Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்கள் எங்கே??????????????

இவர்கள் எங்கே?????????????? 14 members have voted

  1. 1. இவர்கள் எங்கே??????????????

    • யார் இவர்கள், என்ன செய்கிறார்கள்?
    • இவர்களை அறிய விரும்பவில்லை?
      0
    • செய்ய முடியாமல் ஒதுங்கி விட்டார்கள்?
      0
    • என்னென்ன செய்வது என்று தெரியாமல் ஒழிந்து விட்டார்கள்?
    • இவர்கள் நன்றாக உறங்குகின்றார்கள்?
    • இயக்குபவர்களினால், இவர்களின் கைகள்/வாய்ககள் க்ட்டப்பட்டு/மூடப்பட்டு விட்டன?
    • இவர்கள் சிங்களத்தினால் கடத்தப்பட்டிருக்கலாம்?
    • இவர்கள் சிங்களத்திடம் சரணாகதி அடைந்திருக்கலாம்?
    • தயவு செய்து கண்டு பிடித்து, உற்சாகப்படுத்தி, உறுதியாக செயற்பட சொல்லுங்கள்?

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாரயாம் இலவசமாக கிடைக்கிறது வாருங்கள் எல்லோரும் சேர்ந்து தண்ணிபோடலாம் என்றால்................... ஒரு கூட்டமே திரண்டுவரும்.

ஊரிலே பற்றைகள் காடாக படர்கிறது வாருங்கள் அதை வெட்டி துப்பரவு செய்தால் எமது ஊர் சுத்தமாகும் என்றால்??

"ஏன் பற்றைக்குள் போகிறீர்கள் அதை கடந்து போவதுதானே"

" ஒரு முறை வெட்டினால் பின்பு வளராதா"

"பற்றைக்குள் இருக்கும் முள்ளு உங்களை தேடிவந்தா குத்துகிறது"

இப்படி பல தத்துவங்கள் தான் ஊர் தத்துவஞானிகளிடம் இருந்து வரும் ( இது நான் நேரிலே பட்ட அனுபவம்). நாடு கடந்த அரசு கடக்க எத்தனையே தத்துவங்கள் உண்டு. நா.அ கதவு இப்போதும் திறந்தே உள்ளது சேவையாற்ற தயவு செய்து வாருங்கள் என்றே அவர்கள் எல்லோரையும் அழைக்கின்றார்கள்..................... தத்துவம் பேசுவது எமக்கு இலகுவாக இருப்பதால். அந்த கடினமான தொழில் எதற்கு?

அங்கே எல்லோரும் எதையோ செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லரவில்லை.................. இங்கே எழுத்தில் இருப்பவைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க அந்த கதவு திறந்தே கிடக்கிறது என்றே சொல்கிறேன். இனி கதவை திறந்தவுடனேயே திரு. உருத்திரகுமார் அவர்களின் கதிரைதான் பல தமிழருக்கும் பிடித்தமானது................... அதற்கு அமெரிக்க ஜெயிலுக்கு எப்போதும் போகலாம் என்ற நிலையிருந்தும் அதை கடந்து சென்றவர் அவர். இவர்களை நாம் தூக்கி சென்று அமர்த்த வேண்டும்.

  • தொடங்கியவர்

சாதாரணமானவர்கள் என்றால் எங்களைப் போல சாதாரணமானவர்களாக இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க ஏதோ செய்வோம் என்று ஒன்றை உருவாக்கி ஏதோ செய்கின்றார்கள். "நாய்க்கு ஏன் போர்த் தேங்காய்"!!

