Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் வன்னியா? காஷ்மீரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரா நகரும், சத்தியாவாநிமுத்து நகரும் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள். அங்கே ஆயிரக்கனக்கில் ஏழை மக்களும், தலித் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடம் பிரபல மன்றோ சிலை அருகே உள்ளது. இந்திய ராணுவம் அந்த வட்டாரத்தில் தனது அலுவலகங்களை வைத்திருக்கிறது. அதன் அருகே ராணுவத்தில் வேலை செய்பவர்களது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

அதை ” குடிமக்கள் வாழும் இடம்” என்று ராணுவத்தினர் அழைக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று மதியம் அந்த சம்பவம் சென்னையையே குலுக்கியது. 13 வயது பய்யன் ஒருவன் துப்பாகியால் சுடப்பட்டான் என்பதுதான் அந்த செய்தி. அந்த பய்யன் “மாநகராட்சியில் அடிமட்ட பணியாளரான ஒரு பெண்ணின்” மகன். “சுத்தப்படுத்தும் பணிப்பெண்ணின் மகனை” சுத்தமாக படுகொலை செய்த ராணுவம் என்றுதான் செய்தியை கேள்விப்பட்டோம்.

அந்த பகுதிக்கு விரைந்த போது, ஊடகவியலாளர்களின் கூட்டம் தவிர அங்கே நின்ற குடிசை வாழ் மக்கள் நமது காவல்துறையால் அப்போதுதான் “தடியடி” மூலம் கலைக்கப்பட்டுல்லார்கள் என்று தெரிய வந்தது. “பாதாம் மரத்தில்” காய் பறிக்க எறிய பையனை ராணுவத்தினர் சுட்டு விட்டனர் என்று கேள்விப் பட்டோம். அங்கே வந்த மாநகர ஆணையர் ஊடகங்களை சந்திக்காமலேயே பறந்து விட்டாராம். துணை ஆணையர் தாமரைகாண்ணன் சந்தித்தாராம். அடிபட்டதுதான் நடந்தது என்றாராம். சுட்டுக் கொல்லப்பட்டதை மறைத்தாராம். அடிபட்ட பையனை அவனது உறவினரே மருத்துவமனை எடுத்து சென்றனராம். ராணுவம் அதற்கு கூட உதவவில்லை. அதற்கு பின், ஒரு “ராணுவ அதிகாரி” அங்கே வந்தார். சுவற்றுக்கு வெளியே, சுதந்திரம் இல்லாத ஊடகவியலாளர்கள் காத்திருக்க, அந்த அதிகாரி சுவற்றுக்கு உள்ளே இருந்தே பேசினார். ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதித்து, அவர்களிடம் உரையாட அந்த திகாரிக்கு மனம் இல்லை. கம்பிகள் வழியே காமெராக்களை ஊடகவியலாளர்கள் நுழைத்துக் கொண்டு, ராணுவ திகையின் நேர்காணலை பதிவு செய்தனர்.

” இது ராணுவ குடிமக்கள் வாழும் பகுதி. இங்கே ராணுவத்தினர் யாரும் துப்பாக்கி இல்லாமல்தான் பாதுகாப்பு பணி செய்து வருகிறோம்” என்றார். ” அங்கே பொய் வாசலில் பாருங்கள். எங்கள் காவலர்கள் கையில் தடி தான் இருக்கும். நாங்கள் இங்கே துப்பாக்கி இல்லாமல்தான் காவல் காக்கிறோம்” என்றார் அந்த பிரிகேடியரான சஷி நாயர். ” இங்கே சில சிறுவர்கள் போயிருக்கிறார்கள். அவர்கள் சுவர் எரிக் குத்தித்து, இந்த வாதாம் மரத்திலிருந்து எதையோ பறிக்கவோ, அல்லது உள்ளே வந்து விளையாடவோ முயற்சித்திருக்கலாம்” என்றார். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டிருக்கிறது” மற்ற பையன்கள் ஓடிப் போய் விட்டார்கள். ஒரு பையன மாத்திரம் உள்ளேயே மாட்டிக் கொண்டான். அவன் சுருண்டு விழுந்துவிட்டான். அவனை அவனது உறவினர்கள் மருத்துவம்னனைக்கு எடுத்து சென்று விட்டனர்.” இவாறு அந்த ராணுவ அதிகாரி கூறினார்.

