Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை மகிந்தருக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு கிளிநொச்சியில் தென்னிந்தியப்பாடகர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மகிந்தருக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு கிளிநொச்சியில் தென்னிந்தியப்பாடகர்கள்!

Tuesday, July 19, 2011, 22:56இந்தியா, சிறீலங்கா

வடக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசாங்கம் விடுத்த அழைப்பினை ஏற்று தென்னிந்திய திரை இசைப் பாடகர்கள் மூவர் இலங்கை வந்திருக்கின்றமை வன்னி மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்திருக்கின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் குறிப்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்று அதனை சர்வதேசத்திற்குக் காட்டவேண்டும் என்ற முனைப்பில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவும், 24 அமைச்சர்களும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் தீவிர பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சியில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நிகழ்விற்கு தென்னிந்திய திரையிசைப் பாடகர்கள் மனோ, சுசித்திரா, கிரிஷ் ஆகியோர் அழைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது.

20-07-2011 நாளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவிருப்பதாக இராணுவம் யாழ்ப்பாணத்திலும்,கிளிநொச்சியிலும் ஒலிபெருக்கிகளில் அறிவித்து வருகின்றது.

மஹிந்தராஜபக்சவின் கிளிநொச்சி பயணத்தினை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒலிபெருக்கிகளில் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனோ, சுசித்திரா, கிரிஷ் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடைபெறும் வேளை அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களைக் கோருவர் என்று ஏற்பாட்டாளர்கள் தமக்கு நெருக்கமான வட்டாரங்களுக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துவீழ்ந்த போது தமிழ்நாட்டில் தமிழ் உணர்வாளர்கள் தம்மைத் தாமே எரித்துக்கொண்டு உயிர்துறந்திருந்தனர். இந்நிலையில் இன அழிப்பினை மேற்கொண்ட அரசாங்கத்திற்குச் சார்பாக தென்னிந்தியத் திரையிசைப் பாடகர்கள் வன்னி செல்வது வன்னி மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்திருக்கின்றது.

தமிழீழ விடுதலை பாடல்களில் சிறப்புமிக்க பாடலில் ஒன்றான தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் என்ற படலை பாடியவர் மனோ ஆவர் .

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்

கையில் கூட ஆயுதங்கள் ஏறும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை

நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை

ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்

உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்.

http://www.tamilthai.com/?p=22199

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கலைஞர் டிவியில் படவா டூயட் படவா நிகழ்வில் லண்டனில் இருந்து சென்று நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொள்ளும் போது அவர்களும் யோசிப்பார்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நாம் எமது பிளைப்புக்குதானே போகிறோம் எனக் ௬ றினால் ................................?!

நாமே சரியாக எதையும் செய்வதில்லை பின்பு மற்றவரை எப்படி குறை சொல்வது ! முதலில் நாம் திருந்துவோம் பின்னர் மற்றவர்களின் தவறைச்சுட்டிக்காட்டுவோம்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று கலைஞர் டிவியில் படவா டூயட் படவா நிகழ்வில் லண்டனில் இருந்து சென்று நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொள்ளும் போது அவர்களும் யோசிப்பார்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நாம் எமது பிளைப்புக்குதானே போகிறோம் எனக் ௬ றினால் ................................?!

நாமே சரியாக எதையும் செய்வதில்லை பின்பு மற்றவரை எப்படி குறை சொல்வது ! முதலில் நாம் திருந்துவோம் பின்னர் மற்றவர்களின் தவறைச்சுட்டிக்காட்டுவோம்.

உண்மைதான் தமிழரசு! இங்கிலாந்துமற்றும் கனடா நாடுகளிலிருந்து எம்மவர்கள் தென்னிந்திய குத்தியாட்ட நிகழ்ச்சிகளை தொகுத்தே வழங்குகின்றார்கள்.நாலு பக்கமும் பிழைகளை எமது பக்கம் வைத்துக்கொண்டு மற்றவர்களை நோக்கி சுட்டுவிரலை நீட்டுவதில் எந்தவித நியாயமுமில்லை.

