Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்குப் பிடித்த பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மைதிலி என்னைக் காதலி"பட‌த்தில் இருந்து டிஆர் இசையில் எஸ்பிபி பாடிய அமலாவின் நட‌னத்தோடு அமைந்த அருமையான பாட‌ல் இது;

ஒரு பொன்மானை நான் காண தக திமி தோம்

ஒரு அம்மானை நான் பாட‌ தக திமி தோம்

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு(2)

அவள் விழிகளில் ஒரு பழர‌ச‌ம் அதை காண்பதில் எந்தன் பர‌வச‌ம்

ஒரு பொன்மானை நான் காண தக திமி தோம்

ஒரு அம்மானை நான் பாட‌ தக திமி தோம்

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

Edited by ரதி

  • Replies 171
  • Views 27.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் நிலா அக்கா நான் இந்த திரியின் ஆரம்பத்திலேயே எழுதி இருந்தேன் இதில் நான் எனக்குப் பிடித்த பாடல்களை மட்டும் இணைப்பேன் மற்றவர்களை தயவு செய்து இணைக்க வேண்டாம் என்று உங்களுக்கு விருப்பம் என்டால் நீங்கள் ஒரு திரி ஆரம்பித்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை இணையுங்கள்.நன்றி

வணக்கம் இந்தப் பகுதியில் நான் பார்த்து,கேட்டு,ரசித்த பாடல்களை இணைக்கப் போகிறேன்.உங்களுக்கு நான் இணைக்கும் பாட்டு பிடித்திருந்தால் பாட்டினை ரசியுங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

ஆனால் தயவு செய்து உங்களுக்கு பிடித்த பாட்டினை கொண்டு வந்து இதில் இணைக்க வேண்டாம்.ஏன் என்டால் எனக்குப் பிடித்த பாட்டுகள் எது என்று உங்களுக்குத் தெரியாது smile.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு உங்களுக்கு நான் நிலாமதி அக்காவுக்கு நல்ல தமிழில் எழுதினது விளங்கவில்லையா?...தயது செய்து என்ட திரியில் உங்கட பாட்டுக்களை கொண்டு வந்து இணைக்க வேண்டாம்...உடனே நீக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி மன்னிக்கவும்.....................இனி மேல் இங்கு பதிக்கக் மாடேன் மன்னிக்கவும்

ரதி விரும்பும் பாடல் என தலைப்பை திருத்தினால் நன்று

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் நிலா அக்கா நான் இந்த திரியின் ஆரம்பத்திலேயே எழுதி இருந்தேன் இதில் நான் எனக்குப் பிடித்த பாடல்களை மட்டும் இணைப்பேன் மற்றவர்களை தயவு செய்து இணைக்க வேண்டாம் என்று உங்களுக்கு விருப்பம் என்டால் நீங்கள் ஒரு திரி ஆரம்பித்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை இணையுங்கள்.நன்றி

இது எனக்கு தெரியாது ............நான் லண்டனுக்கு பறந்து கொண்டிருந்தேன்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இந்தப் பகுதியில் நான் பார்த்து,கேட்டு,ரசித்த பாடல்களை இணைக்கப் போகிறேன்.உங்களுக்கு நான் இணைக்கும் பாட்டு பிடித்திருந்தால் பாட்டினை ரசியுங்கள் அத்தோடு உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

ஆனால் தயவு செய்து உங்களுக்கு பிடித்த பாட்டினை கொண்டு வந்து இதில் இணைக்க வேண்டாம்.ஏன் என்டால் எனக்குப் பிடித்த பாட்டுகள் எது என்று உங்களுக்குத் தெரியாது smile.gif

இந்தப் பாடல் வருடம் 16 படத்தில் இடம் பெற்றது.கேஜே ஜேசுதாஸ் அவர்கள் பாடியது[எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் இவர் தான் முதன்மையானவர்.]அவருக்கு தேசிய விருது இந்தப் பாட்டுக்கு கிடைத்தது என நினைக்கிறேன்.