  • தொடங்கியவர்

நெல்லை,

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற முதலாவது நாடுகடந்த அரசின் கூட்டத்திற்குப் போயிருந்தேன். அங்கு அவர்கள் இன்று செய்துவரும் பல திட்டங்கள் பற்றி எடுத்துசொல்லப்பட்டது. தாயகத்தில் இனக்கொலையின்போது துணைவர்களை இழந்த பெண்களுக்கான உதவி, முன்னாள்ப் போராளிகளுக்கான புணர்நிர்மானம், வெளிநாடுகளில் எமது நிலைப்பட்டை விளக்குதலும், எமது நியாயப்பாட்டை அவர்கள் ஏற்கப்பண்ணுவதும் ( இதன்போது தாம் பட்ட அனுபவங்களை அவகள் பகிர்ந்தும் கொண்டனர்), முக்கியமாக தென் சூடானுடனான உறவு, இங்கு தென்சூடானிய மருத்துவத்துறையில் ஈழத்தமிழர்களின் பங்களிப்புப் பற்றி தென்சூடான் அரசு விருப்பம் கொண்டிருப்பதையும், எமது செயல்ப் பிரிவொன்றை அங்கு அமைப்பதை விரும்புவதையும் குறிப்பிட்டிருந்தனர். இப்படிப் பல விடயங்கள் நடக்கின்றன.

.....

இரகுநாதா,

... இப்படி யானவை நடந்தேற வேண்டுமென்பதுதான் எம் விருப்பம் ... ஆனால் நீங்கள் கூறிய எதுவும் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை! உதவிகள் ஒரிருவருக்கு செய்யப்பட்டிருக்கலாம் .. பெரிதாக ஒன்றும் இல்லவே இல்லை! அவற்றை செய்ய நிதிகள் திரட்டப்படவும் இல்லை, நிதிகள் திரட்ட இவர்களுக்கு அடிமட்ட தொண்டர்களும் இல்லை!! .

.. இங்குள்ள வானொலியில் இவர்களுக்கு எதிராக(செயற்படுகிறார்களே இல்லை என்று) குரல்கள் சில வாரங்களுக்கு முன் பலரால்(தமிழ்த்தேசிய ஊடகவியலாளர்கள் உடபட) எழுப்பபட, இங்கிருக்கும் ஓர் அமைச்சர் பாய்ந்து வீழ்ந்து வந்து அவ்வானொலியில் சொன்னார், "நாம் யுத்த நிறுத்த விசாரனையை தொடங்க ஐநாவிற்கு அழுத்தம் கொடுக்க, கையெழுத்து வேட்டையை பாரியளவில் தொடங்குகிறோம்" ...என்று ... ஆனால் இன்று வரை எத்தனை பேரிடம் கையெழுத்து வாங்கினார்கள்??????????? ... நான் அறிய ஒருவரிடம் கூட கையெழுத்து வாங்கப்படவில்லை!!!

... வாய்ச்சவடால்கள் தவிர வேறொன்றையும் காண முடியவில்லை!!!! ...

... இவர்களின் இயங்கா நிலையை பார்க்கும் போது, இவர்களின் எதிர் தரப்பு குற்றம் சாட்டுவது போல், இவர்களை இயக்குபவர்களினால், இவர்கள் முடக்கப்பட்டிருக்கிறாகள்??????????????

  • தொடங்கியவர்

நெல்லை, நீங்கள் தொடர்ந்து நா.க அரசை ஆதரித்து வந்தவர், நெடியவனின் குழுவின் அட்டகாசத்தை எதிர்த்து வந்தவர், இப்போது என்னவாயிற்று?? ஏனிந்த மாற்றம்? இவர்களும் இல்லையென்றால் யார் வந்து எமக்கு வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்??

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84725

http://www.yarl.com/forum3/index.php?showtopic=85015

http://www.yarl.com/forum3/index.php?showtopic=83272&st=40

.. கேடு கெட்ட கேபிக்கு அப்பால் ... காஸ்ரோக்ககளும், தமிழ்ச்செல்வன்களும் ... தமிழ்த்தேசியத்துக்கு புதை குழி தோண்டினார்கள் என்பதில் இரண்டாம் கருத்தில்லை!! ... ஆனால் இன்று இங்கு புலத்தில் எல்லாவற்ரையும் நெடியவனது தலையில் போட்டு விட்டு இக்கும்பல் தப்ப முனைகிறது, அது ஏற்றுக் கொள்ள சொல்கிறீர்களா???

... இந்த நெடியவன், நெடியவன் நெடியவன் என்ற கூக்குரல்களோடு இந்த நா.க.த.அரசுக்கு பின்னால் இருக்கும் கும்பல் .... உந்த நெடியவனை விட மோசமானது!!!.. இன்று புலமெங்கும் அறுபடை செய்யும் பலவற்றுக்கு விதை போட்டவர்கள் இவர்கள்!!! ... எல்லாவற்றுக்கும் மேலாக ... இவர்களின் உண்மைமுகம் இன்றும் யாரும் அறியர்!!!!!!!!!!!!

