Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவைக்கு நிதி சேகரிக்க நடைபெற்ற 'The Tribute' நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் 16 நாடுகளில் உள்ள சில அமைப்புக்களின் ( முக்கியமாக பிரித்தானியா தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா தமிழ் காங்கிரஸ் , கனடா தமிழ் காங்கிரஸ் , சுவிஸ் தமிழ் பேரவை, மலேசியா தமிழ் பேரவை ,அமெரிக்கா தமிழ் அரசியல் செயலவை) உதவியுடன் உலகத்தமிழர் பேரவை ஆகஸ்ட் 2009 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ரொபட் பிளெக், சோனியா காந்தி, எரிக் சொல்கைம் உட்பட முக்கிய தலைவர்களுடன் அண்மைக் காலங்களில் பேச்சுவார்த்தைகள் நடாத்தியிருந்தார்கள். சிறிலங்காவின் கொலைக்களம் சனல் 4 தொலைக்காட்சியில் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களும் உலகத்தமிழர் பேரவையினர் தான். அத்துடன் தாயகத்தில் போரினால் ஆண்களை இழந்த குடும்பங்களுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் மனித நேய உதவிகளை உலகத்தமிழர் பேரவை செய்து வருகின்றது. இருக்கிற குறைந்தளவு நிதியுடன் சிறப்பாக சேவையாற்றும் உலகத்தமிழர் பேரவைக்கு நிதி சேகரிக்க சென்ற சனிக்கிழமை சிட்னியில் 'The Tribute' என்ற இசை நிகழ்வு நடைபெற்றது.

ஈஸ்டன் எம்பயர் என்ற உள்ளூர் அமைப்பினர் இசை நிகழ்ச்சியை நடாத்தினார்கள். பல்வேறு வாத்திய இசைகள் முழங்க இளையராஜாவினதும் , ஏர். ரகுமானின் பாடல்களைப் பாடினார்கள். கடினமான பாடல்களை இழகுவாக இரசிக்கத்தக்கவிதமாக இவ்வளவு திறமை மிக்கவர்களா என்று பார்வையாளர்கள் மெய் மறந்து இரசிக்கும் படி பாடினார்கள். உலகத்தமிழர் அமைப்புக்கு உதவுவதற்காகவே இந்த நிகழ்வுக்கு நானும் சென்றேன். வி.ஐ.பி நுளைவிச்சீட்டினை வாங்கி சென்றேன். உலகத்தமிழர் அமைப்பினை சேர்ந்தவர்களில் ஒருவர் வி.ஐ.பி சீட்டினைப் பெற்றவர்களை முன்னிறுக்கைகளுக்கு கூட்டிக் கொண்டு இருக்க வைத்தார். அத்துடன் வி.ஐ.பி நுளைவுச்சீட்டினை உடையவர்களுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டது.

இசை நிகழ்ச்சிக்கு இடையில் உலகத்தமிழர் பேரவை பற்றிய விபரணம் காண்பிக்கப்பட்டது. சனல் 4 தொலைக்காட்சியில் வந்த ஜெனிவாவில் மனித உரிமை அமைப்புக்களுக்கு சிறிலங்காவின் கொலைக்களம் காண்பிக்கப்பட்ட காணொளி திரையில் காண்பித்தார்கள். ஆனால் இடையில் எதுவித அறிவுப்புமின்றி அக்காணொளி நிறுத்தப்பட்டு அடுத்த பாடல் அங்கு பாடப்பட்டது. இடைவேளையின் போது தேனீர் அருந்த சென்ற போது சிறிலங்காவின் டில்மா தேனீர் அங்கு விற்கப்பட்டிருந்தது. இடைவேளையின் பிறகு ஈழப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் ஏற்பட்ட அவமரியாதைக் குறைக்க கலைஞரினால் நடாத்திய செம்மொழி மாகானாட்டிற்காக ஏர்.ரகுமானால் உருவாக்கிய தமிழ் மொழிப்பாடல் திரையில் காண்பிக்கப்பட்டது.

இசை நிகழ்ச்சி முடிவடைந்த போது அறிவிப்பாளர் அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் சிறிலங்காவின் கொலைக்களம் காண்பிக்கப்படும் தகவலை சொன்னார். நிகழ்ச்சி முடிய வீடு சென்றவர்களுக்கு ABC தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் சிறிலங்காவின் கொலைக்களம் பற்றிய ஆங்கில துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தமிழரல்லாதவர்களுக்கு குடுக்க உலகத்தமிழர் அமைப்பினர் சொன்னார்கள்.