இது எனக்கு தெரியாது ............நான் லண்டனுக்கு பறந்து கொண்டிருந்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்கு தெரியாது ............நான் லண்டனுக்கு பறந்து கொண்டிருந்தேன்

மன்னிப்பு எல்லாம் தேவையில்லை அக்கா...உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி...நீங்கள் இன்று உங்கள் விருப்ப பாடலை இணைத்தால் நாளைக்கு எல்லோரும் தங்கள் விருப்ப பாடலை கொண்டு வந்து இணைப்பார்கள் எனக்கு அது விருப்பம் இல்லை...இதில் எனது விருப்ப பாடல்களை மட்டும் இணைக்க விரும்புகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் நிலா அக்கா நான் இந்த திரியின் ஆரம்பத்திலேயே எழுதி இருந்தேன் இதில் நான் எனக்குப் பிடித்த பாடல்களை மட்டும் இணைப்பேன் மற்றவர்களை தயவு செய்து இணைக்க வேண்டாம் என்று உங்களுக்கு விருப்பம் என்டால் நீங்கள் ஒரு திரி ஆரம்பித்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை இணையுங்கள்.நன்றி

தங்கச்சி! இப்பிடியே இஞ்சையிருக்கிற எல்லாரும் எனக்கு புடிச்ச பாட்டெண்டு தலைப்பை தொடங்கி...கடைசியிலை சுத்தித்சுத்தி சுப்பற்ரை கொல்லையை சுத்திவாற மாதிரி கதை முடியும்......ஒருநாளைக்கு உந்த யூ ரியூப்பு காரன் இழுத்து மூடினான் எண்டால்.....இந்த யாழ்களத்திலை அரைவாசியில்லாமல் போடும்......இருந்தாலும் தங்கச்சி குறிப்பிட்டு சொன்ன இரண்டு பேருக்கும் தேவையில்லாத வேலை.....தெரியும்தானே அவளின்ரை குணம்......எப்பபாத்தாலும் பக்கெண்டு மூக்குக்கு மேலை கோள்வம் :lol:

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாகை சூட‌வா" என்ட‌ பட‌த்தில் இருந்து ஜிப்ரானின் இசையில் ர‌ஞ்ஜித்,நேகா பாசின் பாடிய பாட்டு கேட்க மிகவும் நன்றாக உள்ளது.

போறானே,போறானே காற்றோட‌ தூத்தல் போல

போறானே,போறானே கோபமாத் தான் போறானே(2)

http://www.youtube.com/watch?v=D9MMUW1iXTk&feature=related

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரக் கனவு படத்தில் இருந்து எனது அபிமான நடிகை கஜோலின் நடிப்பில் ஏ ஆரின் இசையில் எனது அபிமான பாடகர்களில் ஒருவரான ஹரிகரன்,சாதனா சர்க்கம் பாடிய பாடல்.

வெண்ணிலவே,வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை ஏ(3)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்....

இது இருளல்ல அது ஓளியல்ல அது இரண்டோடும் சேராது பொன் தேகம்(2)

தலை சாயாதே,விழி மூடாதே சில மொட்டுகள் பட்டென்று பூவாகும்

பெண்ணே,பெண்ணே பூலோகம் எல்லாமே தூங்கிப் போன பின்னே

புல்லோடும் பூ மீதும் ஓசை கேட்கும் கண்ணே

நாம் இர‌வின் மடியின் பிள்ளைகளாவோம் தாலாட்ட நிலவுண்டு

வெண்ணிலவே,வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

எட்டாத உயர‌த்தில் நிலவை வைத்தவன் யாரு?

கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?

இதை எண்ணி,எண்ணி இயற்கையை வியக்கிறேன்

எட்டாத உயர‌த்தில் நிலவை வைத்தவன் யாரு?

பெண்ணே,பெண்ணே பூங்காற்று அறியாமல் பூவை பிறக்க வேண்டும்

பூ கூட‌ தெரியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட‌ உலகை ர‌சிக்க வேண்டும் உன் போன்ற பெண்ணோடு

வெண்ணிலவே,வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிநேகனின் வரிகளில் பரத்வாஜ் இசையமைத்து பாடிய இந்த பாட்டு வாழ்க்கையின் இளமை ஞாபகங்களை,சிறு பருவத்தை தொட்டு செல்கிறது...அருமையான வரிகள் நீங்களும் கேட்டுப் பாருங்கள்;

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட,திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலாக்காலம் கனவினியில் தினம்,தினம் உலாப் போகும்(2)

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற் காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட,திரும்பிட ஏக்கங்கள்

