Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைப்பிரியா ஒரு போராளியாம்: அப்படியென்றால் செய்ததெல்லாம் சரியோ

Featured Replies

இயக்க போராளியை சனல் 4 ஆவணப்படத்தில் ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என மாத்திரம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள இனப்படுகொலை இராணுவம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி சனல்4 ஆவனம் பொய் என கூற பெரும் முயற்சியொன்றை எடுத்துள்ளதாக காண்பிக்கின்றனர். அப்படியென்றால் போராளிக்கு என்ன வேண்டும் ஆனாலும் செய்யலாம் என மறைமுகமாக சிங்களம் சொல்கின்றதா?.

.

விடுதலைப் புலி இயக்க சீரூடை அணிந்த அவரது அடையாள அட்டை புகைப்படத்தை அமைச்சு வெளியிட்டு இதன் மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவராம் என கூறியுள்ளது.

.

1982ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவர் வன்னியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்பு புலிகளின் குரல் வானொலியில் இணைந்து கொண்டவராம் என மேலும் விவரிக்கின்றது.

.

இசைப்பிரியாவுக்கு லெப்டினல் கேணல் என்ற தகுதி நிலையும் வழங்கப்பட்டிருந்தது. என்றும் இவர் கடற்புலி படையைச் சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவரை மணம் செய்திருந்தார் என்றும் சிங்களம் சொல்கின்றது.

.

மேற்கண்டதகவல்கள் ஏற்கனவே தமிழர் தரப்பால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான ஒழிவு மறைவும் இல்லையே.

.

அதாவது போராளிக்கு என்ன செய்தாலும் அவை மனித உரிமைக்கு உட்பட்டவை என சிங்களம் சொல்லவருகின்றதா?

My link

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கும் உரிமைகள் இருக்கின்றன என்பதைத் தெளிவாக இந்த ஒளி விவரணப் படத்தில் கூறுகின்றார்கள்!

சிங்களம் நித்திரை கொள்வது போல் நடிக்கின்றது! எழுப்புவது கடினம்!!

இதை நித்திரையால் எழுப்புவதற்கு ஒரே வழி, போர்க்குற்றம் என்ற அமத்து வெடி மட்டுமே!!!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலி இயக்க சீரூடை அணிந்த அவரது அடையாள அட்டை புகைப்படத்தை அமைச்சு வெளியிட்டு இதன் மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவராம் என கூறியுள்ளது.

நீங்கள் கொடூரமான முறையில் கொலை செய்தீர்களா இல்லையா ? ஆம் அல்லது இல்லை என்ற பதிலைச்சொன்னால் சரி சுற்றி வளைத்து பூ சுத்தாதிர்கள்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா செய்தி வாசிக்கும் போது ஆயுதம் வைத்திருந்தாரா?.சரணடைந்தவரை எப்படி கொல்ல முடியும்? போன்ற கேள்விகளும் உள்ளன.

... கடந்த காலங்களில் எத்தனை புலிகளின் அடையாள அட்டைகளை சிங்களம் தயாரித்திருந்தது ... இதென்ன கடினமான வேலையா????

... இங்கு நாங்களே, இறுதிக்காலங்களில் கொல்லப்பட்டவர்களை, புலிகள் என்று சிங்களம் கூறுவதற்கு தாளம் ... தெரியாமல்(??) போடுகிறோம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

... கடந்த காலங்களில் எத்தனை புலிகளின் அடையாள அட்டைகளை சிங்களம் தயாரித்திருந்தது ... இதென்ன கடினமான வேலையா????

... இங்கு நாங்களே, இறுதிக்காலங்களில் கொல்லப்பட்டவர்களை, புலிகள் என்று சிங்களம் கூறுவதற்கு தாளம் ... தெரியாமல்(??) போடுகிறோம்!!!

