Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பங்கேற்பதற்கு இந்திய துடுப்பாட்டச்சபை தடைவிதித்துள்ளது: இந்திய மகிந்தவுக்கு கொடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கையாகுமா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-06-27 22:36:58]

இந்தியாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆடும் ஆட்டத்தின் நேரடி விளைவாகவே இந்திய துடுப்பாட்ட அணி வீரர்களை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்திய துடுப்பாட்டச்சபை மறுத்திருக்கக் கூடும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது. சிறிலங்கா துடுப்பாட்டச்சபை நடத்தவுள்ள, சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பங்கேற்பதற்கு இந்திய துடுப்பாட்டச்சபை தடைவிதித்துள்ளது.

இந்தியாவின் இந்த முடிவு சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய துடுப்பாட்டச் சபையுடன் சிறிலங்கா துடுப்பாட்டச்சபை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்திய போதும் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

இந்திய வீரர்களை அனுப்ப முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்தநிலையிலேயே இது அரசியல் ரீதியான முடிவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அயல்நாடான இந்தியாவின் புவிசார் அரசியல் பிணைப்பையும், விருப்பங்களையும் புறக்கணித்து சீனாவுடன் சிறிலங்கா நெருங்கிச் செல்வது இந்தியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.

அத்துடன் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் அழுத்தத்தையும், சிறிலங்கா அதிபர் நிராகரித்துள்ளார். இந்தநிலையிலேயே இந்திய துடுப்பாட்ட வீரர்களை சிறிலங்காவுக்கு அனுப்ப முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது.

எனவே இதன் பின்னணியில் அரசியல் ரீதியான முடிவுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிறிலங்காவுக்கு முதலாவது எச்சரிக்கையை வழங்கும் விதத்திலேயே இந்தியா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் ஆங்கில ஊடகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, இந்தியாவின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய வீரர்கள் சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளுக்கு தேவையில்லை. அவர்கள் இல்லாமலேயே போட்டிகள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=45570&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரத்து பவார் .. பிரியா கிடைச்சா பினாயில் கூட குடிப்பவன்.. வரும்படி குறைவு ...அதனால்தான் அனுப்பவில்லை.. இதைபோய் ஆய்வு அரசியல் என்று கற்பனை குதிரைகளை ஓட்டி விடாதிங்கப்பா.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆடும் ஆட்டத்தின் நேரடி விளைவாகவே இந்திய துடுப்பாட்ட அணி வீரர்களை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்திய துடுப்பாட்டச்சபை மறுத்திருக்கக் கூடும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.

உள்ளுக்குள் எதோ விவகாரம் உள்ளது தேடினால் உண்மை வெளிவரும்.

Edited by தமிழ் அரசு

அதில் என்ன சந்தேகம்? இது முதலடி. அடுத்தது விமானத் தாக்குதலாகவும் இருக்கலாம். :lol: :lol: :lol: :lol: :lol:

இந்திய விமானங்கள் இலங்கை வான் பரப்பிற்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்தப்படும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சரித்திரத்தில் இந்தியா எவரையும் எச்சரித்தது கிடையாது!!!

மற்றவரை எச்சரிப்பதற்கு, ஒரு தார்மீக அடித்தளம் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

சரத்து பவார் .. பிரியா கிடைச்சா பினாயில் கூட குடிப்பவன்.. வரும்படி குறைவு ...அதனால்தான் அனுப்பவில்லை.. இதைபோய் ஆய்வு அரசியல் என்று கற்பனை குதிரைகளை ஓட்டி விடாதிங்கப்பா.. :)

புரட்சி சொல்வதுபோலதான் என நினைக்கிறேன்..! ஏற்கனவே இந்திய விளையாட்டுக்காரருக்கு நேரம் போதவில்லை.. இலங்கைக்குப் போனால் அடுத்தது பாகிஸ்தான், பங்களாதேஷ் எண்டு ஆரம்பிப்பான்கள்..! பிறகு ஐபிஎல் கோவிந்தா..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் இந்தியா துடுப்பாட்ட வாரியம் சர்வாதிகார அணி.பணபலம் பொருந்திய அமைப்பு. தாங்கள் நினைத்ததினைச் செய்வார்கள். மற்றைய அணியினரைப்பற்றிக் கவலைப் படமாட்டினம்.

இந்த மறுப்பு இந்திய உயர் மட்டரக குழுவின் இலங்கை விஜயத்துக்கு முன்னரே சொல்லப்பட்டது.

இதையும் அரசியலாக்கி தமிழனை ஏமாற்ற முனைகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.