ஏன் திரையில் எதுவித அறிவிப்பும் செய்யாமல் சனல் 4 தொலைக்காட்சியில் வந்த ஜெனிவாவில் மனித உரிமை அமைப்புக்களுக்கு சிறிலங்காவின் கொலைக்களம் காண்பிக்கப்பட்ட காணொளி இடையில் நிறுத்தினார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. விசாரித்துப் பார்த்த போது இந்த நிகழ்ச்சியை உலகத்தமிழர் அமைப்பு நடாத்தினாலும், ஈஸ்டன் எம்பயர் அமைப்பு தான் இசை நிகழ்ச்சி, அறிவுப்புகள் செய்தார்கள். இசைக்குழுவில் ஈழத்தமிழர்கள், இந்தியர்கள், மலேசியத்தமிழர்களுடன் ஒரு சிங்களவரும் இருந்திருக்கிறார். அவர் தொடர்ந்து காணொளியை ஒளிபரப்பு செய்தால் தான் இசை வழங்க மாட்டேன். விலகி விடுவேன் என்று சொன்னதினால் ஈஸ்டன் எம்பயர் அமைப்பு அந்தக் காணொளியை நிறுத்தியிருக்கிறது. ஈஸ்டன் எம்பயர் அமைப்பு நடாத்திய இசை நிகழ்ச்சியை மெய் மறந்து இரசித்த மண்டபம் நிறைந்திருந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் என்னைப் போல பலர் உலகத்தமிழர் பேரவைக்கு உதவி செய்யத்தான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றோம். ஒரு இசைக்கலைஞர் விலகினால் இசையினை தொடர்ந்து நடாத்துவது கடினம் என்று ஈஸ்டன் எம்பயர் அமைப்பு சில வேளை இந்த முடிவினை எடுத்திருக்கலாம். இனிமேல் இந்த சிங்களக் கலைஞன் இந்த அமைப்பில் இருந்தால் என்னைப் போன்ற பலராலும் ஈஸ்டன் எம்பயர் அமைப்பு புறக்கணிக்கப்படும்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

. இனிமேல் இந்த சிங்களக் கலைஞன் இந்த அமைப்பில் இருந்தால் என்னைப் போன்ற பலராலும் ஈஸ்டன் எம்பயர் அமைப்பு புறக்கணிக்கப்படும்

இந்திய, சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இறந்த மக்களுக்கு அக வணக்கம் செய்வோம் என்றுதான் அனேகமான நிகழ்ச்சிகளில் சொல்வதுண்டு ஆனால் அன்று அகவணக்கம் செய்வோம் என்றுமட்டும் சொன்னார்கள்...மேடையில் சிங்கள மற்றும் இந்திய இசைகலைஞர்கள் இருந்தமையால்தானோ தெரியவில்லை.

என்னை பொருத்தவரை ஈஸ்டன் எம்பயரில் பிழை சொல்ல ஏலாது ...அப்பு ....அவுஸ்ரேலியா தமிழ்காங்கிரஸ்தான் முழுப்பொருப்பும் ஏற்க வேண்டும்...அவர்கள் பல நல்ல காரியம் செய்திருக்கலாம் ஆனால் அன்று அவர்கள் செய்த காரியம் மிகவும் பாரதுரமானது.

அவுஸ்ரேலியன் தமிழ்காங்கிரஸ் என்ன காரணத்திற்காக இளையராஜாவுக்கும்,ரகுமானுக்கும் முதல் மரியாதை(சமர்பணம்) செய்ய வேணும் என்றுதான் விளங்கவில்லை.

ஒருத்தர் சிம்பொனி வாசித்த கொம்பனாம்,மற்றவர் ஒஸ்கார் வாங்கின கொம்பனாம் உவையளை பாராட்ட அவுஸ்ரேலியா தமிழ்காங்கிரஸ் சிட்னியில் மேடை போட்டு கொடுத்தமைக்கு என்ன காரணம் என்றுதான் எனக்கு புரியவில்லை...

சனல் 4 தொலைக்காட்சியில் காட்டிய காட்சிகளால் நாங்கள் சந்தோசப்படுவது போல் அல்லவா அன்றைய நிகழ்ச்சியிருந்தது...

வழமைபோல் இசை வேறு அரசியல் வேறு என்று சொல்லாமல் நடந்த சம்பவத்திற்க்கு பகிரங்கமாக மன்ன்னிப்பு கேட்க வேண்டும்...

அவுஸ்ரேலியா தமிழ்காங்கிரஸ் தாயக மக்களின் அரசியல் மற்றும் புனர்நிர்மாணத்திற்க்காகதான் செயல்பட வேண்டுமே தவிர சிட்னியில்வாழும் எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் பொழுது போக்க, பைலா ஆட நிகழ்ச்சி நடத்த வேண்டிய அவசியமில்லை.

பணம் சேர்ப்பத்ற்குதான் இசைநிகழ்ச்சியை நடத்தியவர்கள் என்றால் அன்று அவர்கள் சனல்4 பற்றி பேசாமலிருந்திருக்கலாம்...

