Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்4 செய்திப்பிரிவு தலைவரின் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு கொடுமை என்பதையும் பார்த்து விடுவோம்!

இணைப்புக்கு நன்றிகள் கலைஞன்!!!

எவ்வளவு கொடுமை என்பதையும் பார்த்து விடுவோம்!

இணைப்புக்கு நன்றிகள் கலைஞன்!!!

தமிழக மக்களும் இதை பார்க்க வழி செய்ய வேண்டும். உண்மை அறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியும் எதிர்மறையான நமக்குச் சாதகமான விளைவை ஏற்படுத்தலாம்.பார்க்க கொடூரமாக இருக்கும்.ஆகவே பார்க்கச் சொல்லி வற்புறுத்த மாட்டேன் என்பதில் அப்படி என்னதான் கொடூரம் இருக்கிறது என்பதையும் பார்க்கலாமே என்ற எண்ணத்தை அது பார்வையாளருக்குத் தூண்டலாம்.ஆகவே இன்றிரவு 11.00 மணிக்கு தொலைக்காட்சி பார்க்காமல் நித்திரைக்கு செல்ல விரும்புவர்கள் கூட கொஞ்சம் முன்னோட்டததைப் பார்ப்போம் என்று நினைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் காட்சிகளை காண்பிக்க வேண்டுமென நாம் ஏன் தீர்மானித்தோம்? : சனல்-4

[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 09:08 GMT ] [ நித்தியபாரதி ]

செவ்வாய் இரவன்று [14-06-2011] நாங்கள் பார்க்கப் போகும் 'சிறிங்காவின் கொலைக் களங்கள்' என்ற திரைப்படத்தில் காண்பிக்கப்படவுள்ள, இவ்வாறான கொலைக் காட்சிகள், காயப்பட்டோர் தொடர்பான காட்சிகள் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் தொடர்பான காட்சிகளை ஒரு பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும் என நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

இவ்வாறு சனல் - 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் இன்றைய நிகழ்வுகள் தயாரிப்பு பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne பிரித்தானியாவை தளமாகக் கொண்ட The Independent ஊடகத்தின் கருத்தாடல் பகுதியில் எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www. puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

நிர்வாணமாக்கப்பட்ட பெண்களின் உடலங்கள் வீசப்பட்டிருந்ததுடன், ஒரு ரக் வாகனத்தின் பின்னால் அவை இழுத்துச் செல்லப்பட்டிருந்தன. இந்தப் பெண்களின் உடலங்களைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள் நிர்வாணமாக்கப்பட்ட அந்த உடலங்கள் தொடர்பாக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன், அவற்றைப் பார்த்து வக்கிரமாகச் சிரித்துக் கொண்டனர்.

இந்தப் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது போன்றே காணொலிக் காட்சியில் தெரிகிறது. முழங்காலில் இருத்தப்பட்ட ஒரு பெண் எவ்வாறு கொல்லப்படுகின்றாள் என்பதை பிறிதொரு செல்லிடப்பேசியில் எடுக்கப்பட்ட காட்சியானது ஆதாரப்படுத்துகின்றது. இவ்வாறு கொடூரமாக நடாத்தப்பட்ட அந்தப் பெண்ணின் மூளைப் பகுதி சிதறடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் இரவன்று நாங்கள் பார்க்கப் போகும் 'சிறிங்காவின் கொலைக் களங்கள்' என்ற திரைப்படத்தில் காண்பிக்கப்படவுள்ள காட்சிகளில் சிலவே இவையாகும். இவ்வாறான கொலைக் காட்சிகள், காயப்பட்டோர் தொடர்பான காட்சிகள் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் தொடர்பான காட்சிகளை ஒரு பிரிட்டன் நாட்டின் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பார்க்க முடியும் என நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்குமாறு நான் உங்களைத் தூண்டவில்லை. இது மிகவும் பயங்கரமானது. இதனை நீங்கள் பார்க்கும் போது அதில் காண்பிக்கப்படும் காட்சிகளை உங்களால் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாதிருக்கலாம்.

இவற்றை எனது ஞாபகத்திலிருந்து நீக்குவதற்கு என்னால் முடியாதுள்ளது. இந்தக் காட்சிகளானது இரவு 11 மணிக்கே காண்பிக்கப்படுகின்றது. இதன் கடைசிப் பகுதியானது மிகவும் பயங்கரமானது. கண்ணால் பார்த்து சகிக்க முடியாத பல காட்சிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறான பயங்கரக் காட்சிகளை செய்திகளில் கூட மக்களால் பார்க்க முடியாதிருந்தது.

