Jump to content

"முறிந்த எனது கைகளுக்கும் பார்வை போன கண்ணுக்கும் ஒத்தடம் தருவீர்களா?": முன்னாள் பெண் போராளி கதறல்


Recommended Posts

வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடூரமான போரில் எல்லாவற்றையும் இழந்த எமது மக்களின் அவலம் போக்குவதற்கும் பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் இழந்த கல்வியை மீளப்பெறுவதற்கும் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சிகளை மீள் உருவாக்கம் செய்வதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை செய்தாக வேண்டும்.

இதற்காக புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் ‘மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் அமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும்.

இந்த அமைப்புகள் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியுதவியினைப் பெற்று அந்த நிதி மூலம் அந்தந்தப் பிரதேச செயலர் பிரிவுகளில் மீளக்குடியமர்ந்த மக்களின் கல்வி மற்றும் தொழில் முயற்சி என்பவற்றுக்கான பங்களிப்பை ஆற்ற வேண்டும்.

இது மட்டுமன்றி உள்ளூரிலும் நிதி சேர்க்கும் முயற்சிகளைச் செய்யலாம். ஆலயங்களில் இடம்பெறும் படோபகார நிகழ்வுகளைத் தவிர்த்து அதற்கான செலவை மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்குதல் மற்றும் சிறு தெய்வங்களுக்கு மிகப்பெரிய ஆலயங்கள் நிர்மாணிப்பதை விடுத்து சிறு தெய்வங்களை சிறிய ஆலயங்களிலேயே வழிபாடாற்றும் பாரம்பரிய நடைமுறைக்கு வழிவிட்டு பெரிய ஆலயமாக நிர்மாணிக்கவிருக்கும் மிகப்பெரும் தொகைகளை மீளக்குடியமர்ந்த மக்களின் நலனுக்காக ஒதுக்குதல் என்ற அடிப்படையில் ஒரு புதிய எழுச்சிப் பயணத்தைத் தொடர மேற்குறிப்பிட்ட அமைப்புகள் மிகவும் அவசியமானவை.

இதற்காக நாம் குறிப்பிட்டுக் கூறிய அந்த அமைப்புகளை ஆரம்பிக்க சமூக, சமயப்பற்றாளர்கள் முன்வர வேண்டும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20559

Link to comment
Share on other sites

யாழ். களத்தில் களமாடும் வீராதி வீர சிங்கங்களுக்கு இந்தப் பெண்ணின் கதறல் கேட்கவில்லையோ? இல்லை கேட்டும் கேட்காதது போன்று இருக்கின்றீர்களா?

அது சரி, இதே பெண் முன்னர் போராடிய போது ஒரு சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்றால் இவரல்லவா புறநானூற்றுப் பெண் என்று கொண்டாடியிருப்பீர்கள்.

எந்த விடுதலைப் போராட்டத்தினை நம்பி- எந்தத் தலைவனை நம்பி- தன்னை அர்ப்பணித்து- இன்று தனது இரு கைகளின் இயங்கு சக்திகளை இழந்து இருக்கின்ற இந்தப் பெண் போராளிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை.

மைதானத்தில் புலிக்கொடியோடு ஓடுகின்றவனை போற்றிப் புகழ்கின்ற உங்கள் எழுத்துக்களால் இந்தப் பெண் போராளிக்கு கடைசி எழுத்தில் கூடவா ஒத்தடம் கொடுக்க முடியவில்லை?

இந்தப் பெண் ஒருவர் என்று அல்ல; அங்கே பல்லாயிரக்கணக்கானவர்கள் பிரபாகரனை நம்பி தமது எதிர்காலத்தினை இழந்து நிர்க்கதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதனை புலத்தில் உள்ள நாம் மறந்துவிடக் கூடாது என்பதனை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

யாழ். களத்தில் களமாடும் வீராதி வீர சிங்கங்களுக்கு இந்தப் பெண்ணின் கதறல் கேட்கவில்லையோ? இல்லை கேட்டும் கேட்காதது போன்று இருக்கின்றீர்களா?