உங்கள் ஆதங்கள் நிச்சயம் உரியவர்களிடம் சேர்க்கப்படல் வேண்டும். ஏனெனில் இவை போன்ற பிழைகளை சுட்டிக்காட்டுவது எமது கடமை அதனால் தான் இவை போன்ற பிழைகளை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சிகளை ஒதுக்கிக் கொண்டே போவதால் நாங்கள் தித்து போவது தான் மிச்சம்.

எமது கருத்துக்களை அவர்கள் உள்வாங்கும் அளவுக்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை தயார்ப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நான் சிக்காகோவில் நிற்கிறேன்.உங்களுக்கு தனி மடல் அனுப்ப முடியாமல் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நான் சிக்காகோவில் நிற்கிறேன்.உங்களுக்கு தனி மடல் அனுப்ப முடியாமல் உள்ளது.

எனது தனிமடலில் 70க்கு மேற்பட்ட மடல்கள் இருந்ததினால் உங்களால் எனக்கு தனிமடல் அனுப்ப முடியவில்லை. எனினும் தற்பொழுது மடலில் சிலவற்றை அழித்து விட்டேன். நீங்கள் இனி தனிமடலில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நிகழ்வுக்கு நானும் சென்றேன். வி.ஐ.பி நுளைவிச்சீட்டினை வாங்கி சென்றேன். உலகத்தமிழர் அமைப்பினை சேர்ந்தவர்களில் ஒருவர் வி.ஐ.பி சீட்டினைப் பெற்றவர்களை முன்னிறுக்கைகளுக்கு கூட்டிக் கொண்டு இருக்க வைத்தார். .

அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.

:mellow:

Edited by காந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

, தமது இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ள பல உடைப்பு வேலைகளை முன்னெடுக்கிறது.

இதன் ஒரு அங்கமாக, மகிந்த இராஜதானிக்கு எதிராகப் போர்க் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முற்படும் தமிழ்த் தேசிய விடுதலையை விரும்பும் சக்திகளை பிளவுபடுத்த அல்லது அழிக்க, இத்தகைய சீர்குலைவு சக்திகள் தீவிரமாகத் தொழிற்படுவார்கள் என்பது உண்மை. இயல்பாகவுள்ள தனிமனித முரண்பாடுகளை ஊதிப் பெருப்பித்து நிரந்தரமான பிளவுகளை உருவாக்குவதே இவர்களின் திட்டம்.

தாமும் விடுதலையை விரும்பும் அணியென்று கூறியவாறு, மறைமுக நிகழ்ச்சி நிரலோடு செயற்படுவார்கள் சிலர்
. உருவாக்கப்படும் உள் மோதல்களில், தெரிந்தோ அல்லது தெரியாமலோ பங்கெடுக்கும் அடிப்படையில் விடுதலை உணர்வு கொண்ட தனிநபர்கள் சிங்களத்தின் பின்னால் நின்றவாறு அழிப்பு வேலைகளை மிகக் கச்சிதமாக முன்னெடுக்கும் இத்தகைய கும்பல்களை இனங்காணத் தவறுவதே மிகவும் சோகமானது.

நன்றி ...இதயச்சந்திரன்..யாழ்.கொம்

சில விடயங்களை நேரடியாக அறியக்கூடியவர் ஒருவர் தெரிவித்த சில விபரங்கள் :

இந்த நிகழ்வு முதலில் அனுபவம் குறைந்தவர்களால் நடாத்தப்பட்டது, தமது தவறுகளுக்கு அவர்கள் வருந்தும் அதேவேளை வருங்காலங்களில் இவை தவிர்க்கப்படும் எனவும் கூறினார்.

- ஏற்பாட்டாளர்கள் ஒரு ஒளிப்பதிவை தயாரித்திருந்தனர். அதில் சிங்கள இராணுவம் செய்யும் படுகொலைகள் இருந்தன.

- இசை நிகழ்ச்சியை தயாரித்தவர்கள் இரண்டாம் தலைமுறையினர். அவர்களில் பலருக்கு தாயக நிலைமைகள் முழுதாக தெரிந்திக்கவில்லை. இவர்களில் ஒருவர் சிங்களவர், அது ஏற்பாட்டளர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

நிகழ்வின் முடிவில் நேருக்கு நேராக ஒரு சந்திப்பு மேற்கொள்ளப்பட்டு நிலைமைகளை சகல தரப்பினரும் புரிந்துணர்வுடன் ஏற்றுகொண்டனர்.

எல்லாத்திலும் நாங்கள் பிழை பிடித்துக் கொண்டிருந்தமெண்டால் கடைசியில் ஒன்றும் காணமாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திலும் நாங்கள் பிழை பிடித்துக் கொண்டிருந்தமெண்டால் கடைசியில் ஒன்றும் காணமாட்டோம்.

பிழை என்று தெரிந்தால் அதை சொல்லத்தான் வேண்டும் ..மீண்டும் இப்படியான பிழைகள் நடப்பதை தவிர்க்க உதவியாக இருக்கும்..