இந்தத் திரைப்படத்தை எங்களால் முழுமையாகப் காண்பிக்க முடியாமலிருக்கும்: சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போதும் அதன் பின்னரும் சிறிலங்காப் படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை ஆதாரப்படுத்தும் சாட்சியங்கள் உள்ளதாக ஐ.நாவின் வல்லுனர் குழுவானது ஏற்கனவே தெரிவித்திருந்தது. 40,000 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் இந்தப் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர் என அவர்கள் நம்புகின்றனர்.

பாரிய போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வருமாறு, ஐ.நா வல்லுனர் குழு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியிருந்தது. ஆனால் இதனை சிறிலங்கா அரசாங்கம் செவிமடுக்கவில்லை. யுத்தம் இடம்பெற்ற போது யுத்த வலயப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பார்வையிடுவதற்கு ஊடகவியலாளர்களையோ அல்லது ஐ.நா அதிகாரிகளையோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருக்கவில்லை. ஆனால், யுத்தக் காட்சிகளை சிறிலங்கா அரசாங்கமும் தமிழர் தரப்பும் செல்லிடப்பேசிகளின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளன. அதனையே நாம் இப்போது பார்வையிடுகிறோம்.

இராணுவச் சிப்பாய்கள் தமது செல்லிடப்பேசிகளில் எடுத்த காணொலிக் காட்சிகள் மிகவும் பயங்கரமானதாகவும், அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற காட்சிகளாகவும் உள்ளன.

யுத்தத்தின் இறுதிப் பகுதியில் படையினரிடம் சரணடைந்த கைதிகளை அவர்கள் எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களே காட்சிப்படுத்தியுள்ளனர். நீண்ட வரிசைகளில் அடுக்கி விடப்பட்டிருந்த பல இறந்த உடலங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட பல ஒளிப்படங்களும் இத்திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் பலரது முகங்கள் சிதைக்கப்பட்டுள்ளதுடன் பலர் அவர்களது தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த உடலங்கள் எறிகணைகளால் கொல்லப்பட்டதற்கான எந்தவொரு தடயங்களும் காணப்படவில்லை. மாறாக இவர்கள் 'போர் விதிமுறைகளுக்கு' ஏற்ப நடாத்தப்படவுமில்லை.

சிறு பிள்ளைகளைக் கொண்ட குழுவொன்று குழியொன்றிற்குள் இடப்பட்டுள்ளனர். இதில் சில கைதிகள் முதலில் உயிருடன் இருக்கும் காட்சிகளும் இதன் பின்னர் அவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழர் தரப்பால் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. வைத்தியசாலைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் இருப்பிடங்கள் இலக்கு வைத்துத் தாக்கப்படும் காட்சிகள் பலமான சாட்சியங்களாக உள்ளன.

சரணடைந்தவர்களை துன்புறுத்தி, சித்திரவதைப்படுத்தி கொலை செய்யும் காட்சிகள் போலியானவை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இவை போலியானவை அல்ல. இவை உண்மையான காட்சிகள் என ஒளிப்பட, கானொலித் துறை வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்ப் புலிகளே தமிழ் மக்களைக் கொன்றதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியாகக் கூறுகின்றது. அவர்கள் அவ்வாறு செய்தார்கள் தான். ஆனால் அவர்கள் 40,000 பொது மக்களையும் கொலை செய்யவில்லை. ஆனால் இத்திரைப்படத்தில் பதிவாக்கப்பட்டுள்ள காட்சிகள் தொடர்பாக நாம் என்ன நினைக்கின்றோம் என்பதை உங்களுக்குச் சொல்ல முடியாது.

நீங்களே அதனைப் பார்த்து தீர்மானித்துக் கொள்ளுங்கள். இதைப் போன்ற அராஜகங்களுக்கு பொறுப்பானவர்களை கைது செய்வதற்கு அனைத்துலக ரீதியில் ஏதாவது ஒரு அமைப்பு இருத்தல் வேண்டும். ஒரு நிமிடம் பொறுத்திருங்கள், இதோ இங்கே.....