என்ன மாதிரியும் விவாதிக்கலாம். ஆனால் நாங்கள் சொல்வதைச் சிங்கள அரசு பொய் என நிருபிக்கும் வண்ணம் அமையவிடக்கூடாது. பதில் எம்மிடம் இல்லை எனில் அவற்றைக் கண்டு கொள்ளாமல் வேறு விடயத்தை முன்னிலைப்படுத்துகின்ற செயலையே சிங்கள அரசு செய்கின்றது. இசைப்பிரியாவின் அடையாள அட்டை போலி என நாம் வாதிட்டால் அவரைப் புலி எனக் காட்ட என்னுமொரு ஆதாரத்தைச் சிங்கள அரசு காட்டி முன்னிலைப்படுத்த அமையவிடக்கூடாது....

சனல் 4 தெளிவாக கூறியுள்ளது, 'அவர் ஒரு ஊடகவியலாளர்' என்று, போராளி அல்ல. இதுவே சிங்களத்தின் இந்த கூற்றுக்கு காரணமாக இருக்கலாம். விடுதலைப்புலிகள் தான் பணம் கொடுத்து சனல் நாலை இந்த ஒளிப்பதிவு எடுக்கவைத்துள்ளர்கள் எனவும் கூறியிருந்தது.

இந்த விடயத்தில் சனல் 4மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை இந்த விடயத்தில் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களை பதிலளிக்க வைக்கலாம்.

Like the Horrors of WWII

The SLA made some critical mistakes.

One was killing a beautiful and popular Tamil journalist, Shoba Isaippiriya, whose nude and surely sexually abused body was gratuitously photographed after her death on a soldier's cell phone cameras. (I wish Channel-4 would have at least partly restricted the images of her nudity out of respect, but that was their call.)

Another was obviously allowing soldiers to photograph events and then release them to the public. Perhaps some still don't fully comprehend the whole YouTube phenomena.

The worst, one that plagues every Genocidal government, is a belief that they can get away with something this bad without anyone finding out.

http://www.salem-news.com/articles/june202011/tamil-attack-tk.php

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா போராளியே: இலங்கை அரசு விளக்கம்

கொழும்பு, ஜூன் 20,2011

'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற சேனல் 4-ன் ஆவணப்படம் முன்வைக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்று நிரூபிக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ள இலங்கை அரசு, ஊடகவியலாளர் என்று கூறப்படும் இசைப்பிரியா ஒரு போராளியே என்று விளக்கம் அளித்துள்ளது.

'சேனல் 4' வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப் படத்தின் எதிரொலியால் இலங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது இலங்கை அரசு. (தொடர்புடைய இணைப்பு: இலங்கையின் கொலைக் களங்கள்: சேனல் 4 ஆவணப் படம் வீடியோ!)

இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் போலியானவை என்று கூறிவரும் இலங்கை அரசு, அதனை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இப்படம் குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வது பற்றி இலங்கை அரசு ஆய்வு செய்து வருவதாக, அந்நாட்டின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், சேனல் 4 வீடியாவின் மூலப் பிரதியை கொடுத்தால் மட்டுமே, அதிலுள்ள சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள முடியும் என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

இந்தச் சூழலுக்கிடையே, 'இலங்கையின் கொலைக்களங்கள்' படத்தில் காட்டப்பட்ட காட்சிகளும், சேனல் 4 முன்வைத்த குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று நிரூபிக்கும் வகையில் சில விளக்கங்களை இலங்கை அரசு அளிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், எதிர்ப்புக் குரல்களை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இசைப்பிரியா போராளியே...

இது தொடர்பாக, இலங்கை பாதுகாப்பு அமைச்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், " 'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்ட உறுப்பினராக இசைப்பிரியா இருந்தார். ஆனால், அவர் இதயநோய் காரணமாக ஒரு பேராளியாக அல்லாமல், ஊடகவியலாளராக மட்டுமே செயல்பட்டார்,' என 'சேனல் 4' கூறியிருக்கிறது.