மேலும் ஒரு சிங்கள இளைஞனால் 500க்கு மேற்பட்ட தமிழர்களை முட்டாள் ஆக்கமுடிந்திருக்கே...

தொலைக்காட்சி சேவைகளே இதை ஒளிபரப்பும் பொழுது ஏன் நாம் எமது மேடையில் ஒளிபரப்பமுடியாது,?எமது மேடையில் எமது அவலங்களை ஒளிபரப்பமுடியாமைக்கு காரணம் அவலத்தை ஏற்படுத்திய சமுகத்தினரில் ஒருவர்தான் ...

எல்லாம் சரி என்று கொண்டிருந்தாலும் ஒன்றும் காணமாட்டோம் :D

பிழைகளை நிச்சயம் இவர்கள் திருத்தி நடப்பார்கள் என எண்ணுவோம்.

உலகத்தமிழர் பேரவை என்றாலும், கூட்டமைப்பு என்றாலும், நாடு கடந்த அரசு என்றாலும், ஒரு சமூக சேவை அமைப்பு என்றாலும் - இவைக்காக தேவை நிறையவே உள்ளது.

உண்மையான தொண்டர்கள் பல இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியிலேயே தம்மால் முடிந்த அர்ப்பணிப்பை செய்கிறார்கள்.

பல வேலைத்திட்டங்களுக்கு பணம் தேவை. அதேவேளை சமூகத்தில் ஒரு பகுதியினரே இப்படியான தேவைகளுக்கு பணம் தருவர். ஒரு சிறிய அமைப்பாக செயல்படும் உலத்தமிழர் பேரவை பல திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் இருப்பதற்கு பணமும் ஒரு காரணம்.

உலக தமிழர் பேரவை அன்று செய்தது பிழை என்று சொல்லுறீங்களோ? நிகழ்ச்சி நடந்த நேரம் அந்த சிங்கள பெடியன் மட்டும் வெளியேறவில்லை அவருடன் சேர்ந்து சில நண்பர்களும் வெளியேறீர்களாம். அப்படி வெளியேறியிருந்தால் அன்று நிகழ்ச்சி தடைப்பட்டிருக்கும்.

அப்படி நடந்திருந்தால் எத்தானை பேர் இதேவாயால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை திட்டியுருப்பார்களென உங்களுக்கு கட்டாயம் தெரியும். அந்த 500 பேரில் எத்தனை பேரை கூட்டங்கள், ஊர்வலங்களில் காணுறனீர்கள். அதில் முக்காவாசிப்பேர் பொழுபோக்கிற்கு தான் வந்தவர்கள். காசு கொடுத்து வந்தம் இப்படி செய்து போட்டாங்கள் என்று திட்டிக்கொண்டு போயிருப்பார்கள். அன்று நிகழ்ச்சி முடியும் போது எத்தனை பேர் வாழ்த்தினார்கள் நிகழ்சியை நல்லாயிருந்துதென்று.

சிலவற்றை நாங்கள் மன்னிக்க பழகவேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

உலக தமிழர் பேரவை அன்று செய்தது பிழை என்று சொல்லுறீங்களோ? நிகழ்ச்சி நடந்த நேரம் அந்த சிங்கள பெடியன் மட்டும் வெளியேறவில்லை அவருடன் சேர்ந்து சில நண்பர்களும் வெளியேறீர்களாம். அப்படி வெளியேறியிருந்தால் அன்று நிகழ்ச்சி தடைப்பட்டிருக்கும்.

அப்படி நடந்திருந்தால் எத்தானை பேர் இதேவாயால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை திட்டியுருப்பார்களென உங்களுக்கு கட்டாயம் தெரியும். அந்த 500 பேரில் எத்தனை பேரை கூட்டங்கள், ஊர்வலங்களில் காணுறனீர்கள். அதில் முக்காவாசிப்பேர் பொழுபோக்கிற்கு தான் வந்தவர்கள். காசு கொடுத்து வந்தம் இப்படி செய்து போட்டாங்கள் என்று திட்டிக்கொண்டு போயிருப்பார்கள். அன்று நிகழ்ச்சி முடியும் போது எத்தனை பேர் வாழ்த்தினார்கள் நிகழ்சியை நல்லாயிருந்துதென்று.

சிலவற்றை நாங்கள் மன்னிக்க பழகவேண்டும். :)

நிச்சயமாக அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் முக்கால்வாசி பேர்க்கு மேல் இசை நிகழ்ச்சிக்காக டிக்கட் வாங்கவில்லை ,எமது இனத்தின் நற்காரியங்களுக்காகத்தான் அங்கு வந்திருந்திருந்தார்கள்..மேலும் அந்த இசைக்குழுவினர் பிரபலமான இசைகுழுவினர்

அல்ல..