“அதற்கு பிறகு மருத்துவமனையிலிருந்து அந்த சிறுவனுக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது என்று காவலர்கள் கூறினார்கள்” “யார் சுட்டார்கள் என்று தெரியவில்லை. இங்குள்ள காவல்துரையாகவும் இருக்கலாம். யார் குற்றவாளியானாலும், நாங்கள் விடமாட்டோம். ஏன் மகன் அடிபாட்டதுபோலத்தான் நான் உணர்கிறேன்” என்று ஒரு அரசியல்வாதியைப் போல அந்த ராணுவ பிரிகேடியர் சஷி நாயர் கூறினார். இந்த இந்திய ராணுவம் “தமிழர்களையும், தமிழ்நாட்டு மக்களையும், என்ன ணைத்துக் கொண்டு இருக்கிறது? இங்கொரு காஷ்மீரை உருவாக்கவோ, அல்லது வன்னி பகுதியை உருவாக்கவோ, அல்லது வட கிழக்கு மாநோலத்தைப்போல கையாளவோ முயற்சிக்கிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.

— TSS MANI

Short URL: http://meenakam.com/?p=27432

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கியால் சுட்டு சிறுவன் கொலை;

5 லட்சம் உதவித்தொகை: ஜெ. அறிவிப்பு

சென்னையில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சிறுவன் தில்சனை இழந்த வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

மரத்தில் ஏற முயன்ற 13 வயது சிறுவன் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல என்பதை பாதுகாவலர் எளிதில் தெரிந்து கொண்டிருக்க முடியும்.

இருப்பினும், அந்த சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த ராணுவ வீரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=57168

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் பிரச்சினைகளைத் தூண்டி இராணுவத்தைக் கொண்டு அடக்கித் தமிழ் உணர்வுகளை மழுங்கச் செய்யும் முயற்சியோ?

சிங்களவன் மீனவனைச் சுடும்போது வாழாவிருந்ததும் இத்தகைய சதியின் ஒரு அங்கமோ என எண்ணத் தோன்றுகிறது. :unsure: தமிழக உறவுகள்தான் சுட்டால் சுட்டுவிட்டுப் போ என்று இருந்துவிட்டார்களோ??!! :rolleyes:

தமிழனை எங்கேயும் நிம்மதியாய் வாழ விடமாட்டார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

600 மீனவரை கொன்ற, சிங்கள ராணுவத்தை நோக்கி.... துப்பாக்கியை உயர்த்த முடியாத இந்திய ராணுவம்.

13 வயது பையன் மேல் தனது வீரத்தை காட்டியுள்ளது. வெட்கம் கெட்டவங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கெல்லாத்துக்கும் காரணம் எமக்கென்று

ஒரு (தமிழ் ஈழம் ) நாடு இல்லாததே!

Edited by தமிழ் அரசு

தனிநாடு கேட்க்கவேண்டும் அதன் பின்தான் டெல்லி அதிகாரவர்க்கத்துக்கு புரியும்

சிறுவனை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இரங்கல்கள்.

உண்மையில் ஆயுதம் தாங்காத இராணுவம் என்றால் ஏன் ஒரு சிறுவனை சுடல் வேண்டும்? இதுவே ஒரு கிந்திய சிறுவனாக இருந்தால் டெல்லி எவ்வளோவோ 'ஆராய்ச்சிகள்' செய்து இருக்கும். தமிழ் சிறுவன் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=6V3h25QQGcc

சிறுவனின் குடும்பத்திற்கு இரங்கல்கள்.. போக இவனுங்கள் (கிந்தி மிலிட்டரி மேன்ஸ்) பட்டபிராமு காஞ்சிபுரம் இந்த கூடாரஙகளில் குடிப்பவர்கள் செய்யும் அலப்பரைக்கு அளவே கிடையாது.. அக்கம் பக்கம் ஊர்களில் சென்று கள்ளுகுடிப்பது.. மாமூல் வாங்குவது(கள்ளு இறக்க..போலீஸ் காரனுக்கு மாமூல் குடுக்கிற சரி .. இவனுங்களுக்கு என்ன மாமூல்?).. கட்டபஞ்சாயத்து .. மிரட்டுதல்.. அவனுங்கள சொல்லி தப்பில்லை.. இங்க எவனுக்கும் போலீசுக்கும் ஆர்மிக்கும் வித்தியாசமே தெரியல.. எவன் காக்கி சட்டை போட்டிருந்தாலும் வணக்குங்க சாமி .. செக்கிரியுட்டி நேப்பாள் கூர்க்காவுக்கும் இதே நிலைமைதான்.. இதல்லாம் கல்வியறிவு பெற்று பகுந்தாய்ந்து செய்து ... உலகம் இருக்கற ஸ்பீடுல இதெல்லாம் ரொம்ப லேட் பிக்கப்... <_< <_<

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

600 மீனவரை கொன்ற, சிங்கள ராணுவத்தை நோக்கி.... துப்பாக்கியை உயர்த்த முடியாத இந்திய ராணுவம்.

13 வயது பையன் மேல் தனது வீரத்தை காட்டியுள்ளது. வெட்கம் கெட்டவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திடம் இந்திய ராணுவம் ' பயங்கரவாத ஒழிப்பு' பற்றி ஆலோசனை கேட்டதன் விளைவாக இருக்கலாம்!