ஏன் இங்கே முதலைக்கண்ணீர் விடுகிறீர்??? ... இங்கு கேட்ட கேள்வியை, அங்கு ... உங்கள் புத்தம் புதிய தேசியத்தலைவர் எம் கோடிகளுடன் அங்கிருக்கிறார், ராஜபோகம் அனுபவித்தபடி ... கேளும்? ...

Link to comment
Share on other sites

ஏன் இங்கே முதலைக்கண்ணீர் விடுகிறீர்??? ... இங்கு கேட்ட கேள்வியை, அங்கு ... உங்கள் புத்தம் புதிய தேசியத்தலைவர் எம் கோடிகளுடன் அங்கிருக்கிறார், ராஜபோகம் அனுபவித்தபடி ... கேளும்? ...

அதுதானே பார்த்தேன் எங்கேயடா ஆளைக் காணவில்லையே என்று பார்த்தேன். உமக்கு முதலில் ஒரு கொள்கை இருக்கணும். அடிக்கடி பெண்கள் சீலை மாத்துவது போல ஒவ்வொரு தடவை ஒவ்வொருவருக்கு ஆதரவாக இருக்கிறீர். அது இருக்கட்டும். கே.பி. செய்து கொண்டிருப்பதால்தானே அவர்களின் இணையத்தளத்தில் வரவு-செலவுக் கணக்கு போட்டிருக்கின்றார்கள். அவராவது அந்தளவாது செய்கிறார்.

நீங்கள் புலத்தில் காவடி எடுக்கும் புலிக்கூட்டங்களும் சரி; அட நீங்களாவது என்ன செய்தனீர்கள் என்று விளக்க முடியுமோ? (நாங்கள் எத்தனையோ செய்கிறோம்; உமக்கு எல்லாம் அதனை சொல்லிக்கொண்டா இருக்க முடியும் என பிறகு எழுதாதீர்கள். இப்படி நீங்கள் எல்லாம் எழுதியதனை படித்து அலுத்தே போய் விட்டது)

மீண்டும் கூறுகின்றேன் மற்றவர்களை கை காட்டுவதனை விட்டுவிட்டு இந்த முன்னாள் பெண் போராளிகளைப் போன்று பலருக்கு உதவ பலர் முன்வாருங்கள்.

Link to comment
Share on other sites

அதுதானே பார்த்தேன் எங்கேயடா ஆளைக் காணவில்லையே என்று பார்த்தேன். உமக்கு முதலில் ஒரு கொள்கை இருக்கணும். அடிக்கடி பெண்கள் சீலை மாத்துவது போல ஒவ்வொரு தடவை ஒவ்வொருவருக்கு ஆதரவாக இருக்கிறீர். அது இருக்கட்டும். கே.பி. செய்து கொண்டிருப்பதால்தானே அவர்களின் இணையத்தளத்தில் வரவு-செலவுக் கணக்கு போட்டிருக்கின்றார்கள். அவராவது அந்தளவாது செய்கிறார்.

நீங்கள் புலத்தில் காவடி எடுக்கும் புலிக்கூட்டங்களும் சரி; அட நீங்களாவது என்ன செய்தனீர்கள் என்று விளக்க முடியுமோ? (நாங்கள் எத்தனையோ செய்கிறோம்; உமக்கு எல்லாம் அதனை சொல்லிக்கொண்டா இருக்க முடியும் என பிறகு எழுதாதீர்கள். இப்படி நீங்கள் எல்லாம் எழுதியதனை படித்து அலுத்தே போய் விட்டது)

மீண்டும் கூறுகின்றேன் மற்றவர்களை கை காட்டுவதனை விட்டுவிட்டு இந்த முன்னாள் பெண் போராளிகளைப் போன்று பலருக்கு உதவ பலர் முன்வாருங்கள்.

அண்ணா. என்ன செய்வது அமிர்தலிங்கம் செய்வார் என்று பின்னுக்கு போனால் .. அவர் நம்மை மறந்து எம் தலையில் மொட்டை போட வெளிக்கிட்டு விட்டார்! ... இப்ப கடைசியாக , தலைவருக்காக விக்கி விக்கி அழுத கேபியருக்கு பின்னுக்கு போனால் ... அவர் கூட்டி பெருக்கி கொண்டு போய் அஸ்டாங்கமாக விழுந்து விட்டார் ... இனியும் ஒருதருக்கு ஆதரவு என்ற நிலை வேண்டாம் ... யார் செய்கினமோ, ஆதரவளிப்போம், செய்யாமல் விடப்படுமானால், தொடர்ந்து விசிலடிக்கலாமோ????

