Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள படைத்துறை ஊடக குழுவால் தயாரிக்கப்பட்ட மாற்று சனல்4 காணொளி

Featured Replies

சனல்4 காணொளியில் பயன்படுத்தப்பட்ட காணொளி பகுதியின் அசல் ஒளி நாடா சிலவற்றை தாம் கண்டு பிடித்துவிட்டதாக சிங்கள அரசு நேற்று முந்தினம் வெளியிட்டது. அந்த ஒளி நாடா சிங்களப்பாதுகாப்பு படையின் ஊடக பிரிவினரால் டப் செய்யப்பட்டுள்ளதாக தென் பகுதி செய்திகள் கூறுகின்றன.

.

முதலாவதாக அரசாங்கம் சனல்4 காணொளியை பொய் என்றும் அது வெளி நாட்டில் படம் பிடிக்கப்பட்டது என்றும் கூறியது.

.

ஆனால் தற்போது சம்பவம் உண்மைதான் ஆனால் அது புலிகள் தான் அப்படி செய்தார்கள் என கூறுகின்றது.

.

ஆனால் அரசாங்கம் சிங்கள குரலை தமிழ் குரலாக மாற்றும் போது வடக்கு கிழக்கு தமிழர்களின் சாயலை ஒத்த டப்பிங்கை செய்ய மறந்து விட்டது.

.

எடுத்துக்காட்டாக வன்னியில் யாரும் படம் பிடிக்கிறாயா என சொல்வதில்லை வன்னியில் அல்லது வடக்கு கிழக்கில் படம் எடுக்கிறாய் என்றே பேசுவார்கள்.

.

அடுத்ததாக பூட்சை களட்டு என சொல்லப்படுகின்றது ஆனால் வடக்கு கிழக்கில் யாரும் அப்படி பேசுவதில்லை சப்பாத்து அல்லது சூ எனவே சொல்வார்கள்.

அடுத்து சனல்4 இன் அசல் காணொளி துண்டுகளை அப்படியே சனல்4 தொலைக்காட்சிக்கு கொடுத்தவர்கள் வெளினாட்டில் மஹிந்தவின் ஆக்கிரமிப்பால் புலம்பெயர்ந்த ஊடக குழுவினர். இவர்கள் சில படைத்துறை அதிகாரிகளிடம் இருந்து பெற்ற ஆதாரங்கள் எல்லாமே உள்ளன.மேலும் அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட படை சிப்பாய்களின் பெயர் விபரம் உட்பட அனைத்தும் அடையாளங்காணபப்ட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

எல்லாவற்றுக்கும் மேலாக பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறிய கதையாக.. சனல்4 காணொளி உண்மையில் நடந்த விடயம்தான் என அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது.

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை, இந்தப் படத்தை தயாரித்துக் கொடுத்திருக்கலாம்.

இதெல்லாம் நம்பக் கூடியதென்றா இவர்கள் நினைக்கிறார்கள்.?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் ஒரு பொய்யர் என்று மிண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்..! இவற்றை முன்வைத்து காலங்காலமாக இவர்கள் பொய்யைத்தான் கூறிவருகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் ஒரு பொய்யர் என்று மிண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்..! இவற்றை முன்வைத்து காலங்காலமாக இவர்கள் பொய்யைத்தான் கூறிவருகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம்..! :rolleyes:

பொய்யும் நடிப்பும் தொடர்ந்து வெல்வதால் அதையே நம்புகிறார்கள் போலும்.

உண்மையும் சத்தியமும் ஒரு நாள் வெல்லும்

பார்க்கலாம்

அப்போது உலகம் தமிழனை ஏற்கிறதா என்று....?

Journalist challenge

Meanwhile, a group of exiled Sri Lankan journalists which has also publicised the controversial mobile phone footage has challenged the government to submit its Tamil-language version for expert authentication.

Sanath Balasuriya of Journalists for Democracy in Sri Lanka (JDS) asked how the government could declare its validity when it had previously alleged that the video was acted and faked.

http://www.bbc.co.uk/news/world-south-asia-14012650

http://www.dailymirror.lk/news/12260-exiled-journalists-provide-video-report.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தின் வீடியோ காட்சி போலியானது என JDSதெரிவித்துள்ளது.