நான் மகானோ ,புனிதனோ,காந்தியோ அல்ல மன்னிக்கவும் ,மறக்கவும்.....சாதாரண புறம்போக்கு புத்தன்.... :D

நிச்சயமாக அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் முக்கால்வாசி பேர்க்கு மேல் இசை நிகழ்ச்சிக்காக டிக்கட் வாங்கவில்லை ,எமது இனத்தின் நற்காரியங்களுக்காகத்தான் அங்கு வந்திருந்திருந்தார்கள்..மேலும் அந்த இசைக்குழுவினர் பிரபலமான இசைகுழுவினர்

அல்ல..

நான் மகானோ ,புனிதனோ,காந்தியோ அல்ல மன்னிக்கவும் ,மறக்கவும்.....சாதாரண புறம்போக்கு புத்தன்.... :D

புத்தன் நீங்கள் அடாவடிக்கு பதில் எழுதினால் நானும் பதில் எழுதேல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் நடந்தது

அண்மையில் சிட்னியில் ஒரு உள்ளூர் இசைக்கலைஞர்களை வைத்து ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. "ட்ரிபியூட்" எனும் பெயரில் இளையராஜா - ரகுமான் எனும் இரு பெரும் இசையமைப்பாளர்களுக்கான கவுரவ நிகழ்வாக இந்த நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டது. உலகத் தமிழர் அமைப்பினராலும், சவுத்தேன் எம்பயர் எனும் புத்தம் புதிய இசைக் குழுவினராலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டு டிக்கெட்டுக்களும் விற்கப்பட்டு வந்தன. சாதாரண குடும்பத்துக்கான அனுமதிச் சீட்டு 45 டாலர்கள். விசேட அனுமதிச் சீட்டுக்கள் இன்னும் சற்று அதிக விலை என்று மும்முரமாக விற்பனை நடைபெற்று வந்தது.

ஒருவாறு நிகழ்ச்சி நடக்கும் சனிக்கிழமையும் வந்து சேர்ந்தது. மண்டபம் நிறைந்த சனம். புதுமுகங்களும், பழக்கப்பட்ட முகங்களுமாக இசை நிகழ்ச்சியைத் தரிசிக்கக் காத்திருக்கும் தமிழர்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் கொல்லப்பட்ட தமிழீழ மக்களுக்காக ரெண்டு நிமிட நேரம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இளையராஜாவின் "ஜனனி ஜனனி" பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. உள்ளூர் பாடகர்களென்றாலும் அவர்கள் நன்றாகவே பாடினார்கள். இளையராஜா , ஏ. ஆர். ரகுமான் பாடல்கள் என்று மாறி மாறிப் பாடினார்கள். தென்னிந்தியத் தரத்திற்கு இல்லையென்றாலும், ஏதோ பரவாயில்லாமல் பாடினார்கள். ஒருவாறு இடைவேளை வந்தது.

இடைவேளையின்போது ஜீ. டீ. வீ இன் அனுசரணையுடன் ஒரு காணொளி காண்பிக்கப்பட்டது. அண்மையில் சனல் 4 நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஒளிநாடாபற்றியும், அதை அவுஸ்த்திரேலிய தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பவிருப்பது பற்றியும், இன்னும் உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகள் குறித்தும் விவரணப்படம் ஒன்று வெந்திரையில் ஓளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது. திடீரென்று அந்த விவரணப்படம் பாதியில் நின்றுவிட்டது. எங்களுக்குக் காரணம் புரியவில்லை. ஏதோ தொழிநுட்பக் கோளாறாக இருக்கலாம் என்றுதான் எல்லோரும் எண்ணினோம். ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூட தடங்கலுக்கான காரணத்தைச் சொல்லவுமில்லை, மீதிக் காணொலியை ஒளிபரப்பி முடிக்கவுமில்லை. வர்த்தக விளம்பரங்களைப் போட்டுவிட்டு நிகழ்ச்சியின் ரெண்டாம் பகுதிக்குப் போனார்கள்.

மீண்டும் மாறி மாறிப் பாட்டுக்கள், சில சொதப்பல்கள், குழுவினரின் அறிமுகம், குறும் திரைப்படம், தனிநபர் விலாசங்கள் என்று நிகழ்ச்சி போய் ஒருவாறு தாம் கஷ்ட்டப்பட்டு பயின்ற இறுதிப் பாட்டுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

சரி, நிகழ்ச்சியும் முடிந்து விட்டது, ஒருக்கா, அந்த விவரணப் படம் ஏன் இடை நடுவே முறிக்கப்பட்டது என்று விசாரிக்கத் தொடங்கினோம், கிடைத்த தகவல்கள் இவைதான்.