... உந்தக் கணக்கு வழக்குகளை காட்டிக் காட்டி கனபேர் எல்லா இடமும் பூச்சுத்துகிறீர்கள்!!! ... உமக்கு எத்தனை கணக்குகள், எத்தனை விதமாக போட்டுத்தர வேண்டும்??????

.... உங்களைப் போன்ற நாலு கள்ளர்கள் ... உதுகளுக்கு பின்னால் நிற்பதனால்தான் ... கொடுப்பதைக்கூட நிற்பட்டத்தோன்றுகிறது!!!!

இதில் நீங்கள் யாரோ????

:lol:

vanniyan_foods_protest_02.jpg

... உந்த நிர்மலன் போன்ற வீரர்களின் கருத்துகளுக்கு ... இங்கு தவறாது இரண்டு பச்சை விழுந்து விடுகிறது!!!! :lol:

Link to comment
Share on other sites

உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆயிரம் கைகள் இங்கு தயாராக உள்ளது.

தடையாக யார் உள்ளார்கள்?

1. ஒட்டுப் படைகள் அல்லது பரா மிலிற்றறி.

ஈணவும் விடாமல் நக்கவும் விடாமல் தடையாக உள்ள முதலாவது ஒட்டுண்ணி ஜடங்கள். ஒன்றில் இந்நிலைமைக்கு நேரடிக் காரணமான அரசிடம் இளப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க முன் வர வேணும் அல்லது இயலாவிட்டால் ஒதுங்கி நிற்க்க வேணும்.

2. சிங்கள இராணுவம்.

இவ்வளவு தமினப்படுகொலைகளுக்கும் துன்பத்துக்கும் காரணமானவர்கள் இன்றும் தமிழனை உய்யவிடாமல் தீயனவற்றை மட்டும் ஊக்குவிக்கும் இந்த இராணுவம் தமிழர் வாழ்விடங்களை விட்டு உடனடியாக விலக வேண்டும். தம்மைத்தாமே நிர்வகித்துக் கொள்ள தமிழர்களுக்கு இடம் கொடு.

இந்த சூழ்நிலையில், எந்த கொலை அச்சுறுத்தல்களுமின்றி விழிப்புக் குழுக்களை அமைத்து, உதவும் நிறுவனங்களை ஏற்ப்படுத்தி தனது இனத்தின் மேம்பாட்டுகு உதவுவதற்க்கு துடிப்புள்ள, பொறுப்புள்ள, இனப்பற்றுள்ள இளைஞர்கள் எழுந்து வருவார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்க்கு நாம் முண்டியடித்து நிற்ப்போம்.