காற்றும் கூட‌ எங்களுட‌ன் இர‌வினில் தூங்க இட‌ம் கேட்போம்

மழைத் துளி கூட‌ என் தாயின் மடியின் தவழ தினம் ஏங்கும்

நத்தை போதும் எங்களின் தாகம் தீர்த்துக் கொள்வோம்

கற்கும் கட‌லும் கை கட்ட கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்

ஜந்தெழுத்து புதுமொழியை அறிய வைத்தால் என் அன்னை

அண்ண‌ன் தங்கை அனைவருமே நேச‌ம் கொண்டோம் தமிழ் மண்ணை

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற் காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட,திரும்பிட ஏக்கங்கள்

அன்னை ஊற்றிய பிடி சோற்றில் ஆயுள் முழுக்க பசி மறந்தோம்

ஒற்றைக் கண்ணில் அடி பட்டால் பத்துக் கண்ணில் வலி கண்டோம்

பள்ளிக் கூட‌ம் தந்ததில்லை பாச‌ம் என்னும் நூல் ஒன்றை

வேதங்கள் நான்கும் சொன்னதில்லை எங்கள் கதை போல் வேறோன்றை

சேகரித்து வைப்பதற்கு தேவையென்று எதுவுமில்லை

இறைவனுக்கும்,எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற் காலம்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்

அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட,திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலாக்காலம் கனவினியில் தினம்,தினம் உலாப் போகும்(2)

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற் காலம்

http://www.youtube.com/watch?v=orzE8fUCFjY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=kHS_FQSF7Xg&feature=related

என்னவோ தெரியவில்லை நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாட்டை இன்று கேட்க வேண்டும் போல இருந்தது...கண்ணீரை வரவழைக்கும் பாட்டு இது;

ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து பிரசாந்தினி,விஜய் ஜேசுதாஸ்,பி.பி சீனிவாஸ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

பெம்மானே,பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ?

வெய்யோனே உருகிருகி வீழ்கின்றோம் வேந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ?

புலம் பெயர்ந்தோம்,பொலிவிழந்தோம்,புலன் கழிந்தோம்,அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே

பெம்மானே,பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ? ஓ,ஓ,ஓ....

சோறில்லை,சொட்டு மழை நீரில்லை,எம்கையிலும் பாலில்லை கொன்றையோனே

மூப்பானோம்,உருவழிந்து முட‌மானோம்,மூச்சு விழும் பிண்மானோம் முக்கலோனே

கூண்டேதோம்,ஊன் உருகி உயிர் ஓய்ந்தோம் ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே

நீராகி,ஜம்புலனும் வேராகி ஒன்றுட‌னும் சேராகி போக மாட்டோம்

எம் தஞ்சை யாம் பிறந்த புன் தஞ்சை விர‌லேந்தும் தீண்டாமல் வேக மாட்டோம்...

சாய்ந்தாலும்,சந்ததிகள் வீழ்ந்தாலும் தாய் மண்ணில் சாகாமல் சாக மாட்டோம்...

ஓம்,ஓ,ஓம்...........

பொன்னார் மேனியனே வெம் புலித் தோல் உடுத்தவனே என்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ?

முன்னோர் பாற் கடலில் அன்று முழு நஞ்சுண்ட‌வனே பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குகிறோம்

பெம்மானே,பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கர் மகாதேவன் மூச்சு விடாமப் பாடிய பாட்டு இது நீங்களும் கேட்டுப் பாருங்கள் :)

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"காதலில் சொதப்புவது எப்படி" என்னும் திரைப்படத்தில் இருந்து எஸ் தமானின் இசையில் கார்த்திக்,ஹரிணி பாடி வெளி வர இருக்கும் பாடல்...காதலித்துக் கொண்டு இருக்கும் அனைத்து உள்ளங்களுக்காகவும் இப் பாடல் அர்ப்பணம் :D

http://www.youtube.com/watch?v=-WyEW5sIwvU&feature=related

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"காதல் சொல்ல வந்தேன்" திரைப்படத்தில் இருந்து யுவனின் இசையில் விஜய் ஜேசுதாஸ் பாடிய பாடல் இது;

என்ன என்ன என்ன ஆகிறேன்

மெல்ல மெல்ல எண்ணி போகிறேன்

எட்டிப் பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்...நிலவை பிடிக்கிறேன்

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"காதலுக்கு மரியாதை" படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் ஹரிகரன்,பவதாரிணி ஆகியோர் பாடியுள்ளனர்.