இந்த புத்தம் புதிய இசைக்குழுவின் உரிமையாளரான மலேசியாவைச் சேர்ந்த திரு என்பவர் தமிழ்த் தேசியத்து ஆதரவாளர்களுடன் போராட்டங்கள், தாயக நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தாலும் கூட அவர் சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒத்துபோவதுதான் சரி என்கிற கொள்கையை கொண்டிருப்பவர் என்று தெரிய வந்தது. இந்த சிங்களத்து விசுவாசம் அவரை ஒரு சிங்கள கித்தார் நிபுணரை தனது இசைக் குழுவில் அமர்த்தும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிரது. இந்த சிங்கள இசைக் கலைஞர் மேடையில் முழு நிகழ்ச்சி நடக்கும்போதும் இசை வழங்கினார். அவர் தனது இசைத் திறமையைக் காட்டுவதற்குத் தனது பெற்றோரையும் அழைத்து முன்வரிசையில் அமர்த்தியிருந்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்து தமது மகனின் வீர தீரச் செயல்களை ரசித்துக்கொண்டிருந்த பெற்றோரின் கண்ணில் இந்த விவரணப்படம் காட்டிய சனல் 4 சிங்களத்தின் கொலைக்களங்கள் தெரிந்ததும் வெறிகொண்டெழுந்து மேடையின் பின்னால்ப் போய் திருவின் கழுத்தைப் பிடித்து, "மரியாதையாக இந்த விவரணப் படத்தை நிறுத்து, அல்லது எங்கள் மகனைக் கூட்டிக்கொண்டு போய்விடுவோம் " என்று மிரட்டியிருக்கிறார்கள். தனது கித்தார் கலைஞர் சென்றுவிட்டால் தான் தொடர்ந்தும் நிகழ்ச்சி நடத்துவது எப்படி, அப்படி நிகழ்ச்சி நடத்துவது கஷ்ட்டமானால் தனது கன்னி இசைக் கச்சேரியே படுதோல்வியடைந்துவிடுமே என்று கலங்கிய திருவும் உடனேயே அந்த விவரணப் படத்தை நிறுத்தி, அந்த வீரச் சிங்களப் பெற்றோரின் காலைக் கைய்யைப் பிடித்து, "நான் நிப்பாட்டிப் போட்டன், தயவுசெய்து உங்கட மகனைக் கூட்டிக்கொண்டு போகாதேங்கோ" என்று கெஞ்சிக் கூத்தாடி அவர்களை சாகவாசப் படுத்தியிருக்கிறார்.

மேடைக்கு முன்னாலிருந்து நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான தேசிய பற்றுள்ள தமிழ்ச் சனம் இந்த விளையாட்டெல்லாம் நடப்பது தெரியாமல், "ஏதோ டெகினிக்கல் புரொப்ளம் போல கிடக்குது, சரி பிறகு போடுவாங்கள் தானே" எண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு இருந்திருக்கிறோம்.

வெறும் 3 சிங்களவர்கள் மட்டுமே சேர்ந்து நூற்றுக்கணக்கான தேசியப் பற்றாளர்கள் ஒழுங்குசெய்த இசை நிகழ்ச்சியை தமது நோக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளியே சென்றும் தமது வீர தீரச் செயலை தமது சிங்கள வட்டங்களில் சொல்லிப் பாடியிருக்கிறார்கள். மேடைக்குப் பின்னால் நடந்தது யாருக்கும் தெரிய வராது என்றிருந்த திரு மற்றும் அவரது குழுவும் இப்போது என்ன செய்வதென்று விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

இதேபோன்று இன்னொரு பிரபல சிட்னித் தமிழ் இசைக்கலைஞரும் ( முன்னால் ரூபவாகினி தமிழ்ச் சேவையின் பணிப்பாளர், அருந்ததி சிறீரங்கநாதனின் மகன்) சிங்கள இசைக் கலைஞரை தனது குழுவில் பிரதம இசைக் கருவி வாசிப்பவராக வைத்திருக்கிறார். இவரும் திருவைப் போலவே சிங்களத்துடன் அனுசரித்துப் போக வேண்டும் என்கிற கொள்கையைக் கடுமையாக கடைபிடிப்பதோடு மட்டுமல்லாமல், சில தேசியப் பற்றாளர்களுடன் அவ்வப்போது கருத்து மோதலிலும் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இவரையே தவறாமல் ஒவ்வொரு வருடமும் யாழ் இந்துகல்லூரி பழைய மாணவர் சங்கம் தாம் நடத்தும் கீதாஞ்சலி நிகழ்வுக்கு அழைத்து கவுரவப் படுத்துகிறது.

சிலவேளை இசைக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வார்களோ என்னவோ, எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.

ஆக, இவர்களுக்குத் தமிழரின் பணமும் வேண்டும், அதேவேளை சிங்களத்துடன் சமரசமும் வேண்டும். அது தெரியாமல் நாம் மடையர்களாக மந்தைகளாக இங்கே இவர்களை வைத்து தேசியம் வளர்க்கிறோம்.