*Dorothy Byrne is Channel 4's head of news and current affairs

puthinappalakai.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியும் எதிர்மறையான நமக்குச் சாதகமான விளைவை ஏற்படுத்தலாம்.பார்க்க கொடூரமாக இருக்கும்.ஆகவே பார்க்கச் சொல்லி வற்புறுத்த மாட்டேன் என்பதில் அப்படி என்னதான் கொடூரம் இருக்கிறது என்பதையும் பார்க்கலாமே என்ற எண்ணத்தை அது பார்வையாளருக்குத் தூண்டலாம்.ஆகவே இன்றிரவு 11.00 மணிக்கு தொலைக்காட்சி பார்க்காமல் நித்திரைக்கு செல்ல விரும்புவர்கள் கூட கொஞ்சம் முன்னோட்டததைப் பார்ப்போம் என்று நினைப்பார்கள்.

மிகச்சரியான கருத்து..! மனிதனின் மனம் பார்க்காதே என்றால் பார்ப்பேன் என்று சொல்லும்.. இதற்கு ஒரு நல்ல உதாரணம் உண்டு.. ஆனால் இந்தத் திரிக்கு அது சரிவராது..! :unsure:

vietnam-war-photo.jpg

... வியட்நாம் யுத்தத்தை, சில ஊடகங்கள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்ற வைத்தது!!! ... நம்புவோம் Channel4 இன் இன்றைய யுத்தக்கொடுமை விபரணம் ... ஓர் விடிவிற்கு இட்டுச் செல்லட்டும் ... எம்மக்களை ...

.... Channel4 இற்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை! ... மே18 முடிய எம்மத்தியில் தோன்றிய வடுக்கள் சொன்னார்கள் ... போய் சிங்களவன் காலில் விழுங்கள்/என்னத்தை செய்ய போகிறீர்கள்?/உங்களுக்கு இருக்கும் தமிழ்நெற்,பதிவை வைத்து உலகிற்கு சொல்லப் போகிறீர்களா,?யார் இருக்கிறார்கள்? ஏதும் ஊடகங்கள்????? ... இன்று இறைவன் வடிவில் Channel4!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களால் இதை ஒலிபரப்பதான் முடியும், ஆனால் இதை உலகம் முழுதும் கொண்டு போகும் கடமை எம்மமுடையது, ஒளிபரப்பு முடிந்ததும், தீயாய் வேலை செய்ய வேண்டும், ஒளிபரப்பாகும் போது உயர்தர வடிவில் அதனை பதிவு செந்தல், யூத்ரூப் போன்றவற்றில் கணக்குகள் வைத்து இருப்போர் அவற்றில் ஒரே கிளிப்பாக இனைக்க முடியும், இல்லாதோர் துண்டு துண்டாக வெட்டி தொடர்ந்து வரக்கூடிய தொழில் நுட்பத்தை பாவித்து பதிவேற்ற வேண்டும், பதிவேற்ற கூடியவர்கள் அனைவரும் பதிவேற்ற வேண்டும், ஏற்கனவே பதிவேற்றி விட்டார்கள் என்று அசட்டையாக இருக்க கூடாது, நீங்கள் பதிவேற்றுவதை இருவர் பார்த்தாலும் அது எமக்கு வெற்றிதான், சிறுதுளிதான் பெரு வெள்ளம்,வீடியோ கிளிப்புகள் பதிவேற்ற கூடிய அனைத்திலும் பதிவேற்ற வேண்டும், லிங்குகளை மனித உரிமை அமைப்புகள், தொலைகாட்சி நிலையங்கள், அனைத்துக்கும் அனுப்பபடவேண்டும். பிளாக்குகள் உள்ளவர்கள் அவற்றில் பதிவேற்ற வேண்டும். ஒளிபரப்ப இன்னமும் சில மணித்தியாலங்களே இருப்பதால் தீயாய் வேலை செய்ய தயாரய் இருக்க வேண்டும்.

"தாகமாய் இருக்கும் குதிரையை நீர் தடாகம் வரைதான் சனல்4 னால் அழைத்து செல்ல முடியும், தாகம் உள்ளவர்கள்தான் நீரைகுடிக்க வேண்டும், கூட்டிசென்றவன் தாகம் உள்ளவனுக்காக நீரைகுடிக்க முடியாது, குடித்தாலும் தாகம் உள்ளவனின் தாகம் அடங்காது"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://blogs.channel4.com/world-news-blog/live-blog-sri-lankas-killing-fields/16455

live blog , தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Edited by Muhil

.. நன்றிகளை/கருத்துக்களை தெரிவியுங்கள் ...