... நெடியவனும் வேண்டாம்! ... இன்று உருத்திரகுமாருக்கு பின் நின்று முட்டுக்கட்டை போடும் சர்வே/செல்வின்/மனோ கும்பலும் ஒதுக்கப்பட வேண்டும்!!! .... இன்று இந்த சர்வே/மனோ/செல்வின் போன்றவர்கள், அதாவது கேபியின் முன்னால் ஐரோப்பிய வலதுகரங்கள், நா.க.த.அரசில் எவ்வித பதவியையும் வகிக்கவில்லை அதற்கு மேல் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவுமில்லை!!! அப்படியிருக்க இவர்கள் ஏன்? எவ்வாறு? நா.க.த.அ இல் செல்வாக்கு செலுத்துகிறார்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

:( நெல்லை,

உங்களின் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. எது உண்மையென்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இப்போதைக்கு என்னால் கூற முடிந்தது இதுமட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமானவர்கள் என்றால் எங்களைப் போல சாதாரணமானவர்களாக இருக்கவேண்டும்.

அதை விட்டுவிட்டு தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க ஏதோ செய்வோம் என்று ஒன்றை உருவாக்கி ஏதோ செய்கின்றார்கள். "நாய்க்கு ஏன் போர்த் தேங்காய்"!!

அப்போ இனி தமிழனுக்கு ஏதாவது செய்ய வானத்திலிருந்துதான் எவராவது பறந்துவரவேண்டும். :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசின் செயற்பாடுகள் இன்னும் மக்களிடம் பரவலாகப் போய்ச் சேரவில்லை என்பது உண்மைதான்.ஆனால் அதற்காக அந்த அமைப்பைக் கொச்சைப்படுத்தாமல் அதற்கு ஆதரவு வழங்கி அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்த நாமும் ஒரு செயற்பாட்டாளராக மாறவேண்டும்.குற்றம் கண்டு பிடிப்பது இலகு.ஆனால் ஒரு செயலைச் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அதிகம்.

  • 2 months later...
  • தொடங்கியவர்

Uruthrakumaran1.jpg

இப்படத்தில் உள்ளவரை யாராவது கண்டீர்களா??? அல்லது அவரின் சவுண்டையாவது யாராவது கேட்டீர்களா???? அல்லது உயிருடன் தான் உள்ளாரா???? .... பிரதமராம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்

... அடுத்த நாகதஅவின் தேர்தலில், உருத்திரகுமாருக்கு எதிராக ... போட்டியாக ... நெல்லையானும் பிரதமர் பதவிக்கு போட்டி இடலாமென யோசித்துக் கொண்டிருக்கிறேன்??? ... ஏனென்றால் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால் ஒன்றும் செய்யத்தேவையில்லை!!! ... அதுதானே நாகதஅவின் பிரதமர் பதவியின் சிறப்பு!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் செய்யவில்லை. அவர்களையாவது செய்ய விடுங்கள் என்னும் வாதம் அபத்தமானது. அவர்கள் என்னிடம் உங்களிடம் வாக்கு கேட்டுத்தான் உறுப்பினர் ஆனார்கள். அவர்களே சொல்கிறர்கள் தாங்கள் ஜனநாயக ரீதீயான அமைப்பு என்று. பிறகென்ன ஜனநாயகத்தின் அடிப்படை விதியே செயற்பாடுகள் நடக்கவில்லை என்றால் ஏன் என்று ஓங்கி குரல் கோடுப்பது தானே. இதிலென்ன தவறு இருக்கிறது?

மேலும் அவர்கள் இரகசியமாக அது செய்வார்கள் இது செய்வார்கள் அதில் நாங்கள் போய் குழப்பக் கூடாது என்று சொல்வோரே .... இல்லை கேக்கிறன் ... ரகசிய செயற்பாடுகள் செய்து ... சட்ட ரீதியான சிக்கல்களுக்குள் மாட்டுப்படவா அல்லது மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துப்படவா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில மாசம்தான்.. பொறுங்கோவன்..! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.