என்னைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா?

முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூலி கணபதி திரைப்படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் அருமையான குரலில் ஸ்ரேயா கோசால் பாடிய பாட்டு இது;

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?(2)

மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்

விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா கண்களில் நட‌க்குதே

குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்...மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானுமோ காற்றாடி ஆகிறேன்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ

விண்ணும்,மண்ணில் வந்து சேர‌ அது பாலம் போடுதோ...ஓ

நீர்த்துளி நீந்தினால் நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இட‌மெல்லாம் வீணையின் தரிச‌னம்

ஆயிர‌ம் அருவியாய்,அன்பிலே நட‌க்கிறாய்

வேகம் போல எனக்குள்ளே மோக மழைக்குள் நனைகிறாய்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

ஸ்ரேயாவின் அருமையான குர‌லில் எத்தனை தர‌ம் கேட்டாலும் அலுக்காத பாட‌ல்...வட‌க்கத்திய பாட‌கியாக இருந்தாலும் இப்ப இருக்கும் தமிழ் பாட‌கிகளை விட‌ தமிழை அழகாக பாடுகிறார்

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த ஹரிகரன்,சித்ராவின் குரலில்,அருமையான வரிகளில் அமைந்த அருமையான பாட‌ல்

மலர்களே மலர்களே இது என்ன கனவா

மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனது உள்ளம்

பெருகியதே விழி வெள்ளம்

விண்ணோடும் நீதான்

மண்ணோடும் நீதான்

கண்ணோடும் நீதான்

ஆஆஆ....

(மலர்களே..)

மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து

மார்பில் ஒளிந்து கொள்ள வரவா

மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்

கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா

மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா

நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே

உன் பேரை சொன்னால் போதும்

நின்று வழி விடும் காதல் நதியே நதியே

என் ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா

(மலர்களே..)

பூவில் நாவில் இருந்தால் காற்று வாய் திறந்தால்

காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்

நம்மில் கவி எழுதி வீசும்

வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே

வானோடு நீளம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே

உன்னோடு உயிரை போலே புதைந்து போனது தான் உறவே

மறக்காது உன் ராகம் மரிக்காது என் தேகம்

உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா

(மலர்களே..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்;ரிதம்

இசை ஏ ஆர் ரஹ்மான்(2000)

குரல்: உன்னிகிருஷ்ணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குழுவினர்

வரிகள்: வைரமுத்து

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

தாவணிக் குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய

நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்

என் பெண்மை திறண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

இந்தப் பாட்டைஉன்னிக் கிருஸ்ணனின் குர‌லுக்காக எத்தனை தட‌வையும் கேட்கலாம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேதம் புதிது படத்தில் இருந்து தேவேந்திரன் :unsure: இசையில் எஸ்பிபி,சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்

'கண்ணுக்குள் நூறு நிலவா' மிகவும் விருப்பமான பாடல்களில் ஒன்று.

தேவேந்திரன் 'மண்ணுக்குள் வைரம்' படத்திற்கும் இசையமைத்தார். நல்ல இசையமைப்பாளர். இளையராஜா எனும் சுனாமியில் அடிபட்டுப் போனவர்களில் ஒருவர்

வேதம் புதிது படத்தில் இருந்து தேவேந்திரன் :unsure: இசையில் எஸ்பிபி,சித்ரா ஆகியோர் பாடியுள்ளனர்

அழகான பாடல் :)

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை

ஏனோ விடையின்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 1

பெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலி

ரகல பத்நா உமா பார்வதி

காளி வைபவதி சிவாத்ரி நயனா

காத்யயினி பைரவி சாவித்ரி

நவ யெளவன சுப ஹரி

சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...

ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்

கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்

வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா

ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது

வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

பெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 2

பெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்

இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்

இவன் மனம் புரியாலயா

பெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்

பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

ஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்

இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது

பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை

ஏனோ விடையின்னும் வரவில்லை

ஆண் : ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

ஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தது இசைஞானி என்று நினைத்திருந்தேன்...நேற்றுத் தான் தேவேந்திரன் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று தெரியும்...குட்டி பாடல் வரிகளை எழுதினதிற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.