Live Blog: SriLanka's Killing Fields .. Channel4

http://blogs.channel4.com/world-news-blog/live-blog-sri-lankas-killing-fields/16455#comment-10111

Edited by Nellaiyan

சனல்4 செய்திப்பிரிவு தலைவரின் எச்சரிக்கை

இதற்க்கு முன்னரும் வியற்நாம் போரில் நடந்த கைகள் பின்னால் கட்டப் பட்டு தலயில் சுடும் காட்சி காடினார்கள். ஆயினும் இலங்கையில் நடந்தது எத்தனையோ மடங்கு கொடூரமானவை. போரில் ஒருவன் கொல்லப்படுவது என்பது ஒன்று.

ஆனால் இங்கே சரணடைந்தவர் கைகள் பின்னால் கட்டப்பட்டு சுடப்படுகிறார்கள். செத்தபின்னும் ஆடைகளை களைவதும் அசிங்கப் படுத்துவதும், குற்றுயிராய் இருப்பவர்களை உடனே சாகவிடாமல் தமது குரூர தேவைகளுக்கு பயன் படுத்துவதும்.....

இது உலகத்தின் எந்த மூலையில் இப்படி நடந்தது? யூதர்களைக் கொன்ற நாஜிக்களும் இப்படிச்செய்யவில்லையே. கடத்திக்கொண்டு போய் தலைகளைத் துண்டாடும் அல்கைடாக்களும் இப்படிச்செய்ய வில்லையே.

சிங்களவர்களே! நீங்கள் உண்மையில் மனிதப் பிறப்புக்களா?

Edited by Small Point

http://blogs.channel4.com/world-news-blog/live-blog-sri-lankas-killing-fields/16455

live blog , தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

மாதிரி பின்னூட்டங்கள் :

0. Libya and Sri Lanka are being led by war criminals.

1. Any excuse will serve a tyrant like Sri Lanka's Rajabakse. Let Tamils fo free!

2. No matter what political reasons are given for this war, the underlying reason is genocide of Tamils in Sri Lanka.

3. It is the job of thinking people not to be on the side of the executioners.

4. The world is a dangerous place, not because of those who do evil, but because of those who look on and do nothing.

5. These crimes are similar to what was done in Bosnia and we should help bring justice for Tamils!

6. How could we ask Tamils co-exist?, UN must help to bring a referendum for separation.

7. Let us kick Sri Lankan cricket out of UK!

8. I will never ever visit Sri Lanka.

9. 16.If separation is good in between Czech and Slovaks ; East Timorians and Indonesia; Kosovo from Yougoslavia, then it is good for Tamileelam and Sri Lanka as well.

10. My country should take measures to protect Tamil civilians, as we pledged to do when adopted the “responsibility to protect” or "R2P" at the UN World Summit in 2005.

11. Genocide of Tamils has not received the same attention that genocide in Europe or genocide in Turkey/Armenia/Rwanda or genocide in other part of the world.

12. The late great Pope John Paul II wrote, the greatest problem this world faces is "INDIFFRENCE".

13.Sri Lanka is a rogue state!

14.Terrorism is the theme of this century; but does it mean national liberation or humanitarian laws should be discarded to the dustbins?

15. Sri Lanka is nowhere near reconcilation with its Tamil minority.

Edited by akootha

  • தொடங்கியவர்

மிகச்சரியான கருத்து..! மனிதனின் மனம் பார்க்காதே என்றால் பார்ப்பேன் என்று சொல்லும்.. இதற்கு ஒரு நல்ல உதாரணம் உண்டு.. ஆனால் இந்தத் திரிக்கு அது சரிவராது..! :unsure:

பார்ப்பார்கள் என்று தான் நம்புகிறேன்.

ஆனால், இது ஒரு படிக்கல்லாக மட்டுமே இருக்க முடியும். மேலும் பல படிக்கட்டுகள் அமையவேண்டும். அப்போது தான் இராட்சதர்களை ஏதாவது செய்ய முடியும்.

அம்னெஸ்டி அமைப்பும் ஒரு அறிக்கையை விட்டுள்ளது. முடிந்தால் பின்னூட்டங்களை இடுங்கள், நன்றியை தெரிவியுங்கள்.

Sri Lanka: Denying the truth will not bury it

Up to 100,000 people were killed in the war, according to UN figures

By Yolanda Foster, Amnesty International’s Sri Lanka researcher

http://livewire.amnesty.org/2011/06/14/denying-the-truth-will-not-bury-it/

GTVஇல் இன்று இதனை நேரடி ஒளிபரப்பு செய்வதற்க்கான முயற்சிகள் நடை பெறுவதாக சொன்னார்கள். ஆகவே, ஐரோப்பிய ஸ்கன்டிநேவிய மத்திய கிழக்கு நாடுகளில் இதனை பார்வையிடக் கூடும்.