இசைப்பிரியா 1982-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அவர், வன்னியில் ராணுவ பயிற்சியை மேற்கொண்டார். விடுதலைப் புலிகளின் ராணுவப் பிரிவில் பணியாற்றிய அவர், பின்னர் 'புலிகளின் குரல்' வானொலியில் சேர்ந்துகொண்டார்.

இலங்கை விமானப் படை - புலிகளின் குரலை தாக்கி அழித்த பின்பு இலங்கை அரசாங்கம் யுனெஸ்கோவுக்கு 2007-ம் ஆண்டு ஓர் அறிக்கையை கொடுத்தது. இந்த அறிக்கையில் புலிகளின் குரல் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ வானொலி எனவும், இந்த தாக்குதலில் இறந்தவர்கள் புலிகளின் ராணுவ நடவடிக்கைகளில் பங்குகொண்டவர்கள் என அறியப்பட்டார்கள் எனவும் தெளிவாக கூறப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவின் சேவையை பாராட்டி புலிகள் இயக்கம் அவரை லெஃப்டினன் கர்னலாக பதவி உயர்வு தந்தது. அவர், கடற்புலியான ஸ்ரீராம் என்பரை திருமணம் செய்தார். ஸ்ரீராம் திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கடற்புலி தலைவராக இருந்தவர்.

சேனல் 4 படத்தில் காட்டப்பட்டுள்ள, புலிகளால் இசைப்பிரியாவுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அவர் ராணுவ சீருடையில் இருப்பதை காட்டுகின்றது. இது, அவர் விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் இருந்தார் என்பதை உறுதி செய்கின்றது.

இசைப்பிரியா, கரும்புலிகள் உருவாக காரணமாக இருந்தவர் என்றும், அவர்களை போற்றிப் புகழ்ந்தவர் என்றும் சேனல் 4 கூறியுள்ளது. இது, பிழையாக வழிநடத்தப்பட்டு தமது உயிரை மாய்த்துக்கொண்ட கரும்புலிகளின் செயலை விட மோசமானது.

இசைப்பிரியா, புலிகள் இயக்கத்தில் முழுதாக தன்னை இணைத்துக் கொண்டவர் என்பதை நன்கு அறிந்தும், அவர் ஒரு ஊடகவியலாளர் மட்டுமே எனக் கூறி உண்மைகளை மூடி மறைக்க 'சேனல் 4' முயல்கிறது," என்று அந்த அறிக்கையில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

http://new.vikatan.com/news.php?nid=2430

சனல் 4 வின் வெளியீடு இசைப்பிரியா போராளியா? ஊடகவியலாளரா? என்பதை முக்கியத்துவப்படுத்தவில்லையே. இவர்கள் இந்தவிடயத்தைக் கையிலெடுப்பது சொல்வதற்கு வேறுபதிலில்லாததுதான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

Professor William Schabas, Director of the Irish Centre for Human Rights and Professor in

human rights law at the University of Ireland, Galway; "The Right to Life in Armed Conflict", 19 november 2008, Geneva.

Tamil journalist bound, shot, during Sri Lankan civil war

New York, June 20, 2011--Video footage of a Tamil journalist apparently executed in the final stages of Sri Lanka's bloody civil war underscores the need for an urgent international inquiry, the Committee to Protect Journalists said today.

The U.K.'s Channel 4 has screened amateur footage of the body of Tamil news presenter Shoba, indicating that she was shot and killed during the government's final military surge in the northeast. Shoba, who went by one name, also reported under the name Isaipriya or Isaippiriya for the media division of the secessionist Liberation Tigers of Tamil Eelam (LTTE), according to Channel 4 and the pro-LTTE TamilNet news website. "Her role was as a journalist rather than a direct fighter," Channel 4 reported.

http://www.cpj.org/2011/06/tamil-journalist-bound-shot-during-sri-lankan-civi.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.