில் மேன்மையடையாதவர்களையும் ஏதோ ஒரு விதத்தில் இணைக்கின்றது போல் உள்ளது அதற்கேற்றாற் போல் தமிழினம் என்று ஆனந்தக்கண்ணீர் வடிப்பதாக முடிகின்றது.

இவ்வாறு என்னை இக்கதை பற்றி சிந்திக்க தூண்டியது என்ன வெனில் மக்கள் வாழும் சூழலுக்கேற்ப நாகரீக பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ப பேச்சு வழக்குகள் உள்ளது. நீண்ட காலமாக ஒருவர் இவற்றின் அடிப்படையில் தனது பேச்சு வழக்கத்தை வைத்திருந்தால்அவ்வாறானதொரு நிலமையில் தவிர்க முடியாமல் புலம் பெயர் தேசத்துக்கு வந்திருக்கும் போது தனது இயல்பை திடீர் என்று மாற்றுவது கடினமே அவர்கள் இயல்பை அனுசரித்து போகலாம். (கதை எழுதியவரை குறிப்பட வில்லை கதாபாத்திரங்களின் பேச்சு வழக்கை குறிப்பிட்டேன்)

சில விடயங்கள் புதிரானவை. காடு கக்கூஸ் காலைக்கடன் ஒண்டுக்கு இரண்டுக்கு என்பதெல்லாம வோஷ்ருமுக்கு என்பதோடு ஒப்படுகையில் அருவருப்பானதாக உணர வைக்கின்றது. அதற்கு காரணம் வேறெங்கோ உள்ளது. ஐஸ்வரியா ராய்யை ஐம்பது கிலோ ஐஸ்கிறீம் என்றுதான் கவிஞனுக்கு வருகின்றது அவர் அடிவயிற்றிலும் குதத்திலும் மலமிருப்பது கற்பனைக்குள் சிக்குப்படாத உண்மைகள். உணர்வுக்கு எட்டுப்படாத மாயங்கள். ஆனால் இன்றும் கையுறை அணியாமல் மனிதக்கழிவுகளை அகற்றும் குழாய்களின் அடைப்பை துப்பரவு செய்யும் பல்லாயிரம் தாழ்த்தப்பட்ட மக்கபை;பற்றி நாகரீகமாக கதைப்பது ஒரு இலக்கியம்எனில் அவர்கள் வாழ்க்கையும் ஒரு இலக்கியம் தான். அதை சித்தரிக்கும் போது வார்தைகளில் நொடி வீசுவது அந்த இலக்கியத்தின் இயல்பு. அந்த நொடிகளில் ஐஸ்வரியா ராயின் பங்கும் உண்டு அவருள்ளும் அந்த நொடி உண்டு.

கடந்த வருடம் மேல்சாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாயுள் சிறு நீர் கழித்து மலம் உண்ணச்செய்த செய்திகள் பரபரப்பன ஒரு விடயம். அவர்களின் கதையை அவர்கள் வாயால் கேட்கும் போது உணர்வுகளும் வேதனையும்கலந்த அவர்களின் வார்தைகள் அவர்களுக்கு உரிய வழக்கத்தில் வந்தது. அதை எழுத்து வடிவில் செய்தியாக்கும் போது அவர்கள் வார்தைகளுக்கு ஒத்த வேறு ஒரு வார்த்தையை பிரயோகித்து பிரசுரித்தார்கள். அதற்கு பெயர் நாகரீகம். அந்த கொடிய செயலை செய்ததுக்கு பெயர் காட்டுமிராண்டித்தனம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடுக்கு பெயர் அவர்களுக்கே உரிய இயல்பு. அந்த இயல்பை மீறாத மாற்றாத வகையில் ஒருவன் அதை செய்தியாக்கினாலோ அல்லது கதையாக்கினாலோ அதை ஏற்றுக்கொள்வதில் நாகரீகம் முறண்படலாம் மனிதம் முறண்பட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

கதை நகைச்சுவை கலந்து இருந்தாலும், புலம்பெயர் வாழ்வின் அவலத்தையும் நன்றாகப் படம் பிடித்துள்ளது.

"சிறுநீர்" என்றால் தேவாமிர்தம் போல நாகரீகமாக இருக்குமோ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒணானை கண்டால் சிவபக்தர்கள் அடிகிறதை விட வேறு ஒரு இனமக்கள் அடிப்பதை கேள்விபட்டிருகிறேன்,ஏனெனில் அவர்களுடைய மததலைவரை காட்டி கொடுததிற்காக அதாவது தலையாட்டி காட்டி கொடுத்ததிற்காக. :lol:

:P ஓணான் என்ன தான் பாவம் செய்ததோ....... ராமருக்கும் அது சிறு நீர் கொடுத்ததாகவும்.... ஆனால் அணிலோ பாலம் கட்ட உதவியதோடு இள நீரும் கொடுத்ததாம் .....இந்த கதைகள் கேட்டு சிறுவயதில் ஓணான் அழிப்புப்படையில் நானும் ஒரு வீரனாக அழிக்க சென்றிருக்கிறேன் ஆனால் நல்ல வேளை என் அபரீத குறி பார்த்து கல் வீசும் திறமையால் அவைகள் தப்பி விட்டன....

ஓணானை மக்கள் வெறுப்பதன் காரணம் அதன் அருவருப்பான தோற்றம் என்றே நினைக்கிறேன்....

ஆனால் விவசாயிகளை பொறுத்தவரை ஓணான் அணிலை விட சிறந்தது...... அணில் விளையும் கனிகளை அழிக்கும்..... ஆனால் ஓணானோ பயிர்களை அழிக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும்.

எனவே ஓணான்களை காப்போம் :P

ஒணானை கண்டால் சிவபக்தர்கள் அடிகிறதை விட வேறு ஒரு இனமக்கள் அடிப்பதை கேள்விபட்டிருகிறேன்,ஏனெனில் அவர்களுடைய மததலைவரை காட்டி கொடுததிற்காக அதாவது தலையாட்டி காட்டி கொடுத்ததிற்காக. :lol:

நீங்கள் குறிப்பிடும் மதத்தலைவரை பல்லி (யும்)காட்டிக்கொடுத்ததாக கூறக்கேட்டிருக்கிறேன்.... பல்லி சப்தமிட்டு காட்டிக்கொடுத்ததாம்......

அது சரி ஓணானிடமெல்லாம் கேள்வி கேட்டு அதற்கு அது தலையும் ஆட்டி பதில் சொல்லும் அளவிற்கு கதை போய் விட்டதே........... அந்தக்காலத்திலும் வடிவேல் சொல்வது போல ரூம் போட்டு (சத்திரத்தில் அறை எடுத்து )யோசிப்பாய்ங்களோ??????????? :lol:

ஒவ்வொரு மட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்கும் ஒவ்வொரு மொழி நடை உண்டு. இந்தியாவில்சேரிப்புறங்களில

Edited by aathipan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.