Edited by Small Point

GTVஇல் இன்று இதனை நேரடி ஒளிபரப்பு செய்வதற்க்கான முயற்சிகள் நடை பெறுவதாக சொன்னார்கள். ஆகவே, ஐரோப்பிய ஸ்கன்டிநேவிய மத்திய கிழக்கு நாடுகளில் இதனை பார்வையிடக் கூடும்.

G T V ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது என்றுதான் நினைக்கின்றேன்.

இதை பார்குமாறு முடிந்தளவு பிரச்சரம் செய்தபோதும்.... . நான் இதை பார்ப்பதில்லை எண்டு முடிவெடுத்திருக்கிறேன்..... .

இலங்கையின் கொலைக் களங்கள் என்ற விவரணம், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்படவுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியில் இன்றிரவு ஒளிபரப்பாகவுள்ள இலங்கையின் கொலைக் களங்கள் என்று அர்த்தப்படும் Sri Lanka’s Killing Fields என்ற விவரணம், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு சிறப்புக் காட்சியாக அது நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்படுமென சனல் 4 தொலைக்காட்சி அறிவித்தது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8197

சற்று முன் காண்பிக்கபட்டு முடிவுற்றது. ஐக்கிய நாட்டு பணியாளர்கள் வன்னியை விட்டு விலகி செல்லும் போது எங்களை விட்டு செல்லவேண்டாம் என்று கத்திய மக்களினை சாகவிட்டு போனது சர்வதேச சமுதாயம்.

முடிவில், இனியும் சர்வதேசம் எம்மைக் கைவிடப் போகிறதா என்ற கேள்வியுடன் C4.

எழுத இங்கு வார்த்தைகள் இல்லை.

நான் கனடாவில் உள்ள ஒரு மனித உரிமைகள் பற்றிய பேராசியருடன் விவத்தித்த பொழுது அவர் சொன்னார், "உங்களிடம் ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு உள்ளதால் உங்களுக்கு இழைக்கப்படும் கொலைகள் இனவழிப்பு ஆகாது'.

இன்று எமது காவலர்களையும் அதர்ம முறையில் அழித்து அவர்கள் யாருக்காக காவலாக இருந்தார்களோ அவர்களையும் சர்வதேசம் அழித்துவிட்டது.

ஆனால், இன்று அதே சர்வதேசம் மூலம், 'நாம் சிங்களத்திடம் எவ்வாறு இனிமேலும் வாழக்கேட்பாய்?' என்று பலமான ஒரு முன்னெடுப்பு மூலம் ஒரு அரசியல் தீர்வை பெற்றே ஆக வேண்டும். இது எமது வரலாற்று கடமை!

... Sleepless night tonight ..

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தூங்கிக் கிடக்கும் போது , எங்கிருந்தோ ஒரு கரம் வந்து எங்களைத் தட்டி எழுப்புகின்றது!

இந்தக் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு, எமது தார்மீகப் பயணத்தைத் தொடர்வோம்!

இலங்கையில் அல்லல் பட்ட, படுகின்ற எமது உறவுகளுக்கு நீதியும், உறுதியான தீர்வும் கிடைக்கும் வரை!

'எனக்கு நல்ல சப்பாத்துக்கள் போட்டவர்களைக் கண்டால்,கடவுள் மீது கோபம் வருகின்றது, எனக்கு மட்டும் கிழிந்த சப்பாத்துக்களைத் தந்து விட்டாரே என்று!'

ஒரு நாள் கால்களே இல்லாத ஒருவனைப் பார்க்கும் வரை!!!- பெர்னார்ட் ஷா

Edited by புங்கையூரன்

நாங்கள் தூங்கிக் கிடக்கும் போது , எங்கிருந்தோ ஒரு கரம் வந்து எங்களைத் தட்டி எழுப்புகின்றது!

இந்தக் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு, எமது தார்மீகப் பயணத்தைத் தொடர்வோம்!

இலங்கையில் அல்லல் பட்ட, படுகின்ற எமது உறவுகளுக்கு நீதியும், உறுதியான தீர்வும் கிடைக்கும் வரை!

'எனக்கு நல்ல சப்பாத்துக்கள் போட்டவர்களைக் கண்டால்,கடவுள் மீது கோபம் வருகின்றது, எனக்கு மட்டும் கிழிந்த சப்பாத்துக்களைத் தந்து விட்டாரே என்று!'

ஒரு நாள் கால்களே இல்லாத ஒருவனைப் பார்க்கும் வரை!!!- பெர்னார்ட் ஷா

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் புங்கையூரான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.