மேலே உள்ள விடயம் பற்றி ஏற்கனவே ஒரு திரியில் அலசல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளது

சிட்னியில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவைக்கு நிதி சேகரிக்க நடைபெற்ற 'The Tribute' நிகழ்வு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88208

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, இவர்களுக்குத் தமிழரின் பணமும் வேண்டும், அதேவேளை சிங்களத்துடன் சமரசமும் வேண்டும். அது தெரியாமல் நாம் மடையர்களாக மந்தைகளாக இங்கே இவர்களை வைத்து தேசியம் வளர்க்கிறோம்.

ரகுநாதன் உங்கள் இந்த இணைப்புக்கு நன்றி இவ்வாறான இனத்துரோகிகள் எம்மிடையே கலந்து எமது நோக்கங்களை திசைதிருப்பி வருகின்றனர் இவ்வாறுதான் லண்டனில் உள்ள இசைக்குழுவிலும் ஒருவர் உள்ளார் அவரும் கொழும்பைச்சேர்ந்தவர் ஜக்சன் இவரின் பேயர் நிகழ்ச்சிகளின் போது ஏற்பாட்டாளர்கள் தாயாக பாடல் பாடும்படி கேட்க்க அவர் மறுத்துள்ளார் அதன் பின்னர் ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்திவிட்டினராம்.

ஜக்சன் இப்போது கீபோட் பழக்கின்றார் இவரிடம் பழகுபவர்களின் நிலை ?

தமிழரசு,

சிட்னி விடயத்தை ஆறுதலாக முழுமையாக வாசித்து, மறுபக்க கருத்தையும் உள்வாங்கி ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=88208) உங்கள் கருத்துக்களை வையுங்கள். அது ஆக்கபூர்வமாக அமையும்.

நன்றி.

வெறும் 3 சிங்களவர்கள் மட்டுமே சேர்ந்து நூற்றுக்கணக்கான தேசியப் பற்றாளர்கள் ஒழுங்குசெய்த இசை நிகழ்ச்சியை தமது நோக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளியே சென்றும் தமது வீர தீரச் செயலை தமது சிங்கள வட்டங்களில் சொல்லிப் பாடியிருக்கிறார்கள். மேடைக்குப் பின்னால் நடந்தது யாருக்கும் தெரிய வராது என்றிருந்த திரு மற்றும் அவரது குழுவும் இப்போது என்ன செய்வதென்று விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

ஒப்பாந்தத்தை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், உங்கள் கருத்துக்கள் இங்குள்ள பார்வையாளர்களுக்கு தெரிந்தால் உங்கள் பாடு அதோ கதியாகியிருக்கும் என்று மிரட்ட வக்கில்லாமல் இருப்பது என்பாட்டு செய்த தமிழர் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்பதை சொல்கிறது.

நீ வெளியில் போ என்று தூக்கி எறிந்துவிட்டு, இசை நிகழ்ச்சியை நடாத்தும் துணிவும் இல்லை. அல்லது அதை முழுமையாக ஒளிபரப்பும் வகையில் கதைத்து இழுத்தடிக்கும் பக்குவமும் இல்லை.

இதனால் தான் என்னவோ, மக்களை மயக்கி கவர்ந்திழுக்கவல்ல கம்பன் கழக ஜெயராஜ், கருணாநிதி போன்ற இலக்கியவாதிகள், சினிமா கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களில் பெரும்பாலானவர்கள், இவர்களைப் போன்ற கற்பனாவாதிகள், உண்மையில் மிகவும் பலவீனமானவர்கள், தம்மை இலகுவில் இழந்துவிடக் கூடியவர்கள், பொறாமைகள் நிறைந்தவர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள், ஒழுக்கக்கேடானவர்கள், எந்தவொரு தலைமைப் பொறுப்புக்கும் லாயக்கற்றவர்கள் என்றெல்லாம் பெரியவர்கள் பலர் கூறுகின்றனரோ?

உலக தமிழர் பேரவை அன்று செய்தது பிழை என்று சொல்லுறீங்களோ? நிகழ்ச்சி நடந்த நேரம் அந்த சிங்கள பெடியன் மட்டும் வெளியேறவில்லை அவருடன் சேர்ந்து சில நண்பர்களும் வெளியேறீர்களாம். அப்படி வெளியேறியிருந்தால் அன்று நிகழ்ச்சி தடைப்பட்டிருக்கும்.

அப்படி நடந்திருந்தால் எத்தானை பேர் இதேவாயால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை திட்டியுருப்பார்களென உங்களுக்கு கட்டாயம் தெரியும். அந்த 500 பேரில் எத்தனை பேரை கூட்டங்கள், ஊர்வலங்களில் காணுறனீர்கள். அதில் முக்காவாசிப்பேர் பொழுபோக்கிற்கு தான் வந்தவர்கள். காசு கொடுத்து வந்தம் இப்படி செய்து போட்டாங்கள் என்று திட்டிக்கொண்டு போயிருப்பார்கள். அன்று நிகழ்ச்சி முடியும் போது எத்தனை பேர் வாழ்த்தினார்கள் நிகழ்சியை நல்லாயிருந்துதென்று.