சிறுவனை இழந்து தவிக்கும் குடும்பத்திக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

இது இன்னுமொரு பாரிய பிரச்சனையின் ஆரம்பமாகக் கூட இருக்கலாம்!!!

Edited by புங்கையூரன்

சிறுவனை சுட்டது ராணுவ அதிகாரி? திங்கள், 4 ஜூலை 2011( 19:09 IST )

சென்னையில் இந்திரா நகர் சிறுவன் தில்ஷானை சுட்டுக் கொன்றவர் ராணுவ அதிகாரி என்று சிறுவன் தில்ஷானுடன் சென்ற மற்ற இரண்டு சிறுவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

காரில் வந்த ஒரு அதிகாரி சிறுவன் தில்ஷானை சுட்டதை தாங்கள் பார்த்ததாக அந்தச் சிறுவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

சிறுவன் சுடப்பட்ட வளாகத்தில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சிறுவன் சுடப்பட்டதற்கான ஆதாரங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவன் சுடப்பட்ட தோட்டா எந்த வகையிலானது, அந்த வகைத் தோட்டாவை பயன்படுத்த அதிகாரம் உள்ளவர்கள் யார் யார் என்ற ரீதியில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/04/1110704054_1.htm

அங்கும் சுடப்பட்டு இறந்து போனது

ஒரு தமிழ் சிறுவன்.

அதுவும் ஏழைச்சிறுவன்.

பாதாம் மரத்தில் காய் பறித்துச் சாப்பிட ஏறிய போது...

கொல்லப்படுகிறான்.

அயல் நாட்டு பகைவர்களிடமிருந்து

மக்களைக் காக்கவேண்டிய துப்பாகியால்

சொந்த நாட்டு பசித்தவனைச் சுடும் கொடுமை.

தான் பெற்ற பிள்ளையைப் போன்றுதானே

அந்தப் பிள்ளையும் என்று நினைத்தானா பாதகன்?

இன்று இவனுக்கு அஞ்சலி செய்வோம்...

நாளைக்கோ மறுநாளோ இன்னொருவன்...

இன்னும் எத்தனை உடன் பிறப்புக்களின் இறப்புக்களுக்கு

வெற்று வாயால் இலவச அஞ்சலிகள்?

உண்மையில் எனக்கு புரியவில்லை.

மிருகங்களை வதை செய்பவர்களை

சட்டம் போட்டு தண்டிக்கும் நாடுகள்,

இந்த ஈனத்தமிழன் செத்தால் குரல் கொடுக்க

பத்து முறை யோசிக்கிறார்களே.

தமிழினம் சாகப் பிறந்த இனமா?

அழுவதைத் தவிர எங்களுக்கு உரிமை எதுவும் இல்லையா?

சிறுவன் செத்ததுக்கு என் இரங்கலும்.. அதுக்கு 5 லெச்சம் ரொக்கம் கெடச்சதுக்கு கங்கிராஜுலேஷனுமுங்கோ

கொலைக்கு காரணமான கொலைகாறனை கைது செய்து தூக்கில் போடாமல்.. காசை கொண்டு வாயை அடைக்கும் அன்னை ஜெயலிதாவின் செயலை வன்மையா கண்டிக்கிறனுங்கோ.. போகிற போக்கில தமிழ்நாட்டுகாரனுகள் மிலிட்டரி ஷூட்டிங் ரேஞ்சில் போயி குந்தியிருக்கபோரானுகள்.. எங்கயாவது சன்னம் படாதா எண்ட தமிழனுக்கெ உரிய குண்டக்கமண்டக்க நப்பாசையுடன்... :lol:

சிறுவனை சுட்ட நபரை ஒப்படைக்க வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 6- சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற நபரை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தில்லி செல்வதற்காக இன்று காலை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

"சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் மன்னிக்க முடியாதது. சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக அவரை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், ராணுவத்தின் தலைமை கட்டளை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்." என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&artid=442555&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

சென்னையில் சிறுவன் தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் பாதுகாப்புச் செயலர் தாக்கீது அனுப்பியுள்ளது.

சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள இராணுவக் குடியிருப்பு வளாகத்தில், மரத்தில் வாதாம் கொட்டை பறிக்க முயன்ற சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நநிலையில், சிறுவனை சுட்டுக்கொன்றது இராணுவ அதிகாரி ஒருவர்தான் என்று விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில்,சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டெல்லி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில் தில்ஷன் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பாதுகாப்புச் செயலர் மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் கமிஷனர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1107/06/1110706059_1.htm

தமிழ்நாட்டில்த்தான் தமிழனை யார் கொன்றாலும் கடிதத்தமோ தந்தியோ நத்தை வேகத்தில் ஊரும்.

இதுவே வேறு மாநிலமாக இருந்திருந்தால் கொன்றவனை உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.