Link to comment
Share on other sites

நாங்கள் எங்களிற்குள் அடிபடுகிறோம் அல்லாமல் அங்குள்ள மக்களிற்கு உதவி செய்ய யோசிக்கிறோம். போராட்ட காலத்தில் விழுந்த கணக்கு பார்த்த நாங்கள், இப்போது அங்கு பரிதவிக்கும் மக்களை திரும்பி பார்க்காமல் எல்லாரையும் குறை பிடிக்கிறோம், எங்களை தவிர.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மோடிஎன்பவர் ஆர். எஸ். எஸ் இன் இந்துத்துவா பாசிசத்தை அமுல்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அந்த கருவியின் காலம் ஏறத்தாள முடிந்து சக்கை போல் ஆர். எஸ் ஆராலேயே தூக்கி வீசப்படும் காலம் வந்து விட்டது. அந்த மோடி எப்படி சிங்களவனுக்கு ஆப்பாக இருப்பாராம்.  இவ்வாறான  கற்பனைகள் தான் தமிழரின் பாரிய பலவீனம்.  காங்கிரஸோ, பா.ஜ.க வோ இருவரையும் சமாளிக்கும் வல்லமையான ராஜதந்திரம் சிங்கள அரசிகளிடம் உள்ளது என்பதை நேரில் பார்தத பின்புமா இப்படியான  கற்பனைகள்.  
    • தமிழக அரசியலை மிரட்டும் சீமானின் நாம் தமிழர்! 2019-ல் 3.90%; 2024-ல் அடேங்கப்பா 8.10% வாக்குகள்! சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாஜக பெரிய கட்சியா? நாம் தமிழர் பெரிய கட்சியா? என்பதுதான் முதன்மையான விவாதம். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் மத்தியில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை பெற 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு, புதுவையைப் பொறுத்தவரை திமுக கூட்டணியே 40 இடங்களையும் கைப்பற்றிவிட்டது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை எந்த ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை. அதேநேரத்தில் இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் தமிழகத்தில் புதிய அரசியல் பாதை உருவாகிறதா? என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் போட்டியிட்ட இடங்களும் வென்ற வாக்குகளும் திமுக (21) 26.93% அதிமுக (32) 20.46% பாஜக (23) 11.24% காங்கிரஸ் (9) 10.67% நாம் தமிழர் (39) 8.10% பாமக (10) 4.2% இதர கட்சிகள் அனைத்தும் குறைவான வாக்கு சதவீதம்தான் பெற்றுள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்தது? திமுக (24) 32.76% அதிமுக (20) 25.53% பாஜக (5) 3.62% காங்கிரஸ் (9) 12.72% நாம் தமிழர் (37) 3.90% பாமக (7) 5.36% தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தலில் வென்றாலும் இடங்களையே கைப்பற்றாமல் இருந்தாலும் அதன் வாக்கு சதவீதம் நிலையானதாகவே இருந்து வருகிறது என்பதை 2 தேர்தல்களின் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி இம்முறை அனைத்து இடங்களிலும் வென்ற போது 2% வாக்குகளை இழந்திருப்பது அக்கட்சிக்கான எச்சரிக்கை அலாரம்தான். பாமகவைப் பொறுத்தவரையில் போன முறை 7 தொகுதிகளில் போட்டியிட்டு 5.36% ஓட்டுகளைப் பெற்றது; இம்முறை 10 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4.2% ஓட்டுகளைத்தான் பெற்றிருப்பது அந்த கட்சிக்கும் 'எச்சரிக்கை' மணி அடிக்கப்படுகிறது என்பதுதான். 5 தொகுதிகளில் நாம் தமிழர் 3-ம் இடம்! 12 இடங்களில் 1 லட்சத்துக்கும் மேல் ஓட்டுகள்- தொகுதி வாரியாக! இதற்கு அப்பால் பாஜக, நாம் தமிழர் கட்சிகளைப் பார்ப்போம். பாஜகவைப் பொறுத்தவரையில் 2019-ல் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 3.62% வாக்குகளைப் பெற்றது. இம்முறை 4 மடங்கு அதிகமாக 23 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்படியானால் வாக்கு சதவீதம் 4 மடங்கு அதிகமாகத்தானே இருக்கும். ஆம் அப்படித்தான் 11.24% வாக்குகளைப் பாஜக பெற்றுள்ளது. நாம் தமிழர் வளர்ச்சி: அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு தேர்தலிலும் அந்த கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 3.90% வாக்குகளைத்தான் பெற்றது. இந்த முறை அதைப் போல இரு மடங்கு வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அதாவது 8.10% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருப்பது வளர்ச்சியைத்தான் குறிக்கிறது. அடுத்து வரும் தேர்தல்களில் இந்த வாக்கு சதவீதம் நிலைக்குமா? குறையுமா? என்பதற்கு அப்பால் இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நாம் தமிழர் கட்சிதான் தமக்கான பெரும் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதையே புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilars-8-10-vote-share-threats-to-main-political-parties-611647.html
    • 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) - 2 ம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், தமிழ்சிறி  1)கோஷான் சே   - 20 புள்ளிகள் 2)பாலபத்ர ஓனாண்டி - 20 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 20 புள்ளிகள் 4)நிழலி - 20 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 20 புள்ளிகள் 6)கிருபன் - 18 புள்ளிகள் 7)கந்தையா57 - 18 புள்ளிகள்  8)வாத்தியார் - 18 புள்ளிகள் 9)நுணாவிலான் - 18 புள்ளிகள் 10)பிரபா - 18 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11,  14, 15, 18,19, 22, 25, 26,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.