சிலவற்றை நாங்கள் மன்னிக்க பழகவேண்டும். :)

பெரும்பாலும் உறவுகளுக்கு உதவுவதற்காகவே தமிழர்கள் வந்திருப்பார்கள்.

3 சிங்களவனுக்கு அடிபணியாமல் என்ன காரணத்தால் நிகழ்ச்சி தடைப்பட்டது என தெரிவித்திருந்தால், நிச்சயமாக அனைவரும் ஏற்பாட்டாளரைப் பாராட்டியிருப்பார்கள், திட்டியிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

அதுவும் அவுஸ்திரேலியாவில் இருந்துகொண்டு பொறுப்பிலுள்ளவர்கள் தமது கோழைத்தனத்தை விட்டு துணிந்து செயலில் இறங்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இனிமேல் எங்கும் இப்படியொரு சம்பவம் நடக்காமலிருக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதேபோன்று இன்னொரு பிரபல சிட்னித் தமிழ் இசைக்கலைஞரும் ( முன்னால் ரூபவாகினி தமிழ்ச் சேவையின் பணிப்பாளர், அருந்ததி சிறீரங்கநாதனின் மகன்) சிங்கள இசைக் கலைஞரை தனது குழுவில் பிரதம இசைக் கருவி வாசிப்பவராக வைத்திருக்கிறார். இவரும் திருவைப் போலவே சிங்களத்துடன் அனுசரித்துப் போக வேண்டும் என்கிற கொள்கையைக் கடுமையாக கடைபிடிப்பதோடு மட்டுமல்லாமல், சில தேசியப் பற்றாளர்களுடன் அவ்வப்போது கருத்து மோதலிலும் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இவரையே தவறாமல் ஒவ்வொரு வருடமும் யாழ் இந்துகல்லூரி பழைய மாணவர் சங்கம் தாம் நடத்தும் கீதாஞ்சலி நிகழ்வுக்கு அழைத்து கவுரவப் படுத்துகிறது.

இம்முறை யாழ் இந்து பழைய மாணவர் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள மாட்டார். வழமையாக நிகழ்ச்சிக்கு வாங்கும் 5000 வெள்ளிக்குப் பதிலாக இம்முறை 10000 கேட்பதாக ஒரு தகவல். இதனால் இம்முறை அந்த இசைக்கலைஞன் தனியாக ஒரு இசை நிகழ்ச்சி தென்னிந்திய பாடகர் கரிகரனுடன் சேர்ந்து நடாத்தவுள்ளார்.

இந்த புத்தம் புதிய இசைக்குழுவின் உரிமையாளரான மலேசியாவைச் சேர்ந்த திரு என்பவர் தமிழ்த் தேசியத்து ஆதரவாளர்களுடன் போராட்டங்கள், தாயக நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தாலும் கூட அவர் சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒத்துபோவதுதான் சரி என்கிற கொள்கையை கொண்டிருப்பவர் என்று தெரிய வந்தது. இந்த சிங்களத்து விசுவாசம் அவரை ஒரு சிங்கள கித்தார் நிபுணரை தனது இசைக் குழுவில் அமர்த்தும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிரது.

இவை சும்மா இசை வழங்கவில்லை. 4000 வெள்ளிகள் வாங்கிக் கொண்டு இசை நடாத்தி இருக்கிறார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

<_< உங்கள் தகவலுக்கு நன்றி கந்தப்பு.

இவர்களை நாம் ஓரம்கட்ட வேண்டும். வெறும் பனத்திற்காக மட்டுமல்ல, இவர்களது சரணாகதி அரசியலுக்கும் சேர்த்துத்தான். இனி இவர்கள் சிங்களவர்களுக்காக இசை வேள்வி நடத்தட்டும், யார் வேண்டாம் என்கிறார்??

பலமுறை கீதாஞ்சலி நிகழ்விற்குப் போயிருக்கிறேன், ஆனால் ஒவ்வொருமுறையும் இந்த இசையமைப்பாளரை மேடையில் பார்க்கும்போது எரிச்சல்தான் வரும். ஏதோ மேலைத்தேய இசையையும், கீழத்தேய இசையையும் கலக்கிறேன் பேர்வழி என்று ஆளாளுக்கு ரகுமான் பாணியில் வேறு சடை வளர்த்துக்கொன்டு திரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்பாட்டாளர்கள் உண்மையில் தமிழர் மேல் கரிசனை உள்ளவர்களாயின் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வார்கள்.

இப்படி ஒரு சம்பவம் 500 சிங்களவர்கள் இருந்து ஒரு தமிழர் மூலம் கனவிலும் நிறுத்தி இருக்க மாட்டார். :huh:

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.