05 ஜூலை 2011

Bookmark and Share

இலங்கை அரசாங்கத்தின் வீடியோ காட்சி போலியானது என JDSதெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் உரையாடல்களோடு கூடிய படுகொலைகள் குறித்த புதிய காணொளி போலியானது என இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்தக் காணொளிக்காட்சி முதன் முதலில் 2009 செப்ரம்பர் 18ஆம் திகதி அரசாங்கத்திற்கு ஆதரவான இணையத்தளமொன்றில் வெளியாகியிருந்தது என்றும் அரசாங்கம் அந்தக் காணொளிக்காட்சியின் மெய்ம்மைத் தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு அனுப்ப வேண்டுமெனவும்; இந்த அமைப்பு கோரியுள்ளது.

விடுதலைப் புலிகளால் சிறிலங்காப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களே அக்காணொளிக்காட்சியில் உள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் இப்புதிய கூற்று போர்க்குற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்ற அதன் முன்னைய கூற்றுக்களைப் பொய்யாக்குகிறது என இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் பேச்சாளர் சனத் பாலசூரிய பிபிசி சிங்கள சேவையிடம் கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறந்த நடிககர்களைக் கொண்டு போலியாக உருவாக்கப்பட்டதே இலங்கை அரசாங்கத்தின் நிபுணர்குழு என்ற போர்வையில் வெளிவந்த போர்க்குற்றம் தொடர்பான காணொளி எனவும் ஆனால் அவ்வாறான சம்பவங்கள் எவும் உண்மையில் இடம்பெறவில்லை எனவும் அரசாங்கம் அண்மையில் தெரிவித்துள்ளது. தற்போது அரசாங்கம் அது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் என்று இதனைக் கூறுமாயின் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றுள்ளமையை அரசாங்கம் ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பால் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட காணொளித் தொகுப்பும் இலங்கை அரச படைகளால் கட்டத்திற்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்ட – சிங்கள உரையாடல்களைக் கொண்ட, இதே காட்சிகளை உள்ளடக்கிய காணொளித் தொகுப்பே.

அரச படையினர் தம்மிடம் சரணடைந்த அரசியல் கைதிகளைக் கூட்டாகப் படுகொலை செய்யும் காட்சித் தொகுப்பை உள்ளடக்கிய காணொளியை வெளியிட்டுள்ளமையே சனல் 4 தொலைக்காட்சிக்கெதிரான இலங்கை அரசாங்கத்தின் எதிர் பரப்புரைக்கான அடிப்படையாகும்.

இந்தக் காணொளியின் விரிவான பகுதி சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், கூட்டுப்படுகொலைகள் எனபவற்றுக்கு எதிரான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான கிறிஸ்தோபர் கெய்ன்ஸ்சினால் பார்வையிடப்பட்டதோடு, அவை உண்மையானதுதான் என நிரூபணம் செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள காணொளித் தொகுப்பில் உள்ளதுபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றங்களை மேற்கொண்டுள்ளனரெனின் தமிழில் உரையாடல்களைக் கொண்ட விரிவான பகுதியை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு சனத் பாலசூரிய சவால் விடுத்துள்ளார்.

ஆனால் இலங்கை அரசுக்கும், இராணுவசத்திற்கும் எதிராக போர்க்குற்றம் செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஆவணப்படம் பொய்யானது என நிரூபிப்பதற்காக இந்த ஆவணப்படக் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி இடம்பெற்றுள்ள நிகழ்வின் ஒரு பக்கத்தையே சுட்டிக்காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டனர். அதனை சனல் 4 கணக்கில் எடுக்கவில்லை. எனவும் இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63641/language/ta-IN/article.aspx

இந்திஸ்தான் டைம்ஸ் - ' சிங்கள நாட்டின் வீடியோ மூலம் அதிகளவான மக்கள் சனல் நாலு பற்றி அறிந்துகொண்டுள்ளார்கள் '

While trying an offensive against the British channel, the government has ensured that more people in this country now know that unimaginable acts of cruelty, war crimes in other words, were committed as the fight ended.

The government shifted the blame entirely on the Tigers but it’s still totally open to debate on whose version is correct – a sensationalist channel’s or a government’s whose awkward trysts with truth have been patchy at best.

Human Rights Watch’s Elaine Pearson recently wrote in Groundviews, a citizens’ journalism initiative: “but it is wrong for the Sri Lankan government to dismiss this compelling footage as “fake.”…the executions footage has been authenticated by four independent experts who have no connection to Sri Lanka.”

Interestingly, the defence ministry continues to highlight a story on its website titled `Channel 4 video – A blatant lie’.

http://www.hindustantimes.com/world-news/srilanka/Whose-language-is-it-anyway/Article1-717581.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.