Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது பொருளாதார தடை: பிரதமரிடம் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது பொருளாதார தடை: பிரதமரிடம் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தல்

புதுடெல்லி, ஜூன் 14,2011

இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதரத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் வலியுறுத்தினார்.

புதுடெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர், இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.

அந்த ஆவணத்தில், 'இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

பரவலான குண்டுவீச்சு மூலம் பொதுமக்கள் படுகொலை, மருத்துவமனை மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல், மனிதாபிமான உதவிகள் மறுப்பு, மனித உரிமை மீறல்கள், ஊடகம் மற்றும் அரசுக்கு எதிரான விமர்சகர்கள் மீது தாக்குதல் ஆகியவை குறித்து ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க, இப்பிரச்னையை இந்திய அரசு, ஐ.நா. சபையிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நிர்வாகத்தில் அவர்கள் முழுமையாக இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில், தமிழர்கள் நீண்டகாலமாக இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அரசியல் சட்டத்திருத்தம் மூலம் அவர்களுக்கு சமவுரிமை வழங்குவதை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது.

சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் ரீதியான சமவுரிமை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் முழுமையாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுக்க வேண்டும்,' என்று பிரதமரிடம் ஜெயலலிதா அளித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றி-விகடன்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே..

"சொன்னதைச் செய்வோம்..செய்வதைச் சொல்வோம்" என ஊரை ஏமாற்றி, தம் மக்கள் வளத்தை பெருக்கிகொண்ட தமிழினத் தலீவரைவிட, ஈழத்தமிழருக்கு இவரின் தற்போதைய நடவடிக்கை ஆறுதல் அளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே..

"சொன்னதைச் செய்வோம்..செய்வதைச் சொல்வோம்" என ஊரை ஏமாற்றி, தம் மக்கள் வளத்தை பெருக்கிகொண்ட தமிழினத் தலீவரைவிட, ஈழத்தமிழருக்கு இவரின் தற்போதைய நடவடிக்கை ஆறுதல் அளிக்கும்.

உண்மை தான் வன்னியன்! உங்கள் நாடு தந்த கவிஜனின் வரிகள் மீண்டும், மீண்டும் நினைவில் வருகின்றன!

செந்தமிழ் நாடென்னும் போதினிலே,

இன்பத் தேன், வந்து பாயுது காதினிலே,

தந்தையர் நாடென்ற பேச்சினிலே,

ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!!!

நீங்கள் குறுப்பிட்ட தலைவர், எங்களைப் பொறுத்த வரையில், என்றோ மறக்கப் பட்டு விட்டார்!

தற்போதும் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சுதந்திர வாழ்வுக்கு ஜெயா வழிசமைத்துக் கொடுத்தால் ஈழத்தமிழர் அவரை என்றும் மறவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.