காலம் காலமாக மற்றவனை செய்யவேண்டாமென சொன்ன அனைத்தையும் அவர்களே செய்து வந்தார்கள்.

புறக்கணிப்பு பொருட்கள் இறக்குவதில் இருந்து,படம் ஓடுவதிலிருந்து,தென்னிந்திய திரைப்பட நடிகர்களை கூப்பிடுவதிலிருந்து.எயர் லன்காவில் பறப்பதில் இருந்து.

எதிலுமே ஒரு சீரியஸ் தன்மை இல்லை சும்மா வந்து சீன் காட்டத்தான் எல்லாம்.

புறக்கணிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வது, சிறிலங்கன் எயர்லைன்சில் பறப்பது பிழை என்பது ஏற்கக்கூடியது.

ஏன் தமிழக திரைப்படங்களை ஓடுவதும், நடிகர்களை அழைப்பதும் பிழை என்கிறீர்கள்?

இன்று கலைஞர் டிவியில் படவா டூயட் படவா நிகழ்வில் லண்டனில் இருந்து சென்று நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொள்ளும் போது அவர்களும் யோசிப்பார்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நாம் எமது பிளைப்புக்குதானே போகிறோம் எனக் ௬ றினால் ................................?!

நாமே சரியாக எதையும் செய்வதில்லை பின்பு மற்றவரை எப்படி குறை சொல்வது ! முதலில் நாம் திருந்துவோம் பின்னர் மற்றவர்களின் தவறைச்சுட்டிக்காட்டுவோம்.

இங்க புலம் பெயர்ந்த நாட்டில இருந்து போய் பாட ,ஆட போறதுகளை அங்க யார் என்டும் தெரியாது.ஏதோ பாவங்கள் வந்திருக்கிதுகள் ஒரு சான்ஸ் கொடுத்திருக்கம் என்டதுதான்.. இதுகலை எல்லாம் கணக்கு எடுப்பதில்லை.

தென்னிந்தியப் பாடகர்கள் என்றால் உலக தமிழரே அறிந்தவர்கள் அவர்கள் செய்யும் தவறை இவர்களோடு ஒப்பிடகூடாது.

மனோ பல முறை ஈழத்தமிழர் நிகழ்வுகளில் பலம் பெயர் நாட்டில் பங்கு பெற்றியவர்.........

ஏஜென்ட மூலம் நிகழ்ச்சிக்கு போறவைக்கு அங்க போனாப்பிற்குதான் விளங்கும் எட இவனுக்கா பாட வந்தோம் என்டு.

இனி அறிந்தா பிறகு போறது வடிவேலுவின் நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்

:) இதிலென்ன இருக்கு வருத்தப்பட?? தாயக மக்களுக்கு மனோ போன்ற பிரபல தமிழ்ப் பாடகர்களைக் காணக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏன் நாம் மறுப்பான்?? அவர்கள் தாராளமாகப் பார்க்கட்டுமே?? ஆனால் யாருக்கு வாக்குப்போடவெண்டும் என்பதை ஒரு நாள் இசை நிகழ்ச்சி மாற்றிவிடுமா என்ன?? மகிந்த செய்ததை அவ்வளவு இலகுவில் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்த்தனம் வேறு இருக்க முடியாது.

மற்றும்படி வன்னி மக்கள் தமக்குக் கிடைக்கும் அனைத்துச் சலுகைகளையும் தாராளமாகப் பெற்றுக்கொள்ளட்டும்(இந்தத் தருணத்தை விட்டால் இந்த சலுகைகள் அவர்களை எட்டிப் பார்க்க வாய்ப்பேயில்லை).

தமிழகத்தேர்தல் போல கருணாவிடம் பெற்றுக்கொண்டு அம்மாவுக்குப் போட்டது போல.

நிகழ்வுக்கு போகாமல் கொழும்பில் இருந்து சென்னை திருமபியதாக நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

மனோவும் அறிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.